Showing posts with label முட்டைக்கோழி. Show all posts
Showing posts with label முட்டைக்கோழி. Show all posts

Tuesday, September 8, 2015

கோழிபண்ணை சந்தைப்படுத்த அலோசனைகளுடன் தொழிற்களம் பார்வை (Koli Pannai Santhai Padutha Aalosanai) - Business and Marketing Plan for poultry farm

கிராமத்து வீடுகளின் முற்றங்களில் சுற்றித் திரிந்த நாட்டுக்கோழிகளையும் இன்று ப்ரீட் செய்து பண்ணையில் வளர்த்து அதிக அளவில் இலாபத்தை பெற விவசாயிகளுக்கு ஒரு மாற்றுத் துணை தொழிலாக இருக்கிறது பண்ணை கோழி வளர்ப்பு.

பண்ணைக்கோழி வளர்ப்பு ::
நிச்சயமாக கோழிப்பண்ணை என்பது ஒரு  நல்ல இலாபகரமாண தொழில்தான். காரணம் கோழியின் கறி, முட்டை மட்டுமல்ல அதன் கழிவுகளும் கூட நல்ல விலைக்கு விற்பனைசெய்துவிடலாம் என்பதே ஆகும்.

    நல்ல சீதோசனமும், ஆலோசனைக்கு நல்ல மருத்துவரையும் உங்கள் பக்கம் ஒத்துழைக்கும்படி அமைந்துவிட்டால் அடுத்த 90 நாட்களில் நீங்கள் இலட்சாதிபதியாக மாறிவிடுவீர்கள்.. ஆம், கோழி வளர்ப்பு நல்ல இலாபம் தரக்கூடியது தான்.

    முதலில் புதிதாக கோழிப்பண்ணை அமைக்க எண்ணம் உள்ளவர்கள் அடிப்படையில் அமைந்த சில விசயங்களை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

கோழி வளர்ப்பு கறிக்கோழி (பிராய்லர்), நாட்டுக்கோழி, முட்டைக்கோழி என தனித்தனி வளர்ப்பு முறை உள்ளது. இதில் உங்களுக்கு ஏற்புடையது எது என்பதை உங்கள் முதலீட்டு தொகையை வைத்து முடிவு செய்யுங்கள்.

கோழிவளர்ப்பில் கறிக்காக வளர்க்கப்படுபவை, முட்டைக்காக வளர்க்கப்படுபவை என்று இரு வேறு பண்ணைகள் உண்டு.

பெறும்பாலும் பலரும் கறிக்கோழி வளர்ப்பதையே குறைந்தம் முதலீடு என்பதற்காக தேர்வு செய்கின் றனர்.

காரணம், முட்டைக்காக பண்ணை அமைக்க மற்றும் பாதுகாக்க செய்யப்படும் செலவுகள் கறிக்கோழி பண்ணைகள் அமைப்பதை காட்டிலும் கொஞ்சம் கூடுதல் செலவு பிடிக்கும் என்பதால் கொஞ்சம் அனுபவம் பெற்ற பெரிய நிறுவனங்களே முட்டைக்கோழி வளர்ப்பில் அதிக இலாபம் பார்க்கின்றன.

முட்டைக்கோழி வளர்ப்பு :
கூண்டு முறையில் வளர்க்கப்படும் முட்டைகோழி வளர்ப்பில் முதல் 10 வாரங்கள்  செட்டில் வளர்க்கப்படும். ( கொட்டகை போன்ற அமைப்பு ) பிறகு செல்களில் அடைத்து முட்டையிடும் பருவத்தில் வாரம் ஆறு முட்டை வீதமாக கிட்டத்தட்ட 52 வாரங்களுக்கு ஒவ்வொரு கோழியும் முட்டையிடும். பருவம் முடிந்ததும் அந்த கோழிகள் கறிக்காக கொல்லப்பட்டு விடும்.

இவ்வாறு, முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிகள் இடும் முட்டை இருவிதமாக வளர்க்கப்படும். நல்ல உயர் ரக சேவல்களிலிருந்து  செமன் எடுக்கப்பட்டு அதை கோழிகளுக்குள் இன்செமனேசன் செய்து குஞ்சு பொறிக்கத் தகுந்த முட்டைகள் ஒருபுறம் உற்பத்தி செய்யப்படும். இன்செமனேசன் செய்யாத முட்டைகள் தனியாக விற்பனைக்கு அனுப்படுகிறது.

அவ்வாறு இன்செமனேசன் செய்யப்பட்ட முட்டைகள் பண்ணைகளில் தனியே தரம் பிரிக்கப்பட்டும்  இயந்திரத்தின் உதவியுடன் குஞ்சுகளாக பொறிக்கப்பட்டு தனியே சிறு பண்ணைகளுக்கு "கோழி  வளர்ப்பிற்க்காக விற்பனை செய்யப்படுகிறது."

இவ்வாறான பெரிய நிறுவனங்கள் தான் பயனீர், சுகுணா, சாந்தி, எஸ்.ஆர்.எஸ் போன்றவைகள். 

      பொங்களூர், கோவை, பல்லடம் போன்ற தென்மாவட்டங்களில் அதிக அளவில் கோழிப் பண்ணைகள் உள்ளது. நாமக்கல் தமிழகத்தின் மிக முக்கியமான நகரமாக இருந்து வருகிறது. இங்கே முட்டை, கறிக்கோழிகளின் விலை தீர்மானிக்கப்படுகிறது.

Monday, January 12, 2015

முட்டைக்கோழிகள் மேலாண்மை

முட்டைக்கோழிகள் மேலாண்மை

முட்டைக்கோழிகள் மேலாண்மையில் கீழ்க்கண்டவற்றை நினைவில் கொள்வது நல்லது.
  • முட்டைக் கோழிக் கொட்டகையினை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்தல்
  • கோழிகளுக்கேற்ற இடவசதி, தீவன வசதி மற்றும் தண்ணீர் வசதி போன்றவற்றை ஆழ்கூள மற்றும் கூண்டு முறை வளர்ப்பில் அளித்தல்
  • ஆழ்கூளக் கொட்டகையில் ஒரு கோழிக்கு 2 சதுர அடி இடவசதியும், தீவன இட அளவு 5 அடி அளிக்க வேண்டும்.
  • கூண்டு முறை வளர்ப்பில் நான்கு கோழிகளுக்கு 18" x 15"அளவு கூண்டு இருக்க வேண்டும் (ஒரு கோழிக்கு 0.46 சதுர அடி)
  • ஒவ்வொரு 30 முட்டைக் கோழிகளுக்கும் ஆறு அடி நீண்ட தீவனத்தட்டும், 18 இஞ்ச் வட்ட வடிவ தீவனத்தட்டு ஒவ்வொரு 100 கோழிகளுக்கும் 4-5 எண்ணிக்கையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • 18 இஞ்ச் அகலமுடைய பிளாஸ்டிக் தண்ணீர்த் தட்டுகளை ஒவ்வொரு 100 கோழிகளுக்கும் இரண்டு என்ற வீதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • ஆழ்கூள முறையில் வளர்க்கப்படும் கொட்டகைகளில் 6 இஞ்ச் உயரத்திற்கு ஆழ்கூளத்தைப் பரப்ப வேண்டும்.
  • கோழிகளின் முதுகு உயரத்திற்கு தீவனம் மற்றும் தண்ணீர்த் தட்டுகளைத் தொங்க விட வேண்டும்.
  • தீவனத்தட்டுகள் மற்றும் தண்ணீர்த் தட்டுகளில் உள்ள கம்பிகளைக் கோழிகளின் உயரத்திற்கு ஏற்றவாறு சரி செய்ய வேண்டும்.
  • ஒவ்வொரு 5 முட்டைக்கோழிகளுக்கு ஒரு முட்டையிடும் கூண்டு ஒன்றை கோழிகள் முதல் முட்டை இடுவதற்கு முன்பே வைக்க வேண்டும்.
  • கோழிகள் முட்டையிடுவதற்கு மூன்று விதமான முட்டையிடும் பெட்டிகள் உள்ளன. 1. தனி முட்டையிடும் பெட்டி- இது 4-5 கோழிகளுக்கு போதுமானது 2.சமுதாய முட்டையிடும் பெட்டி – இது 50-60 கோழிகளுக்குப் போதுமானது 3. டிராப் முட்டையிடும் பெட்டி – இதில் ஒரு சமயத்தில் ஒரு கோழி மட்டுமே முட்டையிடும். இது இனப்பெருக்க மற்றும் கற்பதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது.
  • முட்டையிடும் பெட்டியில் ஆழ்கூளத்தினைப் போடவேண்டும். இந்த ஆழ்கூளத்தை வாரம் ஒரு முறை மாற்றி விட வேண்டும். இவ்வாறு மாற்றுவதால் முட்டைகள் அசுத்தமடைவது தடுக்கப்படுகிறது. இரவு நேரங்களில் முட்டையிடும் பெட்டியினை மூடி விட வேண்டும். இவ்வாறு மூடுவதால் கோழிகள் முட்டையிடும் பெட்டிக்குள் இரவு நேரங்களில் உட்கார்ந்து கொள்வது தடுக்கப்படுகிறது.
  • ஆழ்கூள முறை வளர்ப்பில், ஒவ்வொரு நாளும் முட்டைகளை எடுத்த பிறகு, ஆழ்கூளத்தை நன்றாகக் கிளறி விட வேண்டும். மாதம் ஒரு முறை ஆழ்கூளத்தை இரசாயனங்கள் தெளிக்க வேண்டும் அல்லது ஈரமான ஆழ்கூளத்தின் போது அமோனியா வாயு உற்பத்தியைத் தடுக்கவும் இரசாயனங்களைத் தெளிக்கலாம்.
  • முட்டையிடும் காலத்தில் 16 மணி நேரம் வெளிச்சம் கோழிகளுக்கு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • கோழிகளுக்கு சரி விகித தீவனம் அளிக்க வேண்டும். கோழிகளின் வயது, உற்பத்தித்திறன், தட்ப வெப்ப நிலை போன்றவற்றிற்கு ஏற்றவாறு அவற்றிற்கு தீவனமளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். முட்டையிடும் காலத்தில் சராசரியாக ஒரு கோழிக்கு 100-110 கிராம் தீவனமளிக்க வேண்டும்.
  • குளிர்காலத்தில் கோழிகளின் தீவனம் எடுக்கும் அளவு அதிகரித்தும், வெயில் காலத்தில் தீவனம் எடுக்கும் அளவு குறைந்தும் காணப்படும். குளிர்கால மற்றும் வெயில் கால மேலாண்மை முறைகளை முறையாகப் பின்பற்றி கோழிகளின் முட்டை உற்பத்தி நன்றாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • ஒவ்வொரு 6-8 வார இடைவெளியில் கோழிகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகளைக் கோழிகளின் குடற்புழுத் தாக்கத்திற்கேற்றவாறு அளிக்க வேண்டும். குறிப்பாக ஆழ்கூள முறையில் கோழிகளை வளர்க்கும் போது அவற்றிற்கு குடற்புழு நீக்கம் செய்வதை முறையாகப் பின்பற்றுவது அவசியமாகும்.
  • ஆழ்கூள முறையில் கோழிகளை வளர்க்கும் போது முட்டைகளை ஒரு நாளைக்கு 5 முறையும், கூண்டு முறையில் வளர்க்கும் போது ஒரு நாளைக்கு 2 முறையும் முட்டைகளை சேகரிக்க வேண்டும்.
  • முட்டையிடாத கோழிகளை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பரிசோதித்து பண்ணையிலிருந்து நீக்கி விட வேண்டும்.
  • அடைகாக்கும் கோழிகளை பண்ணையிலிருந்து நீக்கி விட வேண்டும். மேலும் அடைக்காக்கும் பழக்கத்தைக் கீழ்க்கண்ட செயல் முறைகளால் நீக்கி விடலாம்.

Sunday, January 11, 2015

கோழி பண்ணையில் கொழிக்குது பணம்!

சத்துக்களை அள்ளித் தரும் ஆரோக்கியமான உணவு முட்டை.  மாணவர்கள் சத்துணவிலும் வழங்கப்படுகிறது. கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் கூட, மஞ்சள் கருவை தவிர்த்துவிட்டு வெள்ளைக் கருவை சாப்பிடலாம். தேவை அதிகம் இருப்பதால், கோழிப்பண்ணை அமைத்து முட்டை உற்பத்தி செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்கிறார் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வேப்பங்கொட்டை பாளையத்தில் கிருத்திகா கோழி பண்ணை நடத்தி வரும் வெங்கடாசலம். அவர் கூறியதாவது: 

நான் ஒரு விவசாயி. பாசன நீர் பற்றாக்குறை காரணமாக முட்டைக்கோழி வளர்ப்பை பிரதான தொழிலாக செய்து வருகிறேன். இதற்கு  வங்கிக் கடன் உதவி எளிதாக கிடைப்பதால், பண்ணை அமைத்து கூண்டு முறையில் 24 ஆயிரம் கோழிகளை வளர்க்கிறேன். கோழி வளர்ப்பில் முதல் வளர்பருவம் வரை உற்பத்தி செலவுக்கு முதலீடு இருந்தால் போதும். முட்டைப்பருவ காலத்தில்  கிடைக்கும் முட்டைகளை விற்று  அதன்மூலம், அடுத்தடுத்த உற்பத்தி செலவுகளை சமாளிக்கலாம். அரவை இயந்திரம் வாங்கி தீவனத்தை நாமே அரைத்து கொண்டால் செலவு மிச்சமாகும். தீவனத்துக்கு தேவையான தானியங்கள் விலை குறையும்போது வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளலாம்.

நாமக்கல், பல்லடம் ஆகிய இடங்களில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு உள்ளது. இங்கு திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் மொத்த முட்டை கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. வியாபாரிகள் நேரில் வாங்கி செல்கின்றனர். சில நேரங்களில் நல்ல லாபமும், சில நேரங்களில் குறைந்த லாபமும் கிடைக்கும். முறையாக வளர்த்தால், கோழி இறப்பு, முட்டை உற்பத்தி குறைவு ஆகியவற்றை தவிர்க்கலாம். ஒரு கோழி வாரத்தில் 6 நாள் முட்டை இடுவதால், தினசரி நல்ல வருவாய் பார்க்கலாம். 

வெளிநாடுகளுக்கு சிலர் மட்டுமே ஏற்றுமதி செய்கிறார்கள். முட்டைகளை தரப்பரிசோதனை செய்து தகுதியான முட்டைகளை அனுப்பினால் ஏற்றுமதியிலும் ஜொலிக்கலாம். கோழிப்பண்ணைகளுக்கு மின் கட்டணம் வணிக கட்டண பிரிவின் கீழ் விதிக்கப்படுகிறது. கோழி வளர்ப்பை மேம்படுத்த பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரி வருகிறோம். 

எப்படி வளர்ப்பது?

முட்டைக்கோழிகளை வளர்க்க ஆழ்கூளம், கூண்டு வளர்ப்பு என 2 முறைகள் உள்ளன. கூண்டுகளில் வளர்ப்பதே சிறந்தது. குஞ்சு பொரித்தது முதல் 8 வாரம் வரை குஞ்சு பருவம். அதற்கடுத்த 8 வாரங்கள் வளர் பருவம், பின்னர் 56 வாரங்கள் முட்டை உற்பத்தி பருவம். 3 பருவ கோழிகளையும் தனித்தனி கூண்டுகளில் வளர்க்க வேண்டும். கூண்டுகளில் கோழிகளின் பருவத்துக்கு ஏற்ப வெப்பம், காற்றோட்டம், ஈரப்பதம் இருக்குமாறு வசதி ஏற்படுத்த வேண்டும். குஞ்சு பருவத்தில் தீவனம் வீணாவதை தடுக்கவும், ஒன்றையொன்று கொத்திக் கொள்ளாமல் இருக்கவும் அதன் அலகுகளை 7 முதல் 10 நாட்களுக்குள் வெட்ட வேண்டும். 

Thursday, February 27, 2014

முட்டைக்கோழி பண்ணையில் கொழிக்குது பணம்!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper