Muthu Poultry Farm, Cuddalore -9345273416
Blogs that focus on Farming, marketing of agricultural produce, and environmental impact of climate change. This will mostly helpful for beginning farmers can help you start a new farm and build your agriculture business. ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பசுந்தீவனம், முயல் வளர்ப்பு, இயற்கை வழி வேளாண்மை, காடை வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, இறால் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, தண்ணீர் போன்ற அணைத்து விதமான விவசாயம் மற்றும் பண்ணை சம்மந்த பட்ட தகவல்கள் இந்த வலைபதுவில் கிடைக்கும்.
Showing posts with label கடக்நாத் - கருங்கோழி. Show all posts
Showing posts with label கடக்நாத் - கருங்கோழி. Show all posts
Thursday, August 6, 2015
Wednesday, March 4, 2015
நோய் எதிர்ப்பு சக்தி மிக்க "கடக்நாத்' கருங்கோழிகள் (Kadaknath Karunkozhi) - Most Immunity " Kadaknath " Black Chickens
நோய் எதிர்ப்பு சக்தி மிக்க "கடக்நாத்' கருங்கோழிகள் : இதய நோயாளிகள் மத்தியில் வரவேற்பு அதிகரிப்பு

மத்தியபிரதேச மாநிலத்தில், காடுகளில் வளரும் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க, "கடக்நாத்' கருங்கோழிகள், சேலம் மாவட்டம் ஓமலூரில் பண்ணை அமைத்து வளர்க்கப்படுகின்றன. இந்த கோழிகளுக்கு, இதய நோயாளிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், கிலோ, 370 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கடக்நாத் என்னும் கருங்கோழிகள், மத்திய பிரதேசத்தை தாயகமாகக் கொண்டவை. இந்த கோழிகள் அங்குள்ள மலை வாழ் பழங்குடியின மக்களால் பராமரிக்கப்பட்டும், காடுகளில் தானாக வளரும் இயல்பை கொண்டவை.
"பிளாக் மீட் சிக்கன்' : இக்கோழிகளின் இறைச்சி கருப்பாக இருப்பதால், இதற்கு பிளாக் மீட் சிக்கன், காலாமாசி என, அழைக்கப்படுகிறது. இக்கோழியின் இறைச்சி, ருசியாகவும், மணமாகவும் இருப்பதுடன், மருத்துவ குணமும் கொண்டது. இக்கோழி இறைச்சியை அதிக நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகப் பயன் படுத்துகின்றனர். ஹோமியோபதி மருத்துவத்தில், நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களுக்கு, கடக்நாத் கோழி இறைச்சியை சாப்பிட அறிவுறுத்துகின்றனர். இக்கோழி இறைச்சி, 25 சதவிதம் அளவுக்கு புரதச்சத்து கொண்டுள்ளது. கொலஸ்ட்ரால், 0.73 -1.05 சதவீதம் மட்டும் உள்ளது.
இதன் காரணாக, இந்த இறைச்சியை இரத்த கொதிப்பு, இதய நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்கள் அதிக அளவில் விரும்பி சாப்பிடுகின்றனர். இறைச்சியில் அதிகமான அமினோ அமிலங்களும், மனிதர்களுக்கு தேவையான ஹார்மோன் சத்துக்களும் அதிகம் உள்ளது.
முழுதும் கறுப்பு தான் : இந்த கோழி ரகம் வெளிப் பகுதியில் மட்டுமின்றி உட் பகுதி, அதாவது சதைப்பகுதி அனைத்திலும் கருப்பாகவே காட்சி அளிக்கிறது. உட்பகுதியில், ஒரு சில பகுதிகளில் மட்டும் சதை கருப்பு, வெள்ளை கலந்து காணப்படுகிறது. தற்போது இந்த கோழி ரகங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், சேலம் மாநகரில், பத்துக்கும் மேற்பட்ட குறிப்பிட்ட கடைகளில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கோழி உயிருடன் கிலோ, 300 ரூபாய்க்கும், கறியாக, 370 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகிறது. நாட்டுக் கோழியை போல் அல்லாமல், முற்றிலும் கருப்பு நிறத்தில் காட்சி அளிக்கும், இக்கோழி ரகங்கள், தமிழகத்தில்ல சேலம் மாவட்டம் ஓமலூரிலும், வேலூரிலும் பிரத்தியோக பண்ணை அமைத்து வளர்க்கப்பட்டு வருகின்றன.
Saturday, October 4, 2014
கடக்நாத் - கருங்கோழி
கருங்கோழி என்பது உள்ளும் புறமும் எல்லா பாகங்களும் கருப்பாக இருக்கும் ஒரு கோழிவகை...இவை இந்திய மத்தியப் பிரதேச மாநிலக் காடுகளில் வளரும் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க, "கடக்நாத்' என்றழைக்கப்படும் கோழியினமாகும்...இக்கோழிகளின் இறைச்சி கருப்பாக இருப்பதால், இது பிளாக் மீட் சிக்கன், காலாமாசி என்றும் அழைக்கப்படுகிறது... தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் ஓமலூரிலும், வேலூரிலும் பண்ணை அமைத்து
வளர்க்கப்படுகின்றன...இக்கோழியி ன் இறைச்சி, ருசியாகவும், மணமாகவும் இருப்பதுடன், மருத்துவ குணமும் கொண்டது... இக்கோழி இறைச்சியை அதிக நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகப் பயன் படுத்துகின்றனர்... ஓமியோபதி மருத்துவத்தில், நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களுக்கு, கருங்கோழி இறைச்சியை சாப்பிட பரிந்துரைக்கின்றனர்... இக்கோழி இறைச்சி, 25 சதவிதம் அளவுக்கு புரதச்சத்து கொண்டுள்ளது... கொலஸ்ட்ரால், 0.73 -1.05 சதவீதம் மட்டுமே உள்ளதால் இந்த இறைச்சியை இரத்த கொதிப்பு, இதய நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்கள் நன்றாகச் சாப்பிடலாம்... இறைச்சியில் அதிகமான அமினோ அமிலங்களும், மனிதர்களுக்குத் தேவையான ஹார்மோன் சத்துக்களும் உள்ளன...மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்ரா,தில்லி போன்ற வடமாநிலத்து மக்கள் இக்கோழிகளின் இறைச்சி, ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதோடு, வயாக்ரா மாத்திரை போல் விந்தணுக்களின் வீரியத்தையும் அதிகரிக்கும் என நம்புகின்றனர்.. மைசூரில் செயல்படும் உணவு ஆராய்ச்சிக் கழகம், கருங்கோழி இறைச்சி இதய நோயாளிகளுக்கு மிகவும் நன்மை தரக் கூடியது என, சான்றளித்துள்ளது...சீன நாட்டின் மருத்துவத்திலும், உணவிலும்கூட இந்தக் கருங்கோழிகள் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன.
Nativity
One such breed is the Kalamasi or Kadaknath fowl breed that is native of Bhil and Bhila tribal regions in Madhya Pradesh.
The birds are jet black in colour and reared mainly for their meat, which is also black in colour but softer than that of other desi birds.
“A survey programme conducted by the Jhabhua Krishi Vigyan Kendra some years back threw light on the alarming fact that the breed is slowly becoming extinct and only a few hundreds are left. Through the National Agriculture Innovation Project (NAIP) of the Indian Council of Agricultural Research (ICAR) under Rajamata Vijayaraje Scindia Agricultural University,
Gwalior, attempts were made to revive the breed and today nearly several hundred tribal beneficiaries are rearing this breed,” says Dr. I.S.Tomar, Programme Coordinator, Krishi Vigyan Kendra, near Rajgarh Naka, Jhabua, Madhya Pradesh. The birds are robust by nature and can tolerate extremes of climate.
They can be reared quite easily and there is no need for any special attention or round the clock care for them. They thrive well in a minimal management system and are good scavengers. As a result, feed cost gets considerably reduced. They can be housed in large bamboo baskets or inside store rooms.
Subscribe to:
Posts (Atom)