- பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனங்களை சிறு சிறு துண்டுகளாக ( 1”அளவிற்கு) நறுக்க உதவும் கருவியே பசுந்தீவன நறுக்கி (Chaff Cutter).
- நறுக்கும்போது சுவை கூடுவதால் கால்நடைகள் தீவனம் உட்கொள்ளும்அளவு அதிகமாகிறது.
- செரிமானத் தன்மை அதிகரிப்பதால் அதிக சக்தி கால்நடைகளுக்குகிடைக்கிறது.இதனால் பால் உற்பத்தி கூடுகிறது.
- 20-30% தீவன சேதாரம் குறைகிறது. இதனால் சாதாரணமாக 3கால்நடைகளுக்கு அளிக்கும் பசுந்தீவனத்தை, நறுக்கி போடும்போது 4கால்நடைகளுக்கு அளிக்கலாம்.
- சேதாரம் குறைவதால் கட்டுத் தரையை சுத்தம் செய்யும் வேலை குறைகிறது.
- கட்டுத்தரையை சுத்தம் செய்ய ஆகும் நேரத்தில் பாதி நேரம் செலவிட்டால்போதும் நறுக்கி போட்டு விடலாம்.
- சிறு பண்ணையாளர்கள் கையால் நறுக்கும் கருவியை பயன்படுத்தலாம்.
வ.எண்
|
பசுந்தீவன நறுக்கி
|
அரவை திறன்(மணிக்கு)
|
விற்பனை விலை(ரூபாய்)
|
1
|
கையால் இயக்குவது
|
50-70 கிலோ
|
6,500/-
|
2
|
மின் மோட்டரால்இயங்குவது
| ||
அ
|
1 குதிரை திறன் (1 HP Motor)
|
200-250 கிலோ
|
11,500/-
|
ஆ
|
1.5 குதிரை திறன் (1.5 HP Motor)
|
300-350 கிலோ
|
13,500/-
|
இ
|
2 குதிரை திறன் (2 HP Motor)
|
500-600 கிலோ
|
20,000/-
|
சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு 9944209238
ReplyDelete