Thursday, March 12, 2015

சொட்டு நீர் பாசனத்தில் பப்பாளி

சொட்டு நீர் பாசனம் மூலம் பப்பாளி சாகுபடி செய்யும் பரப்பு ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்துள்ளது.

சர்க்கரை நோய் மற்றும் வயிறு சம்மந்தமான நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குனம் உள்ள பப்பாளி பழத்துக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறிப்பாக மகாராஜகடை மற்றும் வரட்டனப்பள்ளியை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் சொட்டு நீர் பாசனம் மூலம் வீரிய ஒட்டுரக பப்பாளி செடிகளை கடந்த, நான்கு ஆண்டுகளாக சாகுபடி செய்து வருகின்றனர்.

ஒரு விதை, 10 ரூபாயுக்கு வாங்கும் விவசாயிகள், ஒரு ஏக்கரி,ல் ஆயிரம் செடிகளை நட்டு வைத்து வளர்க்கின்றனர்.

ஆறு மாதத்திற்கு பிறகு அறுவடைக்கு வரும் பப்பாளி காய்களை மொத்த வியாபாரிகள் மூலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஜூஸ் பாக்டரி மற்றும் சென்னை, கர்நாடகா மாநிலம் பெங்களூரு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.


பப்பாளி சாகுபடியில் கூலி ஆட்கள் தேவை குறைவாக உள்ளது.

மேலும், மற்ற பயிர்களை போலவே பப்பாளியும் சொட்டுநீர் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்படுவதால் தண்ணீர் பிரச்சனை இல்லாமல் உள்ளது.

பொதுவாக மாகாராஜகடை மற்றும் வரட்டனப்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் அனைத்து விவசாயிகளும் கிணற்று பாசனைத்தை மட்டுமே நம்பியுள்ளர்.

நெல், கரும்பு,வாழை, மஞ்சள் பயிர்களுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுவாதல், குறைந்த அளவே தண்ணீர் வருமானம் கொடுக்கும் பப்பாளி சாகுபடிக் இப்பகுதி விவசாயிகள் மாறியுள்ளனர்.இதனால் பப்பாளி சாகுபடி செய்யப்படும் பரப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துள்ளது.

இந்த பகுதியில் கடந்த ஆண்டு, 200 ஏக்கரில் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டது. தற்போது, 500 ஏக்கராக அதிகரித்துள்ளது.

ஒரு கிலே, ஐந்து ரூபாய் முதல், ஏழு ரூபாய் வரை மொத்த விற்பனையாளர்கள் தோட்டத்திலே வந்து காய்களை எடுத்து செல்கின்றனர்.

இதன் மூலம் வாரத்துக்கு ஏக்கருக்கு, 10 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு கிடைக்கிறது. மற்ற பயிர்களை காட்டிலும் பப்பாளி சாகுபடிக்கு செலவு குறைவு என்பதால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைத்து வருகிறது. பப்பாளி பயிரிடும் முறை கனிகளின் சிகரம் என்றும், ஏழைகளின் ஆப்பிள் என்றும் மருத்துவர்களால் வர்ணிக்கப்படுவது பப்பாளி.


தமிழ்நாட்டில் திண்டுக்கல், பொள்ளாச்சி, கோவை, தருமபுரி மாவட்டங்களில் வணிக ரீதியாகப் பயிரிடப்படுகின்றன.

பயிரிடும் முறை:
மிதவெப்ப மற்றும் வெப்பப் பிரதேசங்களில், சமவெளிகளில் களிமண் பூமியைத் தவிர மற்ற நிலங்களில் பப்பாளி நன்றாக வளரும்.

மலைப் பகுதிகளில், 1200 மீட்டர் உயரம் உள்ள பகுதிகளிலும் வடிகால் வசதி உள்ள நிலங்களிலும் பப்பாளி வளரும்.

ஆண்டு முழுவதும் பப்பாளியைப் பயிரிடலாம் என்றாலும், பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் மே முதல் அக்டோபர் மாதம் வரையிலும் பப்பாளி பயிரிடலாம் என்று வேளாண் அலுவலர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

பப்பாளியின் வயது 24 முதல் 30 மாதங்கள்.

நடவுக் காலத்தில் அதிக மழை இருக்கக் கூடாது.

வேர் பகுதியில் அதிகம் தண்ணீர் தேங்கக் கூடாது. பப்பாளியில் கோ1, கோ2, கோ3, கோ4, கோ5, கோ6, கோ7 மற்றும் கூர்க்கனி டியூ, சூரியா போன்ற ரகங்கள் உள்ளன.

இவற்றில் கோ2, கோ5, கோ6 ஆகிய ரகங்கள் சாப்பிடச் சிறந்தவை. கோ2, கோ5 பால் எடுப்பதற்கு ஏற்ற ரகங்கள். பால் எடுத்த பிறகு பழங்களைச் சாப்பிடலாம்.

பப்பாளி நாற்று தயாரிக்க ஏக்கருக்கு 500 கிராம் விதை தேவை.

ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கேப்டான் சேர்த்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.

தொழுஉரம் மற்றும் மணல் நிரப்பி, பாலித்தீன் பைகளில் பை ஒன்றுக்கு 4 விதை வீதம் நட்டு நாற்று தயாரிக்கலாம்.

60 நாள்களில் நாற்று தயாராகிவிடும்.

பப்பாளி பயிரிட நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது, 1.8 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீ. 45 செ.மீ. 45 செ.மீ. அளவில் குழிகள் தோண்டி, மண் மற்றும் தொழுஉரமிட்டு நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும்.

வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். செடிகளைச் சுற்றி தண்ணீர் தேங்கக் கூடாது.


ஆண், பெண் என இருபால் தன்மை கொண்ட செடிகளை நீக்கியபின், செடி ஒன்றுக்கு 50 கிலோ தழை, மணி, சாம்பல் உரம் மற்றும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா உரமிட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

4-வது மற்றும் 8-வது மாதங்களில் 0.5 சதவீதம் துத்தநாக சல்பேட், 0.1 சதவீதம் போரிக் அமிலம் கலந்து செடிகளில் தெளித்தால் மகசூல் அதிகம் கிடைக்கும்.

செடிகள் பூக்கத் தொடங்கியதும் 15 அல்லது 20 செடிகளுக்கு ஒன்று வீதம் ஆண் செடிகளை விட்டுவைத்து, மற்றவைகளை அகற்றிவிட வேண்டும்.

கோ3, கோ7 ரகங்களில் இருபால் பூக்கள் கொண்டவைகளை மட்டும் விட்டுவிட்டு, பெண் மரங்களை நீக்கிவிட வேண்டும்.
பப்பாளிக் காய்களில் பால் எடுக்கும் முறை:

பப்பாளிக் காய்களில் இருந்து பால் எடுக்க, முதிர்ந்த காய்களில் 2 முதல் 3 இடங்களில் லேசாகக் கீறல் ஏற்படுத்தி, பாலை வடிக்க வேண்டும்.

அதிகாலை முதல், காலை 10 மணி வரை, 3 அல்லது 4 நாள்களுக்கு ஒருமுறை பால் எடுக்கலாம்.

பப்பாளிப் பாலை அலுமினியப் பாத்திரம் அல்லது ரெக்ஸின், பாலிதீன் தாள்களில் சேகரிக்கலாம்.

பாலை சூரிய ஒளி அல்லது 40 டிகிரி சென்டிகிரேடில் செயற்கை உலர் கருவிகளில் உலர்த்தலாம்.

உலர்த்தத் தாமதம் ஆனால் தரம் பாதிக்கப்படும்.

ஒரு ஹெக்டேருக்கு 3 ஆயிரம் முதல் 3,750 கிலோ வரை பப்பாளி பால் கிடைக்கும்.

பப்பாளிப் பழங்களைவிட பப்பாளிக் காய்களில் இருந்து எடுக்கப்படும் பாலுக்கு நல்ல விலை கிடைக்கிறது.

ஓசூர், பெங்களூர் பகுதிகளில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் நல்ல விலை கொடுத்து வாங்குகின்றன.


பப்பாளி பழத்தின் அருமைகள்:

பப்பாளிப் பழத்தில் குளுக்கோஸ், வைட்டமின்கள் மற்றும் சி அதிக அளவில் உள்ளன.
பப்பாளி பழம், இலைகள், வேர்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.

பப்பாளிப் பழம் உணவை, குறிப்பாக பருப்புவகை உணவுகள், இறைச்சி போன்றவற்றை எளிதில் செரிக்க வைக்கும் குணம் கொண்டது. 35 கிராம் இறைச்சியை ஒரு கிராம் பப்பாளி செரிக்க வைத்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பப்பாளிப் பழம் பித்தத்தைப் போக்கும். கல்லீரல், கணையம், சிறுநீரக நோய்களை குணப்படுத்தும்.

ரத்த சோகைக்கும், புற்று நோய்க்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

பப்பாளிக் காயில் இருந்து எடுக்கப்படும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பப்பாயின் என்ற நொதிப் பொருள் (என்ûஸம்) நிறைய மருத்துவ குணம் கொண்டது. பப்பாளியில் மாவுப்பூச்சி கட்டுப்படுத்த வழிகள்

பாப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, வேம்பு மருந்து தெளித்து பயன்பெறலாம்என, ராசிபுரம் வெண்ணந்தூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
வெண்ணந்தூர் வட்டாரத்தில், தற்போது பப்பாளி மாவுப்பூச்சியின் தாக்குதல் தொடங்கியுள்ளது.

விவசாயிகள், பொருளாதார சேதாரத்திற்கு முன், இப்பூச்சியைக் கட்டுப்படுத்த, அசாடிராக்டின், மூன்று சதவீதம் (வேம்பு மருந்து) மருந்தை, 25 மி.லி., ஒரு வாளி நீரில் கலந்து, காலை அல்லது மாலையில், இலை, தழை, தண்டுப் பகுதிகள் நன்கு நனையும்படி தெளிக்கலாம்.

இவ்வேம்பு மருந்து, வெண்ணந்தூர் வேளாண் விரிவாக்க மையம் மற்றும் அத்தனூர் துணை வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி மானியத்துடன் அசாடிராக்டின் பெற்று, விவசாயிகள் பயன் பெறலாம்.

தற்போதைய சூழ்நிலையில், பப்பாளி மாவுப்பூச்சியின் தாக்கம் தென்படுகிறது.

மேலும், வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது, பூச்சியின் எண்ணிக்கை அதிகரித்து, பயிரினை பாதிக்கும். எனவே, தற்போதே அசாடிராக்டின், மூன்று சதவீதம் தெளித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது



3 comments:

  1. சுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்துதரப்படும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்-9944209238

    ReplyDelete
  2. சுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்துதரப்படும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்-9944209238

    ReplyDelete
  3. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete