கால்நடைகள் காப்பீடு திட்டம்
கால்நடைகள் காப்பீடு திட்டம் மத்திய அரசால் உதவி செய்யப்படும் திட்டமாகும். பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் மூலம் 2005-2006 மற்றும் 2006-2007 மற்றும் பதினொன்றாவது ஐந்தாண்டு திட்டத்தின் மூலம் 2007-08யிலும் முன்னோடித் திட்டமாக தேர்வு பெற்ற மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. 2008-09யிலிருந்து இத்திட்டம் நாட்டிலுள்ள 100 புதிய மாவட்டங்களில் ஒழுங்கு முறையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கலப்பின மற்றும் அதிக உற்பத்தித்திறன் கொண்டு ஆடு, மாடுகள் மற்றும் எருமைகளுக்கு சந்தை நியாய விரையை அதிகபட்ச காப்பீடாக எடுத்துக் கொள்வர். 50 சதவிகிதம் வரை காப்பீடு. மானியமாக வழங்கப்படுகின்றது. மானியத்திற்காக ஆகும் அனைத்து செலவையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும். மூன்றாண்டுகள் எடுக்கப்பட்ட திட்ட உடன்பாட்டிற்கு அதிகபட்சமாக ஒரு பயனாளி 2 கால்நடைகளுக்கு மானியச் சலுகைகள் பெறலாம். இத்திட்டம் கோவா மாநிலம் தவிர அனைத்து மாநிலங்களிலும் அதற்குரிய மாநில கால்நடை அபிவிருத்தி வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டம் முன்னோடியாக செயல்படுத்தப்பட்ட 100 மாவட்டங்களில் மேலும் விரிவுப்படுத்தி, நாட்டு வகை ஈடு, மாடு, வெரி எருமை மற்றும் மிதுன் போன்ற நிறையக் கால்நடை இனங்களையும் சேர்த்துக் கொள்ளப்படும்.
கால்நடை காப்பீடு திட்டத்தின் இரண்டு முக்கிய குறிக்கோள்களால் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. கால்நடை இறப்பால் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கான பாதுகாப்பு மற்றும் கால்நடை மற்றும் அதன் உற்பத்தி பொருட்களின் தரத்தில் உள்ள மேம்பாடு போன்ற கால்நடை காப்பீடு சலுகைகள் மூலம் பெறப்பட்ட பயன்பாடுகளை நடைமுறைப்படுத்துவதைக் காட்டுவதாகும்.
- கால்நடை காப்பீடு திட்டத்தை செயல்படுத்தும் வழிகாட்டுதல்கள்
- செயல்படுத்தும் நிறுவனம்
- திட்டத்தை அமல்படுத்தும் மாவட்டங்கள்
- காப்பீடு நிறுவனங்களின் தேர்வு
- கால்நடை மருத்துவர்களை சம்பந்தப்படுத்துதல்
- காப்பீடு காப்புறுதி திட்டத்தை ஆரம்பித்தல் மற்றும் வெகுமதி மானியத்தை சரி செய்தல்.
- திட்டத்தின் கீழ் காப்புறுதி பெறும் கால்நடைகள் மற்றும் பயனாளிகளின் தேர்வு
- கால்நடைகளின் சந்தை விலையை தீர்மானித்தல்
- காப்பீடு பெற்ற கால்நடைகளைக் கண்டறிதல்
- காப்பீடு செல்லத்தக்க காலக்கட்டத்தில் உரிமையாளர்களை மாற்றுவது
- பணக்கோரல்களைத் தீர்மானித்தல்
- திட்டத்தை திறனுடன் மேற்பார்வையிடுதல்
- கால்நடை மருத்துவர்களுக்கு வெகுமானம் வழங்குதல்
- காப்பீடு பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும்
- ஊக்குவிப்புத் தொகை
கால்நடை காப்பீடு திட்டத்தை செயல்படுத்தும் வழிகாட்டுதல்கள்
கால்நடை துறை என்பது தேசிய அளவில் குறிப்பாக கிராமப் பொருளாதாரத்தில் முக்கியமான துறையாகும். கால்நடைகளை வளர்ப்பதன் மூலம் கிடைக்கின்ற கூடுதல் வருமானம் எதிர்பாராத பயிர் உற்பத்தி இழப்புக்களின் போது உதவியாக இருப்பது மட்டுமல்லாமல் ஏழை மற்றும் நிலமில்லாத விவசாயிகளுக்கு வாழ்க்கையின் ஆதாரமாகவும் இருக்கின்றது.
கால்நடை துறையை மேம்படுத்த, நோய்களை கட்டுப்படுத்த பல பயனுள்ள நடவடிக்கைகள் மற்றும் கால்நடைகளின் மரபணு தரத்தில் மேன்மைப்படுத்துவது மட்டுமல்லாமல் அப்படிப்பட்ட கால்நடைகளினால் ஏற்படும் இழப்புகளிலிருந்து விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்காக உத்திரவாத பாதுகாப்பு கொடுப்பதற்கு ஒரு ஆக்க முறை தேவைப்படுகின்றது. இத்திசையில், மத்திய அரசாங்கம் உதவும் கால்நடை காப்பீடு திட்டம், பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்பட்டது. 2008-09ல் செய்யப்பட்ட 100 புதிய மாவட்டங்களில் பதினொன்றாவது ஐந்தாண்டு திட்டம் முடியும் வரை, அதாவது 2011-12 செயல்படுத்தப்படும். நிர்வாக மேலதிகாரிகள் இத்திட்டத்தை மாநிலங்களில் செயல்படுத்தும் நெறிமுறைகள் விரிவாக பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
செயல்படுத்தும் நிறுவனம்
தேசிய கால்நடை இனப்பெருக்கத் திட்டத்தை (NPCBB) மத்திய, அரசால் உதவிப் பெற்று, கால்நடை பால் பண்ணை மற்றும் மீன் வளர்த்தல் துறையின் மூலம் செயல்படுத்தப்படுகின்றது. இத்திட்டத்தின் குறிக்கோள், செயற்கை கருவூட்டல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நாட்டு வகைக் கால்நடைகளை பயன்படுத்தி கால்நடைகளின் மரபணுவை மேம்படுத்துவதாகும். NPCBB திட்டத்தை மாநில கால்நடை அபிவிருத்தி வாரியங்கள் போன்ற மாநில செயல்படுத்தும் நிறுவனங்கள் (SIAs) செயல்படுத்துகின்றன. NPCBB மற்றும் கால்நடை காப்பீடு இரண்டிற்கும் ஒரு அனுசரணை கொண்ட வருவதற்காக, கால்நடை காப்பீடு தரப்படும். கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களும் NPCBB திட்டத்தை தேர்வு செய்துள்ளன. NPCBB திட்டத்தை செயல்படுத்தாத மாநிலங்கள் அல்லது SIAs இல்லாத பட்சத்திலோ, கால்நடை காப்பீடு திட்டத்தை, மாநில கால்நடைத் துறை செயல்படுத்தும்.
திட்டத்தை அமல்படுத்தும் மாவட்டங்கள்
திட்டம், ஒழுங்கு முறை அடிப்படையில் நாட்டில் புதிதாக தேர்வு பெற்ற புதிய 100 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். இத்திட்டம் கலப்பின மற்றும் அதிக உற்பத்தித் திறன் வாய்ந்த ஆடு, மாடுகள் மற்றும் எருமைகளுக்கு மட்டுமே உகந்ததாகும். இத்திட்டம் தமிழ்நாட்டில் கீழ்க்கண்ட மாவட்டங்களில் மட்டுமே செயல்படுத்தப்படும்.
மாநிலம் / மாவட்டத்தின் பெயர்
தமிழ்நாடு
- விழுப்புரம்
- திருநெல்வேலி
- திருச்சிராப்பள்ளி
- தர்மபுரி
- திருவண்ணாமலை
காப்பீடு நிறுவனங்களின் தேர்வு
போட்டி மிகு வெகுமதி விகிதங்கள், உடன்பாடு விநியோகித்தல் மற்றும் பணக்கோரல்களுக்கு தீர்வு காணுவதில் எளிதான நெறிமுறைகளை கடைப்பிடித்தல் போன்ற அதிகப் பயனுள்ள சலுகைகள் கொண்ட காப்பீடு நிறுவனம் மற்றும் அதன் விதிமுறைகள், நிர்பந்தங்களைக் கொண்டு, காப்பீடு நிறுவனத்தை தீர்மானிக்கும் அதிகாரம் முதன்மை செயல் அலுவலருக்கு உள்ளது. ஒரு காப்பீடு நிறுவனத்தை தேர்வு செய்யும் பொழுது, வெகுமதி விகிதங்களுக்கு செயலாற்றும் சக்தி இருக்கிறதா சேவை செயல்திறன், விதிமுறைகள் மற்றும் நிர்ப்பந்தங்கள் போன்ற அனைத்தையும் கருத்தில் ஏற்றுக் கொள்ளவேண்டும். மாநிலத்தில் போதுமான அளவில் பிணையப்படும் போது மற்றும் தனியார் பொது காப்பீடு நிறுவனங்களிடமிருந்து எழுத்து வடிவில் விலைக் கூறல்களை வரவேற்கிறார். இத்திட்டத்தை வெற்றிகரமாக மற்றும் ஆற்றல்மிக்கத் திறனுடன் செயல்படுத்தவும், கால்நடை உரிமையாளர்களிடையே பிரபலப்படுத்தும் வகையிலும் காப்பீடு நிறுவனம் / நிறுவனங்களை, CEO அந்நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, காப்பீடு நிறுவனத்தை தேர்வு செய்வார்.
எந்தக் காப்பீடு நிறுவனமானது காப்பீடு செய்த கால்நடைகளுக்கு இறப்பதுடன் பிற ஊனங்களுக்கும் சேர்த்து காப்பீடு காப்புறுதி வழங்கினால் வரவேற்கத்தக்கது. எனினும் அவ்வாறான கூடுதல் சலுகைகளுக்கு வெகுமதியில் எந்த மானியமும் வழங்கப்பட மாட்டாது. கால்நடையின் மரணத்தால் ஏற்படும் இழப்பைத் தவிர மற்ற பிற இழப்புகள் அனைத்திற்கும் முழுமையான வெகுமதியை பயனாளிகள் செலுத்தித் தான் காப்பீடு காப்புறுதி பெறவேண்டும். மேலே குறிப்பிட்டது போல, உடன்பட்ட வெகுமதி விகிதம் போட்டி மிகுந்தது என்பதை CEO தான் உறுதிப்படுத்தவேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும், வெகுமதி விகிதம் ஓராண்டு உடன்பாட்டிற்கு 4.5 சதவிகிதம் மேலும் மற்றும் மூன்றாண்டு உடன்பாட்டிற்கு 4.5 சதவிகிதம் மற்றும் மூன்றாண்டு உடன்பாட்டிற்கு 12 சதவிகிதம் மேலும் இருக்கக்கூடாது.
பொதுவாக, ஒரு மாவட்டத்திற்கான வேலைகளை ஒரே காப்பீடு நிறுவனத்திடம் ஒப்படைக்கவேண்டும். எனினும் விதிமுறைகள் மற்றும் நிர்ப்பந்தங்கள் ஒன்றாக இருக்கும் பட்சத்தில், ஒரு மாவட்டத்தில் ஒன்றிற்கும் மேலான காப்பீடு நிறுவனங்களிடம் அவர்களிடையே போட்டியை ஊக்குவிக்கும் வகையிலும், இத்திட்டத்தை பிரபலப்படுத்தும் வகையிலும் செயல்படுத்த அனுமதிக்கலாம். பணக்கோரல் தீர்வுகள் அல்லது சேவையில் ஏதாவது குறைபாடு காப்பீடு நிறுவனத்தால் ஏற்பட்டிருந்தால், இம்மாதிரியான விஷயங்களில், நாட்டின் முதன்மை ஆணையமான “ காப்பீடு ஒழுங்குபடுத்துதல் மற்றும் அபிவிருத்தி ஆணையத்தின்” கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். கால்நடை மருத்துவர்களைத் திட்டத்திற்குள் கொண்டு வருதல் கிராம நிலையில் கால்நடை மருத்துவர்களை திட்டத்திற்குள் கொண்டு வருவது. இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு முக்கியத் தேவையாக இருக்கும். இத்திட்டத்தில் காப்புறுதி தர வேண்டிய கால்நடைகளைக் கண்டறிதல், பரிசோதித்தல், சந்தை விலையை தீர்மானித்தல், காப்பீடு கால்நடைகளுக்கு அடையாள விவரங்களை கட்டி விடுதல் மற்றும் இறுதியாக பணக்கோரல் எப்போது பெறப்பட்டது என்று கால்நடை சான்றிதழ் வழங்குவது வரை அவர்கள் தொடர்புடையவர்களாக இருக்கின்றனர்.
மேலும் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுடன் தொடர்பில் இருப்பதால் இத்திட்டத்தை ஊக்குவிக்கவும் பிரபலப்படுத்தவும் உதவியாக இருப்பர். முடிந்த வரை மாநில அரசாங்கத்தில் வேலை பார்க்கும் கால்நடை மருத்துவர்களை மட்டுமே இத்திட்டத்தில் ஈடுபடுத்த முடியும். அரசாங்க கால்நடை மருத்துவர்கள் இல்லாத பட்சத்தில் மட்டுமே, இந்திய கால்நடை மன்றத்தால் பதிவு செய்யப்பட்ட தனியார் கால்நடை மருத்துவர்களை ஈடுபடுத்தலாம். அப்படிப்பட்ட கால்நடை மருத்துவர்களின் பட்டியலை ஒவ்வொரு மாவட்டத்திலும், கால்நடை மருத்துவர்களின் பட்டியலை ஒவ்வொரு மாவட்டத்திலும், கால்நடைத் துறை மாவட்ட அதிகாரியால் தயார் செய்யப்படும். அவ்வாறு கால்நடை மருத்துவர்களின் பட்டியல் ஒவ்வொரு மாவட்டத்தில் மருத்துவர்களின் பட்டியல் ஒவ்வொரு மாவட்டத்தில தேர்வு பெற்ற காப்பீடு நிறுவனம் மற்றும் உரிய பஞ்சாயத்து ராஜ் ஸ்தாபனத்திற்கு வழங்கப்படும்.
காப்பீடு காப்புறுதி திட்டத்தை ஆரம்பித்தல் மற்றும் வெகுமதியிற்கான மானியத்தை சரி செய்தல்
கால்நடை மருத்துவர்களால் கால்நடைகளை கண்டறிதல், பரிசோதித்தல், விலையை கணக்கீடு செய்தல், தேர்வு பெற்ற கால்நடைகளுக்கு ஒரு குறிப்பு கட்டுதல் மற்றும் 50 சதவிகிதம் வெகுமதியை காப்பீடு நிறுவனம் அல்லது அதன் பிரதிநிதிகளிடம் கால்நடை உரிமையாளர்கள் செலுத்துதல் போன்ற காப்புறுதி உடன்பாடு அடிப்படை நெறிமுறைகள் முடிந்தவுடன், கால்நடை உரிமையாளர்களின் நம்பகத்தன்மையை பெறுவதற்காக இத்திட்டத்தை செயல்படுத்திட சம்மதித்தாக வேண்டும். எனினும் காப்பீடு சட்டத்தில் முன்பணமாக செலுத்திய பிறகு காப்புறுதியை செயல்படுத்தலாம் என்ற வசதி உள்ளதை குறிப்பிட்டு காப்பீடு நிறுவனங்களுக்கு சாத்தியம் உண்டு இப்பிரச்சனையை தீர்ப்பதற்கு மாற்று ஏற்பாடாக ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக காப்பீடு நிறுவனத்திற்கு நேரடியாக CEOவைச் செலுத்தி விடலாம். இத்தொகை மூன்று மாதங்கிளல் காப்பீடு பெறுவதற்காக எதிர்பார்க்கப்பட்ட கால்நடைகளின் 50 சதவிகிதம் வெகுமதி தொகைக்கு எப்பொழுது 50 சதவிகிதம் வெகுமதி தொகைக்கும் மேலாக இருக்கக்கூடாது. காப்பீடு நிறுவனத்திற்கு எப்பொழுது 50 சதவிகிதம் வெகுமதி கால்நடை உரிமையாளர்களிடமிருந்து தொகை கிடைக்கின்றதோ, அப்பொழுதே அவர்கள் கால்நடை உரிமையாளர்களுக்கு காப்பீடு உடன்பாட்டை கொடுத்து விடவேண்டும் என்று தங்களுடைய கிளை அலுவலகங்களுக்கு ஆணை பிறப்பிக்கவேண்டும். அது மட்டுமல்லாது பாக்கி 50 சதவிகிதம் கொடுக்கப்பட்ட முன்பணத்தில் சரிசெய்யவேண்டும். காப்பீடு நிறுவனம் ஒவ்வொரு கால்நடைக்குமான கணக்கீடு மதிப்புடன் வழங்கிய உடன்பாடுகள் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திற்கான அரசாங்க பங்கு போன்றவற்றைக் கொண்டே கால்நடை துறை மாவட்ட அதிகாரி கையெழுத்திட அறிக்கையை CEOயிற்கு சமர்ப்பிக்கவேண்டும். அத்தொகையை CEO காப்பீடு நிறுவனத்திற்கு செலுத்திவிடுவார். காப்பீடு நிறுவனத்திற்கு முன்பணமாக கொடுக்க மூன்று மாத இலக்குக் காப்பீடு கால்நடைகளின் எண்ணிக்கை யதார்தத்தின் அடிப்படையில் இருக்கவேண்டும். உரிய காப்பீடு நிறுவனம் தொடர்ந்து பெறுகின்ற முன்னேற்றத்தைப் பொறுத்து முன்பணம் திருப்பி செலுத்தப்படும்.
திட்டத்தின் கீழ் காப்புறுதி பெறும் கால்நடைகள் மற்றும் பயனாளிகளின் தேர்வு
ஒரு கரவையிற்கு 1500 லிட்டர் பால் கொடுக்கும் தன்மையுள்ள அனைத்துப் பெண் மாடு / எருமைகளை அதிக உற்பத்தித் திறன் கொண்டவைகளாக கருதப்படும் மற்றும் அவ்வாறான கால்நடைகளுக்கு அதிகபட்ச தற்போதைய சந்தை மதிப்பிற்கு காப்பீடு செய்யலாம். வேறு காப்பீடு திட்டத்தில் காப்புறுதி பெற்றிருக்கும் கால்நடைகளுக்கு இத்திட்டத்தில் காப்பீடு பயனாளியிற்கு மாட்டாது. ஒரு பயனாளிக்கு இரண்டு கால்நடைகளுக்கு மட்டுமே மானியச் சலுகை வழங்கப்படும் மற்றும் ஒரு முறை காப்பீடாக அதிபட்சமாக மூன்றாண்டுகள் ஒரு கால்நடையிற்கு வழங்கப்படும். விவசாயிகள் மூன்று ஆண்டுகள் உடன்பாட்டை எடுத்துக் கொள்ள உற்சாகமளிக்கின்றனர். ஏனென்றால் உண்மையான காப்பீடு பொருளாதார வசதிகள் மற்றும் பயன்பாடுகள் வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது தான் தெரிகிறது. எனினும் ஒரு கால்நடை உரிமையாளர் தகுந்த காரணங்களுக்காக மூன்றாண்டுகளுக்கு குறைவாக உடன்படிக்கை எடுத்துக்கொண்டால், அவர்களுக்கும் மானியச் சலுகை கால முடிந்து, அக்காப்பீட்டை நீடிக்கும் பட்சத்தில் அதற்கு மானியச் சலுகை வழங்கப்பட மாட்டாது. NPCBBயின் வயல்வெளி செயல்திற்ன பதிவாளர்களையும் பயனாளிகளை கண்டறிய ஈடுபடுத்தலாம். காப்பீடு நிறுவனங்களுக்கு பயனாளிகளை கண்டறிய, கிராமப் பஞ்சாயத்துக்கள் உதவி புரியும்.
கால்நடைகளில் சந்தை விலையை தீர்மானித்தல்
ஒரு கால்நடை அதிகபட்சமாக தற்போதைய சந்தை மதிப்பிற்கு காப்பீடு செய்யப்படும். காப்பீடு செய்வதற்காக கால்நடையின் சந்தை விலையை, பயனாளி அங்கீகரிக்கப்பட்ட கால்நடை மருத்துவர் மற்றும் காப்பீடு நிறுவனம் அனைவதும் சேர்ந்தே தீர்மானிப்பர்.
காப்பீடு பெற்ற கால்நடைகளை கண்டறிதல்
பணம் கோரும் சமயத்தில், காப்பீடு பெற்ற கால்நடைகளை சரியான மற்றும் தனித்தன்மை வாய்ந்த முறையிலும் கண்டறியப்படவேண்டும். இதற்கு காது குத்துதல் முறை அளவு உன்னதமாக முறையாக இருக்கவேண்டும். இதற்காக காப்பீடு காலக்கட்டத்திலிருந்து பாரம்பரிய காது குத்துதல் அல்லது சமீபத்திய நுண்தகடு பொருத்து தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். அடையாள முத்திரை குத்துவதற்காக ஆகும் செலவை காப்பீடு நிறுவனம் ஏற்றும் கொள்ளும் மற்றும் அதைப் பராமரிப்பு பொருப்பு பயனாளிகளுக்குரியதாகும். அடையாளப் பொருட்களின் தன்மை மற்றும் தரத்தைப் பயனாளிகள் மற்றும் காப்பீடு நிறுவனம் இருவராலும் சமமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருக்கும். கால்நடை மருத்துவர்கள் பயனாளிகளுக்கு பணக்கோரல் தீர்விற்கு, அடையாளம் குத்துவதற்கான தேவை மற்றும் அதன் முக்கியத்துவத்தை புரிய வைக்கவும் மற்றும் அடையாளக் குத்துக்களை பராமரிக்கவும் வழிகாட்டுவர்.
காப்பீடு செல்லத்தக்க காலக்கட்டத்தில் உரிமையாளர்கள் மாறுவது
காப்பீடு உடன்பாடு முடியும் காலத்திற்கு முன்பாகவே கால்நடையை விற்கவோ அல்லது உரிமையாளர்கள் மாறுவதாக இருந்தால், எஞ்சியிருக்கும் காப்பீடு காலத்திற்கான அனைத்து அதிகாரங்களும் புதிய உரிமையாளருக்கே உரியதாகும். கால்நடை உடன்பாடு, கட்டணம் மற்றும் விற்பனை செய்கை என்று மாறுமைக்குத் தேவையான அனைத்தும் காப்பீடு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும் பொழுது தீர்மானிக்கப்படும்.
பணக்கோரல்களை தீர்வு காணல்
- காப்பீடு செய்தவர்களுக்கு தேவையில்லாத இன்னல்களை தவிர்க்க, எளியதான மற்றும் வேகமாக பணக்கோரல்களை தீர்வு காணும் முறை இருத்தல் வேண்டும். காப்பீடு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்கையில், பணக்கோரல் தீர்வுகளுக்கு கடைபிடிக்கப்படும் நெறிமுறைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும். பணக்கோரல் தீர்வானதும், பணக்கோரலுக்கு தேவையான அனைத்து ஆவணத்தை சமர்ப்பித்தப் பிறகு 15 நாட்களுக்குள் காப்பீடு செய்தவருக்கு காப்பீடு காப்புறும் பணம் கொடுக்கப்பட்டு விடும். CEOகள், பணக்கோரல் தீர்வு நெறிமுறைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதா மற்றும் தேவையான ஆவணங்கள் பட்டியலிடப்பட்டு, ஆவணங்கள் அனைத்தும் உரிய பயனாளிகளுக்கு திட்ட உடன்பாடு ஆவணத்துடன் கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யவேண்டும்.
திட்டத்தை திறனுடன் மேற்பார்வையிடுதல்
திறனுள்ள வகையில் திட்டத்தை செயல்படுத்த, பல்வேறு நிலைகளில் கண்டிப்பான் மேற்பார்வையிடுதல் அவசியமாகின்றது. மேற்பார்வையிடுதல் என்பது நிதி வெளியிடுதல்கள், காப்பீடு செய்யப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கை மற்றும் எவ்வகையான காப்பீடு போன்றவைகளாகும். மத்திய மற்றும் மாநில அளவில் மேற்பார்வையிடுதல் மிகவும் முக்கியமாகும். திறமையான மேற்பார்வையிடுதலுக்கு, தேவையான முயற்சிகை CEO எடுக்கவேண்டும். மாநில அரசாங்கத்தில் கால்நடை துறைச் செயலாளர் பொருப்பில் இருப்பவர் / மாநில கால்நடை துறை இயக்குநர் குறிப்பிட்ட கால இடைவேளையில் திட்டத்தின் செயல்பாடு குறித்து திறனாய்வு செய்வர்.
கால்நடை மருத்துவர்களுக்கு வெகுமானம் வழங்குதல்
திட்டத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை கால்நடை மருத்துவர்களின் பங்களிக்க இருக்கும். இத்திட்டத்தின் வெற்றி அவர்களுடைய ஆர்வமான பங்களிப்பு மற்றும் ஆதரவு அவசியமானதாகும். இந்நிலையில் கால்நடை மருத்துவர்களை முழு மனதுடன் திட்டத்தில் ஈடுபடுத்தவும், உற்சாகப்படுத்தவும், அவர்களுக்கு சிறிய சன்மானம் வழங்கப்படுகின்றது. கால்நடையை காப்பீடு செய்யும் நிலையில் ஒரு கால்நடையிற்கு ரூ. 50 மற்றும் கால்நடைச் சான்றிதழ் வழங்கும் நிலையில் ஒரு கால்நடைக்கு ரூ. 100 (தேவைக்கேற்ப பிரேத பரிசோதனை உட்பட) ஏதேனும் பணக்கோரல்கள் வரும் பட்சத்தில் சன்மானமாக வழங்க தீர்மானிக்கப்படுகின்றது. சன்மானத்திற்கு தேவைப்படும் தொகையை மத்திய அரசு S.I.Aக்களுக்கு வழங்கிவிடும். ஒவ்வொரு காலாண்டிற்கும், அக்காலாண்டிற்கு காப்பீடு பெற்ற கால்நடைகளின் எண்ணிக்கை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதைப் பொறுத்து, வாரியங்கள் கால்நடை மருத்துவர்களுக்கு சன்மானங்கள் வழங்குவதை CEOக்கள் உறுதி செய்யவேண்டும்.
விளம்பரம்
திட்டம் புதியது மற்றும் உரிய அதிகாரிகள் உட்பட பொது மக்களுக்கு இத்திட்டத்தைப் பற்றி தெரிய வாய்ப்பிருக்கிறது. ஆகையால் பொது மக்கள் மற்றும் திட்டத்தில் ஈடுபடவிருக்கும் குழுவிற்கும், இத்திட்டம் மற்றும் பயன்களை பற்றித் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். சிறு கையேடு பற்றி தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். சிறுக்கையேடு துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள், சுவர் வரைப்படங்கள், வானொலி உறைகள், தொலைக்காட்சி ஒளிபரப்புகள் போன்றவைகள் மூலம் இத்திட்டத்தை பற்றிய ஒளிபரப்புகள் போன்றவைகள் மூலம் இத்திட்டத்தை பற்றிய விழிப்புணர்வையும், அதிக உற்பத்தித் திறன் கொண்ட கால்நடைகளைக் காப்பீடு செய்வதன் பயன்கள் பற்றியும் விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்க உதவியாக இருக்கின்றன. பெரிய அளவில் விளம்பரப்படுத்த பஞ்சாயத்து ராஜ் நிர்வாகங்களையும் ஈடுபடுத்தப்படும் திட்டத்தின் தகவல்களை பரப்பவும், விவசாயிகளை கால்நடை காப்பீட்டிற்கு வரவேற்கும் பொருப்பு இடைநிலை பஞ்சாயத்துக்களை சேர்ந்ததாகும். இதற்காக CEOக்கள் இடைநிலை பஞ்சாயத்திற்கு ரூ. 5,000 மேலாகாத தொகையை செலவிற்கு உதவியாக வழங்கும் அதிகாரம் உள்ளது. (ரொக்கமாகவும் மற்றும் விளம்பர பொருட்களாகவும்).
காப்பீடு பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்புத் தொகை
காப்பீடு பிரதிநிதிகள் வேகமாகவும், அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்துவது இத்திட்டத்தை திறமையுடன் செயல்படுத்துவதற்கு முக்கியமானதாக இருக்கும். 15 சதவிகிதம் ஆகையால் காப்பீடு நிறுவனத்தை குறைந்தபட்சம் வெகுமதி வருமானத்தைக் காப்பீடு பிரதிநிதிகளுக்கு வழங்க வற்புறுத்தவேண்டும். இதை திட்ட செயலாக்க நிறுவனம், காப்பீடு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடுகையில் உறுதிப்படுத்த வேண்டும்.
மற்ற பிற தகவல்களுக்கு இங்கே அழுத்தவும்.
ஆதாரம் :
கோவை : கால்நடை இறப்பால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளை தவிர்க்க நடைமுறையிலுள்ள, மத்திய அரசின் தேசிய கால்நடை காப்பீடு திட்டம், மேலும் 16 மாவட்டங்களில் விரிவுபடுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், கறவை நிலையிலுள்ள, பசுக்கள் மற்றும் எருமைகள், அதிகபட்ச சந்தை மதிப்பை பெறும் வகையில், காப்பீடு செய்யப்படுகின்றன. காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையில், 50 சதவீதம் மத்திய அரசாலும், 50 சதவீதம் பயனாளிகளாலும் செலுத்தப்படுகிறது. இதன் மூலம், மூன்றாண்டு காப்பீடு காலத்தில், ஒருவர் இரண்டு கால்நடைகளுக்கு காப்பீடு பெற முடியும்.தமிழகத்தில், 15 மாவட்டங்களில் மட்டுமே, செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், இவ்வாண்டு, பல்வேறு புதிய அம்சங்களுடன், 31 மாவட்டங்களிலும் நடைமுறைக்கு வருகிறது. இதன்படி, கால்நடை வளர்ப்போருக்கு, 50 சதவீத மானியமும், அதிலும் எஸ்.சி. -- எஸ்.டி., பிரிவினருக்கு, 70 சதவீதமாக மானியத்தை அரசு வழங்கவுள்ளது.
மேலும் தற்போது, கறவை பசுக்களுடன், சினை மற்றும் பால் வற்றிய கால்நடைகளுக்கும் காப்பீடு செய்யப்படுகிறது. அதுபோல, ஒருவர் ஐந்து கால்நடைகள் வரை, காப்பீடு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை வழங்கும் இத்திட்டத்தில், பொதுத்துறையை சார்ந்த இரண்டு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இணைந்துள்ளன.
கோவை கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பெருமாள்சாமி கூறுகையில், ''கால்நடை காப்பீடு திட்டத்தின் மானியத்தொகை உயர்த்தியது வரவேற்கத்தக்கது.இதுகுறித்த அறிக்கைகள் அனைத்து கால்நடை அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்குள் கோவையில், 3900 பயனாளர்களுக்கு காப்பீடு வழங்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது,'' என்றார்.
பால் உற்பத்தி பெருக Snf மற்றும் Fat அதிகரிக்க அனுகவும்.9940072718
ReplyDeleteசுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238
ReplyDelete