Friday, October 31, 2014

மக்கு எரு தொழில்நுட்பம்

மட்குக் உரம் தயாரித்தல்

1.மட்கு உரம் ஒரு மேலோட்டம்
2.பயிர் குப்பையை மட்கு உரமாக்குதல்
3.கரும்பு சருகை மட்கு உரமாக்குதல்
4. கோழிப் பண்ணைக் கழிவுகளை மட்கு உர தொழில்நுட்பம் மூலம் மதிப்புக் கூட்டுதல்

1.மட்கு உரமாக்குதல் - ஒரு மேலோட்டம்

இயற்கை முறையில் அங்ககப்பொருள்களை நுண்ணுயிரிகளால் கட்டுப்படுத்தப்பட்ட நிலைகளில் மட்கச் செய்தல் அல்லது அழுகச் செய்தே மட்கு உரமாகும். அங்ககப் பொருட்களான பயிர்க்குப்பைகள், விலங்குகளின் கழிவுகள், தொழிற்சாலைக்கழிவுகள், ஆகியன மட்கச் செய்தபின் மண்ணில் உரமிடுவதற்கு ஏற்ற தகுதியைப் பெறுகிறது. மட்கு உரம் என்பது அங்ககப் பொருளின் வளமான ஆதாரமாகும். மண் அங்ககப் பொருள் மண் வளத்தை நிலை நிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, ஆகவே நிலைக்கும் வேளாண் உற்பத்திக்கு உதவுகிறது. தாவர ஊட்டச்சத்துக்கு ஆதாரமாக இருப்பது மட்டுமல்லாமல், மண்ணில் இயல், வேதி உயிர்ப் பண்புகளை மேம்படுகிறது. இந்த மேம்பாடுகளின் விளைவாக, மண்
  1. வறட்சி, நோய், நச்சுத்தன்மைக்கு அதிக எதிர்ப்பாக மாறுகிறது
  2. ஊட்டச்சத்துக்களை பயிர்கள் எடுத்துக் கொள்வதற்கு உதவுகிறது
  3. அதிக நுண்ணுயிர் செயல்களால் நுண்ணூட்ட சூழற்சியை கொண்டிருக்கிறது.
இந்த நன்மைகளால், பயிர்டுவதில் உள்ள சிரமங்கள் குறைகின்றன. அதிக மகசூல், செயற்கை உரங்களை விவசாயிகள் பயன்படுத்துவது குறைகிறது.

ஒரு நாளைக்கு விலங்குகளால் வரக்கூடிய சாணம் மற்றும் சிறுநீர்
விலங்கு
சிறுநீர் (மி.லி. /கிலோ)சாணத்தின் அளவு (கிலோ) ஒரு நாளைக்கு
குதிரை3-189-18
கால்நடை17-4518-30
எருமைகள்20-4525-40
ஆடு, வெள்ளாடுகள்10-401-2.5
பன்றிகள்5-303-5
கோழிகள்-2.5-3.5
விலங்குகளின் திட மற்றும் திரவ கழிவுகளின்  ஊட்டச்சத்து மதிப்பு
விலங்குசாணம் /மி.கி./கிராம்சிறுநீர்(%)
தழைமணிசாம்பல்தழைமணிசாம்பல்
கால்நடை20-454-107-251.210.011.35
ஆடு, வெள்ளாடுகள்20-454-1120-291.470.051.96
பன்றிகள்20-456-1215-480.380.10.99
கோழிகள்28-629-268-29---
மட்கிய உரம்ஏன் தேவையானது

பொருள்களான லிக்னின். செல்லுலோஸ், லொமி செல்லுலோஸ், பாலிசாக்கரைடுகள், புரோட்டீன்கள், லிப்பிடுகள் மற்றும் பல, தேவையில்லாத உயிர்ப்பொருள்களில் உள்ளன. இந்தப்பொருட்களை அப்படியே மூலப்பொருள்களாகிய பயன்படுத்த முடியாது. இந்த கலவைப் பொருட்கள் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்தாக மாற்றப்படுகின்றன. மண்ணில் இந்த பொருட்களை இடும் போது எந்தவிதமான மாற்றம் செய்யாமல் அப்படியே இடுகிறோம். பின் மண்ணில் மாற்றங்கள் நடந்து, பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது.
ஆகவே, மாற்றம் நடக்கக்கூடிய காலம் தவிர்க்க முடியாது.

மட்கு உரத்தின் நன்மைகள்
  • குப்பையின் அளவைக் குறைக்கிறது
  • மட்கு உரத்தின் எடை கடைசியில் குறைவாக இருக்கும்
  • மட்கு உரமாக்குதலின் வெப்பநிலை நோய் பரப்பும் கிருமிகள், களை விதைகள் அழிக்கின்றன
  • மட்கு உரம் மண்ணுடன் சமநிலையை ஏற்படுத்துகிறது
  • மட்கு உரம் தயாரித்தலின் போது, பல ஆதாரங்களிலிருந்து எண்ணற்ற கழிவுகள் ஒன்றாகக் கலக்கப் படுகின்றன
  • மண்ணை பக்குவப்படுத்துகிறது
  • விற்பனை செய்யக்கூடிய  பொருள்
  • உரம் கையாளுவதை மேம்படுத்துகிறது
  • மாசுபடுதலைக் குறைக்கிறது
  • நோய் பரப்பும் கிருமியைக் குறைக்கிறது
  • கூடுதல் வருமானம்
  • பயிர் நோய்கள் மற்றும் பூச்சிகளை அழிக்கின்றன
  • இரசாயன உரத்தின் தேவையைக் குறைக்கிறது
  • வேளாண் பயிர்களில் விளைச்சலை அதிகப்படுத்துகிறது
  • காடுகள் மறுஅமைப்பு, நிலங்களை நீருடன் வைத்திருத்தல், சூழ்நிலை மறுவாழ்வு
  • கேடு விளைவிக்கும் குப்பைகளால் ஏற்படும் மாசுபடுதலை குறைக்கிறது
  • பாய்ச்சும்போது திடப்பொருட்கள், எண்ணெய், ஆகியவற்றை நீக்குகின்றன
  • மாசுபட்ட காற்றில் உள்ள தொழிற்சாலை அங்ககப் பொருட்களை 99.6% பிடித்து, அழிக்கின்றன
  • மண், நீர், காற்று மாசுபடுதல் தீர்க்கும் தொழில்நுட்பங்களால்  50% செலவை குறைக்கிறது
மட்கு உரமாக்குதலின் குறைபாடுகள்
  • பல காரணங்களால் மட்கு உரத்தின் வேளாண் பயன்பாடு குறைவாக உள்ளது
  • அதிக எடையுடன் இருப்பதால் போக்குவரத்து செய்வதற்கு செலவு அதிகமாகிறது
  • மட்கு உரத்தின்  ஊட்டச்சத்து மதிப்பு இரசாயன உரங்களை விட குறைவாகவும் உள்ளது. ஊட்டச்சத்துக்களை வெளியிடும் அளவு குறைகிறது. ஆகவே, இது பயிர்களுக்கு  ஊட்டசத்து குறுகிய காலத்தில் அளிக்க முடியாததால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது
  • மட்கு உரத்தின் ஊட்டச்சத்துக்களின் அளவு இரசாயன உரங்களுடன் ஒப்பிடும் போது மாறுபடுகிறது
  • கடின உலோகங்கள் மற்றும் மட்கு உரங்களில் உள்ள மாசுகளின் அளவு முக்கியமாக நகராட்சி திட கழிவுகளில் அதிகமாக உள்ளது. இந்த மாசுபட்ட மட்கு உரத்தை பயிர்களுக்கு பயன்படுத்துவது முக்கியமாக பிரச்சினையாக உள்ளது.
  • நீண்டகாலம் அதிக அளிப்பு மட்கு உரத்தால் ஏற்படும் உப்பு, ஊட்டச்சத்து அல்லது கடின உலோக படிவு பயிர் வளர்ச்சி, மண் உயிரிகள், நீர் தரம், விலங்கு மற்றும் மனித இனத்தைப் பாதிக்கிறது.

2. பண்ணை கழிவுகளை மக்கவைத்தல்

பண்ணைக்கழிவு என்பது அறுவடைக்குபின் வயலில் எஞ்சியுள்ள (மீதமுள்ள) இலாபம் தர இயலாத ஒரு பகுதி ஆகும். வெவ்வேறு பயிர்களிலிருந்து பெறப்படும் வைக்கோல், பயிர் கட்டைகள் மற்றும் பிற கழிவுகள் அறுவடையின்போது கழிவாக கிடைக்கும். கதிர் அடித்தல் மற்றும் அடித்தலுக்கு பின் செய்யப்படும் செய்முறைகளின் போது கிடைக்கும் தேவையற்ற பொருட்கள் முறையே, நிலக்கடலைத் தொலி, புண்ணாக்கு, நெல் உமி, சோளம், கம்பு  மற்றும் மக்காச்சோளம் ஆகியவற்றின் கதிர்கள் மக்கவைத்தலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. அதிகப்படியான உயிர் திடக்கழிவுப்பொருட்களுக்கு ஆதரவாக தோன்றுபவை வயலில் இருந்து நிராகரிக்கப்படும் சோளம், மக்காச்சோளம், மொச்சை, பருத்தி மற்றும் கரும்புகளின் மிகுதிகள் ஆகியனவாகும். தமிழ் நாட்டில் 190 இலட்சம் டன் பண்ணைக் கழிவுகள் மக்கவைத்தலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இதிலிருந்து தழைச்சத்து 1.0 இலட்சம் டன்னும், மணிச்சத்து 0.5 இலட்சம் டன் மற்றும் சாம்பல்சத்து 2.0 இலட்சம் டன்கள் பெறப்படுகின்றன. எனினும் பண்ணைக்கழிவுகளை உரமாக பயன்படுத்துவதற்கு முன் அதனை நன்றாக மக்கவைத்தல் அவசியம்.

பண்ணைக்கழிவுகளை சேகரித்தல்

பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் பண்ணைக்கழிவுகள் மக்கச்செய்யும் இடத்திற்கு கொண்டுவரப்படுகின்றன. இந்த பண்ணைக்கழிவு மக்கும் இடம் பண்ணையில் ஏதாவது ஒரு மூலையில் நல்ல சாலைப்போக்குரத்துக்கு ஏதாவது இருக்க வேண்டும். நீர் ஆதாரம் போதுமான அளவு இருக்க வேண்டும்.
பண்ணைக்கழிவுகளை மக்கும் இடத்தின் ஒரு பகுதியில் குவிக்கப்பட்டு, அதற்கு பின் பிற மக்கும் வேலைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

கழிவுகளை சிறுசிறு துண்டுகளாக்குதல்

மக்குவித்தலின் போது கழிவுகளின் துகள்களின் அளவு முக்கிய பங்கு வகிக்கும். அதனால் அக்கழிவுகளை மக்குவிப்பதற்கு முன்பு அவற்றை சிறு சிறு துகள்களாக்க வேண்டும். அவற்றை கையினால் செய்யும் போது வேலை ஆட்கள் அதிகமாக தேவைப்படுவார்கள். அதனால் இப்பணிக்கு, துகள்களாக்கும் இயந்திரத்தை பயன்படுத்தலாம். துகள்களின் பரிந்துரைக்கப்பட்ட அளவு 2 முதல் 2.5 செ.மீ ஆகும்.

பச்சைநிறக் கழிவுகளையும் பழுப்பு நிறக் கழிவுகளையும் ஒன்றாக கலக்குதல்

கரிமச்சத்து மற்றும் தழைச்சத்து விகிதம் தான், மக்கும் முறையை முடிவெடுக்கும். கரிமச்சத்து மற்றும் தழைச்சத்தின் விகிதத்தின் அளவு அதிகமாக இருந்தால், மக்குதல் நடைபெறாது. கரிமச்சத்து மற்றும் தழைச்சத்தின் விகிதத்தின் அளவு சிறியதாக இருந்தால் மட்டுமே மக்குதல் நடைபெறும் அந்த விகிதம் கிடைப்பதற்கு, கரிமச்சத்து மற்றும் தழைச்சத்து அதிகமுள்ள கழிவுகளை நன்கு கலக்க வேண்டும். க்லைரீஸீடியா இலைகள், பார்த்தீனியம் களைகள், அகத்தி இலைகள் ஆகியவை பசுமைக் கழிவுகளாகும். வைக்கோல், காய்ந்த இலைகள், காய்ந்த புல் ஆகியவை கரிமச்சத்து அதிகமுள்ள பழுப்பு நிறக் கழிவுகளாகும் . இவ்விரண்டு கழிவுகளையும் சேர்த்து மக்க வைத்தால், அக்கழிவுகள் விரைவாக மக்கிவிடும். விலங்குகளின் கழிவுகளிலும் தழைச்சத்து அதிகம் இருக்கும். மக்குவித்தலின்போது, அதிகம் கரிமச்சத்து, அதிகம் தழைச்சத்து உள்ள கழிவுகளை மாற்றி மாற்றி போடும் போது, விரைவாக அவை மக்கிவிடும்.

கம்போஸ்ட் குவியல் அமைத்தல்

குறைந்தது, 4 அடி உயரத்திற்கு கழிவுகளைப் போட்டு அவற்றை குவியல் போட வேண்டும். மக்க வைக்கும் இம் சிறிது உயரத்திலும், நல்ல நிழலிலும் இருக்க வேண்டும். கழிவுகள் அனைத்தையும் நன்கு கலக்கிவிட வேண்டும். கரிமச்சத்து மற்றும தழைச்சத்து நிறைந்த கழிவுகளை மாற்றி மாற்றி அமைத்து இடையிடையே கால்நடை கழிவுகளையும் கலக்க வேண்டும். இவ்வாறு செய்த பின், அவற்றை நன்கு ஈரமாக்க வேண்டும்.

மக்குதலுக்கு தேவையான உயிர் உள்ளீடுகள்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நுண்ணுயிர் கூட்டுக்கலவை, மக்குதலை வேகமாக செய்யக் கூடிய பலவகை நுண்ணுயிரிகளைக் கொண்டுள்ளது. மக்கக் கூடிய கழிவுகளுடன் இந்த நுண்ணுயிரிகளைச் சேர்க்காதபோது, அப்பொருட்களில் இயல்பாக இருக்கும் நுண்ணுயிரிகளே வளர்ந்து மக்குதலைச் செய்கின்றன. இதனால் மக்குதலுக்கு நீண்ட நாட்கள் ஆகின்றது. அதேசமயம் நுண்ணுயிர்க் கூட்டக்கலவையைச் சேர்க்கும்போது, நுண்ணுயிர் செயல்பாடு முன்னரே தொடங்கி, குறைந்த காலத்தில் மக்குதல் நிறைவடைகிறது. ஒரு டன் பயிர்க்கழிவுக்கு, 2 கிலோ கூட்டுக்கலவை உபயோகப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. 2 கிலோ கூட்டுக்கலவையை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து கரைசலாக்கிக் கொள்ள வேண்டும்.  இக்கரைசலைக் குவித்து வைக்கப்பட்டுள்ள திடக்கழிவில் நன்றாகத் தெளித்து கலக்க வேண்டும். பசுஞ்சாணக் கரைசல், நுண்ணுயிரிகளுக்கு நல்லதொரு ஆதாரமாகும். ஆனால் அதிலுள்ள தேவையற்ற நுண்ணுயிர்கள் தேவையான நுண்ணுயிர்களோடு போட்டியிடுகின்றன. எனினும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நுண்ணுயிர் கூட்டுக் கலவை கிடைக்காத பொழுது, பசுஞ்சாணக் கரைசல் நல்ல ஆதாரமாகும். ஒரு டன் பயிர்க்கழிவுக்கு, 40 கிலோ பசுஞ்சாணத்தை 100 லிட்டர் தண்ணீரில் கரைத்து, பயிர்க்கழிவின் மேல் தெளிக்க வேண்டும். பசுஞ்சாணக் கரைசலானது, தழைச்சத்திற்கும், நுண்ணுயிர்களுக்கும் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது.

கம்போஸ்ட் படுக்கையில் காற்றோட்டம் ஏற்படுத்துதல்

திடக்கழிவுக் குவியலில் தேவையான அளவு ஆக்ஸிஜன் இருக்க வேண்டும். இதற்கு அக்குவியல் காற்றோட்டமுடையதாக இருக்க வேண்டும். குவியலைப் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கிளறிவிடுவதால், கீழுள்ள பொருட்கள் மேலும், மேலுள்ள பொருட்கள் கீழும் செல்கின்றன. இவ்வாறு கலக்குவதால் நுண்ணுயிரிகளின் செயல்பாடு தூண்டப்பட்டு, மக்குதல் செயல் வேகமாக நடைபெறுகின்றது. சில சமயங்களில் காற்றோட்டம் ஏற்படுத்த பக்கவாட்டில் அல்லது செங்குத்தான நிலையில் குழாய்களைப் பொருத்தலாம். மரத்துகள்களை பயன்படுத்துவதால் கழிவுகள் மேலும் காற்றோட்டம பெறுகின்றன.

ஈரப்பதம் நிலைநிறுத்துதல்

மக்கிய உரம் தயாரிக்கும் போது, 60 சதவிகிதம் ஈரப்பதம் இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும், மக்கிய உரத்தின் ஈரப்பதத்தை குறையவிடக்கூடாது. கழிவுகளில் ஈரப்பதம் குறைவாக இருந்தால், அவைகளில் உள்ள நுண்ணுயிரிகளானது இறந்துவிட நேரிடும். இதனால் மக்கிய உரம் தயாரித்தல் நிகழ்வு பாதிக்கப்படும்.

மக்கிய உரம் முதிர்வடைதல்

முதிர்வடைந்த மக்கிய உரத்தின் வெளிப்படை தோற்றமானது, அளவு குறைந்தும், கருப்பு நிறமாகவும், மண்ணின் மணமும், ஒவ்வொரு துகளின் அளவும் குறைந்தும் காணப்படும். மக்கிய உரம் முதிர்வடைதல் முடிந்த பிறகு, மக்கிய உரக்குவியலை கலைத்து தரையில் பரப்ப வேண்டும். அடுத்து ஒரு நாள் கழித்து மக்கிய உரமானது ஒரே அளவாக வருமாறு, 4 மி.மி. சல்லடை கொண்டு சலித்து எடுக்க வேண்டும். மக்கிய உரம் சலித்த பிறகு கிடைக்கும் மக்காத கழிவுகளை, மறுபடியும் உரம் தயாரிக்க பயன்படுத்துவதன் மூலம் மக்கிய உரம் தயாரித்தலானது முடிவடைகிறது.

செறிவூட்டப்பட்ட மக்கிய உரம்

அறுவடை செய்யப்பட்ட மக்கிய உரத்தை நிழலில், கடினமான தரையில் குவிக்க வேண்டும். நன்மை தரக்கூடிய நுண்ணுயிரிகளான அசடோபாக்டர், அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ், பாஸ்போபாக்டீரியா (0.2 சதவீதம்) மற்றும் ராக்பாஸ்பேட் (2 சதவிகிதம்) ஆகியவற்றை ஒரு டன் மக்கிய உரத்துடன் கலக்க வேண்டும். கலக்கப்பட்ட நுண்ணுயிரிகளின் அதிகபட்ச வளர்ச்சியை ஊக்குவிக்க, 40 சதவிகிதம் ஈரப்பதத்தை நிலை நிறுத்த வேண்டும். மக்கிய உரத்தில் இடப்பட்ட நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, 20 நாட்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட உரமானது, செறிவூட்டப்பட்ட மக்கிய உரம் எனப்படும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட மக்கிய உரமானது, சாதாரண மக்கிய உரத்தை விட ஊட்டச்சத்து மற்றும் நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிரிகள் அளவு அதிகமாக இருப்பதுடன் தாவரத்தின் வளர்ச்சியை தூண்டுவதற்கும் உதவுகிறது.
மக்கிய உரத்தின் சத்துக்களின் அளவு

ஒவ்வொரு மக்கிய உரத்தின் சத்துக்களின் அளவு, அதற்காக எடுக்கப்படும் கழிவுகளை பொருத்தும் வேறுபடும். பொதுவாக மக்கிய உரத்தில் முதன்மைநிலை ஊட்டசத்தும், இரண்டாம் நிலை ஊட்டசத்தும் இருக்கும். இது அட்டவணை - 1 ல் குறிக்கப்பட்டுள்ளது. மக்கிய உரத்தில் சத்துக்களின் அளவு குறைவாக இருந்தாலும், தாவரத்திற்கு தேவையான அளவை, இது பூர்த்தி செய்யும்.

மக்கிய உரத்தின் நன்மைகள்
  • தாவர மற்றும விலங்குகளின் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட உயர்தர மற்றும் செறிவூட்டப்பட்ட உரமானது பண்ணையிலேயே கிடைக்கிறது.
  • மக்கிய உரத்தை கலப்பதன் மூலம் மண்ணின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகள் மேம்படுகிறது.
  • தாவரக் கழிவுகள் மண்ணின் தரத்தை மேம்படுத்துவதால் விளை பொருட்களின் தரம் உயர்கிறது.
அட்டவணை1: பல பயிர்க்கழிவுகளில் இருந்து பெறப்பட்ட மட்கு உரத்தின் சத்துக்களின் அளவு
மட்கு உரம்
சத்துக்களின் அளவு (%)
தழைச்சத்து
மணிச்சத்து
சாம்பல் சத்து
பசுஞ்சாணம்
0.3 - 0.4
0.1 - 0.2
0.1 - 0.3
குதிரை எரு
0.4 - 0.5
0.3 - 0.4
0.3 - 0.4
செம்மறி எரு
0.5 - 0.7
0.4 - 0.6
0.3 - 0.1
மனித கழிவு
1.0 - 1.6
0.8 - 1.2
0.2 - 0.6
கோழிக் கழிவு
1.8 - 2.2
1.4 - 1.8
0.8 - 0.9
வீட்டுக் கழிவு
2.0 - 3.5
-
-
கோமையம்
0.9 - 1.2
குறைவு
குறைவு
கழிவு நீர்
1.2 - 1.5
குறைவு
0.5 - 1.0
செம்மறியாடு கழிவுநீர்
1.5 - 1.7
0.1 - 0.2
1.3 - 1.5
நிலக்கரி சாம்பல்
0.73
0.45
0.53
மரச்சாம்பல்
0.1 - 0.2
0.8 - 5.9
1.5 - 3.6
வீட்டுக்கழிவு மற்றும் தொழிற்சாலை கழிவு
கிராமப்புற மக்கிய உரம்
0.5 - 1.0
0.4 - 0.8
0.8 - 1.2
நகர்புற மக்கிய உரம்
0.7 - 2.0
0.9 - 3.0
1.0 - 2.0
மட்கிய உரு உரம்
0.4 - 1.5
0.3 - 0.9
0.3 - 1.9
பில்டர் பிஸ் கேக்
1.0 - 1.5
4.0 - 5.0
2.0 - 7.0
வேளாண் கழிவுகள்



கம்பு (தட்டு)
0.65
0.75
2.50
பருத்தி (குச்சி)
0.44
0.10
0.66
வாழைத்தண்டு
0.61
0.12
1.00
சோளம் (தட்டு,தோகை)
0.40
0.23
2.17
மக்காச்சோளம் (தட்டு)
0.42
1.57
1.65
நெல் (வைக்கோல்)
0.36
0.08
0.71
புகையிலை
1.12
0.84
0.80
துவரை
1.10
0.58
1.28
கரும்பு (தோகை)
0.53
0.10
1.10
கோதுமை
0.53
0.10
1.10
புகையிலை தூள்
1.10
0.31
0.93
மக்கிய உரப் பயன்பாடு 

மக்கிய உரமானது, மண்ணின் தன்மையையும், மண்ணின் கரிமச்சத்தையும் அதிகரிக்கும் ஒரு முக்கியப் பொருளாக பயன்படுகிறது. மக்கிய உரத்தை செயற்கை உரத்திற்கு ஈடாக ஒப்பிட முடியாது. ஆனால் மக்கிய உரமானது மண்ணிற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் குறைந்த அளவு கொடுக்கிறது. ஒரு எக்டேருக்கு 5 டன் செறிவூட்டப்பட்ட மட்கு உரம் தேவைப்படுகிறது. இதையும் பயிரிடப்படுவதற்கு முன்பு நிலத்தில் அடியுரமாக இட வேண்டும்.

மட்கு உரத்தின் வரை முறைகள்
  • மட்கு உரம் தயாரிக்கும் போது, பொருட்கள் முற்றிலும் மக்கி இருக்க வேண்டும்.
  • கழிவுகள், சரியாக மக்கவில்லை என்றால் அதை4 மி.மி சல்லடை கொண்டு சலித்து எடுக்க வேண்டும். சலித்த பின்பு கிடைக்கும் கழிவுகளை மீண்டும் மக்கச் செய்ய வேண்டும்.
  • மட்குஉரம் தயரித்தலில் வெட்டப்பட்ட பெரிய கிளைகள் மற்றும் மற்ற மரபொருட்களை உபயோகப்படுத்தக்கூடாது. இது மக்க அதிக நாள் எடுப்பதுடன் மற்ற பொருட்கள் மக்குவதிலும் தடை ஏற்படுத்துகின்றது.

3. கரும்புத்தோகையைப் பயன்படுத்தி மக்கிய உரம் தயாரித்தல் 

முன்னுரை

கரும்புப் பயிரில் ஒரு பருவத்தில், ஒரு ஹெக்டருக்கு 10-லிருந்து 12 டன் வரை உலர்ந்த இலைகள் உற்பத்தியாகிறது. 5-வது மற்றும் 7-வது மாதமானதும் கரும்புப் பயிரிலிருந்து உலர்ந்த பயனற்ற இலைகளை நீக்கும் பருவம் ஆகும். உலர்ந்த இலையில் 28.6 சதவிகிதம் கரிமச் சத்தும், 0.35லிருந்து 0.42 சதவிகிதம் தழைச்சத்தும், 0.04லிருந்து 0.15சதவிகிதம் மணிச்சத்தும், 0.50லிருந்து 0.42 சதவிகிதம் சாம்பல் சத்தும் உள்ளது. உலர்ந்த கரும்பு தோகைகளை மண்ணோடு கலப்பதால் மண்ணின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் தன்மை மேம்படுகிறது. இதனால் மண்ணின் மின்கடத்தும் திறன் குறைந்து, நீரைத் தக்கவைக்கும் திறன் அதிகரிக்கிறது. மண்ணில் உள்ள நுண்துளைகளினால் மண்ணின் கட்டமைப்பு அதிகரிக்கிறது. கரும்பின் உலர்ந்த தோகைகளை மண்ணோடு கலப்பதால் மண்ணின் அடர்த்தி குறைகிறது. மண்ணின் ஊடுருவும் திறன் அதிகரிக்கிறது. உலர்ந்த கரும்பு தோகைகளை மண்ணோடு நேரடியாக கலப்பதால் மண்ணின் அங்கக தன்மை அதிகரிக்கிறது. மண்ணில் உள்ள நுண்துளைகளினால் மண்ணின் கட்டமைப்பு அதிகரிக்கிறது. கரும்பின் உலர்ந்த தோகைகளை மண்ணோடு கலப்பதால் மண்ணின் அடர்த்தி குறைகிறது. மண்ணின் ஊடுருவும் திறன் அதிகரிக்கிறது. உலர்ந்த கரும்பு தோகைகளை மண்ணோடு நேரடியாக கலப்பதால் மண்ணின் அங்கக தன்மை அதிகரிக்கிறது. மண்ணில் ஊட்டசத்துக்களின் அளவும் அதிகரிக்கின்றது. கரும்பின் உலர்ந்த தோகைகளை எளிதில் மக்கிய உரமாக மாற்றுவதற்கு அஸ்பர்ஜ¤ல்லஸ், பெனிசீலியம், ட்ரைக்கோடெர்மா,ட்ரைக்கரஸ் ஆகிய பூஞ்சாண்களை பயன்படுத்தலாம். மேலும் இத்துடன் ராக் பாஸ்பேட் மற்றும் ஜிப்சம் முதலியவைகளை சேர்ப்பதன் மூலம் மக்கும் திறனை அதிகப்படுத்தலாம்.

மக்கிய கரும்புத் தோகை உரத்தை அளித்தல்

செறிவூட்டப்பட்ட மக்கிய உரம் எக்டருக்கு 5 டன் பரிந்துரைக்கப்படுகிறது. இது வயலில் உழப்பட்டு மீண்டும் கரும்பு வயலுக்கு உரமாகப் பயன்படுத்தப்படுகிறது.
மக்கிய உரம் தயாரிப்பதற்கு குழி ஏற்படுத்திச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மண்ணின் மேற்பரப்பிலேயே மக்கிய உரம் தயாரிக்கலாம்.

உலர்ந்த கரும்புத் தோகைகளை சிறுதுண்டுகளாக்குதல்

உலர்ந்த கரும்புத் தோகை நீளமான ஒன்றாகும். இதை கையாளுவதும் குவிப்பதும் கடினமானதாகும். ஆதலால் இந்த உலர்ந்த கரும்புத் தோகைகளை சிறு சிறு துண்டுகளாக்கி பின் உபயோகப்படுத்தலாம். இதனால் அதன் அளவு குறைவதுடன், வெளிபரப்பு அதிகரிக்கிறது. உலர்ந்த கரும்பு தோகைகளில், அதிக இலைபரப்பும், நுண்ணுயிரிகளும் அதிகமாக காணப்படும். இது மக்குவதை ஊக்குவிக்கிறது. சிறு துண்டுகளாக்கும் கருவியை உபயோகித்து அனைத்துத் தோகைகளையும் துண்டுகளாக்கலாம். கரும்புகளை துண்டுகளாக்கும் கருவியும் இதற்கு பயன்படுகிறது. துண்டுகளாக்கும் கரும்புத் தோகையை துண்டுகளாக்காமல் மக்குதல் நிகழ்ச்சி துரிதமாக நடக்க வாய்ப்பில்லை.

இடுபொருட்கள்

நுண்ணுயிர் கூட்டுக் கலவை

வேளாண்மை பல்கலைக்கழகம் பயோமினரலைசர் என்ற நுண்ணுயிரிகளின் கூட்டு கலவை மக்குவதை ஊக்குவிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. 1 டன் கரும்புத் தோகைக்கு 2 கிலோ பயோமினரலைசர் பரிந்துரைக்கப்படுகிறது. பயோமினரலைசர் இல்லாமல் மக்கிய உரத்தை மிக விரைவில் தயாரிக்க முடியாது. இது தவிர மற்றொரு இடு பொருள் சாணக் கரைசலாகும். சாணக்கரைசலில் மட்குவதற்கு உகந்த நுண்ணுயிரி குறைவாக இருப்பதால், மட்கும் காலம் அதிகம் ஆகிறது.

கால் நடைக் கழிவுகள்

கோழி எரு, கரிமச்சத்து மற்றும் தழைச்சத்து விகிதத்தை குறைப்பதற்கு ஆதாரமாக பயன்படுகிறது. ஒரு டன் கரும்புத் தோகைக்கு 50 கிலோ சாணம் பரிந்துரைக்கப்படுகிறது. இதை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து பின்பு கரும்புத் தோகையோடு கலக்க வேண்டும். ராக்பாஸ்பேட் 5 கிலோவை ஒரு டன் கழிவுக்கு சேர்ப்பதால், மணிச்சத்தின் அளவு உயர்த்தப்படுகிறது.

குவியல் உருவாக்குதல்

அனைத்து இடுபொருள்களை இட்ட பின்பு, கழிவுகளினால் குவியல் உருவாக்க வேண்டும். இது 4 அடி உயரத்திற்கு இருந்தால் நல்லது. ஏனெனில் குவியலுக்குள் வெப்பம் உருவாக்கப்பட்டு, அது நிலைநிறுத்தப்பட இந்த உயரம் அவசியம்.

கழிவுகளை கிளறிவிடுதல்

கழிவுகளை 15 நாட்களுக்கு ஒரு முறை கிளறி விட வேண்டும். குவியலுக்குள் காற்றோட்டம் இருந்தால் மட்டுமே நன்றாக மக்கும். அது மட்டுமில்லாமல் கீழிருக்கும் கழிவுகள் மேலும், மேலிருக்கும் கழிவுகள் கீழும் திருப்பி விடப்படுகிறது. இதனால் கழிவுகள் முழுவதும் ஒரே சீராக மக்குகிறது.
ஈரப்பதத்தை கட்டுபடுத்துதல்

மக்கும் உரம் தயாரிக்கும் முறையில் கழிவுகளில் 60% ஈரப்பதம் தேவைப்படுகிறது. ஈரப்பதம் குறைந்தால் அதில் உள்ள நுண்ணுயிரிகள் அனைத்தும் இறந்துவிடும் அபாயநிலை ஏற்படுகிறது. ஈரப்பதம், மக்குவதற்கு ஒரு முக்கிய காரணியாகும்.

மக்குதல் முதிர்வடையும் நிலை

அளவு குறைதல், மண் வாசனை, பழுப்பு கலந்த கருமை நிறம், இவைகள் மக்குதல் முதிர்வைக் கண்டறிய உதவுகிறது. இந்த நிலையை அடைந்த பிறகு மக்கிய உரத்தை பிரித்து உலற விட வேண்டும். 24 மணிநேரத்திற்கு பிறகு மக்கிய உரத்தை சலிக்க வேண்டும். சலித்த பின்பு கிடைக்கும் கழிவுகளை மறுபடியம் மக்கச் செய்யலாம்.

செறிவூட்டுதல்

மக்கிய உரத்துடன், நுண்ணுயிரிகளான அசிட்டோபாக்டர் அஸோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, மற்றும் சூடோமோனாஸ் ஆகியவற்றை கலப்பதால் அவை மேலும் ஊட்டமேற்றப்படுகிறது. இருபது நாட்களில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகமாகின்றது.

மக்கிய கரும்பு தோகையின் சத்துக்களின் அளவு

செறிவூட்டப்பட்ட மக்கிய உரம் எக்டருக்கு 5 டன் பரிந்துரைக்கப்படுகிறது. இது வயலில் உழப்பட்டு மீண்டும் கரும்பு வயலுக்கு உரமாகப் பயன்படுத்தப்படுகிறது.

மக்கிய உரம் தயாரித்தலின் வரைமுறைகள்
  • தோகை உரித்த பொருள்கள் சிறு சிறு துண்டுகளாக ஆக்கப்பட வேண்டும்.
  • உரம் தயாரிக்க நீண்ட நாட்கள் ஆகிறது.
  • மக்கிய உரம் தயாரிக்க நிலம் தயாரிக்க நிலம் இல்லாத விவசாயிகள் வயலில் நேரடியாக இட்டு உரமாக்கலாம்.

4.கோழிப் பண்ணைக் கழிவுகளை உரமாக்கும் தொழில்நுட்பம்

முன்னுரை

கோழிப்பண்ணைத் தொழில் உலகில் மிகவும் வேகமாகவும், அதிகமாகவும் வளர்ந்து வரும் தொழில்களில் ஒன்றாகும். இந்தியாவில் 3.30 மில்லியன் டன் கோழிக் கழிவு ஒரு வருடத்திற்கு உற்பத்தியாகிறது. கோழிவளர்ப்பு தொழில் நுட்பத்தின் மூலம் பல மாநிலங்களில் உள்ளூர் விவசாய பொருளாதாரம் உயருகிறது. கோழிப் பண்ணைத் தொழிலானது மிகவும் லாபகரமாகவும் வெற்றிகரமாகவும் இருந்த போதிலும், இப்பண்ணைகளிலிருந்து வரும் கழிவுகள் சுற்றுப்புறச் சூழலை பாதிப்படையச் செய்கின்றன. விவசாயக் கண்ணோட்டத்தில் கோழிப் பண்ணைக் கழிவிலிருந்து வெளியேறும் நைட்ரேட் நைட்ரஜன் நிலத்தடி நீரை மாசு அடையச் செய்வதில் பெரும்பங்கு வகிக்கிறது. கோழிக் கழிவை முறையற்று சேமித்து வைப்பதன் மூலம் அவற்றிலுள்ள கனிம உலோகங்கள் நீர் நிலைகளை மாசுபடுத்துகின்றன.
கோழி எரு மக்கும் பொழுது வெளியாகும் அம்மோனியா சுற்றுப்புறச் சூழல் மாசுபடுதலை அதிகரிப்பது மட்டுமல்லாமல் எருவின் உர மதிப்பையும் குறைக்கிறது. ஏனென்றால் கோழிப்பண்ணைக் கழிவில் பொதுவாக தழைச்சத்து அதிகமாகவும், கரிமம் - தழைச்சத்தின் விகிதம் குறைவாகவும் உள்ளது. கோழிப்பண்ணைக் கழிவில் 60% தழைச்சத்தானது யூரிக் அமிலம் மற்றும் யூரியாவாக உள்ளது. இது நீராற் பகுத்தல் மூலம் அம்மோனியாவாயுமாக மாறி வெளியேறுவதால் தழைச்சத்து இழப்பு ஏற்படுகிறது. கோழி எருவில் இருந்து அம்மோனியா ஆவியாதலை பல்வேறு வழிகளில் குறைக்கலாம். கோழி எருவினை, அதிகக் கரிமப் பொருள் கலந்த அங்கக கழிவுப் பொருட்களுடன் மக்கச் செய்வதினால், அம்மோனியா ஆவியாதலை தற்காலிகமாக நிலைப்படுத்த முடியும். மேம்படுத்தப்பட்ட இந்த தொழில் நுட்பமானது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும்.

கோழிப்பண்ணைக் கழிவிலிருந்து உரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் வைக்கோல் மூலம், கோழிப்பண்ணைக் கழிவில் மக்கிய உரம் தயாரிக்கும் முறை

குறிப்பிட்ட அளவு புதிய கோழி எச்சங்கள் சேகரிக்கப்பட்டு, பிறகு கழிவு மக்குவதற்கு ஏதுவான கரிமம் - தழைச்சத்தின் விகிதம் 25 முதல் 30 வரை உள்ளவாறு 2 செ.மீ.க்கும் குறைவாக துண்டாக்கப்பட்ட வைக்கோல் உடன் கலக்கப்படுகிறது. ஒரு டன் கழிவுகளுடன் 250 கிராம் அடங்கிய 5 பாக்கெட்டுகள் சிப்பிக்காளான் விதை உட்செலுத்தப்பட்டு பின்பு கோழி எரு மற்றும் வைக்கோல் கலவை நிழலின் கீழ் குவியலாக்கப்படுகிறது. குவியலின் ஈரப்பதம்  40 - 50% இருக்குமாறு பராமரிக்கவேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளிப்பதுடன் 21,35,42ம் நாளில் நன்றாகக் கிளறிவிட வேண்டும். இவ்வாறு செய்வதின் மூலம் 50 நாட்களுக்குள் கோழிப்பண்ணைக் கழிவு மற்றும் வைக்கோல் கலவையானது முழுமையான மக்கிய உரமாக மாற்றப்படுகிறது.
இந்த மட்கிய உரத்தில் கீழ்க்கண்ட சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன.
தழைச்சத்து :  1.89%
மணிச்சத்து  :  1.83%
சாம்பல்சத்து : 1.34%
கரிம - தழைச்சத்து விகிதம்  :12.20

நார்க்கழிவு மற்றும் சிப்பிக்காளான் விதை மூலம் கோழிப்பண்ணைக் கழிவில் மக்கிய உரம் தயாரிக்கும் முறை
          
குறிப்பிட்ட அளவு புதிய கோழிப்பண்ணைக் கழிவுகளை சேகரித்து, மக்குவதற்கு ஏதுவாக கரிமம்-தழைச்சத்தின் விகிதம் 25-30 உள்ளவாறு, உலர்ந்த நார்க் கழிவுடன் 1:15 விகிதத்தில் கலக்கப்படுகிறது. சிப்பிக்காளான் விதை, ஒரு டன் கழிவுப்பொருளுக்கு 2 பாக்கெட்டுகள் என்ற விகிதத்தில் சேர்த்து பின் கலவை நிழலின் கீழ் குவியலாக்கப்படுகிறது. குவியலின் ஈரப்பதம் 40-50% வரை பராமரிக்கப்பட்டு 21,28 மற்றும 35 ஆம் நாளில் இடைவிடாமல் கிளறிவிடவேண்டும். 28 ஆம் நாள் கிளறும் போது சிப்பிக்காளான் விதை மீண்டும் ஒரு டன்னுக்கு 2 பாக்கெட்டுகள் சேர்க்கப்பட வேண்டும். 45 நாட்களில் நன்கு தரம் உள்ள மக்கிய உரம் பெறப்படுகின்றது. இந்த மக்கிய உரத்தில் கீழ்க்கண்ட சத்துக்கள் உள்ளடங்கியுள்ளது.
தழைச்சத்து   :   2.08%
மணிச்சத்து    :   2.61%
சாம்பல்ச்சத்து :  0.94%
கரிம - தழைச்சத்து விகிதம்  : 13.54

கூண்டு அமைப்பின் கீழ் குழி அமைத்து கோழிப்பண்ணைக் கழிவில் மக்கிய உரம் தயாரிக்கும் முறை

கூண்டு அமைப்பின் கீழ் குழி உருவாக்கி அதில் 5 செ.மீ மணலையும் 10 செ.மீ.க்கு நார்கழிவுகளையும் நன்றாக பரப்பிவிடவேண்டும். இதில் கோழி எச்சம் சேகரிக்கப்படுகிறது. உலர்ந்த நார்க் கழிவினை கீழ்வரும் அட்டவணையின்படி இடைவிடாமல் சேர்க்க வேண்டும்.

நாட்கள்
கோழி எச்சங்கள் வெளியாகிய அளவு (கிலோ கிராம்)
நார்க்கழிவு
சேர்க்கப்பட்ட அளவு (1000 பறவைகள்) (கிலோ கிராம்)
கோழி எச்சம் – நார்கழிவு சேர்க்கை விகிதம்
1
70
105.0
1:1.50
1-7
490
735.0
1:1.50
7-14
490
735.0
1:1.50
14-21
490
612.5
1:1.25
21-28
490
612.5
1:1.25
28-35
490
490.0
1:1.00
35-42
490
490.0
1:1.00
42-49
490
367.5
1:1.75
49-56
490
367.5
1:1.75
56-63
490
245.0
1:1.50
63-70
490
245.0
1:1.50
70-77
490
122.5
1:1.25
77-84
490
122.5
1:1.25
84-91
490
-
-
மூன்று மாதங்களுக்கு பின் ஓரளவு சிதைவடைந்த நார்க்கழிவு-கோழி எச்ச கலவையை எரு கொட்டகைக்கு மாற்றி நிழலின் கீழ் குவியலாக்கவேண்டும். குவியலின் ஈரப்பதத்தின் அளவு 40-50% வரை இருக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை இடைவிடாமல் கிளறிவிட வேண்டும். இந்தக் கலவையானது மற்றுமொரு 30 நாட்களுக்கு மட்க வைக்கப்படுகிறது. 120 நாட்களுக்குள் நன்கு மக்கிய சத்துள்ள உரம் கிடைக்கிறது. இந்த மக்கிய உரத்தில் கீழ்க்கண்ட சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன.
தழைச்சத்து   :  2.08%
மணிச்சத்து    :   1.93%
சாம்பல்சத்து  :   1.41%
கரிம - தழைச்சத்து விகிதம் :10.16%

குப்பைக் கூழ் படிவுகள் மூலம் கோழிப்பண்ணைக் கழிவில் மக்கிய உரம் தயாரிக்கும் முறை

கோழிப் பண்ணையில் தரையின் மேற்புறம் 5-10 செ.மீ. உயரம் வரை உலர்ந்த நார்க்கழிவினை அடுக்குகளாக பரப்பி, இதன் மேல் பறவைகள் வளர்க்கப்பட்டு எச்சங்கள் சேகரிக்கப்படுகின்றன. மூன்று மாதங்களுக்குப் பின் ஓரளவு சிதைவடைந்த நார்க்கழிவு, கோழி எச்சங்கள் மற்றும் இறகுகள் எரு கொட்டகைக்கு மாற்றப்படுகின்றது. பின் நிழலின் கீழ் குவியலாக்கப்படுகின்றன. குவியலின் ஈரப்பதம் 40-50% வரை பராமரிக்கப்பட்டு 15 நாட்களுக்கு ஒரு முறை இடைவிடாமல் கிளறிவிட வேண்டும். 30 நாட்களுக்குள் நல்ல தரம் வாய்ந்த மக்கிய உரம் கிடைக்கும். 120 நாட்களில் மக்கிய உரத்தின் மதிப்பு பின்வருமாறு.
தழைச்சத்த   :   2.13%
மணிச்சத்து   :   2.40%
சாம்பல்சத்து :   2.03%
கரிம - தழைச்சத்து விகிதம் :14.02
நினைவில் கொள்ளவேண்டிய குறிப்புகள்
  • குவியலின் வெப்பநிலை 10 முதல் 15 நாட்களுக்குள் அதிகமாக இருக்கும். வெப்பநிலையனாது 500 Cக்கும் குறைவானால் குவியலின் ஈரப்பதம் 60% இருக்க தண்ணீர் மூலம் ஈரமாக்கப்படுகின்றது.
  • மக்கிய எருவின் நிறம் பழுப்பு நிறத்திலிருந்து கறுப்பு நிறத்திற்கு மாறும்.
  • மக்கிய எரு வாசனை இல்லாமல் இருக்கும்.
  • மக்கிய எருவின் குவியல் மூன்றில் ஒரு பாகம் குறையும். மேலும் உறுதியாகவும் இருக்கும்.
  • குவியலின் வெப்பநிலை, காற்றின் வெப்பநிலை போல் ஒரே மாதிரியாக இருக்கும்.
  • முதிர்ந்த எரு அதிக கனமின்றியும், நயமாகவும் இருக்கும்.
  • மக்கிய உரம் தயார் செய்ய உயரமான நிழல் உள்ள இடம் மிகவும் உகந்தது. குவியலின் ஈரப்பதத்தின் அளவை, ஈரமானி அல்லது குவியலிலிருந்து கை அளவு எருவினை எடுத்து விரல்களால் நசிப்பதன் மூலம் அளக்க முடியும். மக்கிய எருவிலிருந்து அதிகமான தண்ணீர் வெளி வந்தால், பின் ஈரப்பதம் 60åக்கும் மேலாக இருக்கும் என கருதப்படுகிறது. சொட்டாக, குறைவான தண்ணீர் கசிந்தால், பின் ஈரப்பதம் போதும் என கருதப்படுகிறது. அதாவது 60% உள்ளது எனலாம்.
  • ஒவ்வொரு எரு குவியலும், மக்குவதற்குத் தேவையான வெப்பத்தைத் தக்க வைக்க குறைந்த பட்சம் ஒரு டன் இருக்க வேண்டும்.
  • குவியலை ஊட்டமேற்ற நுண்ணூட்டச் சத்துக்களை மக்கிய எருவுடன் கலக்கலாம்.
கோழி எருவின் மதிப்பு

கால்நடை எருக்களில், குறிப்பாக கோழி எருவில் தழைச்சத்து அதிகமாக காணப்படுகிறது. அம்மோனியா ஆவியாதல் மூலமாக எருவிலுள்ள தழைச்சத்து இழப்பாகிறது. இதனால் கோழிக் கழிவிலுள்ள சத்துக்கள் குறைந்து விடுகின்றன. கோழிப்பண்ணைக் கழிவை தென்னை நார்கழிவு போன்ற கரிமச்சத்து நிறைந்த பொருட்கள் மற்றும் தகுந்த நுண்ணுயிரிகள் கலந்து மட்கச் செய்வதால் தரம் வாய்ந்த கோழி எருவானது கிடைக்கின்றது. இம்முறையில் சுற்றுச்சூழலுக்கு நன்மை விளைவிக்கும் வகையில் கோழி எருவை மதிப்புமிக்க எருவாக மாற்ற முடியும்.

கோழி எருவின் நன்மைகள்

கோழிப்பண்ணைக் கழிவில் மற்ற கால் நடைகளின் கழிவைக்காட்டிலும் அதிக அளவு தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் கால்சியம் அடங்கியுள்ளது. இவ்வாறு சத்துக்கள் இருப்பது இக்கழிவினை சிறந்த உரமாக மாற்றிப் பயன்படுத்துவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. தென்னை நார்க் கழிவுடன் கலந்து மக்கச் செய்வதன் மூலம் கோழிப்பண்ணைக் கழிவிலுள்ள தழைச்சத்து இழப்பை, மிக்க ஆற்றலுடன் கட்டுப்படுத்துவதுடன் பயிர்களுக்கு நல்ல இயற்கை உரமாகப் பயன்படுத்தப்படுகிறது. கோழிப்பண்ணைக் கழிவிலுள்ள அங்ககச் சத்துக்களை பயிர்களுக்கு கிடைக்கச் செய்ய, இக்கழிவை அம்மோனியா ஆவியாதலை குறைக்கும் வகையில் மக்க வைக்க வேண்டும். இத்தொழில்நுட்பம் கோழிவளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கோழி எருவை எக்டருக்கு 6 டன் என்ற அளவில் இயற்கை உரமாக அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இத்தொழிலை வியாபார நோக்கில் செய்யும் போது கோழிப்பண்ணைக் கழிவுகள் குறைந்த விலையில் தடையின்றி கிடைக்குமாறு வழி வகை செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment