Showing posts with label வேம்பு. Show all posts
Showing posts with label வேம்பு. Show all posts

Wednesday, September 30, 2015

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி? (90 Naatkalil Maram Valarppu) - Growing a tree in 90 days


குறுக்கு வழியில் எப்படி முன்னேறுவது என பலரும் சுயநலமாக


யோசிக்கும் மக்களில் மிகவும் வித்தியாசமானவர் அர்ஜுனன்...

மரம் வளர்க்க பல ஆண்டுகளாகும் நிலையில் 90 நாட்களில் மரம் வளர்க்கும் வித்தையை கண்டறிந்த பாராட்டுக்கும்,நன்றிக்கும் உரிய சமூக சேவகர்....

பொதுமக்களின் நலனுக்காக உழைக்கும் இவரைப்பற்றி பதிவதில் நேர்வழி வலைதளம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.



90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி? 

‘பனை வைத்தவன் பார்த்துச் சாவான்’ என்பது கிராமத்து சொலவடை. அதாவது ஒரு மரம் தரும் பலனை, வைத்தவன் அனுபவிக்க முடியாது. அவனின் அடுத்த தலைமுறைக்குத்தான் மொத்த பலனும் என்பது அர்த்தம். மரம் வளர்ந்து தளைக்க அத்தனை ஆண்டுகள் ஆகும். இனி இதுபோல ஆண்டுக்கணக்கில் காத்திருக்க அவசியம் இல்லை. நட்ட மூன்றே மாதங்களில் மரம் ரெடி என்று நிரூபித்திருக்கிறார், நெல்லை இராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த அர்ஜுனன். ‘செப்பறை வளபூமி பசுமை உலகம்’ அமைப்பின் தலைவர் இவர்.

என் சின்ன வயசில அப்பா, அம்மா இறந்திட்டாங்க. உடன் பிறந்தவர்கள் மொத்தம் 13 பேர். வறுமை வாட்டி எடுத்தது. ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டம். பத்தாம் வகுப்பு வரை படித்தேன். அதற்கே நான் படாதபாடு பட்டேன்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போதே அர்ஜுனன் கண்களில் சோகம் தெரிந்தது.



இது வெப்ப பூமி. வருஷம் முழுக்க உஷ்ணம்தான். அதிலேயும் கோடைக்காலத்தில் கேட்கவே வேண்டாம். பாலைவனம் மாதிரி தகிக்கிற வெயில்ல, வெளியில தலை காட்ட முடியாது. அப்படி வந்து வெளியில எட்டிப் பார்த்தீங்கன்னா, மருந்துக்குக்கூட மரத்தைப் பார்க்க முடியாது. பச்சையே எங்கேயும் இல்லாததால மழையும் இல்லை. நான் பாலாமடை அரசுப் பள்ளியிலதான் படிச்சேன். மரம் வளர்க்குறதுல ஆர்வம் வந்ததுக்குக் காரணம், என்னோட பள்ளித் தலைமையாசிரியர் முகம்மது கனி.

செடி நட்டு, அது மரமாக வளர ஆண்டுக் கணக்காகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நட்டு, மரங்களாக உருவாக்கும் முயற்சி செய்தேன். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து விட்டன. மரக்கிளைகளை வெட்டி நட்ட ஆயிரம் மரங்கள் இராஜவல்லிபுரத்தைச் சுற்றி உள்ளன. இதை என் சொந்தச் செலவிலேயே செய்தேன். மேலும் எங்கள் ஊர் குளத்துக்கரையைச் சுற்றிலும் பனங்கொட்டைகளை சும்மா விதைத்து வைத்தேன். தற்போது சுமார் 2,000 பனைகள் குருத்துவிட ஆரம்பித்துள்ளன.

கடந்த மூன்றாண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கோயில்கள், தனியார் நிறுவனங்களுக்கு 27 ஆயிரம் மரங்களை இலவசமாக வழங்கியுள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.

90நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்?

*பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.

*ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.

* கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.

* நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.

* வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.

Thursday, March 12, 2015

மலைக்க வைக்கும் மலை வேம்பு

மலை வேம்பு மிக வேகமாக வளரக் கூடிய மர வகையாகும். ஃபிளைவுட், மரச் சாமான்கள், தீக்குச்சிகள் என பரவலான பயன்பாடு கொண்ட வணிக ரீதியாக வளர்க்கக் கூடிய மரம் மலை வேம்பு.


மலை வேம்பு மரம் பக்கக் கிளைகள் இல்லாமல் 30 அடி முதல் 100 அடி உயரம் வரை வளரக் கூடியது. ஃபர்னிச்சர் இண்டஸ்ட்ரியின் தேவையைத் தணிக்கப் பயன்படும் மரம். பத்தடி இடைவெளியில் ஒரு ஏக்கருக்கு சுமார் 400 மரங்கள் வரை வளர்க்கலாம். ஒரு ஏக்கர் தென்னந்தோப்புக்குத் தேவைப்படும் தண்ணீரை வைத்து ஐந்து ஏக்கர் மலை வேம்பு சாகுபடி செய்யலாம்.


நான்கு வருடம் கழித்து இந்த 400 மரங்களில் 300 மரங்களை வெட்டி விட்டு மீதமுள்ள 100 மரங்களை மட்டும் அப்படியே விட்டால் போதும். நாம் செய்த முதலீட்டின் பெரும்பகுதியை இந்த 300 மரங்கள் மூலம் திரும்பப் பெற்று விடலாம். அவை வளரப் போதுமான இடம் கிடைக்கும். இப்படி வெட்டாமல் விடப்படும் மரங்கள் 10 ஆண்டுகளில் சுமார் 80 அடி உயரமும், 4 அடி சுற்றளவும் வளரக் கூடியவை.

கர்னாடகாவில் உள்ள ஹன்ஸ்பிளை என்ற பிளைவுட் நிறுவனம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மரங்கள் ரூ 6.54,750 தரும் என 1995 இல் கணக்கிட்டது. 18 ஆண்டுகளுக்கு முன்னர் போட்ட கணக்கு அது. பிளைவுட் தேவையும், விலையும் அன்றை விட இன்று பல மடங்கு பெருகியுள்ளது. 18 ஆண்டுகளுக்கு 8% விலை ஏற்றம் என வைத்துக்கொண்டால் கூட, இந்த ரூ 6.54,750  ரூ 26,16,394 ஆகிறது.14 ஆண்டுகளில்.வெட்டாமல் விட்ட 100 மரங்கள் தரும் வருமானம் இது.

The Hindu செய்தித்தாள் வெளியிட்ட தகவலின் படி மலை வேம்பு சாகுபடி செய்வதன் மூலம் ஒரு ஏக்கருக்கு ஆண்டொன்றுக்கு குறைந்தபட்சம் ஒரு இலட்ச ரூபாய் சம்பாதிக்க முடியும் எனப் புலனாகிறது. "Since there is a total mismatch between demand and supply for wood and veneer, block planting of 300 to 400 trees per acre can ensure a minimum profit of rupees one lakh per year from an acre"  இது குறைந்தபட்சம் மட்டுந்தான்.

கடந்த ஏப்ரல் மாதம் பசுமை விகடன் இதழில் வந்த ஒரு கட்டுரை ஒரு ஏக்கரில் மலை வேம்பு பயிருடுவதன் மூலம் 9 ஆண்டுகளில் ரூ 20 இலட்சம் ஈட்டலாம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.


பசுமை விகடன் ஒரு டன் 5 ஆயிரம் ரூபாய் என்கிறது. தற்போது ஒரு டன் ரூ 6,500 க்கு விற்கிறது. எனவே விகடன் கணக்கை விடக் கூடுதலாக ஈட்டும் சாத்தியம் உள்ளது.



மலை வேம்பு: ஓர் கண்ணோட்டம்



மலைவேம்பு (Melia Dubia) மரங்கள் பயிரிடுவது சமீப காலங்களில் ஈரோடு, சேலம் மாவட்ட விவசாயிகளிடையே அதிகரித்துள்ளது. இம்மரங்கள் அதிக வருவாய் தருவதாகவும், முதலீடு குறைவு என்றும், பராமரிப்பு தேவையில்லை என்ற கருத்தும் பரவலாக உள்ளது. இதன் பின்னணி என்ன, இது எல்லாம் உண்மையா என்பதை என்னுடைய அனுபவத்தை வைத்து இங்கே தொகுத்துள்ளேன்.


6 வருடங்களுக்கு முன்பு தோட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை அதிகமானதால் என்ன பயிரிடலாம் என ஆலோசனை கேட்க சென்னை சைதாபேட்டையில் உள்ள வன அதிகாரி அலுவலகத்திற்கு என் உறவினர் குமாரவேல் ஐயாவை சந்திக்க சென்றிருந்தேன். அவர் தான் எனக்கு இம்மரத்தை பற்றியும் இதன் எதிர்காலம் பற்றியும் கூறினார். அவர்,நீ போய் இதையே பயிரிடு, அப்பாவிடம் நான் பேசுகிறேன் என்று சொல்லி அனுப்பினார். பின்னர் இம்மரத்தை  விவசாயிகளிடம் பிரபலமடைய வைத்த பெருமை குமாரவேல் ஐயாவையே சேரும். அவர் என்னுடைய உறவினர் என்பதால்,  முதன் முதலில் மலை வேம்பை பயிரிட்ட மிக சொற்ப விவசாயிகளில் நாங்களும் ஒருவராக இருக்க முடிந்தது.

ஆரம்ப கட்டங்களில் விதையில் இருந்து செடி உருவாக்கும் முறை மிகவும் கடினமான வேலை. ஏனென்றால் மலைவேம்பின் கொட்டை மிக மிக கடினமான வெளிப்புறத்தை கொண்டது. சுத்தியால் உடைத்தால் தான் உடையும். ஆனால் அப்படி உடைக்கும் பொழுது  உள்ளே இருக்கும் பருப்பு தூளாகி விடும். பின்னர் குமாரவேல் ஐயா அவர்கள் குளோனிங் மற்றும் திசு வளர்ப்பு முறையில் கன்றுகள் உற்பத்தி செய்ய முயன்று வெற்றியும் கண்டார். மலை  வேம்பு மரம், நாட்டு வேம்பு போல் இல்லாமல் நேராக மிக உயரமாக வளரக்கூடியவை. இதன் வளர்ச்சி மூங்கில், தேக்கு போன்ற மரங்களை ஒப்பிடும்போது மிக வேகமாக இருக்கிறது.  ஒட்டு முறையில் உருவாக்கப்படும் இம்மரங்கள் ஆரம்ப கட்டங்களில் செடியை காப்பாற்றும் அளவுக்கு தண்ணீர் இருந்தால் போதுமானது. பின் அதிக நீர் இல்லாமல், வறட்சியை தாங்கும் தன்மை படைத்தவை. அதனால்தான் விவசாயிகளிடையே வேகமாக பரவியது என்று கூட சொல்லலாம்.

மூன்று அடி சதுரம், மூன்றடி ஆழத்தில் குழி எடுத்து... மண்புழு உரம் (2 கிலோ), வேம் (50 கிராம்), அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, சூடோமோனாஸ் ஆகியவற்றில் தலா 20 கிராம் இவற்றை மண்ணோடு கலந்து இரண்டு அடி ஆழத்துக்குக் குழியை நிரப்பி, மையத்தில் கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

நடவு செய்யும் முறையில் பல கருத்துக்கள் உள்ளன. நாங்கள் நடவு செய்யும் பொழுது ஒவ்வொரு செடிக்கும் 10 அடி இடைவெளி விட்டோம். அப்படி வைக்கும் பொழுது ஒரு ஏக்கருக்கு சராசரியாக 350 மரங்கள் தேவைப்படுகிறது. ஆனால் பின்னர் மக்கள் அதிக மரம் நடவு செய்ய ஆசைப்பட்டு இடைவெளியை குறைத்து குறைத்து 5 அடி வரை கூட குறைத்தனர். ஆனால் எங்களுடைய அனுபத்தில் 10 அடி இருந்தால் தான் நல்லது என்பேன். ஏனென்றால், மரம் உயர்ந்து வளரும் பொழுது, மேல் சென்று படர்கிறது. அப்படி விரிந்து படரும் பொழுது, நல்ல இடைவெளி கண்டிப்பாக தேவைப்படுகிறது. குறைந்த இடைவெளியில் வளரும் வேகத்திற்கும் அதிக இடைவெளியில் வளருவதர்க்கும் நல்ல வித்தியாசம் காண முடிந்தது.

ஆரம்ப  கட்டங்களில் சொட்டு நீர் மூலமாகவோ, நீர் பாய்ச்சலின் மூலமாகவோ செடியை பராமரிப்பது நல்லது. நம் மக்களிடையே உள்ள கெட்ட பழக்கங்களில் ஒன்று, இது போன்ற மரங்கள் நடவு செய்தால், பராமரிப்பு தேவை இல்லை என்று எண்ணி கண்டுகொள்ளாமலே விட்டுவிடுவது. அதனால் மரங்கள் பராமரிப்பின்றி வளரும் நிலைக்கு தள்ளப்படுகிறது. பராமரிப்பு தேவை இல்லாமலும் இம்மரம் வளரும், சரிதான். ஆனால், சிறு பராமரிப்பு இருக்கும் பட்சத்தில் மரங்கள் நன்றாகவும், செழிப்பாகவும் வளரும். அது விரைவில் அறுவடை செய்யவும், நல்ல மகசூல் பார்க்கவும் உதவும். ஒரு விவசாயி மஞ்சள் சாகுபடிக்கும், நெல் சாகுபடிக்கும் செய்யும் பராமரிப்பை ஒப்பிடும்போது, இது ஒன்றுமே இல்லை எனலாம். ஆனால், எதுவுமே செய்ய தேவை இல்லை என்று அர்த்தம் இல்லை.

மரம் 100 சென்டிமீட்டர் சுற்றளவையும், கிளை இல்லாமல் குறைந்தது 5 மீட்டர் உயரத்தையும் நெருங்கினால் அறுவடை செய்யலாம். இன்றைய தினத்தில் இப்படி இருக்கும் ஒரு மரம் ரூ.6000 முதல் ரூ. 8000 வரை மதிப்பிடப்படுகிறது. இம்மரம் 5 அல்லது 6 வருடங்களில் இருந்தே அறுவடை செய்யலாம் என கூறப்படுகிறது. ஆனால் என் அனுபவத்தில் தொடர்ந்து நீர் பாய்ச்சல் இருந்தால் தான் இக்குறுகிய காலத்தில் அறுவடைக்கு தயார் ஆகிறது. இல்லையேல், 8 - 10 வருடங்கள் கூட காத்திருக்க நேரிடும். இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு ஏக்கருக்கு 350 மரங்களுக்கு, ரூ 25 லட்சம் மகசூல் பார்க்கலாம். ஒரு வேலை மரம் தேவையான அளவு வளரும் முன்பே விற்க வேண்டும் என்றால், மொத்த மரமும் விறகுக்கு டன் கணக்கில் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அப்படி எடுக்கும் பட்சத்தில் ஏக்கருக்கு 1 - 2 லட்சம் கூட தேராது. அதனால் மரம் வளரும் காலம் வரை கண்டிப்பாக காத்திருக்கும் நிலைமை ஏற்படும்.

Tuesday, May 27, 2014

அறிவியல் அற்புதம் நிறைந்த வேம்பு


மேலை நாட்டு அறிவியல் வல்லுனர்கள் இந்திய குடும்ப பெண்கள், பல நூற்றாண்டு களாக நம்பி வந்த கருத்தை அறிவியல் மூலம் நிரூபித்துள்ளனர். அதுதான் வேப்ப மரத்தின் பயன். வேப்ப மரத்தின் நோய் நீக்கும் பயனை தற்போது அமெரிக்க விஞ்ஞானிகள் அறிந்துள்ளனர்.

கிராமங்களின் மருத்துவ சாலை

வாஷிங்டனில் உள்ள தேசிய விஞ்ஞான ஆய்வு மையத்தில் வேப்பமரம் பற்றிய சிந்தனை கள் ஒரு புதிய திருப்புமுனையை உருவாக்கியுள்ளது. வேப்ப மரம் பல்லாயிரக்கணக்கான மக் களுக்கு விலை குறைவான மருந்துகளை தருகிறது. வேப்பமரம் எண்ணிக்கையில் அதிகம் வளர்வதால் சுற்றுப்புற சூழ்நிலையை பாதுகாக்கிறது. பூமியில் சூரியனின் வெப்ப தாக்குதல் குறைகிறது.

வேப்ப மரம் கிராமங்களின் மருத்துவச் சாலை என்ற கருத்தை அமெரிக்க விஞ்ஞானி கள் வலியுறுத்துகின்றனர். கி.பி.1959-ல் ஜெர் மானிய பூச்சிக்கொல்லி அறிஞர் திரு. ஹெயன் ரிச் ஸ்கூமுட்டர் சூடானில் ஒரு அதிசயத்தை கண்டார். பூச்சிகள் ஒரு தோட்டத்தை நாசமாக்க படை யெடுத்து சென்றன. தோட்டத்தில் இருந்த வேப்ப மரத்தை தவிர அனைத்து செடி, கொடிகளும் நாசமாயின. இந்த அதிசயத்தை கண்ட ஜெர் மானிய விஞ்ஞானி இதனை உலகுக்கு அறிவித் தார். புதுடெல்லியில் இருக்கும் இந்திய விவசாய கழகத்தில் இருந்து வெளியாகும் பத்திரிகையில் மூன்று மாதத்துக்கு ஒரு முறை வேப்பமரத்தின் பயன்குறித்து கட்டுரைகள் வெளிவரலாயின.

வேப்ப மரப்பட்டையின் சாறு மாத்திரை களாக தயாரிக்கப்பட்டு ஆண்கள் உட்கொண் டால் ஆண்களுக்கு அது இயற்கையிலேயே ஒரு குடும்ப கட்டுப்பாட்டு சாதனமாக அமைகிறது. வேப்ப மரப்பட்டைகள் மற்றும் வேப்ப இலைகள் இயல்பாகவே ஒரு பூச்சி கொல்லி மருந்தாக வேலை செய்கிறது.

பூச்சிக்கொல்லி மருந்து

வேப்ப மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பருத்தி மற்றும் புகை யிலைச் செடிகளை அழிக்கும் பூச்சிகளை அழிக்கிறது. இதனை சோதனை முறையில் இந்தியா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் பயன்படுத்தி அறிவியல் வல்லுநர்கள் வெற்றிகண்டனர்.

வேப்பமரம் சுற்றுப்புறச் சூழ்நிலையை பாதுகாக்கிறது. மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. அதிகமான வேப்ப மரங்கள் நடுவதால் பூமி குளிர்ச்சி அடைகிறது. எந்த சூழ்நிலை யிலும் வேப்பமர வளர்ச்சி பாதிப்பு அடைவது இல்லை. வேப்பமரம் மிக வேகமாக வளரும் மரமாகும். தொண்ணூறு அடி உயரம் வரை வளரும். பூமியின் பசுமையை காப்பாற்றும் மரம் வேப்ப மரமாகும்.

கனடாவில் உள்ள ஒட்டவா பல்கலைக்கழகம் விவசாய ஆய்வில் சிறப்பான இடத்தை வகிக்கிறது. அதில் பணியாற்றும் விஞ்ஞானி டாக்டர் ஜான் ஆர்னசான் வேப்ப மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கையான பூச்சிக் கொல்லி மருந்துகள் தற்போது சந்தையில் இடம் வகிக்கும் வேதியியல் பூச்சிக் கொல்லி மருந்துகளை பின்னுக்கு தள்ளிவிடும் என்கிறார்.