Showing posts with label பண்ணை உபகரணங்கள். Show all posts
Showing posts with label பண்ணை உபகரணங்கள். Show all posts

Sunday, January 11, 2015

கோழிப்பண்ணை உபகரணங்கள்

குஞ்சுப் பொரிப்பான் உபகரணங்கள்

1. அடை காப்பான்
Setter
அடை காப்பான்
  • இதில் அடை முட்டைகள் முதல் 19 நாட்கள் வைத்து அடைகாக்க படும். இந்த இயந்திரத்தில் வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் முட்டைகளை திருப்புதல் ஆகியவை கட்டுபடுத்துவதற்கான வசதிகள் உள்ளன.
2. குஞ்சு பொரிப்பான் 
  • இது அடைகாப்பானை போல இருந்தாலும் அடை முட்டைகளை திருப்புவதற்கான வசதி இல்லை. மேலும் இதில் தட்டுகள் பொரிக்கும் குஞ்சுகளுக்கு ஏற்றவாறு அமைக்கபட்டிருக்கும்.
  • இதில் அடைமுட்டைகள் அடைகாத்தல் காலத்தின் கடைசி 3 நாட்கள் இருக்கும்.
  • உலகில் காணப்படும் பல்வேறு வகையான அடைகாப்பான் மற்றும் குஞ்சுப்பொரிப்பான்கள்:
    • காரிடார் வகை பொரிப்பான்கள்
    • குகை வகை பொரிப்பான்கள்
    • செங்குத்தான காற்றாலை பொரிப்பான்கள்
3. அழுத்த காற்று அமைப்பு
  • சில அடைகாக்கும் கருவியில் அழுத்த காற்று முட்டைகள் அடங்கிய தட்டுகளை திருப்பி விட பயன்படுத்தப்படுகிறது.
  • மத்திய பெரிய அழுத்தகாற்று அமைப்பு ஒன்று தூசி தட்டவும் குஞ்சுப் பொரிப்பகத்தினை சுத்தம் செய்யவும் தேவைப்படுகிறது.
4. அவசரகால தயாரன மின் அமைப்புகள்
  • உள்ளூர் மின் வழங்கல் அமைப்பிலிருந்து மின்சாரம் கிடைக்காத பட்சத்தில் குஞ்சுப் பொரிப்பகத்திற்கு மாற்று மின்சார அமைப்பு இருக்கவேண்டும்.
  • ஒரு நிலையான மின்சார ஜெனரெட்டர் குஞ்சுப்பொரிப்பகத்திற்கு அருகில் அல்லது அடுத்த கட்டிடத்தில் இருக்கவேண்டும்.
  • நிலையான மின்சார ஜெனரெட்டர் குஞ்சுப் பொரிப்பகத்தின் அனைத்து மின்சார தேவைகளை பூர்த்தி செய்யும் அளவு இருக்கவேண்டும்.
5. குஞ்சுப் பொரிப்பகத்தில் உள்ள உபகரணங்கள்
  • குஞ்சுப் பொரிப்பானின் தட்டு கழுவிகள்
  • குப்பைகளை நீக்கும் அமைப்புகள்
  • முட்டைகளை மாற்றும் இயந்திரங்கள்
  • முட்டைக்குள் தடுப்பூசி போடும் இயந்திரங்கள்
  • குஞ்சுப் பெட்டிகள் கழுவிகள்
  • அலமாரி கழுவிகள்
  • தடுப்பூசி போடுதல் / இனம் பிரித்தல் / தரம் பிரித்தல் அமைப்புகள்
  • அதிக அழுத்த காற்றடிப்பான்கள்

Saturday, October 4, 2014

பால் கறக்கும் இயந்திரம்

மாடுகளுக்கு பாதிப்பில்லாமல், ரூ.14 ஆயிரம் மதிப்பில் கிடைக்கும் பால் கறக்கும் நவீன இயந்திரத்துக்கு கிராமப்புற விவசாயிகளிடம் வரவேற்பு அதிகரித்து வருகிறது.'ஒரு கறவை மாடு இருந்தால் ஒரு குடும்பம் பிழைத்து கொள்ளலாம்' என கிராமத்தில் பேச்சு வழக்கில் கூறுவதுண்டு. மாடு வளர்ப்போர் கடந்த 15 ஆண்டுக்கு முன் மாடுகளை பராமரிக்கவும், பால் கறக்கவும் பண்ணை ஆட்களை நியமித்து இருந்தனர். நாகரிக வளர்ச்சி, கல்வி அறிவு, வெளிநாட்டு மோகம் ஆகிய காரணத்தால், இத்தொழிலில் ஈடுபடுவதை ஏராளமான கிராமவாசிகள் கவுரவ குறைச்சலாக கருதி வருகின்றனர். அதன் விளைவாக 10 முதல் 20 மாடுகள் வரை இருந்த ஒரு விவசாயி வீட்டில் தற்போது ஒன்று, இரண்டு மாட்டை பார்ப்பதே அரிதாக உள்ளது. மாடுகளில் இருந்து பால் கறக்க ஜெர்மன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ.55 ஆயிரம் மதிப்புள்ள நவீன இயந்திரத்தை பயன்படுத்துகின்றனர். கிராமப்புறங்களில் மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு இது சாத்தியமில்லை. பால் கறக்க ஆள் கிடைக்காததால் மாடு வளர்ப்பதை ஏராளமான விவசாயிகள் நிறுத்தி விட்டனர். வீட்டு உபயோகத்துக்கு மட்டும் ஒன்றிரண்டு மாடுகள் வைத்துள்ளனர். இக்கட்டான இந்நிலையில், தமிழகத்தில் முதன் முறையாக விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில், குறைந்த விலையில் ரூ.14 ஆயிரத்துக்கு பால் கறக்கும் இயந்திரம் விற்பனைக்கு வந்துள்ளது. மின்சாரம் மற்றும் கையால் இயக்கப்படும் இந்த இயந்திரத்தில் பால் கறக்க, ஒரு மாட்டிற்கு மூன்று நிமிடங்கள் மட்டும் ஆகும். இயந்திரம் இயங்க துவங்கியவுடன் கம்பரஸரில் இருந்து வரும் காற்று, 'ஏர் டேங்கில்' நிரம்பும். டேங்கில் இருந்து டியூப் வழியாக செல்லும் காற்று, மாட்டின் காம்பில் பொருத்தப்பட்டுள்ள கறவை செட் குழாய்க்கு சென்று அங்கிருந்து 'ஏர்' இழுவை திறன் மூலம் பால் காம்பில் சுரக்கும் பாலை கறந்துவிடும்.கறந்த பாலை சேகரிக்க இயந்திரத்தில் 20 லிட்டர் கேன் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு இயந்திரத்தில் 300 லிட்டர் பால் கறக்க முடியும். ஒரே நேரத்தில் இரண்டு மாடுகளுக்கு பால் கறக்கும் இயந்திரமும் உள்ளது. தற்போது ஆள் பற்றாக்குறையை தவிர்க்க, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் மாடு வளர்ப்போர், குறைந்த விலையில் கிடைக்கும் இந்த சிறிய நவீன கறவை இயந்திரத்துக்கு மாறி வருகின்றனர்.வேலகவுண்டம்பட்டி அருகே அணியார் கிராமத்தை சேர்ந்த விவசாயி தனலட்சுமி கூறுகையில், 'பால் கறக்கும் கூலியாட்களுக்கு லிட்டருக்கு மூன்று ரூபாய் கொடுத்தும் ஆட்கள் கிடைப்பதில்லை. அதனால் மாடு வளர்க்கும் தொழில் நலிவடையும் நிலையில் இருந்தது. இதற்கு மாற்றாக குறைந்த விலையில் வந்துள்ள கறவை இயந்திரம் நல்ல பலன் தருகிறது.'இயந்திரத்தில் பால் கறக்க மாடுகளை பழக்கப்படுத்த ஒரு வாரம் ஆனது. அதன்பின் தொடர்ந்து எந்த பிரச்னையும் இல்லை. எங்களிடம் உள்ள பத்துக்கும் மேற்பட்ட மாடுகளிடம் இயந்திரம் மூலமே காலை, மாலை இரண்டு வேளையும் பால் கறக்கிறோம்,' என்றார்.கறவை இயந்திரம் விற்பனையாளர் முத்துசாமி கூறுகையில், 'விவசாயிகளை முதலில் நம்ப வைப்பது சிரமமாக இருந்தது. தற்போது அந்த பிரச்னை இல்லை, மாடுகளுக்கு பாதிப்பில்லை என் பதை பயன்படுத்துபவர்களிடம் இருந்து உறுதி செய்த பின்னர் பலர் எங்களிடம் இந்த இயந்திரத்தை வாங்கி செல்கின்றனர்' என்றார்.

Saturday, May 3, 2014

பசுந்தீவன நறுக்கி (Chaff Cutter)

  • பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனங்களை சிறு சிறு துண்டுகளாக ( 1”அளவிற்குநறுக்க உதவும் கருவியே பசுந்தீவன நறுக்கி (Chaff Cutter).
  • நறுக்கும்போது சுவை கூடுவதால் கால்நடைகள் தீவனம் உட்கொள்ளும்அளவு அதிகமாகிறது.
  • செரிமானத் தன்மை அதிகரிப்பதால் அதிக சக்தி கால்நடைகளுக்குகிடைக்கிறது.இதனால் பால் உற்பத்தி கூடுகிறது.
  • 20-30% தீவன சேதாரம் குறைகிறதுஇதனால் சாதாரணமாக 3கால்நடைகளுக்கு அளிக்கும்  பசுந்தீவனத்தைநறுக்கி போடும்போது 4கால்நடைகளுக்கு அளிக்கலாம்.
  • சேதாரம் குறைவதால் கட்டுத் தரையை சுத்தம் செய்யும் வேலை குறைகிறது.
  • கட்டுத்தரையை சுத்தம் செய்ய ஆகும் நேரத்தில் பாதி நேரம் செலவிட்டால்போதும் நறுக்கி போட்டு விடலாம்.
  • சிறு பண்ணையாளர்கள் கையால் நறுக்கும் கருவியை பயன்படுத்தலாம்.


.எண்
பசுந்தீவன நறுக்கி
அரவை திறன்(மணிக்கு)
விற்பனை விலை(ரூபாய்)
1
கையால் இயக்குவது
50-70 கிலோ
6,500/-
2
மின் மோட்டரால்இயங்குவது


குதிரை திறன் (1 HP Motor)
200-250 கிலோ
11,500/-
1.5 குதிரை திறன் (1.5 HP Motor)
300-350 கிலோ
13,500/-
குதிரை திறன் (2 HP Motor)
500-600 கிலோ
20,000/-

விலை  2011 நவம்பர்  நிலவரப்படி