Friday, January 16, 2015

கொட்டகை மேலாண்மை

செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்கான கொட்டகையமைப்பு

பொது அனுமானங்கள்

Low cost houseOpen type housing with run space
 Sheep in open spaceFodder Cultivation near by shed

 

  • மிதமான உற்பத்தி திறனுக்கு, குறைந்த செலவிலான, கட்டுமான பொருட்களை கொண்டு சாதாரண கொட்டகை அமைத்தல்.
  • அதிக மழை பெய்யும் இடங்களைத் தவிர, நாட்டின் பிற இடங்களில் மண் தரையிலான கொட்டகையே ஏற்றது.
  • தண்ணீர் தேங்குவதை தவிர்க்க மேடான பகுதிகளில் கொட்டகை அமைத்தல் வேண்டும்.
  • வளரும் ஆடுகளின் தீவனத் தேவைக்கு கொட்டகையை சுற்றிலும் பசுந்தீவன மரங்களை வளர்த்தல்.
  • ஆடுகளுக்கு தூய்மையான குடிநீரை கிடைக்கச் செய்தல்.
  • நுல்ல காற்றோட்டமான அமைப்புடன் கொட்டகை அமைத்தல்.
  • கொட்டகையின் தரையானது நல்ல கெட்டியான முறையில் தண்ணீரை உறிஞ்சும் வகையில் இருத்தல் வேண்டும். தரையை எளிதில் சுத்தம் செய்வதற்கு உகந்தவாறு அமைத்தல் நல்லது.
  • பராமரிப்பு முறைக்கு ஏற்றவாறு கொட்டகைகளை அமைத்தல் வேண்டும்.
  • திறந்த நடைவழி பகுதி மற்றும் கூரை அமைக்கப்பட்ட பகுதிகள் கொண்ட திறந்த வெளி கொட்டகை சிறந்தது.
  • நடைவழி பகுதியை கட்டு கம்பி கொண்டு சுற்நி அமைத்தல் நல்லது.
  • இரவு மற்றும் மழை காலங்களில் தங்குவதற்கு உகந்த கொட்டகையமைப்பு அவசியமாகும்.
  • காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் கொண்ட கிழக்கு , மேற்கு திசையில் அகலப்பகுதி இருக்குமாறு அமைத்தால் தரையானது நன்கு காய்ந்திருக்கும்.
  • குறைந்த செலவு மற்றும் தாங்கும் திறன் கொண்ட தென்னை மற்றும் பனை ஓலையிலான கூரை மிகவும் சிறந்தது.
  • அதிக தாங்கும் திறன் மற்றும் பழுது பார்க்கும் செலவுகளை குறைக்கவல்ல ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் பெரிய பண்ணைகளுக்கு ஏற்றது.
  • சிறிய கொட்டகைகளுக்கு சாய்வான கூரைகளே சிறந்தது.
  • காலை நேரங்களில் மேய்ச்சலுக்கும் இரவு நேரங்களில் கொட்டகைகுன்றம் வளர்க்கப்படும். ஆடுகளுக்கு கூரை வேயப்பட்ட இடவசதியே போதமானது.
  • கூரை பகுதி மற்றும் திறந்த வெளி நடை பகுதி கொண்ட கொட்டகையமைப்பு தீவிர முறையில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு உகந்தது.
  • கொட்டகையமைப்பின்  அகலப்பகுதியானது 8 முதல் 12 மீட்டருக்கு மிகாமல் இருக்குமாறு அமைத்தலும், நீளப்பகுதியானது ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கட்டுபாடின்றி அமைத்துக் கொள்ளலாம்.
  • கூரையின் நடுப்பகுதியின் உயரம் 3.5 மீட்டராகவும், பக்கவாட்டு பகுதியின் உயரம் 2.5 மீட்டராக இருத்தல் நல்லது.
  • கொட்டகையை சுற்றி அமைக்கப்படும் கட்டுக் கம்பி அமைப்பின் உயரம் 4 அடியாக இருத்தல் வேண்டும்.
  • அடர் தீவனம், பசுந்தீவனம் மற்றும் தண்ணீர் வைப்பதற்கு ஏற்றவாறு தனித்தனி தீவன மற்றும்
  • தண்ணீர் தொட்டிகள்அமைத்தல் நல்லது.

இடவசதி தேவைகள்

இந்திய சூழலுக்கு உகந்த பரிந்துரைக்கப்பட்ட இடவசதி : மற்றும் குட்டி ஈன்ற ஆடுகள்

வயதுகூரை அமைக்கப்பட்ட பகுதிதிறந்த வெளிப் பகுதி
மூன்று மாதம் வரை
0.2 – 0.25
0.4 – 0.5
மூன்று முதல் ஆறு மாதம் வரை
0.5 – 0.75
1.0 – 1.5
6-12 மாதங்கள்
0.75 – 1.0
1.5 – 2.0
பெரிய ஆடுகள்
1.5
3.0
கிடா, சினை ஆடுகள்
1.5 – 2.0
3.0 – 4.0

ஒரு ஆட்டிற்கு தேவையான இடவசதி  (இந்திய தகுதிப் பிரிவு)  பரிந்துரைகள்

ஆடுகளின் வகை    ஒரு ஆட்டிற்கு தேவையானகுறைந்த பட்ச இடவசதி
கிடாக்கள்  -  (குழுக்கள் முறையில்)    1.8
கிடாக்கள்  –  (தனிப்பட்ட முறையில்)3.2
குட்டிகள் (குழுக்கள் முறையில்)0.4
தாயிடமிருந்து பிரித்த குட்டிகள்0.8
ஒரு வருட வயதான ஆடுகள்0.9
பெட்டை ஆடுகள் (குழுக்கள் முறையில்)1.0
பெட்டை ஆடுகள் (குட்டிகளுடன்)1.5

ஆட்டு இனங்கள்

செம்மறியாட்டினங்கள்

 1.மேச்சேரி

  • இவ்வினம் தமிழ்நாட்டின் சேலம் கரூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களிலும், தருமபுரி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் காணப்படுகின்றது.
  • இறைச்சி உற்பத்திக்காகப் பயன்படுகிறது
  •     நடுத்தர உடலமைப்பு கொண்டது. இதனுடைய தோல் வெளிறிய சிவப்பு நிறத்தில் இருக்கும்.
  • கிடாவுக்கும், பெட்டை ஆடுகளுக்கும் கொம்புகள் கிடையாது
  • வால் குட்டையாகவும், மெலிதாகவும் இருக்கும்
  • வளர்ச்சியடைந்த கிடா 36 கி.கி எடையுடனும், பெட்டை ஆடுகள் 22 கி.கி எடையுடனும் இருக்கும்.

     

2. சென்னை சிவப்பு
  • இவ்வினம் தமிழ்நாட்டின் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் காணப்படுகின்றது.
  • இறைச்சி உற்பத்திக்காகப் பயன்படுகின்றது
  • சிவப்பு நிறம், இளம்சிவப்பு முதல் கரும்சிவப்பு வரை கொண்டது
  • சில ஆடுகளுக்கு முன்நெற்றி, அடிவயிறு மற்றும் கால்களுக்கிடையில் வெள்ளைநிறம் காணப்படும்
  • வளர்ந்த கிடா 36 கி.கி எடையுடனும், பெட்டை ஆடுகள் 24 கி.கிஎடையுடனும் இருக்கும்.

     
3. இராமநாதபுரம் வெள்ளை
  • இவ்வினம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் காணப்படுகின்றது.
  • இறைச்சி உற்பத்திக்காக பயன்படுகிறது
  • நடுத்தர உடலமைப்பைக் கொண்டது
  • பெரும்பாலும் வெள்ளை நிறத்திலிருந்தாலும் சில ஆடுகளில் உடல் முழுவதும் கருமைநிறப் பட்டைகள் காணப்படும்
  • கிடாவுக்கு முறுக்கிய வளைந்த கொம்புகள் உண்டு, பெட்டைக்கு கொம்புகள் கிடையாது.
  • கால்கள் சிறியதாகவும், மெலிந்தும் காணப்படும்
  • வளர்ந்த கிடா 31 கி.கி எடையுடனும், பெட்டை ஆடுகள் 23 கி.கி எடையுடனும் இருக்கும்
     

கோழிகளைப் பற்றிய பொதுவான தகவல்கள்

கோழிகளைப் பற்றிய பொதுவான வார்த்தைகள்

இனம்
இளம் வயது
வயது முதிர்ந்த கோழிகள்
சேவல்
பெட்டை
கோழி
கோழிக்குஞ்சு
சேவல்
பெட்டைக்கோழி
வாத்துகள்
வாத்துக்குஞ்சு
டிரேக்
வாத்து
வான்கோழி
பவுல்ட்
டாம்
வான்கோழி
காடை
காடைக் குஞ்சு
காடை சேவல்
காடைக்கோழி
கினிக்கோழி
கீட்
கினிசேவல்
கினிக்கோழி
கூஸ் வாத்து
கூஸ்லிங்
கேன்டர்
கூஸ்
புறா
ஸ்குவாப்
ஆண் புறா
பெண் புறா
அன்னம்
சிக்னெட்
ஆண் அன்னம்
பெண் அன்னம்

பல்வேறு கோழியினங்களின் அடை காக்கும் காலம், குரோமோசோம்களின் எண்ணிக்கை, இனப்பெருக்க முதிர்ச்சியடையும் காலம்
வ.எண்
இனம்
அடை காக்கும் காலம் (நாட்களில்)
குரோமோசோம்களின் எண்ணிக்கை( இரட்டையில்)
இனப்பெருக்க முதிர்ச்சியடையும் வயது (வாரங்களில்)
1.
கோழி
21
39
18-20
2.
வாத்து
28
40
28-30
3.
மஸ்கோவி
33-35
40
28-30
4.
கூஸ்
28-32
40
28-30
5.
கினிக்கோழி
27-28
39
28-32
6.
வான்கோழி
28
40
28-30
7.
காடை
17-18
39
6-7
8.
புறா
18
39
10-12
9.
ஆஸ்ட்ரிச்
42
40
52
10
ஈமு
52-55
40
52

கோழிகளின் இனங்கள்
கோழியினங்கள் பொதுவாக நான்கு முக்கியமான பெரிய இன வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.         
  • அமெரிக்க கோழியினங்கள்
  • ஆசிய கோழி இனங்கள்   
  • ஆங்கில கோழி இனங்கள்  
  • மத்திய கோழி இனங்கள்
வகை
அமெரிக்கன்
ஆசிய இனங்கள்
ஆங்கில இனங்கள்
மத்திய கோழி இனங்கள்
தாடி
இறகுகள் அற்றது
இறகுகள் உடையது
இறகுகள் அற்றது
இறகுகள் அற்றது
தோல் நிறம்
மஞ்சள்
மஞ்சள்
வெள்ளை
மஞ்சள் அல்லது வெள்ளை
காது மடல் நிறம்
சிவப்பு
சிவப்பு
சிவப்பு
வெள்ளை
இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும்
இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும்
இறைச்சிக்காக
இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும்
முட்டைக்காக
Size
நடுத்தரம்
பெரியவை
நடுத்தரம்
சிறியவை
முட்டை ஓட்டின் நிறம்
பழுப்பு
பழுப்பு
பழுப்பு
வெள்ளை
உதாரணங்கள்
1) ரோட் ஐலேண்ட் ரெட்
2)பிளை மவுத் ராக்
3)நியூ ஹேம்ப்ஷையர்
4)வியன்டோட்
1) )பிரம்மா
2) கொச்சின்
3) லாங்ஷான்
1) கார்னிஷ்
2) அஸ்ட்ரா லார்ப்
3) டார்க்கிங்
4) ஆர்பிங்டன்
5) சசெக்ஸ்
1) லெகார்ன்
2) மைனார்க்கா
3) அன்கோனா
4) ஆன்டலூசியன்

கோழிகள் அவற்றின் உபயோகத்திற்கேற்ப கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகின்றன.
1) முட்டைக்கோழி இனங்கள் - Eg.வெள்ளை லகார்ன், மைனார்கா, அன்கோனா
2) இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழி இனங்கள் - Eg.கார்னிஷ்,பிளை மவுத் ராக், பிரம்மா
3) இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் வளர்க்கப்படும் கோழி இனங்கள் - Eg.ரோட் ஐலேண்ட் ரெட்,நியூ ஹேம்ப்ஷையர்
4) விளையாட்டுக்காக வளர்க்கப்படும் கோழி இனங்கள் - Eg.அசீல்
 5) அழகுக்காக வளர்க்கப்படும் கோழி இனங்கள் - Eg. சில்க்கி, ஃபிரிசில்டு, பேந்தம்ஸ்
 6) உள்நாட்டின கோழியின இனங்கள் - Eg. கடக்நாத், நேக்ட் நெக், சிட்டகாங்.

கோழிப்பண்ணையினை கட்டுதல்

கோழிப்பண்ணைக்கான தேவைகள்

  • பல்வேறு விதமான தட்பவெப்ப சூழ்நிலைகளிலிருந்து கோழிகளைப் பாதுகாக்க
  • எளிதாகவும், பொருளாதார ரீதியாக குறைந்த செலவிலும் கோழிப்பண்ணையை நடத்த
  • அறிவியல் பூர்வமாகவும், கட்டுப்பாடான முறையிலும் கோழிகளுக்குத் தீவனமளிக்க
  • கோழிகளைச் சுற்றியுள்ள சுற்றுப்புறத்தில் முறையாகப் பேணுதல்
  • நோயினைக் கட்டுப்படுத்த
  • கோழிப்பண்ணையினை முறையாக மேலாண்மை செய்ய
கோழிப்பண்ணை அமைக்க இடத்தைத் தேர்வு செய்தல்
  • வசிப்பிடங்களிலிருந்தும், தொழிற்சாலைகளிலிருந்தும் கோழிப்பண்ணைகள் தொலைவில் இருக்கவேண்டும்.
  • கோழிப்பண்ணைக்கு நன்றாக சாலை வசதிகள் இருக்கவேண்டும்.
  • அடிப்படைத் தேவைகளான தண்ணீர், மின்சார வசதி போன்றவை இருக்கவேண்டும்.
  • குறைந்த கூலிக்கு பண்ணையாட்கள் கிடைக்கும் இடத்தில் பண்ணை அமைக்கவேண்டும்.
  • கோழிப்பண்ணை நல்ல மேடான இடத்தில் இருக்கவேண்டும். தண்ணீர் தேங்கும் இடத்தில் இருக்கக்கூடாது.
  • கோழிப்பண்ணை அமைக்கும் இடத்தில் நல்ல காற்றோட்டம் இருக்கவேண்டும்.

கோழிப்பண்ணையின் வடிவமைப்பு
                                         
ஒரே கொட்டகை மட்டுமே இருப்பதால் ஒரு சிறிய கோழிப்பண்ணைக்கென தனியான வடிவமைப்புகள் தேவைப்படாது. நடுத்தர மற்றும் பெரிய பண்ணைகளுக்கு பண்ணை வீடுகளை அமைப்பதில் சரியான வடிவமைப்பு தேவை. இதில் கடைபிடிக்கப்படவேண்டிய அடிப்படை அம்சங்களாவன.
  • பார்வையாளர்களையும், வெளியிலிருந்து வரும் வாகனங்களையும் கோழிகளுக்கு அருகில் அனுமதிக்காதவாறு பண்ணைகள் வடிவமைக்கப்படவேண்டும்.
  • தூய காற்று குஞ்சுக்கொட்டகையில் முதலில் நுழைந்து, பிறகு வளரும் கோழிக்கொட்டகையில் சென்று கடைசியாக முட்டைக்கோழி கொட்டகைக்குள் செல்லுமாறு கோழிப்பண்ணைக் கொட்டகைகள் வடிவமைக்கப்படவேண்டும். இதனால் முட்டைக்கோழிகளிடமிருந்து குஞ்சுக்கோழிகளுக்கு நோய்க்கிருமிகள் பரவுவது தடுக்கப்படும்.
  • குஞ்சுக்கோழிக் கொட்டகைக்கும், வளரும் கோழிக்கொட்டகைக்கும் இடையில் குறைந்தது 50-100 அடி இடைவெளியும், வளரும் கோழிக் கொட்டகைக்கும் முட்டைக் கோழிக் கொட்டகைக்கும் இடையில் 100 மீட்டர் இடைவெளியும் இருக்கவேண்டும்.
  • முட்டை சேமிக்கும் அறை, அலுவலகம், தீவனம் சேமிக்கும் அறை போன்றவை பண்ணையில் நுழைவு வாயிலிலேயே அமைக்கப்படுவதால், கோழிப்பண்ணைகளைச் சுற்றி ஆட்கள் நடமாடுவதைத் தவிர்க்கலாம்.
  • இறந்த கோழிகளைப் புதைக்கும்குழி, மற்றும் நோய் பாதிக்கப்பட்ட கோழிகளைப் பராமரிக்கும் அறை போன்றவை பண்ணையின் ஒரு மூலையில் அமைக்கப்படவேண்டும்.

கோழிப்பண்ணையிலுள்ள பல்வேறு விதமான கோழிக்கொட்டகைகள்

  • குஞ்சுக் கொட்டகை-இக்கொட்டகை முட்டைக் கோழிக்குஞ்சுகளின் 0 முதல் 8 வார வயது வரை பராமரிக்க உபயோகிக்கப்படுகிறது.
  • வளரும் கோழிக் கொட்டகை-இக்கொட்டகை முட்டைக் கோழிகளின் 9-18 வார வயதில் பராமரிக்கப் பயன்படுகிறது.
  • குஞ்சுக் கோழி மற்றும் வளரும் கோழிக்கொட்டகை இக்கொட்டகையில் கோழிகளை 0-18 வார வயதில் வளர்க்கப் பயன்படுகிறன்றது.
  • முட்டைக்கோழிக் கொட்டகை-18 வார வயதிலிருந்து 72 வார வயது வரை முட்டைக் கோழிகளை வளர்க்க இக்கொட்டகை பயன்படுகிறது.
  • கறிக்கோழிக் கொட்டகை-இக்கொட்டகையில் கறிக்கோழிகளை 6 வார வயது வரை வளர்க்கப் பயன்படுகிறது.
  • இனப்பெருக்கக் கோழிக் கொட்டகை-இக்கொட்டகைகளில் பெட்டைக்கோழிகளும், சேவல்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வளர்க்கப் பயன்படுகிறது.
  • சுற்றுப்புற சூழ்நிலைகள் கட்டுப்படுத்தப்பட்ட கொட்டகை-இக்கொட்டகைகளில் கோழிகள் வளர்வதற்கேற்றவாறு கொட்டகையின் சுற்றுப்புற சூழ்நிலை கட்டுப்படுத்தப்படுகிறது.

கோழிக்குஞ்சுகளைப் பராமரித்தல்

கோழிக்குஞ்சுகளைப் பராமரித்தல்

கோழிக்குஞ்சுகளை வளர்க்கும் கலைக்கு புரூடிங் என்று ஆங்கிலத்தில் பெயராகும். புதிதாக பொரிக்கப்பட்ட கோழிக் குஞ்சுகளுக்கு அவற்றின் உடல் வெப்பநிலையினை சீராக வைத்திருக்க முடியாது. சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு கோழிக்குஞ்சுகள் தயாரவதற்கு இரண்டு வாரங்களாகும். எனவே அவற்றின் முதல் சில வார கால வயதில் அவற்றால் தங்களுடைய உடல் வெப்பநிலையினை சீராக வைத்திருக்க முடியாது. இந்த சூழ்நிலையில் கோழிக்குஞ்சுகளை குளிரான சூழ்நிலைக்கு உட்படுத்தினாலோ அல்லது கவனிப்பு குறைவாக இருந்தாலோ அவற்றின் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விடும்.
கோழிக்குஞ்சு பராமரிப்பில் இரு முறைகள் உள்ளன
  1. இயற்கையான முறையில் பராமரித்தல்
  2. செயற்கை முறையில் பராமரித்தல்
இயற்கையான முறையில் பராமரித்தல் 
          இம்முறையில் தாய்க்கோழியே அவற்றின் குஞ்சுகளை 3-4 வார வயது வரை பாதுகாக்கும்.

செயற்கை முறையில் பராமரித்தல் 
          இம்முறையில் அதிக எண்ணிக்கையிலான கோழிக் குஞ்சுகள் தாய்க்கோழியின் உதவியின்றி வளர்க்கப்படுகின்றன. கோழிக் குஞ்சுகளை வளர்க்கும் கொட்டகையில் கீழ்க்கண்ட பொருட்கள் இருக்கும்.
    1. கொட்டகையினை சூடாக்கும்ஆதாரம்
    2. வெப்பத்தை எதிரொலிக்கும் பொருட்கள்
    3. குஞ்சுகளைப் பாதுகாக்கும் அமைப்பு
கோழிக் கொட்டகையினை சூடாக்கும் ஆதாரம் மின்சாரம் அல்லது, இயற்கை எரிவாயு அல்லது எல்பிஜி மற்றும் மீத்தேன், மண்ணெண்ணெய் போன்ற திரவ எரிபொருள்கள் அல்லது திட எரி பொருட்களான கரி, விறகு போன்றவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம்.

கரி அடுப்பு அல்லது மண்ணெண்ணெய் அடுப்பு:
மின்சாரம் இல்லாத பகுதிகளில் சாதாரண கரி அல்லது மண்ணெண்ணெய் போன்றவற்றை உபயோகித்து குஞ்சுகளுக்கு செயற்கையாக வெப்பத்தை அளிக்கலாம். இந்த அடுப்புகளின் மீது தட்டு அல்லது பாத்திரங்களை வைத்து மூடி அவற்றிலிருந்து வெப்பம் கொட்டகையில் வெளியேறுமாறு செய்யலாம்.

வாயு மூலம் இயங்கும் வெப்ப ஆதாரம் :
இயற்கை எரி வாயு அல்லது எல்பிஜி அல்லது மீத்தேன் வாயு மூலம் இணைக்கப்பட்ட சூடாக்கும் கம்பியினை தரையிலிருந்து 3-5 அடி உயரத்தில் கொட்டகையில் தொங்க விட்டு குஞ்சுகளுக்கு வெப்பத்தை அளிக்கும் வகையில் செய்யலாம்.

மின்சாரம் மூலம் இயங்கும் வெப்ப ஆதாரம்:
இது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சூடாக்கும் ஆதாரமாகும். இந்த இயந்திரம் தேவைப்படும் அளவு வெப்பத்தை ஒரு பெரிய இடத்தில் சீராகப் பரப்பும் தன்மையுடையது. இவ்வாறு வெப்பத்தை சீராகப் பரப்புவதால் கோழிக்குஞ்சுகள் வெப்ப ஆதாரத்திற்கு அருகில் கூட்டமாக இருப்பது தடுக்கப்படுகிறது. மின்சாரத்தில் இயங்கும் வெப்ப ஆதாரம் ஒன்றின் மூலம் சாதாரணமாக 300-400 குஞ்சுகளைப் பராமரிக்கலாம்.

கோழிகளின் வளர் பருவ மேலாண்மை

  • வளரும் கோழிகளின் கொட்டகையில் கோழிகளை விடுவதற்கு முன்னால் அக்கொட்டகையினை நன்றாக சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
  • கோழிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அவற்றிற்கு இட வசதி, தீவனம் மற்றும் தண்ணீர்த் தட்டுகளும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • ஆழ்கூளக் கொட்டகைகளில் ஆழ்கூளத்தை 4 இஞ்ச் உயரத்திற்குப் பரப்பி விட வேண்டும்.
  • தீவன மற்றும் தண்ணீர்த் தொட்டிகளை கொட்டகையில் அமைக்க வேண்டும்.
  • கோழிகளின் தேவைக்கேற்றவாறு தண்ணீர் மற்றும் தீவனத்தட்டுகளை மாற்ற வேண்டும்.
  • கோழிகளின் வளரும் பருவத்தில் வரையறுக்கப்பட தீவன மேலாண்மை முறையினைப் பின்பற்றுவதால் கோழிகளின் வளரும் பருவத்தில் அவை அளவிற்கு அதிகமான உடல் எடையினை அடைவதையும், விரைவில் இனப்பெருக்க முதிர்ச்சியையும் தடுத்து அதிக முட்டை உற்பத்தியைப் பெறலாம்.
  • ஆழ்கூளத்தை முறையாக மேலாண்மை செய்வதால் இரத்தக்கழிச்சல் போன்ற நோய்கள் கோழிகளுக்கு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
  • திறந்த முறையில் அமைக்கப்பட்டிருக்கும் கொட்டகைகளில் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வெளிச்சம் இருந்தாலே போதுமானது. செயற்கை வெளிச்சம் தேவையில்லை.
  • கொட்டகையில் ஒரே மாதிரியாக கோழிகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு வாரத்திற்கு ஒரு முறை கோழிகளின் எடையினைப் பரிசோதித்து கோழிக்குஞ்சு உற்பத்தியாளர்களின் ஆலோசனைப் படி உடல் எடை அதிகரிக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
  • பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி, மருந்துகள் அளித்தல் மற்றும் இதர மேலாண்மை முறைகளான குடற்புழு நீக்கம் செய்தல், அலகு வெட்டுதல் போன்றவற்றை முறையாகப் பின்பற்ற வேண்டும்.
  • வரையறுக்கப்பட்ட அல்லது குறிப்பிட்ட அளவு மட்டுமே தீவனம் அளித்தல் 
    இனப்பெருக்கத்திற்காக வளர்க்கப்படும் கோழிகள் மற்றும் வளரும் பருவத்திலிருக்கும் முட்டைக் கோழிகளுக்கு இந்தத் தீவன மேலாண்மை முறை பின்பற்றப்படுகிறது. இதில் இரண்டு முறைகள் உள்ளன.

    தீவனத்தின் அளவினைக் குறைத்தல் 
    இம்முறையில் கோழிகளுக்குத் தேவைப்படும் தீவனத்தில் குறைந்த அளவையே அவைகளுக்குக் கொடுக்கப்படும். தினந்தோறும் தீவனத்தின் அளவினைக் குறைக்கலாம் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையோ தீவனம் அளிக்கலாம். ஆனால் இவ்வாறு தீவனமளிப்பதைக் குறைப்பது பண்ணையிலுள்ள மொத்தக் கோழிகளின் உடல் எடை மற்றும் உற்பத்தியாளர் பரிந்துரைக்கப்பட்ட உடல் எடை போன்றவற்றைப் பொறுத்து கணக்கிடப்பட வேண்டும். 

Thursday, January 15, 2015

இயற்கை முறையில் இமாம்பசந்த் - மகசூல் கூட்டும் மகத்தான தொழில்நுட்பங்கள்

ரசாயன விவசாயமாக இருந்தாலும் சரி... இயற்கை முறை விவசாயமாக இருந்தாலும் சரி... வழக்கமாகக் கடைப்பிடிக்கும் சாகுபடி முறைகளோடு சில தொழில்நுட்பங்களைச் சேர்க்கும்போது விளைச்சலில் அபரிமிதமான மாற்றங்கள் உண்டாகின்றன. பல விவசாயிகள் இதை அனுபவப்பூர்வமாக நிரூபித்து வருகின்றனர். திண்டுக்கல், துரைபாண்டியன் அத்தகையோரில் ஒருவர். இவர், கிட்டத்தட்ட 98% இயற்கை முறை விவசாயத்தில் மா சாகுபடி செய்துவருகிறார்!
திண்டுக்கல்-சிலுவத்தூர் சாலையில் 19-வது கிலோமீட்டரில் உள்ள கம்பிளியம்பட்டி எனும் கிராமத்தில் இருக்கிறது, துரைபாண்டியனின் மாந்தோப்பு. தோப்பைச் சுற்றியுள்ள நிலங்களில் கடுமையான வறட்சி காரணமாக புற்கள்கூட கருகியிருக்கும் நிலையிலும், இவருடைய மாந்தோப்பு மட்டும் பசுமை கட்டி நிற்கிறது. முறையாக கவாத்து செய்யப்பட்ட மா மரங்களில் கொத்துக்கொத்தாக காய்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. நான்கு மா மரங்களுக்கு இடையில் ஒரு தென்னை... ஒவ்வொரு தென்னையைச் சுற்றியும் வாழை மரங்கள்... என அணிவகுத்து நிற்கின்றன. கொளுத்தும் வெயிலுக்கு இதமாக கொட்டகையில் அமர்ந்திருந்த துரைபாண்டியனைச் சந்தித்தோம்.
இமாம்பசந்த் ரகத்துக்கு அதிக விலை!
''லாரி டிரான்ஸ்போர்ட்தான் எனக்கு பிசினஸ். திண்டுக்கல்லுல ஒரு கல்யாண மண்டபம் இருக்கு. ரெண்டையும் பாத்துக்கிட்டு விவசாயத்தையும் செஞ்சிட்டு இருக்கேன். இந்த இடம் ஒரு காலத்துல கல்லுக் காடா இருந்துச்சி. 30 வருஷத்துக்கு முன்ன மா நடலாம்னு முடிவு செஞ்சேன். இது சம்பந்தமா என்னோட சொந்தக்காரர் பாஸ்கரன்கிட்ட பேசினப்போ, 'நல்ல யோசனை’னு தெம்பு கொடுத்தார். உடனே, ஆந்திர மாநிலம் 'ஜிதிகுப்பா’ங்கிற இடத்துக்குப் போய், கல்லாமை, செந்தூரம், பெங்களூரா, இமாம்பசந்த்னு பல ரகங்கள்ல தரமான மாங்கன்னுகளை வாங்கிட்டு வந்து நட்டோம். எல்லாம் வளர்ந்து காய்ப்புக்கு வந்த சமயத்துல, 4 இமாம்பசந்த மரங்கதான் இருந்துச்சு. ஆனா, அந்த ரகத்துக்குத்தான் அதிக விலை கிடைச்சிது. அதனால, தோப்பு முழுக்க இமாம்பசந்த் ரகத்தையே நட்டுடலாம்னு முடிவு செஞ்சிட்டோம். அதுக்காக, இமாம்பசந்த் பத்தின விஷயங்களைத் தெரிஞ்சுக்கலாம்னு நானும், பாஸ்கரனும் அலைஞ்சப்போ, ஒரு தகவல் கிடைச்சிது.
ஒட்டுச்செடியில் ஆண்டு முழுவதும் காய்ப்பு!
ஆந்திராவைச் சேர்ந்த தோட்டக்கலைப் பேராசிரியர் ஒருத்தர், 'இமாம்பசந்த், ஒரு வருஷம்விட்டு ஒரு வருஷம்தான் நல்ல மகசூல் கொடுக்கும். ஆனா, ஒரு சின்ன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வருஷம் முழுக்க காய்க்க வைக்க முடியும். ஃபீனா ரக மாஞ்செடியை (நீலம் ரக மாம்பழத்தை ஆந்திர மாநிலத்தில் இந்தப் பெயரில்தான் அழைக்கிறார்கள்) வேர்ச்செடியாகவும், இமாம்பசந்த்தை தாய்ச் செடியாகவும் வெச்சி ஒட்டுக்கட்டி... தரமான இமாம்பசந்த் செடிகளை உருவாக்கினா, மகசூலும் நல்லா இருக்கும். வருஷம் முழுசும் காய்க்கும்’னு சொல்லி... ஃபீனா ரகச் செடிகளை வாங்கிக் கொடுத்து, ஒட்டுக் கட்டுறதுக்கு ஆட்களையும் ஏற்பாடு செஞ்சி கொடுத்தாரு. ஃபீனா ரகம் நல்ல சுவையா இருக்கறதோட பழமும் பெருசா இருக்கும். அவர் சொன்ன மாதிரி ஒட்டுக் கட்டி நாத்து உருவானதும்... தோட்டத்துல இருந்த மத்த மரங்களை எல்லாம் வெட்டிட்டு... முழுக்க இமாம்பசந்த் செடிகளை நட்டுட்டோம். இப்போ, மொத்தம் 21 ஏக்கர்ல 800 இமாம்பசந்த் இருக்கு. கூடவே, மகரந்தச் சேர்க்கைக்காக சேலம், பெங்களூரா, செந்தூரம் ரகங்கள்ல 250 மரங்களை வெச்சிருக்கோம்'' என்ற துரைபாண்டியன், தொடர்ந்தார்.
''மரங்கள் எல்லாம் ஒவ்வொரு வருஷமும் நல்ல மகசூல் கொடுக்குது. ஆரம்பத்துல வெச்ச நாலு தாய் மரங்களும் இன்னமும் நல்லா காய்ச்சிட்டு இருக்கு. அதுல மறுபடியும் ஒட்டுக் கட்டி அடர்நடவு முறையில
20 ஏக்கர்ல இமாம்பசந்த் நடப்போறோம். தோப்புக்கு கிணத்துப் பாசனம்தான். ரெண்டு கிலோ மீட்டர் தள்ளி இருக்கற கிணத்துல இருந்து, தண்ணி கொண்டு வந்து சொட்டு நீர் மூலமா பாசனம் பண்றோம். கடுமையான வறட்சியிலயும் மரங்களைக் காய விடாம வெச்சிருக்கறது, சொட்டு நீர்தான்'' என்ற துரைபாண்டியன், இமாம்பசந்த் சாகுபடி முறைகளைச் சொல்ல ஆரம்பித்தார். அது பாடமாக இங்கே.

இயற்கை வழி உழவில்லா வேளாண்மை

ஒருவர்க்கு நிலம் எத்தனை ஏக்கர் இருப்பினும் சுற்றிலும் அதற்கு வரப்பிட்டு வரப்பிலிருந்து 4 அடி உள் பக்கம் தள்ளி பனங்கொட்டையை வேலி போல் 4 அடிக்கு ஒன்று வீதம் நட வேண்டும். இது காலத்தின் கட்டாயம் நிலத்தின் உள்ளே நீர் சேமிப்பின் ஊற்றுக் கண். பனை மர வட்ட வரிசையை அடுத்து மேலும் உட்புறமாக அதேவட்ட வரிசையில் 6 அடி தள்ளி ரோஸ்வும் மரக்கன்றுகள் அல்லது உழவன் விரும்பும் காட்டு ரக மரங்கள் எதையேனும் ஒன்றினை 15 அடிக்கு ஒன்று என நடவேண்டும். இஃது நீண்ட நாள் சுமார் 25 ஆண்டுகளில் வருவாய் தரும். அடுத்து மேலும் உட்புற வட்ட வரிசையில் 15 அடி தள்ளி 15 அடிக்கு ஒன்று வீதம் வடுமாங்காய் (உயர்தர ஊறுகாய்க்கு மட்டும்) கன்றுகள் நடலாம். இவை 7 முதல் 10 ஆண்டுகளில் நல்ல வருவாய் தரும். நான்காவது உட்புற வட்ட வரிசையில் 15 அடி தள்ளி இடைவெளி 10 அடி வீதம் அகர்வும் எனும் (ஊறுவத்தி தயாரிப்புக்குரிய மூல பொருள்) மரக்கன்றுகள் நடலாம்.
10599244_720479834655039_6865054303809208384_n

அகர்வும் நடுவதற்கு முன்னதாக கன்று ஒன்றுக்கு மேற்கு திசையில் 5 அடி தள்ளி வாழை நட்டு வளர்த்து பின்னர் நடவு செய்தால் அகர்கன்றுகள் பழுதின்றி வளரும். குளிர்ச்சியான சூழல் அகர்வுக்கு மிகவும் அவசியம். பத்து ஆண்டுக்கு ஒரு முறை என மூன்று அறுவடை செய்யலாம். 30 ஆண்டுகள் 1 தலைமுறைகடந்த பின், முன்னதாக இரு மரங்கட்கு இடையில் அதே அகர் மரக்கன்றுகள் நட்டு பயனை அடுத்த தலைமுறைக்கும் கொடுக்கலாம். ஊறுகாய் மாங்காய் தொடர்ந்து 35 ஆண்டுகள் பலன் தரும். அகர் போல் முன்னதாகவே இரு மரங்கட்கு இடையில் புதிய வடுமாங்காய் கன்றுகள் நட்டு பயனை அடுத்து வாரிசிடம் ஒப்படைக்கலாம்.

மேற்கண்ட மரங்களுக்கு இடையில் ஊடுபயிராக சிறு தானியங்களை விதைத்து அறுவடை செய்யலாம். பசுமையான மூடாக்கு எப்போதும் தரலாம். நம் பராம்பரியம் / பண்டைய வேளாண்மையையும் பின்பற்றுவது இனிவரும் காலத்தின் கட்டாயம். இன்றைய வேதனையுற்ற உழவன் இயற்கை விவசாயத்தில் நெல், சிறு தானியங்கள், காய்கறிகள், கீரைவகைகள், கிழங்குவகைகள் இன்னோரன்ன எதையும் செய்யலம். ஊக்கமது கைவிடோல் – என்ற ஒளவை வாக்கு இன்றும் பொருந்தும். சிந்தையில் இருத்த வேண்டியதை இனி காண்போம்: ஒன்றும் செய்யாத விவசாயம் – ம்லி ஹிலிமிஜுஷ்ஐஆ மிழிஸதுஷ்ஐஆ என்று சொல்லப்பட்ட ஒன்றை வைக்கோல் புரட்சி பற்றி தெளிவாக அறிதல் நன்று. இதை செய்வித்தவர் ஐப்பான் நாட்டு ஓர் ஆராய்ச்சியாளர் திரு.மாசாழைஃபுக்குவோக்கா – என்பவர் ஆவார். அவர் பாரம்பரிய நெல் 6 மாத வயதுடையதையும், அந்நாட்டுக்குரிய பார்லியையும் விளைவித்து அறுவடை செய்திட்டார் எப்படி? பருவத்தில் முதலில் நெல்லை தூவி விடுவார் பூமியின் மேல் மானாவாரியில் இப்படி செய்தலால் மழையே விளைச்சலுக்கு ஆதாரம்.

நெல் விளைந்து அறுவடைக்கு சற்று முன்னதாக அதே நிலத்தில் பார்லி என்ற தானியத்தை விதைப்பார். எப்போதும் நிலத்தில் ஈரமிருந்து வருவதால் பார்லியும் முளைக்கும். நெல் கதிர்களை மட்டும் அறுத்து எடுத்து அதன் தாளை (வைக்கோல்) நிலத்தில் அப்படியே விட்டுவிடுவார். ஓர் ஆண்டு முடியும். மீண்டும் நெல்லை தூவுவார். சுழற்சி முறையில் தாள்கள் மட்டும் அப்படியே இருந்தன. நுண்ணுயிர்கள் தானே வளர்ந்து பெருகின. அதனால் பயிர் நன்கு வளர்ந்தது. அமோக விளைச்சல் தந்தது. பெங்களூர் வாழ் திரு.நாராயண ரெட்டி சொன்னார் – நிலம் நமது தாய். அவளை ஆடையில்லாமல் (மூடாக்குப் போடாமல்) நிர்வாணமாக வைக்கலாமா – என்று இதை அறிந்த ஜப்பானின்ஃபுக்குவோகா பெங்களூர் வந்து நாராயண ரெட்டியாரைச் சந்தித்தார். கட்டிப்பிடித்து பாராட்டினார்.