- பசு மாட்டின் ஆண் இனம் காளை என்றும் அதன் குட்டி கன்று என்றும் அழைக்கப்படுகிறது.
- பசு மாட்டால் மாடிப்படியை ஏறமுடியும். ஆனால் இறங்க முடியாது. ஏனென்றால் அதன் முழங்கால் சரியாக வளைந்து கொடுக்காது.
- பசு மாடு முதன் முறை குட்டி ஈன்ற பிறகு தான் பால் கொடுக்கும்.
- பசு மாடு தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 2 – 4 லட்சம் லிட்டர் வரை பால் கொடுக்க வல்லது.
- ஒரு நாளில் 10 – 15 முறை கீழே உட்கார்ந்து எழுந்திருக்கும்.
- சாதாரணமாக 500 கிலோ எடை உள்ள பசு மாடு ஆண்டுக்கு சுமார் 10 டன் சாணியை கொடுக்கும்.
- ஒரு நாளில் 6 – 7 மணி நேரம் இரை உண்ணவும் 7 – 8 மணி நேரம் அதனை அசைபோடவும் பசுவுக்குத் தேவை.
- அசை போடும் போது நிமிடத்திற்கு சுமார் 40 – 50 முறை தாடையை அசைக்க வேண்டி வருகிறது. இப்படி ஒரு நாளைக்கு 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் முறை தாடையை அசைக்கிறது.
- ஒரு பசு மாடு நாள் ஒன்றுக்கு 10 – 12 லிட்டர் சிறு நீரும் 15 – 20 கிலோ சாணியும் வெளியேற்றுகிறது. இன்னும் பெரிய மாடாக இருந்தால் இது அதிகமாகும்.
- பசு மாடு ஒரு நாளில் சுமார் 100 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வல்லது.
- மாடு பற்களால் புல்லைக் கடிப்பதில்லை. நாக்கு மற்றும் ஈற்றால் பிடுங்கிச் சாப்பிடுகின்றது.
- பசு மாட்டுக்கு ஒரு வயிறுதான் உண்டு. ஆனால் அதில் உணவை ஜீரணிப்பதற்காக 4 பகுதிகள் உள்ளன.
- மாட்டின் கண்கள் முகத்தின் இரு புறமும் அமைந்துள்ளதால் கிட்டத் தட்ட 4 பக்கமும் (360 டிகிரி முழு வட்டம்) ஒரே சமயத்தில் பார்க்க வல்லது.
- பசு மாட்டின் நுகருணர்வு மிகவும் கூர்மையானது. சுமார் 6 – 8 கி.மீ. தூரத்திலுள்ள பசுமையை நுகர்ந்து கண்டு கொள்ளும்.
- கறக்கும் பசு மாடு நாளுக்கு சுமார் 40 – 50 லிட்டர் உமிழ் நீரை சுரந்து ஜீரணத்துக்கு பயன்படுகிறது..
- பசு மாட்டின் உடல் வெப்ப நிலை 101.5 டிகிரி ஃபாரன்ஹீட்.
- உலகத்தில் உற்பத்தியாகும் மொத்த பாலில் 90 சதவீதம் பசும்பால்.
- உலகத்திலேயே அதிகமாக பால் சுரந்த பெருமை ஹோல்ஸ்டைன் இனத்தைச் சேர்ந்த மாட்டைச் சேரும். அது ஒரு ஆண்டில் சுமார் 26,897 கிலோ லிட்டர் பாலைச் சுரந்தது.
- ஒரே நாளில் 97 கிலோ பாலைச் சுரந்து உலகச்சாதனை செய்த மாட்டின்
- இது வரை அதிக நாட்கள் வாழ்ந்த மாட்டின் வயது 48 ஆண்டுகள், 9 மாதங்கள் ஆகும்.
Blogs that focus on Farming, marketing of agricultural produce, and environmental impact of climate change. This will mostly helpful for beginning farmers can help you start a new farm and build your agriculture business. ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பசுந்தீவனம், முயல் வளர்ப்பு, இயற்கை வழி வேளாண்மை, காடை வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, இறால் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, தண்ணீர் போன்ற அணைத்து விதமான விவசாயம் மற்றும் பண்ணை சம்மந்த பட்ட தகவல்கள் இந்த வலைபதுவில் கிடைக்கும்.
Saturday, March 21, 2015
பசு மாடு - சுவாரஸ்யமான அரியத் தகவல்கள் - Interesting Facts about Cows
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment