Showing posts with label செம்மறி ஆடு வளர்ப்பு. Show all posts
Showing posts with label செம்மறி ஆடு வளர்ப்பு. Show all posts

Thursday, December 8, 2016

ஆட்டு பண்ணைகளில் பொலி கிடாக்களின் முக்கியத்துவம்

விவசாயிகள் நல்ல தரமான ஆட்டு பண்ணையை உருவாக்க பண்ணையில் சிறந்த பொலிகிடாக்களை பராமரிப்பது அவசியமானது.

தரமான ஆடுகள்
ஆட்டு பண்ணைகளின் லாபம் என்பது அங்கு வளர்க்கப்படும் தரமான, ஆரோக்கியமுள்ள ஆடுகளை சார்ந்து இருக்கின்றது. தரமுள்ள ஆடுகளை உருவாக்க பெரிதும் துணை புரிவது அந்த பண்ணையில் உள்ள ஆரோக்கியமான பொலி கிடாக்களும், பெட்டை ஆடுகளுமே ஆகும். நல்ல தரமான ஆட்டு குட்டிகள் தொடர்ந்து கிடைப்பதற்கு நல்ல பெட்டை ஆடுகளும், தரமான பொலி கிடாக்களும் மிகவும் அவசியம் ஆகும். குறிப்பாக, நல்ல பொலிகிடாக்கள் நல்ல குட்டிகள் உருவாவதில் 80 முதல் 90 சதவிகிதம் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, நல்ல பொலி கிடாக்களை தேர்வு செய்வதும் பராமரிப்பதும் மிகவும் அவசியம்.
பொலி கிடாக்கள் தேர்வு
விவசாயிகள் புதிய பண்ணை தொடங்கும் போது கிடாக்களை வேறு பண்ணைகளில் இருந்தோ அல்லது சந்தையில் இருந்தோ வாங்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் குட்டிகள் நோயினால் பாதிக்கப்பட்டிருக்க கூடாது. அதே போல் தேர்ந்தெடுக்கும் கிடாக்கள் காய்ச்சல், நுரையீரல் நோய்கள், வயிற்று உப்புசம், கண்வலி, வாய்ப்புண், கால்புண் மற்றும் இனப்பெருக்க உறுப்பு போன்ற நோய் அறிகுறிகள் இல்லாமல் இருத்தல் வேண்டும். ஆண் தன்மை, பிரகாசமான கண்கள் மற்றும் ஆரோக்கிமான தோல் உடைய ஆடுகளை வாங்க வேண்டும். பொலி கிடாக்களை வாங்கும் பொழுது தரமான இனப்பெருக்க உறுப்புகள் உள்ளவற்றை வாங்க வேண்டும்.
பொதுவாக, கிடாக்களில் நன்றாக வளர்ச்சியடைந்த இரண்டு விரைகளும் ஒரே அளவில் இருக்கும்படியான ஆடுகளை தேர்வு செய்ய வேண்டும். இரண்டு விரைகளும் விரைப்பையில் இறங்காத ஆடுகளை தவிர்க்க வேண்டும். ஆடுகளில் விதைப்பையின் சுற்றளவு 25 முதல் 35 செ.மீ இருக்க வேண்டும். கால்கள் மற்றும் பாதங்கள் உறுதியானதாக இருக்க வேண்டும். விவசாயிகள் சொந்த பண்ணையில் உள்ள ஆடுகளின் இனத்திற்கு ஏற்ப ஒரே இனத்தை சேர்ந்த வயது வந்த கிடாக்களையே தேர்வு செய்ய வேண்டும். பொதுவாக, 8 முதல் 10 வயதுடைய கிடாக்கள் சினைக்கு விடத் தகுதியானவை. ஆனால், ஒரு ஆண்டு வயதுடைய ஆடுகளை சினைக்கு அனுமதிக்கலாம். ஆடுகளை சினைக்கு 6 வயது வரை பயன்படுத்தலாம். இனப்பெருக்கத்திற்கு தேவையான கிடாக்களை அவை குட்டிகளாக இருக்கும் பொழுது தேர்வு செய்வதுடன், தாயிடம் இருந்து பிரித்த பிறகு 3 மாத எடையின் படி அதிக எடை உடைய குட்டிகளை தேர்வு செய்யலாம்.

Tuesday, April 28, 2015

பனிக்காலங்களில் செம்மறி ஆடுகளை பாதுகாக்க வழிகள் (Pani Kaalangalil Semmari Aadai Paramarikum Murai) - Ways to protect sheep in winter season


பனிக்காலங்களில் செம்மறி ஆடுகளுக்கு ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாக்க  ஆட்டு பட்டி பராமரிப்பு முறைகள் பற்றி விழிப்புணர்வு கருத்துக்களை விவசாயிகளுக்கு கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

விவசாயம் மட்டுமல்லாமல் ஏராளமான விவசாயிகள் ஆடு வளர்த்து ஜீவனம் நட த்தி வருகின்றனர். தற்போது  மழையை தொடர்ந்து பனிக்காலம் தொடங்கியுள்ளது. பனி ஆரம்ப காலத்திலேயே அதிகமாக உள்ளது. இதனால் செம்மறி ஆடுகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பனிக்கால நோய்களிலிருந்து ஆடுகளை பாதுகாப்பது மற்றும் பராமரிப்பது எவ்வாறு என்பது பற்றி கரூர் கால்நடை பராமரிப்புத் துறையினர் கூறியதாவது:
 


  • பனி அதிகமான காலங்களில் செம்மறி ஆடுகளை பனிக்கால நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கு ஆட்டுப்ப ட்டி பராமரிப்பு மிக முக்கியகும்.
  • பட்டி சரியாக அமைக்காவிட்டால் ஆடுகளுக்கு சளி, இருமல், வாய்ப்புண் நோய், புழு புண், குட்டிகளில் வளர்ச்சி குன்றுதல் காரணமாக ஆடுகள் இறந்து போக வாய்ப்புள்ளது. இதனல் ஆடு வளர்க்கும் விவசாயிகளுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்படும்.
  • இவற்றை தடுக்க ஆடுகள் எண்ணிக்கைக்கு ஏற்ப பட்டி தரம்புகள் விசாலமாக அமக்க வேண்டும். குறைந்த பட்சம் ஒரு ஆட்டுக்கு 4 சதுர அடி இடைவெளி விட வேண்டும்.
  • பட்டிக்கு மூன் றில் ஒரு பங்கு அளவு மட் டும் சாக்கு படுதா போடுதல் போதுமானது.
  • காலையில் பட்டிக்குள் இளம் வெயில் விழும்படி கிழக்குப் பகுதியில் வெற்றிடம் விட வேண்டும்.
  • தென்னந்தோப்பு, மாந்தோப்பு போன்ற ஈரப்பதமான இடங்களில் பட்டி அமைக்கக் கூடாது. மேடான இடத்தில் பட்டி அமைக்க வேண்டும்.
  • பட்டி தரம்புகளின் சுற்றுப்பகுதி, சாலை மற்றும் பெரிய ஆடுகளின் மீதும் 15 நாட்களுக்கு ஒரு முறை பியூடாக்ஸ் எனும் மருந்தை ஒரு லிட்டர் நீரில் ஒரு மில்லி கலந்து கை தெளி ப்பான் மூலம் தெளிப்பது நல்லது. இதனால் வாய்ப்புண் நோயை பரப்பும் பூச்சிக்கடி மற்றும் புற உண்ணிகளை தவிர்க்கலாம்.
  • மாலையில் வேம்பு, யூக்கலிப்டஸ், தும்பை மற்றும் இலை சருகுகள் கொண்டு பட்டிக்கு புகை போடலாம். இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து ஆடு வளர்க்கும் விவசாயிகள் ஆடுகளை இந்த பனிக்கால நோய்களிலிருந்து பாதுகாத்து நஷ்டத்தை தவிர்த்துக் கொள்ளலாம்.

Wednesday, March 11, 2015

ஆடு வளர்ப்பு - பொலிக் கிடா

''ஆண்டுக்கு ஒரு தடவை பொலிக் கிடாவை மாத்தணும்!''


பொட்டனேரியில் உள்ள, 'மேச்சேரி ஆடு ஆராய்ச்சி நிலைய'த்தின் உதவிப் பேராசிரியர் ந. பாரதி, வெள்ளாட்டு இனங்கள் மற்றும் இனவிருத்தி முறைகளைப் பற்றி விளக்கும்போது, ''வெள்ளாடுகளை, 'ஏழைகளோட பசு’னுதான் சொல்லணும். சிறு-குறு விவசாயிக, நிலமில்லாத விவசாயிங்களுக்குப் பொருளாதார ரீதியா கை கொடுக்குறது வெள்ளாடுகதான். குணத்தை வெச்சும், வெளித் தோற்றத்தை வெச்சும் அந்தந்தப் பகுதிகள்ல சுலபமா அடையாளம் கண்டுபிடிக்கக் கூடிய வகைகளைத்தான் இனம்னு சொல்றோம். ஒவ்வொரு பகுதிகள்லயும் இருக்கற ஆடுகளுக்கு. ஓரொரு இனப்பெயர் இருக்கும். தமிழ்நாட்டுல இருக்கற இனங்களைப் பத்திப் பார்ப்போம்.

  • சிப்பாய் நடை போடும் கன்னி!
  • கடலோரத்துக்கு ஏத்த கொடி! இதை 'போரை ஆடு’னும் சொல்வாங்க. 
  • சேலம் கருப்பு! இதை, 'வரை ஆடு’னும் சொல்லுவாங்க. 
  • பள்ளை ஆடு! இந்த ஆடுகள், குட்டையா இருக்கும். 'குள்ள ஆடு’, 'சீனி ஆடு’னும் சொல்வாங்க. 
  • மோளை ஆடு!


இப்ப சொன்ன இந்த அஞ்சு ரகமும்... தமிழ்நாட்டைச் சேர்ந்த இனங்கள்தான். இது இல்லாம ஜமுனாபாரி, தலைச்சேரி மாதிரியான வெளி மாநில இனங்களையும் வளர்க்கலாம். எந்த இனங்களையும் சேராத ஆடுகளும் இருக்கு. அதை பொதுவா 'நாட்டு ஆடு’னு சொல்வாங்க.

இனவிருத்தி இப்படித்தான்!
வெள்ளாடுகளைப் பொறுத்தவரை பெட்டை 6 மாசத்திலும், கிடா 8 மாசத்திலும் பருவத்துக்கு வரும். ஆனா, பெட்டையை 10 மாசத்துல இருந்து 15 மாசத்துக்குப் பிறகும், கிடாவை 18 மாசத்துக்குப் பிறகும்தான் இனப்பெருக்கத்துக்குப் பயன்படுத்தணும்.

19 நாள் முதல் 21 நாள் வரைக்கும் ஆடுகளோட சினைப் பருவம் இருக்கும். அடிக்கடி கத்தும், வாலை வேகமா அசைக்கும், சரியா தீவனம் எடுக்காது, மத்த ஆடுக மேல தாவும். இந்த மாதிரியான அறிகுறிகள் தெரிஞ்சா... ஆடுகள் சினைக்குத் தயாராயிடுச்சுனு அர்த்தம். அறிகுறி தெரிஞ்ச 24 மணி நேரத்துக்குள்ள பொலிக் கிடாயுடன் சேர்த்துடணும். சினை பிடிச்ச பிறகு, குட்டி போடுற வரைக்குமான சினைக்காலம் 146 முதல் 151 நாட்கள். குட்டி போட்ட பிறகு, மூணு மாசம் வரைக்கும் பாலூட்டும். அதுக்குப் பிறகுதான் அடுத்த சினைக்கு விடணும்.


கிடா தேர்வில் கவனம்!
கிடாக்களைப் பொறுத்தவரைக்கும் நல்ல தரமான 'பொலிச்சல்’ உள்ள கிடாயா இருந்தாத்தான், நல்லத் தரமானக் குட்டிகள் கிடைக்கும். ஒரு பொலிக் கிடாவை 'மந்தையில பாதி’னு சொல்லலாம். நல்ல பாரம்பரியமான, பால் அதிகமா கொடுக்குற தாய் ஆட்டோட குட்டிகள்ல, நல்ல உடல் வளர்ச்சியுள்ள 6 வயசுள்ள கிடா குட்டிகளைத்தான் பொலிக் கிடாயா தேர்வு செய்யணும். அதிக குட்டி போடுற தாயோட குட்டிகளை பொலிக் கிடாயா தேர்ந்தெடுத்தா... இன்னும் சிறப்பா இருக்கும்.



சிலர், மந்தையில இருக்கற எல்லா ஆடுகளுக்கும் ஒரே கிடாவைப் பயன்படுத்துவாங்க. அப்படி செஞ்சா, இனப்பெருக்கம் சரியா இருக்காது. 20 முதல் 30 ஆட்டுக்கு ஒரு கிடாங்கிற கணக்குல தான் பொலிக் கிடாவைப் பயன்படுத்தனும். பொலிக் கிடாவை வருஷத்துக்கு ஒரு தரம் மாத்திடணும். அடுத்தக் கிடாவை வெளிய இருந்துதான் கொண்டு வரணும். பெரிய மந்தைகள வெச்சுருக்கற விவசாயிகள், தங்களுக்குள்ள கிடாக்களை மாத்திக்கலாம்.

ஆடுகளைக் கழிக்க வேண்டும்!
ஒவ்வொரு வருஷமும்... 10% முதல் 20% வரைக்கும் மந்தையில தேவையில்லாத ஆடுகளைக் கழிச்சிடணும். பிறக்கற குட்டிக, இந்தக் கழிவு ஆடுகளோட எண்ணிக்கையை ஈடுகட்டும். அதனால் மொத்த எண்ணிக்கை பாதிக்காது. சரி, எந்தெந்த ஆடுகள கழிக்கணும்?ங்கற கேள்வி உங்களுக்கு நிச்சயம் வரும். அதாவது, குட்டிகளோட எடை வழக்கத்தைவிட கம்மியா இருந்தா... அந்த குட்டிகளோட தாய் ஆட்டை கழிச்சுடணும். சினை நிக்காத ஆடுகள், இனவிருத்திக்கான தகுதி இல்லாதவை, குணப்படுத்த முடியாத காயம், ஊனம் இருக்கற ஆடுகள், பல் இல்லாதவை, மரபியல் சார்ந்த நோய் இருக்கற ஆடுகள்னு லாபம் கொடுக்க முடியாத ஆடுகளை அப்பப்போ கழிச்சுடணும்'' என்று விளக்கமாக பேசினார் பாரதி.

REGISTERED BREEDS OF GOAT IN INDIA


ஆடுகளைத் தாக்கும் நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள்

தவறாமல் தடுப்பூசி. நோய் வந்தால் பராமரிப்பு!
ஆபத்துக்கு அழைப்பிதழ் வைக்கும் அடைப்பான்
நுண்ணுயிரி நோய்களில் முக்கியமானது அடைப்பான். இது 'பேசில்லஸ் ஆந்திராசிஸ்’ என்ற நுண்ணுயிரியால் வருது. இந்த நோய் தாக்கின ஆடுகளுக்கு காய்ச்சல் வந்து... திடீர்னு இறந்துடும். அப்படி இறந்த ஆடுகளோட மூக்கு, காது, ஆசனவாய் பகுதிகள்ல இருந்து உறையாத கருஞ்சிவப்பு ரத்தம் வெளியேறும். இது, முக்கியமான அறிகுறி.
அடைப்பான் தாக்கி இறந்த ஆடுகளை உணவுக்காகவோ, பிரேத பரிசோதனைக்காகவோ அறுக்கக்கூடாது. அப்படி அறுத்தா... நோய் கிருமிகள் காத்துல கலந்து பரவ ஆரம்பிச்சு, மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும்கூட ஆபத்தா மாறிடும். அதனால, இந்த நோய் விஷயத்துல கவனமா இருக்கணும். இறந்த ஆடுகளை குழிவெட்டி சுண்ணாம்புத்தூள் போட்டு புதைச்சுடணும். இறந்து கிடந்த இடத்தை கிருமிநாசினி மூலமா சுத்தப்படுத்தி, அந்த இடத்தை தீயிட்டு கருக்கணும். அந்தப் பகுதியில இருக்கற மத்த ஆடுகளுக்கும் உடனடியா தடுப்பூசி போடணும். இந்த நோயை ஆன்ட்டிபயாடிக் மருந்துகளால கட்டுப்படுத்திட முடியும்.

தொல்லை தரும் தொண்டை அடைப்பான்
ஆடுகளோட தொண்டைப் பகுதியில 'பாஸ்ச்சுரல்லா மல்டோசியா’ங்கிற நுண்ணுயிரி எப்பவும் இருக்கும். உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, இது பெருகி நோயை உண்டு பண்ணும். மழைக் காலத்தில் இளம் வெள்ளாடுகளுக்கு அதிகமா இந்த நோய் வரும். காய்ச்சல், மூச்சுத்திணறல், மார்பு, கழுத்து பகுதிகள்ல வீக்கம் மாதிரியான அறிகுறிகள் தென்படும். மூக்கு, வாயிலிருந்து சளி ஒழுகும். நோய் தாக்கின அஞ்சிலருந்து ஏழு நாட்களுக்குள்ள ஆடுகள் இறந்துடும். நோய் கண்ட ஆட்டை மந்தையிலிருந்து பிரிச்சுடணும். உடனடியா, கால்நடை மருத்துவர்கிட்ட கொண்டுபோய் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யணும். மத்த ஆடுகளுக்கும் உடனே தடுப்பூசி போடணும். ஒவ்வொரு வருஷமும் மழைக் காலம் ஆரம்பிக்கறதுக்கு முன்ன தடுப்பூசி போட்டு, இந்த நோய்ல இருந்து ஆடுங்களைக் காப்பாத்தலாம்.
துவள வைக்கும் துள்ளுமாரி
'கிளாஸ்டிரீடியம் வெல்சை’ என்ற நுண்ணுயிரியால் ஏற்படுற நோய் துள்ளுமாரி. இது எல்லா வயது ஆடுகளையும் தாக்கும். அதிகமா இளம் ஆடுகளுக்கு வரும். மழைக் காலத்துல புதுசா முளைச்ச இளம்புற்களை மேயும்போது இந்த நோய் வருது. இந்த நோய்க்கிருமிகள் குடலில் எப்பவுமே தங்கி இருக்கும். திடீர்னு, அதிகமான தீவனம் எடுக்கும்போது, கிருமிகள் பெருகி, பாதிப்பு வருது. கிருமிகளோட விஷத்தன்மை நரம்பு மண்டலத்தைத் தாக்குறதால, ஆடுகள் துள்ளி விழுந்து இறந்துடும். சில சமயங்கள்ல, சளி மாதிரி வயிற்றுப் போக்கு இருக்குற அறிகுறி தெரிஞ்சா.. மேய்ச்சல் நேரத்தைக் குறைச்சு, பாதி அளவுக்கு தீவனம் எடுக்குற மாதிரி பண்ணணும். உடனே மருத்துவர்கிட்ட காமிக்கணும்.


ஆடுகளுக்கு 6 மாச வயசுல இந்த நோய்க்கான தடுப்பு ஊசியைப் போடணும். ஒவ்வொரு வருஷமும் மழைக் காலம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி தடுப்பூசி போட்டுடணும். புதுசா முளைச்ச புல்லை எப்பவும் மேய விடக்கூடாது. தீவனத்தை திடீர்னு அதிகப்படுத்தக்கூடாது. கொஞ்சம் கொஞ்சமாத்தான் கூட்டணும்.


Thursday, March 5, 2015

மெரினோ செம்மறி ஆடுகள்

''அமெரிக்காவின் மெரினோ, ரஷ்யாவின் ராம்புல்லே வகை செம்மறி ஆடுகளை இந்திய ஆடுகளுடன் சேர்த்து 'பாரத் மெரினோ' என்ற ஒரு வகை கலப்பு இன ஆடுகளை உருவாக்கியுள்ளோம். ஏழு மாத வயதான இந்த மெரினோ ரக ஆண் ஆடுகளை 750 ரூபாய் விலையில் விவசாயிகளுக்குக் கொடுக்கிறோம். இதை வாங்கிச் செல்பவர்கள். ராமநாதபுரம் வெள்ளை, வேம்பூர், கீழக்கரிசல், நீலகிரி, மேச்சேரி, சென்னைச் சிவப்பு போன்ற நாட்டுரக ஆடுகளுடன் சேர்த்து இனப் பெருக்கம் செய்யலாம்.


நாற்பது பெட்டை ஆட்டுக்கு, ஒரு ஆண் (கிடா) போதுமானது. மெரினோ கலப்பு ஆடு மூலம் பிறக்கும் குட்டி 4 முதல் 5 கிலோ வரை எடை இருக்கும். ஓர் ஆண்டிலேயே குறைந்தது 110 முதல் 120 கிலோ வரை எடை வந்துவிடும். ஆனால், நாட்டு ரக ஆடு, பிறந்தபோது 1.5 முதல் 2 கிலோ எடையும், ஓர் ஆண்டில் அதிகபட்சம் 30 முதல் 35 கிலோவையும் தாண்டாது. 'மெரினோ' வகை ஆடுகள், ஆண்டுக்கு இரண்டு முறை குட்டி போடும்.

காலாற நடக்க வேண்டும்!
கிடை அமர்த்தி வளர்ப்பதற்கு ஏற்றது. பத்து ஏக்கருக்கு மேல் மா, தென்னந்தோப்பு வைத்திருப்பவர்கள்... ஐம்பது ஆடுகள் வரை அந்தத் தோட்டத்திலேயே வளர்க்கலாம். செம்மறி ஆடுகள் காலாற நடந்து மேய்ந்து வந்தால்தான் விரைவாக வளரும். தோட்டத்தில் கோ-3, 4 ரக புல், கம்பு, அகத்தி போன்ற பசுந்தீவனங்களைப் பயிரிட்டு, தீவனமாகக் கொடுக்கலாம். அதோடு, காய்ந்த நிலக்கடலைக் கொடியையும் போட்டால், ஓராண்டில் ஆட்டின் எடை 120 கிலோ வரை வந்து விடும். மூன்று மாதத்துக்கு ஒரு தடவை குடற்புழு நீக்கம் செய்தால், சளி பிடிக்காது.

செம்மறி ஆடுகளைப் பொறுத்தவரை வெள்ளாடு போல புழுக்கை போடுவது குறைவுதான். கழிச்சல்தான் அதிகமாக இருக்கும். இது வாலில் தொற்றிக் கொண்டு நோய்களுக்கு வழி வகுக்கும். இதைத் தடுக்க, குட்டி பிறந்த ஒரு வாரத்திலேயே மலவாய் அருகில், வால் பகுதியை சிறிதளவு விட்டு ரப்பர் பேண்ட் போட்டு விட வேண்டும். இதனால் வால் பகுதிக்கு ரத்த ஓட்டம் தடைபட்டு வால் அறுந்து விழும். சிறிய அளவிலான வால் மட்டும் இருக்கும். ஆடு மலம் கழித்தாலும் அந்தப் பகுதியில் மலம் ஒட்டாது. இதனால் கிருமித் தொற்றும் ஏற்படாது.


ரோமம் கிலோ 75 ரூபாய்!
'ஓர் ஆண்டில் இரண்டு தடவை ஆடுகளின் ரோமத்தை வெட்டலாம். ஆடுகளை ரோமம் வெட்டும் வரை குளிப்பாட்டக் கூடாது. ஓர் ஆட்டிலிருந்து குறைந்தது மூன்று கிலோ வரை ரோமம் கிடைக்கும். மத்தியபிரதேசம், குஜராத்தைச் சேர்ந்த வியாபாரிகள். கிலோ 50 முதல் 75 ரூபாய் வரை விலைகொடுத்து இதை வாங்கிக் கொள்கிறார்கள். இந்த ரோமத்திலிருந்து போர்வை, ஸ்வெட்டர் என குளிரைத் தாங்கும் ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன'' என்று விவரித்த ராஜேந்திரன்,

''தமிழகத்தில்தான் இந்த ஆய்வு மையம் இருக்கிறது. ஆனால், இங்குள்ள விவசாயிகளை விட கர்நாடக விவசாயிகளே எங்களை அதிகம் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வளரக்கூடிய பாரத் மெரினோ ரக ஆண் ஆடுகள் எங்களிடம் இருக்கின்றன. எனவே தமிழக விவசாயிகளும் இந்த ஆடுகளை வளர்க்க முன் வரவேண்டும். ஆட்டுக்குட்டி தேவைப்படுபவர்கள் எங்கள் மையத்தில் முன்பதிவு செய்துகொண்டால், உரிய நேரத்தில் வழங்குவோம்'' என்று அழைப்பு வைத்தார்.

தொடர்புக்கு: மத்திய செம்மறி மற்றும் ரோம ஆராய்ச்சி மையம், மன்னவனூர், கொடைக்கானல்-624103. தொலைபேசி : 04542-276414.

Friday, January 16, 2015

செம்மறி மற்றும் வெள்ளாடுகளின் தீவன மேலாண்மை

செம்மறி ஆடுகளின் தீவன மேலாண்மை

செம்மறி ஆடுகளின் வயதுக்கேற்ற தீவனப் பராமரிப்பு

1.பெட்டை ஆடுகளுக்கு இனவிருத்திக்கான தீவனம்
i.பெட்டை ஆடுகளின் உடல் பருமனைக் குறைத்தல்
Feeding lactating does
  • உடல் பருமனால் உடலில் அதிக கொழுப்புச் சேர்ந்து இனப்பெருத்தத் திறனைக் குறைக்கும்.
  • ஒரு நல்ல மேய்ப்பாளன், இனப்பெருக்கக் காலத் துவக்கத்திற்கு முன் குறைந்தது ஒன்றரையிலிருந்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஆடுகளின் உடல் பருமனைக் கண்காணித்தல் வேண்டும்.
  • உடல் பருத்த பெட்டைகளை தீவனக் குறைப்பு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் தேவையான சீரான உடலமைப்பிற்கும் படிப்படியாகக் கொண்டு வர முடியும்.
  • பெட்டைகளை இனப்பெருக்கத்திற்கு தயார்படுத்த சீரான மேற்பார்வையின் மூலம் தீவனக் குறைப்பு மற்றும் தீவிர உடற்பயிற்சி அளிக்க வேண்டும்
 ii.பெட்டைகளுக்கான இனப்பெருக்கக் காலக் கூடுதல் தீவனம்
Feeding lactating does
  • இனப்பெருக்கத்திற்கு சுமார் இரண்டிலிருந்து மூன்று வாரங்களுக்கு முன்னரே, பெட்டைகளின் உடல் எடையை அதிகரிக்கும் வகையில் அவற்றின் தீவனத்தில் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்க வேண்டும்.
  • இதன் மூலம், பெட்டைகள் விரைவில் சினைப்பருவம் எய்தவும், குட்டிகள் ஈனவும் வழிவகுக்கலாம்.
  • மேலும், பெட்டைகளின் சினைப்பருவ இடைவெளி சமமானதாகவும், குட்டி ஈனும் எண்ணிக்கை சீரானதாகவும் அமையும்,
  • அது மட்டுமல்லாமல், இனப்பெருக்கக் காலக் கூடுதல் தீவனமளித்தல் மூலம் குட்டி ஈனும் விகிதத்தையும், ஒரே ஈற்றில் பல குட்டிகள் ஈனும் விகிதத்தையும் அதிகரிக்கலாம்.
  • இந்தியாவில், இந்த காலம் பொதுவாக மே மாத இறுதியில் வருகின்றது.
  • தீவன மூலப் பொருட்கள் கிடைப்பதைப் பொருட்டு வெவ்வேறு வகையான இனப்பெருக்கக் காலக் கூடுதல் தீவனக் கலவைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பரிந்துரைக்கப்பட்ட இனப்பெருக்கக் காலக் கூடுதல் தீவனக் கலவைகள்
  • பயிறு மற்றும் புல் வகைத் தீவனங்களின் ஒரு நல்ல கலவை.
  • ஒரு ஆட்டிற்கு, ஒரு நாளைக்கு புல் தீவனத்துடன், 150 கிராம் கோதுமைத் தவிடு.
  • புல் தீவனத்துடன் 250 கிராம் தானியம், 450 கிராம் புண்ணாக்கு.
  • பயிறு வகை உலர் புல்லுடன் 100 கிராம் கோதுமைத் தவிடு, 150லிருந்து 200 கிராம் தானியம் மற்றும் ஒரு ஆட்டிற்கு, ஒரு நாளைக்கு உடல் எடையில் 10 சதவிகித அளவு பசும்புல் மற்றும் 150லிருந்து 200 கிராம் அடர் தீவனம்.

கொட்டகை மேலாண்மை

செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்கான கொட்டகையமைப்பு

பொது அனுமானங்கள்

Low cost houseOpen type housing with run space
 Sheep in open spaceFodder Cultivation near by shed

 

  • மிதமான உற்பத்தி திறனுக்கு, குறைந்த செலவிலான, கட்டுமான பொருட்களை கொண்டு சாதாரண கொட்டகை அமைத்தல்.
  • அதிக மழை பெய்யும் இடங்களைத் தவிர, நாட்டின் பிற இடங்களில் மண் தரையிலான கொட்டகையே ஏற்றது.
  • தண்ணீர் தேங்குவதை தவிர்க்க மேடான பகுதிகளில் கொட்டகை அமைத்தல் வேண்டும்.
  • வளரும் ஆடுகளின் தீவனத் தேவைக்கு கொட்டகையை சுற்றிலும் பசுந்தீவன மரங்களை வளர்த்தல்.
  • ஆடுகளுக்கு தூய்மையான குடிநீரை கிடைக்கச் செய்தல்.
  • நுல்ல காற்றோட்டமான அமைப்புடன் கொட்டகை அமைத்தல்.
  • கொட்டகையின் தரையானது நல்ல கெட்டியான முறையில் தண்ணீரை உறிஞ்சும் வகையில் இருத்தல் வேண்டும். தரையை எளிதில் சுத்தம் செய்வதற்கு உகந்தவாறு அமைத்தல் நல்லது.
  • பராமரிப்பு முறைக்கு ஏற்றவாறு கொட்டகைகளை அமைத்தல் வேண்டும்.
  • திறந்த நடைவழி பகுதி மற்றும் கூரை அமைக்கப்பட்ட பகுதிகள் கொண்ட திறந்த வெளி கொட்டகை சிறந்தது.
  • நடைவழி பகுதியை கட்டு கம்பி கொண்டு சுற்நி அமைத்தல் நல்லது.
  • இரவு மற்றும் மழை காலங்களில் தங்குவதற்கு உகந்த கொட்டகையமைப்பு அவசியமாகும்.
  • காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் கொண்ட கிழக்கு , மேற்கு திசையில் அகலப்பகுதி இருக்குமாறு அமைத்தால் தரையானது நன்கு காய்ந்திருக்கும்.
  • குறைந்த செலவு மற்றும் தாங்கும் திறன் கொண்ட தென்னை மற்றும் பனை ஓலையிலான கூரை மிகவும் சிறந்தது.
  • அதிக தாங்கும் திறன் மற்றும் பழுது பார்க்கும் செலவுகளை குறைக்கவல்ல ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் பெரிய பண்ணைகளுக்கு ஏற்றது.
  • சிறிய கொட்டகைகளுக்கு சாய்வான கூரைகளே சிறந்தது.
  • காலை நேரங்களில் மேய்ச்சலுக்கும் இரவு நேரங்களில் கொட்டகைகுன்றம் வளர்க்கப்படும். ஆடுகளுக்கு கூரை வேயப்பட்ட இடவசதியே போதமானது.
  • கூரை பகுதி மற்றும் திறந்த வெளி நடை பகுதி கொண்ட கொட்டகையமைப்பு தீவிர முறையில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு உகந்தது.
  • கொட்டகையமைப்பின்  அகலப்பகுதியானது 8 முதல் 12 மீட்டருக்கு மிகாமல் இருக்குமாறு அமைத்தலும், நீளப்பகுதியானது ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கட்டுபாடின்றி அமைத்துக் கொள்ளலாம்.
  • கூரையின் நடுப்பகுதியின் உயரம் 3.5 மீட்டராகவும், பக்கவாட்டு பகுதியின் உயரம் 2.5 மீட்டராக இருத்தல் நல்லது.
  • கொட்டகையை சுற்றி அமைக்கப்படும் கட்டுக் கம்பி அமைப்பின் உயரம் 4 அடியாக இருத்தல் வேண்டும்.
  • அடர் தீவனம், பசுந்தீவனம் மற்றும் தண்ணீர் வைப்பதற்கு ஏற்றவாறு தனித்தனி தீவன மற்றும்
  • தண்ணீர் தொட்டிகள்அமைத்தல் நல்லது.

இடவசதி தேவைகள்

இந்திய சூழலுக்கு உகந்த பரிந்துரைக்கப்பட்ட இடவசதி : மற்றும் குட்டி ஈன்ற ஆடுகள்

வயதுகூரை அமைக்கப்பட்ட பகுதிதிறந்த வெளிப் பகுதி
மூன்று மாதம் வரை
0.2 – 0.25
0.4 – 0.5
மூன்று முதல் ஆறு மாதம் வரை
0.5 – 0.75
1.0 – 1.5
6-12 மாதங்கள்
0.75 – 1.0
1.5 – 2.0
பெரிய ஆடுகள்
1.5
3.0
கிடா, சினை ஆடுகள்
1.5 – 2.0
3.0 – 4.0

ஒரு ஆட்டிற்கு தேவையான இடவசதி  (இந்திய தகுதிப் பிரிவு)  பரிந்துரைகள்

ஆடுகளின் வகை    ஒரு ஆட்டிற்கு தேவையானகுறைந்த பட்ச இடவசதி
கிடாக்கள்  -  (குழுக்கள் முறையில்)    1.8
கிடாக்கள்  –  (தனிப்பட்ட முறையில்)3.2
குட்டிகள் (குழுக்கள் முறையில்)0.4
தாயிடமிருந்து பிரித்த குட்டிகள்0.8
ஒரு வருட வயதான ஆடுகள்0.9
பெட்டை ஆடுகள் (குழுக்கள் முறையில்)1.0
பெட்டை ஆடுகள் (குட்டிகளுடன்)1.5