Friday, October 10, 2014

வாழை நார் பிரிக்கும் எந்திரம்

கல்லூரி மாணவர்களின் கலக்கல் கண்டுபிடிப்பு…
கண்டுபிடிப்பு
”கழிவுகளைக் காசாக்கும் வித்தையைத் தெரிஞ்சுக்கிட்டாதான்… நம்ம விவசாயி களும் பொருளாதார முன்னேற்றம் அடைய முடியும். அந்த வகையில நம்ம நாட்டுல பெரும்பாலான விவசாயிகள், சாகுபடி செய்யுற வாழையில இருந்து கூடுதல் வருமானம் எடுக்கணும்னுதான் எங்க படிப்பறிவைப் பயன்படுத்தி இந்தக் கருவியைக் கண்டு பிடிச்சுருக்கோம்” என்று பெருமை யுடன் சொல்கிறார்கள், தூத்துக்குடி, அண்ணா பல்கலைக் கழகப் பொறியியல் கல்லூரியில் இறுதி யாண்டு இளநிலை இயந்திரவியல் பயிலும் ராம்குமார், ஹரிகுமார், வசந்தகுமார் மற்றும் வினோத்குமார் ஆகியோர். இவர்கள் வடிவமைத் திருப்பது… வாழை மட்டையிலிருந்து நார் பிரித்தெடுக்கும் கருவி!
கல்லூரி தேடிச் சென்ற நம்மிடம் பேசிய ஹரிகுமார், ”இன்ஜினீயரிங் படிப்புல மாணவர்கள் குழுவா சேந்து ஒரு மெஷினை வடிவமைக் கணும். அதுக்கும் மார்க் உண்டு. எங்க ‘டீன்’, ‘மார்க்குக்காக மட்டும் ஏதாவது ஒரு மெஷினை உருவாக்கா தீங்க. சமுதாயத்துக்கும் மக்களுக்கும் தொடர்ந்து பயன்படுற மாதிரியான ஒண்ணை உருவாக்குங்க’னு சொன்னார். விவசாயக் குடும் பத்தைச் சேந்தவங்களான எங்க நாலு பேர் மனசுலயும் அது நல்லா பதிஞ்சுட்டுது. விவசாயியோட கஷ்ட, நஷ்டம் புரிஞ்ச நாங்க… ‘விவசாயிகளுக்கான மெஷின் தயாரிப் போம்’னு முடிவு பண்ணி… விவசாயிகளோட தேவை என்னனு தெரிஞ்சுக்கறதுக்காக நிறைய அலைஞ்சோம். அப்போ உருவானது தான் இந்த மெஷின்!
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்துல வாழை சாகுபடி அதிகமா நடக்குது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்ச்சந்தையில வாழை நார்களுக்கானத் தேவை அதிகமா இருக்கு. எங்க மாவட்டத்துல இருந்து பிளேடு மூலமா நாரைப் பிரிச்சு எடுத்துதான், கன்னியாகுமரிக்கு அனுப்பு றாங்க. அதனால, ‘அதுக்கான மெஷினையே உருவாக்கிடலாம்’னு முடிவு பண்ணிட்டோம். கரன்ட் தட்டுப்பாடு அதிகமா இருக்கறதால கையால இயக்குற மாதிரி இதை வடிவமைச் சோம். இதன் மூலமா பூக்கட்டுறதுக்கு மட்டுமில்ல… புடவை, கைவினைப் பொருட்கள் தயாரிக்கனு வாழையிலிருந்து நார் எடுத்து பயன்படுத்தலாம்” என்றவரைத் தொடர்ந்த ராம்குமார், இயந்திரத்தின் செயல்பாடு பற்றி விளக்கினார்.

”நாலு அடி உயர செவ்வக வடிவச் சட்டத்தின் மேல், சுருள் வளைய இணைப் புக்கத்தி கொண்ட தொடர் பற்சக்கரத்தைப் பொருத்தியிருக்கிறோம். இது சுழலக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 
வலது முனையில் சுருள் வளையத்துடன் பிடிப்புக் கத்தி, இருபக்கமும் கூர்மை கொண்ட கத்தி என இரண்டு கத்திகளைப் பொருத்தியிருக் கிறோம். ஒரு மீட்டர் நீளம், இரண்டு அங்குல அகலத்தில் உள்ள வாழை மட்டையை மெஷினில் இரண்டு பிளேடுகளுக்கு கீழ் வைக்கும்போது… எதிர்முனையிலுள்ள காந்தம் கத்திகளின் மறுமுனையைப் பிடித்துக் கொள்ளும். பிறகு, பற்சக்கரத்தை கையால் சுழற்றினால், வாழை மட்டையில் உள்ள ரெசின், பித்து மற்றும் நீர் போன்ற பிசுபிசுப்பு திரவம், வாழை மடலின் நார்க்கழிவு ஆகியவை நீங்கி, சுத்தமான வாழைநார் கிடைத்துவிடும்” என்றார், ராம்குமார்.

”இந்த மெஷினோட அடக்க விலை 4 ஆயிரத்து 500 ரூபாய். நிறைய எண்ணிக்கையில தயாரிக்கும்போது இதுல பாதி பணத்துக்குக் கூட தயாரிக்க முடியும். சராசரியா ஒரு நாளைக்கு ஒரு கிலோ அளவுக்கு நார் பிரிக்க முடியும். வழக்கமா பிளேடு வெச்சு பிரிக்கும்போது முக்கால் கிலோ அளவுக்கு கூடப் பிரிக்க முடியாது. இந்த மெஷினை சீக்கிரமாவும், சுலபமாவும் இயக்க முடியும். பெண்களேகூட இயக்க முடியும். இடம் மாத்துறதும் சுலபம். பாதுகாப்பனதும்கூட” என்று சிலாகித்தார், வசந்தகுமார்.
நிறைவாக, ”இந்த மெஷினுக்காக சிறந்த கண்டுபிடிப்பு சான்றிதழும், 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் எங்களுக்குக் கிடைச்சுருக்கு. நிறைய விவசாயிகள் இதைப் பார்த்துட்டு போறாங்க. அடுத்ததா, ஒரடி ஆழம் வரை ஏர் உழும் கலப்பை; கரும்பு லாரி, டிராக்டர்னு லோடோட கிராமத்து சாலைகள்ல போற வாகனங்கள்… சேறு-சகதியில சிக்கிடாம இருக்கறதுக்காக ரோட்டுல இருக்குற குழியோட ஆழத்தைக் காட்டுற எச்சரிக்கை மணியோட கூடிய ரேடியேட்டர் கருவி… இது ரெண்டையும் உருவாக்கலாம்னு இருக்கோம்” என்று கையை உயர்த்தினர் அந்த நான்கு மாணவர் களும்!

No comments:

Post a Comment