நாட்டுக்கோழி பராமரிப்பு
இளம் நாட்டுகோழி குஞ்சுகள் பராமரிப்பு ( 1 - 7 வாரம்)
குஞ்சுகளை பெறுவதற்கு முன் கொட்டகைகளில் அடைப்பான்களை அமைக்க வேண்டும். ஒருஅடைகாப்பானில் அதிகபட்சமாக 250 – 300 குஞ்சுகளை வைத்து வளர்க்கலாம். முதல் வாரத்தில் 95 பாரன்கீட்என்றளவில் வெப்பம், பிறகு ஒவ்வொரு வாரமும் 5 பாரன்கீட் என்றளவில் வெப்பத்தை குறைத்து கொடுக்க வேண்டும்.குஞ்சு பருவ தீவனத்தை கொடுத்து வளர்க்க வேண்டும். சுடவைத்து ஆற வைத்த தண்ணீரை குஞ்சுகளுக்கு கொடுக்கவேண்டும். நியோ மைசின், டாக்சி சைக்லின், செபலேக்சின் போன்ற கோழி குஞ்சுகளுக்கு நோய் பாதிப்பை தடுக்ககொடுக்கப்பட வேண்டும்.
வளர் நாட்டுகோழி பராமரிப்பு (8 - 18 வாரம்)
இப்பருவத்தில் கோழிகளுக்கு கொடுக்கப்படும் தீவனத்தில் புரதசத்தின் அளவு சதவீதம் இருக்க வேண்டும்.எரிசக்தியின் அளவு 2700 கிலோ கலோரியாகவும் , நார் சத்தின் அளவு 8 சதவீதத்திற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். 17 வது வார துவக்கத்தில் பேன், செல் போன்ற வெளிப்புற ஒட்டுண்ணிகள் காணப்பட்டால் அதை ஒழிப்பதற்கு
1-2 மி.லி டெல்டா மெத்திரின் என்ற மருந்தை (பியுட்டாக்ஸ்) லிட்டர் தண்ணீர் கலந்து கோழிகளின் தலைப்பகுதிதவிர முக்கி எடுத்தல் வேண்டும். மேலும் கொட்டகைகளிலும் தெளித்து விட வேண்டும். இந்த மருந்து கோழிகளைவெயில் அடிக்கும் மதிய வேளையில் மேற்கொள்ள வேண்டும். பருவநிலை மாற்றத்தின் போது கோழிகளின் சுவாசகோளாறு ஏற்ப்பட்டால் என்ரோ பிலாக்சசின் மில்லி /கோழி என்ற அளவு தண்ணீரில் கொடுக்க வேண்டும்.
முட்டையிடும் நாட்டுக்கோழி பராமரிப்பு ( 18 வாரம் முதல் )
ஒரு கோழி ஒரு வருடத்தில் சுமார் 60 முதல் 80 முட்டைகள் வரை இடும். ஒரு பருவத்தில் 12 – 18 முட்டைகள்இடும். கலப்பின நாட்டுக் கோழியான நாமக்கள் கோழி 1 240 - 280 முட்டைகள் வரை இடும். இப்பருவத்தில் 18 சதவீதபுரதமும், 2700 கிலோ கலோரி எரிசக்தி தீவனம் அளித்தல் வேண்டும். ஒரு முட்டை கோழி தினமும் 240 – 300 மி.லிட்டர்தண்ணீர் குடிக்கும்.
கோடைகால பராமரிப்பு
கோழிகள் தீவனம் இல்லாமல் பல நாட்களுக்கு உயிர்வாழும். ஆனால் தண்ணீர் இல்லாமல் அவற்றால்உயிர்வாழ முடியாது. கோழிகளைப் பொறுத்தமட்டில் தண்ணீர் இன்றியமையாப் பொருளாகும். கோடை காலங்களில்சுற்றுப்புற வெப்பத்தை குறைப்பதில் தண்ணீர் பெரும்பங்காற்றுகிறது. வணிக அளவில் வளர்க்கப் படும்இறைச்சிக்கோழிகளுக்கு அவை உண்ணும் தீவனத்தைப் போல இரு மடங்கு தண்ணீர் தேவை. கோடையில் கோழிகளின்உடலிலிருந்து கூடுதலாக வெப்பம், அவை விடும் மூச்சுக் காற்றின் மூலமே வெளியேறுகிறது. பறவைகளைப்பொறுத்தமட்டில் வியர்வைச் சுரப்பிகள் இல்லாத காரணத்தால் கூடுதலாக உண்டாகும் உடல்வெப்பத்தை வியர்வைமூலம் வெளியேற்ற இயலாது. எனவே கோழிகளால் சுவாசக் காற்று மூலம்தான் உடல் சூட்டினை தணித்துக் கொள்ளமுடியும். இதற்காக கோழிகளுக்கு பெருமளவு தண்ணீர் தேவைப் படுகிறது. கோடையில் ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும்வெப்ப அயர்ச்சியைக் குறைக்க தகுந்த தண்ணீர் கொடுப்பதன் மூலம் குறைக்கலாம். இத்துடன் தாது உப்புக்களையும்போதிய அளவு சேர்த்துக் கொடுத்தால் வெப்ப அயர்ச்சி குறைபாட்டை நீக்குவதுடன் கோழிகளுக்கு தண்ணீர் குடிக்கவேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டுகின்றன. தண்ணீரில் நோய் உண்டாக்கும் கிருமிகளின் அளவைக் குறைக்ககுளோரின் பவுடர், அயோடின் கலவைகள், ஹைட்ரஜன் பெர் ஆக்சைடு போன்றவற்றை பயன் படுத்தலாம். இதில்குறைந்த செல வில் குளோரின் வாயுவைப்பெற 1000 லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் வரை பிளீச்சிங் பவுடரைப்பயன்படுத்தலாம். அயோடின் தயாரிப்புகளை 10 லிட்டருக்கு 1 மிலி வீதம் பயன்படுத்தலாம். தரமற்ற குடிநீர் கோழிக்குரத்தக்கழிச்சல், சால்மோனல்லோசிஸ், கோலி பேசில்லோசிஸ் போன்ற நோய் பாதிப்புகளை உண்டாக்குவதுடன்அவற்றின் உற்பத்தி திறனையும் குறையச் செய்கின்றன. முட்டையிடும் கோழிகள் முட்டையிட்டவுடன் அதிக அளவுதண்ணீரைக் குடிக்கும். இரவு நேரங்களில் வெளிச்சத்துக்காகப் போடப்படும் விளக்குகளை அணைப்பதற்கு முன்னும்,அதிக தண்ணீர் அருந்தும். இறைச்சிக் கோழிகளைப் பொறுத்தமட்டில் சூரிய ஒளி பட்டவுடன் அல்லது செயற்கையாகவெளிச்சம் அளித்தவுடன் அதிக அளவு தண்ணீர் குடிக்கும். எனவே கோடையின் வெப்பத் தாக்குதலை உணர்ந்து, தகுந்தஅளவில், தரமுள்ள தண்ணீர் கோழிகளுக்கு வழங்க வேண்டும்.
சிமென்ட் தரை கொண்ட கோழி வீட்டில் மரத்தூள், மரஇழைப்பு சுருள், நெல் உமி, நிலக்கடலைத் தோல், கரும்புசக்கை, துண்டிக்கப்பட்ட மக்காச் சோளத் தக்கை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை உபயோகித்து கோழிகளைவளர்க்கலாம். ஆழ்கூளமாக உபயோகப்படுத்தும் பொருட்கள் நன்றாக ஈரத்தை உறிஞ்சக்கூடியதாக இருக்க வேண்டும்.மலிவு விலையில் உள்ளூரிலேயே கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். மற்றும் ஆழ்கூளத்தை கிளறிவிடும் போதுகாற்றில் எளிதில் உலரக் கூடியதாக இருக்க வேண்டும். கோழி வளர்ப்பில் ஆழ்கூளப் பராமரிப்பு மிகவும் முக்கியமானதாகும். கூளத்தை தினமும் நன்கு கிளறிவிட வேண்டும். கோழி வீட்டின் காற்றோட்டம், கோழிகளின் வயது,எண்ணிக்கை, எடை மற்றும் தட்பவெப்ப நிலை ஆகியவற்றினை பொருத்து ஆழ் கூளத்தில் ஈரப்பதம் அதிகமாகிகெட்டியாகிவிடும். மேலும் அமோனியா வாயு உற்பத்தி ஆகி கோழிகளுக்கு கண் எரிச்சல், சுவாச நோய்கள் பாதிப்புஆகியவை ஏற்படுவதோடு அல்லாமல் ரத்த கழிச்சல் நோயும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இதன் விளை வாககோழிகளின் இறப்பு விகிதம் அதிகமாவதோடு பாதிக்கப்பட்ட கோழிகள் சரியாக தீவனம் தண்ணீர் சாப்பிடாமல், வளர்ச்சிகுன்றி, எடையும் குறைந்து காணப் படும். ஆழ்கூளத்தில் ஈரப்பதம் 25 விழுக்காட்டிற்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஈரம் அதிகமானால் 100 சதுர அடிக்கு 8 முதல் 10 கிலோ சுண்ணாம்புத் தூள் கலந்து தூவிவிட்டு கிளறிவிடுவதுநல்லது. முதல் மூன்று வாரம் வரை ஆழ்கூளப் பொருளை 5 செ.மீ. உயரத்திற்கும் மூன்று வாரத்திற்குப் பிறகு 10 செ.மீ.உயரத்திற்கும் கோழி வீட்டில் நிரப்ப வேண்டும். ஆழ்கூளத்தை ஒரு நாளைக்கு இரண்டு தடவை கிளறிவிட வேண்டும்.
தீவன கலவைக்கு (100 கிலோ கிராம்) தேவையான மூலப்பொருட்களும் அளவுகளும்
1 மக்காச்சோளம் 40 கிலோ
2 சோளம் 7 கிலோ
3 அறிசிகுருணை 15 கிலோ
4 சோயா புண்ணாக்கு 8 கிலோ
5 மீன் தூள் 8 கிலோ
6 கோதுமை 5 கிலோ
7 அரிசித் தவிடு 12.5 கிலோ
8 தாது உப்புக் கலவை 2.5 கிலோ
9 கிளிஞ்சல் 2 கிலோ
மொத்தம் 100 கிலோ
புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளுக்கு புரத சத்து மிகக் குறைவாகவே கிடைக்கிறது. இதனை ஈடுசெய்வதற்கு புரதச்சத்து நிறைந்த பானைக் கரையானும், அசோலாவும் கொடுத்து வளர்க்கும் பொழுது தீவன செலவுவெகுவாக குறைய வாய்ப்புள்ளது. சிறு வெங்காயம் மற்றும் கீரைகளை நறுக்கி நாட்டுக் கோழிகளுக்கு உணவாககொடுக்கலாம்.
மூலிகை மருத்துவம்
சின்ன சீரகம் 10 கிராம்
கீழாநெல்லி 50 கிராம்
மிளகு 5 கிராம்
மஞ்சள் தூள் 10 கிராம்
வெங்காயம் 5 பல்
பூண்டு 5 பல்
சிகிச்சை முறை (வாய் வழியாக)
சீரகம் மற்றும் மிளகினை இடித்த பின்பு மற்ற பொருள்களோடு கலந்து அரைத்து இக்கலவையை தீவனம்அல்லது அரிசி குருணையில் கலந்து கொடுக்கவும். மிகவும் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு சிறு சிறு உருண்டைகளாகஉட் செலுத்தவேண்டும்.
No comments:
Post a Comment