நவீன நீர்பாசன அமைப்பில் தற்போது இரண்டு முக்கிய முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன/
அவை: 1) சொட்டு நீர், 2) தெளிப்பு நீர்.
இந்திய விவசாயத்தில் தற்போதைய மிக முக்கிய தேவை மிகச் சிறந்த நீர்ப்பாசனம் எந்த முறையில் நீர்ப்பாசனம் செய்கிறோமோ அதைப் பொருத்தே பயிரின் மொத்த நீர் செலவு. ஆட் செலவு. நீர்பாசன நேரம். மின்சார செலவு. மகசூல் முதலியவை தீர்மானிக்கப்படுகிறது. உதாரணமாக வாய்க்கால் பாத்தி முறை பாசனத்தைவிட மூன்று மடங்கு குறைவான நீரே தெளிப்பு நீர் பாசனத்திற்கு போதுமானது. மகசூலும் மிக அதிகம்.
மரவகை பயிர்களுக்கு சொட்டு நீர் மிகவும் பொருத்தமாக இருந்தாலும் இதிலுள்ள சில குறைபாடுகள் நெருக்கமாக நடப்படும் பயிர்களில் சிரமத்தை கொடுத்துவிடுகிறது. நீரிலுள்ள உப்பு கட்டிக்கொள்வது. எலி கடிப்பதும் உழவு செய்ய சிரமம் மற்றும் குறைந்த கால உழைப்பு முதலிய பிரச்சனைகள் சொட்டு நீரில் இருப்பதால் இவை இல்லாத நவீன தெளிப்பு நீர் அமைப்பை நாடிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் தற்போதைய விவசாயிகள் உள்ளனர்
விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றும் தெளிப்பு நீர் பாசனம்!
விவசாயத்தை விட்டு வெளியேறிவருபவர்களை மீண்டும் விவசாயத்துக்கு அழைத்துவரும் வகையில் தெளிப்புநீர் பாசனம் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
நிலத்தடி நீரும் அதலபாதாளத்துக்குச் சென்றது. இதனால் கிணற்று பாசனமும் கேள்விக்குறியானது. இதில் மின்வெட்டு பிரச்னையும் விவசாயிகளை மிகுந்த கவலையில் ஆழ்த்தியது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை விட்டு, விளைநிலங்களையும் விற்பனை செய்துவிட்டு நாள்தோறும் புதிதுபுதிதாக முளைத்துவரும் பன்னாட்டு நிறுனவங்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.
நுண்ணீர் பாசனம்:
இதைத் தொடர்ந்து முழு மானியத்தில் நுண்ணீர் பாசனங்களான சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனத்திட்டத்தை அறிமுகம் செய்தது. நூண்ணீர் பாசனமான தெளிப்புநீர் பாசனத்தில் ஈடுபட்டு விவசாயி தனஞ்செயன், மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார். இவர் தெளிப்பு நீர் பாசனம் மூலம் சம்பங்கி, ரோஜா, மல்லிகை, கத்தரி, வெண்டை உள்ளிட்ட தோட்டப்பயிர்களை பயிரிட்டு வருகிறார். இதில் தண்ணீர் மிச்சப்படுத்தப்படுவதுடன், நல்ல மகசூல் கிடைப்பதாகவும், நல்ல விலை கிடைப்பதாகவும் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
- விவசாயத்துக்கு போதிய அளவு தண்ணீர் இல்லாததால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்தை விட்டுவிட்டு, பன்னாட்டு நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்றுவிடலாம் என்று வேலை தேடிவந்தேன்.
- அப்போது நுண்ணீர் பாசனம் குறித்து தகவல் அறிந்தேன்.விவசாயத்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டு தகவல்களைப் பெற்றேன்.
- அதிகாரிகளும் எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். பூக்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட தோட்டப் பயிர்களைத் தேர்ந்தெடுத்தேன்.அதன்படி எனது விளைநிலத்தைப் பார்த்த அதிகாரிகளின் முழு மானியத்தில் தெளிப்பு நீர் பாசன வசதியை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
- வாய்கால் பாசனத்தின் மூலம் 1 ஏக்கருக்கு பாய்ச்சப்படும் நீரைக் கொண்டு, தெளிப்பு நீர் பாசனத்தின் மூலம் 6 ஏக்கர் வரை பாய்ச்ச முடிகிறது.
- இதனால் தண்ணீர் சேமிப்பு, மின்சாரம் சேமிப்பு, பணம் சேமிப்பு ஆகியன சாத்தியமாகின்றன.
- இதன்மூலம் தெளிப்புநீர் பாசனம் என் வாழ்க்கை பயணத்தையே மாற்றிவிட்டது என்றார்.
- இதுவரைப தெளிப்புநீர் பாசனத்தில் பயனடைந்துள்ளனர்
தெளிப்பு நீர்ப் பாசனத்தால் பயிரில் ஏற்படும் விளைவுகள்நாட்டின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெளிப்பு நீர் பாசனத்தின் மூலம் பாசன நீர் 16 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் வரை சேமிக்கப்படுகிறது மட்டுமல்லாது 3-5 சதவிகிதம் உயர் விளைச்சலும் கிடைக்கிறது.
பயிர்
|
நீர் சேமிப்பு (சதவிகிதம்)
|
விளைச்சல் அதிகரிப்பு (சதவிகிதம்)
|
கம்பு
|
56
|
19
|
வெண்டை
|
28
|
23
|
மிளகாய்
|
33
|
24
|
பருத்தி
|
36
|
50
|
தட்டைப்பயிறு
|
19
|
3
|
நிலக்கடலை
|
20
|
40
|
சோளம்
|
55
|
34
|
குதிரை மசால்
|
16
|
27
|
மக்காச்சோளம்
|
41
|
36
|
வெங்காயம்
|
33
|
23
|
SPRINKLER
IRRIGATION
தெளிப்பு நீர் பாசனம்
துளையிடப் பட்ட நீளமான குழாயில் உள்ள முனையில் தெளிப்பான்களைப் பொருத்தி நீர் பாய்ச்சவேண்டும்.இந்த முறையில் நீரானது செடிகளுக்கு தெளிக்கப் படுகிறது. இந்த மாதிரி தெளிப்பான்களைதேவையான இடங்களில் பொருத்தி நீர் பாய்ச்சலாம்.நடு பைவட் முறை(center pivot system) என்பதும்தெளிப்பு நீர் பாசன முறையை சேர்ந்ததாகும்.
No comments:
Post a Comment