பிறந்த கன்றுகள் பராமரிப்பு: கன்று பிறந்ததும் நாசிப்பகுதியில் ஒட்டியிருக்கும் சளி போன்ற திரவத்தை சுத்தமான துணியால் துடைத்து, சுவாசிப்பதற்கு உதவ வேண்டும். கன்றின் தொப்புள் கொடியை 3 செ.மீ. நீளம் விட்டு முடிச்சுப் போட்டு, முடிச்சிற்குக் கீழ் சுத்தமான புது கத்திரியால் வெட்டிவிட வேண்டும். பிறகு அந்தப்பகுதியில் டிங்சர் அயோடின் தடவ வேண்டும். கன்று பிறந்தவுடன் மூச்சுத் திணறினால் விலாப்புறத்தினை அழுத்திவிட வேண்டும் அல்லது குளிர்ந்த தண்ணீரை கன்றின் மேல் தெளிக்க வேண்டும். பிறந்த கன்றினை தாய்ப்பசுவைக் கொண்டு நக்கவிட வேண்டும். தாய்ப்பசு, கன்றை நக்கும் உணர்வுடன் இல்லாவிடில் சிறிதளவு உப்புத் தண்ணீரைக் கன்றின் மேல் தெளித்துப் பின் தாய்ப்பசுவை நக்கவிட வேண்டும். நல்ல திடமுள்ள கன்று பிறந்த அரை மணி நேரத்தில் எழுந்து நிற்கும். அப்படி எழுந்த நிற்க கஷ்டப்பட்டால் நாம் உதவி செய்ய வேண்டும். குளம்பின் நுனியில் ஜவ்வுப் பாகத்தைக் கிள்ளி அகற்றிவிட்டால் கன்று சிரமமில்லாமல் நிற்கும். மேலும் பிறந்தவுடன் கன்று இறந்துவிட்டால் பசுவின் பால் உற்பத்தி குறையாமல் சுத்தமான பாலை துரிதமாகப் பெறலாம். முதல் உணவாகச் சீம்பால்தான் கொடுக்க வேண்டும். (பிறந்த அரை மணி நேரத்திற்குள்) சீம்பாலைக் குடிப்பதால் கன்றுகள் நோய் எதிர்ப்பு சக்தி பெறுவதுடன் அவற்றிற்கு நல்ல மலமிளக்கியாகவும் விளங்குகிறது. கன்றுகளைத் தனியாகப் பிரித்து வளர்ப்பதால், அவற்றிற்குப் பால் தேவையான அளவு, குறிப்பிட்ட இடைவெளியில் கொடுக்க வேண்டும்.

No comments:
Post a Comment