![](http://suttons.s3.amazonaws.com/p/VEAUB22916_3.jpg)
பருவம் :பிப்ரவரி -மார்ச், ஜூன்-ஜூலை அல்லது அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நாற்று விடலாம்.
இரகங்கள் :கோ1. எம் . டி. யூ.1. அண்ணாமலை 1. கோ2. பி.கே. எம் 1.பாலுர் 1. பூசா ஊதா நீளம்
விதையளவு : 450 கிராம்/ஹெக்டேர், நாற்றுகளின் வயது : 30 – 35 நாட்கள்
உர அளவு: இடு உரமாக தழை, மணி, சாம்பல் சத்து ஹெக்டேருக்கு 50:75:75 கிலோ கிராம், மேலுரமாக 50 கிலோ தழைச் சத்து இடவேண்டும் . காய்கள் மற்றும் விதைகள் உற்பத்தியை மேலும் அதிகரிக்க 2சத டி.ஏ.பி அல்லது NAA 50 PPm 65, 75 மற்றும் 85 வது நாட்களில் இலைகளின் மேல் தெளிக்க வேண்டும்.
வயல் தரம் பராமரித்தில்:
விதைப்பயிரில் களைகள், பிற இரகச் செடிகளின் கலப்பு விதை மூலம் பரவும் நோய்களின் செடிகள் ஆகியவற்றைக் கண்டறிந்து நீக்கி விட வேண்டும். கீழ் கண்ட வயல் தரத்தைப் பராமரிக்க வேண்டும்.
வயல் தரம் ஆதாரவிதை சான்று விதை
பயிர்விலகு து¡ரம் – 200மீட்டர் – 100 மீட்டர்
கலவன்கள் – 0.10% – 0.20%
நோய் தாக்கிய செடிகள் – 0.10% – 0.50%
அறுவடை :
பூ, பூத்து 40-45 நாட்களில் கத்திரி பழங்கள் மஞ்சள் நிறமாக மாறி வரும். பழம் முழுவதும் மஞ்சள் நிறமானதும் அறுவடைசெய்ய வேண்டும். முதல் 8-10 பறிப்புகளை மட்டும் விதைக்குப் பயன்படுத்த வேண்டும்.
விதை பிரித்தெடுத்தல்:
பழங்களைச் சிறிது சிறிதாக நறுக்கி தண்ணீர் ஊற்றிப் பிசைந்து விதைகளை எடுத்த விடலாம். இதைவிட பிசைந்த பழங்களுக்குள் அடர் ஹைட்டோகுளோரிக் அமிலத்தை ஒரு கிலோ பழத்திற்கு 30 மில்லி என்ற விகிதத்தில் சேர்த்து 20 சிமிடங்கள் வரை நன்கு கலக்கி பின்பு தண்ணீர் ஊற்றி நான்கு அல்லது ஜந்து முறை நன்றாகக் கழுவி விதைகளைப் பிரித்தெடுக்கலாம். ஒரு ஹெக்டேருக்கு 200-3000 கிலோ விதை மகசூல் கிடைக்கும்.
உலரவைத்தல்: பிரித்த விதைகளை உடனே காய வைத்தல் வேண்டும். சூரிய வெப்பத்தில் உலர வைக்கும்போது விதைகளை தரையிலிருந்து 15 செ.மீ உயரத்திலிருக்கும் படி அடிப்பாகம் சல்லடையான தட்டுக்களில் விதைகளை பரப்பி உலர வைக்க வேண்டும்.
தரம் உயர்த்தல்: விதைகளை 5/ 64 அளவு கொண்ட சல்லடை மூலம் தரம் பிரிக்கலாம்.
விதைத்தரம்: விதைச் சான்றளிப்புக்கு து¡சி அதிக பட்சம் இரண்டு சதம். பிற பயிர் மற்றும் களை விதைகள் ஈரப்பதம் அதிகபட்சம் 8 சதம் இருக்க வேண்டும்.
![](http://static.squarespace.com/static/53f2223ee4b0516cd60b393d/53f36841e4b08b35065b992f/53f3685ee4b08b35065ba044/1381246242000/bryaneggplantseeds1.jpg?format=original)
No comments:
Post a Comment