நியூ கேசில் நோய் அல்லது ராணிக்கெட் நோய்
நோயின் தன்மை
Depression | Diarrhoea | Mortality |
- நியூகேசில் நோய் கோழிகளைத் தாக்கக்கூடிய வைரஸால் ஏற்படும் தொற்று நோயாகும். இந்நோய் விரைவில் பரவக்கூடியதும், சுவாச மற்றும் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நோயாகும்.
- முதலில் சுவாச மண்டல நோயாக வெளிப்பட்டு,பிறகு கோழிகளில் நரம்பு மண்டலக் கோளாறுகள், கழிச்சல் ஏற்படுத்தும் நோயாகும். கழிச்சல் இந்நோயின் பிரதான அறிகுறியாகும்.
- கோழிகள் இந்நோயினால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. ஆனால் தண்ணீரில் வளரும் கோழியினங்கள் குறைவாக பாதிக்கப்படுகின்றன.
நோய்க்கான காரணங்கள்
Contamination of water
|
Infected chicken
|
Paramyxovirus
|
- பாராமிக்சோ வைரஸ் 1
- கோழிகளில் ஏற்படும் நோய்த் தாக்குதலைப் பொறுத்து நியூகேசில் நோயினை விசரோடிராப்பிக் வீலோஜெனிக் (அதிக வீரியம்), நியூரோடிராப்பின் வீலோஜெனிக், மீசோஜெனிக் (நடுத்தர வீரியம்), லென்டோஜெனிக் (குறைவான வீரியம்) மற்றும் நோய் அறிகுறிகள் வெளிப்படுத்தாத நிலை.
- பல்வேறு இயற்பியல் (வெப்பநிலை, ஒளி, அமில காரத்தன்மை ) மற்றும் இரசாயனப் பொருட்கள் (பொட்டாசியம் பர்மாங்கனேட், ஃபார்மலின், எத்தனால் போன்றவை) இந்த வைரஸை கொல்லக்கூடிய திறன் படைத்தவை.
- புகை மூட்டுவதன் மூலம் கட்டிடங்கள் மற்றும் குஞ்சு பொரிப்பகங்களில் இந்த வைரஸைக் கொல்வதற்கு உபயோகப்படுத்தலாம்.
- இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகள் இந்நோய்க்கிருமியைப் பரப்புவதல் முதன்மையாக இருக்கின்றன.
- நோய் அறிகுறிகள் வெளிப்படுவதற்கு முன்பாகவும், நோய் அறிகுறிகளை வெளிப்படும் போதும், இந்த வைரஸ் கோழிகளின் எச்சம், சளி போன்றவற்றில் வெளியேறும். ஆனால் நோயினால் குணமடையும் போது குறைவான அளவு வைரஸை மட்டுமே கோழிகள் வெளியேற்றும்.
- நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளின் மூச்சுக் காற்று, மூக்கிலிருந்து வெளியேறும் சளி, எச்சம் போன்றவற்றின் வழியாக இந்த வைரஸை வெளியேற்றுவதால் தீவனம் மற்றும் தண்ணீர் போன்றவை இந்நோய்க்கிருமியால் மாசடையும்.
- மூச்சுக் காற்று வழியாகவும், வாய் வழியாகவும் இந் நோய்க்கிருமி கோழிகளின் உடலுக்குள் செல்லும்.
- நோய் அறிகுறிகளைக் கோழிகள் வெளிப்படுத்தும் போது முட்டையிலும், இறந்த கோழிகளின் உடலிலும் இந் நோய்க்கிருமி அதிக அளவு இருக்கும்.
- வனப் பறவைகள், செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் பறவைகள், மனிதர்களின் நடமாட்டம், கோழிப்பண்ணை உபகரணங்கள், கோழிகளால் உற்பத்தி செய்யப்படும் முட்டை, இறைச்சி போன்ற பொருட்களும் நோய்க்கிருமியினைப் பரப்புவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.
- மனிதர்களின் சுவாச மண்டலத்தின் வெளிச்சவ்வில் இந்த வைரஸ் நீண்ட நாட்களுக்கு வாழும் தன்மையுடையது.
நோய் அறிகுறிகள்
Cyanosis of comb
|
Proventriculus petechial haemorrhages
|
Twisting and paralysis of neck and legs
|
- கழுத்து சுழற்றிக்கொள்ளுதல், இறக்கைகள் மற்றும் கால்கள் செயலிழத்தல்
- கொண்டை நீல நிறமாக மாறுதல்
- முக வீக்கம்
- கழிச்சல்
- முட்டை உற்பத்தி குறைதல்
- திடீரென ஏற்படும் இறப்பு
இறந்த கோழிகளில் காணப்படும் நோய் பாதிப்புகள்
- குடலில் இரத்தக்கசிவு
- இரைப்பையில் இரத்தத்திட்டுகள்
- சுவாச மண்டலத்தில் முக்கியமாக மூச்சுக்குழல் சிவந்து சளி கட்டிக் காணப்படுதல்.
நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல்
- தடுப்பூசி போடுவது, முறையான மேலாண்மை, உயிர்ப்பாதுகாப்பு முறைகள் மூலம் நோய் வருவதைத் தடுக்கலாம்.
- லசோட்டா, எஃப், பி 1 போன்ற லென்டோஜெனிக் வைரஸ் தடுப்பூசிகள், மீசோஜெனிக் தடுப்பூசிகளான எச், ஆர் 2 பி, முக்தேஷ்வர் போன்றவற்றை பயன்படுத்தி கோழிகளில் ராணிக்கெட் நோய்க்கெதிராக எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
- ஆரோக்கியமான கோழிக்குஞ்சுகளை அவற்றின் முதல் 1-4 நாள் வயதில் இந்நோய்க்கு எதிராகத் தடுப்பூசி அளித்து நோய் வராமல் தடுக்கலாம்.
- லென்டோஜெனிக் தடுப்பூசியினை கண் வழியாகவோ அல்லது மூக்கு வழியாகவோ முதல் தடுப்பூசியாக அளிக்கலாம்.
- மீசோஜெனிக் தடுப்பூசிகள் தோலுக்கடியிலோ அல்லது சதை வழியாகவோ 6-8 வார வயதில் இரண்டாம் தடுப்பூசியாகக் கொடுப்பதால் கோழிகள் நீண்ட காலத்திற்கு இந்நோய்க்கெதிரான எதிர்ப்பு சக்தியைப் பெறுகின்றன.
- செயலிழக்கப்பட்ட ராணிக்கெட் நோய் ஏற்படுத்தும் வைரஸ் உடன் எண்ணெய் கலந்த ரசாயனத்தைச் சேர்த்து நோய்த்தாக்குதல் அதிகமுள்ள பகுதிகளில் கோழிகளுக்கு தோலுக்கடியிலோ அல்லது சதை வழியாகவோ கொடுக்கும் போது நீண்ட நாட்களுக்கு இந்நோய்க்கெதிரான எதிர்ப்பு சக்தி அவற்றின் உடலில் இருக்கும்.
- முட்டைக் கோழிகளுக்கான பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி அட்டவணை :
வயது
|
தடுப்பூசியின் பெயர்
|
அளிக்கப்படும் வழி
|
5
|
எஃப் அல்லது பி
|
கண் அல்லது மூக்கு வழியாக
|
27
|
லசோட்டா
|
தண்ணீரில்
|
52
|
லசோட்டா
|
தண்ணீரில்
|
64
|
ஆர்2பி
|
சதை வழியாக
|
112
|
லசோட்டா
|
தண்ணீரில்
|
280
|
லசோட்டா
|
தண்ணீரில்
|
- பண்ணை உபகரணங்களையும், பண்ணைக் கொட்டகை மற்றும் பண்ணையினைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொட்டாசியம் பர்மாங்கனேட் (1;1000) அல்லது சோடியம் ஹைட்ராக்சைடு (2%) அல்லது லைசால் (1;5000) போன்றவற்றைப் பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்து இந்நோய் வராமல் தடுக்கலாம்.
மேரக்ஸ் நோய்
நோயின் தன்மை
12-24 weeks of age chicken susceptible to Marek's disease
|
Contagious viral disease of poultry
|
Gallid herpes virus
|
- இந்நோய் கோழிகளைத் தாக்கக்கூடிய வைரஸ் மூலம் ஏற்படும் ஒரு கொடிய தொற்று நோயாகும். இந்நோயினால் தாக்கப்பட்ட கோழிகளில் நரம்பு வீக்கமும், உள் உறுப்புகள் வீக்கமும் ஏற்படும்.
- இந்நோய் ஒரு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நோயாகும்.
நோய்க்கான காரணங்கள்
Beetles
|
Droppings
|
Herpes virus
|
- இந்நோய் ஹெர்ப்பீஸ் வைரஸ் எனும் வைரஸால் ஏற்படுத்தப்படுகிறது.
- இந்த வைரஸ் கோழிக் கொட்டகைகளில் 370C வெப்பநிலையில் 24 மணி நேரம் உயிருடன் இருக்கும். மேலும் கோழிகளின் எச்சத்திலும், ஆழ்கூளத்திலும், கோழிப்பண்ணையிலுள்ள தூசுகள், இறகுகளின் வேர்ப்பகுதிகளிலும், கோழிகளின் தோலிலுள்ள பொடுகிலும் நீண்ட நாட்கள் உயிருடன் இருக்கும்.
- இறகுகளில் வேர்ப்பகுதியில் இந்த வைரஸ் முதிர்ச்சியடைந்து அவற்றிலிருந்து சுற்றுப்புறத்தில் வெளியேறும்.
- பொதுவான கிருமி நாசினிகள் இந்த வைரஸை 10 நிமிடத்தில் செயலிழக்கச் செய்து விடும்.
- இந்த வைரஸ் கோழிப்பண்ணையிலுள்ள ஆழ்கூளம் மற்றும் தூசுக்களில் பல மாதங்கள் வரை உயிரோடு இருக்கும். பொடுகு மற்றும் கோழிப்பண்ணையிலுள்ள தூசுகள் வழியாக இந்த வைரஸ் நன்றாகப் பரவும்.
- கோழிகளுக்கிடையே ஏற்படும் நேரடி மற்றும் மறைமுகத் தொடர்புகளாலும், காற்று வழியாகவும், இந்நோய்க்கிருமி எளிதில் பரவும்.
- கோழிப்பண்ணைகளிலுள்ள கோழிகள் இருக்கும் இடத்தில் இந்த வைரஸ் புதிதாக நுழைந்தால், கோழிகள் இந்நோய்க்கெதிராக எதிர்ப்பு சக்தி பெற்றிருந்தாலும் எளிதில் அவைகளுக்கிடையே பரவிவிடும்.
- இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகள் நீண்ட நாட்களுக்கு இந்த வைரஸை வெளியேற்றும் நோய் தாங்கிகளாகச் செயல்படும். தடுப்பூசி ஏற்கெனவே அளிக்கப்பட்டிருந்தாலும், பாதிக்கப்பட்ட கோழிகள் வெளியேற்றும் வைரஸின் அளவு குறையுமே தவிர வைரஸை வெளியேற்றுவது நிற்காது.
- உயிரற்ற பண்ணை உபயோகப் பொருட்கள், பண்ணையாட்கள், பூச்சிகள் வழியாகவும் இந்த வைரஸ் பரவும்.
- முட்டைகளின் வழியாக இந்த வைரஸ் பரவுவதில்லை.
- வணிக ரீதியாக வளர்க்கப்படும் கோழிப்பண்ணைகளில் மேரக்ஸ் நோயின் தாக்கம் வேறுபடும். இது வைரஸின் வகை, கோழிகளின் உடல் உள்ளே நுழையும் வைரஸின் அளவு, கோழிகளின் வயது, கோழிகள் தாய்க்கோழியிடமிருந்து பெற்ற மேரக்ஸ் நோய்க்கெதிரான எதிர்ப்பு சக்தி, பாலினம், மரபியல் குணநலன்கள், மற்ற நோய்களின் தாக்கம், சுற்றுப்புற சூழ்நிலைகள், அயற்சி போன்றவற்றால் நோயின் தாக்கம் வேறுபடும்.
நோயின் அறிகுறிகள்
Enlarged feather folliclees
|
Leg paralysis
|
Lymphoid tumours in internal organs
|
- இந்நோயானது இரண்டு விதங்களில் வெளிப்படுகிறது. ஒன்று தீவிர நிலை, மற்றொன்று கிளாசிக்கல் நிலை
- கோழிகளின் 12 வார வயதில் கோழிகளுக்கு கால் வலிப்பு ஏற்படுவது இந்நோயின் அறிகுறியாகும்.
- தீவிர நோய் நிலையில் கோழிகளின் உள் உறுப்புகளில் புற்று நோய்க் கட்டிகள் ஏற்படும்.
- பாதிக்கப்பட்ட கோழிகள் சோர்ந்து, இரத்த சோகை, பசியின்மை, எடை குறைதல், கழிச்சல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
- நான்கு வார வயதிலிருந்து இளங்கோழிகள் (பெரும்பான்மையான கோழிகள் 6-10 வாரம்) இந்நோயினால் பொதுவாக பாதிக்கப்படுவதுடன், இறப்பு விகிதம் 60% மேல் இருக்கும்.
- கிளாசிக்கல் நிலையில் 12 வார வயதுக்கு மேல் உள்ள கோழிகளின் நரம்புகளில் நோய் அறிகுறிகள் ஏற்பட்டு இறப்பு விகிதம் இவற்றில் 10-30% வரை ஏற்படும்.
- இந்நோயால் கோழிகள் நடக்க முடியாமை, நொண்டுதல், இறக்கைகள் பாதி அல்லது முழு வலிப்பு நிலை ஏற்படுவதால் அவற்றால் நிற்க முடியாது.
- மேரக்ஸ் நோயின் தற்காலிக வலிப்பு நிலையினால் பாதிக்கப்பட்ட கோழிகளில் ஒரு கால் முன்னோக்கியும் மற்றோரு கால் பின்னோக்கியும் இருக்கும்.
- வலிப்பின் காரணமாகக் கோழிகளின் கால்களும் இறக்கைகளும் நீட்டிக்கொண்டு இருக்கும்.
- இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளில் கழுத்து நரம்பு பாதிக்கப்பட்டு கழுத்து திருப்பிக் கொண்டு இருப்பதுடன், வேகஸ் நரம்பு பாதிக்கப்பட்டு இரைப்பை பாதிக்கப்படும்.
- ஒரு கண் அல்லது இரண்டு கண்கள் பாதிக்கப்படுவதால் கோழிகளில் ஒரு கண் பார்வை அல்லது இரண்டு கண்களின் பார்வையும் பறிபோய் விடும்.
நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளின் உடலில் காணப்படும் அறிகுறிகள்
- கோழிகளின் உடல் உறுப்புகளில் புற்று நோய்க் கட்டிகள் காணப்படும், குறிப்பாக கல்லீரல், மண்ணீரல், இனப்பெருக்க உறுப்புகள், நுரையீரல், சிறுநீரகம், தசைகள், மற்றும் இரைப்பையின் முன் உறுப்பு போன்றவற்றில் புற்றுநோய்க் கட்டிகள் காணப்படும்.
- பாதிக்கப்பட்ட கோழிகளில் நரம்புகள் பெரிதாக வீங்கிக் காணப்படும்.
- இறகுகளின் வேர்ப்பகுதி வீக்கிக் காணப்பட்டு, தோலில் புற்றுநோய்க் கட்டிகளும் காணப்படும்.
நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல்
Biosecurity
|
Sanitation
|
Vaccination
|
- தடுப்பூசி அளிப்பது மேரக்ஸ் நோயினைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு சிக்கனமான வழிமுறையாகும். தடுப்பூசி அளித்து 7 நாட்கள் கழித்து நோய்க்கான எதிர்ப்பு சக்தி கோழிகளில் உருவாகும்.
- முட்டைக்கோழிகளுக்கான தடுப்பூசி அட்டவணை:
வயது (வாரங்களில்)
|
தடுப்பூசியின் பெயர்
|
அளிக்கும் வழி
|
0
|
எம்டி (பைவேலண்ட்)
|
தோலுக்கடியில்
|
7-10
|
எம்டி (பைவேலண்ட்)
|
தோலுக்கடியில்
|
- தற்போது கோழி முட்டைகளில் வளரும் கருவின் 18 நாள் வயதிலேயே தானியங்கி தொழில்நுட்பம் மூலம் வளரும் நாடுகளில் மேரக்ஸ் நோயக்கெதிராகத் தடுப்பூசி அளிக்கப்படுகிறது.
- மேரக்ஸ் நோய்க்கெதிராக எதிர்ப்பு சக்தி பெற்றுள்ள தாய்க்கோழிகளிடமிருந்து கோழிக்குஞ்சுகளை வாங்குதல்
- ஒரே சமயத்தில் கோழிகளை பண்ணையிலிருந்து விற்று விட்டு ஒரே சமயத்தில் கோழிகளை விட்டு வளரத்தல்
- இதனால் தடுப்பூசி அளிக்கப்பட்ட கோழிகளில் நோய்த்தாக்குதல் குறைந்து, வைரஸின் நோய் உருவாக்கும் செயல்முறை தடுக்கப்பட்டு, பண்ணையில் கிருமி நீக்கம் செய்வதும் எளிதாகிறது.
- சுகாதாரமான செயல் முறைகள், கண்டிப்பான உயிர்ப்பாதுகாப்பு முறைகளை, தடுப்பூசி அளித்தலுடன் சேர்த்து பின்பற்றுவது நோயினைத் தடுப்பதற்கான முக்கியமான செயல்முறைகளாகும்.
- நோய்க்கிளர்ச்சிக்குப் பிறகு நோய் தாக்கிய பண்ணையில் 5% ஃபார்மலினைப் பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்து பிறகு குறைந்தது ஒரு மாதத்திற்குப் பண்ணையில் கோழிகளை விடக்கூடாது.
கம்போரோ நோய்
நோயின் தன்மை
80-90% of mortality
|
Young chicks upto 0-6 weeks are more susceptible
|
- இந்நோய் கோழிகளைத் தாக்கக்கூடிய ஒரு கொடிய தொற்று நோயாகும்.
- இந்நோய் கம்பாரோ நோய் அல்லது இன்ஃபெக்சியஸ் பர்சைட்டிஸ் அல்லது ஏவியன் நெஃப்ரோசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
- 0-6 வார வயதான கோழிக்குஞ்சுகள் இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
- இந்நோயினால் பாதிக்கப்படும் விகிதம் 100%, ஆனால் நோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் கோழிகளின் விகிதம் – 80-90%.
- பி லிம்போசைட்கள் இந்நோய் ஏற்படுத்தும் வைரஸால் முதன்மையாகப் பாதிக்கப்படுகின்றன. இந்நோய் ஏற்படுத்தும் வைரஸ் கோழிக்குஞ்சுகளிலுள்ள பர்சா எனும் நோய் எதிர்ப்பு சக்தியினை உற்பத்தி செய்யும் உறுப்பை பாதிக்கிறது.
- இந்நோய் ஏற்படுத்தும் வைரஸ் கோழிகளின் உடலில் நுழைந்த பிறகு நோய் அறிகுறிகளை வெளிப்படுத்த எடுத்துக்கொள்ளும் நாட்கள் 2-3 நாட்களாகும்.
- இது ஒரு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த, 3-6 வாரக் கோழிக்குஞ்சுகளில் அதிக இறப்பையும் , வயதான கோழிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் ஒரு நோயாகும்.
- இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளின் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து, மற்ற நோய்களின் தாக்குதலும் அவற்றிற்கு ஏற்படும்.
- நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் கோழிகளுக்கு தடுப்பூசி அளித்தவுடனும் எதிர்ப்பு சக்தி உருவாமல் இருத்தல், ஈ.கோலை பாக்டிரியாவால் ஏற்படும் நோய், தோல் அயற்சி, கல்லீரல் பாதிப்பு மற்றும் இரத்தசோகை அறிகுறிகள் ஏற்படுகின்றன.
நோய்க்கான காரணங்கள்
Birna virus
|
Egg trays, vehicles used in the transport of birds and eggs
|
Mosquito
|
- பிர்னா விரிடே குடும்பத்தைச் சேர்ந்த, ஏவி பிர்னா வைரஸ் ஜீனஸ் வகையினைச் சேர்ந்த பிர்னா வைரஸ் இந்நோயினை ஏற்படுத்துகிறது.
- இந்த வைரஸ் கோழிப்பண்ணை சுற்றுப்புறத்தில் நீண்ட நாட்கள் உயிரோடு இருக்கும். மேலும் இந்த வைரஸ் ஒரு கொடிய நோய் தொற்றாகும்.
- இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகள் இந்த வைரஸை அவற்றின் எச்சத்தில் 10-14 நாட்களுக்கு வைரஸை வெளியேற்றும்.
- நோய் பாதிக்கப்பட்ட கோழிகள் உள்ள கோழிக்கொட்டகைகளில் இந்த வைரஸ் 120 நாட்களுக்கு உயிரோடு இருக்கும்.
- Water, feed, droppings from infected birds are viable for 52 days in the poultry houses.
- இந்த வைரஸ் ஒரு கடினத்தன்மை வாய்ந்த வைரஸாகும். வெப்பம், சுத்தம் செய்தல் மற்றும் கிருமி நீக்கம் செய்தல் போன்ற முறைகளின் மூலம் இந்த வைரஸ் கொல்லப்படாது.
- இரண்டு நோய்க் கிளர்ச்சிகளுக்கிடையே இந்த வைரஸ் சுற்றுப்புறத்தில் உயிரோடு இருக்கும்.
- கொசுகள், சிறிய பூச்சிகள் போன்றவை இந்நோயினை பரப்புவதில் பங்கு வகிக்கின்றன. மேலும் இந்த பூச்சிகளில் வைரஸ் 8 நாட்களுக்கு உயிரோடு இருக்கும்.
- முட்டை அட்டைகள், கோழிகளை எடுத்துச் செல்லும் வாகனங்கள், முட்டைகள் மற்றும் கோழிகளைக் கையாளும் பணியாட்கள், போன்றவை இந்நோயினைப் பரப்பும் திறனுடையவை.
- மனிதர்கள், வனப்பறவைகள், பூச்சிகள் போன்றவை வைரஸை ஒரிடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு எடுத்துச்செல்லும்.
- ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு இந்நோய் ஏற்படுத்தும் வைரஸ் பரவாது (அதாவது முட்டைகளின் மூலம் இந்த வைரஸ் பரவுவதில்லை).
- வயதான கோழிகள் (பர்சா உறுப்பு அளவில் குறைந்து விடுவதால்) இந்நோய்க்கெதிரான அதிக எதிர்ப்புத்திறனைப் பெற்றுள்ளன.
நோய் அறிகுறிகள்
Bursal haemorrhages and enlargement
|
Haemorrhages in proventriculus & Gizzard junction
|
Musle haemorrhages
|
Closed eyes and death
|
Ruffled feathers
|
Watery and whitish diarrhoea
|
- பாதிக்கப்பட்ட கோழிகள் தங்களது ஆசன வாயினை கொத்திக் கொண்டிருக்கும்.
- தீவனம் எடுக்காமை
- Depression and trembling
- கோழிக்குஞ்சுகள் சோர்ந்து வெள்ளை நிறக் கழிச்சல் ஏற்படுதல்
- ஆசன வாய் ஈரமாகக் காணப்படுதல்
- இறகுகள் சொரசொரவென்று தூக்கிக்கொண்டு இருத்தல்
- பாதிக்கப்பட்ட கோழிக்குஞ்சுகள் நடப்பதற்கு மிகவும் சிரமப்படுதல்
- கண்கள் மூடி, இறப்பு ஏற்படுதல்
நோயால் பாதிக்கப்பட்ட கோழிகளின் உடலில் காணப்படும் அறிகுறிகள்
- இறந்த கோழிகளின் உடலில் நீர்ச்சத்து குறைந்து காணப்படுதல்
- கால்கள், தொடை மற்றும் நெஞ்சுப் பகுதியில் இரத்தம் உறைந்து இரத்தத்திட்டுகள் காணப்படுதல்
- இரைப்பை மற்றும் இரைப்பைக்கு முன்னால் உள்ள பைக்கும் இடையுள்ள இடைவெளியில் ரத்தத் திட்டுகள் காணப்படுதல்
- பர்சா உறுப்பு அதன் சாதாரண அளவினை விட இரண்டு மடங்கு அதிகமாக வீங்கிக் காணப்படுதல்
- பர்சா உறுப்பின் வெளிச்சவ்வு மற்றும் உட்புறப்பகுதியில் இரத்தத்திட்டுகள் காணப்படுதல்
- குடலின் உட்பகுதியில் அதிகப்படியாக கோழை காணப்படுதல்
நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல்
Disposables - Deep burial with slaked lime
|
Toxin free feed
|
- கோழிக்குஞ்சுகளின் இரண்டு வார வயதில் அவைகளுக்கு வீரியம் குறைவான அல்லது இன்டர்மீடியேட் ஐபிடி தடுப்பூசி போடுதல்
- இன்டர்மீடியேட் வைரஸ் தடுப்பூசியினை மூன்று வார வயதில் மீண்டும் அளித்தல்
- முட்டைக் கோழிகளுக்கான தடுப்பூசி அட்டவணை :
வயது நாட்களில்
|
தடுப்பூசியின் பெயர்
|
அளிக்கும் வழி
|
12-14
|
ஐபிடி லைவ் (முதல் தடுப்பூசி)
|
I/O
|
22-24
|
ஐபிடி லைவ் (பூஸ்டர் தடுப்பூசி)
|
I/O
|
- இனப்பெருக்கக் கோழிகளுக்கு தடுப்பூசி அளிப்பதாலும், கோழிக்குஞ்சு பொரிப்பகங்களில் ஊநீர் பரிசோதனையாலும் தாய் வழியாக இந்நோய்க்கான நோய் எதிர்ப்பு புரதங்கள் இருப்பதை உறுதி செய்வதால் இந்நோய் தாக்குதல் குறைக்கப்படுகிறது.
- கோழிக்குஞ்சுகளுக்கு அதிக அளவிலான நோய் எதிர்ப்பு புரதங்கள் கிடைப்பதற்காக தாய்க் கோழிகளுக்கு 4-10 வார வயதிலும், 16ம் வார வயதிலும் கம்பாரோ நோய்க்கு தடுப்பூசி அளிக்கப்பட வேண்டும்.
- வைட்டமின் ஈ போன்ற நோய் எதிர்ப்பு சக்தியினைத் தூண்டும் பொருட்களை உணவில் அளித்தல்
- நச்சுப் பொருட்கள் தீவனத்தில் இல்லாமல் பார்த்துக்கொள்ளுதல்
- இறந்த கோழிகளையும், ஆழ்கூளத்தையும் முறையாக அப்புறப்படுத்துதல், உபயோகப்படுத்திய கோணிப்பைகள், திரைச்சீலைகள் போன்றவற்றை எரித்து விடுதல், அல்லது அவற்றை சுண்ணாம்பு தெளித்த பிறகு ஆழமாக மண்ணில் புதைத்து விடுதல்
- பாதிக்கப்பட்ட கொட்டகைகளிலுள்ள தீவன மற்றும் தண்ணீர்த் தட்டுகளை 5% ஃபார்மலின் மூலம் கிருமி நீக்கம் செய்தல்
- புதிய கோழிக் கொட்டகைகளை ஃபார்மலின் புகை மூட்டம் செய்தல்
- ஒரு கொட்டகையில் வேலை செய்யும் பணியாளரை மற்ற கொட்டகைக்குள் அனுமதிக்காமல் இருத்தல்.
இன்ஃபெக்சியஸ் கொரைசா
நோயின் தன்மை
Discharge from the eyes
|
Discharge from the nostrils
|
Swelling of the face
|
- இது கோழிகளின் மேற்பகுதி சுவாச மண்டலத்தைத் தாக்கும் பாக்டீரியாவால் ஏற்படக்கூடிய ஒரு தீவிரமான தொற்று நோயாகும்.
- இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளை நீண்ட நாட்களாக சுவாச மண்டலத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும் நோயும் தாக்கும்.
- இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளில் மூகம் வீங்கி, மூக்கிலும் கண்ணிலும் சளி வடிதலும் காணப்படும்.
நோய்க்கான காரணங்கள்
Drinking water contaminated by discharge
|
Homophiles paragallinarum
|
Older bird suffers more
|
- இந்நோய் ஹீமோஃபைலஸ் பாராகேலினேரம் எனும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
- வயது அதிகமான கோழிகள் இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
- நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகள் நோய் தாங்கிகளாகச் செயல்பட்டு இந்நோயினைப் பரப்புவதில் அதிகப் பங்கு வகிக்கின்றன.
- இந்நோய்க் கிருமியால் மாசடைந்த தண்ணீர், நோய் பாதிக்கப்பட்ட கோழிகளின் சளியால் மாசடைந்த தண்ணீர் போன்றவற்றாலும், காற்று வழியாக குறைந்த தொலைவுக்கு இந்நோய்க்கிருமி பரவும்.
- நேரடித் தொடர்பு முலமாகவும் இந்நோய் எளிதில் பரவும்.
- நீண்ட நாட்களாகக் கோழிகளைத் தாக்கும் நோய்கள், சிறு மூச்சுக்குழல் நோய், லேரிங்கோ டிரைக்கியைட்டிஸ் வைரஸ் தாக்கம், மைக்கோபிளாஸ்மா கேலிசெப்டிகம், ஈ.கோலை, பாஸ்சுரெல்லா பாக்டீரியாக்களின் தாக்கம் போன்றவையும் இந்நோயின் தாக்கத்தை அதிகரிக்கும் காரணிகளாகும்.
- இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளின் முட்டை உற்பத்தி 10% -40% வரை குறைந்து விடுவதால் அதிகப்படியான பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
நோய் அறிகுறிகள்
01 Swelling and cyanosis of eyelids and face
|
02 Swelling and cyanosis of eyelids and face
|
03 Swelling and cyanosis of eyelids and face
|
- ஆழ்கூளத் தரையில் வளர்க்கப்படும் கோழிப்பண்ணைகளில் இந்நோய் கோழிகளிடையே வேகமாகப் பரவி அதிக எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், குறைந்த அளவு இறப்பையும் ஏற்படுத்துகிறது.
- இந்நோய் பாதிப்புக்குள்ளான கோழிகளில் தும்மல், மூக்கு, கண்கள் போன்றவற்றிலிருந்து சளி வடிதல், மேலும் முகம் வீங்கிக் காணப்படுதல்
- அதிகப்படியாக கண் சவ்வு அயற்சி ஏற்பட்டு தாடி வீங்கி, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுதல்
- நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளில் தீவனம் மற்றும் தண்ணீர் எடுப்பது குறைந்து, முட்டை உற்பத்தியும் குறையும்.
நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளின் உடலில் காணப்படும் நோய் அறிகுறிகள்
Infraorbital sinus showing consolidated caseous exudate
|
- நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளின் மூச்சுக்குழல் மற்றும் அவற்றின் கண்களைச் சுற்றியுள்ள சைனஸ்களிலும் கண் சவ்விலும் சளி போன்ற அல்லது நார் போன்ற கடினமான திடப்பொருள் காணப்படும்.
- மற்ற நோய் ஏற்படுத்தும் கிருமிகளும் இந்நோயுடன் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி இருந்தால், கோழிகளின் சைனஸ் உள்ளே மஞ்சள் நிற கெட்டியான பொருள் காணப்படும்.
- கோழிகளின் தலை மற்றும் தாடிகளில் தோலுக்கடியில் நீர் தேங்கி வீங்கிக் காணப்படுதல்
- மூச்சுக்குழலின் மேல் பகுதியும் சில சமயங்களில் பாதிக்கப்படும். மேலும் சில நேரங்களில் நுரையீரல், காற்றுப்பைகள் போன்ற உறுப்புகளும் நீண்ட நாட்களாக நோயினால் கோழிகள் பாதிக்கப்பட்டிருந்தால் பாதிக்கப்படும்.
நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல்
- கோழிப்பண்ணையில் நோய்க்கிருமிகளின் தாக்குதலின்றி கட்டுப்படுத்துவது நோயினைப் பண்ணையில் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழிமுறையாகும். இதற்கு பண்ணை சுகாதாரம் பேணுதல், கண்டிப்பான உயிர்ப்பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுதல், நோயற்ற ஆதாரங்களிலிருந்து கோழிக்குஞ்சுகளை வாங்குதல் போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும்.
- இந்நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த கோழிகள் நோய் தாங்கிகளாகச் செயல்படுவதால் அவற்றை பண்ணையிலிருந்து நீக்கி விட வேண்டும்.
- ஒரே சமயத்தில் கோழிகளை பண்ணைக்குள் விட்டு அவை வயதான பிறகு ஒரே சமயத்தில் அவற்றை பண்ணையினை விட்டு நீக்கி விட வேண்டும். இதனால் நோய் தாக்குதலை பண்ணையிலிருந்து முற்றிலும் நீக்கி விடலாம்.
- நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை செயலிழக்கச் செய்து, அவற்றுடன் பாக்டீரியாக்களை சிறிது சிறிதாக உடலில் வெளிவிடும் பொருட்களுடன் சேர்த்து தடுப்பூசி தயாரித்து கோழிகளுக்கு அளிப்பதால் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
- நோய் தாக்குதலுக்குள்ளான பகுதிகளில் இரண்டு தவணைகளாக தடுப்பூசியினை அளிக்கலாம். ஒரு தடுப்பூசியில் 108எண்ணிக்கையிலான பாக்டிரியாக்கள் இருக்க வேண்டும். இந்தத் தடுப்பூசியினை கோழிகளின் 16ம் மற்றும் 20ம் வார வயதில் கோழிகளுக்கு அவற்றின் தோலுக்கடியில் கொடுக்க வேண்டும்.
- கோழிப்பண்ணைக் கொட்டகைகளை சுத்தம் செய்து கிருமிநீக்கம் செய்த ஒரு வாரம் கழித்து புதிதாக கோழிகளை பண்ணைக்குள் விட வேண்டும்.
- இந்நோய் உண்டாக்கும் கிருமிகளின் தாக்குதலற்ற ஒரு நாள் வயதடைந்த கோழிக் குஞ்சுகள் அல்லது வயதான கோழிகளை பண்ணையில் வளர்ப்பதற்கு உபயோகப்படுத்த வேண்டும்.
சிறு மூச்சுக்குழல் நோய்
நோயின் தன்மை
E.coli increases the severity of disease
|
Mycoplasma - increases the severity of disease
|
Under 6 weeks age of chicks are more susceptible
|
- கோழிகளைத் தாக்கும் முக்கியமான தொற்று நோய் சிறு மூச்சுக்குழல் நோயாகும்.இந்நோய் முட்டை உற்பத்தியாகும் குழாயினையும், சில வைரஸ்கள் கோழிகளின் சிறுநீரகத்தையும் பாதிக்கும்.
- இந்நோய் கோழிக்குஞ்சுகளின் எந்த வயதிலும் ஏற்படும். ஆனால் ஆறு வார வயதிற்கு குறைவாக உள்ள கோழிக்குஞ்சுகள் இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
- இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளில் முட்டை உற்பத்தியும், முட்டையின் தரமும் முட்டைக்கோழிகளில் பாதிக்கப்படுவதுடன், இறைச்சிக்கோழிகளில் உற்பத்தித்திறனும் பாதிக்கப்படுகிறது.
- மைக்கோபிளாஸ்மா மற்றும் ஈ.கோலை போன்ற நுண்கிருமிகளும் சிறு மூச்சுக்குழல் நோயுடன் சேர்ந்து நோயின் தாக்குதலை அதிகரித்து நோய் தாக்கும் காலத்தை நீட்டிக்கும்.
நோய்க்கான காரணங்கள்
Contaminated feed
|
Egg shells of infected birds
|
Infectious bronchitis virus
|
- கரோனா வைரஸ் இந்நோயினை ஏற்படுத்தும் ஒரு முக்கியமான காரணியாகும்.
- கரோனா வைரஸ் பொதுவான ரசாயனங்கள் மற்றும் இயற்பியல் காரணிகளால் எளிதில் கொல்லப்பட்டு விடும்.
- காற்று மூலம், நோய்க்கிருமியினால் அசுத்தமடைந்த தீவனம், தண்ணீர், பாதிக்கப்பட்ட கோழிகளுடன் ஏற்படும் நேரடித் தொடர்பு, நோய்க்கிருமியால் அசுத்தமடைந்த உபகரணங்கள், துணிகள் மற்றும் மனிதர்களால் இந்நோய் எளிதாகப் பரவுகிறது.
- நோய்க்கிருமிகளால் பாதிக்கப்பட்ட கோழிகளின் சளி, எச்சம், முட்டை ஓடுகளில் வைரஸ் இருக்கும்.
- குளிர்காலத்தில் இந்த வைரஸ் சுற்றுப்புறத்தில் சில நாட்களுக்கு உயிரோடு இருக்கும். இதனால் குளிர்காலத்தில் நோயின் தாக்குதல் அதிகமாக இருக்கும். ஆனாலும் எந்த ஒரு பருவ காலத்திலும் இந்நோய் கோழிகளைத் தாக்கும்.
- கோழிப்பண்ணையில் கோழிகளுக்கிடையே எளிதில் இந்நோய் பரவும்.
- கோழிகளுக்கிடையே நேரடித் தொடர்பால் இந்நோய் எளிதில் பரவும்.
- முட்டைகள் வழியாக இந்நோய் எளிதில் பரவும்.
- நோய்க்கிருமியால் அசுத்தமடைந்த உயிரற்ற பொருட்கள் மூலமும் இந்நோய் பரவும்.
நோய் அறிகுறிகள்
Misshapen egg with ridges
|
Watery albumin of egg
|
Gasping
|
- ஆறு வார வயதிற்குக் குறைவாக உள்ள கோழிக்குஞ்சுகளில் தும்மல், இருமல், மூச்சு விட சிரமப்படுதல், கண்கள் மற்றும் மூக்கிலிருந்து நீர் வடிதல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
- கொட்டகையினைச் சூடாக்கும் வெப்ப ஆதாரத்தின் கீழ் கோழிக்குஞ்சுகள் அடைந்து காணப்படும்.
- முகம் வீங்கி, முகத்திலுள்ள சைனஸ்களும் வீங்கிக் காணப்படுதல்
- இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிக்குஞ்சுகளில் 25-60% இறப்பு ஏற்படுவதுடன்,நோய் 1-2 வாரம் வரை நீடிக்கும்.
- கோழிக்கொட்டகையிலிருந்து தொலைவிலேயே இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகள் மூச்சுவிடும் போது ஏற்படும் சத்தம் கேட்கும்.
- வளரும் மற்றும் வயது முதிர்ந்த கோழிகளில், இந்நோய் அறிகுறிகளின் தாக்கம் குறைவாகக் காணப்படும். இக்கோழிகளில் சுவாச மண்டல அறிகுறிகள் குறைந்தும், இறப்பும் குறைவாகவும் காணப்படும்.
- முட்டையிடும் கோழிகள் இந்நோயினால் பாதிக்கப்படும் போது அவற்றின் முட்டை உற்பத்தி 5-50% வரை திடீரெனக் குறைந்து விடும்.
- முட்டையிடும் கோழிகளில் முட்டை உருவாகும் குழாய் இந்நோயினால் பாதிக்கப்படுவது பொதுவாக நடக்கும்.
- முட்டையில் மாறுபாடுகள் காணப்படுதல் (ஒழுங்கற்ற வடிவமுடைய முட்டைகள், முட்டை ஓடு மெல்லியதாகக் காணப்படுதல், முட்டை ஓடு சொரசொரப்பாகக் காணப்படுதல், தோல் முட்டைகள் தோன்றுதல்).
- முட்டையின் தரம் குறைந்து, அதிலுள்ள அல்புமின் தண்ணீர் போலாக மாறிவிடும்.
- சிறுநீரகம் பாதிக்கப்படுவதால், கோழிகள் சோர்ந்து, இறகுகள் துருத்திக்கொண்டு, எச்சம் தண்ணீர் போன்று காணப்படுதல். மேலும் கோழிகள் தண்ணீர் அதிகமாகக் குடிக்கும். மேலும் இறப்பு விகிதம் 0.5-1% (ஒரு வாரத்திற்கு) சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படும்.
நோயுற்ற கோழிகளின் உடலில் ஏற்படும் அறிகுறிகள்
- கோழிகளின் மூச்சுக்குழலில் சளி போன்ற, அல்லது நீர் போன்ற திரவம் காணப்படும். பொதுவாக இரத்தத்திட்டுகள் காணப்படாது.
- மஞ்சள் நிறக் கட்டி போன்ற சளி மூச்சுக்குழலின் அடிப்பாகத்திலும், மூச்சுக்குழல் பிரிந்து போகும் இடத்திலும் காணப்படும். இதனால் கோழிக்குஞ்சுகள் இறக்க நேரிடும்.
- இந்நோயினால் பாதிக்கப்பட்ட முட்டைக்கோழிகளின் வயிற்றில் முட்டையின் மஞ்சள் கரு காணப்படும்.
- கருமுட்டைப் பை பாதிக்கப்பட்டு, கரு முட்டைகள் முறையற்ற வடிவத்துடன் காணப்படும்.
- முட்டைக் குழாயின் நடுப்பகுதி பாதிக்கப்பட்டு, கிழிந்து அதிலுள்ள முட்டை கோழிகளின் வயிற்றில் காணப்படும்.
- பாதிக்கப்பட்ட கோழிகளின் சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர்க்குழாயிலும், உடல் முழுவதும் அவற்றில் யூரேட் உப்பு படிந்து காணப்படும்.
நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல்
- முறையான சுகாதார மேலாண்மை முறைகள் மற்றும் தடுப்பூசி அளிப்பதால் இந்நோயினை கட்டுப்படுத்தலாம்.
- முட்டைக்கோழிகளுக்கு அளிக்கப்படும் தடுப்பூசி அட்டவணை
வயது (நாட்களில்)
|
தடுப்பூசியின் பெயர்
|
அளிக்கப்படும் வழி
|
5-7
|
ஐபி லைவ்
|
I/O
|
28-30
|
ஐபி லைவ்
|
I/O
|
80
|
ஐபி லைவ்
|
D/W
|
112-114
|
ஐபி செயலிழக்கப்பட்டது
|
S/C
|
280
|
ஐபி செயலிழக்கப்பட்டது
|
S/C
|
கவுட்
நோயின் தன்மை
Death - due to kidney failure
|
Deposition of urates on joints
|
Laying hens fed high level of calcium
|
- கவுட் என்பது ஒரு நோய் அல்ல, ஆனால் இந்த நிலையால் பாதிக்கப்பட்ட கோழிகளில் சிறுநீரகம் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்படும்.
- இந்நிலையினால் பாதிக்கப்பட்ட கோழிகளின் இரத்தத்தில் அளவிற்கு அதிகமாக யூரிக் அமிலம் இருக்கும்.
- இந்நிலையினால் பாதிக்கப்பட்ட மூட்டுகளிலும், உள் உறுப்புகளிலும் யூரேட் உப்புகள் படிந்திருக்கும்.
- இந்நிலையினால் பாதிக்கப்பட்ட கோழிகள் சிறுநீரக பாதிப்பால் இறந்து விடும்.
- முட்டைக் கோழிகளுக்கு அளவிற்கு அதிகமாக கால்சியம் தீவனத்தில் அளிப்பதால் இந்நிலை ஏற்படுகிறது.
- இந்நிலையில் இரண்டு விதமான அறிகுறிகள் ஏற்படும்.
- உள் உறுப்பு கவுட் மற்றும் மூட்டுகளைப் பாதிக்கும் கவுட்.
இந்நிலைக்கான காரணங்கள்
Dehydration
|
Infectious bronchitis virus
|
Treatment with sodium bicarbonate
|
- சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதால் யூரிக் அமிலம் இரத்தத்தில் அதிக அளவு இருக்கும்.
- பாதிக்கப்பட்ட கோழிகளின் தண்ணீர் அளவு குறைந்து காணப்படும்.
- தீவனத்தில் அதிக அளவு கால்சியம் சத்து காணப்படுதல்
- கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்தின் அளவு முறையற்றுக் காணப்படுதல்
- வைட்டமின் ஏ குறைபாடு
- அதிகப்படியாக உப்பு உணவில் சேர்த்துக் கொள்ளுதல்.
- யூரோலித்தியாசிஸ் மற்றும் மைக்கோடாக்சின்கள்
- எலெக்ட்ரோலைட்கள் அதிகமாகவும் அல்லது குறைவாகவும் இருத்தல்
- சோடியம் கார்பனேட் நீண்ட நாட்களுக்கு கொடுப்பதால்
நோய் அறிகுறிகள்
01 Deposition of urate salts as a white chalky coating on organs
|
02 Deposition of urate salts as a white chalky coating on organs
|
03 Deposition of urate salts as a white chalky coating on organs
|
Affected bird - die of starvation
|
Affected leg joints
|
- மூட்டுகளில் வீக்கம், சாக்பீஸ் போன்ற வெள்ளையான பொருட்கள் மூட்டுகளில் படிந்தும் காணப்படுதல்
- பொதுவாக இறக்கை மற்றும் கால் மூட்டுகளில் பாதிப்பு ஏற்படும்.
- சேவல்களில் மூட்டுகள் பொதுவாக பாதிக்கப்படும். ஆனால் உள்உறுப்புகளில் பாதிப்பு சேவல்களிலும் பெட்டைக் கோழிகளிலும் காணப்படும்.
நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
- மூட்டுகளில் பாதிப்பு ஏற்பட்டு, அவற்றில் வெள்ளையாக யூரேட் உப்புகள் படிந்துக்காணப்படும்.
- உள்உறுப்புகள் பாதிக்கப்படும் கவுட் நிலையில் சிறுநீரகங்கள் வீங்கி, சாம்பல் கலந்த வெள்ளை நிறத்துடன் காணப்படும். இது தவிர குடல் சவ்வு, இதயம், இரைப்பை முன் பை மற்றும் நுரையீரல்களிலும் வெள்ளையான சாக்பீஸ் போன்ற பொருள் படிந்து காணப்படும்.
- இது தவிர உறுப்புகளைச் சுற்றி யூரேட் உப்பு படிந்து ஒரு உறை போன்று காணப்படும்.
நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல்
Increase maize
|
Water containing electrolytes
|
- கோழிகள் இனப்பெருக்க முதிர்ச்சியினை அடைவதற்காக அவற்றிற்கு அதிகப்படியான கால்சியம் சத்தை தீவனத்தில் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- அளவுக்கு அதிகமாக புரதம் தீவனத்தில் சேர்க்கக்கூடாது.
- தீவனத்தில் மக்காச்சோளத்தின் அளவினை அதிகரித்து, தீவனத்தின் உட்பொருட்களை சேர்த்து தீவனம் தயாரிக்க வேண்டும்.
- தாது உப்புகள் நிறைந்த தண்ணீரை அதிகமாகக் கோழிகளுக்கு அளிக்க வேண்டும்.
கோழி அம்மை
நோயின் தன்மை
Disease affects birds of all ages
|
poor weight gain
|
- கோழி அம்மையானது மெதுவாகப் பரவக்கூடிய, அதிகமாகக் காணப்படும், மெதுவாகப் பரவும், வைரஸால் ஏற்படக்கூடிய தொற்று நோயாகும்.
- கோழிகளின் உடலில் இறகுகள் இல்லாத இடங்களிலும், சுவாச மண்டலத்தின் மேற்பகுதியிலும், சீரண மண்டலத்தின் மேற்பகுதியிலும் உள்ள உட்சவ்வுகளில் கொப்புளங்கள் தோன்றும்.
- இந்ந நோய் எல்லா வயதான கோழிகளையும் பாதிக்கும்.
- இந்நோய் தாக்கிய கோழிகளில் எடை அதிகரிப்பது குறைதல், முட்டை உற்பத்தி குறைதல், இறப்பு போன்றவை ஏற்படுவதால் இது ஒரு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நோயாகும்.
- இந்நோய் மனிதர்களுக்கு பரவுவதில்லை.
நோய்க்கான காரணங்கள்
Avipoxvirus
|
Overcrowding
|
Through vaccination virus transfer from one to another
|
- பொதுவான கிருமி நீக்க செயல்பாடுகளுக்கு எதிர்ப்புத் திறன் வாய்ந்த ஏவி பாக்ஸ் எனும் வைரஸால் கோழி அம்மை நோய் ஏற்படுகிறது. இந்த வைரஸ் கோழி அம்மை ஏற்பட்ட கோழிகளின் புண்களில் இருந்து உதிரும் தோலில் நீண்ட நாட்கள் உயிருடன் இருக்கும்.
- புண்கள் அல்லது சிராய்ப்புகள் இல்லாத தோலை இந்த வைரஸ் ஊடுருவாது. எனவே இந்த வைரஸ் கோழிகளின் உடலினுள் செல்வதற்கு தோலில் சிராய்ப்புகள் தேவை. இந்த சிராய்ப்புகள் அல்லது புண்கள் வழியாக இவை உட்சென்று நோயினை ஏற்படுத்துகின்றன.
- நேரடித் தொடர்பு மூலமாகவும், நோய்க்கிருமிகளால் அசுத்தமடைந்த மண், கொசுக்கள் மற்றும் பூச்சிகள் வழியாக இந்நோய் ஏற்படுத்தும் வைரஸ் பரவுகிறது.
- அசுத்தமடைந்த சுற்றுப்புற சூழ்நிலைகளில் இந்த வைரஸ் காற்று வழியாக எளிதில் பரவும்.
- பாதிக்கப்பட்ட கோழிகளின் சுவாச மண்டலத்திலிருந்து வைரஸ் வெளியேறி காற்று வழியாக பரவும்.
- கோழிகளுக்குத் தடுப்பூசி போடும் போது, தடுப்பூசி அளிப்பவர்கள் மூலம் நோய் பாதிக்கப்பட்ட கோழிகளிலிருந்து நோயற்ற கோழிகளுக்கு இந்நோய் பரவுகிறது.
- கண்களில் இந்த வைரஸ் நுழைந்தால், லேக்ரிமல் குழாய் வழியாக மூச்சுக்குழலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தும்.
- மழை மற்றும குளிர்காலங்களில் சுகாதாரமற்ற சூழ்நிலை, மற்றும் அதிக எண்ணிக்கையிலான கோழிகளை ஒரு இடத்தில் பராமரித்தல் போன்ற காரணங்களால் இந் நோய் அதிகமாகக் காணப்படுகிறது.
- நீண்ட நாட்களுக்கு இந்நோய் நீடிப்பதால், பல்வேறு வயதுகளில் கோழிகள் ஒரு பண்ணையில் வளர்க்கப்படும் போது தடுப்பூசி அளித்திருந்தாலும் அந்தப் பண்ணைகளில் நோயின் தாக்குதல் இருந்து கொண்டே இருக்கும்.
நோய் அறிகுறிகள்
01 Wart like gowth in the non-feathered parts of the body
|
02 Wart like gowth in the non-feathered parts of the body
|
03 Wart like gowth in the non-feathered parts of the body
|
- இந்நோய் இரண்டு விதமாக வெளிப்படும். ஒரு நிலையில் தோல் பாதிக்கப்படும். மற்றொரு நிலையில் சுவாச மற்றும் சீரண மண்டலத்தின் உட்சவ்வுகள் பாதிக்கப்படும்.
- முட்டையிடும் கோழிகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டால் அவற்றில் எடை அதிகரிப்பது குறைதல், முட்டை உற்பத்தி குறைதல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
- தோல் பாதிக்கப்படும் போது, கோழிகளின் கொண்டை, தாடி, கண் இமை, நாசித்துவாரம், அலகுகள் இரண்டும் இணையும் பகுதி, மற்றும் இதர இறகுகளற்ற பகுதிகளில் அம்மைக் கொப்புளங்கள் தோன்றி அவை புண்களாக மாறும்.
- கண்களில் அம்மைக் கொப்புளங்கள் தோன்றுவதால் கண் பார்வை பாதிக்கப்படும். மேலும் இதனால் கோழிகள் தீவனம் மற்றும் தண்ணீர் எடுப்பதும் பாதிக்கப்படும்.
- பேப்யூல், வெசிக்கில், பஸ்டியூல், பக்கு உருவாதல், தழும்பு உருவாதல் என்ற வரிசையில் நோய் அறிகுறிகள் தோன்றும்.
- தோல் மற்றும் பாதிக்கப்பட்ட கோழிகளில் இறப்பு விகிதம் 2% மட்டுமே இருக்கும்.
- வாய், மூச்சுக்குழல், உணவுக்குழாய் போன்ற பகுதிகளில் அம்மைக் கொப்புளங்கள் தோன்றும்.
- பிறகு இந்தக் கொப்புளங்கள் மஞ்சள் நிறத்தில் மாறி, மேற்கூறிய உறுப்புகளில் அடைப்பினை ஏற்படுத்தும். இதனால் கோழிகள் தீவனம் எடுப்பது குறைதல், மூச்சு விட சிரமம், 50% கோழிகளில் இறப்பு போன்றவை ஏற்படும்.
நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளில் உடலில் காணப்படும் அறிகுறிகள்
fowl pox gross
|
fowl pox gross02
|
- நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளில் கொப்புளங்கள் தோன்றும்.
- முதலில் கொப்புளம் பெரியதாகி, மஞ்சள் நிற சீழ் போன்ற பக்குகள் தோன்றும்.
நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல்
Disinfection of premises
|
Sanitation
|
- இரண்டு விதமான தடுப்பூசிகள் கோழி அம்மை நோயினைத் தடுப்பதற்கு உபயோகப்படுத்தப்படுகின்றன. ஒன்று புறா அம்மை மற்றும் கோழி அம்மைத் தடுப்பூசி.
- புறா அம்மை தடுப்பூசி, கோழிகளுக்குத் தடுப்பூசி போடுவதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. இது இறக்கையில் கொடுக்கப்படுகிறது. இந்த தடுப்பூசியின் மூலம் கோழிகளுக்கு 6 மாதம் வரை கோழி அம்மை நோய்க்கான எதிர்ப்பு சக்தி கோழிகளுக்கு கிடைக்கிறது. இதனால் கோழிகளுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை கோழி அம்மைக்கான தடுப்பூசியினை அளிக்க வேண்டும்.
- கோழி அம்மைத் தடுப்பூசியினை கோழிகளில் 6-8 வார வயதில் கொடுக்கும் போது சதைப்பகுதியிலோ அல்லது இறக்கைப் பகுதியிலோ கொடுக்க வேண்டும்.
- தடுப்பூசி முறையாக அளிக்கப்பட்டிருப்பதை பரிசோதிக்கக் கோழிகளுக்கு தடுப்பூசி அளித்து 7-10 நாட்கள் கழித்து தடுப்பூசி அளித்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டு பிறகு அதன் மீது தோல் உறிந்து காணப்படும்.
- மேற்கூறியவாறு தடுப்பூசி போட்ட இடத்தில் இல்லாவிடில், தடுப்பூசி முறையாக செயல்படவில்லை அல்லது முறையாக தடுப்பூசி அளிக்கப்படவில்லை அல்லது தாயிடமிருந்து அம்மை நோய்க்கான எதிர்புரதங்கள் குஞ்சுகள் பெற்றிருக்கின்றன என்று அர்த்தம்.
- இவ்வாறு இருக்கும் போது மீண்டும் ஒரு முறை கோழிகளுக்கு அம்மை நோய்க்கான தடுப்பூசி போட வேண்டும்.
- நோய்க்கிளர்ச்சியின் போது 30%க்கும் குறைவான கோழிகள் பண்ணையில் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவைகளைத் தனியாகப் பிரித்து விட்டு, மீதியிருக்கும் நோயற்ற கோழிகளுக்கு அம்மை நோய்க்கான தடுப்பூசியினைப் போட வேண்டும்.
- அம்மை நோயினைக் கட்டுப்படுத்த பண்ணையில் முறையான சுகாதார முறைகளையும், கண்டிப்பான உயிர்ப்பாதுகாப்பு முறைகளையும் பின்பற்ற வேண்டும்.
- கோழிப்பண்ணையிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சோடியம் ஹைட்ராக்சைடு (1:500), கிரெசால் (1;400) மற்றும் பீனால் (3%) என்ற அளவில் கிருமி நாசினிகளை உபயோகப்படுத்தி கிருமி நீக்கம் செய்யவேண்டும்.
கோலிபேசில்லோசிஸ்
நோயின் தன்மை
Avian pathogenic escherichia coli.
|
Coligranuloma
|
Mushy chick disease
|
- கோலிபேசில்லோசிஸ் நோய் கோழிகளின் ஒரு உடற்பகுதியில் அல்லது உடல் முழுவதும் பாதிப்பினை ஏற்படுத்தும் எஸ்கெரிக்கியா கோலை எனும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்நோயினால் கோழிகளில் உற்பத்திக் குறைவு மற்றும் இறப்பும் ஏற்படுகிறது.
- கோலி செப்டிசீமியா, கோழிகளின் உடலின் உள்ளேயே முட்டை உடைந்து அதனால் ஏற்படும் குடற்சவ்வு அழற்சி, இளங்குஞ்சுகளில் குடலிலுள் சில நாட்கள் இருக்கும் முட்டை மஞ்சள் கருவில் நோய்க்கிருமிகள் தொற்று, ஈ.கோலை பாக்டீரியாவால் கோழிகளின் உடலில் கட்டிகள் தோன்றுதல் போன்றவை ஈ.கோலை பாக்டீரியாவால் கோழிகளுக்கு ஏற்படும் நோய்களாகும். இந்த நோய் நிலைகள் அனைத்தும் சேர்ந்தது கோலி பேசில்லோசிஸ் என்று அழைக்கப்படுகிறது.
நோய்க்கான காரணங்கள்
Birds consuming beetles
|
Birds in poor environmental condition
|
Contaminated eggs
|
- ஈ.கோலை பாக்டீரியா சாதாரணமாகக் வனப்பறவைகளின் குடலில் இருக்கும். எனவே இப்பறவைகளின் மூலம் இந்நோய் கோழிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பரவுகிறது.
- ஈ.கோலே பாக்டீரியா பொதுவாக பயன்படுத்தப்படும் இயற்பியல் மற்றும் வேதியியல் கிருமி நீக்க முறைகளால் கொல்லப்பட்டுவிடும். ஆனால் உறையும் வெப்பநிலையினை இந்த பாக்டீரியா தாங்கிக்கொண்டு நீண்ட நாட்கள் குறைந்த வெப்பநிலையில் உயிரோடு இருக்கும்.
- ஆழ்கூளத்தில் இருக்கும் அமோனியா வாயு இந்த பாக்டீரியாவினை செயலிழக்கச் செய்து விடும். மேலும் இந்த பாக்டீரியா 37 0 C வெப்பநிலையில் 1-2 நாட்கள் வரை உயிரோடு இருக்கும்.
- இந்நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த கோழிகளின் மூச்சுக்குழல், பெருங்குடல் பகுதி, முட்டைக்குழாய் போன்றவற்றில் ஈ.கோலை பாக்டீரியா நீண்ட நாட்களுக்கு இருக்கும்.
- முட்டைகளின் வழியாக இந்த பாக்டீரியா பரவுவதில்லை
- பூச்சிகள் இந்நோயினைப் பரப்புகின்றன. இந்நோயினைப் பரப்பும் பூச்சிகளைப் பறவைகள் அல்லது கோழிகள் உட்கொள்ளும் போது இந்நோயினால் கோழிகள் பாதிக்கப்படுகின்றன.
- அதிக எண்ணிக்கையிலான ஈ.கோலை பாக்டீரியா கோழிப்பண்ணையின் சுற்றுப்புறச் சூழ்நிலையில் எச்சம் மூலம் பரவி நீண்ட நாட்களுக்கு உயிரோடு இருக்கும்.
- குஞ்சு பொரிப்பகங்களில்ஈரப்பதம் குறைவாக இருக்கும் சூழ்நிலைகளில் அதிகப்படியாக ஈ.கோலைதாக்குதல் குஞ்சுகளுக்கு ஏற்படும். ஆனால் உடல் முழுவதும் ஈ.கோலை நோய்த்தொற்று ஏற்படுவதற்கு சுற்றுப்புற சூழ்நிலைகளும் மற்ற நோய்க்கிருமித் தொற்றுகளும் காரணமாக இருக்கின்றன.
- மைக்கோபிளாஸ்மோசிஸ், சிறு மூச்சுக்குழல் நோய், நியூகேசில் நோய் எனும் இராணிக்கெட் நோய், இரத்தக்கழிச்சல், வான்கோழிகளுக்கு ஏற்படும் பார்டொடெல்லோசிஸ் போன்ற நோய்கள் கோழிகளுக்கு கோலிபேசில்லோஸிஸ் நோய் ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கின்றன.
- காற்று மாசுபாடு, சுற்றுப்புற சூழ்நிலைகளால் ஏற்படும் அயற்சி போன்றவையும் ஈ.கோலை நோய்த்தொற்று ஏற்படக் காரணமாக இருக்கின்றன.
- குஞ்சுப் பொரிப்பகங்களில் குறைவான ஈரப்பதம் இருப்பது குஞ்சுகளுக்கு அதிகப்படியான ஈ.கோலை நோய்த்தொற்று ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. புதிதாகப் பொரிக்கப்பட்ட கோழிக்குஞ்சுகளில் ஈ.கோலை பாக்டீரியா வேகமாகக் குஞ்சுபொரிப்பகத்தில் உள்ள கோழிக்குஞ்சுகளுக்கிடையே பரவுகின்றன.
நோய் அறிகுறிகள்
01 Cassiated egg mass inside the oviduct
|
02 Egg peritonitis
|
03 Inflammed unabsorbed yolk sac with abnormal colour
|
Depression and disinclination to move
|
Mortality in a batch of chicks - first week after hatching
|
Swollen Head Syndrome
|
- பாதிக்கப்பட்ட கோழிகளில் சுவாச மண்டலம் சார்ந்த நோய் அறிகுறிகள், சோர்ந்து காணப்படுதல், பசியின்றிக் காணப்படுதல்,நகர முடியாமல் இருத்தல்
- கோழிகளின் ஆசன வாய் ஈரமாகக் காணப்படுதல் மற்றும் கழிச்சல் ஏற்படுதல்
- கோழிக்குஞ்சுகளில் தொப்புள் பகுதியில் ஈ.கோலே நோய்த்தொற்று ஏற்படுவதால் கோழிக்குஞ்சுகளில் அவற்றின் ஒரு வார வயதில் இறப்பு ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட கோழிக்குஞ்சுகள் சோர்ந்து, வயிறு உப்பி, தொப்புள் பகுதி வீங்கிக் காணப்படுவதுடன், வெப்ப ஆதாரத்திற்கு அருகில் கூட்டமாக அடைந்து காணப்படும்.
- தலை வீங்கிக் காணப்படும் நோய் நிலையில் தலை வீங்கிக் காணப்படும்.
நோய் பாதிக்கப்பட்ட கோழிகளின் உடலில் காணப்படும் நோய் அறிகுறிகள்
- கோலி செப்டிசீமியா நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளுடைய அவற்றுடைய காற்றுப்பைகளின் உட்சவ்வில் அழற்சி, கல்லீரல் சுற்றி ஒரு வெள்ளை சவ்வு போன்று படிதல், இருதயத்தைச் சுற்றி வெள்ளை சவ்வு படிதல், மேலும் நார் நிறைந்த நீர் போன்று வடிதல்
- கோழிக்குஞ்சுகளின் தொப்புள் கொடி பாதிக்கப்படும் போது, அவற்றின் வயிற்றில் மஞ்சள்கரு பாதிப்புக்குள்ளாகி, அவற்றில் மஞ்சள் கரு உறிஞ்சப்படாமல் இருத்தல், நிறம், வாசனை, தன்மை போன்றவை மாறியிருத்தல்
- முட்டைக் குழாய் அழற்சி ஏற்பட்டு அவற்றின் குடல் சவ்வு அழற்சி, அவற்றின் வயிற்றில் மஞ்சள் கரு அப்படியே இருத்தல், முட்டைக் குழாய் அடைப்பு ஏற்படுதல், கருமுட்டைப் பை உடைந்து போதல், விரும்பத்தகாத வாசனை ஏற்படுதல்
- கோலிகிரோனுலோமா எனும் உறுப்புகளில் கட்டி ஏற்படும் நிலையில் சிறிய தானிய அளவிலான கட்டிகள் கல்லீரல், குடல் மற்றும் குடலைச் சுற்றிய சவ்வில் கட்டிகள் ஏற்படுகிறது.
- காற்றுப்பை பாதிக்கப்படும் நோய் நிலையில், காற்றுப்பைகள் வீங்கி, வெள்ளையான நீர் தேங்குதல்
- முழுமையாக உருவான முட்டை அல்லது அரைகுறையாக உருவான முட்டை பாதிக்கப்பட்ட கோழிகளின் வயிற்றில் தேங்கி, முட்டைக் குழாயில் தேங்கி, குடற் சவ்வில் ஒட்டியும், உள்உறுப்புகளிலும் ஒட்டிக் கொண்டு இருத்தல்
நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல்
Chlorination of drinking water
|
Diet with protein containing feed
|
Biosecurity
|
- நோயினை ஏற்படுத்துவதற்குக் காரணமான இதர காரணிகள், சுற்றுப்புற சூழ்நிலைகளில் ஏற்படும் மாறுபாடுகள், மிக சீக்கிரமாக கோழிகளின் இளம் வயதிலேயே எதிர் உயிரி மருந்துகளை உபயோகிக்க ஆரம்பிப்பது போன்றவற்றைக் கட்டுப்படுத்துதல்
- சுகாதாரம் மற்றும் உயிர்ப்பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதால் முட்டைகள் பாதிக்கப்பட்ட கோழிகளின் எச்சத்தால் அசுத்தமடைவதைத் தடுத்தல்
- நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளிலிருந்து வெளியேறும் எச்சம், மற்றும் ஆழ்கூளம் போன்றவற்றை முறையாக அப்புறப்படுத்துவதால், தண்ணீர் மாசுபடுதல், பண்ணை சுற்றுப்புறம் மாசுபடுவது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
- நோய்க்கிளர்ச்சி ஏற்படுவதற்குக் காரணமான அயற்சி, குறைந்த இடத்தில் அளவிற்கு அதிகமாக கோழிகளை வளர்த்தல் போன்றவற்றைத் தவிர்த்தல்
- புரதச் சத்து, செலினீயம், வைட்டமின் ஈ போன்றவற்றைதீவனத்தில் தேவைப்படும் அளவு சேர்ப்பதால் கோலிபேசில்லோசிஸ் நோயினைக் கட்டுப்படுத்துலாம்.
- தண்ணீரில் குளோரின் கலப்பதால் பாக்டீரியா கொல்லப்படுகிறது.
இரத்தக்கழிச்சல்
நோயின் தன்மை
Heavy mortality in broilers
|
- கோழிகளைப் பாதிக்கக்கூடிய புரோட்டோசோவால் ஏற்படும் ஒரு முக்கியமான நோய் இரத்தக்கழிச்சல் ஆகும்.
- கோழிகளின் 3-6 வார வயதில் இந்நோயின் தாக்கம் அதிகமாகக் காணப்படும்.
- இறைச்சிக் கோழிகளிலும், ஆழ்கூளத்தில் வளர்க்கப்படும் கோழிகளிலும் அதிக அளவு இறப்பை இரத்தக்கழிச்சல் ஏற்படுத்துகிறது.
- இந்நோய் கோழி வளர்ப்போருக்கு அதிக அளவு பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் ஒரு பெரிய காரணமாகும்.
நோய்க்கான காரணங்கள்
Cockroach
|
rodent
|
Seven species of genus Eimeria
|
- இந்நோய் ஐமீரியா எனும் புரோட்டோசோவாவின் ஏழு வகைகளால் ஏற்படுகிறது.
- இந்த ஏழு வகைகளுக்கும் இடையில் எதிர்ப்பு சக்தி ஒற்றுமை இல்லை. அதாவது ஒரு வகையினால் பாதிக்கப்பட்ட கோழிகள் மற்றொரு வகையினால் பாதிக்கப்படும். ஒரு வகைக்கு எதிராக உருவான நோய் எதிர்ப்புத் திறன் மற்றொரு வகை ஐமீரியா புரோட்டோசோவாவின் தாக்குதலுக்கு எதிராக செயல்படாது.
- ஐமீரியா டெனல்லா, ஐ. நெக்காட்ரிக்ஸ், ஐ.புருனெட்டை போன்ற ஐமீரிய வகைகள் கோழிகளில் அதிக எண்ணிக்கையில் பாதிப்பையும், இறப்பையும் ஏற்படுத்துகின்றன.
- ஐ.டெனல்லா கோழிகளின் பெருங்குடலையும், ஐ.நெக்காட்ரிக்ஸ் சிறுகுடலின் நடுப்பகுதியினையும், ஐ.புருனெட்டை சிறு குடலின் கடைசிப் பகுதியையும் பாதிக்கிறது.
- ஐ.மேக்சிமா, ஐ.அசருலினா போன்றவை மிதமான நோயினை ஏற்படுத்தும். ஐ.மேக்சிமா சிறு குடலின் நடுப்பகுதியினை பாதிக்கிறது. ஐ.அசருலினா சிறு குடலின் மேற்பகுதியினைப் பாதிக்கும்.
- ஐமீரியாவின் முட்டைகளைக் கோழிகள் வாய் வழியாகச் சென்று நோயினை ஏற்படுத்துகிறது.
- ஐமீரியா முட்டைகளால் அசுத்தமடைந்த தீவனம், தண்ணீர் மூலம் பரவுகிறது.
- இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளின் எச்சம் மூலம் ஐமீரியாவின் முட்டைகள் சில வாரங்கள் மற்றும் சில நாட்களுக்கு வெளியேற்றப்படுகின்றன.
- மனிதர்களின் நடமாட்டம், உபகரணங்கள், செருப்புகள் மற்றும் இதர ஐமீரியா முட்டைகளால் அசுத்தமடைந்த உயிரற்ற பொருட்களின் மூலமும் இந்நோய் பரவுகிறது.
- கரப்பான் பூச்சிகள், எலியினைத்தைத் சார்ந்த விலங்குகள், வனப்பறவைகள் போன்றவற்றால் ஐமீரியா புரோட்டோசோவா பரப்பப்படுகிறது.
நோய் அறிகுறிகள்
01 Distended small intestine filled with fluids & clotted blood
|
02 Distended small intestine filled with fluids & clotted blood
|
03 Distended small intestine filled with fluids & clotted blood
|
Bloody diarrhoea
|
Dehydration
|
Drooping wings
|
- பாதிக்கப்பட்ட கோழிகளின் உடலில் தண்ணீர் வற்றி, இறக்கைகள் தொங்கிக் கொண்டு, இறகுகள் துருத்திக் கொண்டு இருக்கும்.
- பாதிக்கப்பட்ட கோழிகள் கூட்டமாக ஒரு இடத்தில் அடைந்து காணப்படுதல். மேலும் பாதிக்கப்பட்ட கோழிகளில் தண்ணீர் போன்ற அல்லது இரத்தம் கலந்த கழிச்சல் காணப்படுதல்
- பாதிக்கப்பட்ட கோழிகளின் எச்சத்தில் இரத்தம், சளி போன்ற கோழை கலந்து காணப்படுதல்
- பாதிக்கப்பட்ட கோழிகள் உடல் மெலிந்து, இரத்த சோகையுடன் காணப்படுதல்
- கோழிகள் ஐமீரியாவால் பாதிக்கப்பட்ட 5 முதல் 6 நாட்கள் கழித்து அதிக அளவில் இறப்பு ஏற்படுதல்
- உடல் எடை அதிகரிப்பது குறைதல்
- முட்டையிடும் கோழிகளில் முட்டை உற்பத்திக் குறைதல்
நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளின் உடலில் ஏற்படும் நோய் அறிகுறிகள்
- பாதிக்கப்பட்ட கோழிகளின் பெருங்குடலில் இரத்தம் உறைந்து காணப்படுதல்
- சிறுகுடலில் நடுப்பகுதி அதன் சாதாரண அளவினை விட இரண்டு மடங்கு வீங்கிக் காணப்படுதல்
- குடல் பகுதி முழுவதும் இரத்தம் தேங்கிக் காணப்படுதல்
- சிறு குடலின் உட்சவ்வு முழுவதும் இரத்தத்திட்டுகள் காணப்படுதல்
- குடலின் உட்சவ்வுப் பகுதி வீங்கி தடித்துக் காணப்படுதல்
நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல்
Coccidiosis Vaccine
|
Use lime powder to dry the litters
|
Use slphonamide as feed additive
|
- இரத்தக்கழிச்சல் நோய்க்கு சிகிச்சை அளிப்பதை விட அதனைத் தடுப்பது மிகவும் எளிதானது.
- இந்நோயினை மருந்துகள், நல்ல செயல்திறன் வாய்ந்த தடுப்பூசியினை இனப்பெருக்கக் கோழிகள் அல்லது முட்டைக் கோழிகளுக்கு அளிப்பது போன்றவற்றை உபயோகிப்பதன் மூலம் இரத்தக்கழிச்சலைத் தடுக்கலாம்.
- இரண்டு வகையான தடுப்பூசிகள் இரத்தக்கழிச்சல் நோயினைக் கட்டுப்படுத்துவதற்கு இருக்கின்றன.
- குடிதண்ணீர் மூலம் கோழிகள் 5-9 வார வயதில் தடுப்பூசிகளை தண்ணீர் வழியாக அளித்தல்
- குஞ்சுகள் அவற்றின் இளம் வயதிலும், வளரும் பருவத்திலும் அவற்றின் தீவனத்தில் இரத்தக்கழிச்சல் நோயினைத் தடுப்பதற்கான மருந்தினை தீவனத்தில் சேர்த்தல். இதற்கு ஷட்டில் புரோகிராம் என்று பெயர்.
- மேற்கூறிய முறையில் இரத்தக்கழிச்சல்நோய்க்கான மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி தோன்றாது.
- சுகாதாரம் மற்றும் உயிர்ப்பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதாலும், தீவனம் மற்றும் தண்ணீர் போன்றவை கோழிகளின் எச்சங்களால் அசுத்தமடைவதைத் தடுப்பதால் நோய் வருவதைத் தடுக்கலாம்.
- உலர்ந்த ஆழ்கூளம், ஆழ்கூளத்தை அடிக்கடி கிளறி விடுதல் போன்ற செயல்முறைகளால் ஐமீரியா முட்டைகள் ஸ்போருலேட் ஆவதைத் தடுப்பதால்,இரத்தக்கழிச்சல் நோய் ஏற்படுவதைத் தடுக்கிறது.
- மழைக் காலங்களில் சுண்ணாம்புத்தூளை ஆழ்கூளத்தில் தெளிப்பதால் ஆழ்கூளம் உலர்ந்து விடுவதுடன்,அதிலுள்ள ஐமீரியாவின் முட்டைகளும் அழிந்து விடும்.
- தீவனத்தில் ஐமீரியா நோய்க்கிருமிகளுக்கெதிரான மருந்துகளை சேர்ப்பதால், கோழிகள் தீவிர இரத்தக்கழிச்சல் நோயினால் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம்.
- தீவனத்தில் உபயோகப்படுத்தப்படும் ஐமீரியா நோய்க்கிருமிகளுக்கெதிரான மருந்துகளை ஒவ்வொரு 4-6 மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். இதனால் அவற்றின் செயல்திறன் பராமரிக்கப்படுவதுடன், இந்த மருந்துகளுக்கெதிராக ஐமீரியா நோய்க்கிருமிகள் எதிர்ப்பு சக்தியினைப் பெறுவதையும் தடுக்கலாம்.
- நோய் பாதிப்புகள்ளான சமயங்களில் தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிகிச்சை அளிக்க வேண்டும்.
பறவைக் காய்ச்சல்
நோயின் தன்மை
Drop in egg production
|
Mortality
|
- இது கோழியினங்களின் சுவாச மண்டலத்தைத் தாக்கி, முட்டை உற்பத்தியைக் குறைத்து, 100% வரை இறப்பினை ஏற்படுத்தக்கூடிய வைரஸால் ஏற்படும் நோயாகும்.
- இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளிலிருந்து, மனிதர்களுக்கு இந்த நோய் பரவும்.
நோய்க்கான காரணங்கள்
Disease is not transmitted through eggs
|
Influenza virus type A.
|
Wild birds transmit disease from one place to another
|
- இந்நோய் இன்புளுயன்சா ஏ வைரஸால் ஏற்படுகிறது.
- பறவைக் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளின் எச்சம், மற்றும் இதர உடலிலிருந்து வெளியேறும் திரவங்களில் இந்த வைரஸ் இருக்கும். மேலும் வெப்பம், சூரிய ஒளி, காய்ந்து விடுதல் போன்ற காரணங்களால் இந்த வைரஸ் கொல்லப்படாது. இரசாயன கிருமி நாசினிகளான ஃபார்மால்டிஹடு, சோடியம் ஹைப்போ குளோரைட் போன்றவற்றாலும் கொல்லப்படாது. குறைந்த சுற்றுப்புற வெப்பநிலையில் இந்த வைரஸ் நீண்ட நாட்களுக்கு உயிரோடு இருக்கும்.
- காற்றின் மூலமாகவும், கோழிகளுக்கு இடையே நேரடியாகவும், உயிரற்ற பொருட்கள் (உபகரணங்கள், செருப்புகள், துணிகள், வாகனங்கள்) மூலமாகவும் இந்நோய் பரவுகிறது.
- பாதிக்கப்பட்ட கோழிகளின் உடலிலிருந்து வெளியேறும் எல்லா திரவங்கள், எச்சம் போன்றவை கோழிப்பண்ணையிலுள்ள உபகரணங்களை அசுத்தமடையச் செய்து விடுகின்றன.
- முட்டைகளின் வழியாக இந்நோய் பரவுவதில்லை.
நோய் அறிகுறிகள்
01 haemorrhages in thigh muscles
|
02 Swollen and cyanotic face, wattle and comb
|
03 Swollen and subcutaneous haemorrhages in feet and shank
|
Very high mortality
|
- குறைவான பாதிப்பினை ஏற்படுத்தும் பறவைக் காய்ச்சல் வைரஸ் கோழிகளின் சுவாச மண்டலம், சீரண மண்டலம், சிறுநீரக மண்டலம், இனப்பெருக்க மண்டலம் போன்றவற்றின் உறுப்புகளைப் பாதித்து, அவை தொடர்பான நோய் அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன.
- பாதிக்கப்பட்ட கோழிகளில் இருமல், தும்மல், மூச்சு விடும் போது சத்தம் ஏற்படுதல், தீவனம் எடுக்ககாமை, சோர்ந்து காணப்படுதல், முட்டை உற்பத்தி குறைதல், முட்டை ஓடு மெல்லியதாக மாறுதல், கழிச்சல் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்படும்.
- பாதிக்கப்பட்ட கோழிகளின் தாடி மற்றும் கொண்டை வீங்கிக் காணப்படுதல்
- நாசித்துவாரங்களிலிருந்து சளி வடிதல், மேலும் அதிகப்படியாக உமிழ்நீர் சுரத்தல்
- தீவிர பறவைக்காய்ச்சல் நோயினை ஏற்படுத்தும் பறவைக்காய்ச்சல் வைரஸ், நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளின் எல்லா உறுப்புகளையும் பெரும்பாலும் பாதித்து, எந்த விதமான அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல் இறப்பினை ஏற்படுத்தும்.
- இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளின் செயல்பாடுகளும், சத்தம் எழுப்பதலும் குறைந்து, கோழிப்பண்ணைகள் அமைதியாகக் காணப்படும்.
- கோழிகளின் நரம்பு மண்டலம் இந்த நோயால் பாதிக்கப்பட்டு கழுத்து மற்றும் தலையில் வலிப்பு, நிற்க முடியாமை, கழுத்துத் திருப்பிக்கொண்டு இருத்தல், உடல் விரைத்துக் காணப்படுதல், அசாதாரணமாக தலையினை வைத்துக் கொண்டு இருத்தல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளின் உடலில் காணப்படும் நோய் அறிகுறிகள்
- கோழிகளின் பாதத்தில் பொட்டுப் பொட்டாக இரத்தத் திட்டுகள் காணப்படும்.
- கோழிகளின் தொடை மற்றும் நெஞ்சுப் பகுதியில் இரத்தத் திட்டுகள் காணப்படும்.
- மூச்சுக்குழலின் உட்பகுதி சவ்வில் இரத்தம் கசிந்து காணப்படுதல்
- பாதிக்கப்பட்டக் கோழிகளின் உட்புற உறுப்புகளில் இரத்தத்திட்டுகள் காணப்படுதல்
நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல்
- கண்டிப்பான உயிர்ப்பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதால், பறவைக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகள் பண்ணைக்குள் நுழைவதைத் தடுத்து பறவைக்காய்ச்சல் பண்ணையிலுள்ள கோழிகள் நோயினால் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம்.
- தடுப்பூசிகள் அளிப்பதால் நோய் அறிகுறிகள் ஏற்படுவதையும், பாதிக்கப்பட்ட கோழிகளில் இறப்பு ஏற்படுவதையும் தடுக்க முடியும். மேலும் கோழிகளிலிருந்து பறவைக்காய்ச்சல் வைரஸ் வெளியேறுவதையும் தடுக்கலாம்.
- நோயினால் பாதிக்கப்பட்டு இறந்த கோழிகள் மற்றும் அவற்றின் உடலிலிருந்து வெளியேற்றப்படும் திரவங்கள் மற்றும் எச்சத்தை முறையாக அப்புறப்படுத்தி, நோய் பாதித்த கோழிப்பண்ணைகள் மற்றும் அவற்றிலுள்ள உபகரணங்களை சோடியம் ஹைப்போகுளோரைட் (5.25%), சோடியம் ஹைட்ராக்சைடு (2%), சோடியம் கார்போனேட் (4%) மற்றும் பீனாலிக் பொருட்களைப் பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
- நோய்க்கிருமிகளால் அசுத்தமடைந்த முட்டைகள், தீவனம், ஆழ்கூளம் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளை குழியில் போட்டு, சுண்ணாம்பு தூள் போட்டு புதைத்து விட வேண்டும்.
- பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணைகளிலிருந்து உபகரணங்களை மாற்றுதல் மற்றும் மனிதர்களின் நடமாட்டத்தைத் தடுக்க வேண்டும்.
- ஆழ்கூளம் மற்றும் கோழிக்குப்பைகளை எரித்தல், புதைத்தல் மற்றும் மக்கச் செய்தல் போன்ற செயல்முறைகளால் அவற்றிலுள்ள வைரஸை அழிக்கலாம்.
- செயலிழக்கப்பட்ட இன்புளுயன்சா வைரஸ் தடுப்பூசிகளைப் பயன்படுத்தி பறவைக்காய்ச்சல் நோயால் கோழிகளுக்கு ஏற்படும் பாதிப்பினைக் குறைப்பதுடன், கோழிகளில் இறப்பு ஏற்படுவதையும் தடுத்து, பண்ணையாளர்களுக்கு நட்டம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
- மேலும், தடுப்பூசி அளிப்பதால் கிடைக்கும் எதிர்ப்பு சக்தி, தடுப்பூசியிலுள்ள வைரஸின் வகைக்கு மட்டுமே கிடைக்கும். எனவே இன்புளுயன்சா வைரஸின் எல்லா வகைகளுக்கும் தடுப்பூசி அளிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமற்றதாகும். ஒரு பகுதியில் நோய் ஏற்படுத்தும் வைரஸைக் கண்டறிந்த பிறகு அதற்கு தடுப்பூசி தயாரித்து, நோயின் தாக்குதலைக் குறைக்கலாம்.
- பறவைக்காய்ச்சல் நோய்க்கிளர்ச்சி ஏற்பட்டிருந்தால், அதை கவனிப்பதெற்கென உள்ள அலுவலர்களுக்கு உடனடியாக நோய்க்கிளர்ச்சி ஏற்பட்டிருப்பதைத் தெரிவிக்க வேண்டும்.
அஸ்காரியாசிஸ்
நோயின் தன்மை
Anaemia and weight loss
|
Young birds up to 3 months of age are more susceptible
|
- This is a worm infestation of chickens.
- Young birds up to 3 months of age are more susceptible.
- It has significant effect on the production of birds.
- இந்நோயில் கோழிகளுக்கு கழிச்சல், இரத்த சோகை, எடை குறைதல், இறப்பு விகிதம் அதிகரித்தல், முட்டை உற்பத்திக் குறைதல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
நோய்க்கான காரணங்கள்
Ascaridia galli
|
Malnourished bird
|
Reusing of litter materials
|
- அஸ்காரடியா காலி எனும் உருளைப்புழு கோழிகளின் குடலில் ஒட்டுண்ணியாக இருந்து பாதிப்பினை ஏற்படுத்துகிறது.
- அஸ்கார்டியா வகையினைச் சார்ந்த புழுக்கள் பறவைகளைத் தாக்கும் பெரிய உருளைப்புழுக்களாகும்.
- சத்துக்குறைபாடுடைய கோழிகளை இந்தப் புழுக்கள் பொதுவாக பாதிக்கின்றன.
- ஆழ்கூளத்தைத் திரும்பத்திரும்ப கறிக்கோழிகள் வளர்ப்பதற்கு உபயோகப்படுத்தும் போது இந்த புழுக்களின் தாக்கம் கோழிகளில் தீவிரமாக ஏற்படுகிறது.
- வைட்டமின் ஏ, பி மற்றும் பி12, பல்வேறு தாது உப்புகள், புரதம் போன்றவற்றின் குறைபாட்டால் இந்தப் புழுக்களின் தாக்கம் கோழிகளில் தீவிரமாக ஏற்படுகிறது.
- அஸ்கார்டியா காலி புழுக்களின் முட்டைகளை உட்கொண்ட வெட்டுக்கிளிகள், மண்புழுக்கள், போன்றவற்றைக் கோழிகள் உட்கொண்டால் அவற்றுக்கு இந்தப் புழுக்களின் தொற்று ஏற்படுகிறது.
- போதுமான வெப்பநிலை, ஈரப்பதம், இருக்கும் போது முட்டைகள் சுற்றுப்புறத்தில் 10-12 நாட்கள் உயிரோடு இருக்கும்.
- இந்தப் புழுக்களின் முட்டைகள் குறைந்த வெப்பநிலைக்கு எதிர்ப்புத் திறன் பெற்றவை.
- மூன்று மாத வயதிற்கு மேல் உள்ள கோழிகள் இந்தப் புழுக்களின் தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தியினைப் பெற்றிருக்கின்றன.
நோய் அறிகுறிகள்
Occlusion of thread like worms in intestine
|
Anaemic
|
Decreased egg production
|
- இப்புழுக்களின் தாக்குதலால் உடல் வளர்ச்சிக் குன்றி, எடை குறைவாகவும் இருக்கும்.
- இப்புழுக்களால் பாதிக்கப்பட்ட கோழிகளில் இரத்தசோகை, கழிச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
- அதிகப்படியாக கோழிகளில் புழுக்களின் தாக்கம் ஏற்படும் போது இரத்தக்கழிச்சல் கோழிகளுக்கு ஏற்படும்.
- அதிகப்படியாக கோழிகளில் புழுக்களின் தாக்கம் ஏற்படும் போது இரத்தக்கழிச்சல் கோழிகளுக்கு ஏற்படும்.
- பாதிக்கப்பட்ட கோழிகள், உடல் மெலிந்து, முட்டை உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளின் உடலில் ஏற்படும் நோய் அறிகுறிகள்
- நூல் போன்ற புழுக்கள் பாதிக்கப்பட்ட கோழிகளின் குடலில் அடைத்துக் கொண்டிருக்கும்.
- அஸ்கார்டியா புழுக்கள் சில சமயங்களில் பாதிக்கப்பட்ட கோழிகளின் முட்டைகளில் கூட சில சமயம் இருக்கும். கேண்டிலிங் முறை மூலம் புழுக்கள் உள்ள முட்டைகளைக் கண்டறியலாம்.
நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல்
Changing litter material
|
Clean feeding troughs
|
Clean feeding
|
Clean water
|
- கோழிகளுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் பைப்பரசின் எனும் குடற்புழு நீக்க மருந்தினைப் பயன்படுத்தி குடற்புழுக்களை நீக்க வேண்டும்.
- வயது குறைவான கோழிகளை, வயதான கோழிகளிடமிருந்து பிரித்து வளர்க்க வேண்டும்.
- ஆழ்கூளத்தைத் திரும்பத் திரும்ப உபயோகிப்பதைத் தடுக்கவேண்டும்.
- ஆழ்கூளத்தைஅடிக்கடி மாற்றுவதால் கோழிகளில் இப்புழுக்களின் தாக்குதல் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
- மண், ஆழ்கூளம் போன்றவற்றை முறையாகக் கையாளுவதால்புழுக்களின் இடைநிலைத் தாங்கிகளை அவற்றிலிருந்து நீக்கம் செய்வதற்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
- தகுந்த பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி ஆழ்கூளத்திலுள்ள புழுக்களை அழிக்கலாம்.
- ஆழ்கூளத்தை எப்போதும் உலர்வாக வைத்திருக்க வேண்டும்.
- தீவனம் மற்றும் தண்ணீர் இந்த புழுக்களின் முட்டைகளால் அசுத்தமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- சுத்தமான தீவனத் தட்டுகள், மற்றும் தண்ணீர்த் தட்டுகளையே எப்போதும் உபயோகிக்க வேண்டும்.
- கோழிக்கொட்டகைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இறைச்சிக் கோழிகளுக்கான தடுப்பூசி அட்டவணை
வயது (நாட்களில்)
|
தடுப்பூசி
|
அளிக்கப்படும் வழி
|
0 நாள்
|
மேரக்ஸ் நோய்க்கான தடுப்பூசி
(எச் வி டி) |
0.2 மிலி, தோலுக்கடியில்
|
5-7 ம் நாள்
|
இராணிக்கெட் நோய்க்கான தடுப்பூசி -ஆர் டி வி எஃப்
|
மூக்கு அல்லது கண் வழியாக
|
10ம் நாள்
|
இன்ஃபெக்சியஸ் பிராங்கைட்டிஸ் நோய்க்கான தடுப்பூசி
|
மூக்கு அல்லது கண் வழியாக
|
12-14 நாட்கள்
|
ஐபிடி- இன்டர்மீடியேட்
|
மூக்கு அல்லது கண் வழியாக
|
28ம் நாள்
|
இராணிக்கெட் நோய்க்கான தடுப்பூசி– பூஸ்டர் (லசோட்டா)
|
தண்ணீர் வழியாக
|
முட்டைக் கோழிகளுக்கான தடுப்பூசி அட்டவணை
வயது (நாட்களில்)
|
தடுப்பூசி
|
அளிக்கப்படும் வழி
|
0 நாள்
|
மேரக்ஸ் நோய்க்கான தடுப்பூசி (எச் வி டி)
|
தோலுக்கடியில் 0.2 மிலி
|
5-7 வது நாள்
|
இராணிக்கெட் நோய்க்கான தடுப்பூசி -ஆர் டி வி எஃப்
|
கண் அல்லது மூக்கு வழியாக
|
10ம் நாள்
|
லீச்சி நோய்க்கான தடுப்பூசி (தேவைப்பட்டால்)
|
தண்ணீரில்
|
12-14 ம் நாள்
|
ஐபிடி – இன்டர்மீடியேட்
|
கண் அல்லது மூக்கு வழியாக அல்லது தண்ணீரில்
|
18-22 நாட்கள்
|
இன்ஃபெக்சியஸ் பிராங்கைட்டிஸ்
|
கண் அல்லது மூக்கு வழியாக அல்லது தண்ணீரில்
|
24-27 நாட்கள்
|
இன்ஃபெக்சியஸ் பிராங்கைட்டிஸ்பூஸ்டர் தடுப்பூசி
|
தண்ணீரில்
|
28-30 நாட்கள்
|
இராணிக்கெட் நோய்க்கான தடுப்பூசி– பூஸ்டர் (லசோட்டா)
|
தண்ணீரில்
|
6ம் வாரம்
|
கோழி அம்மை அல்லது இன்ஃபெக்சியஸ் கொரைசா (நோய்த் தாக்குதல் பொதுவாகக் காணப்பட்டால் மட்டும்)
|
தோலுக்கடியில்
|
8ம்வாரம்
|
இராணிக்கெட் நோய் – ஆர்2பி அல்லது ஆர்டிவி கே
|
தோலுக்கடியில் அல்லது சதையில்
|
9ம் வாரம்
|
கோழி அம்மை தடுப்பூசி
|
இறக்கைப் பகுதியில்
|
12-13வாரம்
|
ஐபி பூஸ்டர்
|
தண்ணீரில்
|
18ம் வாரம்
|
இராணிக்கெட் நோய் – ஆர்2பி அல்லது ஆர்டிவி கே
|
தோலுக்கடியில் அல்லது சதையில்
|
45-50வாரம்
|
இராணிக்கெட் அல்லது லசோட்டா இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை
|
தண்ணீரில்
|
No comments:
Post a Comment