Saturday, October 4, 2014

மாட்டுக்கு இரை எடுக்காமைக்கு

மாட்டுக்கு இரை எடுக்காமைக்கு

வெற்றிலை, மிளகு, மஞ்சணத்தி இலை தின்னக் கொடுக்க வேண்டும். பிரண்டை ஒரு கை பிடியளவு எடுத்து இடித்து கல் உப்பை சேர்த்து நாவில் தேய்த்து பிரண்டை சாறு உள் கொடுக்க இரை தின்னும்.

கழிச்சலுக்கு மாட்டுக்கு இரை எடுக்காமைக்கு

வெற்றிலை, மிளகு, மஞ்சணத்தி இலை தின்னக் கொடுக்க வேண்டும்.
பிரண்டை ஒரு கை பிடியளவு எடுத்து இடித்து கல் உப்பை சேர்த்து
நாவில் தேய்த்து பிரண்டை சாறு உள் கொடுக்க இரை தின்னும்

கழிச்சலுக்கு

அவரை இலை 1 பிடி, சின்ன வெங்காயம் 10 கிராம், விடத்தலை
இலை 1 பிடி ஆகிய அனைத்தும் அரைத்து (மாட்டு தொட்டியில்) கழனியில் கலந்து 2 வேளை உள்ளே கொடுக்க வேண்டும்.


வயிறு ஊதி கொண்டால்

பெருமருந்து ( வசம்பு) மற்றும் தலை சுருளிக்கொடியை வாய்க்குள் கொடுக்க ஊதிய வயிறு குறைந்து விடும் அல்லது முற்றிய வெற்றிலையுடன் பெருங்காயத்தைச் சேர்த்து, தட்டக்குச்சியில் மடித்து வாய்க்குள் கொடுக்க வயிறு ஊதிக் கொள்ளுதல் குறையும்.

No comments:

Post a Comment