Saturday, December 10, 2011

Goat Farm



அறிமுகம்

எங்களது ஆட்டுப்பண்ணை எழுமலை அருகே M.S.புரம் என்ற ஊரில் அமைந்துள்ளது.
இது மதுரையிலிருந்து 70 K.M. தூரத்தில் உள்ளது. தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் இந்த இடம் உள்ளது.

 

எங்களைப்பற்றி

கடந்த 2 வருடங்களாக இந்த பண்ணையை நடத்திவருகிறோம். முதலில் 50 ஆடுகளைக் கொண்ட இந்த பண்ணை தற்பொழுது 400 ஆடுகள் இருக்கின்றது. அதுவும் வந்த புதிதில் கிளைமட் அடாப்ட் ஆகாமல் 5 ஆடுகள் இறந்துவிட்டன. மாதந்தோறும் என்ன செலவு ஆகின்றதோ அந்த செலவுக்கு ஈடுகட்டும் வகையில் ஆடுகளை விற்றுவருகிறோம். எங்களது குறிக்கோள் 1000 ஆடுகள் கொண்ட பண்களை உருவாக்குவதே ஆகும்.

 

ஆட்டுப் பண்ணை

 Bed Stall முறையின் சிறப்பம்சம்:-

தரையில் இருந்து 4 1/2 அடி உயரத்தில் ரிப்பரினால் ஆன பெட் அமைத்து அதற்கு மேல் அஸ்படாசி சீட்டால் ஆன செட் போட்டு அதற்கு கீழ் வெப்பம் இறங்காமல் ஃபிளையுட்டினால் ஆன சீலிங் அமைத்து ஒரு செட் 60 * 23 என்ற அடி கணக்கில் அமைத்துள்ளோம். அது போன்ற 3 செட்டுகளும் 40 * 22, 20 * 22, செட்களும் அமைத்துள்ளோம்.

மழைக்காலங்களில் ஈரங்களினால் வரும் நோய்கள் வராமலும், ஆட்டுப்ப்ழுக்கை முழுவதுமாக நமக்கு கிடைப்பதற்கும் தனித்தனியே வயது ரீதியாக இந்த ஆடுகளை பிரிப்பதற்கும் இந்த செட் உதவுகிறது. மழை காலங்களில் ஆடுகள் நனையாமல் காக்கவும், நோய்வராமல் தடுக்கவும் இது உதவுகிறது.

அமைப்பு:-
தற்பொழுது ஆட்டுப்பண்ணை 15 ஏக்கரில் 1 ஏக்கரில் செட் அமைத்து, 14 ஏக்கரில் சோளம், புல், கூவாபுல், குதிரைக்கால் அசத்தி ஆகியன பயிரிட்டுள்ளோம். வேறு எந்த விவசாயமும் செய்யவில்லை.



தலைசேரி ஆடுகள்

 எங்களது பண்ணையில் எந்த கலப்பினமும் இல்லாத தலைச்சேரி ஆடுகளை மட்டுமே வளர்க்கின்றோம்.

அதனுடைய சிறப்பு அம்சங்கள் வேறு மிகச்சிறந்த சாதிஆடுகள் 2 வருடங்களுக்கு 3 முறை குட்டி போடும் ஆனால் தலைச்சேரி ஆடுகள் 4 முறை குட்டிபோடுகிறது.

பாலுக்கு சிறந்த ஆடுகள், ஒரு ஈத்துக்கு சராசரியாக 2 குட்டிகள் ஈனும், 3 குட்டிகளும் ஈனுகின்றது. தலை ஈத்து 1 குட்டியும் 2 குட்டிகளும் ஈனுகன்றது.

நன்றாக பால் கொடுத்து வளர்த்து விடுகின்றது. அதற்கு எவ்வளவு தீவனம் தருகிறோமோ அவ்வளவு எடை கூடுகின்றது. வேறு ஆடு இனங்களுக்கு இந்த சிறப்பம்சம் இல்லை.
ஆகவே நாங்கள் இந்த ஆடுகளை தேர்ந்தெடுத்துள்ளோம்.

மாதம் 2.5 கிலோ முதல் 4 கிலோ வரை எடை கூடுகிறது. புற்களை வெட்டிப்போடுகிறோம். பசுந்தீவனம் தவிர அடர் தீவன கோதுமையிட்டு, சோளம் கம்பு வைத்து அரைத்து ஊற்றுகிறோம்.

மழைக்காலங்களில் ஈரங்களினால் வரும் நோய்கள் வராமலும், ஆட்டுப்ப்ழுக்கை முழுவதுமாக நமக்கு கிடைப்பதற்கும் தனித்தனியே வயது ரீதியாக இந்த ஆடுகளை பிரிப்பதற்கும் இந்த செட் உதவுகிறது. மழை காலங்களில் ஆடுகள் நனையாமல் காக்கவும், நோய்வராமல் தடுக்கவும் இது உதவுகிறது.


மருத்துவர் தகவல்கள்

 மாதம் ஒரு முறை டாக்டர் வந்து பார்த்துச் செல்கிறார். தடுப்பூசி, குடல்புழு நீக்கம் ஆகியவற்றை பார்த்துக் கொள்கிறார். எங்களது டாக்டர் பூவைராஜன் ஆவார்.

Vaccination Programme for Goats

Months

Vaccine

Adult Goat

Kids (above 6 months)

January

Contagious pleuro pneumonia (C.C.P.P)

0.2 ml l/derma
l

0.2 ml l/dermal
March
Hemorrhagic Septicemia
5 ml S/c
2.5 ml S/c
April
Goat Pox
Scratch Method
Scratch Method
May
Entero toxaemia F.M.D.
5 ml S/c
5 ml S/c
2.5 ml S/c
5 ml S/c
June
Rinderpest
1 ml S/c
1 ml S/c
July
Black Quarter
5 ml S/c
2.5ml S/c
August
F.M.D.
5 ml S/c
0.5 ml S/c
September
Enterotoxaemia
5 ml S/c
2.5ml S/c
As per veterinarian’s prescription
Month
Vaccine
Time



November
PPR
Once A year
Any Time
Tetanus
Once A year
April
E.T.V
Once A year

தலைசேரி ஆடுகளின் புகைப்படங்கள்

 



































 

4 comments:

  1. iam also interest like this same firm to start i have 4 ekker with well and pump set motor also please where can i buy small size goats can u mail me.my mail id rrrkanna3@gmail.com iam waiting for your reply thank you .

    ReplyDelete
  2. very nice to see u r goat farm i am also planning to start a goat farm in tuticorin frm radhakrishnan 944 4052777 tuticorin

    ReplyDelete
  3. I am also interest like this same firm to start i have 6 ekker with well and PUMP set motor also please where can i buy small size goats can u mail me.my mail id rrrkanna3@gmail.com iam waiting for your reply thank you

    ReplyDelete
  4. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு 9944209238

    ReplyDelete