பசுந்தீவனத்தை உற்பத்தி செய்தால் கால்நடை வளர்ப்பில் ஏற்படும் செலவை கணிசமாக குறைக்கலாம்.
நன்மைகள்
- பால் உற்பத்தி செலவில் 70 சதவீதம் தீவனத்திற்கே செலவாகிறது.எனவே பால் உற்பத்தியில் அடர் தீவனத்தை குறைத்து பசுந்தீவனத்தை கொடுத்து தீவனச் செலவை 40 - 50 சதவீதமாக குறைக்கலாம்.
- உலர் தீவனங்களை விட இதில் புரதம் மற்றும் தாது உப்புகளின் அளவு அதிகமாக இருக்கிறது.
- பசுந்தீவனத்தை உலர் தீவனங்களுடன் சேர்த்து தரும்போது உலர்தீவனங்களின் உட்கொள்ளும் அளவு மற்றும் அவற்றின் செரிமானத் தனமை அதிகரிக்கிறது. வகைகள் -- தானிய வகை, புல் வகை, பயறுவகை, மர வகை.
தானிய வகை
- சோளம், கம்பு மற்றும் மக்காசோளம்
- அதிக மாவு சத்தும் , ஒரளவு புரதமும் கொண்டவை
புல் வகை
- கினியாப் புல், கம்பு நெப்பியர் ஒட்டுப்புல் ( கோ-1,கோ-2,
கோ-3 மற்றும் கோ-4), நீர்ப்புல் ( எருமைப் புல்), கொழுக்கட்டைபுல்,
ஈட்டிப்புல், மற்றும் மயில் கொண்டைப்புல். - அதிக மாவு சத்தும் , ஒரளவு புரதமும் கொண்டவை
பயறு வகை
- வேலிமசால், குதிரை மசால், முயல் மசால், தட்டைப் பயறு.
- அதிக புரதமும் சுண்ணாம்பு சத்தும் கொண்டவை.
மர வகை
- அகத்தி, சூபாபுல் ( சவுண்டல் ), கிளிரிச்சிடியா, கருவேல், வெல்வேல்,
ஆச்சா மற்றும் வேம்பு - நடுத்தரமான புரதம் மற்றும் தாது உப்புகள் கொண்டவை.
அளிக்கும் முறை
- பசும் புல் மற்றும் தானிய வகை தீவனப் பயிர்களை 3 பங்கும் பயறுவகை தீவனங்களை 1 பங்கும் கொடுக்க வேண்டும் .
- இவ்வாறு அளிக்கும்போது கால்நடைகளுக்கு புரதம் மற்றும் மாவு சத்துகள் சரியான விகிதத்தில் கிடைக்கும்.
தீவன தட்டை பயிறு - Fodder Cowpea
- புரத சத்து அதிகமுள்ள தீவன பயிர்
- 30 - 60 நாட்களில் அறுவடை செய்யலாம்.
- இலைகள் உதிரும் அளவு மிகவும் குறைவு.
- உலர் தீவனம் தயாரிக்க உகந்தது.
- ஏக்கருக்கு 4 கிலோ விதை போதுமானது.
பசுந்தீவனமளிக்கும் முறை
- கறவை மாட்டிற்கு நாள் ஒன்றிற்கு 15-25 கிலோ பசுந்தீவனம் அளிக்கலாம். அதில் மூன்றில் இரண்டு பங்கு தானிய மற்றும் புல்வகை பசுந்தீவனமாகவும் மீதமுள்ள ஒரு பங்கு பயறு வகை மற்றும் மர இலைகளாகவும் இருக்க வேண்டும்.
- பசுந்தீவங்களை 2 அங்குல அளவிற்கு துண்டுகளாக நறுக்கிப் போடுவது சிறந்தது. துண்டுகளின் அளவு 2 அங்குலத்திற்கு கீழ் குறைந்தால் பாலில் கொழுப்புச்சத்து குறையும்.
மிக நன்று.
ReplyDeleteசுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு 9944209238
ReplyDelete