நண்ணீர் மீன்வளம்
நம் நாட்டில் நண்ணீர் மீன்வளர்ப்பு சுமார் 13.67 கோடி ஹெக்டர் பரப்பளவில் வளர்க்கின்றனர். இதில் 2.25 கோடி ஹெக்டரில் குளங்கள் மற்றும் தொட்டிகள், 8.27 கோடி ஹெக்டர் நீர்நிலைகள் மற்றும் 3.15 கோடி ஹெக்டர் நீர்த்தேக்கங்கள் உள்ளன. 1990ல் குறிப்பிட முடியாத அளவிற்கு மீன் உற்பத்தி அதிகமாக இருந்தது.
|
நண்ணீர் மீன் வளத்தில் உர மேலாண்மை
இந்தியாவில் அதிகப்படியாக நண்ணீர் மீன்வளம் உயர்ந்து வருகிறது. மேலும் உற்பத்தியை அதிகரிக்க வேவ்வேறான மீன் வளங்களை திறமையாகக் கையாள வேண்டும். இதில் முக்கியமான ஒன்று குளத்தைப் பராமரித்து, தேவையான அளவு உரமிடுதலாகும். குளத்தின் பராமரிப்புகள், மண் மற்றும் நீரின் தரத்தை பொருத்ததே.
|
குளத்திற்கு உரமிடுதல்
மீன் குளத்தில் உணவு சுழர்ச்சியில் முதல் தேவையானவை தாவர நுண்ணுயிர் மிதவைகள். இந்த நுண்ணுயிர்கள் நீரைப் பச்சை நிறமாக மாற்றுகிறது. இதனால் நுண்ணுயிர்ப் பெருக்கம் அதிகரிக்கிறது. எனவே இருப்புச்செய்யும் மீன்களுக்கு இதுவே இயற்கை உரமாக அமைகிறது. மாவுப்பொருள் தொகுப்புகளில் கரியமில வாயு, தண்ணீர் மற்றும் சூரிய ஒளி இருந்தாலும் மிதவை தாவர நுண்ணுயிர்களுக்கு கனிமச்சத்துக்கள் தேவைப்படுகிறது (தழைச் சத்து, மனிச்சத்து, சாம்பல்சத்து, சுண்ணாம்பு, கந்தகம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், மற்றும் மாங்கனீசு சத்துக்கள்) மிதவை தாவர நுண்ணுயிர்கள் வளர்வதற்க்கும் மற்றும் குளத்தின் உற்பத்தி திறனிற்கும் தேவையான சத்துக்கள் நீரில் இருக்க வேண்டும். மண் மற்றும் நீரின் மேலாண்மையை பொருத்தே குளத்தில் உள்ள இருப்பு மீன்களுக்கு, இயற்கை உணவு கிடைக்கும். இதனால் மீன்கள் நல்ல வளர்ச்சியடையும். குளத்தில் உள்ள நீருக்கு தேவையான சத்துக்கள் குளத்து மண்ணிலிருந்து கிடைக்கிறது.
|
குளத்து மண்ணின் தன்மைகள்
மண்ணின் கார அமிலத்தன்மை
குளத்தில் மீன் உற்பத்திக்கு கார அமிலத்தன்மை முக்கியமான ஒன்று. இது குளத்தில் உள்ள இரசாயன வினைகளை கட்டுப்படுத்துகிறது. நடுநிலையிலிருந்து சிறிது காரத் தன்மையுள்ள மண் காரஅமிலத்தன்மை (7 மற்றும் அதற்கு மேல்) உள்ளவை மீன் உற்பத்திக்கு ஏற்றதாகும். இந்த அளவைவிட குறைந்தால் அமிலத்தன்மையாக மாறி நீரில் உள்ளச் சத்துக்களை குறைத்துவிடும்.
|
கரிம உள்பொருள்
பாக்டீரியாவின் ஆற்றலை அதிகரிக்க மற்றும் உயிர் வேதியல் முறை மூலம் நுண்ணுயிர்களில் இருந்து சத்துக்கள் வெளியாகிறது. இயற்கை கரிமம் குளத்து மண்ணில் 0.5%க்கு குறைவாக இருக்கக் கூடாது. 0.5-1.5% மற்றும் 1.5 - 2.5%. நடுநிலை மற்றும் அதிக அளவு இருக்கலாம். இதே போன்று 2.5%க்கு மேல் இருந்தால் மீன் உற்பத்தி செய்ய முடியாது.
|
கரிமம்: நைட்ரஜன் விகிதம்
மண் நுண்ணுயிர்களின் வளர்ச்சிக்கு கரிமம்:நைட்ரஜன் விகிதம் தேவைப்படுகிறது. கரிமம்:நைட்ரஜன் விகிதம் உடையும் அளவு அதி வேகமாக, நடுநிலை, குறைவாக முறையே >10,10-20, 20 என்றவாறு இருக்க வேண்டும். பொதுவாக கரிமம்:நைட்ரஜன் விகிதம் 10 முதல் 15க்குள் இருந்தால் மீன் வளர்ப்புக்கு ஏற்றதாகும். 20:1 இருந்தால் மீன் அதிகளவு உற்பத்தியாகும்.
|
பொதுவான ஊட்டச்சத்துக்களின் நிலைகள்
முக்கியமான ஊட்டச்சத்துக்கள் தழை, மனி, மற்றும் சாம்பல் சத்துக்களாகும். மீன் குளங்களில் பாஸ்பேட் உரத்திற்கு சூப்பர் பாஸ்பேட்டை பயன்படுத்தலாம். குளத்து மண்ணில் உள்ள பாஸ்பேட் அளவைப் பொருத்து 156 - 312 கி சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் அளிக்க வேண்டும். மீன் வளர்ச்சி மற்றும் இருப்பு குளங்களில் செய்யும் போது 250 - 468 கி சூப்பர் பாஸ்பேட் இருக்க வேண்டும். இன்னும் நல்ல உற்பத்தி கிடைக்க வேண்டுமென்றால் வார இடைவெளி விட்டு பாஸ்பேட் உரம் அளிக்க வேண்டும்.மியுரேட் ஆஃப் பொட்டாஸ் மற்றும் பொட்டாசியம் சல்பேட் இவை இரண்டும் பொட்டாஸ் உரங்களாக மீன் குளத்தில் பயன்படுத்துகிறார்கள். மியுரேட் ஆஃப் பொட்டாஸ் 16 - 32 கி/ஹெ. அல்லது பொட்டாசியம் சல்பேட் 20 - 40 கி/ஹெ. வளர்ச்சி மற்றும் இருப்புச் செய்யும் போது அளிக்க வேண்டும். இதை ஒரு மாதத்திற்கு இரண்டு முறையில் சரிபாதியாக பிரித்து அளிக்க வேண்டும்.
குளத்தில் நீர் நல்ல கரும்பச்சை நிறத்தில் இருக்கும்போதே குளங்களில் அதிக பாசிகள் தோன்றி நீரின் மீது அடை அடையாக மிதக்கும். இதன் மூலம் உயிர்வளிக் குறைவை தடுக்கலாம், குறைந்த உரங்களே தேவைப்படும். இயற்கை மற்றும் இரசாயன உரங்களை கலந்து இடும் போது கவனம் தேவை. சுத்தமில்லாத குளத்தில் இயற்கை உரமிட்டால் சுத்தமாகும். அதிக இயற்கை உரமிடுவதால் பாசிகள் நிறைய வளரும்.
|
No comments:
Post a Comment