Showing posts with label சுய தொழில். Show all posts
Showing posts with label சுய தொழில். Show all posts

Saturday, March 7, 2015

பல பருவ தாவரங்கள்

பல பருவ தாவரங்களை மற்ற பயிர்களில் நிழல் படியாதவாறும், ஊட்டச்சத்திற்கு போட்டி ஏற்படாதவாறும் தோட்டத்தின் மூலையில் நடவேண்டும்.
தோட்டத்தின் நடுவில் உள்ள நடைபாதை மற்றும் ஏனைய நடைபாதையின் அருகிலும் குறுகிய கால பயிர்களான கொத்தமல்லி, புதினா, பொன்னாங்கன்னி, பாலக் போன்றவற்றை நட வேண்டும்.
ஊடுபயிராக தண்டுகீரை, சிறுகீரை பயிர் செய்யவும்.
பலவருட பயிர்கள்
முருங்கை, வாழை, பப்பாளி, கப்பக்கிழங்கு, கருவேற்பிலை, அகத்தி.
பயிரிடும் திட்டம்
இந்திய சூழ்நிலைக்கு ஏற்ற ஒரு மாதிரி வீட்டுக் காய்கறி தோட்டத்திற்கான பயிரிடும் திட்டமுறை (மலை பகுதி தவிர)
1. தக்காளி மற்றும் வெங்காயம் –  ஜுன் – செப்டம்பர்
முள்ளங்கி –  அக்டோபர் – நவம்பர்
பீன்ஸ் – டிசம்பர் – பிப்ரவரி
வெண்டைக்காய் – மார்ச் – மே
2. கத்தரி  –  ஜுன் – செப்டம்பர்
பீன்ஸ் –  அக்டோபர் – நவம்பர்
தக்காளி – ஜுன் – செப்டம்பர்
தண்டுகீரை, சிறுகீரை –  மே
3. மிளகாய் மற்றும் முள்ளங்கி – ஜுன் – செப்டம்பர்
தட்டவரை / காராமணி – டிசம்பர் – பிப்ரவரி
பெல்லாரி வெங்காயம் –  மார்ச் – மே
4.வெண்டைக்காய் மற்றும் முள்ளங்கி  – ஜுன் – ஆகஸ்டு
முட்டைக்கோஸ் –  செப்டம்பர் – டிசம்பர்
கொத்தவரை –  ஜனவரி – மார்ச்
5 .பெரிய வெங்காயம்  –  ஜுன் – ஆகஸ்டு
பீட்ருட் –  செப்டம்பர் – நவம்பர்
தக்காளி –  டிசம்பர் – மார்ச்
வெங்காயம்  –  ஏப்ரல் – மே

Friday, March 6, 2015

விரால் மீன் வளர்ப்பு


ஏக்கர் கணக்ககில் குளமும் செழிப்பான தண்ணீ்ா வசதியும் இருந்தால், மட்டுமே மீன் வளர்ப்பில் ஈடுபட முடியும் என்பது பெரும்பாலானோரின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் கருத்து. இதை அடியோடு தகர்க்கும் விதத்தில், “ஒரு சென்ட் அளவுக்கு குளமும் அதில் நிரப்பும் அளவுக்கு நீரும் இருந்தாலே போதும். விரால் மீன் வளர்த்து அதிக லாபம் ஈட்ட முடியும்” என்கிறார் திருநெல்வேலியில் சேவியர் கல்லூரியில் இயங்கி வரும் நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் இயக்குநர் ஹனீபா. சொல்வதோடு மட்டுமல்லாமல் அதற்கான பயிற்சியையும் இலவசமாக வழங்கி வருகிறது. இந்த மையம். விரால் மீன் வளர்ப்பை ஊக்குவிப்பதுதான் இந்த மையத்தின் முக்கிய நோக்கம். அந்த வகையில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் நிதி உதவியோடு ‘விரால் மீன்களைப் பாதுகாத்தல், அவற்றை இனபெருக்கம் செய்தல், விவசாயிகளுக்கு விரால் வளர்ப்புத் தொழில்நுட்பங்களை விளக்குதல் போன்றவைகளைச் செயல்படுத்தி வருகிறது இம்மையம்.
மையத்தின் இயக்குநர் ஹனீபா நம்மிடம் “பொதுவா மீன் வளர்க்கறாங்க. விரால் மீன் பக்கம் திரும்பறதேயில்ல. ஆனா, சாப்பாட்டு மீன்களில் விரால், அவுரி, குறவை விரால் மீன் நல்லா சதையாவும் சுவையோடவும் இருக்கும். முள்ளும் கம்மியா இருக்கறதால நிறையபேர் விரும்பி சாப்பிடுவாங்க. இதுல சில மருத்துவக் குணங்களும் இருக்கு. கர்ப்பிணிப் பெண்களுக்கும், இளம் தாய்மார்களுக்கும் இது நல்ல உணவு. ஆனா, தேவைக்குத் தகுந்த அளவுக்கு இங்க உற்பத்தி கிடையாது. பார்க்கறதுக்கு பாம்பு மாதிரி இருக்கறதால, இதை பாம்புத் தலை மீன்’னும் சொல்வாங்க. விரால் மீன்ல ஏறத்தாழ 30 ரகங்கள் இருக்கு. இந்தியாவுல பெருவாரியா இருக்குற பத்து ரகங்களுக்கும் நல்ல விற்பனை வாய்ப்பு இருக்கு. ஆனா, சரியான வழிகாட்டுதல் இல்லாததால தமிழ்நாட்டுல பெரியளவுல விரால் மீன் வளர்ப்புல யாரும் ஈடுபடுறதில்ல. மீன் பண்ணைகளில் விரால் மீன் குஞ்சுகளும். அதுக்கான உணவுகளும் பரவலா கிடைக்காததும் இன்னொரு காரணம். இப்போ எங்க மையத்தோட தொடர் பிரசாரத்தால திருநெல்வேலி சுற்றுப்புறத்துல நிறைய பேருக்கு விரால் மீன் பத்தின விழிப்பு உணர்வு வந்து, அதை வளர்க்க ஆரம்பிச்சுருக்காங்க” என்றவர், விரால் மீன் வளர்ப்புப் பற்றி விரிவானத் தகவல்களைத் தந்தார்.
ஒரு விரால் மீனுக்கு எட்டுல இருந்து பத்து சதுர அடி வரைக்கும் இடம் தேவை. ஒரு ஏக்கர் அளவுக்கு குளம் எடுத்தா அதுல 5,000 மீன்கள் வரை வளர்க்கலாம். ஒரு முறைக்கு 7,000 குஞ்சு களை விட்டா அதுல தப்பிப் பிழைச்சு 5,000 மீன்கள் வரை வளந்துடும். அதேமாதிரி உணவுகள சரியான விகிதத்துல கொடுத்துப் பராமரிச்சா ஒவ்வொரு மீனும் பத்தே மாசத்துல முக்கால் கிலோ எடை வந்துடும். அந்த எடைதான் விக்கிறதுக்கு ஒவ்வொரு சரியான அளவு. ஒரு கிலோ விரால் மீன் குறைந்தபட்சம் 250 ரூபாய்க்கு விற்பனையாகும். சீசன் சமயங்கள்ல அதிகபட்சமா 350 ரூபாய் வரைக்கும் கூட விற்கும். இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்னான்னா இது இறந்துடுச்சுனா கொஞ்சநேரத்துலேயே சதை நைஞ்சு போயிடும். அதனால, உயிரோடதான் விற்பனைக்குக் கொண்டு போகணும். அப்பதான் வாங்குவாங்க. இந்த மாதிரி சின்னச்சின்ன விஷயங்கள்ல மட்டும் கவனமா இருந்தா விறுவிறுனு லாபத்தைப் பார்க்க முடியும்.

Thursday, March 5, 2015

நாட்டு கோழி வளர்ப்பும் விற்பனையும்



நாட்டுகோழி பண்ணை  அமைக்கும் நண்பர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும். இன்றைய நிலையில் ஆர்கானிக், ஆர்கானிக் என்று மக்கள் இயற்கை  உணவு முறைகளை  நாடி செல்லும் நிலையில், இயற்கையாக கிடைக்கும்  நாட்டு கோழிகளுக்கு இனி வரும் காலங்களில் நல்ல கிராக்கி  உண்டு என்பதை மக்கள் உணர ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை  பெருகி வரும் நாட்டு கோழி பண்ணைகள் மூலமும் நாட்டு கோழிகளின் விலை அதிகரிப்பின்  மூலமும் நாம் அறிந்து கொள்ளலாம் (பிராய்லர் கோழிகள் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்த உண்மைகள், அதன்  மிக பெரிய வியாபார சந்தை கருதி மூடி மறைக்கப்பட்டு வருவது வேறு விஷயம்.)


பண்ணை அமைப்பு முறை
------------------------------------------------



நாட்டு கோழிகள் இயல்பாகவே மிகவும் பலமானவை மழை, காற்று, அதிக வெயில்  போன்றவற்றை எளிதாக தாங்கும் குணம் உள்ளவை எனவே இதற்கு ப்ராய்லர் கோழிகளுக்கு அமைப்பதை போன்ற கொட்டகை அமைப்பது தேவை அற்றது.திறந்த வெளியில் கம்பி வேலி அமைத்து எளிதாக  வளர்க்கலாம்,இதற்கு "டயமன்ட் கிரில்" என்ற மிக சிறிய




ஓட்டைகள் உள்ள வேலிகள் அமைப்பதன் மூலம் கோழி குஞ்சுகள் வெளியே செல்வதை தடுக்க முடியும். நாட்டு கோழி தேடி பாம்புகள் வருவது வாடிக்கை. அதனால், வேலியின் கிழே முழுவது வலை அடித்து விடுவதன் மூலம்  பாம்புகளை நாம் தடுக்க முடியும். பொதுவாக ஒரு ஏக்கருக்கு 2000  கோழிகள் வரை எளிதாக வளர்க்க முடியும், இதற்கு கொட்டகை என்று பெரிதாக ஒன்றும் தேவை இல்லை,மழை,வெயில் போன்றவற்றில் இருந்து ஒதுங்க சிறிய செலவிலான கூரை  போன்ற கொட்டகை போதுமானது.



Friday, February 27, 2015

இயற்கை முறையில் விளைந்த பொருட்கள் நேரடி விற்பனைக்கு


1. ரஸ்தாளி வாழைப்பழம் , முருகன் : 93627 94206
ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்.
(வாழைக்காயகாக தமிழகம் முழுவதும் பேக்கிங் செய்தே அனுப்பிவிடுகிறார். மார்க்கெட்டில் நீங்கள் வாங்கும் விலையை அனுசரித்தே இவருடைய விலை).

2. உளுந்தம் பருப்பு ( கருப்பு, தோல் நீக்காமல் ) 
சரவணன், விழுப்புரம் : 9488829993

3. ஆத்தூர் கிச்சடி புழுங்கல் அரிசி , Dr. புண்ணிய மூர்த்தி , தஞ்சை : 98424 55833
4. வெள்ளைப்பொன்னி அரிசி & திருப்பதி சாரம் இட்லி அரிசி
சுப்ரமணியன், விழுப்புரம் : 98423 97377

5. சிறுதானியங்களான வரகு, குதிரைவாலி, சாமை மற்றும் பல... & பாரம்பரிய அரிசி & காய்கற்கள் ஆகியவை விதையாகவோ அல்லது அரிசியாகவோ கிடைக்கும்
ஜெயராமன், சேலம் : 99424 43055

Friday, October 10, 2014

இணையற்ற லாபம் தரும் இயற்கை மீன் வளர்ப்பு!

செழிப்பான நீர்வளம் உள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கான சிறந்த உபதொழிலாக இருப்பது மீன் வளர்ப்பு. வழக்கமாக பெரும்பாலான விவசாயிகள் ரசாயன உரங்களையும், அதிகளவிலான அடர்தீவனங்களையும் பயன்படுத்திதான் மீன்களை வளர்க்கிறார்கள். அவர்களுக்கிடையில் கொஞ்சம் வித்தியாசமாக அடர்தீவனத்தைக் குறைத்து, அதிகளவில் பசுந்தீவனங்களை மட்டுமே கொடுத்து சிறப்பான முறையில் மகசூல் எடுத்து வருகிறார், மயிலாடுதறை அருகே இருக்கும் ஆனந்தக்குடியைச் சேர்ந்த பிச்சை பிள்ளை.‘விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு, சொந்தமாக மூணு ஏக்கர் நெல் வயல் இருக்கு. படிப்பு முடிந்ததும் பாஸ்போர்ட் ஆபிஸீல வேலை கிடைத்தது. அங்கே வேலை பார்த்து்கிட்டே இடையில் கொஞ்சம் விவசாயத்தையும் பாத்துக்கிட்டு இருந்தேன். பயி ஓய்வுக்கப்பறம் முழுநேர விவசாயியா மாறிவிட்டேன். மூணு ஏக்கர்ல், 100 குழி (33 சென்ட்) நிலத்தை மட்டும் ஓதுக்கி, அரசாங்க உதவியோட பண்ணைக்குட்டை வெட்டி மீன் வளர்க்க ஆரம்பித்தேன். மீதி இடத்துல் வழக்கம்போல நெல்சாகுபடி நடக்கிறது.

நானும் ரசாயன விவசாயந்தான செய்துக்கிட்டிருந்தேன். ரசாயன உரத்தால வர்ற தீமைகளை அடிக்கடி கெள்விப்படுறப்போ எனக்குள்ள ஒரு உறுத்தல் வந்தது. அதனால, இயற்கைக்கு மாறனும்னு பயிற்சிகளில் கலந்துக்கிட்டேன். விவசாயம் சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். அதுல பசுமை விகடனும் அறிமுகமாகவே, முழுசா இயற்கை வழி விவசாயத்துக்கு மாறிட்டேன். மீன் வளர்ப்புத் துறையில இருக்கற பெரும்பாலான விஞ்ஞானிகள், உரம் போட்டுத்தான் மீன் வளர்க்கச் சொல்றாங்க, விவசாயத்துலயே ரசாயனப் பயன்பாட்டைக் குறைக்கணும்னு பேசிக்கிட்டிருக்கறப்போ, ‘மீன் வளர்க்கறதுக்குப் போய் ரசாயனத்தைப் பயன்படுத்தணுமா?னு ஒரு கேள்வி எனக்குள்ள உருவாகியது. குளத்துக்கு அடியில் இருக்குற மீனுக்கானத் தீவனத் தாவரங்கள் வேகமா வளர்றதுக்குத்தான் ரசாயன உரம் பயன்படுத்தறாங்க. ஆனா, அதோட தாக்கம் தண்ணீர் மூலமாக கட்டாயம் கொஞ்ச அளவுக்காவது மீன் உடம்புக்குள்ளேயும் இருக்கத்தான் செய்யும். அதனால உற்பத்திச் செலவு அதிகரிக்கிறதோட மீனோட சுவையும் குறைந்துவிடும். எனக்கு இதில் ஒப்புதல் இல்லாததால  இலை, தழைகளைக் கொடுத்தே மீன் வளர்க்கலாம்னு முடிவு பண்ணினேன். இயற்கையாவே ஆறு, குளத்துலயெல்லாம் வளர்ற மீன்களுக்கு யாரும் உரம் போடுறதில்லையே.

வீட்டு ஓரங்கள்ல தோட்டக்கால் வேலிகளில் முருங்கை, அகத்தி, சூபாபுல், சிறியாநங்கை, துளசி மாதிரியான தாவரங்கள வளர்த்து, அதையே வளர்ப்பு மீன்களுக்கு உணவா கொடுக்கலாமேனு யோசித்து அதையே நடைமுறைப் படுத்திக்கிட்டிருக்கேன். குளத்துக்குள்ள நுண்ணுயிர்கள், பாசி வளர்றதுக்கு சாணம் மாதிரியான இயற்கைக் கழிவுகளையும் கொடுக்குறேன். இப்படி வளர்த்தாலே ஆறே மாதத்தில் மீன் ஒவ்வொண்ணும் ஒரு கிலோ எடைக்கு வந்துவிடுகிறது. சுவையாவும் இருக்கு. அப்பறம் எதுக்குத் தேவையில்லாம ரசாயனத்தைப் பயன்படுத்தணும்? என்று கேள்வி எழுப்பியவர், 33 சென்ட் பண்ணைக் குட்டையில் மீன் வளர்ப்பதற்கானத் தொழில்நுட்பத் தகவல்களை, அழகாக விளக்குகிறார்.

35 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம், ஒன்றரை மீட்டர் ஆழம் இருக்குமாறு குளம் வெட்டிக் கொள்ள வேண்டும் (விவசாயத் தேவைக்கான நீராதாரத்தைப் பெருக்குவதற்காக, அரசு செலவில் பண்ணைக் குட்டை அமைத்துத் தரும் திட்டத்தை வேளாண்துறை நடை முறைப்படுத்தி வருகிறது. அதைப் பயன்படுத்திக் கொண்டு, மீன் வளர்ப்பையும் மேற் கொள்ளலாம்). அதில் தண்ணீரை நிரப்பி, குறிப்பிட்ட அளவுக்கான நீர், தொடர்ந்து தேங்கி நிற்கிறதா என்பதை உறுதி செய்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு வேளை அதிகமாக தண்ணீர் உறிஞ்சக்கூடிய பகுதியாக இருந்தால், குளத்தின்  அடியில் கரம்பை மண்ணைப் பரப்பி, தண்ணீரைத் தேக்கலாம். ஆறு, குளம் போன்ற நீர் நிலைகள் அருகில் இருக்கும் பகுதியாக இருந்தால், கவலையேபடத் தேவையில்லை. தண்ணீர் உறிஞ்சப்படாமல் தேங்கி நிற்கும்.

பண்ணைக் குட்டையில் மூன்றடி உயரத்துக்கு மட்டும் தண்ணீர் நிரப்பி, இரண்டு மாட்டு வண்டி அளவுக்கு கட்டி இல்லாத ஈர சாணத்தை தண்ணீரில் கரைத்துவிட வேண்டும். ஒரு வாரத்திலேயே சாணத்தில் இருந்து நுண்ணுயிர்கள் பெருகி விடும்.பிறகு அருகில் உள்ள மீன் விதைப் பண்ணைகளில் இருந்து, இரண்டு மாத வயதுடைய மீன்குஞ்சுகளை வாங்கி வந்து குளத்தில் விடவேண்டும். மீன்கள், அவை வளர்க்கப்படும் பகுதியைப் பொறுத்து மூன்று வகைகளாக அழைக்கப்படுகின்றன. அடி மீன் (சி.சி. காமன் கார்ப், மிர்கால்), நடுத்தட்டு மீன் (ரோகு, கெண்டை), மேல் மீன் (கட்லா, சில்வர்) எனப்படும் இந்த மூன்று வகைகளையும் கலந்து வளர்க்கும் போது குளத்துக்குள் இட நெருக்கடி இல்லாமல் மீன்கள் வளரும். பொதுவாக அனைத்து வகை மீன் குஞ்சுகளும் ஒரே விலையில் தான் விற்கப்படுகின்றன. வளர்ந்த மீன்களை மொத்தமாக விற்கும் போதும் சராசரியாக விலை நிர்ணயித்துதான் வியாபாரிகள் வாங்கவார்கள். அதனால் பல ரகங்களைக் கலந்து வளர்க்கும் போது விற்பனையில் பிரச்சனை இருக்காது. ஒரு வேளை நேரடி விற்பனை செய்வதாக இருந்தால், நமது பகுதி சந்தை நிலவரத்துக்கேற்ற அளவுக்கு ஒவ்வொரு ரக மீன் குஞ்சுகளின் எண்ணிக்கையைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். ஆனால், 33 சென்ட் அளவு குளத்துக்கு 1,200 குஞ்சுகளுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குஞ்சுகளை விட்ட பிறகு நீர்மட்டத்தை நான்கடிக்கு உயர்த்தி, எப்போதும் அதே தண்ணீர் மட்டம் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.

விறு விறு லாபம் தரும் விரால் மீன்

ஏக்கர் கணக்ககில் குளமும் செழிப்பான தண்ணீ்ா வசதியும் இருந்தால், மட்டுமே மீன் வளர்ப்பில் ஈடுபட முடியும்  என்பது பெரும்பாலானோரின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் கருத்து.  இதை அடியோடு தகர்க்கும் விதத்தில், “ஒரு சென்ட் அளவுக்கு குளமும் அதில் நிரப்பும் அளவுக்கு நீரும் இருந்தாலே போதும். விரால் மீன் வளர்த்து அதிக லாபம் ஈட்ட முடியும்” என்கிறார் திருநெல்வேலியில் சேவியர் கல்லூரியில் இயங்கி வரும் நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் இயக்குநர்  ஹனீபா. சொல்வதோடு மட்டுமல்லாமல் அதற்கான பயிற்சியையும் இலவசமாக வழங்கி வருகிறது. இந்த மையம். விரால் மீன் வளர்ப்பை ஊக்குவிப்பதுதான் இந்த மையத்தின் முக்கிய நோக்கம். அந்த வகையில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் நிதி உதவியோடு ‘விரால் மீன்களைப் பாதுகாத்தல், அவற்றை இனபெருக்கம் செய்தல், விவசாயிகளுக்கு விரால் வளர்ப்புத் தொழில்நுட்பங்களை விளக்குதல் போன்றவைகளைச்  செயல்படுத்தி வருகிறது இம்மையம். 

மையத்தின் இயக்குநர் ஹனீபா நம்மிடம் “பொதுவா மீன் வளர்க்கறாங்க.  விரால் மீன் பக்கம் திரும்பறதேயில்ல. ஆனா, சாப்பாட்டு மீன்களில் விரால், அவுரி, குறவை விரால் மீன் நல்லா சதையாவும் சுவையோடவும் இருக்கும். முள்ளும் கம்மியா இருக்கறதால நிறையபேர் விரும்பி சாப்பிடுவாங்க. இதுல சில மருத்துவக் குணங்களும் இருக்கு. கர்ப்பிணிப் பெண்களுக்கும், இளம் தாய்மார்களுக்கும் இது நல்ல உணவு. ஆனா, தேவைக்குத் தகுந்த அளவுக்கு இங்க உற்பத்தி கிடையாது. பார்க்கறதுக்கு பாம்பு மாதிரி இருக்கறதால, இதை பாம்புத் தலை மீன்’னும் சொல்வாங்க. விரால் மீன்ல ஏறத்தாழ 30 ரகங்கள் இருக்கு. இந்தியாவுல பெருவாரியா இருக்குற  பத்து ரகங்களுக்கும் நல்ல  விற்பனை வாய்ப்பு இருக்கு. ஆனா, சரியான வழிகாட்டுதல் இல்லாததால தமிழ்நாட்டுல பெரியளவுல விரால் மீன் வளர்ப்புல யாரும் ஈடுபடுறதில்ல. மீன் பண்ணைகளில் விரால் மீன் குஞ்சுகளும். அதுக்கான உணவுகளும் பரவலா கிடைக்காததும் இன்னொரு காரணம். இப்போ எங்க மையத்தோட தொடர் பிரசாரத்தால திருநெல்வேலி சுற்றுப்புறத்துல நிறைய பேருக்கு விரால் மீன் பத்தின விழிப்பு உணர்வு வந்து, அதை வளர்க்க ஆரம்பிச்சுருக்காங்க” என்றவர், விரால் மீன் வளர்ப்புப் பற்றி விரிவானத் தகவல்களைத் தந்தார்.

“ஒரு விரால் மீனுக்கு எட்டுல இருந்து பத்து சதுர அடி வரைக்கும் இடம் தேவை. ஒரு ஏக்கர் அளவுக்கு குளம் எடுத்தா அதுல 5,000 மீன்கள் வரை வளர்க்கலாம். ஒரு முறைக்கு 7,000 குஞ்சு களை விட்டா அதுல தப்பிப் பிழைச்சு 5,000 மீன்கள் வரை வளந்துடும். அதேமாதிரி உணவுகள சரியான விகிதத்துல கொடுத்துப் பராமரிச்சா ஒவ்வொரு மீனும் பத்தே மாசத்துல முக்கால் கிலோ எடை வந்துடும். அந்த எடைதான் விக்கிறதுக்கு ஒவ்வொரு சரியான அளவு. ஒரு கிலோ விரால் மீன் குறைந்தபட்சம் 250 ரூபாய்க்கு விற்பனையாகும். சீசன் சமயங்கள்ல அதிகபட்சமா 350 ரூபாய் வரைக்கும் கூட விற்கும். இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்னான்னா இது இறந்துடுச்சுனா கொஞ்சநேரத்துலேயே சதை நைஞ்சு போயிடும். அதனால, உயிரோடதான் விற்பனைக்குக் கொண்டு போகணும். அப்பதான் வாங்குவாங்க. இந்த மாதிரி சின்னச்சின்ன விஷயங்கள்ல மட்டும் கவனமா இருந்தா விறுவிறுனு லாபத்தைப் பார்க்க முடியும்.

விரால் மீனை ஏக்கர் கணக்கில் குளம் வெட்டி தான் வளர்க்கணும்னு இல்லை. தோட்டத்துல சின்ன இடம் இருந்தாலேகூட போதும். வீட்டுக்குப் பின்னாடி ஒரு சென்ட் அளவுக்கு நிலம் இருந்தாகூட அதுல 50 மீன் வரை வளர்த்துடலாம். விருப்பப்படறவங்களுக்கு இலவசமா பயிற்சி கொடுக்கறதோட, மீன் குஞ்சுகளையும் உற்பத்தி பண்ணிக் கொடுக்கறதுக்கும் தயாரா இருக்கோம். அதோட விரால் மீன்களுக்கான உணவை விவசாயிகளே தயாரிச்சுக்குறதுக்கான பயிற்சியையும் கொடுக்குறோம். மீன்கள மதிப்புக் கூட்டுறதுக்கான ஆலோசனைகளையும் கொடுக்குறோம்” என்று சொன்னார். நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டு, மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் ஆலங்குளத்தைச் சேர்ந்த இப்ராஹிம் தனது அனுபவங்களை கூறுகிறார்.
“எங்களுக்கு பேக்கரிதான் குடும்பத்தொழில். அதோட தனியா ஏதாவது தொழில் ஆர்பிக்கலாம்னு யோசித்து கொண்டு இருந்தபொழுது தான் இந்த மையம் பத்திக் கேள்விப்பட்டேன். உடனே பயிற்சி எடுத்தேன். நாங்க வாங்கிப் போட்டிருந்த காலி வீட்டு மனையில, மீன் வளர்ப்பை ஆரம்பித்தேன். ஆறு சென்ட் அளவில் ஒரு குளம்னு எடுத்து வளர்த்துக்கிட்டிருக்கேன் நல்ல லாபமானத் தொழிலாத்தான் இருக்கிற என்றவர், தன் அனுபவத்திலிருந்து வளர்ப்பு முறைகளைச் சொன்னார். அதை பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.

நம்மிடம் இருக்கும் நிலத்தின் அளவுக்கும் நீரின் அளவுக்கும் ஏற்ப குளத்தின் அளவை கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். விரால் மீன்கள் ஒன்றை ஒன்று சாப்பிடும் பழக்கமுள்ளவை. அதனால் ஒரே வயதுடைய மீன்களை மட்டும் ஒரு குளத்தில் வளர்க்க முடியும். வயது வித்தியாசமிருந்தால் சிறிய மீன்களை, பெரிய மீன்கள் சாப்பிட்டு விடும். அதனால் ஒரே குளமாக எடுக்காமல் நிலத்தின் அளவைப் பொறுத்து அதிக எண்ணிக்கையில் குளங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குளத்திலும் இரண்டு மாதங்கள் இடைவெளியில் தனித்தனியாக குஞ்சுகளை விடும்போது இழப்பையு்ம குறைக்க முடியும். வருடம் முழுவதும் தொடர் வருமானத்தையும் பார்க்க முடியும். மூன்றரை அடி ஆழத்துக்குக் குளம் வெட்டி, தோண்டிய மண்ணை கரையைச் சுற்றிக் கொட்டி கரையைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். குளத்தின் அடியில் அரை அடி உயரத்துக்குக் களிமண்ணை (வண்டல் மண்) பரப்ப வேண்டும். பின் ஆறு சென்டுக்கு 20 கிலோ என்ற கணக்கில் தொழுவுரத்தைப் பரப்பி, நீரை நிரப்ப வேண்டும். மூன்று அடி மட்டத்துக்கு எப்போதும் குளத்தில் நீர் இருப்பது போல பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

லாபம் தரும் தலைச்சேரி மற்றும் போயர் கலப்பின ஆட்டு பண்ணை




மிழகத்தில் மாறி வரும் உணவுப்பழக்கத்தால் ஆண்டுக்கு ஆண்டு இறைச்சிக்கான  தேவை அதிகரித்து வருகிறது. இதனால் ஆடு வளர்ப்பு தொழிலும் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்நாட்டில் கன்னி, கொடி என்ற இரண்டு வகையான ஆட்டு இனங்கள் தான் பெருமளவில் காணப்படுகின்றன. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தலைச்சேரி என்ற ஆட்டு இனம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வகை ஆடுகள் கொட்டில் முறை வளர்ப்புக்கு ஏற்ற ரகமாக கருதப்பட்டது. தலைச்சேரி இன ஆடுகளின் இறைச்சி சுவையாகவும், அதன் பால் சுரக்கும் திறன் அதிகமாகவும் இருக்கிறது. குறிப்பாக விவசாயம் பொய்க்கும் காலங்களில் ஆடுகள் விவசாயிகளுக்கான பொருளாதார தேவையை ஈடுகட்டும் செல்வங்களாகவே உள்ளன. இதனால் தலைச்சேரி உள்பட ஆடு வளர்ப்பு தொழில் மதிப்பு மிகுந்ததாக மாறி வருகிறது. சமீபகாலமாக தலைச்சேரி இனம் மற்றும் வெளிநாட்டு இனமான போயர் இன ஆடுகளை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்ட ஆடுகளுக்கு நல்ல வரவேற்பிருக்கிறது. இங்கு அது பற்றி பார்க்கலாம்.
மலபாரி என்னும் தலைச்சேரி
தலைச்சேரி ஆடு என்று பரவலாக அழைக்கப்படும் இந்த ஆட்டு இனத்திற்கு மலபாரி என்றும் பெயர் உண்டு. தூய வெள்ளை நிறம் முதல் முழுக்கருப்பு நிறம் வரையில் பல நிறங்களில் இந்த ஆடுகள் காணப்படுகின்றன. இந்த ஆடுகளில் ரோமங்கள் மற்ற இன ஆடுகளை விட அதிகம் காணப்படுகின்றன. குறிப்பாக உடலின் 30 சதவீத ரோமம் இந்த ஆட்டின் தொடைப்பகுதியில் மட்டும் காணப்படும். இந்த இன கிடாக்களுக்கு தாடி உண்டு. இவை இரண்டரை அடி முதல் 3 அடி உயரம் வரை வளரும். மூக்கு சிவந்து காணப்படும். இதன் இறைச்சி மாற்றும் திறன் 48 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது. 



இனக்கலப்பில் உருவாகும் புது இனம்
இந்த வகை இயல்புகள் கொண்ட தலைச்சேரி இனத்துடன் அயலின கலப்பு என்ற அடிப்படையில் புதிய இயல்புகள் கொண்ட குட்டிகளை உருவாக்கி வருகிறார்கள். குறிப்பாக போயர் என்ற வெளிநாட்டின ஆட்டு இனத்துடன் தலைச்சேரி ஆடுகளை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்ட குட்டிகள் 6 மாதத்தில் 20 கிலோ எடை கொண்டதாக வளருகிறது. அதாவது, இப்படி உருவாக்கப்படும் புதிய இன ஆடுகள் துரித வளர்ச்சி கொண்டதாகவும், இறைச்சியில் கூடுதல் சுவை கொண்டதாகவும் இருக்கின்றன. 

பண்ணை அமைத்து பயன் பெறலாம்: லாபம் தரும் ஆடு வளர்ப்பு

கிராமப்புற பொருளாதார மேம்பாட்டிற்கு பெரிதும் பயன்படும் ஆடு, மாடு, கோழி வளர்ப்பு பெரிய அளவில் இல்லாமல் சிறிய அளவில் இருப்பதால் தான் இவைகளின் மூலமாக பெறப்படும் பொருளாதாரமும் சொற்ப அளவிலேயே முடங்கி விடுகின்றன.

பெரிய பண்ணையாக அமைத்து அவற்றின் மூலம் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க வழி வகை செய்கிறது. இது குறித்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே ஓடத்துரை கிராமத்தில் உள்ள நவலடி ஆட்டுப் பண்ணையின் நிர்வாகியான செல்வராஜ் (சிவில் என்ஜினீயர்) கூறியதாவது:–

ஆழ்கூள முறை ஆடு வளர்ப்பு, கொட்டில் முறை ஆடு வளர்ப்பு போன்ற நுட்பங்கள் கடந்த சில ஆண்டுகளாக மக்களிடம் பரவி அந்த தொழில் நுட்பங்கள் கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

வெள்ளாடு வளர்க்க குறைந்த அளவில் முதலீடு போதுமானது. கொட்டகை வசதி மற்றும் பராமரிப்பு செலவு குறைவு. அதாவது சிறிய அளவில் 25 ஆடுகள் கொண்ட ஆட்டுப்பண்ணை அமைக்க குறைந்த பட்சம் ரூ. 1 லட்சம் போதுமானது. 25 தலைச்சேரி ஆடுகளுக்கு ஒரு போயர் கிடாய் போதுமானது. தலைச்சேரி ஆடுகளை கேரளாவில் மலபாரில் இருந்தும் போயர் (தென்னாப்பிரிக்கா இனம்) கிடா புனேயில் இருந்தும் வழங்கப்படுகிறது.

25 ஆண்டுகளுக்கு தீவனம் வளர்க்க ஒரு ஏக்கர் நிலம் தேவை. 25 ஆடுகளை பராமரிக்க ஒரு ஆள் போதும். பண்ணையில் வளர்ப்பதற்கு தலைச்சேரி ஆடுகளும், போயர் கிடாய்களும் மிகச் சிறந்தது ஆகும். தலைச்சேரி இனத்துடன் போயர் கிடாயை இனக்கலப்பு செய்து பெறப்படும் இனம் மிக தரமானதாக இருக்கும்.

25 தலைச்சேரி ஆட்டிற்கு ஒரு போயர் கிடாய் போதும். 25 ஆட்டிற்கு ரூ.1.50 லட்சமும், சாதாரண கொட்டகை அமைக்க ரூ.25 ஆயிரம் தேவைப்படும். 25 ஆடுகள் வளர்க்க தேவையான தீவனம் பயிரிட ஒரு ஏக்கர் தேவை. தீவனத்தை தென்னந்தோப்பில் ஊடுபயிராக இடலாம்.

இனிக்கும் இளநீர்.. கொழிக்கும் மகசூல்..!

தென்னை செழித்தால்.. பண்ணை செழிக்கும் என்று கிராமத்தில் சொல்வார்கள். அதை உண்மையாக்கி, தனது வாழ்க்கையையும் செழிப்பாக்கி இருக்கிறார், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி தென்னை விவசாயி ராஜேந்திரன். பொள்ளாச்சி பகுதியே செழிப்பான பூமி. அதிலும் ஆழியார் அணையை ஒட்டிய பகுதி என்றால், கேட்கவா வேண்டும், இங்கே இருக்கும் புளியங்கண்டி பகுதியில்தான் பசுமை கட்டி நிற்கிறது, ராஜேந்திரனின் தென்னந்தோப்பு. 

இங்கு மட்டுமல்ல பகுதி முழுக்கவே தென்னந்தோப்புகள் செழிப்பாகத்தான் நிற்கின்றன. ஆனால், தென்னையில் பெரிதாக லாபம் இல்லை என்பதுதான் பெரும்பாலான விவசாயிகளின் குரலாக இருக்கிறது. அது நூற்றுக்கு நூறு உண்மை என்பது போலத்தான் தேங்காயின் விலை நிரந்தரமாக 2 ரூபாய் 3 ரூபாய் என்றே நீடித்துக் கொண்டிருக்கிறது! ஏதோ வரவுக்கும் செலவுக்கும் சரி என்கிற வகையில்தான் பலரும் தென்னை விவசாயத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய நிலையில், ராஜேந்திரன் மட்டும் எப்படி தென்னை விவசாயத்தில் லாபத்தை சாத்தியமாக்கிக் கொண்டிருக்கிறார்? மஞ்சளும், பச்சையுமான இளநீர் குலைகளை ஆட்கள் லாரியில் ஏற்றிக்கொண்டிருக்க அதைக் கணக்கெடுத்துக் கொண்டிருந்த ராஜேந்திரன், லாரிகளை அனுப்பிவிட்டு வந்து, நம்மிடம் அமர்ந்தார்.

பொள்ளாச்சி காய்க்கு நல்ல கிராக்கி!
எனக்கு பூர்வீகமே இந்த ஊர்தான். எங்க பகுதியில் விளையும் தேங்காய்க்கும், இளநீருக்கும் தமிழ்நாடு முழுக்க நல்ல வரவேற்பு இருக்கு. பொள்ளாச்சி மண்ணிற்கும், இங்கே கிடைக்கும் தண்ணீருக்கும், சீதோஷ்ணத்திற்கும் தென்னை நன்றாக வளர்கிறது. அதிலும் இளநீர் சக்கைப் போடு போடுதுங்க என்றார். ஊரைச்சுற்றி எனக்கு நிறைய தென்னந்தோப்பு இருக்கிறது. ஒரு இடத்தில் இருக்கும் ஆறு ஏக்கர் தோப்பில் 30 வயதில் நாட்டுத் தென்னை மரங்கள் இருக்கு. அதில் கிடைக்கும் காயை கொப்பரைக்கு பயன்படுத்துகிறோம்.

ஒரு மீன் முக்கால் கிலோ! ஒரு கிலோ 250 ரூபாய்!

10 மாதங்களில் அறுவடை! ஒரு மீன் முக்கால் கிலோ! ஒரு கிலோ 250 ரூபாய்!
 
விவசாயத்தோடு ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டால், விவசாயிகளுக்கு என்றைக்குமே தோல்வி இல்லை. இதை நிரூபிக்கும் வகையில், தென்னந்தோப்புக்கு நடுவே விரால் மீன்களை வளர்த்து வருகிறார்கள், நண்பர்களான மாரிமுத்து, செல்லப்பாண்டியன்.திருநெல்வேலி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, மூன்றாவது கிலோ மீட்டரில் இடது பக்கம் பிரியும் சாலையில் சென்றால், ஒன்பதாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, வீரகளப்பெருஞ்செல்வி கிராமம். திரும்பியப் பக்கமெல்லாம் வாழை மரங்கள், அந்த ஊரின் வளமையைச் சொல்லாமல் சொல்கின்றன. இக்கிராமத்தில்தான் இந்த நண்பர்களின் மீன் பண்ணை இருக்கிறது.
சிறிய இடமே போதும் 

ஒரு ஏக்கரில் அம்பை பதினாறு ரக நெல்லும், ஒரு ஏக்கரில் ரஸ்தாளி வாழையும் போட்டிருக்கிகோம். இது போக அரை ஏக்கரில் 21 தென்னை இருக்கிறது. எல்லாம் ஏழு வயதான மரங்கள்.  நடவு செய்யும்போதே 25 அடி இடைவெளி கொடுத்திருக்கிறார்கள். 6 சென்ட் குளம், 10 மாதம், 30 ஆயிரம் என்று விறு விறு லாபம் தரும் விரால் மீன் என்று சமீபத்தில் பசுமை விகடனில்  (10.11.10 தேதியிட்ட இதழ்) ஒரு கட்டுரை வந்திருந்தது. அதைப் படித்ததும்தான், சின்ன இடத்திலேயே இவ்வளவு லாபம் கிடைக்கும்போது  அரை ஏக்கர் இருக்கின்ற தென்னைக்கு இடையில் ஏன் விரால் மீன்கள் வளர்க்கக் கூடாது என்று  நண்பர் செல்லப்பாண்டியனிடம்  கூறி அவரும் இதில் ஆர்வமானதும் இரண்டு பேரும் சேர்ந்து விரால் வளர்க்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.சேவியர் கல்லூரியின் நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்துக்குச் சென்று, விரால் மீன் வளர்ப்புப் பற்றி தெரிந்து கொண்டு, உடனடியாக வளர்க்க ஆரம்பித்தார்கள். இப்பொழுது பத்து மாதம் ஓடிவிட்டது. மீனெல்லாம் விற்பனைக்குத் தயாரா இருக்கிறது என்றபடியே ஒரு மீனைப் பிடித்துக் காட்டிவிட்டு, விரால் மீன் வளர்ப்பு முறைகளை அடுக்க ஆரம்பித்தார், மாரிமுத்து.

நான்கடி உயரத்துக்குத் தண்ணீர் 
தென்னைக்கு இடையில், 150 அடி நீளம், 18 அடி அகலம், 5 அடி ஆழத்தில் தனித்தனியாக இரண்டு குளங்கள் வெட்டியிருக்கிறார்கள். இவர்கள் தோட்டம் முழுக்கவே களிமண் பூமி என்பதால் வண்டல் கொண்டு வந்து போட வேண்டிய அவசியமில்லை. நாலடி உயரத்துக்குத் தண்ணீர் நிறுத்தி ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து ஒரு மாத வயதுள்ள விரால் குஞ்சுகளை வாங்கி விட்டுள்ளனர். ஒரு குளத்துக்கு ஐயாயிரம் குஞ்சுகள் என்று இரண்டு குளத்திலும் பத்தாயிரம் குஞ்சுகள்.

நிழல் கொடுக்க தாமரை 
மீன் குஞ்சுகளை, பறவைகளிடமிருந்து காப்பாத்தறதுக்காக குளத்துக்கு மேல் வலையைக் கட்டியிருக்கிறார்கள். தென்னை மரங்களோட நிழல் கிடைப்பதால், மீன்களுக்கு வெயிலின் பாதிப்பு அதிகளவில் இருக்காது. கூடுதல் பாதுகாப்புக்கு, தாமரையையும் படர விட்டிருக்கிறார்கள்.

குலைகுலையாய் காய்த்து குலுங்கும் பேரீச்சை வளர்ப்பு


பாலைவனத்தில் விளையக்கூடிய பயிரான பேரீச்சையை நமது மண்ணிலும் விளைவிக்கலாம்.  உரிய முறையில் பேரிச்சையை  சாகுபடி செய்து மார்க்கெட்டிங் செய்தால் லாபத்தில் அசத்தலாம் என்கிறார் திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையத்தை சேர்ந்த கே.ஜி.டேட்ஸ் உரிமையாளர் முருகவேல். அவர் கூறியதாவது:

 திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடியை சேர்ந்த அன்பழகன் என்ற விவசாயி புதிய ரக திசு பேரீச்சையை வளர்த்து லாபம்  சம்பாதிப்பது பற்றி தெரிய வந்தது.  அங்கு சென்று விவரங்களை கேட்டேன்.
நிச்சயம் இதில் நல்ல லாபம்  சம்பாதிக்கலாம் என நம்பிக்கை துளிர்த்தது. கையில் காசில்லாத நிலையில்,  இடத்தை விற்று பேரீச்சை சாகுபடியில் ஈடுபட்டேன். இது புது வகையான திசு வளர்ப்பு பேரீச்சை. இந்தியாவில் இந்த கன்று உற்பத்தி கிடையாது. இங்கிலாந்தில் மட்டும் ஆய்வுக்கூடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த திசு கன்றுகள் வளைகுடா நாடுகளில் பராமரிக்கப்பட்டுபின் இந்தியா கொண்டு வரப்படுகிறது. குஜராத் வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்து  கன்றுகளை பெற்றேன்.
முருகம்பாளையத்தில் 2.5 ஏக்கரில் 200 திசு வளர்ப்பு பேரீச்சை கன்றுகளை, 2009ம் ஆண்டு பிப்ரவரியில் நடவு செய்தேன். பாலைவனத்தில் விளையும் சாதாரண பேரீச்சைக்கு தண்ணீர் தேவையில்லை. ஆனால் திசு பேரீச்சைக்கு தண்ணீர் தேவை. சொட்டு நீர் பாசன முறையில் நீர் பாய்ச்ச வேண்டும். மூன்று ஆண்டுகளில் காய்க்க தொடங்கி விடும். முறையான பராமரிப்பு காரணமாக எங்கள் தோட்டத்தில் 28மாதங்களிலேயே காய்க்க துவங்கியது. பராமரிப்பு மட்டும் சரியாக இருந்தால் ஒரு ஏக்கரில்மூன்றாம் ஆண்டில்  இருந்து நல்ல வருவாய் கிடைக்கும்.
ரூ.8 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருஷம்தோறும் வருமானம் பார்க்க முடியும். ஆரம்ப கட்ட முதலீட்டை முதல் அறுவடையிலேயே பெற்றுவிடலாம். பிறகு,பராமரிப்பு மட்டும் செய்தால் போதும். வேறு எந்த விவசாயத்திலும் இதுபோன்று லாபம் பார்க்க முடியாது. பேரீச்சையை பொருத்தவரைடேனின் என்ற வேதிப்பொருள் அதிகம் இருப்பதால் அதை அப்படியே உட்கொள்ள முடிவதில்லை. எனவே பதப்படுத்தப்பட்ட பழங்களே சந்தைக்கு வருகின்றன. இதற்கு முற்றிலும் மாறாகதிசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்படும் பர்ரி வகை பேரீச்சைகளை அப்படியே சாப்பிடலாம்.
இவை இரும்பு சத்து மிக்கவை. சிறிய விவசாயிகள் இதை பயிரிட்டு அதிக லாபம் பார்க்கலாம். விவசாயம் தெரியாத இளைஞர்கள்கூட முறைப்படி கற்றுக்கொண்டால்,இது சிறந்த தொழில். கோவை மண்டலத்தில் முதலாவதாகவும்தென்னிந்தியாவில் இரண்டாவதாகவும் எங்களது திசு வளர்ப்பு பேரீச்சை பண்ணை உள்ளது. திருப்பூர் கலெக்டர் எங்கள் பண்ணைக்கு வந்து பார்வையிட்டு பாராட்டினார்.

கொப்பரை தேங்காய். கொழிக்குது காசு!

தேங்காய் ஆண்டு முழுவதும் உற்பத்தியாக கூடியது. நம் நாட்டில் விளையும் தேங்காயில் 75 சதவீதம் கொப்பரை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஆண்டு முழுவதும் தொழிலை தங்குதடையின்றி மேற்கொள்ள முடியும். நல்ல லாபமும் கிடைக்கும் என்கிறார் திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம்  எஸ்.அம்மாபட்டியை சேர்ந்த கொப்பரை உற்பத்தியாளர் பஞ்சலிங்கம்.
அவர் கூறியதாவது: காய வைத்த தேங்காய் பருப்புதான் கொப்பரை. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தென்னை சாகுபடி அதிகளவில் உள்ளது. எனவே கொப்பரை தயாரிப்பில் நூற்றுக்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். 10 ஆண்டாக இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளேன். கொப்பரை தயாரிப்பில் யார் வேண்டுமானாலும் ஈடுபடலாம்.

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் அடிக்கடி மழை மற்றும் குளிர் நிலவுவது, கொப்பரை உற்பத்திக்கு பாதகம். மற்ற மாவட்டங்களில் தென்னை சாகுபடி குறைவாக இருந்தாலும், கொப்பரை காய வைப்பதற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை நிலவுகிறது. அங்கு உள்ளவர்கள் இப்பகுதியில் தேங்காய் வாங்கி கொப்பரை தயாரிப்பில் ஈடு பட்டால் நல்ல வருமானம் பார்க்கலாம். தேங்காய் விலை ஏற்ற, இறக்கம்உள்ளது. கொப்பரை உற்பத்தி செய்ய செலவு ஒரு தேங்காய் விலையோடு, கூடுதலாக ரூ.1.50 ஆகும். தேங்காய் விலையை பொருத்து உற்பத்தி செலவை கணக்கிடலாம்.உற்பத்தி செய்யப்படும் கொப்பரைக்கு, எண்ணெய் உற்பத்தியாளர்கள் விலை நிர்ணயிக்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்து சமையல் எண்ணெய் இறக்குமதி அளவை பொருத்து கொப்பரையின் விலை இருக்கும். விலை குறையும் போது இருப்பு வைத்து, ஏறும்போது விற்றால் நல்ல லாபம் கிடைக்கும். அதே போல் கொப்பரை விலை ஏறினால், தேங்காய் விலை ஏறுகிறது. கொப்பரை விலை குறையும் போது தேங்காய் விலையும் குறைகிறது. கொப்பரை விலை குறையும்போது தேங்காய்களை வாங்கி போட்டால், கொப்பரை உற்பத்தி செலவு குறையும்.
தமிழக அரசின் கூட்டுறவுத்துறை மூலம் கிராம கூட்டுறவு வங்கி, கூட்டுறவு சங்கங்கள் மூலம் அவ்வப்போது கொப்பரைக்கு ஆதார விலை நிர்ணயித்து, தென்னை விவசாயிகளிடம் இருந்து கொப்பரைகளை கொள்முதல் செய்துகிறார்கள். அங்கு ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்வதில்லை. நிர்ணயிக்கப்படும் விலை குறைவாக உள்ளது. ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்து, கிலோவுக்கு ரூ.60ஐ உடனடியாக கொடுத்தால் தென்னை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

தேங்காய் எண்ணெய் பிசினஸ்

வறுவல், பொரியல் என எண்ணெய்யில் செய்யும் உணவு அயிட்டங்கள் அனைத்திற்கும் நம்மவர்கள் அடிமை. நம்முடைய தினசரி சமையலில் எண்ணெய் கலக்காத உணவு என்று எதுவுமில்லை. தோசையில் ஆரம்பித்து பூரி, சப்பாத்தி வரை அனைத்தையும் ஏதாவது ஒரு எண்ணெய்யில் செய்து சாப்பிட்டால் மட்டுமே நம்மவர்களுக்கு திருப்தி. தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், பாமாயில் என பலவகையான எண்ணெய் அயிட்டங்கள் நம்மூரில் இருக்கிறது. நிலக் கடலை, சோயா பீன்ஸ், தேங்காய், எள் போன்ற மூலப் பொருட்களிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.
சந்தை வாய்ப்பு!
உணவுப் பொருட்களுக்கான தேவை இருக்கும் வரை எண்ணெய்க்கான தேவையும் இருக்கும். வீடுகள், ஓட்டல்கள், சாலையோர உணவகங்களில் எண்ணெய் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பிரியாணி, பஜ்ஜி, வடைகள், நான்-வெஜ் அயிட்டங்கள்  தயார் செய்வதற்கு அதிக அளவில் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. தவிர, ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு குறைந்தது மூன்று லிட்டர் எண்ணெய் தேவைப்படுகிறது. தேசிய அளவில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி என்பது எந்த சூழ்நிலையிலும் சரிந்து போகாத தொழில். தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் தேங்காய் எண்ணெய் தேவை பெரிய அளவில் உள்ளதால், என்றுமே இதன் மார்க்கெட் களைகட்டியிருக்கும்.
முதலீடு!
எண்ணெய் உற்பத்தி செய்யத் தேவைப்படும் முக்கியமான முதலீடு என்றால் கட்டடமும், இயந்திரமும்தான். ஆண்டுக்கு 12,000 லிட்டர் எண்ணெய் உற்பத்தி செய்யும் மில் ஒன்றைத் தொடங்க சுமார் 15 லட்ச ரூபாய் தேவைப்படும். இந்த தொழிலைத் தொடங்கும் நிறுவனர் 15%, மீதமுள்ள 85% கடன் மற்றும் மானியம் மூலம் பெற்றுக் கொண்டு தொழிலைத் தொடங்கலாம்.
கட்டடம்!

ஆயில் மில் தொடங்க குறைந்தபட்சம் 30 சென்ட், அதிகபட்சமாக ஒரு ஏக்கர் வரை இடம் தேவைப்படும். தேவையான இடம் சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ எடுத்துக் கொள்ளலாம். எண்ணெய் உற்பத்திக்குத் தகுந்தாற்போல் கட்டடங்களை அமைப்பது அவசியம்.
வேலையாட்கள்!
இத்தொழிலில் வேலையாட் களின் பங்கு மிகவும் அவசியம். ஒரு நாளைக்கு 32 லிட்டர் உற்பத்தி செய்வதற்கு திறமையான வேலையாள் ஒருவர், ஒரு சூப்பர்வைஸர் என இரண்டு நபர்கள் தேவை.

தேங்காய் நார் கயிறு தயாரிப்பு

தேங்காய் நார் கயிறு தயாரிப்பு லாபகரமான தொழிலா?
‘நான் அம்பானி ஆகணும், நான் அம்பானி ஆகணும்!”
- அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் நடிகர் கருணாஸ் ஒற்றைக் காலில் நின்று கொண்டு சொல்லும் வசனம் இது. அதுபோல நானும் ஒரு பெரிய தொழிலதிபர் ஆகவேண்டும் என்கிற கனவு கண்டு வருகிறவர்கள் பலர். உங்கள் கனவை நிஜமாக்க இதோ வந்துவிட்டது சூப்பர் பிஸினஸ் ஐடியாக்கள்.

 


ஒரு தொழிலைத் தொடங்க முதலீடு முதல் மூலப்பொருள் வரை, உற்பத்தி முதல் விநியோகம் வரை, கடன் முதல் ரிஸ்க் வரை அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய்ந்து தரவே இந்த பகுதி. வாரம் ஒரு தொழில் வீதம் இதில் சொல்லப்படும் பல்வேறு தொழில்களைப் படித்து, உங்களுக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுத்து, பயனடைந்து வருங்கால அம்பானிகளாக வாழ்த்துகள். இந்த வாரம், உங்களுக் காக தேங்காய் நாரிலிருந்து கயிறு தயார் செய்யும் பிஸினஸ்!

இந்தியாவில் தயார் செய்யப்படும் தேங்காய் நார் கயிறுகளுக்கு வெளிநாடுகளில் ஏக டிமாண்ட். நம் நாட்டில் தென்னை மரங்கள் அதிக அளவில் இருப்பதால் இந்த தொழிலுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே உலகள வில் இத்தொழிலில் இருக்கும் பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகள் நமக்கு போட்டியாக வர இப்போதைக்கு வாய்ப்பில்லை என்பதும் இன்னொரு பிளஸ் பாயின்ட்.

தென்னை மரங்கள் அதிகம் இருக்கும் இடங்களிலும், அதற்குப் பக்கத்து ஊர்களிலும் உள்ளவர்கள் இந்தத் தொழிலை உடனடியாகத் தொடங்கலாம்.


தேங்காய் நார் கயிறுகள் கட்டடங்களுக்கு சாரம் அமைக்கவும் கிணறுகளிலிருந்து தண்ணீர் இறைக்கவும் மட்டுமே முதலில் பயன்படுத்தப்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கட்டடங்களுக்கு சாரம் அமைக்க கயிறுகள் பயன்படுத்தப்படும் வழக்கம் குறைந்ததாலும், கிணறுகள் இல்லாத நிலை உருவானதாலும் இந்தத் தொழிலில் சிறிது சுணக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு தேங்காய் நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றப்பட்டு ஜியோ டெக்ஸ்டைல்ஸ், மேட்கள் போன்றவை தயார் செய்யப்பட, இந்தத் தொழிலுக்கான எதிர்காலம் பிரகாசமானதாக மாறிவிட்டது.