Showing posts with label ஜீரோ பட்ஜெட். Show all posts
Showing posts with label ஜீரோ பட்ஜெட். Show all posts

Tuesday, August 4, 2015

ஜீரோ பட்ஜெட் விவசாயி சேகர் - Zero Budget Farming

பொள்ளாச்சி பகுதியில், இன்றைய தேதியில் ரசாயனமே விழாத விளைநிலமொன்று உள்ளது என்றால், நம்புவது சற்று கடினம் தான். ஆனால், மூன்று தலைமுறைகளாக, எவ்வித ரசாயன உரங்களையோ, பூச்சிக்கொல்லிகளையோ பயன்படுத்தாமல், இயற்கையும், நவீனமும் கைகோர்க்கும் விவசாயம் நடந்து வருகிறது.
பொள்ளாச்சி வால்பாறை ரோடு வஞ்சியாபுரம் பிரிவிலிருந்து, கிழக்குத்திசையில் நாட்டுக்கல்பாளையம் ரோடு செல்கிறது. அதனருகே, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி எல்லைக்குட்பட்டு, ‘இன்ஜினியர் தோட்டம்’ உள்ளது.இங்கு மொத்தம் உள்ள, 12 ஏக்கரில், குடியிருப்பு, கட்டடங்கள் போக, 10 ஏக்கரில் விவசாயம் நடந்து வருகிறது. அதில், 650 தென்னை மரங்களும், அதனிடையே ஊடுபயிராக ‘ஜி9′ ரக வாழையும் பயிரிடப்பட்டுள்ளது. அந்த தோப்பின் உரிமையாளர் சேகர். இயற்கை விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடும், நம்பிக்கையும் உள்ளவர்.

இவர், தன் தோப்பிற்கு எவ்வித ரசாயன உரங்களையும் பயன்படுத்துவதில்லை. இவர் மட்டுமல்ல; இவரது தந்தை முருகேசன், பொதுப்பணித்துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.அவரது தந்தை சுப்பேகவுண்டர், தீவிர விவசாயி. இவர்கள் யாருமே ரசாயன உரங்களை பயன்படுத்தியதில்லை என்பது வியப்பான விஷயம். அரசு ‘பசுமைப்புரட்சி’ திட்டத்தின் கீழ், விளைச்சலை பெருக்கும் முனைப்பில், நாடு முழுக்க ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தீவிரமாக விவசாயிகளிடம் கொண்டு சேர்த்த போதும், அவர்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை.
அதற்கு மாற்றாக காலம் காலமாக நடந்த பாரம்பரிய முறைகளை பின்பற்றியே விவசாயம் செய்தனர். தற்போது சேகர் காலத்தில், இயற்கை முறைகளோடு, நவீன உத்திகளை புகுத்தி, செழுமைப்படுத்தியுள்ளார்.
‘ஜீரோ பட்ஜெட்’ விவசாயம்:
விளைநிலத்திற்கு வெளியே இருந்து, எந்த ஒரு பொருளையும் பணம் கொடுத்து வாங்கி வந்து பயன்படுத்தாமல் விவசாயம் செய்வதே ‘ஜீரோ பட்ஜெட்‘ விவசாயம் எனப்படுகிறது. சேகர் அந்த முறையை தான் பின்பற்றி வருகிறார். இதனால், அவருக்கு இடுபொருட்களுக்கான செலவு என்பது அறவே தவிர்க்கப்படுகிறது. ஆள் கூலி போக, விளையும் அனைத்தும் லாபம் தான்.
நிலம் முழுக்க உரத்தொழிற்சாலை
தோப்பில், ஒவ்வொரு நான்கு தென்னைகளுக்கும் மத்தியில், அம்மரங்களில் இருந்து விழும் காய்ந்த மட்டை, பாளை, ஓலை உள்ளிட்ட கழிவுகள் தொடர்ந்து கொட்டி வரப்படுகின்றன. அதன் மேல், ‘ஸ்பிரிங்க்ளர்’ முறையில் தெளிப்பு பாசனம் அமைத்துள்ளார். அதில் கழிவுகள் தொடர்ந்து நனைந்து, மக்கி, சத்தான உரமாக மாறிவிடுகிறது. இரண்டு ஆண்டுகளாக இந்த முறையை பின்பற்றி வருவதால், தோப்பு முழுக்க ஆங்காங்கே உரம் தயாரிக்கப்பட்டு விடுகிறது.
பண்ணைக்குட்டை:
நிலத்தின் கிழக்கு பகுதியில் ஏறத்தாழ, 30 சென்ட் பரப்பளவில் பண்ணைக்குட்டை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு மானியம் பெற, தென்னைகளை வெட்டிவிட்டு, குறிப்பிட்ட அமைப்பில் குட்டை அமைக்க வேண்டும் என்பதால், தென்னைகளுக்கு பாதிப்பின்றி, முழுக்க தன் செலவிலேயே வித்தியாசமான முறையில் அமைத்துள்ளார். சரிவான இக்குட்டையில், ஓடிவரும் மழைநீர் சேகரமாகி, நிலத்தடி நீர் ஆதாரத்தை அதிகரித்து வருகிறது.
பாத்தி இல்லை
பொதுவாக தென்னை மரங்களுக்கு பாத்தி அமைத்து பாசனம் செய்வது தான் வழக்கம். ஆனால் இவரது தோப்பில், எங்குமே பாத்திகளை காண முடிவதில்லை. முழுக்க முழுக்க ‘ஸ்பிரிங்க்ளர்’ பாசனம் தான். இதனால் தோப்பு முழுக்க ‘சில்’ என குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவுவதுடன், தண்ணீரும் வீணாவது இல்லை.
உழவே கிடையாது
சேகரின் நிலத்தில் பல ஆண்டுகளாக உழவு செய்யப்படவேயில்லை. இயற்கை வேளாண்மை என்பதால், மண்ணை சற்றே தோண்டியதும், கை நிறைய மண் புழு கிடைக்கிறது. இது போல நிலம் முழுக்க நிறைந்து கிடைக்கும் மண் புழுக்கள், மண்ணை குடைந்து உழவுப்பணியை செய்துவிடுவதுடன், அவற்றின் கழிவுகள் சத்தான உரமாகவும் மாறி மண்ணை வளப்படுத்தி விடுகிறது.

Friday, March 27, 2015

தென்னந்தோப்புக்குள் ஊடுபயிராக ஏழு ரக வாழை சாகுபடி (Thennaiyil Uudu Payiraga Vaalai) - Coconut + Banana Intercropping


அசத்தும் ஜீரோ பட்ஜெட் விவசாயி!

ஊடுபயிர் என்றைக்குமே  விவசாயத்தை உயர்த்தும் பயிர் என்பதில் சந்தேகமே இல்லை என்று அடித்தச் சொல்கிறார். சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்துள்ள தார்க்காடு பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயி, தெய்வம் வரதராஜன். இவர், தனது தென்னந்தோப்புக்குள் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்து வருகிறார்.


பாதை காட்டிய பசுமை விகடன்!
எனக்குப் பூர்வீகமே கொளத்தூர்தானுங்க. இங்கிலீஷ் லிட்ரேச்சர் படித்து முடித்து கையோடு, விவசாயத்திற்கு வந்துவிட்டேன். இப்போது 30 வருடமாகிறது. தென்னைக்கு இடையில் 18 வருடமாக வாழையை ஊடுபயிராக சாகுபடி செய்துக் கொண்டிருக்கிறேன். கோடைக் காலங்களில் கிணற்றுப் பாசனம், மழைக் காலங்களில் ஏரிப்பாசனம். ஆரம்பத்தில் நானும் ரசாயன விவசாயம் தான். சம்பாதிப்பதில் முக்கால் வாசியை உரக் கடைக்குத்தான் கொடுக்க வேண்டியிருந்தது. அதில்லாமல் கட்டுபடியான விலையும் கிடைக்கவில்லை.

உற்பத்திச் செலவை எப்படிக் குறைப்பது என்பதை  யோசனை செய்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாற்று வழியைக் காட்டியது ‘பசுமை விகடன்’தான். அதில் வெளியான இயற்கை விவசாயம் சம்பந்தமான கட்டுரைகள் என்னை மிகவும் ஈர்த்தது. தொடர்ந்து, பசுமை விகடன் நடத்தின ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்புகள், ‘இனியெல்லாம் இயற்கையே’ களப்பயிற்சிகள் எல்லாவற்றிலும் கலந்து கொண்டு. இயற்கை வேளாண்மை பற்றிய விஷயங்களைத் தெளிவாக தெரிந்துகொண்டேன். அதன் பிறகு  முழு இயற்கை விவசாயியாக மாறினேன். இப்போது மூன்று வருடமாக ஜீரோ பட்ஜெட் முறையில்தான் விவசாயம் செய்கிறேன். 10 ஏக்கர் தென்னந்தோப்பில் 8 ஏக்கரில் மட்டும் ஏழு ரக வாழையை ஊடுபயிராக சாகுபடி செய்து கொண்டிருக்கிறேன். அதனால் உற்பத்திச் செலவு வெகுவாக குறைந்திருக்கிறது.

வெயில் கிடைக்கும் இடங்களில் மட்டும் ஊடுபயிர்!
தோப்பில் 27 அடி இடைவெளியில் மொத்தம் 700 நாட்டு தென்னை மரங்கள் இருக்கு. எல்லாமே, 30 வயது முதல் 40 வயது வரைக்கும் உள்ள மரங்கள், தோப்பிற்குள்ளே ஏகத்திற்கும் சூரிய வெளிச்சம் கிடைத்ததால் ஊடுபயிராக வாழை போட்டிருக்கிறேன். தனிப்பயிராக வாழையை நட்டால், ஏக்கருக்கு 1,000 மரங்கள் முதல் 1,200 மரம் வரைக்கும் பிடிக்கும். ஆனால், ஊடுபயிராக செய்யும்போது அதில் பாதிதான் நடமுடியும். வெயில் கிடைக்கும் இடங்களில் மட்டும்தான் நடவு செய்ய வேண்டும். இரண்டு தென்னைக்கு இடையில் ஒரு வாழை என்று நட்டிருக்கிறேன்.

பூவன், தேன்வாழை, செவ்வாழை, ரஸ்தாளி, மொந்தன், நேந்திரன், ஜி – 9 என்று ஏழு ரகங்களில் மொத்தம் 4 ஆயிரத்து 800 வாழைகள் இருக்கு (பூவன் -1,000 செவ்வாழை-500. தேன்வாழை-1,000, ரஸ்தாளி-500, நேந்திரன் – 500, ஜி -9 -800, மொந்தன்-500). மூன்று வருடமாக தோப்பில் உழவே செய்யவில்லை. தட்டைப்பயிரை ஏகத்திற்கும் விதைத்து விடுவதால் களைகள் கட்டுப்படுவதோடு, தழைச்சத்தும் கிடைக்கிறது. அங்கங்கே செண்டு மல்லிச் செடிகள் இருப்பதால் நூற்புழுத் தொந்தரவும் இல்லை. தொடர்ந்து பாசனத்தோடு ஜீவாமிர்தத்தைக் கொடுக்கிறேன். இயற்கை முறை என்பதால் நோய்களே வருவதில்லை.


வாழையில் இது மூன்றாவது தழைவு. தாய் வாழையைச் சுற்றி நிறைய பக்கக் கன்றுகள் வளரும். இரண்டு மாதம் வளர்ந்த பிறகு, அதில் ஒன்றை மட்டும் விட்டுட்டு, மற்றக் கன்றுகளை அப்புறப்படுத்திவிடவேண்டும். இந்த இரண்டு மாதத்திற்குள் பக்கக் கன்றுகள் கிடைக்கும் இலைகளை அறுத்து விற்கலாம். பக்கக் கன்று வளர வளர, அறுவடை செய்த தாய் வாழை வாடி, பழுத்து தானா கீழே சாய்ந்துவிடும். அப்போது அதை வெட்டி, தோட்டத்தில் பரப்பிட்டால் உரமாகிவிடும்.

ஒரு தார் குறைந்தபட்சமாக 100 ரூபாய்க்கு விற்கும். அந்தக் கணக்கில் 4 ஆயிரத்து 800 தார் மூலமாக வருடத்திற்கு 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இலை மூலமாக 48 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. இடுபொருள் தயாரிக்க, பயிருக்கு கொடுப்பதற்கு என்று ஆட்கள் தேவைப்படுகிறார்கள். அதற்கான கூலி, வருடத்திற்கு 75 ஆயிரம் ரூபாய். ஆரம்பத்தில் நடும்போது உழவு, குழி என்று ஒரு கன்னுக்கு 15 ரூபாய் செலவாகிறது. வியாபாரிகளே அறுவடை செய்து கொள்வதால் அறுவடைச் செலவு கிடையாது. எப்படியும் தென்னை வருமானம் இல்லாமல், ஊடுபயிர் மூலமாகவே எட்டு ஏக்கரிலிருந்து வருடத்திற்கு நான்கு லட்ச ரூபாய் லாபம் கிடைக்கிறது.

Friday, November 14, 2014

ஜீரோ பட்ஜெட்டுக்கு ஜே... ! வெளிநாடுகளை வியக்கவைத்த ஜீவாமிர்த மகத்துவம்!

பாரத பூமியில் பரவலாக வேர்-விட்ட ஜீரோ பட்ஜெட் விவசாய முறை, இன்று கடல் கடந்து பல நாடுகளிலும் வலுவாக வேர்விடத் தொடங்கிவிட்டது.

மகாராஷ்டிராவில் கருவாகி உருவாகி, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா என்று தவழ ஆரம்பித்து... இன்றைக்கு இலங்கை, நேபாளம், இந்தோனேஷியா, கொரியா, தாய்லாந்து, தென் அமெரிக்கா... என்று உலக நாடுகள் பலவற்றிலும் தழைத்தோங்க ஆரம்பித்துவிட்டது.

ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பத்தில் வெற்றிக்கொடி பறக்க விட்டுக் கொண்-டிருக்கும் கர்நாடக மாநிலம் நோக்கி, மேற்-கண்ட நாடுகளில் இருந்தெல்லாம் நவம்பர் முதல் வாரத்தில் வந்து சேர்ந்த விவசாயிகளை, கைப் பிடித்து, பண்ணைகள் தோறும் அழைத்துச் செல்லும் பொறுப்பாளர்களில் நானும் ஒருவானாகிப் போனேன்.

ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பத்தை, கைப் பிடித்து தமிழகம், கேரளா... ஏன் கடல் கடந்து இலங்கையிலும் உலாவவிட்ட பெருமை பசுமை விகடன் இதழுக்கு உண்டு. மட்டகளப்பில் இருக்கும் கிழக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் விவசாயிகள் பலர் பசுமை விகடனின் வாசகர்கள். அவர்கள் மூலமாக ஜீரோ பட்ஜெட் பற்றி அறிந்த டாக்டர். லயோனல் வீரகோன், திருவண்ணாமலையில் நடந்த ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு அதன் அருமை பெருமைகளை நேரில் கண்டுகொண்டார். அதையடுத்து--தான், இலங்கையிலும் ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்தார்.

கடந்த ஆண்டு, இலங்கை தலைநகர் கொழும்புவில் சர்வதேச விவசாயிகள் அமைப்பு  சார்பில், விவசாய உயிரியல் சூழல் பற்றிய கருத்தரங்கம் நடை-பெற்றது. அதில் பங்கேற்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர்கள், தங்கள் நாட்டின் உயிரியல் சூழல், இயற்கை விவசாயம் பற்றி விவாதித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சுபாஷ் பாலேக்கர், ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாய சித்தாந்தம் பற்றி அந்த ஐந்து நாள் கருத்தரங்கில் தினமும் இரண்டு மணி நேரம் விரிவாகவே எடுத்து வைத்தார்.

பயிற்சி எடுக்க வந்த பல நாட்டு விவசாயிகள்!
அந்தக் கருத்தரங்கில், பலமான விவாதங்களுக்குப் பிறகு, ஜீரோ பட்ஜெட் விவசாயத் தொழில்நுட்பங்களை ஏற்றுக்-கொண்டனர் உலகளாவிய விவசாயி--களும், விஞ்ஞானிகளும்! இதையடுத்து, ‘கடனே இல்லாத விவசாயமா..! கடன் தொல்லை இல்லாமல் சுதந்திரமாக... விவசாயி--களால் சுவாசிக்க முடியுமா!’ என்றெல்-லாம் பரவிய ஆச்சர்ய அலை... ஆசியா, ஐரோப்பா, தென்அமெரிக்கா என்று உலகின் பலபாகங்களிலும் விவசாயத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தி-யுள்ளது.

இந்நிலையில்தான், ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயப் பண்ணைகளை நேரில் பார்வையிட, பல நாடுகளைச் சேர்ந்த 40 விவ-சாயிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தது சர்வதேச விவசாயிகள் அமைப்பு. நவம்பர் 2&ம் தேதியன்று பெங்களூரு வந்தவர்களை தென்னிந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் வரவேற்று, ஜீரோ பட்ஜெட் பண்ணைகளைச் சுற்றிக் காட்டினர்.

தமிழகத்தில் ஜீரோ பட்ஜெட் விவசாயம் செய்யும் விவசாயிகள்

தமிழகத்தில் ஜீரோ பட்ஜெட் விவசாயம் செய்யும் விவசாயிகளின் பெயர்களும் தொலை பேசி எண்களும்.:-

1) சசி குமார் (நெல், தோட்டக்கலை, வனவியல்) தொலைபேசி -04422349769, 9381051483, 34/66, சரக்கு நிழல் சாலை (கூட்ஸ் ஷட் ரோடு), ஆதம்பாக்கம் , சென்னை -88
2) ஆர் கிருஷ்ணன் (Ratoon கரும்பு, நெல்) தொலைபேசி: 04179293679 ,09345770937, கொத்தூர் போஸ்ட், Tq-திருப்பத்தூர், Dt-வேலூர்
3) கே கே சோமசுந்தரம் (வாழை) பண்ணாடி தோட்டம், எம்.ஜி. புதூர் (வடக்கு), ஈரோடு-638502 Mb-09442931794
4) வி ஆனந்த் கிருஷ்ணன் (மா, சப்போட்டா, நெல்லி, மொசும்பி) 29, 3 வது கிராஸ், குறிஞ்சி நகர், புதுச்சேரி -605008 Mb-09842335700
5) கனகராஜன் கௌடர் (மல்பெரி) Mb-09994918190 கணியமூர் post, Tq-கள்ளகுறிச்சி -606207, Dt-விழுப்புரம்
6) கிரிஷ் எம் (நெல்-20 ஏக்கருக்கு பைகள், வாழை + வெங்காயம் + மிளகாய் + முருங்கை + மேரிகோல்டு + பூசணிக்காய்) தொலைபேசி: 04347231149 குண்டு கோட்டை, Tq-தேங்க நஞ்சகோட்ட , Dt-கிருஷ்ணகிரி-635107
7) NH நரசிம்ம ராவ் (மிளகாய், மஞ்சள் ,பட்டாணி, வாழை, மா, நெல்லி , நாவல்) தொலைபேசி: 04347291133, 09443365243, 09361520844 C / o சி நாகேஷ் N / ஆர் Checkpost, தபால்-தேன்கனி கோட்டா, Dt-கிருஷ்ணகிரி
எம் லோகேஷ், தொலைபேசி: 04344200734, 09443983855 No -4 / 765, பெட்டபெடகனஹல்லி , Tq-ஒசூர், Dt-கிருஷ்ணகிரி
9) எஸ் நவீன் குமார், S / o எம் செல்வராஜா (நெல், கரும்பு) At-சி என் பூண்டி, Tq-ஹோப்லி , Dt-ஷோளிகர் தொலைபேசி: 04172216240, 09341821034
10) நாகேஷ் பி (பாக்கு, தேங்காய்) தொலைபேசி: 04994232058, 09895914298 விஜய நிவாஸ், மோக்ரல் புத்தூர் போஸ்ட், Tq Dt-கசர்கோத் – 671128 (கேரளா)
11) என் செந்தில் குமார் (வாழை, மல்பெரி, நெல்லி , சப்போட்டா, மா, பப்பாளி, நெல்) At-அதுமரதுபள்ளி , தபால்-முல்லிபாடி , Dt-திண்டுக்கல்-624005 Mb-09865376317
12) கே விஜயகுமார் (வாழை) 140, அன்னூர் ரோடு, மேட்டுபாளையம் , Dt-கோயம்பதோர் Mb-09842524282