Wednesday, February 11, 2015

எள் பயிரிடும் முறைகள்

விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதால் எள் பயிரில் சராசரியாக 2 ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது’ 
எள் பயிரிடும் விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய சிறந்த தொழில்நுட்பங்கள்:
பருவம் மற்றும் ரகங்கள்:
  • மானாவாரி வைகாசி மற்றும் ஆடிப் பட்டங்களில் டி.எம்.வி. 3, வி.ஆர்.ஐ. 1 மற்றும் கோ 1,
  • கார்த்திகை பட்டங்களில் டி.எம்.வி. 3, வி.ஆர்.ஐ. 1, கோ 1 மற்றும் எஸ்.வி.பி.ஆர். 1,
  • மேலும் இறவை தை-மாசி பட்டங்களில் டி.எம்.வி 3.6, கோ.1, வி.ஆர்.ஐ 1, பையூர் 1,
  • பங்குனி சித்திரை பட்டங்களில் டி.எம்.வி. 3.4, கோ.1, வி.ஆர்.ஐ. 1, எஸ்.வி.பி.ஆர். 1.
நிலம் தயாரித்தல்:
  • நிலத்தை டிராக்டரில் ஆவ உழும் கலப்பையால் 2 அல்லது 3 முறை புழுதிபட உழ வேண்டும்.
  • ஏர் கலப்பையைக் கொண்டு நிலத்தை 5 அல்லது 6 முறை உழுது தயார் செய்ய வேண்டும்.
  • நிலத்தின் மேல்மட்டத்தில் நீர் புகாத கடின மண்பகுதி ஏற்பட்டிருந்தால் 3 வருடங்களுக்கு ஒரு முறை உளி கலப்பையால் 2 அடி ஆழம் உழுது நிலம் தயார் செய்ய வேண்டும்.
  • மண்வெட்டி கொண்டு மண்ணை கட்டிமுட்டி இல்லாமல் உடைத்து நிலத்தை தயார் செய்ய வேண்டும்.
  • ஏக்கருக்கு கடைசி உழவில் 10 வண்டி(5டன்) தொழுஉரம் இட வேண்டும்.
  • நிலத்தின் சரிவை பொருத்து 30 அடி முதல் 60 அடி நீளம் வரை அளவுகள் உள்ள சிறிய பாத்திகளை அமைத்து நிலம் தயார் செய்ய வேண்டும்.
  • நிலத்தில் நீர் தேங்காவண்ணம் சமமாக தயார் செய்ய வேண்டும்.
விதையளவு:
  • அனைத்து ரகங்களுக்கும் ஏக்கருக்கு 2 கிலோ விதை போதுமானதாகவும் விதையை மணலுடன் கலந்து சீறாக தூவ வேண்டும்.
விதைப்பு:
  • எள் விதையை மணலுடன் கலந்து நிலத்தில் சீராக தூவ வேண்டும்.
  • ஒரு தேவையான 2 கிலோ விதையுடன் 8 கிலோ மணல் கலந்து விதையை தூவ வேண்டும்.
  • சில பகுதிகளில் எள்ளில் வரிசை நடவு மேற்கொள்ளப்படுகிறது. 3 செ.மீ ஆழம் கோடு கிழித்து அதில் மணலுடன் எள் விதையை கலந்து சீராக விதைக்க வேண்டும்.
  • இடைவெளி: செடிக்கு செடி 1அடி இடைவெளி விட வேண்டும்.
  • வரிசைக்கு வரிசை 1 அடி இடைவெளியில் சதுர மீட்டர் பரப்பளவில் 11 செடிகள் இருக்க வேண்டும்.
  • செடி கலைத்தல்: விதைத்த 15ஆவது நாளில் செடிக்கு செடி 15 செ.மீ. இடைவெளி இருக்கும் படியும் 30ஆவது நாளில் 30 செ.மீ. இடைவெளி உள்ளவாறு வைத்து மற்ற செடிகளை பிடுங்கி விட வேண்டும்.
  • செடிகளை கலைத்து விடும்போது வயலில் ஈரம் இருப்பது நல்லது.
  • எள் பயிரில் பயிர் கலைத்தல் ஒரு முக்கிய பணியாகும்.
உரஅளவு:
  • மண் பரிசோதனை செய்து உரமிட வேண்டும்.
களை நிர்வாகம்:
  • ஒரு ஏக்கருக்கு ஆலோகுளோர் 1500 மி.லி. மருந்தை 360 லிட்டர் தண்ணீர் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு விதைத்த மூன்று நாள்களுக்குள் மாலை வேளைகளில் பின்நோக்கி நடந்து மண் மீது தெளிக்க வேண்டும்.
  • இல்லாவிடில் விதைத்த 15ஆவது மற்றும் 30ஆவது நாட்களில் கைகளை எடுக்க வேண்டும்.
  • களை கொல்லி தெளித்தால் 30 நாளில் ஒரு கைகளை எடுத்தால் போதுமானது.
  • களைக்கொல்லி தெளித்தவுடன் நீóர் பாய்ச்ச வேண்டும்.
நீர் நிர்வாகம்:
  • விதைக்கும்போது மண்ணில் ஈரம் இருக்க வேண்டும்.
  • இதுதவிர விதைத்த 7 நாட்களுக்குள் தண்ணீர் (உயிர்தண்ணீர்) பாய்ச்ச வேண்டும்.
  • பூக்கும் முன் அதாவது விதைத்த 20-25ஆவது நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
  • பூக்கும் பருவமான 30-55ஆவது நாள் தணணீர் பாய்ச்ச வேண்டும்.
  • மேலும் காய் பிடிக்கும் பருவமான 55-65ஆவது நாள் பயிருக்கு தேவையான அளவு நீர் பாய்ச்ச வேண்டும்.
பயிர்பாதுகாப்பு:
  • பயிர் பாதுகாப்பில் பூச்சி நிர்வாகம் மிக முக்கியமானது. பூச்சிகளில் எள்குடையான், கொண்டைப்புழு, எள்காய்ஈ மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் முக்கியமானவை ஆகும்.
  • இவற்றை கட்டுபடுத்த வேளாண் அலுவலர்களை அனுகினால் அவர்கள் அப்பகுதிக்கேற்ப குறிப்பிட்ட பூச்சிக்கேற்ப கட்டுபடுத்தும் முறைகளை தெரிவிப்பர்.
  • நோய்கள்: நோய்களில் வாடல்நோய், வேரழுகல் நோய், பூவிலை நோய், சாம்பல் நோய், இலைப்புள்ளி நோய் என பல்வேறு நோய்கள் உள்ளன.
  • வாடல் நோய் தாக்கிய செடிகள் வாடி காய்ந்து துவண்டு விடும். வேரழுகல் நோய் தாக்கிய செடிகள் வேர் மற்றும் தண்டு பகுதியில் அழுகி பயிர் காய்ந்து விடும். இது பயிரின் எல்லா காலங்களிலும் தென்படும். பூவிலை நோய் தாக்கிய செடியின் பூவின் பாகங்கள் இலை கொத்து போல் காணப்படும். இது ஒரு வகை நச்சுயிரினால் ஏற்படுகிறது.சாம்பல் நோய் தாக்கிய செடிகளில் இலைகளின் மேற்புறத்தில் வெண்ணிற அல்லது சாமபல் நிற பூஞ்சாண வளர்ச்சியை காணலாம்.இந்நோய் தாக்கிய செடிகள் இலைகள் சிறுத்து சுருண்டு கீழே விழுந்து விடும்.
  • மேற்கண்ட நோய்கள் இருப்பது தெரியவந்தால் விவசாயிகள் அவர்களது பகுதிகளில் உள்ள உதவி வேளாண் அலுவலர்களை அனுகி அச்செடிக்கேற்ப நோய்களை கட்டுபடுத்தும் முறைகளை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
எள் சாகுபடி குறித்து மேலும் விவரங்கள் தேவைப்படுவோர் அவர்களது வட்டாரங்களில் உள்ள வேளாண் அலுவலகங்களை அனுகலாம்.

No comments:

Post a Comment