Showing posts with label விதை உற்பத்தி. Show all posts
Showing posts with label விதை உற்பத்தி. Show all posts

Monday, November 28, 2016

அமெரிக்காவிற்கு பறக்கும் பெரியகுளம் முருங்கை விதை

பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லுாரி முருங்கை விதையை, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அதிகளவில் வாங்கிச்செல்கின்றனர்.
பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், குறுகிய காலத்தில் அதிக மகசூல் தரக்கூடிய வகையில் ஓராண்டு பயிராக செடிமுருங்கை ரகங்களை உருவாக்கி, 5 ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ளது.
இந்த செடிமுருங்கையின் இலைகள், பூக்கள் மற்றும் காய்களில் புரதம், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ‘ஏ’ மற்றும் ‘சி’ போன்றவை அடங்கியுள்ளன. இதனால் செடி முருங்கைக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரியில் பி.கே.எம் 1 என்ற ரகத்தை சேர்ந்த செடி முருங்கையின் விதைகள் விற்பனைக்கு உள்ளன. 100 கிராம் ரூ.300 க்கு விற்கப்படும் இந்த விதைகள் அனைத்து வகையான மண்ணிற்கும் ஏற்றதாக உள்ளன. இந்த ரக முருங்கை செடிகளில் இருந்து160 முதல் 170 நாட்களில் காய்களை அறுவடை செய்யலாம். ஒரு செடியிலிருந்து ஆண்டுக்கு சுமார் 275 காய்கள் கிடைக்கும். இவற்றின் எடை 33 முதல் 35 கிலோ வரை இருக்கும்.

இச்செடி முருங்கையை மறுதாம்பு பயிராக 3 ஆண்டுகள் வரைப் பராமரிக்கலாம்.முருங்கை விதைகளில் இருந்து எடுக்கப்படும் ‘பெண் ஆயில்’ என்ற எண்ணெய், முருங்கை இலைப்பொடி உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் செடி முருங்கை விதைகளை ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும், அமெரிக்கா, அரபு நாடுகளிலும் பயிரிட அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.இத்தகவலை கல்லுாரி முதல்வர் பாலமோகன், பேராசிரியை கீதா தெரிவித்துள்ளனர். முருங்கை விதை தேவைக்கு 04546231726 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Wednesday, March 18, 2015

விவசாயிகள் தரமான விதைகளை கண்டறிவது வாங்குவது எப்படி?


தரமான விதைகளை கண்டறிந்து பயிரிடும் போது தான் எதிர்பார்த்த மகசூலை பெற முடியும். இதற்கு, நிர்ணயிக்கப்பட்ட சில காரணிகளை கொண்டு நடவுக்கு தேர்வு செய்யப்படும் விதைகளின் தரத்தை விவசாயிகள் கண்டறிய முடியும். சாகுபடிக்கு பிரிக்கப்படும் விதைகளில் காணப்படும் முளைப்புத்திறன், புறத்தூய்மை, இனத்தூய்மை, ஈரப்பதம் மற்றும் விதை நலம் என்பதே அந்த காரணிகளாகும். இந்த காரணிகளை வைத்து தான் தரமான விதைகள் என்பது நிர்ணயம் செய்யப்படுகிறது. இவற்றை பற்றி பார்க்கலாம்.




முளைப்புத் திறன்
விவசாயிகள் பொதுவாக அதிகம் மகசூல் தரும் முளைப்புத் திறன் கொண்ட விதைக்காரணியையே பெரிதும் விரும்புகின்றனர். இவற்றையே சார்ந்தும் உள்ளனர். ஒரு விதைக்குவியலின் முளைப்புத்திறன் 98 சதவீதமோ அல்லது அதற்கும் அதிகமானதாக இருந்தால் அந்த விதைகளின் விலை மதிப்பு அதிகமானதாக இருக்கும். ஆனால் அதே சமயத்தில் விதைப்புக்கு குறைவான எண்ணிக்கையே போதுமான விதைகளாகவும், முளைப்புத்திறன் அதிகமும் உள்ள விதைகள் அதிக மகசூலை கொடுக்கின்றன. முளைப்புத்திறனை வைத்து விதைகளின் தரத்தை நிர்ணயிப்பதால் ஒவ்வொரு விதைக்கும் அதற்கான குறிப்பிட்ட முளைப்புத் திறன் பரிந்துரைக்கப்படுகிறது. விதைகளை விற்கும் போது அந்த விதையின் குறைந்த பட்ச முளைப்பு திறனை அட்டையில் குறிப்பிட்டிருப்பார்கள். அதன்படி, நெல்லுக்கு 80 சதவீதம், மக்காச்சோளதிற்கு 80, கம்பு பயிர் 75 , கேழ்வரகு 75, பருத்தி65, எள் 80 , தக்காளி 70 , வெண்டை 65 , கத்தரி 70, மிளகாய் 60 சதவீதமும் முளைப்பு திறன் கொண்டிருக்க வேண்டும்.



புறத்தூய்மை
பொதுவாக அறுவடை செய்யப்பட்ட பின்பு அந்த விதைகளில் கல், மண் மற்றும் பிற பயிர் விதைகள் கலந்திருக்கும். இவைள் அனைத்தும் விதைகளின் புறத்தூய்மையை பாதிக்கும். எனவே விவசாயிகள் விதைகளை வாங்கும் போது அதில் குறிப்பிட்டிருக்கும் புறத்தூய்மையின் மதிப்பு அளவை பார்த்து தான் வாங்க வேண்டும். சில குறிப்பிட்ட விதைகளின் புறத்தூய்மை அளவுகளை பார்க்கலாம். நெல் என்றால் அதன் புறத்தூய்மை அளவு 98 சதவீதம் இருக்க வேண்டும். இதே போல் மக்காச்சோளத்திற்கு 98, சோளம் 98, கம்பு 98, கேழ்வரகு 97, பருத்தி 98, பயறு வகைகள் 98, நிலக்கடலை 97, எள் 97, சூரியகாந்தி 98, ஆமணக்கு 98, தக்காளி 98, வெண்டை 99, கத்தரி 98, மிளகாய் 98 சதவீதம் என்ற அளவுகளில் இருக்க வேண்டும்.

இனத்தூய்மை
விதைகளை விற்பனை செய்வதற்கு முன்பு அந்த விதைகளின் இனத்தூய்மையை ஆய்வு செய்த பின்னரே விற்பனை செய்ய வேண்டும். இனக்கலப்படம் உள்ள விதைகளால் மகசூல் பெரிதும் பாதிக்கப்படும். உதாரணமாக அதிக வாழ்நாள் கொண்ட ரக விதையும், குறுகிய வாழ்நாள் கொண்ட ரக விதையும் ஒரு விதைக்குவியலில் கலந்திருக்கலாம். இதை விதைக்கும் விவசாயிகள் திகைத்து போவார்கள். இந்த இரண்டு ரகமும் மாறுபட்ட காலங்களில் பூ பூக்கும். இதனால் ஒரே சமயத்தில் பயிரை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிப்படைவார்கள். எனவே, ஒரு விதைகளை வாங்கும் போது அந்த விதைகள் குறைந்த பட்ச இனத்தூய்மையை கொண்டுள்ளதா என்று சான்று அட்டையை பார்த்து வாங்க வேண்டும். ஒவ்வொரு விதைக்குரிய அதிகபட்ச பிற ரக விதைகளின் கலப்பை இங்கே பார்க்கலாம். நெல்லுக்கு ஆதாரநிலையில் ஒரு கிலோ விதையில் 10 மற்றும் சான்று நிலையில் 20 என்ற எண்ணிக்கையில் கலப்பு விதைகளின் அளவு இருக்கலாம். இதே போல் மக்காச் சோளத்திற்கு ஆதார நிலையில் 10 மற்றும் சான்று நிலையில் 20, சோளம் 10 மற்றும் 20, பயறு வகைகள் ஆதார நிலையில் கிலோவுக்கு 10 மற்றும் சான்று நிலையில் 20,எள் பயிரில் ஆதார நிலையில் 10 மற்றும் சான்று நிலையில் 20 என்ற எண்ணிக்கையிலும், கம்பு, கேழ்வரகு, பருத்தி, நிலக்கடலை, தக்காளி, கத்தரி, சூரியகாந்தி போன்றவை கலப்பு இன்றியும் இருக்க வேண்டும்.



விதை ஈரப்பதம்
விதைகளின் தரமும், சேமிப்பு தன்மையும் அந்த விதைகளின் ஈரப்பதத்தை பொறுத்தே அமைகின்றன. எனவே, விதையின் ஈரப்பதத்தில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் அது விதையின் தரத்தை பெரிதும் பாதிக்கிறது. விதையின் ஈரப்பதம் பயிருக்கு பயிர் மாறுகிறது. உதாரணமாக, நெல் விதைகளை 13 சதவீதம் ஈரப்பதத்திலும், கம்பு, சோளம், மக்காச்சோளம் மற்றும் தானிய விதைகளை 12 சதவீதம் ஈரப்பதத்திலும், பருத்தி, வெண்டை மற்றும் தீவனப்பயிர் விதைகளை 10 சதவீதம் ஈரப்பதத்திலும், நிலக்கடலை, சூரியகாந்தி, சணப்பு ஆகியவற்றை 9 சதவீதம் ஈரப்பதத்திலும் காற்று புகாத பைகளில் சேமிக்கலாம். 

தரமான விதை தென்னை எடுக்கும் வழிமுறைகள்


நல்ல மகசூல் தரக்கூடிய தென்னை மரங்களை தாய் தென்னைமரம் என்கிறோம். இந்த தாய் தென்னை மரங்களை தோட்டத்தில் வளர்ப்பதன் மூலம் தொடர்ந்து விதை எடுத்து புதிய தென்னை கன்றுகளை உருவாக்க முடியும். நல்ல தரமான தாய் மரங்களில் இருந்து விதை எடுக்க விரும்பும் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி பார்க்கலாம். 



தென்னையில் ரகங்கள்
தென்னையில் நெட்டை, குட்டை என்ற இரண்டு ரகங்கள் இருந்த போதிலும், இந்த இரண்டு ரகங்களிலும் மாறுபட்ட அளவில் காய்க்கும் குணமுடைய வகை தென்னைகள் உள்ளன. உதாரணமாக ஜாவாத் தீவில் ஜாவா நெட்டை மற்றும் ஜாவா ஜயண்ட் என்ற ரகங்கள் உள்ளன.  இதில் ஜாவா நெட்டை ரகம் என்பது நாம் சாதாரணமாக காணும் நெட்டை தென்னை போல் காய்கள் காணப்படும். ஆனால் ஜாவா ஜயண்ட் ரகம் என்பது சாதாரண நெட்டை தேங்காயை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு பெரிய காய்கள் கொண்ட ரகமாகும். பருப்பின் கனமும் அதிகமாக இருக்கும். இந்த பருப்பில் 71 சதவீதம் எண்ணெய் பதம் காணப்படுகிறது. 

ஜாவா ஜயண்ட் வகை மரங்களில் ஒரு பூம்பாளையில் 8 முதல் 10 காய்கள் மட்டுமே காணப்படும். இது போன்று அந்தமான் சாதா நெட்டை, அந்த மான் ஜயண்ட் என இரண்டு ரகங்களும் உள்ளன. பிலிப்பைன்ஸ் நாட்டு ரக தேங்காயில் காய் பெரியதாகவும், பருப்பு அதிக கனத்துடனும் காணப்படும். இந்தியாவை பொறுத்த மட்டில் இங்கு மேற்கு கடற்கரை நெட்டை, கிழக்கு கடற்கரை நெட்டை என இரண்டு ரகங்கள் உள்ளன. இதில் மேற்கு கடற்கரை நெட்டை நன்கு தடித்து பருமனாகவும், கொண்டை பெரிதாகவும் இருக்கும். ஒரே காலத்தில் 12 முதல் 13 பூம்பாளைகள் காணப்படும். ஒரு ஆண்டில் 80 முதல் 100 காய்கள் காய்க்கும். இது கேரளா பகுதியில் அதிகம் காணப்படுகிறது. ஆந்திரா, ஓரிசா மற்றும் தமிழகத்தின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள மரங்களை கிழக்கு கடற்கரை நெட்டை என்று அழைக்கிறோம். இதன் பருமன், கொண்டை மற்றும் ஓலைகளின் நீளம் சற்று சிறுத்து காணப்படுவதுடன் காயின் பருமனும் சற்று குறைந்து காணப்படும். இந்த வகை மரங்கள் ஆண்டுக்கு 100முதல் 120 காய்கள் வரை காய்க்கும். இது தவிர தமிழகத்தில் அதிக பருப்பு, பெரிய காய்கள் 13 முதல் 16 பூங்குலைகள் உடைய ஈத்தாமொழி நெட்டை, ஐயம்பாளையம் நெட்டை மற்றும் நடுத்தர காய்களை கொண்ட திப்பத்துர் வகை மரங்களும் உள்ளன.

இது போன்று இளநீர் ரகம் எனப்படும் குட்டை ரகங்களும் உள்ளன. இதில் பச்சை, மஞ்சள், சிவப்பு நிறமுடைய காய்கள் தரும் தனி மரங்கள் காணப்படும். இந்த குட்டை ரகத்தில் பெரிய காய்களை உடைய மலேசிய வகையும், சிறிய காய்களை உடைய சாவக்காடு குட்டை வகையும் உள்ளன. 

தாய் மரங்கள் தேர்வில் கவனிக்க வேண்டியவை
தாய் மரங்களை தேர்வு செய்யும் போது அவை நோய் தாக்குதல் இல்லாததாகவும், சரியான வயதுடையவையாகவும் இருத்தல் வேண்டும். இலையழுகல், இலைப்புள்ளி, இலைக்கருகல் மற்றும் கேரளா அல்லது தஞ்சை வாடல் நோய் இல்லாத மரங்கள் விதை எடுக்க ஏற்றவை. பொதுவாக, தஞ்சை வாடல் நோய் தாக்கப்பட்ட மரங்களின் திசுக்களில் கானோடெர்மாலுசிடம் என்ற பூசாண இழைகள் காணப்படும். இந்த நோய்களில் உள்ள கிருமிகள் மற்றும் பூசாணங்கள் காய்களின் மூலம் கன்றுகளுக்கு பரவும் தன்மை உடையவை. இதனால் இந்த நோய் காணப்படும் மரங்களை தாய் மரங்களாக தேர்வு செய்யக்கூடாது. இலைப்புள்ளி, இலைக்கருகல் மற்றும் குருத்தழுகல் போன்ற பூசாண நோய்களால் மரங்கள் தாக்கப்படுகின்றன. ஆனால் தோப்பில் ஒரு சில மரங்கள் இந்த நோயினால் தாக்கப்படுவதில்லை. ஆனால் அதே தோப்பில் வேறு பல மரங்கள் இந்த நோயினால் தாக்கப்படுவதில்லை. இந்த வகை எதிர்ப்பு திறனுள்ள மரங்களை தேர்வு செய்ய வேண்டும்.

வயது
விதைக்காக மரங்களை தேர்வு செய்யும் போது அவற்றின் வயதும் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். அதாவது, நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் நன்றாக காய்க்க தொடங்கிய பல நூறு மரங்களிலிருந்து விதைகளை தேர்வு செய்வது நல்லது. ஆனாலும் சாதாரணமாக காய்க்கின்ற ஒரு சில மரங்களின் ஒரே பூங்குலையில் 70 காய்களும், மீதமுள்ள மற்ற குலைகளில் 5 அல்லது 10 காய்களும் மட்டுமே காய்ப்பதை காண முடியும். இது போன்ற மரங்களிலிருந்து விதை தேங்காய் தேர்வு செய்து கன்றுகளை நட்டால் சீரான காய்ப்பு திறன் இருக்காது. சீரான காய்ப்பு திறனை கண்டறிய சில வழி முறைகள் உள்ளன. உதாரணமாக, விஞ்ஞானிகள் 3 ஆண்டு சராசரி விளைச்சலின் அடிப்படையில் மேற்கு கடற்கரை நெட்டை வகையின் திறன் சராசரி 80 முதல் 100 காய்கள் எனவும், கிழக்கு கடற்கரை நெட்டை வகை 100 முதல் 120 காய்கள் எனவும் கண்டறிந்துள்ளனர். இதற்கடுத்து பல்வேறு தாய்மரங்களை ஒப்பிட்டு பார்த்து அவற்றின் முளைப்பு திறன் மற்றும் வீரிய கன்றுகள் உருவாகும் திறன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தாய்மரங்களை தேர்வு செய்ய வேண்டும். 

இது தவிர காய் முளைக்கும் போது உருவாகும் கன்றுகளின் வளர்ச்சி, வீரியம் ஒரே சீராக இருத்தல் அவசியம். ஒரு சில தாய் மரங்களில் இருந்து எடுக்கப்படும் விதை தேங்காயிலிருந்து உருவாகும் கன்றுகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமான வளர்ச்சி வீரியத்துடன் காணப்படுவது இயல்பு. ஆகவே நல்ல முளைப்பு திறன் மற்றும் ஒரே சீரான வளர்ச்சி வீரியம் ஒருங்கிணைந்த குணங்கள் உடைய கன்றுகளை தரும் மரங்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டும்.

Friday, March 6, 2015

இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி


மஞ்சளில் விதை தேர்வு
[நிலத்தின் தன்மை மற்றும் தட்பவெப்பநிலை இவற்றைப் பொருத்து நல்ல மஞ்சள் ரகங்களை விதைக்காகத் தேர்வு செய்ய வேண்டும். இயற்கைமுறையில் தேர்வு செய்த விதைகள் நல்லது. விரலி மஞ்கள் அல்லது கிழங்கு(குண்டு) மஞ்சளை விதையாகப் பயன்படுத்தலாம். ஒரு ஏக்கர் நடவு செய்ய 600-800 கிலோ மஞ்சள் தேவை.

விதை நேர்த்தி
மஞ்சளை அறுவடை செய்தவுடன் செதிள் பூச்சி மற்றும் பூஞ்சணம் தாக்காதவாறு விதை நேர்த்தி செய்ய வேண்டும். மஞ்சளை நடுவதற்கு முன்பும் விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதனால் விதை முளைப்புத் திறன் நன்கு இருக்கும். பூச்சி மற்றும் பூஞ்சாணத் தாக்குதல் இருக்காது.
அறுவடை செய்தவுடன் விதை நேர்த்தி
(600-800 கிலோ விதை மஞ்சளுக்கு)ஆவூட்டம் (பஞ்சகவ்யம்) – 2 – 5 லிட்டர் (தயாரிப்புமுறை குறிக்கப்பட்டுள்ளது)சூடோமோனஸ்- 1- 2 கிலோதண்ணீர் – தேவையான அளவுஇவற்றை நன்கு கலக்கி விதை மஞ்சள் நன்கு மூழ்குமாறு 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் விதை நேர்த்தி செய்த மஞ்சளை நிழலில் உலர வைத்து பின்னர் பாதுகாப்பான இடத்தில் வெப்பம் மற்றும் தண்ணீர் புகா வண்ணம் சேமிக்க வேண்டும். மஞ்சள் நடவு செய்வதற்கு முன்பாக மற்றுமொருமுறை விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

Thursday, March 5, 2015

கத்திரி விதை உற்பத்தி

பருவம் :பிப்ரவரி -மார்ச், ஜூன்-ஜூலை அல்லது அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நாற்று விடலாம்.
இரகங்கள் :கோ1. எம் . டி. யூ.1. அண்ணாமலை 1. கோ2. பி.கே. எம் 1.பாலுர் 1. பூசா ஊதா நீளம்
விதையளவு : 450 கிராம்/ஹெக்டேர்,  நாற்றுகளின் வயது : 30 – 35 நாட்கள்
உர அளவு: இடு உரமாக தழை, மணி, சாம்பல் சத்து ஹெக்டேருக்கு 50:75:75 கிலோ கிராம், மேலுரமாக 50 கிலோ தழைச் சத்து இடவேண்டும் . காய்கள் மற்றும் விதைகள் உற்பத்தியை மேலும் அதிகரிக்க 2சத டி.ஏ.பி அல்லது NAA 50  PPm 65, 75 மற்றும் 85 வது நாட்களில் இலைகளின் மேல் தெளிக்க வேண்டும்.

வயல் தரம் பராமரித்தில்:
விதைப்பயிரில் களைகள், பிற இரகச் செடிகளின்  கலப்பு விதை மூலம் பரவும் நோய்களின் செடிகள் ஆகியவற்றைக் கண்டறிந்து  நீக்கி விட வேண்டும். கீழ் கண்ட வயல் தரத்தைப் பராமரிக்க வேண்டும்.
வயல் தரம்                ஆதாரவிதை  சான்று விதை
பயிர்விலகு து¡ரம்        – 200மீட்டர்    – 100 மீட்டர்
கலவன்கள்                    – 0.10%      – 0.20%
நோய் தாக்கிய செடிகள்        – 0.10%     – 0.50%

அறுவடை :
பூ, பூத்து 40-45 நாட்களில் கத்திரி பழங்கள் மஞ்சள்  நிறமாக மாறி வரும். பழம் முழுவதும் மஞ்சள் நிறமானதும் அறுவடைசெய்ய வேண்டும். முதல் 8-10 பறிப்புகளை மட்டும் விதைக்குப் பயன்படுத்த வேண்டும்.
விதை பிரித்தெடுத்தல்:
பழங்களைச் சிறிது சிறிதாக நறுக்கி தண்ணீர் ஊற்றிப் பிசைந்து விதைகளை எடுத்த விடலாம்.  இதைவிட பிசைந்த பழங்களுக்குள் அடர் ஹைட்டோகுளோரிக் அமிலத்தை ஒரு கிலோ பழத்திற்கு 30 மில்லி என்ற விகிதத்தில் சேர்த்து 20 சிமிடங்கள் வரை நன்கு கலக்கி பின்பு தண்ணீர் ஊற்றி நான்கு அல்லது ஜந்து முறை நன்றாகக் கழுவி விதைகளைப் பிரித்தெடுக்கலாம். ஒரு ஹெக்டேருக்கு 200-3000  கிலோ விதை மகசூல் கிடைக்கும்.
உலரவைத்தல்: பிரித்த விதைகளை உடனே காய வைத்தல் வேண்டும். சூரிய வெப்பத்தில் உலர வைக்கும்போது விதைகளை தரையிலிருந்து 15 செ.மீ உயரத்திலிருக்கும் படி அடிப்பாகம் சல்லடையான தட்டுக்களில் விதைகளை பரப்பி உலர வைக்க வேண்டும்.
தரம் உயர்த்தல்: விதைகளை 5/ 64 அளவு கொண்ட சல்லடை மூலம் தரம் பிரிக்கலாம்.
விதைத்தரம்: விதைச் சான்றளிப்புக்கு து¡சி அதிக பட்சம் இரண்டு சதம். பிற பயிர் மற்றும் களை விதைகள் ஈரப்பதம் அதிகபட்சம் 8 சதம் இருக்க வேண்டும்.