ஆண்டுக்க ரூ.9 லட்சம் லாபம்.. 9 ஏக்கரில் உயர்ந்து நிற்கும்.ஓர் ஒருங்கிணைந்தப் பண்ணை!
கணக்குப் போட்டு காரியத்தில் இறங்கினால், எதிலுமே கணிசமான லாபம்தான்” என்று தெம்பாகப் பேசும் ஜெயராமன், ஒன்பது ஏக்கர் நிலத்தில்.. தென்னை , பாக்கு, வாழை, ஆடு, மாடு, கோழி, மீன், தேன்.. என ஒருங்கிணைந்தப் பண்ணை அமைத்து, பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார் வருமானத்தில்!
சேலம் மாவட்டம், புத்திரக்கவுண்டன் பாளையம். அபநவம் கிராமத்திலிருக்கும் பண்ணைக்குச் சென்ற நம்மை அன்புடன் வரவேற்ற ஜெயராமன், தன்னைப் பற்றிய அறிமுக உரையோடு ஆரம்பித்தார்.. “பி.எஸ்.சி. (வேதியியல்) படித்துவிட்டு, விவசாயம் பார்க்க வந்தவன் நான். 88-ம் வருடம் வந்த வறட்சியில் எங்க பகுதியில் ஓடிக்கிட்டிருந்த ‘வசிஷ்ட நதி’ வறண்டு போயிடுச்சு.பயிர்களெல்லாம் வாடத் தொடங்கி விட்டது, இதைச் சமாளிப்பதற்காக வேளாண்மைத் துறை அதிகாரிகள் போய் பார்த்த பொழுது, சொட்டு நீர்ப்பாசனத்தைப் பற்றிக் தெரிந்துக்கொண்டேன். விவசாயம், கால்நடை வளர்ப்பு சம்பந்தமான நிறையப் பயிற்சிகளில் கலந்துக்கிட்டப்ப.. ஆடு, மாடு, வளர்ப்பு எப்படி என்பதை புரிந்துகொண்டேன். விவசாயப் பயிற்சிகளுக்கு சென்ற பொழுது ஈ பண்ணை வடிவமைப்பு, தென்னை, வாழை, சாகுபடி பற்றியெல்லாம் தெரிந்துகொண்டேன்.
இது எல்லாவற்றையும் ஒரே இடத்தில் அமைத்துக் கொண்டால் நல்ல லாபம் கிடைக்கும் என்று எனக்குத் தோணிச்சு. அதனால்தனர் மூன்று வருடத்திற்கு முன் ஒன்பது ஏக்கரில் இந்த ‘ஒருங்கிணைந்தப் பண்ணை’யை அமைத்தேன். பண்ணைக்குள் கிடைக்கும் எந்தக் கழிவையும் வீணாக்காமல், உரமாக மாற்றி உபயோகப்படுத்திடுவேன். அதனால் இங்க ரசாயன உரங்களுக்கு வேலையே இல்லாமப் போயிடுச்சு. மொத்தத்தில் மனசுக்கு நிறைவான வருமானத்தோட பண்ணையம் செய்துகொண்டிருக்கிறேன்.

தென்னைக்கிடையில் வாழை, பாக்கு!
‘ஏழு ஏக்கர் நிலத்தில், 23x23 அடி இடைவெளியில் 15 வயதான தென்னை இருந்தது. அதற்கிடையில், 7x7 அடி இடைவெளியில் பாக்கு நடவு செய்தேன். அதற்கு இடையில் அதே இடைவெளியில் கதளி வாழையை நடவு செய்திருக்கிறேன். ஏக்கருக்கு 70 தென்னை, 900 பாக்க, 900 வாழை என்று எழு ஏக்கரிலும் சேர்த்து 490 தென்னை, 6,300 வாழை, 6,300 பாக்கு மரங்கள் இருக்கின்றன. இவற்றிற்கு இடையில் அரை அடி இடைவெளியில் கோ – 4 தீவனக் கரணைகளை நடவு செய்திருக்கிறேன்.
பறிப்பதற்கு முன்பே பணம்!
தென்னை, பாக்கு ஆகியவற்றை நடவு செய்த ஐந்தரை வருடங்களில் வருமானம் கிடைக்கத் தொடங்கி விடும். என்னுடைய தோப்பில் ஒரு தென்ளை மரத்தில் இருந்து வருடத்திற்கு சராசரியாக 150 காய்கள் வரைக்கும் கிடைக்கின்றன. ஆள் பற்றாக்குறையால், மரத்திற்கு வருடத்திற்கு 200 ரூபாய் என்று கணக்கிட்டு குத்தகைக்கு விட்டிருக்கிறேன். இதன் மூலமாக 490 மரங்களுக்கும் சேர்த்து வருடத்திற்கு 98,000 ரூபாய் கிடைக்கிறது. பாக்கு காய்ப்புக்கு வர இன்னமும் இரண்டரை வருடங்கள் ஆகும். ஒரு மரத்தில் இருந்து சராசரியாக இரண்டரை கிலோ அளவிற்கு பாக்கு கிடைக்கும். அதன் மூலம் ஒரு மரத்திற்கு வருடத்திற்கு 200 ரூபாய்க்கு குறையாமல் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
வாழை தரும் வஞ்சமில்லா வருமானம்!
வாழையில் வருடத்திற்கு 6,200 தார்களுக்குக் குறையாமல் கிடைக்கும். ஒரு தார் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகிறது. குறைந்தபட்ச விலையாக 100 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலெ, 6,20,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். பக்கக் கன்றுகளை நல்லபடியாகப் பராமரித்தால்.. தொடர்ந்து ஐந்தாண்டுகள் வரை, வாழையில் வருமானம் பார்க்கலாம்.

கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம்!
இடைவெளிகளில் நடவு செய்திருக்கும் கோ – 4 புல் மூலமாக வருடத்திற்கு கிட்டத்தட்ட 20 டன் தீவனம் கிடைக்கிறது. தனியாக ஒன்றரை ஏக்கரில் சவுண்டல் (சூபாபுல்), கோ – 4, கோ.எப்.எஸ்.ஹெச்.29.. போன்ற பசுந்தீவனங்களும், அசோலாவும் சாகுபடி செய்கிறேன். இந்தத் தீவனங்களை ஆதாரமாக வைத்துதான் 12 கறவை மாடுகளை வளர்க்கிறேன். இதில் எப்பொழுதுமே 8 மாடுகள் கறவையில் இருப்பதுபோல பராமரித்து வருவதால், வருடம் முழுவதும் பால் மூலமாக கணிசமான வருமானம் கிடைத்து வருகிறது.