கேள்வி: மாடுகளுக்கு இதுவரை நானும் பத்து, பதினைந்து தடவை ஊசி போட்டு இருக்கிறேன். ஆனால் சினை பிடிக்க மாட்டேன் என்கிறது? என்ன செய்ய வேண்டும்?
பதில்: கால்நடை மருந்து விற்பனை செய்யும் மருந்துக்கடைகளில் பாண்டிகைண்ட் அல்லது பாணகீர் என்று மாத்திரை கிடைக்கும். இதில் ஏதாவது ஒன்றை வாங்கி ஒரே மாத்திரையை ஒரே நாள் மட்டும் கொடுக்க வேண்டும். அதன் பின்பு இரண்டு நாள் இடைவெளி விட்டு, ஒரு மாதம் வரை தினமும் ஒரு முட்டை ஒட்டோடு கொடுங்கள். அதன் பின்பு ஒன்றிரண்டு வாரங்களில் ஈத்து அடிக்கும். அப்போது சினை ஊசி போடுங்கள். அப்படியும் சினை நிற்கவில்லை என்றால் ஊசியில் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.
கேள்வி : சில நாட்களுக்கு முன்பு மாட்டுக்கு தடுப்பூசி போட்டேன். இன்னும் தடுப்பூசி போட்ட இடத்தில் தடித்து இருக்கிறது? தடிப்பு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
பதில்: மாட்டுக்கு தடுப்பூசி போட்ட உடனே, ஊசி போட்ட இடத்தினை நன்கு கரகர வென்று தேய்த்து விட வேண்டும். அவ்வாறு தேய்த்து விடாமல் விட்டுவிட்டால் தடிப்பு ஏற்பட்டிருக்கும். தற்போது தடிப்பு உள்ள இடத்தில் ஐயோடெக்ஸ் மருந்தை தடவி நன்கு தேய்த்து ஒத்தடம் கொடுங்கள். இரண்டு மூன்று நாட்கள் இதுபோல் செய்யும் போது தடிப்பு காணமல் போய்விடும்.
கேள்வி: மாட்டுக்கு தடுப்பூசி போடும் சேவையினை செய்து வருகிறேன். தடுப்பூசிகளுக்கும், சேவைக்கும் மானியம் பெற முடியுமா?
பதில்: உங்களின் சேவையினை நாங்கள் பாராட்டுகிறோம். சேவைகளுக்கு இதுவரை கால்நடை சார்ந்த சேவைகளுக்கு மானியம் வழங்கப்பட்டதாக நாங்கள் அறியவில்லை. மாட்டுக்கான தடுப்பூசிகள் கால்நடை மருந்து விற்பனை செய்யும் கடைகளிலேயே கிடைக்கின்றன. அவற்றை நீங்கள் சரியான விலைக் கொடுத்து வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
கேள்வி: மாடு கன்று போட்டு ஒரு மாதம் ஆகிறது. கன்று போட்ட நாள் முதல் பால் கறக்கவிட மாட்டேன் என்கிறது, உதைக்கிறது, காலை கட்டினாலும் துள்ளுகிறது. ஆனால் மடிவீக்கம் எதுவுமில்லை. பால் கறப்பதற்கு என்ன செய்யலாம்? வினோபிரியா
பதில்: மாட்டுக்கு இது முதல் கன்று என்பதால் கூச்சக்குணத்தால் இப்படி உதைக்கவும், பால் கறக்க விடாமல் செய்கிறது என்று நினைக்கிறேன். இது பிறவிக்குணமாகவோ இருக்கலாம். நாளாக நாளாக தான் இதை சரி செய்ய வேண்டும்.இனிமேல் பால் கறக்கும் போது ஏதாவது ஒரு வகையில் மாட்டின் திசை திருப்பி விடும் வகையில் செய்து பால் கறக்க வேண்டும்.
கேள்வி: தற்போது கால்நடைகளுக்கு சப்பை நோய் கட்டுப்பட்டு உள்ளது. ஆனால் கோமாரி நோய் இன்னும் இருக்கிறது. இதனை வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? கோமாரி நோய்களில் நிறைய வகைகள் இருக்கின்றனவா? இந்த நோய் ஐம்பது கிலோமீட்டர் தூரத்துக்கு பரவும் என்கிறார்களே உண்மையா? எந்த காலத்தில் கோமாரி நோய் வரும்? இதற்கு என்ன மாதிரியான தடுப்பூசி போட்டு தடுப்பது?
பதில்: முதலில் எவ்வாறு தடுப்பது என பார்ப்போம். கோமாரி நோய்க்கு கட்டுத்தரை மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். ஈரத்தன்மை இருக்கக்கூடாது. பால் கறந்த பின்பு மடி, காம்பு போன்றவற்றை பொட்டாசியம் பெர்மாங்கனேட் 1:1000 என்ற வகையில் ஒரு சிறிய துகளை எடுத்து நீரில் கரைத்து பால்மடியை கழுவிய பின்னர் தான் பால் கறக்க வேண்டும். மேலும் பால் கறக்கும் போது கட்டை விரலை மடக்கி கறக்காமல் விரல் நுனியில் கறக்க வேண்டும். மேலும், பால் கறந்த பின்னரும் மடியை தூய்மைப்படுத்த வேண்டும். பொதுவாக பால் கறந்த பின்பு உடனே, கொஞ்சம் தீவனம் போடுங்கள். இதன் மூலம் பத்து நிமிடங்கள் மாடு நின்று தீவனம் சாப்பிடும். இதனால் மடி திறந்து இருப்பது மூடி விடும். இதனால் நோய் ஏற்படுவது குறையும். கோமாரி நோய் காற்றில் பரவும் நோய் அல்ல. கோமாரி நோய் தொற்று நோய் வகையை சார்ந்தது. பக்கத்து வீட்டில் இருந்து மாடு கோமாரி நோய் தாக்கப்பட்டு இருந்து, அங்கு பால் கறக்கும் பால்காரர் நம்ம வீட்டில் வந்து பால் கறக்கும் போது எளிதாக தொற்றிக் கொள்ளும். இதைத்தான் 50 கிலோமீட்டர் பரவும் என்று சொல்லி இருப்பார்கள்.
கேள்வி: கலப்பின ஜெர்சி மாடு சினை பிடிக்க கால தாமதம் ஆகிறது. அப்படியே சினை பிடித்தாலும், நஞ்சுக் கொடி விழுவதில் பிரச்சனையாகிறது. இதனை தடுக்க என்ன செய்யலாம்?
பதில்: சில மாட்டுக்கு கற்பபை பிரச்சனை இருக்கலாம். இதனை மருத்துவர் வந்து பார்த்து சொல்ல முடியும். சினை பிடிப்பதற்கு சில வழிமுறைகள் சொல்கிறேன். நஞ்சுகொடி விழுவதற்கு ரீபிளாண்டன் என்ற மருந்து 100 கிராம் வாங்கி 50 கிராமை வெல்லத்துடன் கலந்து கொடுஙக்ள். இதைப்போலவே மாலை வேளையில் கொடுங்கள். இப்படி கொடுக்கும் போது நஞ்சுக்கொடியும் விழுந்துவிடும். கற்ப்பையும் சுத்தமாக இருக்கும் போது விழுந்துவிடும். மேற்சொன்ன மருந்தை இரண்டு மூன்று நாட்களுக்கு கொடுங்கள்.
கேள்வி: மாடுகளுக்கு கால் நோய்/ வாய் நோய் தடுப்பூசி எந்தெந்த காலத்தில், எந்தெந்த பருவத்தில் போட வேண்டும்?
பதில்: மழைக்காலம் வருவதற்கு முன்பு தடுப்பூசி போடுவது அவசியம். கால் நோய், வாய் நோய் வந்த பின்பு தடுப்பூசி போடுவதை தவிர்க்க வேண்டும். மூன்று மாத கால இடைவெளியில் கால்நடைகளுக்கு குடல் புழு மருந்தை கொடுத்து வரவும்.
கேள்வி: பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட்டுவிட வேண்டும்?
பதில்: கன்று பிறந்து பதினைந்து நாட்களுக்குள் கொம்பை சுட்டுவிடுவது நல்லது. காரணம், முதல் இரண்டு, மூன்று வாரங்களில் கொம்பை சுட்டுவிடும் போது அதற்கு வேதனை தெரியாமல் இருக்கும். மூன்று வாரங்களுக்கு மேற்பட்ட காலங்களில் செய்யும் போது மிகுந்த வேதனையை அனுபவிக்கும். பொதுவாக நிறைய மாடு வைத்திருப்பவர்கள், மாடுகளுக்கு இடையே சண்டை வந்து, கொம்பை உடைத்துக் கொள்வதை தவிர்க்கவே கொம்பை சுடும் பழக்கத்தை கொண்டு வந்தார்கள். ஒன்றிண்டு மாடுகளை வைத்திருப்பவர்கள் கொம்பை சுடுவது அவசியமில்லை.
ட வேண்டும்?

கேள்வி: ராமேஸ்வரம் பகுதியில் ஆடு மற்றும் மாடுகள் மேய்ப்பதற்கு என்று மேய்ச்சல் நிலம் இல்லை. இதனால் அடிக்கடி பக்கத்து வயல்களில் ஆடு சென்று மேயும் போது பிரச்சனை வருகிறது. இதனை தவிர்க்க வீட்டிலேயே வளர்க்கும் வகையில் தீவனங்களை பரிந்துரைத்தால் நன்றாக இருக்கும்?
பதில்: ஆடு மற்றும் மாடுகள் பக்கத்து வயல்களில் சென்றும் மேயும் போது பிரச்சனை தான். இதனை தவிர்க்கும் விதமாக வீட்டுக்கு பக்கத்திலேயே அகத்தி செடி வளர்க்கலாம். பூவரம் செடி வளர்க்கலாம். கொடுக்கபுளி நன்றாக சாப்பிடும். அதனை எல்லாம் வளர்த்தால் பிரச்சனை இருக்காது. ஆட்டை கொட்டில் மாதிரி வைத்தும் வளர்க்கலாம். இவ்வாறு வளர்க்கும் போது குளம்பை சீவி வளர்க்கும் போது பிரச்சனை இருக்காது. தற்போது ஆடுகளுக்கு என்று தீவனங்கள் வந்திருக்கின்றன. அவற்றை வாங்கி ஒரு நாளைக்கு 100 கிராம் என்ற அளவில் பிரித்துக் கொடுங்கள். மேலும் மூன்று மாதங்களுக்கான இடைவெளியில் குடல்புழு நீக்கம் செய்யுங்கள். இதற்கு என்று மருந்து மாத்திரைகள் கால்நடை மருந்துக்கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி கொடுங்கள். அதிக ஆடுகள் வளர்க்கும் போது அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது. தற்போது விவசாயிகள் ஆடு புழுக்கையை நல்ல உரமாக பயன்படுத்துகிறார்கள். இதனால் ஆடு வளர்ப்பிலும் நல்ல லாபம் பெறலாம்.
கேள்வி: பசு குறைமாதத்திலேயே கன்று ஈன்று விடுகிறது. பாலும் குறைவாகவே இருக்கிறது. இதனைத்தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
பதில்: பக்கத்தில் இருக்கும் மாடுகளுக்கு ஏதாவது வியாதிகள் இருக்கின்றன என்று பார்க்க வேண்டும். அபார்ஷன் இருக்கிறதா என்று பார்ப்பதும் நல்லது. பக்கத்தில் உள்ள மாடுகள் முட்டி இருந்தால் இருந்தால் கூட பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கால்நடை மருந்துக்கடைகளில் கால்சிமாஸ்தி என்று திரவ மருந்து இருக்கிறது. அது 5 லிட்டர் அல்லது ஒரு லிட்டர் என அளவில் விற்கிறார்கள். அதனை வாங்கி தினமும் 100 மில்லி கொடுக்கவும். படிப்படியாக பால் உயரும். அடுத்த தடவை சினை ஊசி போடும் போது கற்ப்பை கழுவி ஊசி போட சொல்லுங்கள்.
கேள்வி: மாடு பசும்புல் சாப்பிட்டால் கழிச்சல் ஏற்படுகிறது. இதனை தடுக்க என்ன செய்யலாம்?
பதில்: ஏற்கனவே குடல் புழு நீக்கம் செய்திருந்தால் சாணத்தை எடுத்து மருத்துவரிடம் காண்பியுங்கள். இல்லை என்றால் குடல்புழு நீக்கத்துக்கான மருத்துவத்தை மேற்கொள்ளுங்கள்.
கேள்வி: கறவை மாட்டுக்கு மடிவீக்கம் இருக்கிறது? இதற்கு என்ன மருத்துவம் செய்யலாம்? எப்படி தவிர்ப்பது?
பதில்: மாட்டை ஈரத்தில் கட்ட வேண்டாம். கட்டுத்தரையை சுத்தமாக வைத்திருங்கள். பால் கறக்கும் முன்பும், பின்பும் மடியை சுத்தம் செய்யுங்கள். மடி வீக்கம் இருக்கும் போது மஞ்சள், வேப்பம் கொழுந்து, கல் உப்பு மூன்றையும் அரைத்து தடவி விடுங்கள்.
கேள்வி: மாட்டுக்கு வயிறு பூசலாக இருக்கிறது. மூன்று நாளாக மூச்சு வாங்கிறது. என்ன செய்யலாம்?
பதில்: டிம்பால் என்ற மருந்து இருக்கிறது. தினமும் காலையில் 50 கிராம் என்ற விகிதத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு கொடுங்கள்.
கேள்வி: தற்போது கால்நடைகளுக்கு சப்பை நோய் கட்டுப்பட்டு உள்ளது. ஆனால் கோமாரி நோய் இன்னும் இருக்கிறது. இதனை வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? கோமாரி நோய்களில் நிறைய வகைகள் இருக்கின்றனவா? இந்த நோய் ஐம்பது கிலோமீட்டர் தூரத்துக்கு பரவும் என்கிறார்களே உண்மையா? எந்த காலத்தில் கோமாரி நோய் வரும்? இதற்கு என்ன மாதிரியான தடுப்பூசி போட்டு தடுப்பது?
பதில்: முதலில் எவ்வாறு தடுப்பது என பார்ப்போம். கோமாரி நோய்க்கு கட்டுத்தரை மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். ஈரத்தன்மை இருக்கக்கூடாது. பால் கறந்த பின்பு மடி, காம்பு போன்றவற்றை பொட்டாசியம் பெர்மாங்கனேட் 1:1000 என்ற வகையில் ஒரு சிறிய துகளை எடுத்து நீரில் கரைத்து பால்மடியை கழுவிய பின்னர் தான் பால் கறக்க வேண்டும். மேலும் பால் கறக்கும் போது கட்டை விரலை மடக்கி கறக்காமல் விரல் நுனியில் கறக்க வேண்டும். மேலும், பால் கறந்த பின்னரும் மடியை தூய்மைப்படுத்த வேண்டும். பொதுவாக பால் கறந்த பின்பு உடனே, கொஞ்சம் தீவனம் போடுங்கள். இதன் மூலம் பத்து நிமிடங்கள் மாடு நின்று தீவனம் சாப்பிடும். இதனால் மடி திறந்து இருப்பது மூடி விடும். இதனால் நோய் ஏற்படுவது குறையும். கோமாரி நோய் காற்றில் பரவும் நோய் அல்ல. கோமாரி நோய் தொற்று நோய் வகையை சார்ந்தது. பக்கத்து வீட்டில் இருந்து மாடு கோமாரி நோய் தாக்கப்பட்டு இருந்து, அங்கு பால் கறக்கும் பால்காரர் நம்ம வீட்டில் வந்து பால் கறக்கும் போது எளிதாக தொற்றிக் கொள்ளும். இதைத்தான் 50 கிலோமீட்டர் பரவும் என்று சொல்லி இருப்பார்கள்.
கேள்வி: பசு எத்தனை வகைகள் இருக்கின்றன? 24 வகைகள் இருக்கிறதா சொல்கிறார்களே உண்மையா? இறக்குமதி செய்யும் மாட்டிற்கும், நாட்டு மாட்டுக்கும் என்ன வித்தியாசம்?
பதில் : மாட்டு வகைகள் 24 வகைகளுக்கு அதிகமாகவே இருக்கின்றன. இறக்குமதியாகும் மாடுகள் நம்ம நாட்டின் தட்பவெப்பநிலைக்கு வரும்போது தடுப்பு சக்தி குறைந்து விடுகின்றன. இதனால் தான் நாம் இறக்குமதி மாட்டு இனத்தை வளர்க்கும் போது மிகவும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டி இருக்கிறது. வெளிநாட்டு மாட்டு இனங்கள் இங்கு வந்து தாக்குபிடிக்கும் சக்தியும் குறையும். மேலும், எந்தவிதமான நோய் தாக்குதலும் இல்லாமல் பார்த்துக் கொள்ள அடிக்கடி தடுப்பூசி போட வேண்டியும் இருக்கு. ஹெச் எஸ் சி கருப்பு வெள்ளை மாடுகள் நம்முடைய தட்பவெப்பநிலைக்கு ஏற்றதுஅல்ல. வளர்க்கும் போது மிகவும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். வெயில் காலத்தில் மூச்சு வாங்கும். மேலும் பால் குறைந்து விடும். மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு ஒரு வாரம் ஆகும். தீவனம் அதிகளவில் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டின் தட்பவெப்பநிலைக்கு ஜெர்சி மாடுதான் சரியானவை.
கேள்வி: மாட்டுக்கு யூரியா கொடுக்கலாமா?
பதில்: அப்படி எதுவும் கொடுக்கக்கூடாது. ஒரு காலத்தில் வைக்கோலை யூரியா போட்டு வைத்திருப்பார்கள். அதைக் கொடுத்திருப்பார்கள். இப்போது அப்படி எல்லாம் கொடுத்து மாட்டின் பாதிப்பு உள்ளாக்கூடாது.
கேள்வி: பசு மாட்டுக்கும், ஆட்டுக்கும் மழைக்காலத்தில் நோய் வந்தால் என்ன மாதிரியான கை வைத்திய முறையை கையாளலாம்?
பதில்: மழைக்காலத்தில் கழிச்சல், வாய் கோணாய், கால் கோமாரி, வாய் கோமாரி வந்தால் பூவன்பழம் 3- 4 பழத்தை விளக்னெண்ணெய் அல்லது தோங்காய் பூ வை வெல்லம் கலந்து வாயில் கொடுத்து விடலாம். காலில் குளம்பில் புண் இருந்தால் வேப்பண் கொழுந்து, கல் உப்பு, மஞ்சளை சேர்த்து அரைத்து, மாட்டின் காலை நான்கு கழுவி தேய்த்து விட வேண்டும்.மழைக்காலத்திற்கு முன்பாகவே, உரிய தடுப்பூசி போடுவது நல்லது. நோய் வந்த பின்பு, எக்காரணத்தைக் கொண்டு தடுப்பூசி போடுவதை தவிர்க்கவும்.
கேள்வி: மாட்டுக்கு வாயில் அடிக்கடி கொப்புளங்கள் வருகின்றன? இவற்றை எவ்வாறு தடுப்பது?
பதில்: கேரம்போர்ட்டிற்கு போடும் போரிக் பவுடர் மருந்துக்கடைகளில் கிடைக்கிறது. அந்த பவுடரை வாங்கி தேங்காய் எண்ணெய்யில் குழப்பி தேய்த்து விடவும். பின்னர், வேப்பம் கொழுந்து, மஞ்சள், கல் உப்பை நன்கு அரைத்து கொப்புளங்கள் உள்ள இடங்களில் தடவி விடுங்கள். இதைப்போல் காலில் இருந்தாலும் தடவி விடுங்கள். விரைவில் குணமாகிவிடும்.
கேள்வி: ஆறு மாத கன்று குட்டிக்கு அடிக்கடி நடுக்கம் ஏற்படுகிறது? எப்படி நடுக்கத்தை நிறுத்துவது?
பதில்: பாண்டிகைண்ட் என்ற மருந்து இருந்து இருக்கிறது. ஒரு மருந்தை வாங்கி அதில் பாதியை ஒரு நாளைக்கு ஒரு தடவை கொடுத்து விடுங்கள். மீதி இருப்பதை பதினைந்து நாளுக்கு பின்னர் கொடுக்கவும். தீவனம் நல்ல கொடுங்கள். ஒரு மாதத்துக்கு ஒரு முறை கொடுங்கள்.
கேள்வி: ஜெர்சி மாடுகளை வாங்கி இருக்கிறோம். இவைகள் சரியான சமயத்தில் சினை பிடிக்க மாட்டேன் என்கிறது? கன்று போட்டு எப்போது சினை ஊசி போட வேண்டும்?
பதில்: பொதுவாக மாடு கன்று ஈன்று 45 நாட்களில் ஈத்து அடிக்கும். அப்போது சினை ஊசி போடாமல், அதன் பின்பு, 21 நாள் கழித்து ஈத்து அடிக்கும். அந்த சமயத்தில் சினை ஊசி போட வேண்டும். இப்படி சினை ஊசி போடும் போது சினை பிடிக்கவில்லை என்றால், கால்நடை மருந்துக்கடையில் கிடைக்கும் பண்டிகைன் அல்லது பொண்டிகைன்ட் மாத்திரை ஒன்றை வாங்கிக் கொடுங்கள். ஒன்றிரண்டு நாட்கள் இடைவெளிக்கு பின்னர், தினமும் ஒரு கோழிமுட்டையை தினமும் ஓட்டோடு கொடுங்கள். பதினைந்து நாளைக்கு கொடுங்கள். அதன் பின்பு ஈத்து அடிக்கும். அப்போது சினை ஊசி போடுங்கள்.
இன்னொரு விஷயத்தையும் குறித்துக் கொள்ளுங்கள். கன்றுக்குட்டி பிறந்த இரண்டு மாதத்தில் குடல் புழு நீக்கம் செய்ய வேண்டும். ஒவ்வொரு மாடு அல்லது கன்றுக்குட்டிக்கும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடல் புழு நீக்கம் செய்வது நல்லது. கன்றுகுட்டி வளர்ந்த 15 – 18 மாதத்தில் ஈத்து அடிக்க ஆரம்பிக்கும். முதல் ஈத்திற்கு பிறகு, இரண்டாவது மூன்றாவது ஈத்தின் போது சினை ஊசி போடுவது நல்லது.
கேள்வி: மூன்று மாதங்களுக்கு முன்பு மாடு கன்று ஈன்றது. முதல் இரண்டு மாதமாக 5-6 லிட்டர் பால் கொடுத்தது. தற்போது பால் மிகவும் குறைந்து 3 லிட்டர் தான் கிடைக்கிறது. மூச்சு வாங்குகிறது. என்ன செய்ய வேண்டும்?
பதில் : இதுவரை மாட்டுக்கு குடல் புழு நீக்கம் செய்திருக்கிறீர்களா? இல்லை என்றால் உடனே, குடல் புழு நீக்கம் செய்யுங்கள். இதற்கு, கால்நடை மருந்துக்கடைகளில் கிடைக்கும் பாண்டிகைன்ட் என்ற மாத்திரை ஒன்றை வாங்கி மாட்டுக்கு கொடுத்துவிடுங்கள். இந்த மாத்திரையை வாழைப்பழத்தையில் அல்லது வெல்லத்தில் வைத்துக் கொடுங்கள். பின்பு, மருந்துக்கடைகளில் 5 லிட்டராகவோ அல்லது 1 லிட்டர் பாட்டிலாகவோ கிடைக்கும் கால்சிமஸ்து என்ற திரவ மருந்துவை வாங்கி தினமும் 100 மில்லி என்ற அளவுக்கு கொடுங்கள். இவ்வாறு கொடுக்கும் போது ஒரளவு பால் கூடுதலாக கிடைக்கும்.
நீங்கள் கறுப்பு- வெள்ளை இன வெளிநாட்டு ரக மாட்டினை வளர்க்கும் போது வெயில் காலத்தில் அல்லது வெயிலில் இருக்கும் போது மூச்சு இரைப்பு இருக்கும். தினமும் காலையில் 10 மணிக்கு தண்ணீர் ஊற்றி விடுங்கள். பசும்புல் கிடைத்தால் அதை போடுங்கள். கோ 3 கோ 4 தீவன புல் கிடைத்தால் வாங்கி போடவும். கிளட்டீரியா, சுபா புல் போன்றவற்றை வளர்க்கலாம்.
கேள்வி: நான் வளர்க்கும் மாட்டுக்கு மூன்று வருடமாக சினை பிடிக்க மாட்டேன் என்கிறது? மாட்டை விற்று விடலாமா? வைத்துக் கொள்ளலாமா?
பதில்: ஆறு வயதாகியும் இன்னும் கன்று போடவில்லை என்றால் வருத்தமாகத்தான் இருக்கிறது. இதுவரை பலவிதமான வைத்தியமும் செய்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் குடல்புழு நீக்கம் செய்யவில்லை என்கிற போது தான் ஆச்சர்யமாக இருக்கிறது. கால்நடை மருந்து விற்பனை செய்யும் கடையில் விற்பனையாகும் பாணக்கியூர் என்ற மாத்திரையை வாங்கி கொடுங்கள். ஒன்றிரண்டு நாட்கள் கழித்து, கோழிமுட்டையை ஒட்டுடன் தினமும் ஒன்று விதம் முப்பது நாளைக்கு தொடர்ந்து கொடுத்து வாருங்கள். அதன் பின்பு ஈத்து அடிக்கும். அப்படி இல்லை என்றால் மீண்டும் கூப்பிடுங்கள். மேற்சொன்ன மாத்திரை கிடைக்கவில்லை என்றால் பாண்டிகைண்ட் என்ற மாத்திரையை வாங்கிக் கொடுங்கள்.
கேள்வி: கலப்பின ஜெர்சி மாடு சினை பிடிக்க கால தாமதம் ஆகிறது. அப்படியே சினை பிடித்தாலும், நஞ்சுக் கொடி விழுவதில் பிரச்சனையாகிறது. இதனை தடுக்க என்ன செய்யலாம்?
பதில்: சில மாட்டுக்கு கற்பபை பிரச்சனை இருக்கலாம். இதனை மருத்துவர் வந்து பார்த்து சொல்ல முடியும். சினை பிடிப்பதற்கு சில வழிமுறைகள் சொல்கிறேன். நஞ்சுகொடி விழுவதற்கு ரீபிளாண்டன் என்ற மருந்து 100 கிராம் வாங்கி 50 கிராமை வெல்லத்துடன் கலந்து கொடுஙக்ள். இதைப்போலவே மாலை வேளையில் கொடுங்கள். இப்படி கொடுக்கும் போது நஞ்சுக்கொடியும் விழுந்துவிடும். கற்ப்பையும் சுத்தமாக இருக்கும் போது விழுந்துவிடும். மேற்சொன்ன மருந்தை இரண்டு மூன்று நாட்களுக்கு கொடுங்கள்.
கேள்வி: மாடுகளுக்கு கால் நோய்/ வாய் நோய் தடுப்பூசி எந்தெந்த காலத்தில், எந்தெந்த பருவத்தில் போ
கேள்வி: நான் வளர்க்கும் மாட்டுக்கு மூன்று வருடமாக சினை பிடிக்க மாட்டேன் என்கிறது? மாட்டை விற்று விடலாமா? வைத்துக் கொள்ளலாமா?
பதில்: ஆறு வயதாகியும் இன்னும் கன்று போடவில்லை என்றால் வருத்தமாகத்தான் இருக்கிறது. இதுவரை பலவிதமான வைத்தியமும் செய்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் குடல்புழு நீக்கம் செய்யவில்லை என்கிற போது தான் ஆச்சர்யமாக இருக்கிறது. கால்நடை மருந்து விற்பனை செய்யும் கடையில் விற்பனையாகும் பாணக்கியூர் என்ற மாத்திரையை வாங்கி கொடுங்கள். ஒன்றிரண்டு நாட்கள் கழித்து, கோழிமுட்டையை ஒட்டுடன் தினமும் ஒன்று விதம் முப்பது நாளைக்கு தொடர்ந்து கொடுத்து வாருங்கள். அதன் பின்பு ஈத்து அடிக்கும். அப்படி இல்லை என்றால் மீண்டும் கூப்பிடுங்கள். மேற்சொன்ன மாத்திரை கிடைக்கவில்லை என்றால் பாண்டிகைண்ட் என்ற மாத்திரையை வாங்கிக் கொடுங்கள்.
கேள்வி: பால் மாட்டிற்கு காம்பில் கொப்பளம் அதிகமாக இருக்கிறது?
பதில்: காம்பில் கொப்பளம் உள்ளது. “மாட்டு அம்மை”(cow pox) என்று உறுதி செய்து கொள்ளவும். அப்படி இல்லையெனில் பால் கறந்து முடிந்த பின்பு போரிக் ஆஸிட் பவுடருடன் தேங்காய் எண்ணெய் கலந்து தொடர்ந்து தடவி வரவும். கொழுந்து வேப்பிலை, மஞ்சள், கல் உப்பு இம்மூன்றையும் அரைத்தும் காம்பில் தடவலாம். மேலும் பால் கறப்பதற்கு முன்பு நன்றாக காம்பினை கழுவிய பின் பால் கறக்கவும்.
கேள்வி: மாடு 8 மாத சினையாக உள்ளது. எந்த மாதிரியான தீவனம் கொடுப்பது? எப்படி பராமரிப்பது?
பதில்: முதலாவது 7 மாதம் முடிந்த உடனே பால் கறப்பதை நிறுத்துவது நல்லது. மேலும் சத்துள்ள சரிவிகித கலப்பு தீவனம் கொடுக்க வேண்டும். பசுந்தீவன புல் குறைந்தபட்சம் 10 கிலோ கொடுக்க வேண்டும். சுத்தமான தண்ணீர் அதற்கு கிடைக்கும்படி வைக்க வேண்டும்.
கேள்வி: மாட்டின் மேல் அதிமாக ஈ இருக்கிறது? என்ன செய்யலாம்?
பதில்: சோற்று கற்றாழையின் சோற்றை எடுத்து நன்கு தடவி 1 அல்லது 2 மணி நேரம் கழித்து பின் நீரால் கழுவவும். 2 அல்லது 3 நாட்களை தொடர்ந்து செய்யவும்.
கேள்வி: 4 மாத சினை மாடு பால் கறக்குது ஆனால் தீனி எடுக்க வில்லை?
பதில்: மாட்டிற்கு காய்ச்சல் உள்ளதா என்று உஷ்ண மானியை (Thermometer)கொண்டு கண்டு கொள்ளவும். காய்ச்சல் இருப்பின் கால்நடை மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை பெறவும். தீனி எடுக்கவில்லையென்றால் ஹமாலயன் பெத்திசா(Himalayan Bathisa) என்ற மருந்தினை வாங்கி 50 கிராம் எடுத்து சிறிது வெல்லத்துடன் கலந்து உருண்டையாக்கி உள்ளுக்குள் தினமும் காலையும் மாலையும் 3 அல்லது 4 நாட்களுக்கு கொடுக்கவும்.
கேள்வி: மாட்டிற்கு மடிநோய் வந்துள்ளது? அதற்கு என்ன செய்யலாம்?
பதில்: மடிநோய் வருவதற்கு முக்கிய காரணம் அது கட்டுத்துறை சுத்தமாக இல்லாததுதான். சுத்தமின்மை கிருமிகளுக்கு ஒரு சாதகமான சூழ்நிலையை உருவாக்குகின்றது.
- கட்டுத்துறை எப்பொழுதும் ஈரமில்லாமல் இருக்க வேண்டும்.
- சாணம், மூத்திரம் அடிக்கடி அகற்றப்பட வேண்டும்.
- மடி நோய் வந்துள்ள மடியில் வீக்கம் இருந்தால் கொழுந்து வேப்பிலை, மஞ்சள், கல் உப்பு இம்முன்றையும் மைய அரைத்து வீங்கி உள்ள மடியின் பக்கம் தடவவும்.
- பால் கறப்பவர் பால் கறப்பதற்கு முன் தன்னுடைய கையை நன்றாக சோப்பினால் கழுவி சுத்தமாக துடைத்து பின் பால் கறப்பத நல்லது.
- பால் கறப்பற்கு முன் காம்பினை நன்றாக கழுவி அதை ஈரமில்லாமல் துடைத்து பின் கட்டை விரலை நிமிர்த்தி, எண்ணெய்யோ அல்லது வெண்ணையோ தடவி கறப்பது மிகவும் நல்லது.
- கட்டை விரலை மடித்து கறப்பதை தவிர்க் க வேண்டும். ஏனெனில் அவ்வாறு மடித்து கறக்கும் போது பால் வரும் துவாரம் சேதப்படும். இது கிருமிகளுக்கு ஒரு சாதகமான சூழ்நிலையாகும்.
- பால் கறந்து முடிந்தபின் மீண்டும் காம்புகளையும் மடியையும், நீரால் சுத்தம் செய்து துடைக்கவும். பால் கறந்த உடன் மாடு படுப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பால் கறந்து முடிந்த உடன் பால் வரும் துவாரம் திறந்து இருக்கும். அப்பொழுது மாடு படுத்தால் தரையில் உள்ள அழுக்குகள் மூலமாக கிருமிகள் உள்ளே சென்று மடிநோயை உண்டாக்கும்.
கேள்வி: மாட்டை முதுகில் கல்லால் அடித்து வீங்கி உள்ளது? வலி அதிகமாகவும் உள்ளது?
பதில்: வீங்கி உள்ள இடத்தில் “அயோடெக்ஸ்”என்ற களிம்பினை தடவி தவிடு வறுத்து தொடர்ந்து 3-4 நாட்களுக்கு ஒத்தடம் கொடுக்கவும்.
கேள்வி: குடற்புழு நீக்கம் செய்த உடனே சினை ஊசி போடலாமா அல்லது ஒரு வருடம் கழித்து போடலாமா?
பதில்: சினை ஊசி போடுவதற்கு முன்பாக குடற்புழு நீக்கம் செய்வத மிக நல்லது. குடற்புழு நீக்கம் செய்த பின்பு, வரும் பருவத்தில் சினை ஊசி போடலாம்.
மாடு கண்ணு ஈண்று 3வருடம் ஆகிறது ஊசி நிர்கவில்லை.. இப்போது கோவில் காலை வந்தது.. 8மாதம் செணை.. ஆனால் இண்ணும் 3வயது கண்று மாடீடம் மடீ ஊட்டூகிறது....
ReplyDelete3வயது கிராஸ்ஜெர்சி கண்று எப்போது பருவத்திற்கு வரும்.
ReplyDeleteஎனது கன்றுகுட்டிக்கு இரண்டு வயது ஆகிறது இன்னும் இழுத்து அடிக்க மாட்டேன் என்கிறது
ReplyDeleteமற்றும் அவரது கன்றுகுட்டி நன்றாக கொழு கொழு வென்று உள்ளது என்று மட்டும் ஒரு மாடு பெண் கன்றாக ஈன என்ன செய்ய வேண்டும்
This comment has been removed by the author.
ReplyDeleteவாய் கானை காலில் கானை என்ன மருந்து போடலாம்
ReplyDeleteஜம்னாபாரி ஆடு மடி வீக்கத்துக்கு மருந்து என்ன? குட்டி ஈன்று 2 வாரங்கள் ஆகின்றது
ReplyDeleteமாட்டின் மேல் அதிகமாக கொசு உள்ளது என்ன செய்ய வேண்டும்
ReplyDeleteநான் சிந்தி (cross)மாடு வளர்த்து வருகிறேன் முதல் கன்று ஈன்று 3 வருடம் ஆகியும்,சினை படவில்லை..டாக்டர் கர்ப்பப்பை சுருங்கி விட்டது என சொல்லிட்டாரு..,.எனக்கு மாட்டை விற்க மனம் வரவில்லை.... மாட்டின் கர்ப்பப்பை மீண்டும் வளர வழி சொல்லுங்க....

ReplyDeleteசுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு அனைத்து பயிற்சியும் உதவிகளும் செய்துதரப்படும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்-9944209238
ReplyDeleteசுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு அனைத்து பயிற்சியும் உதவிகளும் செய்துதரப்படும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்-9944209238
ReplyDeleteசுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் ஆடு,மாடு,கோழி போன்ற பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்துதரப்படும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்-9944209238

ReplyDeleteமாடு முட்டுவதை தவிர்க்க என்ன செய்வது உதவுங்கள் நண்பர்களே
ReplyDeleteமாடு முட்டுவதை தடுக்க என்ன செய்வது
ReplyDeleteமாடுக்கு உப்பு தண்ணீர் அடர் தீவனத்துடன் கலந்து கொடுக்கலமா.....
ReplyDeleteமாடு ரொம் நாட்களாக சினை பிடிக்கவே இல்ல என்ன செய்வது
ReplyDeleteமாடு வயிறு உப்புதல் காரனம்,மற்றும் அதற்கான தீர்வு
ReplyDeleteமாடு வயிறு உப்புதல் காரனம் மற்றும் தீர்வு
ReplyDeleteஆட்டில் உண்ணி அதிகமாக உள்ளது அதை எவ்வாறு நீக்குவது
ReplyDeleteமடி இறங்க என்னசெய்யலாம்
ReplyDeleteபஞ்சகவ்யம் தயாரிக்க ஆடு மற்றும் மாட்டு சாணத்திற்கு வித்தியாசம் உண்டா?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவெள்ளாடுக்கு 2 முன்கால் வரவில்லை நடக்க முடியவில்லை. காய்ச்சல் இருக்கிறது. இது என்ன நோய், இதை எப்படி சரி செய்வது மருத்துவம் கூறவும்.
ReplyDeleteமாட்டின் காம்பில் வெள்ளை பருக்கள் போல் உள்ளது ... என்ன மருந்து கூறுங்கள் ஐயா
ReplyDeleteஎத்தனை மாடுகள் வீட்டில் வழங்கலாம்?
ReplyDeleteகன்று குட்டி இழுப்பு வந்தார் போல் விழுந்துவிடுகிறது என்ன செய்வது. பிறகு எழுந்து சூழல்கிறது.
ReplyDeleteKandru irandhu vittadhu maadu paal karakka marukiradhu oosi pottu paal karakkalaamaaa endha oosi poda vendum pls share medicine name
ReplyDeleteஆடு இன்று குட்டி பேட்டது அதுக்கு மடி ஒரு பக்கம் வீங்கி இருக்கிறது என்ன செய்ய வேண்டும்?
ReplyDeleteநஞ்சுக்கொடி மருத்துவரால் எடுக்கப்பட்ட பிறகு மாடு பழைய நிலைக்கு திரும்ப என்ன செய்ய வேண்டும். மேலும் அடுத்து கன்று ஈனும் பொழுது இப்பிரச்சினை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
ReplyDeleteமாடு வயல்களிலும் மண் பாதைகளிலும் நன்றாக நடக்கிறது.ஆனால் சிமெண்ட் சாலைகளிலும் கற்கள் கொண்ட தார் சாலைகளிலும் நடக்க சிரமப்படுகிறது இதை எவ்வாறு சரி செய்வது?
ReplyDeleteMaddu pallu podamal eruka ena saiya vaendum...thivanam ena koduga vaendum.
ReplyDeleteமாட்டுக்கு வாய் கோமாரி கால் கோமாரி வந்து. தற்போது சரியாகி.20 நாட்கள் ஆகி உள்ளது. தற்போது மாடு 9 மாதம் சினை. ஆனால் மடி இறங்கவில்லை. என்ன செய்வது. யென் அப்படி
ReplyDelete15 நாள் ஆன கன்று குட்டிக்கு ஊசி போடலாமா
ReplyDeleteமாடு கன்று ஈனும் பால் முதல் 7 மாத சிறை வரை பால் உற்பத்தி குறையும் சதவீதம் எவ்வளவு
ReplyDeleteஒரு வருட மாடு அதிக அளவில் மன் தின்கிறது அதை எவ்வாறு தடுப்பது?
ReplyDeleteமாடு கன்று போட்ட பிறகு நஞ்சு கொடியை என்ன செய்வது?
ReplyDeleteபசு கன்று போட்டு 2நாட்கள் ஆகியும், கன்றுக்குட்டி எழுந்து நிற்கவில்லை முன்னங்கால் இரண்டும் வளைந்து உள்ளது கால்நடை மருத்துவர்கள் வந்து பார்த்து இது பிறவி ஊனம் என்று சொல்லுகிறார்கள் இதற்கு என்ன செய்வது
ReplyDelete