மாடுகளின் வயதை அதன் கீழ்த் தாடையிலுள்ள எட்டு நிரந்தர முன் வரிசைப் பற்களின் வளர்ச்சியை வைத்து கணக்கிடலாம்.
மாடுகளில் நிரந்தரப் பற்களாக் கீழ்தாடையில் 4 ஜோடி அதவாது 8 முன் வரிசைப்பற்கள் இருக்கும், மேல் தாடையில் முன் வரிசைப்பற்கள் இருக்காது.
பொதுவாக கலப்பின மாடுகளில்
2 வருட வயதில் மத்திய ஜோடி நிரந்தர முன் வரிசைப் பற்கள் முளைக்கும்.
2 1/2 வருட வயதில் இரண்டாவது ஜோடி நிரந்தர முன் வரிசைப் பற்கள் முளைக்கும்.
3 வருட வயதில் 3 வது ஜோடி பற்களும்
3 1/2 - 4 வருட வயதில் கடைசி ஜோடி நிரந்தர முன்வரிசைப் பற்களும் முளைத்து விடும்.
6 வருட வயதில் இருந்து இப்பற்கள் தேய ஆரம்பிக்கும்.
10 வயது ஆகும் போது எல்லா முன்பற்களுமே தேய்ந்த நிலையில் இருக்கும்.
No comments:
Post a Comment