கோழிக்குஞ்சுகளைப் பராமரித்தல்
கோழிக்குஞ்சுகளை வளர்க்கும் கலைக்கு புரூடிங் என்று ஆங்கிலத்தில் பெயராகும். புதிதாக பொரிக்கப்பட்ட கோழிக் குஞ்சுகளுக்கு அவற்றின் உடல் வெப்பநிலையினை சீராக வைத்திருக்க முடியாது. சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு கோழிக்குஞ்சுகள் தயாரவதற்கு இரண்டு வாரங்களாகும். எனவே அவற்றின் முதல் சில வார கால வயதில் அவற்றால் தங்களுடைய உடல் வெப்பநிலையினை சீராக வைத்திருக்க முடியாது. இந்த சூழ்நிலையில் கோழிக்குஞ்சுகளை குளிரான சூழ்நிலைக்கு உட்படுத்தினாலோ அல்லது கவனிப்பு குறைவாக இருந்தாலோ அவற்றின் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விடும்.
கோழிக்குஞ்சு பராமரிப்பில் இரு முறைகள் உள்ளன
கோழிக்குஞ்சு பராமரிப்பில் இரு முறைகள் உள்ளன
- இயற்கையான முறையில் பராமரித்தல்
- செயற்கை முறையில் பராமரித்தல்
இயற்கையான முறையில் பராமரித்தல்
இம்முறையில் தாய்க்கோழியே அவற்றின் குஞ்சுகளை 3-4 வார வயது வரை பாதுகாக்கும்.
செயற்கை முறையில் பராமரித்தல்
இம்முறையில் அதிக எண்ணிக்கையிலான கோழிக் குஞ்சுகள் தாய்க்கோழியின் உதவியின்றி வளர்க்கப்படுகின்றன. கோழிக் குஞ்சுகளை வளர்க்கும் கொட்டகையில் கீழ்க்கண்ட பொருட்கள் இருக்கும்.
- கொட்டகையினை சூடாக்கும்ஆதாரம்
- வெப்பத்தை எதிரொலிக்கும் பொருட்கள்
- குஞ்சுகளைப் பாதுகாக்கும் அமைப்பு
கோழிக் கொட்டகையினை சூடாக்கும் ஆதாரம் மின்சாரம் அல்லது, இயற்கை எரிவாயு அல்லது எல்பிஜி மற்றும் மீத்தேன், மண்ணெண்ணெய் போன்ற திரவ எரிபொருள்கள் அல்லது திட எரி பொருட்களான கரி, விறகு போன்றவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம்.
கரி அடுப்பு அல்லது மண்ணெண்ணெய் அடுப்பு:
மின்சாரம் இல்லாத பகுதிகளில் சாதாரண கரி அல்லது மண்ணெண்ணெய் போன்றவற்றை உபயோகித்து குஞ்சுகளுக்கு செயற்கையாக வெப்பத்தை அளிக்கலாம். இந்த அடுப்புகளின் மீது தட்டு அல்லது பாத்திரங்களை வைத்து மூடி அவற்றிலிருந்து வெப்பம் கொட்டகையில் வெளியேறுமாறு செய்யலாம்.
வாயு மூலம் இயங்கும் வெப்ப ஆதாரம் :
இயற்கை எரி வாயு அல்லது எல்பிஜி அல்லது மீத்தேன் வாயு மூலம் இணைக்கப்பட்ட சூடாக்கும் கம்பியினை தரையிலிருந்து 3-5 அடி உயரத்தில் கொட்டகையில் தொங்க விட்டு குஞ்சுகளுக்கு வெப்பத்தை அளிக்கும் வகையில் செய்யலாம்.
மின்சாரம் மூலம் இயங்கும் வெப்ப ஆதாரம்:
இது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சூடாக்கும் ஆதாரமாகும். இந்த இயந்திரம் தேவைப்படும் அளவு வெப்பத்தை ஒரு பெரிய இடத்தில் சீராகப் பரப்பும் தன்மையுடையது. இவ்வாறு வெப்பத்தை சீராகப் பரப்புவதால் கோழிக்குஞ்சுகள் வெப்ப ஆதாரத்திற்கு அருகில் கூட்டமாக இருப்பது தடுக்கப்படுகிறது. மின்சாரத்தில் இயங்கும் வெப்ப ஆதாரம் ஒன்றின் மூலம் சாதாரணமாக 300-400 குஞ்சுகளைப் பராமரிக்கலாம்.
கரி அடுப்பு அல்லது மண்ணெண்ணெய் அடுப்பு:
மின்சாரம் இல்லாத பகுதிகளில் சாதாரண கரி அல்லது மண்ணெண்ணெய் போன்றவற்றை உபயோகித்து குஞ்சுகளுக்கு செயற்கையாக வெப்பத்தை அளிக்கலாம். இந்த அடுப்புகளின் மீது தட்டு அல்லது பாத்திரங்களை வைத்து மூடி அவற்றிலிருந்து வெப்பம் கொட்டகையில் வெளியேறுமாறு செய்யலாம்.
வாயு மூலம் இயங்கும் வெப்ப ஆதாரம் :
இயற்கை எரி வாயு அல்லது எல்பிஜி அல்லது மீத்தேன் வாயு மூலம் இணைக்கப்பட்ட சூடாக்கும் கம்பியினை தரையிலிருந்து 3-5 அடி உயரத்தில் கொட்டகையில் தொங்க விட்டு குஞ்சுகளுக்கு வெப்பத்தை அளிக்கும் வகையில் செய்யலாம்.
மின்சாரம் மூலம் இயங்கும் வெப்ப ஆதாரம்:
இது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சூடாக்கும் ஆதாரமாகும். இந்த இயந்திரம் தேவைப்படும் அளவு வெப்பத்தை ஒரு பெரிய இடத்தில் சீராகப் பரப்பும் தன்மையுடையது. இவ்வாறு வெப்பத்தை சீராகப் பரப்புவதால் கோழிக்குஞ்சுகள் வெப்ப ஆதாரத்திற்கு அருகில் கூட்டமாக இருப்பது தடுக்கப்படுகிறது. மின்சாரத்தில் இயங்கும் வெப்ப ஆதாரம் ஒன்றின் மூலம் சாதாரணமாக 300-400 குஞ்சுகளைப் பராமரிக்கலாம்.
அகச்சிவப்பு கதிர் வெளியிடும் பல்புகள்:
இது ஒரு தானாக வெப்பத்தை எதிரொளிக்கும் அமைப்பாகும். 250 வாட்ஸ்கள் உள்ள அகச்சிவப்பு கதிர் பல்பு மூலம் 150-250 கோழிக் குஞ்சுகளுக்கு வெப்பத்தை அளிக்கலாம்.
எதிரொளிப்பான்கள்:
இந்த எதிரொளிப்பான்கள் ஹோவர்கள் என்று அழைக்கப்படுகின்றன. தட்டையாக இருக்கும் ஹோவர்களில் சூடாக்கும் பகுதி, சூடான பல்பு, வெப்பமானி போன்ற அம்சங்கள் இருக்கும். கேனோப்பி ஹோவர்கள் குழி போன்ற அமைப்புடன், சாதாரண மின்சார பல்புகளுடன், வெப்பநிலையினைக் கட்டுப்படுத்தும் அமைப்புகளுடன் இருக்கும்.
குஞ்சுகளைப் பாதுகாக்கும் அமைப்பு
கோழிக் குஞ்சுகள் வெப்ப ஆதாரத்தை விட்டு தூரமாகச் செல்வதை இந்தப் பாதுகாப்பு அமைப்புகள் தடுக்கின்றன. இந்த அமைப்பானது 5 அடி அகலத்துடன், 1.5 அடி உயரத்திற்கு மேல் இருக்கக்கூடாது. இதற்காக கால நிலைக்கேற்றவாறு காகிதத்தாலான அட்டைகள் அல்லது துருப்பிடிக்காத இரும்பு அட்டைகள், கம்பி வலைகள் அல்லது பாய்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன. குளிர்காலத்தில் 5-6 நாட்களும், வெயில் காலத்தில் 2-3 வாரங்களும் குஞ்சுகள் இவ்வாறு பராமரிக்கப்படுகின்றன.
கோழிக் குஞ்சுகளைப் பெறுதல்
- வயதான கோழிகளை விற்ற பிறகு பண்ணையினை நன்றாக சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
- இரண்டு குழு கோழிகளுக்கு இடையே 3-4 வார இடைவெளி இருக்க வேண்டும்.
- கோழிக்குஞ்சுகளைப் பாதுகாக்க 5 அடி அகலத்துடன் பாதுகாக்கும் அமைப்பினைக் கொட்டகையில் அமைக்க வேண்டும். 5 அடி அகலமுள்ள பாதுகாப்பு அமைப்பில் 200-250 கோழிக்குஞ்சுகளைப் பராமரிக்கலாம்.
- கோழிக்குஞ்சு பாதுகாப்பு அமைப்பின் மத்தியில் சூடாக்கும் ஆதாரமான அகச்சிவப்பு பல்புகள், அல்லது சாதாரண பல்புகள் அல்லது வாயு மூலம் சூடாக்கும் அமைப்புகளை அமைக்க வேண்டும்.
- இந்த பாதுகாப்பு அமைப்புக்குள் ஆழ்கூளத்தை 2 இஞ்ச் உயரத்திற்குப் பரப்பி அதன் மீது பழைய செய்தித்தாளை வைக்க வேண்டும்.
- வண்டிச் சக்கரத்தைப் போல தீவனம் மற்றும் தண்ணீர்த் தட்டுகளை கோழிக்குஞ்சு பாதுகாப்பு அமைப்பின் மத்தியில் வைக்க வேண்டும்.
- கோழிக் குஞ்சுகள் வருவதற்கு 24 மணி நேரம் அல்லது ஒரு நாளைக்கு முன்பாக கோழிக்குஞ்சு கொட்டகையின் வெப்பநிலையினை சரிபார்க்க வேண்டும்.
- கோழிக் குஞ்சுகள் வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக கோழிக்குஞ்சுக் கொட்டகையில் அமைக்கப்பட்டிருக்கும் சூடாக்கும் ஆதாரத்தை அடிக்கடி பரிசோதித்து அது சரியான வெப்பநிலையினை பராமரிக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- ரவை அல்லது அரைக்கப்பட்ட மக்காச்சோளம் அல்லது நன்றாக அரைக்கப்பட்ட கோழிக்குஞ்சுத் தீவனம் போன்ற ஏதேனும் ஒன்றை கோழிக்குஞ்சு பாதுகாப்பு அமைப்பினுள் பரப்பப்பட்டிருக்கும் செய்தித்தாள் மீது ஒன்று அல்லது இரண்டு நாளைக்குப் போட வேண்டும். இதற்குப் பிறகு கோழிக்குஞ்சுகள் தானாகவே தீவனத்தட்டிலிருந்து தீவனம் உண்ணக் கற்றுக்கொள்ளும்.
- கோழிக்குஞ்சுகளுக்கு அவை குடிக்கும் தண்ணீரில் அத்தியாவசிய தாது உப்புகள், குளுக்கோஸ், வைட்டமின்கள் போன்றவற்றைக் கலந்து முதல் 2-3 நாளைக்கு அளிப்பதால் அவற்றிற்கு ஏற்பட்டிருக்கும் அயற்சியினைக் குறைக்கலாம். கோழிக்குஞ்சுகள் வந்தவுடன் அவற்றின் அலகினை ஈரப்படுத்தி பிறகு பாதுகாப்பு அமைப்பினுள் சூடாக்கும் ஆதாரத்திற்கு அடியில் விட வேண்டும்.
- முதல் வாரத்தில் கோழிக்குஞ்சுக் கொட்டகையினுள் 90-95 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும், பிறகு ஒவ்வொரு வாரத்திற்கும் 5 டிகிரி வெப்பநிலையினைக் குறைத்துக் கொண்டே வர வேண்டும்.
- கோழிக்குஞ்சுக் கொட்டகையில் வெப்பநிலை சரியாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக கோழிக்குஞ்சுகளின் பழக்கவழக்கங்களை கவனிக்க வேண்டும். கொட்டகையில் அதிக வெப்பநிலை இருந்தால் பல்பின் திறனைக் குறைத்து கொட்டகையின் வெப்பநிலையினைக் குறைக்கலாம். மிகவும் குறைவான வெப்பநிலை கொட்டகையில் இருந்தால் சூடாக்கும் ஆதாரத்தை இன்னும் கீழே இறக்கி வெப்பநிலையினை அதிகப்படுத்தலாம். குளிர்ந்த காற்று அடிக்கும் போது கோழிக்குஞ்சு கொட்டகையில் திரைகளை காற்று வீசும் திசையில் அமைத்து குளிர்ந்த காற்று கோழிக்குஞ்சு கொட்டகைக்குள் நுழையாதவாறு தடுக்கலாம்.
- குஞ்சுகள் வந்து 3 நாட்களுக்குப் பிறகு கோழிக்குஞ்சு பாதுகாப்பு அமைப்பிற்குள் போடப்பட்டிருக்கும் செய்தித்தாளை மாற்றி விட வேண்டும். பழைய உபயோகப்படுத்தப்பட்ட செய்தித்தாளை எரித்து விட வேண்டும்.
- பாதுகாப்பு அமைப்பினை குஞ்சுகள் வந்த 7-10ம் நாள் பருவ நிலைக்கேற்றவாறு எடுத்து விட வேண்டும். இவ்வாறு பாதுகாப்பு அமைப்பினை எடுக்கும் போது கோழிக்குஞ்சுக் கொட்டகையின் மூலைகள் வட்டமாக வளைந்து இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் கோழிக்கொட்டகைகளின் மூலைகளில் குஞ்சுகள் அடைந்து அவை இறக்க நேரிடும்.
- குஞ்சுகளின் வயதிற்கேற்றவாறு தீவனம் மற்றும் தண்ணீர்த் தட்டுகளை மாற்ற வேண்டும்.
- கோழிக்குஞ்சுகளின் முதல் 0-8 வார வயதில் அவற்றிற்கு 24 மணி நேரமும் வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மின்சாரம் இல்லாத போது இருட்டுக்கு கோழிக்குஞ்சுகள் பழகுவதற்கேற்றவாறு ஒரு மணி நேரம் மட்டும் கொட்டகையில் விளக்குகளை அணைத்து விட வேண்டும்.
- மருந்து அளித்தல்; முதல் மற்றும் இரண்டாம் நாள் – தாது உப்புக் கரைசல், வைட்டமின்கள், 3-7ம் நாள் எதிர் உயிரி மருந்துகள் (தேவைப்படும் மருந்துகளை தேவைக்கேற்றவாறு அளிக்கலாம்).
சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238
ReplyDelete