மாடுகளின் உடல் நலத்தை முறையாக பேணுவதற்கும், அவற்றிற்கு தேவையான
· வசதிகளை அளிப்பதற்கும், தட்பவெப்ப சூழ்நிலைகளிலிருந்து பாதுகாப்பதற்கும் முறையான
· கொட்டகை அமைப்பு மிகவும் அவசியமாகும். மாடுகள் நல்ல உடல் நலத்துடன்
· பேணப்பட்டால் மட்டுமே அவை தங்களது மரபியல் உற்பத்திக் குணங்களை
· வெளிப்படுத்த முடியும்.
· பண்ணைக் கட்டிடங்களை அமைப்பதற்கு இடத்தைத் தேர்வு செய்வது மிகவும்
· முக்கியமாகும். பண்ணை அமைக்க இடத்தைத் தேர்வு செய்வதற்கு முன்
· கவனிக்கப்படவேண்டியவை.
|
மண்
|
· நல்ல வலுவான கட்டிடங்களை அமைப்பதற்கு ஏற்ப பண்ணை அமைக்கத்
· தேர்ந்தெடுக்கும் இடத்தின் மண் இருக்கவேண்டும்.
· களிமண், மணல் பாங்கான மண், பாறைகள் இருக்கும் மண் போன்றவை
· பண்ணை அமைக்க ஏற்றவையல்ல.
· கடினமான மண் கொண்ட இடங்கள் பண்ணைக் கட்டிடங்கள் அமைக்க ஏற்றவை.
|
பண்ணை அமைப்பதற்கேற்ற இட வசதி
|
· பண்ணைக் கட்டிடங்கள் அனைத்தையும் அமைக்கும் வகையில் போதுமான அளவு
· இடம் இருக்கவேண்டும். இவ்வாறு போதுமான அளவு இடம் இருந்தால் மட்டுமே
· பண்ணையை எதிர்காலத்தில் விரிவாக்குவது எளிதாகும்.
· 200 மாடுகளைப் பராமரிப்பதற்கு ஏற்ற வகையில் குறைந்தது 2-3 ஏக்கர் அளவாவது
· நிலம் இருக்கவேண்டும்.தீவன உற்பத்திக்கு 2 மாடுகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் தேவைப்படும்.
|
வடிகால் அமைப்பு
|
· மழை பெய்யும் போது தண்ணீர் நன்றாக வடிவதற்கு ஏற்ற வகையில் வடிகால்கள்
· அமைக்க வேண்டும். இவ்வாறு அமைப்பதால் பண்ணையில் ஆரோக்கியமான
· சூழ்நிலை உருவாவது மட்டுமன்றி, பண்ணையிலுள்ள கட்டிடங்கள் ஈரமாவதையும்
· தடுக்கலாம்.
|
தண்ணீர் வசதி
|
· பண்ணையில் செய்யப்படும் பல்வேறு வேலைகளான மாடுகளைக் கழுவுதல், பசுந்தீவன
· உற்பத்தி, பால் பதனிடுதல், பாலிலிருந்து உப பொருட்கள் தயாரித்தல், மற்றும் குடிநீர்
· போன்றவற்றிற்கு போதுமான அளவு தண்ணீர் இருப்பது அவசியமாகும்.
· எனவே தொடர்ந்து பண்ணையின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய எப்போதும் தண்ணீர்
· இருக்கும் நீர் ஆதாரம் பண்ணையில் அவசியம் இருக்கவேண்டும்.
|
மின்சார வசதி
|
· பண்ணையில் மின்சார வசதி இருப்பது மிகவும் அவசியமாகும்.
· பண்ணையிலுள்ள பல்வேறு உபகரணங்களை இயக்குவதற்கும், வெளிச்சம் தரும்
· மின்விளக்குகள் வேலை செய்வதற்கும் மின்சாரம் தேவைப்படுகிறது.
|
காற்று மற்றும் சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு
|
· திறந்த வெளியில் அமைந்திருக்கும் பண்ணைகளில் உயரமாக வளரக்கூடிய
· மரங்களை கட்டிடங்களைச் சுற்றி வளர்க்கவேண்டும்.
· இதனால் காற்றின் வேகம் குறைக்கப்பட்டு, வெயிலின் தாக்கமும் குறைக்கப்படும்.
|
சத்தம் மற்றும் இதர தொல்லைகளிலிருந்து பாதுகாத்தல்
|
· சத்தம் அதிகம் உண்டாக்கும் தொழிற்சாலைகள், ரசாயன தொழிற்சாலைகள்,
· சாக்கடைக் கழிவுகள் வெளியேற்றப்படும் இடங்கள் போன்றவற்றிற்கு அருகில்
· பண்ணை அமையக்கூடாது.
· தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் வாயு மற்றும் திரவக் கழிவுகள்
· சுற்றுப்புறத்தையும் மாசடையச் செய்துவிடும்.
· கால்நடைகளின் உற்பத்தித்திறனை தேவையற்ற சத்தமும் பாதிக்கும்.
· எனவே கால்நடைப் பண்ணையானது நகரத்திலிருந்து தள்ளி இருக்குமாறு
· பார்த்துக்கொள்ளவேண்டும்.
|
சந்தை வசதி
|
· கால்நடைப் பண்ணையானது நகரத்தை விட்டு தள்ளியிருந்தாலும் அது நகரத்திற்கு
· அருகிலிருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் கால்நடைகளிலிருந்து
· பெறப்படும் பால், மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்வதற்கு பண்ணை
· நகரத்திற்கு அருகில் இருப்பதும் அவசியமாகும்.
|
போக்குவரத்து வசதி
|
· பண்ணை அமையுமிடத்தினை எளிதில் அடைவதற்கும், பண்ணையில் உற்பத்தியாகும்
· பொருட்களை விற்பனை செய்வதற்கும் முறையான சாலை வசதி அவசியமாகும்.
· இதனால் போக்குவரத்து செலவு குறைவதுடன், பண்ணையிலிருந்து பெறப்படும்
· உற்பத்திப்பொருட்கள் வீணாவதும் தடுக்கப்படும்.
|
இதர வசதிகள்
|
· இதர வசதிகளான தொலைபேசி, பண்ணையில் வேலை செய்யும் வேலையாட்களின்
· குழந்தைகளுக்கு பள்ளி வசதி, தபால் அலுவலகம், கடைகள் மற்றும் பொழுது போக்கு
· அம்சங்கள் போன்றவையும் பண்ணைக்கு அருகிலிருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
|
No comments:
Post a Comment