Friday, May 2, 2014

கறவை மாடுகளுக்கு கலப்பு தீவனம் தயாரிக்கும் முறை

கலப்பினப் பசுக்கள் நல்ல பால் உற்பத்தித்திறனைக் கொண்டிருந்தாலும் அவற்றின் முழுத்திறனும் வெளிப்பட உரிய தீவனம் அவற்றிற்கு கொடுக்கப்பட வேண்டும்.பால் உற்பத்திக்கு ஆகும் செலவில் 60 முதல் 70 சதவீதம் தீவனத்திற்கே செலவாவதால் லாபத்தை அதிகரிக்க தீவன மேலாண்மை மிகவும் அவசியம்.

மூலப் பொருட்களை தேர்தெடுக்கும் போது கவனிக்க வேண்டியவை
  • குறைந்த பட்சம் 2 அல்லது 3 மாவுப் பொருட்களைச் சேர்ப்பது நல்லது.
  • மிகவும் பழையப் மூலப் பொருட்களையோ அல்லது பூஞ்சை காளானால் பாதிக்கப்பட்ட மூலப் பொருட்களையோ சேர்க்ககூடாது.
  • அரைப்பதற்கு முன் மூலப் பொருட்களை தண்ணீரில் ஊற வைத்து அப்பொருட்களில் மணல் மற்றும் கற்கள் கலப்பிடம் ஏதேனும் இருந்தால் நீக்க வேண்டும்
மூலப்பொருட்கள்
அளவு
(கிலோவில்)
மக்காசோளம்
12
அரிசி
15
தேங்காய் புண்ணாக்கு
15
பருத்திகொட்டை புண்ணாக்கு
18
தவிடு
36
சமையல் உப்பு
2
தாது உப்பு
1
யூரியா
1
மொத்தம்
100


தயாரிப்பு முறை
முதலில் மிக குறைந்த அளவே உள்ள தாது உப்பு, யூரியா மற்றும் சமையல் உப்பு ஆகியவற்றை குறைவான அளவுள்ள ஏதேனும் ஒரு தீவன மூலப் பொருளில் நன்கு கலந்த பிறகு , இதை பிற மூலப் பொருட்களுடன் கலந்து கொள்ளவும்.
கால்நடைகளுக்கு கலப்பு தீவனம் அளிக்கும் முறை
ஐந்து லிட்டர் வரை பால் கொடுக்கும் கறவைப் பசுக்களுக்கு பசுந்தீவனம் மட்டுமே கொடுத்துப் பராமரிக்கலாம்.

கலப்பு தீவனத் தேவை = பால் உற்பத்தி தேவை +
உடல் வளர்ச்சி தேவை

பால் உற்பத்திக்கு தேவையான கலப்பு தீவன அளவு
கொழுப்பு %
அடர் தீவனம்
(கிராம் லிட்டர் பால் )
3.0
400
3.5
425
4.0
450
4.5
475
5.0
500

உடல் வளர்ச்சிக்கு தேவையான கலப்பு தீவன அளவு

மாட்டின் எடை
சினை மாடுகள்
(கடைசி2 மாதங்கள்)
கறவை மாடுகள்
பால் வற்றிய மாடுகள்
300 கிலோ
2 கிலோ
1.5 கிலோ
0.75 கிலோ
400 கிலோ
2.5 கிலோ
1.75 கிலோ
1 கிலோ
500 கிலோ
3 கிலோ
2 கிலோ
1.25 கிலோ

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு 9944209238

    ReplyDelete