Saturday, December 17, 2011

ஆடு மேய்க்கலாம் வாங்க ! அபாரமான லாபம் இருக்கு!



செய்தி: தமிழக கிராம மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி இலவசமாக ஆடு, மாடுகளை வழங்கும் திட்டத்திற்கு அதிகாரிகளுடன் ஆலோசனை.

நெருக்கடி மிகுந்த சென்னை வேண்டாம் என்று சொல்லி, அங்கு  ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்த கணவன் மனைவி இருவரும் அந்த வேலையை விட்டு விட்டு சொந்த ஊரான தஞ்சாவூருக்கு போய் ஆட்டு பண்ணை தொடங்கியதாக பசுமை விகடனில் ஒரு கட்டுரை வந்தது. ஆடு வளர்ப்பு என்பது அந்த அளவு மனநிம்மதியும், செல்வமும் தரும் ஒரு நல்ல தொழில்.

ஆடுகளும், மாடுகளும் "கால்நடைச் செல்வங்கள்" என்று மதிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த செல்வங்கள் மறக்கப்பட்டு இன்றைக்கு இந்த தொழில்கள் எல்லாம் நசிந்து போயிருக்கின்றன. மாடுகள் குறைந்து போனதால் பாலுக்கு திண்டாட்டமாகி இருக்கிறது. ஆனால் ஆடு, மாடுகளை பண்ணையாக அமைத்து தொழில் செய்வதன் மூலம் சுயமாக பொருளாதாரத்தில் வளர்ச்சியடைய முடியும் என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. வித்தியாசமான சிந்தனை உள்ளவர்கள் ஆடுகளை பெருமளவில் பெருக்கி ஆட்டின் பாலை "பாக்கெட் வடிவில் " பேக் செய்தும் விற்பனை செய்யலாம்.

தாய்ப்பாலுக்கு மிகவும் நிகரான புரதங்கள், நோய்எதிர்ப்பு சக்தி போன்றவை பசுவின் பாலை விட ஆட்டுப்பாலில் மட்டுமே அதிகம். இந்த நிலையில் போதிய இடவசதி இல்லாதவர்கள் கூட சிறிய இடத்தில் ஆடுகளை வளர்க்கும் வகையில் "பரண் மேல் ஆடு வளர்ப்பு " என்னும் ஒரு தொழில் நுட்பத்தை நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியை சேர்ந்த டாக்டர்.பூவராஜன் நமக்கு செய்தியாக அளித்துள்ளார். விவசாயம் செய்ய போதிய நிலமில்லாத இஸ்ரேல் நாடு இதே போல் வீட்டு அலமாரி போன்ற அமைப்பில் பயிர்களை விளைவித்து வருவது இந்த இடத்தில் நினைவு கூறத்தக்கது. இதோ பரண்மேல் ஆடு வளர்ப்பு உங்கள் பார்வைக்கு.........

தமிழகத்தின் பொருளாதார வளத்திற்கு கால்நடை செல்வங்கள் பெரிய பங்களிப்பை செய்து வருகின்றன. குறிப்பாக ஆடு வளர்ப்பு நல்ல லாபம் தரும் தொழிலாக இருக்கிறது. படித்த இளைஞர்கள் தற்போது இந்த தொழிலில் இறங்கி வருவது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மேலும் இந்த தொழிலில் இறங்க திட்டமிடுபவர்களுக்கு பரண்மேல் ஆடு வளர்ப்பு என்னும் நவீன முறை கைகொடுப்பதாக இருக்கும்.

ஆடு மேய்க்கலாம்! ஆயிரமாயிரமா சம்பாதிக்கலாம்!

``நீயெல்லாம் ஆடு மேய்க்கத் தாண்டா லாயக்கு' என்று யாராவது உங்களைப் பார்த்து திட்டினால் கோபபபடாதீர்கள். சந்தோஷப்படுங்கள். ஏதோ ஒரு படிப்பைப் படித்து விட்டு நான்காயிரம், ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு ஆளாய் அலைவதை விட, வீட்டிலிருந்தபடியே உடம்பு நோகாமல் ஆடு வளர்த்து அதே பணத்தைச் சம்பாதிக்கலாம். இதுக்கு நான் கியாரண்டி'' - நம்பிக்கையோடு உறுதி தருகிறார் தாமோதரன்.

விழுப்புரம் - பாண்டிச்சேரி சாலையில் வில்லியனூருக்குப் பக்கத்தில் இருக்கிற சிறிய கிராமம் பெரம்பை. இங்கு பெஸ்ட் பார்ம் என்கிற பெயரில் ஒரு ஆட்டுப் பண்ணையை நடத்தி வருகிறார் தாமோதரன். அதில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆடுகளையும் வளர்த்து வருகிறார். ஆடு வளர்ப்புக்கு இவர் வந்ததே சுவாரஸ்யமான தனிக்கதை.

``நான் ஒரு சென்னைவாசி. பிறந்தது, படித்தது எல்லாம் சென்னையில்தான். தமிழ்நாட்டு கிராமங்களில் கலைப் பொருட்களை இலங்கை, மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா என்று பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதுதான் என் வேலை.

எனக்கு காந்தியத்தில் நிறைய ஈடுபாடு உண்டு. கிராமங்களின் முன்னேற்றம்தான் உண்மையான முன்னேற்றம் என்று உறுதியாக நம்புகிறவன் நான். முப்பத்திரண்டு வயதில் திடீரன் எனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அந்த வயதிலேயே `ஓப்பன் ஹார்ட் அறுவை சிகிச்சை நடந்தது. `இனிமேல் நீண்ட தூரம் அடிக்கடி பயணம் செய்யக்கூடாது என்றார்கள் மருத்துவர்கள். கிராமத்தில் தங்கி மக்களுக்காகப் பணி செய்ய சரியான வாய்ப்பு இது என்று நினைத்து, பாண்டிச்சேரிக்கு வந்தேன். ஆடு வளர்ப்பில் இறங்கினேன். இப்போது எனக்கும் ஓரளவுக்குச் சம்பாத்தியம் கிடைக்கிறது. மக்களுக்கும் வேலை தர முடிகிறது'' என்கிறார் தாமோதரன்.

ஆடு வளர்ப்பது பற்றி எ முதல் இசட் வரை அருமையாகச் சொல்லித் தருகிறார் தாமோதரன். அவர் சொல்வதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்போமா?

``ஆடு வளர்ப்பது லாபகரமான தொழில் என்பதில் யாருக்கும் எள்ளளவு சந்தேகமும் வேண்டாம். நாம் வளர்க்கும் ஆடுகளை மிக மிக எளிதாக மார்க்கெட்டிங் செய்துவிடலாம் என்பதால், இந்தத் தொழிலில் ஆண், பெண் வித்தியாசமின்றி யார் வேண்டுமானாலும் தாராளமாக இறங்கலாம்.

கொட்டில் முறையில் நீங்கள் ஆடு வளர்க்கப் போகிறீர்கள் என்றால் உங்களுக்கு சொந்தமான இடத்திலேயே ஷெட் அமைத்து, ஆடு வளர்க்கலாம். அதற்கு உங்களுக்கு இரண்டு ஏக்கர் இடம் இருந்தால் போதும். பகலில் வெளியே ஆட்டை மேயவிட்டு, இரவில் கொட்டிலில் அடைத்துவிடலாம். மழைக் காலங்களில் ஆட்டை வெளியே கொண்டு போய் மேய்க்க முடியாதபோது, உங்களிடம் உள்ள இரண்டு ஏக்கரில் வளரும் பசுந்தீவனத்தை ஆடுகளுக்கு உணவாகக் கொடுக்கலாம்.

கொட்டில் முறையில் ஜமுனாபாரி வெள்ளாடு வளர்ப்பு

இம்முறையில் ஆடுகளுக்கு சிறந்த முறையில் கொட்டகை அமைத்து மேய்ச்சலுக்கு அனுப்பாமல், கொட்டகை யிலேயே தீவனம் கொடுத்து வளர்ப்பதாகும்.


இந்த முறையில் கொட்டகையில் தரையில் 6 செ.மீ. உயரத்திற்கு ஆழ்கூளம் இட்டு வளர்க்கலாம். ஆழ்கூளமாக கடலைப் பொட்டு, மரத்தூள், நெல், உமி போன்றவைகளை உபயோகப்படுத்தலாம். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை கூளத்தை வெளியில் எடுத்துவிட்டு பழையபடி மீண்டும் புதிய ஆழ்கூளத்தை நிரப்பவேண்டும். இதனால் சிறுநீர் மற்றும் ஆட்டு சாணத்திலிருந்து வெளியாகும் வாயுக்களான அமோனியா, கார்பன்டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு போன்ற வாயுக்கள் ஆடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. இம்முறையில் ஒவ்வொரு ஆட்டிற்கும் 20 சதுரடி இடமும், 15 அடி உயரமும் உள்ள கொட்டகை அமைத்தல் நன்று.

பயன்கள்: விவசாய நிலமற்றோரும் ஆடு வளர்ப்பை மேற்கொள்ளலாம். சுகாதாரமான பராமரிப்பு முறைகளை கையாண்டால் அதிக எடையுடைய குட்டிகளை பெறமுடியும்.

மேய்ச்சல் கலந்த கொட்டில் முறை: மேய்ச்சல் நிலம் குறைவாக உள்ள இடங்களில் 4-5 மணி நேர மேய்ச்சலுக்கு பிறகு கொட்டகைகளில் அடைத்து பசுந்தீவனம், அடர்தீவனம் மற்றும் உலர்தீவனம் கொடுத்து பராமரிப்பதாகும்.
பயன்கள்: இம்முறையில் ஆடுகள் நல்ல உடல் வளர்ச்சி அடைந்து அதிக எடையுடனும், ஆரோக்கியத்துடனும் காணப்படுகின்றன. மேய்ச்சல் முறையில் வளரும் ஆட்டின் வளர்ச்சியைவிட 3-4 மடங்கு வளர்ச்சி அதிகமாக இருக்கும். இம்முறையில் வளரும் ஆடுகளில் இருந்து 49 விழுக்காடு இறைச்சி கிடைக்கும்.

தீவிர முறை (உயர் மட்ட தரை முறை): இம்முறையில் தரையிலிருந்து 3 அடி உயரத்தில் சல்லடைத்தரையை மரப்பலகையிலோ அல்லது கம்பிகளிலோ கட்டவேண்டும். இரு பலகைகளுக்கிøடேய உள்ள இடைவெளி 2 செ.மீ. இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அமைப்பதால் ஆடுகளின் சாணம் மற்றும் சிறுநீர் 3 அடி பள்ளத்தில் விழுந்துவிடும். இதன்மூலம் ஆடுகள் நோய் பாதிப்பின்றி சுகாதாரமாக இருக்கவும் வழிவகுக்கும். இம்முறையில் கொட்டகையினை நன்முறையில் பராமரித்தால்

ஆடுகள் சுகாதாரமாகவும், அதிக எடையுடனும் காணப்படும். ஆடு இரண்டு வருடத்திற்கு மூன்று முறை குட்டி போடுகின்றன. 1 தடவை 2 குட்டிகள் போடும். அதன்படி 2 வருடத்திற்கு 6 குட்டிகள், 1 ஆண்டுக்கு 3 குட்டிகள்.

கூடுதல் லாபத்திற்கு- ஆடு வளர்ப்பு



ஒருங்கிணைந்த பண்ணை சார்ந்த விவசாயத்தில் உப தொழிலாக ஆடவளர்ப்பது கூடுதல் லாபம் ஈட்டித்தரும் என்று தஞ்சாவூர் கால்நடை பல்கலைக்கழபயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் என். புண்ணியமூர்த்தி கூறினார்.

தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாமில், புண்ணியமூர்த்தி பேசுகையில், நாட்டு இன ஆடுகளான குறும்பை, பள்ளை, சேலம் கருப்பு, கன்னி போன்ஆட்டினங்களை இறைச்சிக்காக வளர்க்கலாம். ராஜபாளையம் பகுதியில் கன்னி ஆடு இனங்களஅதிகம் உள்ளது.

வேலி தாண்டாத வெள்ளாடு வளர்ப்புதான் உகந்தது. இதற்கு கொட்டில் ஆடு வளர்ப்பமுறை என்று பெயர். சில கிராமங்களில் கால்நடைகளை அவிழ்த்துவிடக் கூடாதென கண்டிப்பஇருக்கிறது. அடுத்தவர் தோட்டத்தில் மேய்ந்து சேதம் விளைவிக்காத வகையில் இருக்கொட்டில் ஆடு வளர்ப்பு முறையே உகந்தது.

இதற்கு பசுந்தீவன உற்பத்தி முக்கியமானது. புல், செடி, கொடி, இலைகள் போன்பசுந்தீவனங்களை உற்பத்தி செய்த பின்னர்தான் கொட்டில் ஆடு வளர்ப்பு திட்டத்தை தொடங்வேண்டும்.

ஒரு ஏக்கரில் பசுந்தீவனம் உற்பத்தி செய்தால், 25 ஆடுகள் வரை வளர்க்கலாம். இவை இனவிருத்தி செய்து எண்ணிக்கை அதிகரிக்கும் போது, வளர்ந்த ஆடுகளை இறைச்சிக்காவிற்கத் தொடங்கலாம்.

ஒருங்கிணைந்த பண்ணை சார்ந்த விவசாயத்தில் கொட்டில் ஆடு வளர்ப்பு முறையபின்பற்றினால், ஆடுகளின் எரு, புளுக்கை போன்றவை, விவசாய எருவாக உதவும்.

ஆடுகளை வெளியில் மேயவிடாமல் பாதுகாப்பாக பண்ணை விவசாயத்தில் கொட்டிலமுறையை பின்பற்றி வளர்த்தால் அதன் மூலம் பல்வேறு வகைகளிலும் விவசாயத்திற்கநன்மையும், கூடுதல் வருவாயும் கிடைக்கும் என்று புண்ணியமூர்த்தி கூறினார்.

இந்த பயிற்சி முகாமில் போராசிரியர் வி. ரங்கநாதன் உரையாற்றினார் இதில் தஞ்சை மாவட்டம் முழுவதிலிருந்தும் பலர் பங்கேற்றனர்.

இரண்டே ஆணடில் இணையற்ற லாபம்



கொட்டிக் கொடுக்கும் கொட்டில் முறை ஆடு வளர்ப்பு !
பளிச்....பளிச்....
நாட்டு ரக வெள்ளாடுகள்.
நோய் தாக்குவதில்லை.
விரைவான வளர்ச்சி.
தோட்டங்களில் வெள்ளாடு வளர்ப்பவர்களுக்கு, ஆடுகளிடம் இருந்து பயிர்களைக் காப்பாற்றுவதுதான் பெரிய பிரச்னை. 'கொட்டில் முறை ஆடு வளர்ப்பு' இதற்கு மாற்றாக இருந்தாலும், அது அவ்வளவாக விவசாயிகளிடம் பிரபலமாகவில்லை. காரணம்... 'கொட்டில் முறையில் வெள்ளாட்டை நன்றாக வளர்க்க முடியாது. மேய்ச்சல் முறைதான் நன்றாக கைகொடுக்கும்' என்ற நம்பிக்கை விவசாயிகளிடம் ஆழமாகப் பதிந்திருப்பதுதான்.


ஆனால், இந்த நம்பிக்கையைத் தகர்க்கும் விதமாக, கொட்டில் முறையில் வெள்ளாடுகளைச் சிறப்பாக வளர்த்து வெற்றி கண்டு வருகிறார்... தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகிலுள்ள பி.துரிஞ்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம்.

ஆடுகள்-இரண்டு, பால் குடிக்கும் குட்டிகள்-ஐந்து... இவற்றை வைத்துக் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஆடு வளர்ப்பை ஆரம்பித்திருக்கிறார் பன்னீர்செல்வம். இன்று... 54 ஆடுகளாக அவை பெருகி நிற்கின்றன. இவர் வளர்ப்பது வெள்ளாடு வகைகளில் ஒன்றான பல்லையாடு இனத்தைச் சேர்ந்த 'நாய்ப்பல்லை' என்றழைக்கப்படும் நாட்டு ரக ஆடுகள். இவை, தர்மபுரி மாவட்டத்தின் பிரத்யேக ரகங்கள்.


பளீர் கொட்டில்!
பன்னீர்செல்வத்தை சந்திப்பதற்காக அவரது தோட்டத்துக்குச் சென்றபோது நம்மைக் கவர்ந்து இழுத்தது, தரையில் இருந்து ஆறடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆட்டுக் கொட்டில். அதன் வெளிப்புற உப்பரிகையில் இருந்து கழுத்தை நீட்டிக் கொண்டிருந்த கருப்பும் வெள்ளையுமான ஆட்டுக் குட்டிகள் நம்மைப் பார்த்து வினோத சத்தம் எழுப்பின. மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருப்பது போன்ற சிறுசிறு பலகைகளால் இணைக்கப்பட்ட சரிவான பாதை... அதேபோன்ற பலகைகளால் அமைக்கப்பட்டிருந்த தரைப்பகுதி... அத்தனை ஆடுகள் இருந்தும் படுசுத்தமாக 'பளீர்' என்று காட்சி அளிக்கும் கொட்டில்... என அனைத்துமே நம்மை கவர்வதாக இருந்தன.

ஆடுகளைப் பரிவோடு தடவிக் கொடுத்துக் கொண்டே பேச ஆரம்பித்தார், பன்னீர்செல்வம். ''எனக்கு ஆறு வயசு ஆகுறப்பவே என் தகப்பனார் இறந்துட்டார். அதனால அப்பயே விவசாயம் கத்துக்க ஆரம்பிச்சுட்டேன். பத்து, பன்னெண்டு வயசுல நானே தனியா விவசாய வேலைகளைப் பாக்க ஆரம்பிச்சுட்டேன்.

வெள்ளாடு வளர்ப்பு




ஆட்டுக் கொட்டில் பராமரிப்பு

ஆடுகளுக்கு எளிமையான கொட்டில் அமைப்பே போதுமானது. வெள்ளாடுகளைப் பொறுத்தவரை கடும் மழை, வெயில், பனி மற்றும் உனி, பேன் போன்ற ஒட்டுண்ணி ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் அளவு எளிய கொட்டகை அமைப்பே போதுமானது. கிராமங்களில் பெரும்பாலும் மரத்தடி (அ) குடிசை நிழலில் தான் ஆடுகளை வளர்க்கின்றனர்.

ஆட்டுக்குட்டிகள் வளர்ந்து ஓடும் வரை ஒரு பெரிய தலைகீழான கூடையைப் போட்டு மூடப்படுகின்றன. பொதுவாக ஆண் மற்றும் பெண் குட்டிகள் ஒன்றாகவே அடைக்கப்படுகின்றன.

வெள்ளாடுகளின் பால், இறைச்சி, உற்பத்திக்கு ஏற்றவாறு உள்ள ஒரு எளிமையான அமைப்பே போதுமானது. நகரங்களில் வசிப்போர் அல்லது அதிக அளவில் ஆடுகளை வளர்ப்போர் நல்ல காற்றோட்டமுள்ள, வடிகால் வசதியுடன், தேவையான இட வசதியுள்ள கொட்டகை அமைத்தல் நலம்.

நீண்ட முகப்பு கொண்ட முறை

இம்முறை மிகவும் குறைந்த செலவில் வெள்ளாடுகளுக்கு ஏற்ற வகையில் அமைக்க வல்லது. ஏற்கெனவே உள்ள கட்டிடத்தில் 1.5 மீட்டர் அகலமும் 3 மீ நீளமும் கொண்ட இடம் இரண்டு ஆடுகளுக்கு போதுமானது. இதில் 0.3 மீ அளவு தீவனத் தொட்டிக்கும் 1.2 மீ ஆட்டிற்கும் இடம் ஒதுக்கப்படுகிறது. 1.5 மீ இடம் இரண்டு பெட்டை ஆடுகளுக்கும் இடையே ஒரு சிறிய பிரிப்புச் சுவருடன் அமைக்கலாம். ஓடு அல்லது அட்டையிலான, குடிசை போன்ற மேற்கூரை அமைக்கலாம். பக்கங்களில் அடைக்காமல் உள்ளே ஆடுகளைக் கயிற்றில் கட்டி வைக்கலாம். அல்லது பெரிய ஜன்னல் போன்ற அமைப்புகளுடன் ஆடுகளைக் கட்டாமலும் விட்டு விடலாம். தரைப்பகுதி மண்ணாக இருப்பதை விட சிமெண்ட் பூச்சாக இருந்தால் குளிர்காலங்களில் ஆடுகளுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.

ஆடுகளைத் தனித்தனியே பராமரிப்பதானால் 1.8 மீ x 1.8 மீ இட அளவுடன் நல்ல காற்றோட்டமுள்ள 2.5 செ.மீ தடிமனுள்ள ஓட்டைகளுடன் கூடிய பலகையின் பக்கங்களிலும் இரும்பு வாளி போன்ற அமைப்பை தீவனத்திற்காகவும், நீருக்காவும் பயன்படுத்தலாம். இந்த வாளியை தரையிலிருந்து 50-60 செ.மீ அளவு உயரத்தில் வைக்கலாம்.

வெப்பப் பகுதிகளிலும், மழை அதிகமுள்ள பகுதிகளிலும் தரையிலிருந்து சிறிது உயரத்தில் கொட்டகையை அமைத்தல் நலம். அப்போது நல்ல காற்றும் கிடைக்கும், மழைக்காலங்களில் மழை நீர் கொட்டகையிலும் தேங்காமலும், சாரல் அடிக்கமால் இருக்கவும் இம்முறை மிகவும் ஏற்றது. தரையானது மரக்கட்டைகளால் சிறு இடைவெளியுடன் அமைந்து இருந்தால் ஒட்டுண்ணிகள் போன்ற நோய் பரப்பும் கிருமிகள், எளிதில் ஆடுகளைத் தாக்காமல் பாதுகாக்கலாம்.

கூரைகள் மூங்கில், தென்னங்கீற்று, பனை இலை, கோரைப்புல், வைக்கோல் போன்றவைகளில் ஏதேனும் ஒன்று கொண்டு அமைக்கலாம். ஆடுகளின் புழுக்கை, சிறுநீரை வெளியேற்றுவதற்கு சரியான அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

கிடா ஆடுகளின் கொட்டில்

கிடா ஆடுகளுக்கென தனியான கொட்டில் அமைத்து பாதுகாக்கவேண்டும். ஒரு கிடாவிற்கு 2.5 மீ / 2.0 மீ அளவுள்ள நீர் மற்றும் தீவனத் தொட்டியுடன் அமைந்த கொட்டில் போதுமானது, இரண்டு கிடாக்களை ஒரே கொட்டிலில் அடைத்தல் கூடாது. அதுவும் குறிப்பாக இனச்சேர்க்கைக் காலத்தில் அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்வதைத் தவிர்க்க, தனித்தனியே அடைப்பதே சிறந்தது.

தனி அறைக் கொட்டில்

0.75 மீ அகலமும் 1.2 மி நீளமும் கொண்ட மரத்தால் அல்லது உலோகத்தாலான ஒரு தனி அறை போன்ற பகுதி தனிக்கொட்டில் எனலாம். அதுவே இட அளவு 2 மீ ஆக இருந்தால் ஆடுகள் நீண்ட நேரம் தங்க வசதியாக இருக்கும்.
சினை ஆடுகள் மற்றும் குட்டிகுளுக்கான அறை

குட்டிகள் தனியான அறையில் கட்டப்படாமல் சுதந்திரமாக அதே சமயம் தாய் ஆடுகளை அனுமதியின்றி அணுகாதவாறு வைக்கப்பட்டிருக்கவேண்டும். குட்டிகளின் கொட்டில் உயரம் 1.3 மீ கதவும், சுவர்களும் இருக்கவேண்டும். அல்லது கூடை, உருளை போன்ற அமைப்புகளைப் பயன்படுத்தலாம். 1.8 மீட்டர் அளவுள்ள இடத்தில் 10 குட்டிகள் வரை அடைக்கலாம். இந்த கொட்டில் கன்று ஈனும் சமயத்தில் பெட்டை ஆடுகளைச் சுதந்திரமாக விடவும் உதவும். இம்முறையில் கொட்டகை அமைப்புச் செலவு மற்றும் ஆட்கூலிகள் குறையும்.

Saturday, December 10, 2011

Goat Farm



அறிமுகம்

எங்களது ஆட்டுப்பண்ணை எழுமலை அருகே M.S.புரம் என்ற ஊரில் அமைந்துள்ளது.
இது மதுரையிலிருந்து 70 K.M. தூரத்தில் உள்ளது. தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் இந்த இடம் உள்ளது.

 

எங்களைப்பற்றி

கடந்த 2 வருடங்களாக இந்த பண்ணையை நடத்திவருகிறோம். முதலில் 50 ஆடுகளைக் கொண்ட இந்த பண்ணை தற்பொழுது 400 ஆடுகள் இருக்கின்றது. அதுவும் வந்த புதிதில் கிளைமட் அடாப்ட் ஆகாமல் 5 ஆடுகள் இறந்துவிட்டன. மாதந்தோறும் என்ன செலவு ஆகின்றதோ அந்த செலவுக்கு ஈடுகட்டும் வகையில் ஆடுகளை விற்றுவருகிறோம். எங்களது குறிக்கோள் 1000 ஆடுகள் கொண்ட பண்களை உருவாக்குவதே ஆகும்.

 

ஆட்டுப் பண்ணை

 Bed Stall முறையின் சிறப்பம்சம்:-

தரையில் இருந்து 4 1/2 அடி உயரத்தில் ரிப்பரினால் ஆன பெட் அமைத்து அதற்கு மேல் அஸ்படாசி சீட்டால் ஆன செட் போட்டு அதற்கு கீழ் வெப்பம் இறங்காமல் ஃபிளையுட்டினால் ஆன சீலிங் அமைத்து ஒரு செட் 60 * 23 என்ற அடி கணக்கில் அமைத்துள்ளோம். அது போன்ற 3 செட்டுகளும் 40 * 22, 20 * 22, செட்களும் அமைத்துள்ளோம்.

மழைக்காலங்களில் ஈரங்களினால் வரும் நோய்கள் வராமலும், ஆட்டுப்ப்ழுக்கை முழுவதுமாக நமக்கு கிடைப்பதற்கும் தனித்தனியே வயது ரீதியாக இந்த ஆடுகளை பிரிப்பதற்கும் இந்த செட் உதவுகிறது. மழை காலங்களில் ஆடுகள் நனையாமல் காக்கவும், நோய்வராமல் தடுக்கவும் இது உதவுகிறது.

அமைப்பு:-
தற்பொழுது ஆட்டுப்பண்ணை 15 ஏக்கரில் 1 ஏக்கரில் செட் அமைத்து, 14 ஏக்கரில் சோளம், புல், கூவாபுல், குதிரைக்கால் அசத்தி ஆகியன பயிரிட்டுள்ளோம். வேறு எந்த விவசாயமும் செய்யவில்லை.