மலை வேம்பு மிக வேகமாக வளரக் கூடிய மர வகையாகும். ஃபிளைவுட், மரச் சாமான்கள், தீக்குச்சிகள் என பரவலான பயன்பாடு கொண்ட வணிக ரீதியாக வளர்க்கக் கூடிய மரம் மலை வேம்பு.
மலை வேம்பு மரம் பக்கக் கிளைகள் இல்லாமல் 30 அடி முதல் 100 அடி உயரம் வரை வளரக் கூடியது. ஃபர்னிச்சர் இண்டஸ்ட்ரியின் தேவையைத் தணிக்கப் பயன்படும் மரம். பத்தடி இடைவெளியில் ஒரு ஏக்கருக்கு சுமார் 400 மரங்கள் வரை வளர்க்கலாம். ஒரு ஏக்கர் தென்னந்தோப்புக்குத் தேவைப்படும் தண்ணீரை வைத்து ஐந்து ஏக்கர் மலை வேம்பு சாகுபடி செய்யலாம்.
நான்கு வருடம் கழித்து இந்த 400 மரங்களில் 300 மரங்களை வெட்டி விட்டு மீதமுள்ள 100 மரங்களை மட்டும் அப்படியே விட்டால் போதும். நாம் செய்த முதலீட்டின் பெரும்பகுதியை இந்த 300 மரங்கள் மூலம் திரும்பப் பெற்று விடலாம். அவை வளரப் போதுமான இடம் கிடைக்கும். இப்படி வெட்டாமல் விடப்படும் மரங்கள் 10 ஆண்டுகளில் சுமார் 80 அடி உயரமும், 4 அடி சுற்றளவும் வளரக் கூடியவை.
கர்னாடகாவில் உள்ள ஹன்ஸ்பிளை என்ற பிளைவுட் நிறுவனம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மரங்கள் ரூ 6.54,750 தரும் என 1995 இல் கணக்கிட்டது. 18 ஆண்டுகளுக்கு முன்னர் போட்ட கணக்கு அது. பிளைவுட் தேவையும், விலையும் அன்றை விட இன்று பல மடங்கு பெருகியுள்ளது. 18 ஆண்டுகளுக்கு 8% விலை ஏற்றம் என வைத்துக்கொண்டால் கூட, இந்த ரூ 6.54,750 ரூ 26,16,394 ஆகிறது.14 ஆண்டுகளில்.வெட்டாமல் விட்ட 100 மரங்கள் தரும் வருமானம் இது.
The Hindu செய்தித்தாள் வெளியிட்ட தகவலின் படி மலை வேம்பு சாகுபடி செய்வதன் மூலம் ஒரு ஏக்கருக்கு ஆண்டொன்றுக்கு குறைந்தபட்சம் ஒரு இலட்ச ரூபாய் சம்பாதிக்க முடியும் எனப் புலனாகிறது. "Since there is a total mismatch between demand and supply for wood and veneer, block planting of 300 to 400 trees per acre can ensure a minimum profit of rupees one lakh per year from an acre" இது குறைந்தபட்சம் மட்டுந்தான்.
கடந்த ஏப்ரல் மாதம் பசுமை விகடன் இதழில் வந்த ஒரு கட்டுரை ஒரு ஏக்கரில் மலை வேம்பு பயிருடுவதன் மூலம் 9 ஆண்டுகளில் ரூ 20 இலட்சம் ஈட்டலாம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
பசுமை விகடன் ஒரு டன் 5 ஆயிரம் ரூபாய் என்கிறது. தற்போது ஒரு டன் ரூ 6,500 க்கு விற்கிறது. எனவே விகடன் கணக்கை விடக் கூடுதலாக ஈட்டும் சாத்தியம் உள்ளது.
சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238
ReplyDelete