Friday, February 27, 2015

இயற்கை முறையில் விளைந்த பொருட்கள் நேரடி விற்பனைக்கு


1. ரஸ்தாளி வாழைப்பழம் , முருகன் : 93627 94206
ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்.
(வாழைக்காயகாக தமிழகம் முழுவதும் பேக்கிங் செய்தே அனுப்பிவிடுகிறார். மார்க்கெட்டில் நீங்கள் வாங்கும் விலையை அனுசரித்தே இவருடைய விலை).

2. உளுந்தம் பருப்பு ( கருப்பு, தோல் நீக்காமல் ) 
சரவணன், விழுப்புரம் : 9488829993

3. ஆத்தூர் கிச்சடி புழுங்கல் அரிசி , Dr. புண்ணிய மூர்த்தி , தஞ்சை : 98424 55833
4. வெள்ளைப்பொன்னி அரிசி & திருப்பதி சாரம் இட்லி அரிசி
சுப்ரமணியன், விழுப்புரம் : 98423 97377

5. சிறுதானியங்களான வரகு, குதிரைவாலி, சாமை மற்றும் பல... & பாரம்பரிய அரிசி & காய்கற்கள் ஆகியவை விதையாகவோ அல்லது அரிசியாகவோ கிடைக்கும்
ஜெயராமன், சேலம் : 99424 43055

நல்ல தொழில் நாட்டுக் கோழி வளர்ப்பு

இது என்னடா கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை என நினைக்காதீர்கள்பகுதி நேரமாகச் சம்பாதிக்க ஆன்லைன் மட்டுமல்லஆஃப்லைனிலும் வீட்டிலிருந்து சம்பாதிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதில் ஒன்றுதான் கோழி வளர்ப்புசற்று புற நகரப் பகுதிகளில் இருப்பவர்களும்,கிராமப்புறங்களிலும் இருப்பவர்களுக்கு வீட்டை ஒட்டியோ அல்லது அக்கம் பக்கத்திலோ ஒரு சென்ட் இடமிருந்தால் போதும்வீட்டிலிருந்தபடியே இந்த தொழிலையும் பகுதி நேரமாகச் செய்யலாம்.

ஆடு, பிராய்லர் கோழி, மீன் என பல்வேறு இறைச்சி வகைகள் இருந்தாலும், இன்றும் எல்லோரும் அதிகம் விரும்புவது நாட்டுக் கோழியை தான். அதன் சுவையே தனி. பண்ணை அமைத்து இக்கோழிகளை கவனத்துடன் வளர்த்தால், நல்ல லாபம் பெறலாம்.நாட்டுக்கோழிகளின் முட்டை, இறைச்சிக்கு மக்களிடம் மவுசு உள்ளது. ஆனால் தேவைக்கேற்ற உற்பத்திதான் இல்லை. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய இத்தொழிலை முறையாக மேற்கொண்டால் நிரந்தர வருமானம் பெற முடியும்.

பொதுவாக கிராமங்களில் வீடுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பது வழக்கம். விற்பதற்காக வளர்க்காமல், தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள். இதையே தொழிலாக செய்தால் நல்ல பார்க்கலாம். கிராமப்புற விவசாயிகள் விவசாய நிலம் மற்றும் வீட்டை ஒட்டியே ஷெட் அமைத்து பண்ணை முறையில் நாட்டுக்கோழி வளர்க்கலாம். தினசரி காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் பராமரிப்புக்கு செலவிட்டால் போதும். நாட்டுக்கோழி குஞ்சுகளை பொரிப்பகங்களில் இருந்து வாங்கி வந்து வளர்க்கலாம்.

முட்டையாக வாங்கி, கருவிகள் மூலம் நாமே பொரிக்க செய்து குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம். முட்டைகளை அடைகாக்க இன்குபேட்டர் மெஷின் , அடை காத்த முட்டைகளை பொரிக்க வைக்க கேட்சர் மெஷின் தேவைப்படும். புதிதாக தொழில் துவங்குபவர்கள் குறைந்த முதலீட்டில் குஞ்சுகளாகவே வாங்கி வளர்ப்பது எளிதானது.குஞ்சுகள் அந்தந்த மாவட்ட கால்நடைதுறை மாதிரி பண்ணைகளில் கிடைக்கும்.இன்குபேட்டர் விவரங்களையும் அவர்களின் மூலம் அறியலாம்.

பழவகை மரங்களுக்கு ஏற்ற தொழில் நுட்பங்கள்

பழவகை மரங்களில் கூடுதல் மகசூல் பெறவும், நோய் தாக்காமல் தடுக்கவும் ஏற்ற சிறப்பு தொழில் நுட்பங்கள் குறித்து தேனி மாவட்டத்தில் உள்ள போடி தோட்டக்கலை உதவி இயக்குநர் வே.கெர்சோன் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
மா மரம்:
ஒட்டு மாங்கன்றுகளில் வேர் பாகத்திலிருந்து வளரும் தளிர்களை நீக்கிவிடவேண்டும்.
• 5 ஆண்டு வரை பூக்கும் பூக்களை கிள்ளிவிடவேண்டும்.
பின்னர் நல்ல காய்கள் பிடிக்கும் வகையில் உள்நோக்கி வளரும் கிளைகளையும், பலவீனமான கிளைகளையும் நெருக்கமான நுனிக் கிளைகளையும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கவாத்து செய்ய வேண்டும்.
• 2 ஆண்டுக்கு ஒருமுறை பசுந்தாள் உரப் பயிர்களை பயிரிட்டு மடக்கி உழுதல் வேண்டும்.
மா மரத்தில் ஊடுபயிராக 5 ஆண்டு வரையிலும் மரவள்ளி, நிலக்கடலை மற்றும் காய்கறிப் பயிர்களை பயிரிட்டு கணிசமான வருமானம் பெறலாம்.
கொய்யா:
கொய்யாவில் புதிய வாதுகளில் இலைகளின் பிரிவில்தான் பூக்கள் தோன்றி காய்கள் பிடிக்கும்.
செப்டம்பர், அக்டோபர் மற்றும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் முந்தைய ஆண்டு வாதுகளில் 10-15 செ.மீ. செடியின் நுனிக்கிளைகளை வெட்டிவிடவேண்டும்.
இதனால் புதிய தளிர்கள் தோன்றி காய்கள் அதிகம் பிடிக்கும்.
வெட்டிய காயமுள்ள பகுதியின் மூலம் பூஞ்சாள நோய்கள் பரவி விடாமல் தடுக்க 1 சதவீத போர்டோ கலவை அல்லது பைட்டோலான் 3 கிராம் 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

Thursday, February 26, 2015

ஆடுகளின் மூலம் குறைந்த செலவத்திட்டத்தில் ஒரு இயற்கை ஈடுபொருள்

இரசாயன பூச்சி கொல்லிகளின் விலையேற்றமும், உரகங்களின் பற்றாக்குறையும் உள்ள இச்சூழலில் அதிக மகசூல் பெறுவது, விவசாயிகளுக்கு எளிதான காரியமன்று. குறைந்த ஈடுபொருள் செலவுதரும் எந்தவொரு மாற்று திட்டத்தையும் ஏற்ற விவசாயிகள் தயாராக உள்ளனர். அதே சமயம் அத்திட்டம் அதிக மகசூல் தருவதாகவும் இருக்க வேண்டும்.இவ்வாறான கருத்து கொண்ட விவசாயிகளுக்கு, இயற்கை செய்முறை திட்டம் சரியாக பயனளிக்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல விவசாயிகள், இயற்கை முறை சாகுபடித் திட்டத்திற்கு மாறி வருகின்றனர். இதன் காரணம். இயற்கை ஈடுபொருட்களை குறைந்த முதலீட்டில், மிகுந்த பயனளிக்க கூடியதாகவும், தாங்களாகவே தயாரிக்க முடியும். என்பதாலாகும்.
ஆட்டோட்டம்:
பரவலாக, அனைத்து கிராமங்களிலும் ஆடுகளை காணலாம். பசுவைப் போல் ஆடுகளின் சாணம், சிறுநீர் மற்றும் பாலும் சிறந்த மதிப்புடையதாகும். ஆடுகளின் பால் மற்றும் கழிவுகளின் மூலம் தயாரிக்கப்படும் உரம் ஆட்டோட்டம் எனப்படும் என்று முனைவர். நம்மாழ்வார் கூறுகிறார்.
ஆட்டோட்டம் தயாரிப்பில் உள்ள திரு.வி.எஸ்.அருணாச்சலம் கூறுகையில்” நெல், காய்கறிகள், பருத்தி, மிளகாய், நிலக்கடலை, எள் மற்றும் மலர் செடிகள் ஆகியவற்றிக்கு உபயோகிக்கும் ஆட்டோட்டம், ஒரு சிறந்த வளர்ச்சி ஊக்கியாகும். இது செடி வளர்ச்சியை தூண்டுவதுடன், இலைகள் மற்றும் பழப் பிஞ்சுகள் உதிர்வதை தடுத்து, அதிக எடையுள்ள, சுவையான பொருட்களை தரும்.

ஆட்டோட்டம் செய்முறை:
சுமார் ஐந்து கிலோ தூய ஆட்டு புளுக்கை, மூன்று லிட்டர் ஆட்டுச் சிறுநீர், 1.5 கிலோ கிராம் சோயா அல்லது நிலக்கடலை புண்ணாக்கு அல்லது அரைத்த உளுந்து அல்லது பாசிப்பயிர், ஆகியவற்றை ஒர் இரவு தண்ணீரில் ஊரவிடவேண்டும்.
பின்னர் சுமார் இரண்டு லிட்டர் ஆட்டின் பால், தயிர், இளநீர், கள், கரும்புச்சாறு மற்றும் ஒரு டசன் (dozen)பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றை சேர்க்கவும்.
கள்ளுக்கு பதிலாக 50 கிராம் ஈஸ்ட்டை 2 லிட்டர் சுடு தண்ணீரில் கரைத்து பயன்படுத்தலாம். அதே போல், கரும்புச்சாறுக்கு பதிலாக, 1 கிலோ வெல்லத்தை 2 லிட்டர் தண்ணீரில் கரைத்து பயன்படுத்தலாம்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து கூட்டுப் பொருட்களையும் ஒரு பிளாஸ்டிக் உருளை (drum)யில் வைத்து நன்கு கலக்கவும். அதை பதினான்கு நாட்கள் (இரண்டு வாரம்) நிழலில் வைத்து, பின் அக்கலவையை உபயோகிக்கலாம்

கரைசலை கிளரும் முறை:
ஒரு நாளுக்கு இரண்டு முறை, வலது பக்கமாக 50 முறையும், இடது பக்கமாக 50 முறையும் கிளர வேண்டும். பின் அந்த பிளாஸ்டிக் உருளையை (drum) பூச்சிகளோ, புளுக்களே முட்டை இடாதவாறு நல்ல பருத்தித் துணியைக் கொண்டு மூடிவிடவேண்டும். இந்த கரைசலை மேற்கண்டவாறு நன்கு கலந்து, முறைபடி பாதுகாத்து வைத்தால் ஆறு மாதங்கள் வரை வைத்து உபயோகிக்கலாம்.
மேலும், இந்த கரைசல் சற்று அதிகமான அடர்த்தியில் காணப்பட்டால், இளநீர் அல்லது தண்ணீர் சேர்த்து கலக்கி கொள்ளலாம்.

கன்னி ஆடுகள்

காணப்படும் இடங்கள் :
விருதுநகர் (சாத்தூர், வெம்பக் கோட்டை, ராஜ பாளையம்), தூத்துக்குடி (புதூர், கயத்தார், கோவில்பட்டி), திருநெல்வேலி (குருவிகுளம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், மேலநீலிதநல்லூர்) முதலிய பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகிறது. தற்சமயம் பிற மாவட்டங்களிலும் இந்த கன்னி ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அதிகமான அளவில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் மற்றும் குருவிகுளத்திலும் விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், வெம்பக்கோட்டையிலும் காணப்படுகிறது.
கன்னி ஆட்டின் சிறப்பியல்புகள் :
இவை கருமை நிறத்துடனும் முகத்திலும் காதுகளிலும் வெள்ளை அல்லது பழுப்புநிற கோடுகளுடனும், மேலும் அதன் அடிவயிறு, தொடைப்பகுதி, வால்பகுதி மற்றும் கால்களில் வெள்ளை அல்லது பழுப்பு நிறமுடன் காணப்படும். கருப்பு நிறத்தில் வெள்ளைநிற கோடுகள் காணப்பட்டால் அவை "பால்கன்னி' என்றும் பழுப்பு நிற கோடுகள் காணப்பட்டால் "செங்கன்னி' என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இவற்றின் காது மற்றும் நெற்றியில் கோடுகள் காணப்படுவதால் இதனை வரி ஆடுகள் என்று அழைக்கிறார்கள்.
குட்டிகளை நன்றாக பேணி பாதுகாக்கும் பண்புடையவை. உயரமாகவும், திடகாத்திரமாகவும், ஒரே நிறமுடன் இருப்பதும் கூட்டமாக நடக்கும்பொழுது ஒரு "ராணுவ அணிவகுப்பு' போல கண்ணை கவரும் இந்த கன்னி ஆடுகள். இது இறைச்சிக்காக வளர்க்கப்படும் ஆடு ஆகும். கிடா மற்றும் பெட்டை ஆடுகளுக்கு கொம்புகள் உண்டு.