Showing posts with label கொட்டகை. Show all posts
Showing posts with label கொட்டகை. Show all posts

Friday, January 16, 2015

கொட்டகை மேலாண்மை

செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்கான கொட்டகையமைப்பு

பொது அனுமானங்கள்

Low cost houseOpen type housing with run space
 Sheep in open spaceFodder Cultivation near by shed

 

  • மிதமான உற்பத்தி திறனுக்கு, குறைந்த செலவிலான, கட்டுமான பொருட்களை கொண்டு சாதாரண கொட்டகை அமைத்தல்.
  • அதிக மழை பெய்யும் இடங்களைத் தவிர, நாட்டின் பிற இடங்களில் மண் தரையிலான கொட்டகையே ஏற்றது.
  • தண்ணீர் தேங்குவதை தவிர்க்க மேடான பகுதிகளில் கொட்டகை அமைத்தல் வேண்டும்.
  • வளரும் ஆடுகளின் தீவனத் தேவைக்கு கொட்டகையை சுற்றிலும் பசுந்தீவன மரங்களை வளர்த்தல்.
  • ஆடுகளுக்கு தூய்மையான குடிநீரை கிடைக்கச் செய்தல்.
  • நுல்ல காற்றோட்டமான அமைப்புடன் கொட்டகை அமைத்தல்.
  • கொட்டகையின் தரையானது நல்ல கெட்டியான முறையில் தண்ணீரை உறிஞ்சும் வகையில் இருத்தல் வேண்டும். தரையை எளிதில் சுத்தம் செய்வதற்கு உகந்தவாறு அமைத்தல் நல்லது.
  • பராமரிப்பு முறைக்கு ஏற்றவாறு கொட்டகைகளை அமைத்தல் வேண்டும்.
  • திறந்த நடைவழி பகுதி மற்றும் கூரை அமைக்கப்பட்ட பகுதிகள் கொண்ட திறந்த வெளி கொட்டகை சிறந்தது.
  • நடைவழி பகுதியை கட்டு கம்பி கொண்டு சுற்நி அமைத்தல் நல்லது.
  • இரவு மற்றும் மழை காலங்களில் தங்குவதற்கு உகந்த கொட்டகையமைப்பு அவசியமாகும்.
  • காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் கொண்ட கிழக்கு , மேற்கு திசையில் அகலப்பகுதி இருக்குமாறு அமைத்தால் தரையானது நன்கு காய்ந்திருக்கும்.
  • குறைந்த செலவு மற்றும் தாங்கும் திறன் கொண்ட தென்னை மற்றும் பனை ஓலையிலான கூரை மிகவும் சிறந்தது.
  • அதிக தாங்கும் திறன் மற்றும் பழுது பார்க்கும் செலவுகளை குறைக்கவல்ல ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் பெரிய பண்ணைகளுக்கு ஏற்றது.
  • சிறிய கொட்டகைகளுக்கு சாய்வான கூரைகளே சிறந்தது.
  • காலை நேரங்களில் மேய்ச்சலுக்கும் இரவு நேரங்களில் கொட்டகைகுன்றம் வளர்க்கப்படும். ஆடுகளுக்கு கூரை வேயப்பட்ட இடவசதியே போதமானது.
  • கூரை பகுதி மற்றும் திறந்த வெளி நடை பகுதி கொண்ட கொட்டகையமைப்பு தீவிர முறையில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு உகந்தது.
  • கொட்டகையமைப்பின்  அகலப்பகுதியானது 8 முதல் 12 மீட்டருக்கு மிகாமல் இருக்குமாறு அமைத்தலும், நீளப்பகுதியானது ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கட்டுபாடின்றி அமைத்துக் கொள்ளலாம்.
  • கூரையின் நடுப்பகுதியின் உயரம் 3.5 மீட்டராகவும், பக்கவாட்டு பகுதியின் உயரம் 2.5 மீட்டராக இருத்தல் நல்லது.
  • கொட்டகையை சுற்றி அமைக்கப்படும் கட்டுக் கம்பி அமைப்பின் உயரம் 4 அடியாக இருத்தல் வேண்டும்.
  • அடர் தீவனம், பசுந்தீவனம் மற்றும் தண்ணீர் வைப்பதற்கு ஏற்றவாறு தனித்தனி தீவன மற்றும்
  • தண்ணீர் தொட்டிகள்அமைத்தல் நல்லது.

இடவசதி தேவைகள்

இந்திய சூழலுக்கு உகந்த பரிந்துரைக்கப்பட்ட இடவசதி : மற்றும் குட்டி ஈன்ற ஆடுகள்

வயதுகூரை அமைக்கப்பட்ட பகுதிதிறந்த வெளிப் பகுதி
மூன்று மாதம் வரை
0.2 – 0.25
0.4 – 0.5
மூன்று முதல் ஆறு மாதம் வரை
0.5 – 0.75
1.0 – 1.5
6-12 மாதங்கள்
0.75 – 1.0
1.5 – 2.0
பெரிய ஆடுகள்
1.5
3.0
கிடா, சினை ஆடுகள்
1.5 – 2.0
3.0 – 4.0

ஒரு ஆட்டிற்கு தேவையான இடவசதி  (இந்திய தகுதிப் பிரிவு)  பரிந்துரைகள்

ஆடுகளின் வகை    ஒரு ஆட்டிற்கு தேவையானகுறைந்த பட்ச இடவசதி
கிடாக்கள்  -  (குழுக்கள் முறையில்)    1.8
கிடாக்கள்  –  (தனிப்பட்ட முறையில்)3.2
குட்டிகள் (குழுக்கள் முறையில்)0.4
தாயிடமிருந்து பிரித்த குட்டிகள்0.8
ஒரு வருட வயதான ஆடுகள்0.9
பெட்டை ஆடுகள் (குழுக்கள் முறையில்)1.0
பெட்டை ஆடுகள் (குட்டிகளுடன்)1.5

Saturday, October 4, 2014

மாட்டு கொட்டகைப் பராமரிப்பு

ஒரு சிறந்த தரமான கொட்டகை வசதியில்லாமல் கால்நடைப் பராமரிப்பு சாத்தியமன்று. கொட்டகை சரியாக திட்டமிடப்படவில்லை எனில் அது வேலைப்பளுவை அதிகரித்து கூலி ஆட்கள் செலவை உயர்த்தி விடும். அதே சமயம் கொட்டகை அமைப்பு ஒவ்வொரு கால்நடைக்கும் நல்ல காற்றோட்டம் வெளிச்சமும் கிடைப்பதாக இருத்தல் அவசியம். கொட்டகையின் வடிகால் வசதி, அமைப்பு சரியாக இருக்க வேண்டும். அப்போதுதான் சுத்தமான பால் உற்பத்தியைப் பெற முடியும்.
கட்டிடத்திற்கான இடத்தைத் தேர்ந்தெடுத்தல்
--------------------------------------------------------------------
பண்ணை துவங்குவதற்கு முன் இடத்தை சரியான முறையில் தேர்ந்தெடுத்தல் அதற்காகக் கவனிக்க வேண்டிய கருத்துக்களாவன..
இடவமைப்பு மற்றும் வடிகால்
--------------------------------------------
நாம் தேர்ந்தெடுக்கும் இடம் நல்ல வடிகால் வசதி உள்ளதாக இருக்க வேண்டும். பொதுவாக சற்று மேடான பகுதியாக இருப்பது நல்லது. அதனால் மழைநீர் மற்றும் நீர் நன்கு வடிந்து சுற்றுப்புறம் சுகாதாரமானதாக இருக்கும். நிலம் நன்கு சமன்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்.
மண் வகை
-----------------
கட்டிடம் எழுப்பக்கூடிய இடங்களில் மண்ணின் பாங்கு முக்கியம், களிமண் தரை கட்டிடங்களுக்கு உகந்ததல்ல ஏனெனில் களிமண் தரையில் தண்ணீர் தேங்கி நிற்கும். வண்டல் மண், சரளை மண் வகைகள் கட்டிடம் கடட ஏற்றதாகும்.
காற்று மற்றும் சூரிய ஒளி
-------------------------------------
கட்டிடங்களின் திசையமைப்பு நல்ல காற்று வசதி கிடைக்கும். படியாகவும் அதே நேரத்தில் சூரிய வெப்பம் கால்நடைகளை நேரடியாகத் தாக்காதவாறும் அடைய வேண்டும். அதாவது பண்ணைக் கட்டிடங்களின் நீளவட்டம் கிழக்கு மேற்காக அமைவது நல்லது. வேகமாக காற்று வீசும் இடங்களில் மரங்கள் வளர்த்தால் காற்றின் வேகத்தை ஓரளவு குறைக்க உதவும்.
தொலைவு
-----------------
கொட்டகையானது பிரதான சாலையிலிருந்து 100 மீ தொலைவுக்குள் எளிதில் அடையக்கூடியதாக இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் எளிதில் சந்தையை அடைய முடியும்.
தண்ணீர் வசதி
----------------------
சுத்தமான நல்ல குடிநீர் தாராளமாகக் கிடைக்கும் இடமாக இருத்தல் வேண்டும்.
சுற்றுப்புரம்
-----------------
கட்டிடங்களைச் சுற்றியுள்ள இடம் குளிர்ச்சியாய் புல்வெளிகளில் மரம் செடிகள் வளர்க்க ஏற்ற நிலமாக அமைதல் அவசியம்
வேலை ஆட்கள்
------------------------
தினசரித் தேவைக்கேற்ப நல்ல உழைப்புள்ள வேலை ஆட்கள் எளிதில் கிடைக்கும் இடமாக இருக்க வேண்டும். ஆட்களுக்கத் தேவையான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து அவர்கள் எப்போதும் கொட்டகை அருகிலேயே இருக்குமாறு வைத்தல் நலம்.
சந்தை
-----------
கொட்டகையானது எளிதில் நுகர்வோரை அடையுமாறு அமைந்து இருத்தல் நலம். கால்நடைப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு ஏற்றவாறு போக்குவரத்து வசதிகள் உள்ள இடமாக இருக்க வேண்டும்.
மின்சாரம்
----------------
பண்ணையில் மின்சார இணைப்பு இருத்தல் மிக அவசியம். அதே சமயம் நமது பொருளாதார வசதிக்கேற்றவாறு மின்சார வசதி செய்துகொள்ள வேண்டும்.
தீவனம் மற்றும் இதர வசதிகள்
----------------------------------------------
பண்ணை அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் பயிரிடுவதற்கேற்ற நிலமாக இருத்தல் அவசியம். அப்போதுதான் கால்நடைகளுக்கு புதிதான சத்துள்ள தீவனங்கள் கொடுக்க இயலும். மேலும் கொட்டகையில் தீவனம் சேமிக்கவென்று கிடங்கு இருக்க வேண்டும். அப்போதுதான் தீவனத்திற்கு ஆகும் செலவைக் குறைக்க இயலும்.
பால் கறக்கும் இடமானது கொட்டகையின் மையத்தில் அமைந்திருக்க வேண்டும். அது எப்போது சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும்.
(ஆதாரம்: பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், AC & RI, Madurai.)

செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்கான கொட்டகையமைப்பு


பொது அனுமானங்கள்

Low cost house Open type housing with run space
Sheep in open space Fodder Cultivation near by shed


மிதமான உற்பத்தி திறனுக்கு, குறைந்த செலவிலான, கட்டுமான பொருட்களை கொண்டு சாதாரண கொட்டகை அமைத்தல்.
அதிக மழை பெய்யும் இடங்களைத் தவிர, நாட்டின் பிற இடங்களில் மண் தரையிலான கொட்டகையே ஏற்றது.
தண்ணீர் தேங்குவதை தவிர்க்க மேடான பகுதிகளில் கொட்டகை அமைத்தல் வேண்டும்.
வளரும் ஆடுகளின் தீவனத் தேவைக்கு கொட்டகையை சுற்றிலும் பசுந்தீவன மரங்களை வளர்த்தல்.
ஆடுகளுக்கு தூய்மையான குடிநீரை கிடைக்கச் செய்தல்.
நுல்ல காற்றோட்டமான அமைப்புடன் கொட்டகை அமைத்தல்.
கொட்டகையின் தரையானது நல்ல கெட்டியான முறையில் தண்ணீரை உறிஞ்சும் வகையில் இருத்தல் வேண்டும். தரையை எளிதில் சுத்தம் செய்வதற்கு உகந்தவாறு அமைத்தல் நல்லது.
பராமரிப்பு முறைக்கு ஏற்றவாறு கொட்டகைகளை அமைத்தல் வேண்டும்.
திறந்த நடைவழி பகுதி மற்றும் கூரை அமைக்கப்பட்ட பகுதிகள் கொண்ட திறந்த வெளி கொட்டகை சிறந்தது.
நடைவழி பகுதியை கட்டு கம்பி கொண்டு சுற்நி அமைத்தல் நல்லது.
இரவு மற்றும் மழை காலங்களில் தங்குவதற்கு உகந்த கொட்டகையமைப்பு அவசியமாகும்.
காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் கொண்ட கிழக்கு , மேற்கு திசையில் அகலப்பகுதி இருக்குமாறு அமைத்தால் தரையானது நன்கு காய்ந்திருக்கும்.
குறைந்த செலவு மற்றும் தாங்கும் திறன் கொண்ட தென்னை மற்றும் பனை ஓலையிலான கூரை மிகவும் சிறந்தது.
அதிக தாங்கும் திறன் மற்றும் பழுது பார்க்கும் செலவுகளை குறைக்கவல்ல ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் பெரிய பண்ணைகளுக்கு ஏற்றது.
சிறிய கொட்டகைகளுக்கு சாய்வான கூரைகளே சிறந்தது.
காலை நேரங்களில் மேய்ச்சலுக்கும் இரவு நேரங்களில் கொட்டகைகுன்றம் வளர்க்கப்படும். ஆடுகளுக்கு கூரை வேயப்பட்ட இடவசதியே போதமானது.
கூரை பகுதி மற்றும் திறந்த வெளி நடை பகுதி கொண்ட கொட்டகையமைப்பு தீவிர முறையில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு உகந்தது.
கொட்டகையமைப்பின் அகலப்பகுதியானது 8 முதல் 12 மீட்டருக்கு மிகாமல் இருக்குமாறு அமைத்தலும், நீளப்பகுதியானது ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கட்டுபாடின்றி அமைத்துக் கொள்ளலாம்.
கூரையின் நடுப்பகுதியின் உயரம் 3.5 மீட்டராகவும், பக்கவாட்டு பகுதியின் உயரம் 2.5 மீட்டராக இருத்தல் நல்லது.
கொட்டகையை சுற்றி அமைக்கப்படும் கட்டுக் கம்பி அமைப்பின் உயரம் 4 அடியாக இருத்தல் வேண்டும்.
அடர் தீவனம், பசுந்தீவனம் மற்றும் தண்ணீர் வைப்பதற்கு ஏற்றவாறு தனித்தனி தீவன மற்றும்
தண்ணீர் தொட்டிகள்அமைத்தல் நல்லது.

மாடுகள் மற்றும் எருமை மாடுகளுக்கான கொட்டகை அமைப்பு மற்றும் மேலாண்மை

    

   மாடுகளின் உடல் நலத்தை முறையாக பேணுவதற்கும், அவற்றிற்கு தேவையான
·       வசதிகளை அளிப்பதற்கும், தட்பவெப்ப சூழ்நிலைகளிலிருந்து பாதுகாப்பதற்கும் முறையான
·         கொட்டகை அமைப்பு மிகவும் அவசியமாகும். மாடுகள் நல்ல உடல் நலத்துடன்
·         பேணப்பட்டால் மட்டுமே அவை தங்களது மரபியல் உற்பத்திக் குணங்களை
·         வெளிப்படுத்த முடியும்.
·         பண்ணைக் கட்டிடங்களை அமைப்பதற்கு இடத்தைத் தேர்வு செய்வது மிகவும்
·         முக்கியமாகும். பண்ணை அமைக்க இடத்தைத் தேர்வு செய்வதற்கு முன்
·         கவனிக்கப்படவேண்டியவை.

மண்
·         நல்ல வலுவான கட்டிடங்களை அமைப்பதற்கு ஏற்ப பண்ணை அமைக்கத்
·         தேர்ந்தெடுக்கும் இடத்தின் மண் இருக்கவேண்டும்.
·         களிமண், மணல் பாங்கான மண், பாறைகள் இருக்கும் மண் போன்றவை
·         பண்ணை அமைக்க ஏற்றவையல்ல.
·         கடினமான மண் கொண்ட இடங்கள் பண்ணைக் கட்டிடங்கள் அமைக்க ஏற்றவை.

பண்ணை அமைப்பதற்கேற்ற இட வசதி
·         பண்ணைக் கட்டிடங்கள் அனைத்தையும் அமைக்கும் வகையில் போதுமான அளவு
·         இடம் இருக்கவேண்டும். இவ்வாறு போதுமான அளவு இடம் இருந்தால் மட்டுமே
·         பண்ணையை  எதிர்காலத்தில் விரிவாக்குவது எளிதாகும்.
·         200 மாடுகளைப் பராமரிப்பதற்கு ஏற்ற வகையில் குறைந்தது 2-3 ஏக்கர் அளவாவது
·         நிலம் இருக்கவேண்டும்.தீவன உற்பத்திக்கு 2 மாடுகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் தேவைப்படும்.

வடிகால் அமைப்பு
·         மழை பெய்யும் போது தண்ணீர் நன்றாக வடிவதற்கு ஏற்ற வகையில் வடிகால்கள்
·         அமைக்க வேண்டும். இவ்வாறு அமைப்பதால் பண்ணையில் ஆரோக்கியமான
·         சூழ்நிலை உருவாவது மட்டுமன்றி, பண்ணையிலுள்ள கட்டிடங்கள் ஈரமாவதையும்
·          தடுக்கலாம்.

தண்ணீர் வசதி
·         பண்ணையில் செய்யப்படும் பல்வேறு வேலைகளான மாடுகளைக் கழுவுதல், பசுந்தீவன
·          உற்பத்தி, பால் பதனிடுதல், பாலிலிருந்து உப பொருட்கள் தயாரித்தல், மற்றும் குடிநீர்
·          போன்றவற்றிற்கு போதுமான அளவு தண்ணீர் இருப்பது அவசியமாகும்.
·          எனவே தொடர்ந்து பண்ணையின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய எப்போதும் தண்ணீர்
·          இருக்கும் நீர் ஆதாரம் பண்ணையில் அவசியம் இருக்கவேண்டும்.

மின்சார வசதி
·         பண்ணையில் மின்சார வசதி இருப்பது மிகவும் அவசியமாகும்.
·         பண்ணையிலுள்ள பல்வேறு உபகரணங்களை இயக்குவதற்கும், வெளிச்சம் தரும்
·         மின்விளக்குகள் வேலை செய்வதற்கும் மின்சாரம் தேவைப்படுகிறது.