|
- மிகவும் முக்கியம் வாய்ந்த இந்த இன எருமை மாட்டினம் ஹரியானா மாநிலத்தின் ரோட்டக், ஹிசார் மற்றும் ஜின்த் மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் நபா, பாட்டியாலா மாவட்டங்களிலிருந்தும், தில்லி மாநிலத்தின் தெற்கு பகுதியிலிருந்தும் தோன்றியவை.
- இவை தில்லி, குந்தி, காலி என்றும் அறியப்படுகின்றன.
- இவற்றின் உடல் அடர்ந்த கருப்பு நிறமாகக் காணப்படும். வாலிலும், முகத்திலும், சில சமயங்களில் கால்களிலும் வெள்ளை நிறம் காணப்படும்.
- இவற்றின் கொம்புகள் நன்கு வளைந்திருப்பதே இந்த இன எருமைகளின் முக்கியமான பண்பாகும்.
- இவ்வின எருமைகள் அதிக பால் உற்பத்திக்கும், பாலில் உள்ள அதிக கொழுப்புச்சத்திற்கும் இந்தியாவில் பெயர் பெற்றவை.
- முர்ரா இன எருமைகளின் பாலில் 7 சதவிகித கொழுப்புச்சத்து இருக்கும். இவற்றின் சராசரி பால் உற்பத்தி அளவு 1500-2500 கிலோவாகும். மேலும் இவற்றின் ஒரு நாள் சராசரி பால் உற்பத்தி 6.8 கிலோ.
- குறைந்த உற்பத்தி கொண்ட நாட்டு எருமையினங்களை கலப்பினம் செய்வதற்கும் இவ்வின எருமைகள் பயன்படுகின்றன.
|
சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238
ReplyDelete