Showing posts with label இயற்கை எரி வாயு. Show all posts
Showing posts with label இயற்கை எரி வாயு. Show all posts

Friday, October 31, 2014

எந்ததெந்த மண் வகைகளில் எந்தெந்த பயிர்கள் விளையும்?

கந்தக பூமி:

இந்த மண் சந்தன நிறத்தில் இருக்கும். இதில்
சோளம், 
கேழ்வரகு, 
பருத்தி, 
தினை, 
கம்பு, 
ஆமணக்கு, 
அவரை, 
பழமரம், 
கிராம்பு, 
மிளகு, 
ஏலம் மாதிரியான பயிர்கள் விளையும்.

கருமணல் பூமி:

கருமணல் கலந்த பூமியில் கரும்பு, 
சாமை, 
தட்டைபயிறு, 
முருங்கை போன்ற சில பயிர்கள்தான் நன்றாக வளரும்.

சாம்பல் நிற பூமி:

சாம்பல் நிற மண்ணில் வெங்காயம்,
 புகையிலை, 
வாழை, 
பருத்தி, 
நிலக்கடலை நன்றாக வளரும்.

செம்மண் பூமி:

செம்மண்ணில் பருத்தி, 
சோளம், கம்பு,
அவரை, 
துவரை மாதிரியான பயிர்களும், 
பல வகையான பழமரங்களும் நன்றாக வளரும்.

வண்டல் பூமி:

வண்டல் மண்ணில் பருத்தி, 
சோளம், 
கரும்பு, 
கம்பு, 
நெல், 
மிளகாய், 
கோதுமை, 
ராகி, 
வாழை, 
மஞ்சள், 
பழமரம் போன்ற அனைத்தும் வளரும்.

Saturday, October 4, 2014

மாடு, ஆடு, கோழி கழிவிலிருந்து எரிவாயு

வினை விதைப்பவன் வினை அறுப்பான்’ என்பது போல, தனியார்மயத்தின் விளைவை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டது இந்தியா. பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியத் துறையில் தனியார் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய பிறகு, மாதம் இரண்டு முறை பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை ஏறுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை விண்ணில் பறக்கிறது. 'ஆண்டுக்கு ஒன்பது சிலிண்டர்கள் மட்டுமே மானியத்தில் கொடுப்போம்...’ என கறார் காட்டுகிறது, அரசு. 'இதை எப்படி சமாளிப்பது?’ எனத் தெரியாமல், எரிவாயு இல்லாமலே எரிகிறது, சாமானியனின் வயிறு.
இந்நிலையில், ''விலைவாசியைப் பற்றி கவலைப்படுவதைவிட, அதை எப்படி சமாளிக்கலாம் என்று யோசிப்பதுதான் நல்லது. வீடுகளில் ஆடு, மாடு வைத்திருப்பவர்கள்... தமிழக அரசின் விலையில்லா ஆடு, மாடுகளை வாங்கியிருக்கும் ஏழை நடுத்தர மக்கள்... அந்தக் கால்நடைகளின் கழிவுகள்  மூலமாகவே சமையல் எரிவாயுப் பிரச்னையைத் தீர்க்க முடியும்'' என்கிறார், கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தா கேந்திராவின் இயற்கை வள அபிவிருத்தி மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன்.
தொடர்ந்த ராமகிருஷ்ணன், ''சமையலறைக் கழிவுகளில் இருந்து எரிவாயு தயாரிக்க உதவும் வகையில், 'சக்தி சுரபி’ என்ற பெயரில் ஒரு கலனை ஏற்கெனவே அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இதைப் பற்றி, 'பசுமை விகடன்' மற்றும் 'அவள் விகடன்' இதழ்களிலும் எழுதியிருக்கிறீர்கள்.
அதன் தொடர்ச்சியாக ஒரு மாடு, நான்கைந்து ஆடுகள், கொஞ்சம் கோழிகள் வைத்திருக்கும் அடித்தட்டு மக்களும் பயன்பெறும் வகையில், புதிதாக ஒரு கலனை வடிவமைத்துள்ளோம். நான்கு அடி உயரம், மூன்றரை அடி விட்டம் கொண்ட இந்தக் கலனில்,  உட்செலுத்தும் குழாய், செரிப்பான், வாயு சேகரிப்பான்(இந்த வாயு சேகரிப்பான், வாயு சேர்ந்த பிறகு மிதக்கும். இதை மிதக்கும் கலன் என்றும் சொல்வார்கள்.)  ஸ்லர்ரி (சாணக்கழிவுக் குழம்பு) வெளியேறும் பகுதி, உற்பத்தியான வாயுவை வெளியே கொண்டு செல்லும் குழாய் என மொத்தம் ஐந்து பாகங்கள் இருக்கும்.

மாற்று எரிபொருள்: GOBAR GAS PLANT CONSTRUCTION

மாட்டு சாணியிலிருந்து மீத்தேன் தயாரித்து அதில் இருந்து பெட்ரோல் தயாரிப்பது எப்படினு ஒரு பதிவு போடலாம்னு ஒரு சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது, அந்த நேரம் பார்த்து "மாடு ஏப்பம்" விடும் போதும், காற்றை ஃப்ரியா விடும் போதும் மீத்தேன் வருது என "மாமிச உணவுக்காக மிருகங்கள் வளர்ப்பதால் புவி வெப்பமாகிறது என சகோ.சார்வாகன் ,
சுட்டி பதிவு போட்டுவிட்டார், இனிமேலும் சும்மா இருந்தால் மாட்டு வாயிலும், பின்னாலும் டியூப் சொறுகி மீத்தேன் தயாரிப்பது எப்படினு பதிவு போட வேண்டியதாயிருக்கும் என்பதால் சாண எரிவாயு தயாரிப்பதை பதிவா போட்டுறலாம்னு களம் இறங்கியாச்சு, அடுத்த பாகத்தில் சாண எரிவாயுவை பெட்ரோல் ஆக்கிடலாம் :-))

சாண எரிவாயுவை பொதுவாக கோபர் கேஸ் என்பார்கள், கோபார்(Gobar) என்றால் இந்தியில் மாட்டுசாணம், மாட்டு உரம்(cow manure), எனப்பொருள், நேபாளியிலும் மாட்டுச்சாணம் என்றே பொருள்.

உலகிலேயே அதிக கால்நடைகள் கொண்ட நாடு இந்தியா, 529 million cattles, and 648.8 millions of poultry உள்ளது. ஒரு மாடு தினசரி சராசரியாக 10 -12 கிலோ சாணியிடும்,இது மாட்டின் அளவு, இனம், உண்ணும் உணவுக்கு ஏற்ப மாறுபடலாம்(சிலப்பேர் எங்க வீட்டு மாடு 100 கிலோ சாணிப்போடும் என முட்ட வரலாம்!)

இந்தியாவில் உற்பத்தியாகும் சாணி முழுவதும் மீத்தேன் ஆக்க முடிந்தால் சுமார் 30% எரி பொருள் தேவையை குறைக்கலாம் என ஒரு ஆய்வு சொல்கிறது.மற்ற பயன்ப்பாடுகளை செய்ய கூடுதல் செலவிட வேண்டும், ஆனால் கோபர் கேசினை அப்படியே வழக்கமான கேஸ் ஸ்டவ் மூலம் எரித்து சமையல் செய்ய பயன்ப்படுத்தலாம்,இந்தியாவில் பெரும்பாலும் சமையல் செய்யவே கோபார் கேஸ் பயன்ப்படுகிறது.மேலும் வளி மண்டலத்தில் கலக்கும் மீத்தேனின் அளவும் குறைந்து சுற்று சூழலும் பாதுகாக்கப்படும்.

சாணத்தின் பண்புகள்:

மாட்டு சாணத்தில்,80% நீரும் 20% மட்டுமே திடப்பொருளும் சராசரியாக இருக்கும்,


20% திட சாணத்தில் உள்ள மூலங்களின் அளவு.

நைட்ரஜன்=1.8-2.4 %
பாஸ்பரஸ்=1-1.2%
பொட்டாசியம்=0.6-0.8%

கரிமக்கழிவு=50-75%,

எனவே ஒரு டன் ஈர சாணம் காய்ந்தால் 200 கிலோ எடை மட்டுமே இருக்கும்.

இச்சாணம் காற்றில்லா நொதித்தல் வினைக்கு உட்படும் போது ஒரு வாயுக்கலவை உருவாகும் அதற்கு பெயரே கோபர் கேஸ், இதில் மீத்தேன் பெரும்பான்மையாக இருக்கு.

மீத்தேன்.-68%

கரியமிலவாயு=31%

நைட்ரஜன்ன் வாயு= 1%

பாஸ்பரஸ் சல்பைடு=1%

மீத்தேன் வாயுவின் எரிதிறன்=678 பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்.

சாண எரிவாயு உற்பத்தியில் அடுத்த மைல் கல்

புதிய நுட்பம்


வருஷத்துக்கு ஆறு சிலிண்டர் தந்தா என்ன... அறுபத்தி நாலு சிலிண்டர் தந்தா என்ன... இதைப் பத்தியெல்லாம் எங்களுக்குக் கவலையே இல்லை. ஏன்னா... நாங்க தோட்டத்துலயே கேஸ் உற்பத்தித் தொழிற்சாலை வெச்சுருக்கோம்ல'' என்று தெம்பாகச் சொல்கிறார்கள், கோயம்புத்தூர் மாவட்டம், சுல்தான்பேட்டை அடுத்துள்ள, சாளைப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல்-கவிதா தம்பதி!

இவர்கள் அமைத்திருப்பது... சாண எரிவாயுக் கலன். இது, வழக்கம்போல... இரும்புக் கலன், சிமென்ட் தொட்டி என்று இல்லாமல், எளிதாகக் கையாளக் கூடிய வகையில் 'பாலிதீன் ஷீட்’டில் தயாரான புதுவகைக் கலனாக இருப்பது... கூடுதல் சிறப்பு!
''படிச்சு முடிச்சதும் விவசாயத்துக்கு வந்துட்டேன். அதுக்கு தோதா தோட்டத்துலயே வீட்டைக் கட்டி குடிவந்துட்டேன். ஆரம்பத்துல விறகு அடுப்புதான். அப்பறம், புகையில்லாம சமைக்கறதுக்காக கேஸ் சிலிண்டருக்கு மாறினோம். ஆனா, கிராமத்துல சிலிண்டர் கிடைக்கறது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. மாசத்துக்கு ஒரு தடவைதான் சிலிண்டர் வண்டி வரும். அன்னிக்கு காலி சிலிண்டரோட மெயின் ரோட்டுல காத்துக் கிடக்கணும். அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வரல. அதனாலதான், மாட்டுச் சாணத்துல இருந்து கேஸ் உற்பத்தி பண்ணலாம்னு முடிவுக்கு வந்தேன்.


இதைப் பத்தி விசாரிச்சப்ப, 'சாண எரிவாயுக் கலன், இரும்பு டிரம்லதான் அமைக்கணும். பெரியக் கிடங்கு வெட்டி, சிமெண்ட் பூசி பதிக்கணும். அதுக்கு செலவு அதிகமாகும். துருப்பிடிச்சு போச்சுனா பிரச்னை வரும்’னு ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்து சொன்னாங்க. 'என்ன செய்யலாம்?'னு யோசிச்சுட்டு இருந்த சமயத்துலதான் 'பாலிதீன் பயோ கேஸ் ஹோல்டர்’னு ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டு, அதை வாங்கிப் போட்டுட்டோம்'' என்ற தங்கவேலைத் தொடர்ந்த கவிதா...
''இதைப் போட்டு ரெண்டு வருஷம் முடிஞ்சுடுச்சு. இதுல சாணம் மட்டுமில்லாம, காய்கறிக்கழிவு, தீவனக்கழிவு எல்லாத்தையும் பயன்படுத்த முடியும். ஒரு கிலோ சாணத்துக்கு ஒரு கிலோ தண்ணிங்கிற கணக்குல கரைச்சு ஊத்தணும். மத்தக் கழிவுகளா இருந்தா... நல்லா நசுக்கி, தண்ணில கரைச்சு ஊத்தணும். தினமும் 20-25 கிலோ அளவுக்கு சாணத்தை ஊத்துறோம். நாள் முழுக்க தட்டுப்பாடு இல்லாம கேஸ் கிடைச்சுடுது. கேஸ் உற்பத்தி முடிஞ்சு வெளியாகுற கழிவை (ஸ்லர்ரி), தென்னை மரங்களுக்கு உரமாக்கிடறோம்'' என்று சொன்னார்.
மனைவியை ஆமோதித்த தங்கவேல், எரிவாயுக் கலனின் தொழில்நுட்ப விஷயங்கள் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
''இது, பல கொள்ளளவுகள்ல கிடைக்குது. நமக்குத் தேவையான அளவுல வாங்கிக்கலாம். நாங்க, 1 கன மீட்டர் கொள்ளளவு உள்ள ஹோல்டர் போட்டுருக்கோம். 4 அடி நீள, அகலத்தில், 3 அடி ஆழத்தில் குழி எடுத்து, அதுக்குள்ள இந்த ஹோல்டர வெச்சுடலாம். சிமெண்ட் பூச்செல்லாம் தேவையில்லை. வாயு அதிகமா உற்பத்தியாகும்போது, ஹோல்டர் மேலே எழும்பி வராம இருக்கறதுக்காக சுமார் 10 கிலோ எடையுள்ள ஒரு மூட்டையை ஹோல்டர் மேல வைக்கணும்.

காஸ் தட்டுப்பாட்டை சமாளிக்க..குறைந்த செலவில் இயற்கை எரி வாயு


விவசாயிகள் மத்தியில் முன்பு சாண எரிவாயுத் தயாரிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், சாண எரிவாயுக்கலன் அமைக்க 60 ஆயிரம் ரூபாய் வரை செலவாவதோடு, அதைப் பராமரிப்பதும் சிரமமாக உள்ளது. இதுபோன்ற சில காரணங்களால் சாண எரிவாயு உபயோகம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஆனால், இந்தச் சிரமங்களைத் தவிர்க்கும் விதத்தில்தான் பாலிதீன் ஷீட் மூலம் சாண எரிவாயுக்கலன் தயாரிக்கப்படுகிறது. இரண்டு மாடுகள் இருந்தால், ஒரு கன மீட்டர் அளவுக்குத் தினமும் எரிவாயு உற்பத்தி செய்யலாம். நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்குச் சமையல் செய்ய இந்த அளவு எரிவாயு போதும்.

பாலிதீன் ஷீட் மூலம் கலன் அமைக்க, 6 ஆயிரத்து 500 ரூபாய்தான் செலவாகும். செங்கல், சிமென்ட்… எதுவும் தேவை இல்லை. நான்கரை அடி சதுரத்தில் 4 அடி ஆழத்துக்குக் குழி எடுத்துக் கொள்ள வேண்டும். அதில், பாலிதீன் ஷீட்டைப் போட்டு கலன் அமைத்து விடலாம். அதில், சாணத்தைக் கரைத்து ஊற்றினால்… சில நாட்களில் மீத்தேன் வாயு உற்பத்தியாகி விடும். பாலிதீன் ஷீட் பலூன் போல உப்பி விடும். அதில் இருந்து அடுப்புக்கு, இணைப்புக் கொடுத்து எரிக்கலாம்.

‘சில்லரி’ என்று சொல்லப்படும், கழிவு வெளி வருவதற்கும் இக்கலனில் அமைப்பு உள்ளது. இக்கழிவை இயற்கை உரமாகப் படுத்தலாம். எளிதாக அமைத்து விடக்கூடிய இந்தக் கலன் 7 ஆண்டுகள் வரை உழைக்கும் திறன் வாய்ந்தது. சேலம், கோயம்புத்தூர், ஈரோடு… போன்ற நகரங்களில் இந்த பாலீதீன் ஷீட் எரிவாயுக் கலன் கிடைக்கிறது.”


Image

சாண எரி வாயு

சாண எரி வாயு ஏன்? எதற்காக?
  • கிராமங்களில் சாணத்தை எருவாட்டி ஆக்கி எரிபொருளாகப் பயன்படுத்துவர் அல்லது அப்படியே உரமாகப் பயன்படுத்துவர். இந்த இரண்டு உபயோகங்களையும் ஒன்றாக நமக்கு சாண எரிவாயுக்கலன் மூலம் மட்டுமே கிடைக்கிறது
  • சாண எரிவாயுக் கலனுக்குள் சாணத்தை செலுத்துவதன் மூலம் ”மீதேன்" என்ற எரிவாயு கிடைக்கிறது. அது நமக்கு பெட்ரோலியம் வாயுவைப்போன்று சமையலுக்குப் பயன்படுகிறது
  • சாண எரிவாயுக் கலனிலிருந்து எரிவாயு தயாரித்த பின் வெளிவந்த மீத கழிவான சாணம் நல்ல சத்துள்ள உரமாகப் பயன்படுகிறது
    பயன்கள்
  • இவ்வாறு மாட்டுச் சாணத்தை மட்டுமல்ல, அதன் மூத்திரத்தையும், மனிதர்களின் மலத்தையும் கூட சாண எரிவாயுக்கலன் மூலம் எரிபொருளாகவும் இயற்கை உரமாகவும் மாற்ற முடியும்.
  • இவை அந்த கலனுக்குள் சென்றபின் உற்பத்தியாகும் உரம் சத்து நிறைந்ததாக உள்ளது.
  • தொற்று நோயை உண்டாக்கக்கூடிய ஈக்களோ, கொசுக்காளோ மற்றவைகளோ உற்பத்தியாகாது.
  • வெளியே வரும் வாயு பிரகாசம் இல்லாமல், ஆனால் வெப்பம் தரும் நீலநிற ஜ்வாலை கொழுந்து விட்டு எரிகிறது. கிட்டத்தட்ட பாதி நேரத்தில் சமையல் முடிந்து விடுகிறது.
  • மற்ற எரிபொருள்களில் இருப்பதைப் போல “மீத்தேன்” வாயுவில் புகை இல்லை. சூடாக்கும் பாத்திரங்கள் தொடர்ந்து பளபளப்புடன் இருக்கும்


அரசு அங்கீகரித்துள்ள சாண எரிவாயுக் கலன்களின் வடிவமைப்புகள்
தற்பொழுது மத்திய அரசு கீழ்க்கண்ட, நான்கு விதமான சாண எரிவாயு சாதனங்களை, மான்யம் பெறுவதற்கு அங்கீகரித்துள்ளது.
  1. கிராமத் தொழில் ஆணைக்குழு இரும்பு டிரம் எரிவாயு கலன்
  2. கதர் கிராம ஆணைக்குழு ஃபைபர் டிரம் எரிவாயு கலன்
  3. கான்கிரீட் சுவர் டிரம் கலன் (பெரோ சிமெண்ட் வடிவம்)
  4. பந்து வடிவ நிலையான கூடார கலன் (தீன பந்து வடிவம்)
இவைகள் அமைக்க கிராமத்தில் ஏற்கனவே பயிற்சி பெற்ற கொத்தனார்கள் அதிகமாக இருக்கிறார்கள். இந்தவித எரிவாயு கலனில் கட்டிடத்தை எளிதில் கட்டி முடித்து விடலாம். தரமான டிரம்மை கிராம அளவில் பரிசோதித்து வாங்கவேண்டும்.


கதர் கிராமத் தொழில் ஆணைக் குழுவின் இரும்பு டிரம் மற்றும் ஃபைபர் டிரம் எரிவாயுக் கலன்
அமைப்பு
  • சாண எரிவாயுக் கலனில் போதிய அளவில் ஒரு ஜீரணிப்பான் இருக்கிறது.
  • மாட்டுச்சாணம், மூத்திரம், மலம் மற்றும் கால்நடை தீவனத்தில் மீதமுள்ளதையோ அல்லது காய்கறிகளை சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டவற்றை அது நன்கு நொதிக்க வைக்கிறது.
  • இந்த ஜீரணிப்பானுக்கு மேலே அதை மூடிக்கொண்டு வாயு பீப்பாய் இருக்கிறது. நொதிக்க வைத்தல் மூலம் வரும் வாயு இதில் சேருகிறது. சரியான அழுத்தத்தில் ‘வாயு குழாயில்’ இது வாயுவை செலுத்துகிறது.
  • வாயு உபயோகமாகும் இடங்களுக்கு அதாவது சமையல் ஸ்டவ்கள், கோபர் காஸ் விளக்குகள், காஸ் என்ஜின்கள் ஆகியவைகளுக்கு பிரஷ்ஷர் குறையாமல் வாயு குழாய் மூலம் செலுத்துகிறது.
  • கோபர் கேஸ் ஸ்டவ்கள், கோபர் காஸ் விளக்குகள், இன்ஜின்கள் ஆகியவைகளுக்கு வேண்டிய விசேஷ வடிவமைப்பில் காஸ் சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன.
    சாண எரிவாயு கலனை இயக்குவது எப்படி
  • ஜீரணிப்பான் என்று கூறப்படும் நொதிக்கலவைக்கும் தொட்டி, செங்கல், சிமெண்ட், கலவை ஆகியவைகளால் கட்டப்படுகிறது அல்லது கட்டிடம் கட்டுவதற்குக் கிடைக்கும் மற்ற உபயோகமான பொருள்களால் கட்டப்படுகிறது. லேசான எஃகுத் தகடுகள் அல்லது ஃபைபர்களாஸ் முதலியவற்றைக் கொண்டு வாயு பீப்பாய் செய்யப்படுகிறது. ஃபைபர் கிளாஸ் அழுத்தப் பாலியஸ்டரால் செய்யப்பட்ட வாயு பீப்பாய்களுக்கு முதலில் அதிகமாகச் செலவாகும். ஆனாலும் பின்னால் அவைகளுக்கு வர்ணம் பூசவேண்டிய அவசியம் இருக்காது. அவைகளில் துருப்பிடிக்கவும் செய்யாது.
  • காஸைக் கொண்டு செல்வதற்கான குழாய்கள் இரும்பினாலோ அல்லது கருப்பு பாலித்தீனாலோ செய்யப்பட்டிருக்க வேண்டும். அதனுடைய உள்விட்டம் 1 அங்குலம் அல்லது 32 மில்லி மீட்டருக்குக் குறையக் கூடாது. தகட்டின் கனம் 4.7 மில்லி மீட்டருக்கு குறையக்கூடாது. பாலித்தீன் பைப்புகள் மலிவானவை, பொருத்துவதும் எளிது. வீட்டுக்குள் 3/4 அங்குலம் அல்லது 1/2 அங்குலம் ஜி.ஐ பைப்புகள் உபயோகப்படுத்தப்பட வேண்டும்.
  • கதர் கிராமத் தொழில் கமிஷன் அங்கீகாரம் பெற்ற அடுப்புகள் அல்லது விளக்குகள் தான் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், அவைகளின் திறன் ஏற்கனவே சோதிக்கப்பட்டு நிரூபணமானதாகும்.
  • சாணத்தையும் கால்நடைகளின் மூத்திரத்தையும் சேகரித்து கலவை தொட்டியில் அவைகளை நிரப்பி, தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி உள்குழாய் வழியாக உள்ளே செலுத்துவது. இவ்வாறு இயந்திரத்திற்குள் போகும் கலவைக்குச் சமமான அளவு சாண கரைசல் வெளியே வரும். அது பக்குவமாகி பலன் தரக்கூடியதாக இருக்கும். அந்தக் கலவையை உரக்குழியில் உடனே விட்டு, பண்ணைக் கழிவுகள் அல்லது வீட்டுக் குப்பைகளை அடுக்கடுக்காகப் போட்டு மூடிக்கொண்டு வரவேண்டும்.