Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Thursday, October 1, 2015

ரசாயனங்கள் இல்லாத உணவுகள் கற்றுத் தரும் "கியூபா" (Rasaayanam Illatha Unavugal Katru Tharum Cuba) - Agro-ecology: Lessons from Cuba on Agriculture, Organic Farming, Food and Climate change


அமெரிக்காவிற்கு அருகில் உள்ள ஒரு சிறிய நாடு "கியூபா"(CUBA) என்பது அனைவருக்கும் தெரியும்..... அந்த நாடு ஒரு வகையில் உலகத்துக்கே முன்னோடியாக இருக்கிறது.
*
அது எதில்....?
*

ரசாயனங்கள் இல்லாத உணவுகள் கற்றுத் தரும் "கியூபா"...

*
கியூபா... இது அமெரிக்காவின் அருகில் இருக்கும் சின்னஞ்சிறிய நாடு என்பதும், கம்யூனிச ஆட்சியின் கீழ் இருக்கிறது என்பதும் நமக்குத் தெரியும். கியூபா தான் ரசாயன உரமில்லாத இயற்கை வழி வேளாண்மையின் முன்னோடி நாடு என்று தெரியுமா....?
*
‘உலகின் சர்க்கரைக் கிண்ணம்’ என்பார்கள் கியூபாவை...!
*
கரும்பை மட்டுமே முக்கியப் பயிராகக் கொண்ட கியூபா, 1959ம் ஆண்டு ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையில் நிகழ்ந்த புரட்சியின் மூலம் கம்யூனிச நாடாக மாறியது. அருகிலிருக்கும் அமெரிக்காவிற்கு, மிகச்சிறிய நாடான கியூபாவின் மாற்றம் பிடிக்கவில்லை. அமெரிக்கக் கண்டத்தில் ஒரு கம்யூனிச நாடு செழித்து வளர்ந்தால், அது அருகில் இருக்கும் மற்ற நாடுகளுக்கும் பரவும் என்பது அமெரிக்காவின் பயம். அதனால் உலக நாடுகள் பலவற்றோடு இணைந்து, கியூபா மீது பொருளாதாரத் தடையை விதித்தது அமெரிக்கா.
*
கரும்பு மட்டுமே விளையும் கியூபாவுக்கு உணவு உட்பட எல்லா அத்தியாவசியப் பொருட்களும் பிற நாடுகளிடமிருந்து தான் வர வேண்டும். இந்நிலையில் அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை கடும் சிக்கலை கியூபாவிற்கு ஏற்படுத்தியது.
*
அப்போது சோவியத் ரஷ்யா கியூபாவிற்கு உதவ முன் வந்தது. கியூபாவின் சர்க்கரையைப் பெற்றுக் கொண்டு, கியூபாவிற்குத் தேவையான உணவுப் பொருட்களையும், இதர அத்தியாவசியப் பொருட்களையும் ரஷ்யா அனுப்பி வைத்தது.
*
அன்றைய கியூபாவின் உணவுத் தேவையில் அறுபது சதவீதம் ரஷ்யாவில் இருந்தே வந்தன. கரும்பு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கிய கியூபா, அதற்குத் தேவையான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், டீசல், வேளாண் எந்திரங்கள்... இப்படி அனைத்தையும் ரஷ்யாவிடமிருந்தே பெற்றது. நவீன வேளாண் முறையில் உணவு உற்பத்தியைத் துவங்கிய கியூபாவில் ஓர் ஆண்டிற்கு 13 லட்சம் டன் ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தப்பட்டன.
*
சுமார் 90,000 டிராக்டர்கள் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டன. ஒற்றைப் பயிர் சாகுபடியில் கியூபா முன்னிலையில் இருந்தாலும் கூட, பல்வேறு சூழலியல் பிரச்னைகளை எதிர்கொண்டது. ரசாயன வேளாண்மையின் பல்வேறு தீங்குகளையும் கியூபா சந்தித்தது. நிலங்கள் படிப்படியாக உற்பத்தித் திறனை இழந்தன.
*
தொழிற்சாலைகளைப் போல விவசாயம் நகர் மயமானதில் கிராமம் சார்ந்த பல தொழில்கள் நசிவைச் சந்தித்தன. விளைவு... கிராம மக்கள் நம் நாட்டைப் போலவே நகரங்களை நோக்கிப் பயணித்தார்கள். 1956ம் ஆண்டின் புள்ளி விவரப்படி கியூபாவில் கிராமங்களில் வசித்தவர்கள் அதன் மொத்த மக்கள் தொகையில் 56%. ஆனால் 1989ம் ஆண்டு புள்ளிவிவரப்படி கிராமங்களில் வசிப்போர் எண்ணிக்கை 28 சதவீதமாகக் குறைந்தது.
*
இந்தச் சூழலில் தான் சோவியத் ரஷ்யா சிதறுண்டது. கியூபா தன் தேவைகளுக்காக சார்ந்திருந்த ரஷ்யாவின் உதவிகள் கிடைக்கவில்லை. நவீன விவசாயத்தை சுய சார்போடு செய்ய முடியாத சூழலில் டீசல் உட்பட பல பொருட்களின் தேவை இருந்தது.
*
தயாரான சர்க்கரையை ஏற்றுமதி செய்ய முடியவில்லை. உணவுப்பொருட்கள், ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் எதையும் வெளிநாடுகளிலிருந்து வாங்க முடியாத சூழலில், ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை எடுத்தார்.
*
அதன் படி, கரும்பு மட்டுமே விளைவிப்பது என்ற ஒற்றைப் பயிர் சாகுபடி முறையைக் கை விட்டது கியூபா. தங்களுக்குத் தேவையான எல்லா உணவுப் பொருட்களையும் தங்கள் மண்ணிலேயே உற்பத்தி செய்யும் முடிவிற்கு வந்தார் ஃபிடல்.
*
நாடு முழுவதும் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. உள்நாட்டிலேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு உயிர் உரங்கள் இயற்கை வழி வேளாண் முறையில் தயாரிக்கப்பட்டன. குடும்பத் தோட்டங்கள், நகர்ப்புற விவசாயம் என அனைத்து வகைகளிலும் தற்சார்பு வேளாண்மைக்குத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.
*
கியூப மக்களின் முக்கியமான உணவுகளில் ஒன்று, அரிசி. இயற்கை வழி வேளாண்மை துவங்கப்பட்ட ஒரே ஆண்டில், கியூபாவின் ஒட்டு மொத்த தேவையில் ஐம்பது சதவீத நெல் அங்கேயே விளைந்து செழித்தது.
*
கிழங்கு உற்பத்தியில் தென் அமெரிக்காவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது கியூபா. கியூபாவின் மொத்த மக்கள்தொகையில் 95% கல்வி கற்றவர்கள். அவர்கள் செய்த விவசாயத்தில் தான் கியூபாவின் உணவுத்தேவை நிறைவேறத் துவங்கியது. கிராமப்புறங்களில் மட்டுமல்லாமல், நகர்ப்புற காலியிடங்கள் எல்லாம் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டன.
*
பல்வேறு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கூட்டுறவு சங்கங்களுக்குச் சொந்தமான காலி இடங்கள் எல்லாம் விவசாய நிலங்களாக மாறின. 1.1 கோடி மக்கள் தொகையைக் கொண்ட கியூபாவின் குடிமக்கள் அனைவரும், தங்கள் உணவுத்தேவையைப் பூர்த்தி செய்வதற்கான சுய போராட்டத்தை தாங்களே நடத்தினார்கள். வீடுகளில் இருக்கும் குறைந்த இடங்களில் காய்கறி பயிரிட்டார்கள்.
*
மாடித்தோட்டம் மூலம் தங்கள் தேவையையும் நிறைவேற்றி, எஞ்சியவற்றை விற்கத் துவங்கினார்கள். இயற்கை வழி வேளாண்மையில் நிலத்தையும், சூரிய ஒளியையும் வீணாக்காமல் பயன்படுத்துவதன் அவசியத்தை விளக்குவார்கள். ‘‘ஒரு சதுர அடி இலைப் பரப்பின் மீது எட்டு மணி நேரம் தொடர்ந்து சூரிய ஒளி விழுந்தால் மூன்று கிராம் குளுகோஸ் ஒளிச்சேர்க்கையின் மூலம் தயாரிக்கப்படுகிறது’’ என்று சொல்வார் மராட்டிய கணிதப் பேராசான் ஸ்ரீபாத் தபோல்கர்.
*
அதே புரிதலோடு கியூபா சூரிய ஒளியை அறுவடை செய்தது. உணவிற்காக பிற நாடுகளை நம்பி இருக்க வேண்டிய அவசியத்தை உடைத்தெறிந்தது. தன் உணவுத் தேவையை தானே பூர்த்தி செய்து கொண்டது. 2000ம் ஆண்டில் நகர்ப்புற வேளாண்மையில் மட்டும் கியூபாவிற்குக் கிடைத்த உணவுப் பொருட்கள் 12 லட்சம் டன். விவசாய நிலங்களிலிருந்தும், கிராமப்புறங்களில் இருந்தும் கிடைத்த உணவுப்பொருட்களின் கணக்கு தனி.
*
இது எவ்வளவு பெரிய வேறுபாடு...? தங்களுடைய உணவுத் தேவைக்காகவும், விவசாயத் தேவைகளுக்காகவும் பிற நாடுகளைச் சார்ந்திருந்த கியூப மக்கள், சில ஆண்டுகளில் தற்சார்பு உணவு உற்பத்தியைச் சாத்தியமாக்கினார்கள். விவசாயத்திற்காக நாட்டிற்கு வெளியிலிருந்து எந்த ரசாயனமோ, பூச்சிக்கொல்லியோ அவர்களுக்குத் தேவைப்படவில்லை.
*
‘சூழலியலுக்கு உங்கள் கடனைச் செலுத்துங்கள். மக்களை அல்ல, பசியை எதிர்த்துப் போராடுங்கள்’ என ஃபிடல் காஸ்ட்ரோ விடுத்த அழைப்பை ஏற்று கியூப மக்கள் தங்கள் தேவைகளை சுய முயற்சி மூலம் பூர்த்தி செய்து கொண்டார்கள்.

Thursday, April 2, 2015

பழந்தமிழரின் அளவை முறைகள் (Palantamilarin Alavai Muraigal) - Ancient Tamils Measurement Methods


முகத்தல் அளவைகள்
ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.



நிறுத்தல் அளவைகள்
மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.

நிறுத்தல் அளவுக்கான தராசு ஆறு வகைப்படும்.
1. மணித்தராசு - இது இரத்தினம் முதலியவற்றை நிறுக்கும் மிகச் சிறிய தராசு

2. பொன் தராசு - தங்கம் போன்றவைகளை நிறுக்கும் சிறு தராசு

3. உலோகத் தராசு - செம்பு, பித்தளை முதலியவற்றை நிறுக்கும் பெருந் தராசு

4. பண்டத் தராசு - பலசரக்குகளை நிறுக்கும் தராசு

5. கட்டைத் தராசு - விறகு அல்லது மூட்டைகளை நிறுக்கும் தராசு. இது இரு புறமும் சதுர மரப்பலகைகளைத் தட்டுக்களாகக் கொண்டிருக்கும்.

6. தூக்கு - காய்கறிகளை நிறுக்கும் தராசு. இது மரக்கம்பாலான துலாக் கோலின் ஒரு பக்கத்தில் மட்டும் தொங்கும் கூடைத் தட்டால் ஆனது.



நில அளவை

100 ச.மீ - 1 ஏர்ஸ்
100 ஏர்ஸ் - 1 ஹெக்டேர்
1 ச.மீ - 10 .764 ச அடி
2400 ச.அடி - 1 மனை
24 மனை - 1 காணி
1 காணி - 1 .32 ஏக்கர்
144 ச.அங்குலம் - 1 சதுர அடி
435 . 6 சதுர அடி - 1 சென்ட்
1000 ச லிங்க்ஸ் - 1 சென்ட்
100 சென்ட் - 1 ஏக்கர்
1லட்சம்ச.லிங்க்ஸ் - 1 ஏக்கர்
2 .47 ஏக்கர் - 1 ஹெக்டேர்
1 ஹெக்டேர் = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )
1 ஏக்கர் = 4840 குழி (Square Yard)
100 சென்ட் = 4840 சதுர குழிகள்
1 சென்ட் = 48.4 சதுர குழிகள்
1 ஏக்கர் = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )
1 ஏக்கர் = 43560 சதுர அடி
1 குழி (Square Yard) = 0.8361 சதுர மீட்டர் (Square Meter)
1 ச.மீ(Square Meter) = 1.190 குழி
1 குழி = 9 சதுர அடி
1 ச.மீ(Square Meter) = 10.76 சதுர அடி
1 குந்தா (Guntha) = 121 குழி = 101.17 சதுர மீட்டர்
1 குந்தா (Guntha) = 33 அடி * 33 அடி = 1089 சதுர அடி
100 குழி = ஒரு மா
20 மா = ஒரு வேலி
3.5 மா = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர் = ஒரு வேலி
16 சாண் = 1 கோல்
18 கோல் = 1 குழி
100 குழி = 1 மா
240 குழி = 1 பாடகம்
20 மா = 1 வேலி



கால அளவுகள்
இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.
இரெண்டரை நாழிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள்.
ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.


Saturday, March 21, 2015

புரூஸ்லீயின் வரலாறு: மர்ம மரணத்தின் நிஜ முடிச்சு அவிழ்கின்றது - The Mystery of Bruce Lee's Death


புரூஸ்லீயின் மரணம் குறித்து பல்வேறு கதைகள் சொல்லப்படுவதுண்டு. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம். ஆனால் எல்லாமே அமானுஷ்யமும், சுவாரஸ்யமும் நிறைந்ததாக இருக்கும். புரூஸ்லீயைக் கொல்ல அவருடைய மனைவியே மோதிரத்திலிருந்த வைரத்தை பொடிபண்ணி பாலில் கலந்து கொடுத்ததாகவும், அதை குடித்ததால்தான் புரூஸ்லீ இறந்துபோனதாகவும் மிகபிரபலமான ஒரு கதை உண்டு.


புரூஸ்லீயை கொல்வது அவ்வளவு சுலபம் கிடையாது. அவர் ஷூட்டிங்கில் நிஜமாகவே அடித்துவிடுவார். அவருடைய மர்ம அடி தாங்காமல் நிறையபேர் ஷூட்டிங்கில் இறந்து போயிருக்கிறார்கள், அவர் ஒரு மாபெரும் பலசாலி, உக்கிரமானவர், துப்பாக்கி குண்டால் கூட அவர் உடலை துளைக்கமுடியாது என்றெல்லாம் பல கதைகள்! அதனால்தான் அவரை கொல்வதற்காக வைரத்தை பொடி பண்ணி உணவில் கலந்துகொடுத்து, அந்த வைரத்தூள் கூட அவருடைய இதயத்தில் சிக்கியதால் உண்டான மூச்சடைப்பால்தான் புரூஸ்லீ இறந்துபோனார் என்பதாக அந்தக் கதை விரியும்.


1964 இல் புரூஸ்லீ தற்காப்புக்கலைகளுக்காக ஸ்கூலை திறந்த போது  Chinese community அதை எதிர்த்தது சைனிஸ் அல்லாத யாரும் தற்காப்புக்கலையை கற் பிக்க வேண்டாம் என்று அறிவித்த து. இதைத் தவிர்த்தால் லீ  Wong Jack Man  னுடன் நேரடியாக மோத வேண்டும் என்று அறிவித்தது லீ இதை ஏற்றுக் கொண்டார். ஜாக் மான் சைனாவின் மிகப் பிரபல மான  martial arts வீரராக இருந்தவர்.லீ வெற்றி பெற்றால் தொடர்ந்து கற்பிக்கலாம் தோற்றால் ஸ்கூலைமூடிவிட வேண் டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.இருவரும் மோதிக்கொ ண்டார்கள் “நான் தோற்று விட்டேன்” என்று யார் ஒத்துக்கொண்டாலும் மோதல் நிறுத்தப்படும். இவர்களிடை யே நடை பெற்ற‍ கடுமையான  இந்த  மோதல், பத்தே நொடியில் ஜாக் மான் புரூஸ் லீயால் தோற்கடிக்கப்  பட்டார். ஒரே நாளில், அமெரிக்கா மற்றும் சீனாவில் லீயின் புகழ் கிடு கிடு வெனப் பரவியது.


இந்த மோதலுக்குமுன்பு புரூஸ் லீயிடம் சில பத்திரிகையாளர்க‌ ள்  ‘‘என்ன தைரியத்தில் அவருடன் மோத ஒப்புக்கொண்டீர்க ள்?’’-கேட்டதற்கு, ‘‘நான் தத்துவத் தை ப் பாடமாகப் படித்திருக்கி றேன். வாய்ப்புகள் தாமே வராது, நாம் தான் உருவாக்க வேண்டும் என்பதை அறி வேன். அதனாலேயே வெற்றி, தோல்வி பற்றிக் க‌வலை யின்றி, நானும் என் கலையும் புகழ் பெற இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொண்டேன்’’ என்றார் புரூஸ்லி. 25 வயதுவைர ஒரு சாதாரண தொலை க்காட்சி நடிகராக இருந்து வந்த புரூஸ் லி , உலகப் புகழ் பெற்றது அதன் பிறேக!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ் கோவில் லீ ஹோய்-சுவென் என்ற நடிகருக்கு 1940 – ஆம் ஆண்டு புரூஸ்லீ பிறந்தார்  இயற் பெயர் லீ ஜுன்பேன். பின்ன‍ர் இவரது குடும்பம் சீனா திரும்பிய தும்,  பல நாடகங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

பின்னர், குங்ஃபூ பள்ளியில் சேர்ந்து தற்காப்புக்கலையையும், ‘ச்சாச்சா’ எனப்படும் டான்ஸையும் கற்றுக்கொள்ளத் தொடங்கி னார். 18-வது வயதிலேயே பாக் ஸிங் சாம்பியன்ஷிப் வெற்றி. இதை யடுத்து, புரூஸ்லி அடிக்கடி தெருச் சண்டைகளில் இறங்கி, போலிஸ் பிரச்சனை ஏற்படேவ, பெற்றோர் அவரை சான்பிரான்சி ஸ்கோ அனுப்பினர்.



அங்கே ஓர் உணவகத்தில் பகுதி நேர வேலை பார்த்தபடியே, உயர்நிலைப் படிப்பை முடித்த புரூஸ் லி, வாஷிங்டன் பல்கலை கழகத்தில் தத்துவம் படித்தார். கூட வே, சனத் தற்காப்புக் கலையை மற்றவ ர்களுக்கும் கற்றுத்தரத் தொடங்கினார். ஓரிரு நொடியிலேயே வெற்றிபெறும் ல-யின் ‘ஜட் க்யூன்டோ’ என்ற புதிய சண் டை முறைக்கு சீனாவில் பெரும் வ‌ரவே ற்பு கிடைத்தது. இடையில், ‘சினிமாவில் நடிக்கத் தயாராக இருக்கிறேன்’ என அறி வித்தார் புரூஸ்லி. கலையை மறந்து, சினிமாவில் நடிக்க அலைகிறார் என விமர்சனங்கள் எழுந்தன. ‘‘வாய்ப்புகள் தாமே வராது, நாம்தான் உருவாக்க வேண்டும். சினிமா மூலேமே இந்தக் கலை இன்னும் பெரும் புகழைடயும்’’ என்று உறுதியுடன் சொன் னார் லீ.

1971-ல் ‘தி பிக் பாஸ்’ வெளியாகி, உலெகங்கும் சக்கைப்போடு போட்டது. அதன்பின்னர் வெளியா ன ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி’, ‘ரிடர்ன் ஆஃப் த ட்ராகன்’, ‘என்டர் தி ட்ராகன்’ எனப் பல படங்கள் வசூ லில் சாதனை படைத்தன. அவரது கனவுப் படமான ‘கேம் ஆஃப் டெத்’ படப்பிடிப்பின்போது, மர்மமான முறையில் இறந்து போனா ர் புரூஸ்ல. ‘‘அவர் எடுத்துக்கொண்ட வலி மருந்துகள் அலர்ஜியா கி, அவரது உயிரைப் பறித்து விட்டன’’ என்று டாக்டர்கள் சொன் னாலும், 33-வது வயதில் அவருக்கு ஏற்பட்ட மரணத் தின் மர்மம் இன்றுவரை விடுபடேவ இல்லை. வாய்ப்புகள் வரும் என்று காத்திருப்பவர்கள் என்று மே வெற்றியைத் தொடேவ முடியாது; வாய்ப்புகைள உரு வாக்குபவர்களே சாதைனயாளர்கள் என்பது புரூஸ்லீயின் வாழ்க் கை சொல்லும் மந்திரம்!

முழுதாக நடித்தது, நான்கே நான்கு படங்கள்தான். அவை எல்லாமே மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சாதாரண படங்கள். ஆனால் நான்கே படங்களில் பல கோடி ரசிகர் சாம்ராஜ்யத்தை தனக்கென உருவாக்கியவர் புரூஸ்லீ. அவர் இறந்தபின்பும்கூட, இன்றுவரை அவருக்கென பிரத்யேக ரசிகர் பட்டாளம் தினம் தினம் உருவாகிக் கொண்டேயிருக்கிறது.

புரூஸ்லீக்கு பிறகு ஏகப்பட்ட தற்காப்புக்கலை பயின்ற, நடிகர்கள் ஹாங்காங்கிலிருந்தும், ஹாலிவுட்டிலிருந்தும் உருவாகிவந்தாலும், புரூஸ்லீ அடைந்த புகழில் ஒரு சதவீதத்தை கூட அவர்களால் நெருங்க முடியவில்லை. 

'குங்பூ ஹஸில், ஷாவலின் சாக்கர்’ படங்களை எடுத்த ஸ்டீபன் சாவ் கூட தன் படங்களில் இன்றுவரை தொடர்ந்து புரூஸ்லீக்கு மரியாதை பண்ணுகிறார். தாய்லாந்து நடிகரான டோனிஜா தன் படங்களின் திரைக்கதையில் புரூஸ்லீ பட பாணியை தொடர்ந்து புகுத்துவதை உணர்ந்திருக்கலாம்!

புரூஸ்லீ சிறப்பாக நடிக்க கூடிய நடிகரெல்லாம் கிடையாது. சொல்லப்போனால் அவருடைய படங்களில் அவர் நடித்ததை விட அடித்ததுதான் அதிகம். அப்படியிருக்க இத்தனை ரசிகர்களை கவரும்படி புரூஸ்லீ என்னதான் செய்துவிட்டார்? இவருடைய வெற்றி எதிர்பாராததா? புரூஸ்லீயின் மரணத்திற்கு பின்னாலிருந்த புதிர் என்ன? புரூஸ்லீயின் பாணி இன்றுவரை தொடர்கிற சூட்சுமம் என்ன?

புரூஸ்லீயின் வாழ்க்கையை பற்றிய அபிலாஷின் இந்த புத்தகம் புரூஸ்லீயின் பாசிட்டிவ் பக்கங்களைச் சொன்னாலும், நமக்குத் தெரியாத புரூஸ்லீயின் பலவீனங்களையும் சமரசமின்றி விமர்சிக்கிறது.

தமிழரின் இலெமுரியா கண்டம் - Lemuria Continent

உலகில் இராட்சதர்கள் என்று இருந்ததாக பழைய வரலாறுகள் சொல்லுகிறது. அவர்களெல்லாரும் ஜலப்பிரளயம் வந்த போது அழிந்து விட்டதாகவும் சொல்லப்படுகின்றது. அவர்கள் நீக்ரோ இனத்தவர்களாக இருக்கலாம் என்று ஆய்வு செய்தவர்களும் கடையை மூடிவிட்டார்கள்.




இது தொடர்பான உலக ஆய்வாளர்களின் (ஆங்கில)கட்டுரைகளைக் காண இப்படத்தின் மீது  சொடுக்கவும்.

நமக்கு தெரிந்த நமது வரலாறு தெளிவாகவே இருக்கின்ற நிலையில் நம்மையும் நம்முடன் வாழ்ந்த ஒரு சில திராவிட இனத்தவர்களையும் தவிர வேறு யாரும் தென் இந்தியாவிலோ இலமுரியாவிலோ வாழ்ந்ததாக சரித்திரமில்லை. அப்படியானால்...உலகின் முதல் இனமாய் உருவெடுத்து, முயற்சியும் பயிற்சியும் கூடி இராட்சத இனமாய் உலகை அச்சுறுத்திய இனம் நமது தமிழினமே என்பதைப் பண்டைய வரலாறுகள் தெளிவாகவே சொல்லுகிறது.

தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும்


வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம்.



File:Map of Lemuria.jpg
மிகச்சிறந்த மனித இன ஆய்வாளருக்கான விருது பெற்ற திரு.வில்லியம் ஸ்காட் எல்லியாட் என்பவர் அட்லாண்டிக் பெருங்கடலின் கதை எனும் தமது நூலில் வெளியிட்ட மறைந்த இலமுரியா எனும் பகுதியில் வெளியிட்டுள்ள இலமுரியா கண்டத்தின் படம். (இதைப்பற்றி மேலும் அறிந்துக்கொள்ள இப்படத்தின் மீது க்ளிக் செய்யவும்.

              திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும்  தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியே என்று அறிகின்றோம். 


 குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்கா- வையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக்கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.



1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு

2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா

3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர். இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில்
தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம் அல்லது நாவலன் தீவு எனப்பட்ட பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.




இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிட நாகரிகம்.



அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ் நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன.

கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக எடுத்துக்காட்டலாம். இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக சில வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் மனித இனத்தின் மூதாதையர் வாழ்ந்தனர் எனவும் தெரிவிக்கின்றனர். (கடல் கொண்ட இலமுரியாவிற்கும் கம்போடியாவிற்கும் அக்கால உலகவரைபடத்தில் இணைப்பு இருப்பதை திரு.வில்லையம் ஸ்காட் அவர்களைப் போல இந்த ஆய்வாளர்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதையும் நாம் கருத்திற்கொள்ளவேண்டும்.)  இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்ததாகவும். இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறது. ஆம், இதுதான் ” நாவலன் தீவு ” என்றும்  “குமரிப் பெருங்கண்டம்”. என்றும் அழைக்கப்பட்ட இடத்திற்கு மிகவும் அருகாமையில் இருந்தது என்பது முடிபு.

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு
காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! 

Lémurie, Atlantide et William Scott-Elliot (மேலும் படிக்க இப்படத்தின் மீது சொடுக்கவும்.வரும் பக்கத்தை வலது க்ளிக் செய்து translate to English என்பதையும் க்ளிக் செய்து படிக்கவும்)


"பழந்தமிழரின் கடல் மேலாண்மை” ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை - Historical Marine Routes of Tamils

தமிழர்களின் கடல் மேலாண்மை பற்றி ‘கடல் புறா’ போன்ற வரலாற்று நாவல்கள் மூலம் அரசல் புரசல்களாக நம்மில் பலரும் அறிந்திருப்போம்.
’கலிங்கா பாலு’ என்னும் கடல்சார் ஆராய்ச்சியாளரின் கடல் ஆமைகள் பற்றிய ஆய்வில் தமிழர்கள் பற்றிய பல அறிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
அவருடைய ஆய்வறிக்கை “தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்” நடத்திய “பழந்தமிழரின் கடல் மேலாண்மை” கருத்தாய்வு கூட்டத்தில் விளக்கப் பட்டது. அந்த ஆய்வறிக்கையின் சாராம்சம் பின்வருமாறு:-

கடல் வாழ் உயிரனமான ஆமைகள் கூட்டம் கூட்டமாக முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக வருடா வருடம் பல்லாயிரம் மையில்கள் கடந்து தமிழகம் மற்றும் ஒடிசா மாநில கடற்கரைகளில் தஞ்சம் புகுவது பலர் அறிந்த விஷயம். இந்த ஆமைகள் பற்றிய ஆய்வில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரிய வந்திருக்கிறது. சராசரியாக ஒரு கடல் ஆமையால் ஒரு நாளைக்கு 85கி.மி தூரமே நீந்தி கடக்க முடியும் ஆனால் இவ்வாமைகள் கடந்து வந்ததோ பல்லாயிரம் மையில்கள்! அதுவும் குறுகிய காலத்தில்!! எவ்வாறு என்று சில புதிய தொழில் நுட்பங்களின் (RFID-செயர்கைக்கோள் சாதனம்) RFID உதவியுடன் ஆராய்ந்த போது ஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாயும் நீரோட்டங்களின் உதவியுடன் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீந்தாமல் மிதந்து கொண்டு பயணிக்கும் விஷயம் தெரிய வந்திருக்கிறது.



இப்படி பயணம் செய்யும் ஆமைகளை செயர்கைகோளின் மூலம் பின்தொடர்ந்த போது மியான்மர்(பர்மா), மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள், ரஷ்யா, மெக்சிகோ, ஐஸ்லேண்ட், ஆப்ரிக்கா என பல உலக நாடுகளின் கடற்கரைகளுக்கு ஆராய்ச்சியாளர்களை இட்டு சென்றுள்ளன. அப்படி அவை கடந்த கடற்கரைகளை ஆராய்ந்த கலிங்க பாலுவிற்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்த்து. ஆமைகள் தொட்டுச் சென்ற பல கடற்கரைகளில் துறைமுகங்களும் அவற்றில் 53 இடங்களின் பெயர்களும், அதன் மக்களும், பண்பாடும், மொழியும் ஏதாவது ஒரு வகையில் தமிழின் தாக்கத்தோடு இருந்திருக்கிறது. அந்த கடற்கரைகளில் உள்ள ஊர்கள் சிலவற்றின் பெயர்கள் உங்கள் பார்வைக்கு:
ஊர் பெயர்களும் அந்த நாடுகளும்:
தமிழா-மியான்மர்
சபா சந்தகன் – மலேசியா
கூழன், சோழவன், ஊரு, வான்கரை, ஓட்டன்கரை, குமரா-ஆஸ்திரேலியா
கடாலன் – ஸ்பெயின்
நான்மாடல், குமரி,- பசிபிக் கடல்
சோழா, தமிழி பாஸ் –மெக்சிகோ
திங் வெளிர்- ஐஸ்லாந்து
கோமுட்டி-ஆப்ரிக்கா
இப்படி அந்த ஆமைகள் சென்ற கடற்கரை நகரங்களின் பெயர்களும் ஒரு சில பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினத்தினரின் மொழி, பண்பாடு ஆகியன தமிழோடு தொடர்புள்ளதாக இன்றளவும் இருக்கின்றன.

வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன் - Tamil King Pandya Who Ruled Vietnam

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவனுடைய பெயர் ஸ்ரீமாறன். தமிழில் இதை திருமாறன் என்று சொல்லலாம். வியட்னாமில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைய சமஸ்கிருத கல்வெட்டு இவனை ஸ்ரீமாறன் என்று குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டில் ஆட்சி, ஆண்டு முதலிய விவரங்கள் கிடைக்கவில்லை. கல்வெட்டின் பெரும்பகுதி அழிந்துவிட்டது. ஆனால் எழுத்து அமைப்பின் அடிப்படையில் இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
வியட்னாமில் வோ-சான் என்னும் இடத்தில் ஒரு பாறையின் இரண்டு பக்கங்களில் (VO–CHANH ROCK INSCRIPTION) இது செதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமாறன் என்ற அரசனின் குடும்பம் செய்த நன்கொடையை (தானத்தை) கல்வெட்டு குறிப்பிடுகிறது. பாறையின் ஒரு பக்கத்தில் 15 வரிகளும் மறு பக்கத்தில் ஏழு வரிகளும் உள்ளன. ஆனால் ஒன்பது வரிகள் தவிர மற்றவை தேய்ந்து அழிந்துவிட்டன. சமஸ்கிருத பாட்டுப் பகுதி வசந்த திலகா அணியிலும் ஏனைய வரிகள் உரைநடையிலும் உள்ளன. கிடைத்த வரிகளிலும் கூட சில சொற்கள் அழிந்துவிட்டன. கல்வெட்டின் சில வரிகள்:-
. .. . . … ப்ரஜானாம் கருண . .. . .. ப்ரதாம் விஜய

. . . . . .. . . . . . . . . . . . . . . . . .. . . . . . . . ..
ஸ்ரீ மாற ராஜகுல . . . . . . வ . .. .. . . . . ..
ஸ்ரீ மாற லோ. . . .. ன. . . .. .. .குலதந்தனேன
க்ராபதிம் ஸ்வகன. . .. ..ச . . . . . . . .. .. ..

இந்தக் கல்வெட்டில், தனக்குச் சொந்தமான வெள்ளி, தங்கம், தானியக் குவியல் மற்றுமுள்ள அசையும், அசையா சொத்து (ஸ்தாவர, ஜங்கம்) வகைகள் அனைத்தையும் தமக்கு நெருங்கிய மக்களுக்கு பொதுவுடமையாக்குவதாக மன்னன் அறிவிக்கிறான். எதிர்கால மன்னர்கள் இதை மதித்து நடக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கிறான். இது வீரனுக்கு தெரியட்டும். . .. . . .. . . .. .. . .என்று பாதியில் முடுகிறது கல்வெட்டு.
இதில் முக்கியமான சொற்கள் “ஸ்ரீமாற ராஜகுல” என்பதாகும். இந்த திருமாறனைக் குறித்து மிகவும் குறைவான தகவலே கிடைத்துள்ளது. ஆனால் வியட்னாம், லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளில் 1300 ஆண்டுகளுக்கு நிலவிய இந்து சாம்ராஜ்யத்தின் முதல் மன்னன் இவன் என்பதை சீனர்களின் வரலாறும் உறுதி செய்கிகிறது.
திருமாறனை சீன வரலாற்று ஆசிரியர்கள் கியு லியன்(KIU LIEN) என்றும் இவன் ஹான் வம்சம் (HAN DYNASTY) சீனாவை ண்டபொழுது அவர்களின் கட்டுபாட்டில் இருந்த ‘சம்பா’ தேசத்தில் புரட்சி செய்து ஆட்சியைக் கைபற்றியதாகவும் எழுதிவைத்துள்ளனர். சம்பா (CHAMPA) என்பது தற்போதைய வியட்னாமின் ஒரு பகுதியாகும். மன்னனின் குடும்பப் பெயர் கியு(KIU) என்றும் மன்னனின் பெயர் லியன் (LIEN) என்றும் எழுதிவைத்துள்ளனர். இவன் காங்ட்சாவோவின் (KONG TSAO) புதல்வன் என்றும் தெரிகிறது. தென்கிழக்கு ஆசியா முழுதும் முதல்முதலாக தொல்பொருள் ஆராயச்சி நடத்திய பிரெஞ்சுக்காரர்கள் ஸ்ரீமாறனும், கியு லியானும் ஒருவர்தான் என்று உறுதிசெய்துள்ளனர். கி.பி. 137 ல் சீனர்களை எதிர்த்துக் கலகம் துவங்கியது. ஆனால் கிபி 192 ல்தான் ஸ்ரீ மாறன் ஆட்சி ஏற்பட்டது.
ஸ்ரீ மாறனுக்குப் பின்னர் ஆண்ட மன்னர்களில் பெயர்கள் எல்லாம் சீனமொழி வாயிலாக ‘உருமாறி’ கிடைப்பதால் அவர்களின் உண்மையான பெயர்கள் தெரியவில்லை. எல்லா மன்னர்களின் பெயர்களும் பான்(FAN) என்று முடிவதால் இதை ‘வர்மன்” என்று முடிவுசெய்துள்ளனர். ஏனெனில் இடையிடையேயும் ஆறாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் மன்னர்களின் பெயர்களுக்குப் பின்னால் ‘வர்மன்’ என்ற பெயர் தெளிவாக உள்ளது. இதில் வியப்பு என்னவென்றால் தமிழ்நாட்டில் கிடைத்த செப்புப் பட்டயங்களிலும் பாண்டியன் வம்சாவளியில் ஸ்ரீமாறன், வர்மன் என்ற இரண்டு பெயர்களும் கிடைக்கின்றன.
இந்தோனேசியாவுக்குச் சொந்தமான போர்னியோ தீவின் அடர்ந்த காட்டிற்குள் மூலவர்மன் என்ற மன்னனின் சமஸ்கிருதக் கல்வெட்டு கிடைத்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் 800க்கும் அதிகமான சம்ஸ்கிருதக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
வியட்னாமியக் கல்வெட்டு ‘பாண்டிய’ என்ற பெயரைக் குறிப்பிடவில்லை. ஆயினும் ஸ்ரீமாறன் (ஸ்ரீ = திரு) என்பவன் பாண்டியனே என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன:-
(1) இடைச்சங்கத்தின் கடைசி மன்னன் பெயர் திருமாறன். அவன் அரசாண்ட காலத்தில் கடல் பொங்கி தென் மதுரையை அழித்ததால் அவன் தற்போதைய மதுரையில் கடைச்சங்கத்தை அமைத்ததாக உரையாசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். இந்த மன்னனோ இவனது குலத்தினரோ வியட்னாமில் ஒரு அரசை நிறுவியிருக்கலாம்.

போதிதர்மன் - Bodhidharma (Founder of Zen Buddhism and Shaolin Kung Fu)

இன்று உலகெங்கும் கராத்தே, குங்பூ, ஜூடோ, நின்ஜாக், போன்றவைகள் தற்பாதுகாப்புக் கலைகளாக பயிற்றுவிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல், உலகெங்கும் புத்தமதம் போதிக்கப்பட்டு வருகிறது. இவை இரண்டிற்குமே மூலகாரணமாக இருந்த மாவீரன் போதிதருமர் ஒரு தமிழனே என்பதை வரலாறு தெளிவாக சொல்கிறது. 

சீனாவில் ஷவோலின் கோவிலுக்கு போகும் பாதையில் வைக்கப்பட்டுள்ள போதிதர்மரின் சிலை.
வீரத்தையும்விவேகத்தையும் உலகிற்கே கற்றுக்கொடுத்த உலகின் மிகப்பெரிய தமிழ் ஆசான்: போதி தருமர்.

இவர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்ட பல்லவ சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட கந்தவர்மன் என்ற மன்னருக்கு மூன்றாம் மகனாகப் பிறந்தவர். இவர் அரசனாக பட்டம்சூடிய பிறகே, பல்லவ அரசராக சிலகாலம் இருந்து, பிறகு புத்த மதத்தைத் தழுவியவதால்  புத்தமதத்தை தழுவி தனியேறாகத் தன் நாட்டை விட்டு சென்றவர்.  புத்த மத குருவாக மாறியபிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மா அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது. 

சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். சீனா என்பது ஆதியிலிருந்தே ஒரே மொழியையும் ஒரே இனத்தையும் உடைய நாடு. எனவேசீன வரலாற்று சுவடிகளில் எழுதி வைக்கப்பட்டுள்ள இந்த வரலாற்றை நாம் உறுதியாக நம்பலாம். (பொய்யை சொன்னாலும் பொருத்தமாக சொல்லவேண்டும். வீரம் என்றால் என்ன வென்றே அறியாதவர்களை யெல்லாம் மாவீரர்களாக  சித்தரிக்கின்ற போலி வரலாற்று ஆசிரியர்கள் போதி தர்மரை பற்றி எழுதும் போது இவரை ஒரு தமிழன் என்று கூட குறிப்பிடாமல் தென் இந்தியன் என்று மட்டும் குறிப்பிடுவது அவர்களுடைய கயமை குணத்தை நிரூபிக்கிறது. சிலர், இவரை தென் இந்தியாவிலிருந்து சென்ற பிராமண துறவி என்று கூட எழுதிவைத்துள்ளார்கள்.)

இவர் கற்பித்த கலைகளின் நூல்களை ஆய்வுசெய்து பார்த்தால், நமது சித்தர்கள் கற்பித்த போர்க்கலைகளின் முன்வடிவு பயன்படுத்தப்பட்டிருப்பதை காணமுடியும். மன்னர் வம்சத்தில் பிறந்தவர்களுக்கு அவைகள் காலம் காலமாக பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. (இதுவே, அகத்தியர் முதலான வர்மக்கலையை தோற்றுவித்த சித்தர்கள் அதற்கும் முற்ப்பட்ட காலத்தை சேர்ந்தவர்கள் என்பதற்கும் ஆதாரமாகும்.) 

போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்.

போதிதர்மரின் போர்க்கலை - சீன வர்மம்
இன்றைய கட்டத்தில் போதிதர்மரைப்பற்றி அறிந்துகொள்ள தமிழ் உலகு பெரும் விருப்பம் கொண்டுள்ளது இதில் தமிழ் நாட்டில் வர்மம் சாஸ்திரம் எனப்படும் மருத்துவ போர்க்கலையின் சீன வடிவம், அதாவது போதிதர்மர் சீன தேசத்தில் கற்பித்த வர்ம சாஸ்திரம்

"DIM MAK - டிம் மாக்" என்பதுவே சீன மொழியில் வர்ம சாஸ்திரத்தின் பெயராகும், இதன் அர்த்தம் "மரண அடி" என்பதாகும். புருஸ் லீயின் மரணம் கூட இளக்காமல் விட்ட வர்மத்தினால் ஏற்பட்ட மரணம் என்று கூட ஒரு கருத்து உண்டு.

வர்மத்தின் தத்துவம் என்ன?
சீன தத்துவத்தின் படி வர்மத்தின் அடிப்படை சீ (chi or ki) எனப்படுவது பிராண சக்தி. இந்த பிராண சக்தியானது உடலில் உள்ள கண்ணுக்குத் தெரியாத நரம்பு மண்டலங்களினூடாக உடல் முழுவதும் பரவி உடலை வலுவூட்டுகின்றது. இவை மெரிடியன்கள் என அழைக்கப்படும். சீன மருத்துவ கொள்கையின் படி (நமது சித்த வைத்திய, தாந்திர யோக கொள்கையின் படியும்) நோய் என்பது இந்த பிராண ஓட்டத்தில் ஏற்படும் தடையாகும். இதனை சீர்செய்வதற்கு பாவிக்கப்படும் உத்திகளே அக்குபிரசர், அக்குபஞ்சர் போன்றவை. இவை இந்த அடிப்படையின் நல்வடிவங்கள்! டிம் மாக் அல்லது மரண அடி இதன் தீய வடிவமாகும்.

நவீன விஞ்ஞானத்தின்படி இந்தப்புள்ளிகள் நரம்புகளில் இணைப்பு (Junction Points) பகுதியாகும், அத்துடன் நரம்பியல் ரீதியாக அவை உடலின் உள் அங்கங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவை சேத முறும் போது அவற்றின் விளைவுகள் நேரடியாக அவைகளின் மூலமாக செயல்படும் அங்கங்களை பாதிக்கச் செய்து மரணத்தை ஏற்படுத்துகிறது.

பாதிப்பை ஏற்படுத்துவதற்கு குறித்த இடத்தில் ஏற்படும் அடியின் வேகத்தின் அளவு முக்கியமானதாகும், இதனை தமிழ் வர்மசாஸ்திரத்தில் மாத்திரை அளவு என்பார்கள், மாத்திரை அளவு அதிகமானால் வர்மம் மிகவும் ஆபத்தானது. மருத்துவத்தால் குணப்படுத்த முடியாமலும் போகலாம்.

இந்த முறை சீன போர்க்கலையில் இறுதி நிலையில் கற்றுக்கொடுக்கப்படும் ஒரு போர்முறையாகும். இனி இவற்றின் பிரிவுகளைப்பார்ப்போம்.

இந்த பகுப்பு தாக்குதலினையும், பாதிப்பு ஏற்படும் விதத்தினையும் கொண்டு பகுக்கப்பட்டுள்ள ஒருமுறையாகும். இதன் படி சீன வர்மம் மூன்று வகையான தாக்குதல் முறையினைக் கொண்டுள்ளது.

1. Tien Ching - நரம்பு முனைகளை தாக்குதல்
2. Tien Hsueh - இரத்த நாளங்களைத் தாக்குதல்
3. Tien Hsing Chi - Chi எனப்படும் பிராண சக்தி மையங்களைத் தாக்குதல்.