Showing posts with label கால்நடை மருத்துவம். Show all posts
Showing posts with label கால்நடை மருத்துவம். Show all posts

Thursday, December 8, 2016

ஆடுகளில் நோய் பராமரிப்பு

ஆண்டுக்கு 4 முறை தடுப்பூசிகள் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி அளிக்க வேண்டும்.
  1. மார்ச் ஏப்ரல் மாதங்களில் கால் வாய் நோய்க்கான தடுப்பூசி
  2. ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் பி பி ஆர் தடுப்பூசி
  3. ஆகஸ்ட் மாதத்தில் கால் வாய் நோய் தடுப்பூசி
  4. அக்டோபர் மாதத்தில் துள்ளுமாரி தடுப்பூசி ஆகியவற்றை போட வேண்டும்.
  5. குடற்புழு மருந்துகளை பிறந்த 30 வது நாள், 2, 3, 4, 6, 9வது மாதங்களில் போட வேண்டும்.
வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு மூலம் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு.
இனப்பெருக்கத்தில் குட்டிகளின் இறப்பு விகிதம் குறைவு.
குடற்புழு நீக்க அட்டவணை
ஆடுகளின் வயது
பரிந்துரைகள்
2வது மாதம்
நாடாப்புழுக்களுக்கான மருந்து
3வது மாதம்
நாடாப்புழுக்களுக்கான மருந்து
4வது மாதம்
நாடாப்புழுக்களுக்கான மருந்து
5வது மாதம்
உருண்டைப்புழுக்களுக்கான மருந்து
6வது மாதம்
உருண்டைப்புழுக்களுக்கான மருந்து
9வது மாதம்
உருண்டை / நாடாப்புழுக்களுக்கான மருந்து
12வது மாதம்
தட்டைப் புழுக்களுக்கான மருந்து
ஆறு மாதம் வரை ஆட்டுக்குட்டிகளுக்கு மாதம் ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்யவேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதாவது பருவமழைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு முறையும், பருவ மழையின் போது ஒரு முறையும், பருவ மழைக்குப்பின் இருமுறையும் கொடுக்கவேண்டும்.
மாதம்
பரிந்துரைகள்
ஜனவரி - மார்ச்
தட்டைப்புழுவிற்கான மருந்து
ஏப்ரல் - ஜீன்
உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து
ஜீலை - செப்டம்பர்
தட்டைப் புழுவிற்கான மருந்து
அக்டோபர் - டிசம்பர்
உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து
ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை.
  1. ஆடுகளுக்கு தகுந்த குடற்புழு மருந்தைத் தேர்வு செய்யவேண்டும்.
  2. தூள் மருந்தைப் பயன்படுத்தும் பொழுது வெதுவெதுப்பான நீரில் கலந்து, சிறிது கரையாத மருந்துத் துகள்களும் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.
  3. அதிகாலையில், வெறும் வயிற்றுடன் உள்ள ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்.
  4. மருந்துக் கலவையை வாயின் வழியாக ஊற்றும் பொழுது புரையேறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
  5. குடிநீரில் குடற்புழுநீக்க மருந்தும் நோய் எதிர்ப்பு மருந்தும் ஒன்றாக கலந்துக் கொடுக்கக்கூடாது.
  6. குடற்புழுக்களின் வகைகளையும் முட்டைகளையும் அறிந்து மருந்து கொடுப்பது சிறந்தது.
  7. தொடர்ந்து ஒரே மருந்தைக் கொடுக்காமல் மாற்றித் தருவது அவசியம்.

மடிநோய் / மடிவீக்க நோய்

மடி நோய் என்றால் என்ன ?

மடிநோய் என்பது பராமரிப்பு சம்பந்தப்பட்ட நோய்
கிருமிகளின் தாக்குதலால் மடிவீக்க நோய் வருகிறது
எப்படி பரவுகிறது ?
- சுத்தமின்மை
¨ சுத்தமில்லாத கட்டுத்தரை /தொழுவம்,
¨ சுத்தமில்லாத கறவையாளர் கைகள்
¨ சுத்தமில்லாத மடி / காம்பு ஆகியவற்றின் மூலமாக மடி நோய் வரும்

எதனால் வருகிறது ?

பால் கறந்த பின் மடி காம்பின் துவாரம் ஒரு மணி நேரம் வரை திறந்து இருக்கும் , அச்சமயத்தில் பசு கிழே அமர்ந்தால் கிருமிகள் காம்பு துவாரம் மூலமாக கிருமிகள் உட்புகுந்து மடி நோய் வரும்.
காரணிகள்
  • பலவகையான கிருமிகளால் மடிநோய் வரக்கூடும்
  • பாக்டீரியா , வைரஸ் ,பாசி ஆகிய அனைத்து வகையான கிருமிகளால் மடிநோய் வரும்.

தடுப்பு முறைகள்

சுத்தமான பால் உற்பத்தியின் மூலம் மடிநோயை தவிர்க்கலாம்
சுத்தமான கட்டுத்தரை / கொட்டகை
¨ ஒருநாளுக்கு இருமுறை கட்டுதரையை சுத்தம் செய்யவேண்டும்
¨ மாட்டின் சாணம் மற்றும் கோமியம் கட்டுதரையில் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் .
¨ கட்டுதரையில் சுண்ணாம்பு மற்றும் ப்ளீசிங் பவுடர் தெளிப்பதன் மூலம் கிருமிகளின் பெருக்கத்தை கட்டுபடுத்தலாம்
சுத்தமான கறவைமாடு
¨ கறவை மாடுகளை தினமும் சுத்தபடுத்துதல் நல்லது (அ) இருநாட்களுக்கு ஒருமுறை சுத்தப்படுத்தலாம் .
¨ கறவை மாடுகளின் கால் / தொடை /மடி/காம்புகளில் சாணம் இருந்தால் பால் கறப்பதற்கு முன் சுத்தம் செய்ய வேண்டும்
¨ சுத்தமானநீர் (அ) வெந்நீர் (அ) Kmnoபயன்படுத்தலாம்
சுத்தமான கறவையாளர் கைகள்
  • பால் கறவையாளர் பால் கறப்பதற்கு முன்பு தன் இரு கைகளையும் சுத்தமாக கழுவிய பின்னரே பால் கறக்க வேண்டும்
  • கறவை இயந்திரம் பயன்படுத்தினால் இயந்திரத்தை சுத்தமாக கழுவிய பின்னரே பால்கறக்க வேண்டும்
  • KMno4 /சோப்பு பயன்படுத்தலாம்.

கோடைக்கலத்திற்கேற்ற கால்நடைநோய்த் தடுப்புமுறைகள்

கோடைக்காலங்களில் கால்நடை மற்றும் கோழியினங்களுக்குச் சரியான பசுந்தீவனம் மற்றும் போதுமான குடிநீர் கிடைக்காமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் கால்நடைகளை, அதிகவெப்பத்தின் காரணமாகக் கொட்டிலில் அடைத்து வளர்க்கும் சூழல் ஏற்படுகிறது. இச்சூழல் காரணமாகக் கொட்டிலில் உள்ள சுகாதாரம் மற்றும் காற்றின் தரம் ஆகியவை கால்நடைகளின் நலனில் பெரும் பங்குவகிக்கின்றன. கறவை மாட்டினங்கள் மற்றும் எருமை இனங்களில் கோடைக் காலத்தில் ஏற்படும் வெப்ப உளைச்சல் காரணமாகக் கறவை திறன் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. பன்றி மற்றும் கோழியினங்கள் போன்ற உற்பத்திசார் தொழில் முறைகளுக்காக வளர்க்கப்படும்.
கால்நடைகளை வெப்ப உளைச்சல் பெரிதளவில் பாதிக்கிறது. கோடைக்காலப் பிரச்சினைகளான அதிகவெப்பமும் மற்றும் அதிக ஈரப்பதம் ஆகியவற்றைச் சரியான முறையில் கையாண்டு கால்நடைகளின் உற்பத்திதிறனை மேம்படுத்துவதற்கான மேலாண்மை முறைகள் இங்குத் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.

கோடைக் காலத்தில் கவனிக்கப்பட வேண்டிய நோய்கள்

கால்நடைகளுக்கு ஏற்படக்கூடிய நோய்கள்
அடைப்பான் நோய்
கால்நடைகளில் விரைவில் மரணத்தை விளைவிக்கும் அடைப்பான் நோய் பேசில்லஸ் அந்தராசிஸ் எனும் நுண்ணுரியால் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் உடல் துவாரங்களில் இருந்து இரத்தக் கசிவு ஏற்படுவதைத் தொடர்ந்து உடனடி மரணம் ஏற்படும். இவ்வாறாக இறந்த கால்நடைகளின் மூலம் இந்நோய் அதிக அளவு பரவ வாய்ப்புள்ளதால், இவற்றை உடனடியாக ஆழ்குழியில் 10 லி சுண்ணாம்பு (அல்லது) சலவை சோடா கரைசலைத் தெளித்துப் புதைத்துவிட வேண்டும். இறந்த கால்நடைகளில் அருகாமையில் இருந்து பிற கால் நடைகளுக்கு முறையான தடுப்பூசி அளிக்கப்பட வேண்டும்.
கோமாரிநோய் (கால்வாய் நோய்)
கோமாரிநோய் மாட்டினங்களை அதிகம் பாதிக்கின்றது. எருமை, வெள்ளாடு, செம்மறியாடு ஆகியவற்றை இந்நோய் பாதித்தாலும் இவற்றில் நோய்க்கான அறிகுறிகள் குறைந்த அளவிலேயே வெளிப்படுகின்றன. இந்நோயால் அதிக அளவில் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. ஆண்டிற்கு இரு முறை இந்நோய்க்கான தடுப்பூசியைக் கால்நடைகளுக்கு கட்டாயம் அளிக்கவேண்டும். இந்நோயின் அறிகுறிகளாகக் கால்நடைகளில் வாய், நாக்கு மற்றும் கால் குளம்பு பகுதிகளில் கொப்புளங்கள் ஏற்படும். கொட்டகைகளில் 10 லி சலவைசோடா அல்லது 0.2 லி சிட்ரிக் அமில கரைசல் ஆகியவற்றைத் தெளிப்பதன் மூலம் நோய் பரவுதலைக் தடுக்கலாம்.
அம்மைநோய்
அம்மை நோயானது மாடு, எருமை, ஆடு மற்றும் கோழியினங்களை தாக்கும்.  நோய்த்தாக்கம் ஏற்பட்ட கால்நடைகளில் காய்ச்சலுடன் சிறுகொப்புளங்கள் காம்புப் பகுதிகளிலும் அதனைச் சார்ந்த பகுதிகளிலும் ஏற்படும். பாதிக்கப்பட்ட மாடுகளை மந்தையில் இருந்து உடனடியாகப் பிரித்துத் தனியாகப் பராமரிக்க வேண்டும். வேப்ப எண்ணெயுடன் மஞ்சள் கலந்து புண்களின் மீது தடவுதலின் மூலம் இந்நோய், ஈக்கள் மூலம் பிறமாடுகளுக்குப் பரவுவதையும் இதர நோய்க்கிருமிகள் தாக்கத்தையும் தவிர்க்கலாம்.

Thursday, April 30, 2015

கால்நடைகள் காப்பீடு திட்டம் (Kaal Nadaigal Kaapitu Thittam) - Livestock Insurance

கால்நடைகள் காப்பீடு திட்டம்


கால்நடைகள் காப்பீடு திட்டம் மத்திய அரசால் உதவி செய்யப்படும் திட்டமாகும். பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் மூலம் 2005-2006 மற்றும் 2006-2007 மற்றும் பதினொன்றாவது ஐந்தாண்டு திட்டத்தின் மூலம்  2007-08யிலும் முன்னோடித் திட்டமாக தேர்வு பெற்ற மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. 2008-09யிலிருந்து இத்திட்டம் நாட்டிலுள்ள 100 புதிய மாவட்டங்களில் ஒழுங்கு முறையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கலப்பின மற்றும் அதிக உற்பத்தித்திறன் கொண்டு ஆடு, மாடுகள் மற்றும் எருமைகளுக்கு சந்தை நியாய விரையை அதிகபட்ச காப்பீடாக எடுத்துக் கொள்வர். 50 சதவிகிதம் வரை காப்பீடு. மானியமாக வழங்கப்படுகின்றது. மானியத்திற்காக ஆகும் அனைத்து செலவையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும். மூன்றாண்டுகள் எடுக்கப்பட்ட திட்ட உடன்பாட்டிற்கு அதிகபட்சமாக ஒரு பயனாளி 2 கால்நடைகளுக்கு மானியச் சலுகைகள் பெறலாம். இத்திட்டம் கோவா மாநிலம் தவிர அனைத்து மாநிலங்களிலும் அதற்குரிய மாநில கால்நடை அபிவிருத்தி வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டம் முன்னோடியாக செயல்படுத்தப்பட்ட 100 மாவட்டங்களில் மேலும் விரிவுப்படுத்தி, நாட்டு வகை ஈடு, மாடு, வெரி எருமை மற்றும் மிதுன் போன்ற நிறையக் கால்நடை இனங்களையும் சேர்த்துக் கொள்ளப்படும்.

கால்நடை காப்பீடு திட்டத்தின் இரண்டு முக்கிய குறிக்கோள்களால் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. கால்நடை இறப்பால் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கான பாதுகாப்பு மற்றும் கால்நடை மற்றும் அதன் உற்பத்தி பொருட்களின் தரத்தில் உள்ள மேம்பாடு போன்ற கால்நடை காப்பீடு சலுகைகள் மூலம் பெறப்பட்ட பயன்பாடுகளை நடைமுறைப்படுத்துவதைக் காட்டுவதாகும்.
  1. கால்நடை காப்பீடு திட்டத்தை செயல்படுத்தும் வழிகாட்டுதல்கள்
  • செயல்படுத்தும் நிறுவனம்
  • திட்டத்தை அமல்படுத்தும் மாவட்டங்கள்
  • காப்பீடு நிறுவனங்களின் தேர்வு
  • கால்நடை மருத்துவர்களை சம்பந்தப்படுத்துதல்
  • காப்பீடு காப்புறுதி திட்டத்தை ஆரம்பித்தல் மற்றும் வெகுமதி மானியத்தை சரி செய்தல்.
  • திட்டத்தின் கீழ் காப்புறுதி பெறும் கால்நடைகள் மற்றும் பயனாளிகளின் தேர்வு
  • கால்நடைகளின் சந்தை விலையை தீர்மானித்தல்
  • காப்பீடு பெற்ற கால்நடைகளைக் கண்டறிதல்
  • காப்பீடு செல்லத்தக்க காலக்கட்டத்தில் உரிமையாளர்களை மாற்றுவது
  • பணக்கோரல்களைத் தீர்மானித்தல்
  • திட்டத்தை திறனுடன் மேற்பார்வையிடுதல்
  • கால்நடை மருத்துவர்களுக்கு வெகுமானம் வழங்குதல்
  • காப்பீடு பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும்
  • ஊக்குவிப்புத் தொகை
கால்நடை காப்பீடு திட்டத்தை செயல்படுத்தும் வழிகாட்டுதல்கள்
கால்நடை துறை என்பது தேசிய அளவில் குறிப்பாக கிராமப் பொருளாதாரத்தில் முக்கியமான துறையாகும். கால்நடைகளை வளர்ப்பதன் மூலம் கிடைக்கின்ற கூடுதல் வருமானம் எதிர்பாராத பயிர் உற்பத்தி இழப்புக்களின் போது உதவியாக இருப்பது மட்டுமல்லாமல் ஏழை மற்றும் நிலமில்லாத விவசாயிகளுக்கு வாழ்க்கையின் ஆதாரமாகவும் இருக்கின்றது.
கால்நடை துறையை மேம்படுத்த, நோய்களை கட்டுப்படுத்த பல பயனுள்ள  நடவடிக்கைகள் மற்றும் கால்நடைகளின் மரபணு தரத்தில் மேன்மைப்படுத்துவது மட்டுமல்லாமல் அப்படிப்பட்ட  கால்நடைகளினால் ஏற்படும் இழப்புகளிலிருந்து விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்காக உத்திரவாத பாதுகாப்பு கொடுப்பதற்கு ஒரு ஆக்க முறை தேவைப்படுகின்றது. இத்திசையில், மத்திய அரசாங்கம் உதவும் கால்நடை காப்பீடு திட்டம், பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்பட்டது. 2008-09ல் செய்யப்பட்ட 100 புதிய மாவட்டங்களில் பதினொன்றாவது ஐந்தாண்டு திட்டம் முடியும் வரை, அதாவது 2011-12 செயல்படுத்தப்படும். நிர்வாக மேலதிகாரிகள் இத்திட்டத்தை மாநிலங்களில் செயல்படுத்தும் நெறிமுறைகள் விரிவாக பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.

செயல்படுத்தும் நிறுவனம்
தேசிய கால்நடை இனப்பெருக்கத் திட்டத்தை (NPCBB) மத்திய, அரசால் உதவிப் பெற்று, கால்நடை பால் பண்ணை மற்றும் மீன் வளர்த்தல் துறையின் மூலம் செயல்படுத்தப்படுகின்றது. இத்திட்டத்தின் குறிக்கோள், செயற்கை கருவூட்டல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நாட்டு வகைக் கால்நடைகளை பயன்படுத்தி கால்நடைகளின் மரபணுவை மேம்படுத்துவதாகும். NPCBB திட்டத்தை மாநில கால்நடை அபிவிருத்தி வாரியங்கள் போன்ற மாநில செயல்படுத்தும் நிறுவனங்கள் (SIAs) செயல்படுத்துகின்றன. NPCBB மற்றும் கால்நடை காப்பீடு இரண்டிற்கும் ஒரு அனுசரணை கொண்ட வருவதற்காக, கால்நடை காப்பீடு தரப்படும். கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களும் NPCBB திட்டத்தை தேர்வு செய்துள்ளன. NPCBB திட்டத்தை செயல்படுத்தாத மாநிலங்கள் அல்லது SIAs இல்லாத பட்சத்திலோ, கால்நடை காப்பீடு திட்டத்தை, மாநில கால்நடைத் துறை செயல்படுத்தும்.

திட்டத்தை அமல்படுத்தும் மாவட்டங்கள்
திட்டம், ஒழுங்கு முறை அடிப்படையில் நாட்டில் புதிதாக தேர்வு பெற்ற புதிய 100 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். இத்திட்டம் கலப்பின மற்றும்  அதிக உற்பத்தித் திறன் வாய்ந்த ஆடு, மாடுகள் மற்றும் எருமைகளுக்கு மட்டுமே உகந்ததாகும். இத்திட்டம் தமிழ்நாட்டில் கீழ்க்கண்ட மாவட்டங்களில் மட்டுமே செயல்படுத்தப்படும்.

மாநிலம் / மாவட்டத்தின் பெயர்
தமிழ்நாடு

  • விழுப்புரம்
  • திருநெல்வேலி
  • திருச்சிராப்பள்ளி
  • தர்மபுரி
  • திருவண்ணாமலை
காப்பீடு நிறுவனங்களின் தேர்வு
போட்டி மிகு வெகுமதி விகிதங்கள், உடன்பாடு விநியோகித்தல் மற்றும் பணக்கோரல்களுக்கு தீர்வு காணுவதில் எளிதான நெறிமுறைகளை கடைப்பிடித்தல் போன்ற அதிகப் பயனுள்ள சலுகைகள் கொண்ட காப்பீடு நிறுவனம் மற்றும் அதன் விதிமுறைகள், நிர்பந்தங்களைக் கொண்டு, காப்பீடு நிறுவனத்தை தீர்மானிக்கும் அதிகாரம் முதன்மை செயல் அலுவலருக்கு உள்ளது. ஒரு காப்பீடு நிறுவனத்தை தேர்வு செய்யும் பொழுது, வெகுமதி விகிதங்களுக்கு செயலாற்றும் சக்தி இருக்கிறதா சேவை செயல்திறன், விதிமுறைகள் மற்றும் நிர்ப்பந்தங்கள் போன்ற அனைத்தையும் கருத்தில் ஏற்றுக் கொள்ளவேண்டும். மாநிலத்தில் போதுமான அளவில் பிணையப்படும் போது மற்றும்  தனியார் பொது காப்பீடு நிறுவனங்களிடமிருந்து எழுத்து வடிவில் விலைக் கூறல்களை வரவேற்கிறார். இத்திட்டத்தை வெற்றிகரமாக மற்றும் ஆற்றல்மிக்கத் திறனுடன் செயல்படுத்தவும், கால்நடை உரிமையாளர்களிடையே பிரபலப்படுத்தும் வகையிலும் காப்பீடு நிறுவனம் / நிறுவனங்களை, CEO அந்நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, காப்பீடு நிறுவனத்தை தேர்வு செய்வார்.

எந்தக் காப்பீடு நிறுவனமானது காப்பீடு செய்த  கால்நடைகளுக்கு இறப்பதுடன் பிற ஊனங்களுக்கும் சேர்த்து காப்பீடு காப்புறுதி வழங்கினால் வரவேற்கத்தக்கது. எனினும் அவ்வாறான கூடுதல் சலுகைகளுக்கு வெகுமதியில் எந்த மானியமும் வழங்கப்பட மாட்டாது. கால்நடையின் மரணத்தால் ஏற்படும் இழப்பைத் தவிர மற்ற பிற இழப்புகள் அனைத்திற்கும் முழுமையான வெகுமதியை பயனாளிகள் செலுத்தித் தான் காப்பீடு காப்புறுதி பெறவேண்டும். மேலே குறிப்பிட்டது போல, உடன்பட்ட வெகுமதி விகிதம் போட்டி மிகுந்தது என்பதை  CEO தான் உறுதிப்படுத்தவேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும், வெகுமதி விகிதம் ஓராண்டு உடன்பாட்டிற்கு 4.5 சதவிகிதம் மேலும் மற்றும் மூன்றாண்டு உடன்பாட்டிற்கு 4.5 சதவிகிதம் மற்றும் மூன்றாண்டு உடன்பாட்டிற்கு 12 சதவிகிதம் மேலும் இருக்கக்கூடாது. 

பொதுவாக, ஒரு மாவட்டத்திற்கான வேலைகளை ஒரே காப்பீடு நிறுவனத்திடம் ஒப்படைக்கவேண்டும். எனினும் விதிமுறைகள் மற்றும் நிர்ப்பந்தங்கள் ஒன்றாக இருக்கும் பட்சத்தில், ஒரு மாவட்டத்தில் ஒன்றிற்கும் மேலான காப்பீடு நிறுவனங்களிடம் அவர்களிடையே போட்டியை ஊக்குவிக்கும் வகையிலும், இத்திட்டத்தை பிரபலப்படுத்தும் வகையிலும் செயல்படுத்த அனுமதிக்கலாம். பணக்கோரல் தீர்வுகள் அல்லது சேவையில் ஏதாவது குறைபாடு காப்பீடு நிறுவனத்தால் ஏற்பட்டிருந்தால், இம்மாதிரியான விஷயங்களில், நாட்டின் முதன்மை ஆணையமான “ காப்பீடு ஒழுங்குபடுத்துதல் மற்றும் அபிவிருத்தி ஆணையத்தின்” கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். கால்நடை மருத்துவர்களைத் திட்டத்திற்குள் கொண்டு வருதல் கிராம நிலையில் கால்நடை  மருத்துவர்களை திட்டத்திற்குள் கொண்டு வருவது. இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு முக்கியத் தேவையாக இருக்கும். இத்திட்டத்தில் காப்புறுதி தர வேண்டிய கால்நடைகளைக் கண்டறிதல், பரிசோதித்தல், சந்தை விலையை தீர்மானித்தல், காப்பீடு கால்நடைகளுக்கு அடையாள விவரங்களை கட்டி விடுதல் மற்றும் இறுதியாக பணக்கோரல் எப்போது பெறப்பட்டது என்று கால்நடை சான்றிதழ் வழங்குவது வரை அவர்கள் தொடர்புடையவர்களாக இருக்கின்றனர்.

மேலும் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுடன் தொடர்பில் இருப்பதால் இத்திட்டத்தை ஊக்குவிக்கவும் பிரபலப்படுத்தவும் உதவியாக இருப்பர். முடிந்த வரை மாநில அரசாங்கத்தில் வேலை பார்க்கும் கால்நடை மருத்துவர்களை மட்டுமே இத்திட்டத்தில் ஈடுபடுத்த முடியும். அரசாங்க கால்நடை மருத்துவர்கள் இல்லாத பட்சத்தில் மட்டுமே, இந்திய கால்நடை மன்றத்தால் பதிவு செய்யப்பட்ட தனியார் கால்நடை மருத்துவர்களை ஈடுபடுத்தலாம். அப்படிப்பட்ட கால்நடை மருத்துவர்களின் பட்டியலை ஒவ்வொரு மாவட்டத்திலும், கால்நடை மருத்துவர்களின் பட்டியலை ஒவ்வொரு மாவட்டத்திலும், கால்நடைத் துறை மாவட்ட அதிகாரியால் தயார் செய்யப்படும். அவ்வாறு கால்நடை மருத்துவர்களின் பட்டியல் ஒவ்வொரு மாவட்டத்தில் மருத்துவர்களின் பட்டியல் ஒவ்வொரு மாவட்டத்தில தேர்வு பெற்ற காப்பீடு நிறுவனம் மற்றும் உரிய பஞ்சாயத்து ராஜ் ஸ்தாபனத்திற்கு வழங்கப்படும்.

Thursday, March 5, 2015

தாது உப்புகளின் பயன்பாடு



கறவை மாடுகளில் தாது உப்புகளின் பயன்பாடு
கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், குளோரின், கந்தகம் போன்றவைகள் அதிக அளவிலும் தாமிரம், துத்தநாகம், கோபால்ட், மாங்கனீசு, அயோடின், மாலிப்டினம், இரும்பு, செலினியம் போன்றவைகள் குறைந்த அளவிலும் தேவைப்படும் தாது உப்புக்கள் ஆகும்.

தாது உப்புக்களின் குறைவினால் ஏற்படும் பிரச்னைகள்: கன்றுகள் மட்டும் கிடேரிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். பசுக்கள் சீரான இடைவெளியில் சினைப்பருவத்திற்கு வராததோடு மட்டுமல்லாமல் கருத்தரிப்பும் தடைபடும். கருத்தரித்து இருந்தாலும் சினைக்காலம் முடியும் வரை குட்டிகளைத் தாங்கும் சக்தி குறைந்து கருச்சிதைவு ஏற்பட்டு கன்று வீச்சுகளும் ஏற்படக்கூடும். சில சமயங்களில் தாது உப்புகளின் பற்றாக் குறையினால் இறந்த குட்டிகளை ஈணுதல் மற்றும் குறைமாத, வலிமை குன்றி எலும்பும் தோலுமாக குட்டிகள் பிறக்க நேரிடலாம். ஈன்ற கால்நடைகளின் பால் உற்பத்தி குறையும்.

தனுவாசு தாது உப்புக்கலவை: தாது உப்புக்கலவைகள் மினல் மிக்ஸ், மின்கம், புரோமின், அயுமின் எனப் பல பெயர்களில் சந்தைகளில் கிடைக்கப் பெற்றாலும் தனுவாசு தாது உப்புக் கலவை என்ற பெயரில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் அறிமுகப் படுத்தப்பட்டு இப்பல்கலைக் கழகத்தின்கீழ் செயல்படும் அனைத்து பயிற்சி நிலையங்கள் மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்களிலும் 1 கிலோ 55 ரூபாய் வீதத்தில் கிடைக்கப் பெறுகிறது.

தாது உப்புக்கலவையை அளிக்க வேண்டிய அளவுகள்:

வ.எண். - கால்நடை அளவுகள் (கிராம்/நாள்)
1. - கன்றுகள் - 5
2. - கிடேரிகள் - 15-20
3. - கறவை மற்றும் சினைப்பசுக்கள், காளைகள் - 30-40
4. - கறவை வற்றிய பசுக்கள் - 25-30

மேற்சொன்ன தாது உப்புக்கள் இல்லாமல் உயிர்கள் இயக்கமே இல்லை என்றுகூட சொல்லலாம். எனவே, தாது உப்புக்களை தேவைக்கேற்ற அளவில் தீவனத்தில் கலந்து கொடுப்பதன் மூலம் விவசாயிகள் வருடம் ஒரு கன்று எடுப்பதோடு மட்டுமல்லாமல் கால்நடைகளிலிருந்து அதிக உற்பத்தித் திறனை பெற்று உயர்வடையலாம் என்பது திண்ணம்.


தாது உப்புக்களின் பயன்கள் மற்றும் குறை நோய்கள்:

வ.எண். - பெயர் - பயன்கள் - குறைபாடு
1. - கால்சியம்/பாஸ்பரஸ் - எலும்பு வளர்ச்சி - பால்சுரம், ரிக்கட்ஸ் எலும்புருக்கி நோய், சினைப்பிரச்னை
2. - சோடியம் குளோரைடு - உடல்வளர்ச்சி, இனப்பெருக்கம் - பசியின்மை, வளர்ச்சி குன்றல், வலிப்பு நோய்
3. - மெக்னீசியம் - செரிமானம், நரம்பு மண்டல செயல்பாடுகள் - வலிப்பு நோய்
4. - கந்தகம் - உறுப்பு வேலைகள் நுண்ணுயிர் செரிமானம் - எடை குறைதல், அதிக உமிழ்நீர், கண்ணீர் சுரப்பு
5. - இரும்பு - நோய் எதிர்ப்புத்திறன், ரத்த ஓட்டம் - சுவாசக் கோளாறுகள், ரத்தசோகை
6. - தாமிரம் - நரம்பு மண்டல செயல்பாடுகள் - கழிச்சல், பசியின்மை, ரத்தசோகை
7. - மாங்கனீசு - இனப்பெருக்கம் - குறையுடன் கன்றுகள்
8. - கோபால்ட் - வைட்டமின் "பி12' உற்பத்தி - ரத்தசோகை, இனவிருத்தி உறுப்பு வளர்ச்சி குறைவு, கழிச்சல்
9. - செலினியம் - சினைப்பிடிப்பு - கருச்சிதைவு
10. - அயோடின் - தைராய்டு சுரப்பி - வளர்ச்சி குறைந்த கன்று பிறப்பு.

Thursday, October 9, 2014

மாடுகள் சினை பிடிக்காத காரணங்கள்

கறவை மாடுகள் சினை பிடிக்காமல் இருப்பது என்பது மாடு வளர்க்கும் அனைவருக்கும் உள்ள பொதுவான பிரச்சினையாகும். பால் வற்றிய (மறுப்பு) காலத்தில் சினையில்லா பசுவிற்கு தீவனம் அளிப்பது பொருளாதார நஷ்டத்தை உண்டாக்கும்.
இப்பொருளாதார நஷ்டத்தைத் தவிர்க்க, மாடு சினை பிடிக்காமல் இருப்பதற்கான காரணங்களையும் அதை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளையும் நாம் தெரிந்து கொள்வது அவசியம்.சினை பிடிக்காததற்கான காரணங்களை மூன்றுவகைகளாகப் பிரிக்கலாம்.
1. பராமரிப்பு முறைகளில் உள்ள குறைபாடுகள்
தீவன பற்றாக்குறை (குறிப்பாக தாது உப்புக்கள்) அறிகுறி இல்லாத பருவம் (பருவத்திற்கான அறிகுறிகளைக் காட்டாமலே மாடுபருவத்திற்கு வந்து போவது) பருவத்தைக் கண்டறியாமல் தவறி விடுவது.சரியான நேரத்தில் சினை ஊசிபோடாதது.
2. இயற்கையான குறைகள்
இனப்பெருக்க உறுப்பில் நோய் / புண் அல்லது கட்டி இருந்தால், கன்றுவீச்சு / கருச்சிதைவு நோய் இருந்தால், ஹார்மோன் கோளாறுகள், மரபியல் கோளாறுகள் மற்றும் கடந்த முறைகன்று ஈன்றதில் கோளாறுகள்.
3விந்து மற்றும் சினை ஊசி போடுவதில் உள்ளகுறைபாடுகள்
சரியான நேரத்தில் சினை ஊசி போடாதது. சரியான முறையில் சினை ஊசி போடாதது. நோய் வாய்ப்ப ட் ட காளைகளுடன் இனச் சேர்க்கை செய்வது. மூன்று முறைசினை ஊசி போட்டும் மாடு சினை பிடிக்காமல் இருப்பதன் மூலமும், சுமார் 21 நாட்களுக்கு ஒரு முறை வலும்புக்கு வராமல் இருப்பதன் மூலமும், மாடு சினை பிடிக்காமையைத்தெரிந்துகொள்ளலாம்.

மாடுகளுக்கு சப்பை நோயும், வராமல் தடுக்கும் முறைகளும்

மாடுகளுக்கு சப்பை நோய்(BLACK QUARTER):
நோயின் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்: இந்நோய் கண்ணுக்கு தெரியாத Clostridium Chamois எனும் நுண்ணுயிர் கிருமியால் பரவும் ஒரு தொற்று நோய்.  நல்ல சதைப்பற்றுள்ள இளம் மாடுகளை இந்நோய் அதிக அளவில் தாக்கி பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றது.
நோயின் அறிகுறிகள்:
1.      அதிக காய்ச்சல்
2.      முன்காலி சப்பை மற்றும் பின்கால் சப்பை ஆகியவற்றில் சூடான வீக்கம்.
வீக்கத்தை அழுத்தும் போது நறநறவென சப்தம் கேட்கும்.
3.      கால் நொண்டும், நடக்க சிரமப்படும்.
4.      நோய்கண்ட மாடுகள் ஒரு சில நாட்களில் இறக்கும் வாய்ப்பு அதிகம்.

நோய் பரவும் முறைகள்: நோயினை ஏற்படுத்தும் நுண்ணுயிர் கிருமிகளின் Spores  எனப்படுத் வித்துக்கள் மேய்ச்சல் தரையில் காணப்படும். மழைக்காலங்களில் ஏற்படும் சாதகமான சூழ்நிலையில் கால் நடைகள் மேயும் போது இவ்வித்துக்கள் உடலினுள் நுழைந்து நோய்க்கிருமிகளாக மாறி நோயினை ஏற்படுத்தும்.  நோய்க் கிருமிகள் நோய்ப்பட்ட மாடுகளின் சாணத்தில் மூலம் வெளியேறி மேய்ச்சல் தரைகளில் பரவும்.
நோய் தடுப்பு முறைகள்:
1.      நோய் கண்ட மாடுகளுக்கு உடனடியாக கால்நடை மருத்துவரைக் கொண்டு தக்க சிகிச்சை அளித்தால் இறப்பைத் தவிர்க்கும் வாய்ப்பு உள்ளது.
2.      மழைக்காலத்திற்கு முன் கால்நடைகளுக்கு தடுப்பூசிபோட்டுக் கொள்வதே
நோயினைத் தடுக்கும் சிறந்த வழியாகும்.
3.      நோய் பரவியுள்ள இடங்களிலிருந்து கால்நடைகளை வாங்கி வருவதைத் தவிர்க்க வேண்டும்.
4.      நோயுற்ற கால்நடைகளை மற்ற கால்நடைகளை மற்ற கால்நடைகளுடன் சேர்க்காமல் பிரித்து வைக்க வேண்டும்.
5.      நோயினால் இறக்கும் கால்நடைகளை அழமான குழிகளைத் தோண்டி புதைக்க வேண்டும்.

கறவை மாடு வளர்ப்போர் கவனத்திற்கு!

கறவை மாடுகளில் சினைத்தங்காமை: கேள்வி பதில்
கறவை மாடு வளர்ப்பவர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினை சினை பிடிக்காததாகும். மாடுகள் சினைப்பருவத்திற்கு வந்திருப்பதை உரிய நேரத்தில் கண்டுபிடித்து அதற்கு சரியான நேரத்தில் இனவிருத்தி செய்யாதிருப்பதற்கு மாடு வைத்திருப்பவரிகளின் அறியாமைதான் முக்கிய காரணமாகும். இவ்வறியாமையை போக்கிட சில கேள்விகளை முன்வைத்து அதற்கான தீர்வுகளும் இக்கட்டுரை வாயிலாக அறியலாம்.

1. சினைப்பருவத்தைக் கண்டறிந்து சரியான நேரத்தில் இனவிருத்தி செய்யாமை:
அ) கிடேரிகளை சினைப்படுத்துவதற்கு ஏற்ற வயது என்ன?
பொதுவாக கலப்பினக் கிடேரிகளை நல்ல முறையில் பராமரிக்கும் பொழுது 15 முதல் 18 மாத வயதில் பருவமடைந்து சினைப்படுத்துவதற்கு தயாராகி வருகின்றன. அப்போது அதன் உடல் எடையும் (200 – 250 கிலோ), இனப்பெருக்க உறுப்புக்களும் போதுமான வளர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
ஆ) சினைத் தருண அறிகுறிகள் யாவை?
அ. மாடுகள் அமைதியின்றி காணப்படும்.
ஆ. தீவனம் மற்றும் தண்ணீர் வழக்கத்தைவிட குறைந்த அளவு எடுத்துக்கொள்ளும்.
இ. பிறமாடுகள் மேல் தாவும் மேலும் பிறமாடுகள் தன்மீது தாவ அனுமதிக்கும்.
ஈ. அடிக்கடி சிறுநீர் கழியும்.
உ. பிறப்புறுப்பிலிருந்து தெளிந்த கண்ணாடி போன்ற திரவம் வெளிப்படும் மேலும் இவை கயிறுபோல் வந்து தரையில் படவும் வாய்ப்பிருக்கிறது.

இ) ஊமை சினைத்தருண அறிகுறிகள் என்றால் என்ன?
எருமை மாடுகளில் சினைத்தருண அறிகுறிகள் எளிதாக வெளியில் தென்படுவதில்லை. குறிப்பாக கன்று ஈன்ற எருமைகள் நீண்ட நாட்களுக்கு சினைக்கு வராமல் இருக்கும். இதில் பெரும்பகுதி சினைப்பருவ அறிகுறிகளை வெளியில் காட்டாது. இதைத்தான் ஊமைச் சினைத்தருண அறிகுறிகள் என்று அழைக்கப்படுகிறது. எருமைகளில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது மற்றும் இரவு நேரங்களில் அதிகமாகக் கத்துதல்தான் முக்கிய சினைத்தருண அறிகுறிகளாக கருதப்படுகிறது.
ஈ)மாடுகள் பெரும்பாலும் அமாவாசை மற்றும் பெளர்ணமி காலங்களில்தான் சினைப்பருவத்திற்கு வருமா?
கறவை மாடு வளர்ப்போரிடையே மாடுகள் அமாவாசை மற்றும் பெளர்ணமி காலங்களில் சினைக்கு விடும் பழக்கம் உள்ளது. இது ஒரு தவறான நம்பிக்கையாகும். ஏனெனில் பருவமடைந்த கிடேரிகள் 21 நாட்களுக்கு ஒரு முறை சினைப் பருவத்திற்கு வரும். இத்தருணத்தில் இனவிருத்தி செய்து பயன்பெற வேண்டும்.

வெக்கை, பசு அம்மை நோய் தடுப்பு முறைகள்

மாடுகள் பல நோய்களால் பாதிக்கப்படுகின்றன. அவைகளுக்கு வரும் நோய்களை தொற்று நோய், தொற்றாத நோய் என இருவகைகளாகப் பிரிக்கலாம்.
தொற்று நோய் என்பது நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளிடம் இருந்து காற்று,தண்ணீர்,நேரிடைத் தொடர்பு, அல்லது மற்ற தொடர்புகள் மூலமாக இதர கால்நடைகளுக்கும் எளிதாகப் பரவும் நோயாகும். கால்நடைகளுக்கு வரும் வெக்கை நோய்,தொண்டை அடைப்பான்,கோமாரி (கால்கட்டு, வாய்ச் சப்பை) அம்மை நோய், சப்பை நோய் போன்ற நோய்கள் இந்த வகையைச் சேர்ந்தது.
ஒரு குறிப்பிட்ட மாட்டிற்கு மட்டும் நோய் வந்து அதன் அருகில் உள்ள மற்றவைகளுக்கு பரவாமல் இருந்தால் தொற்றாத நோய் என்கிறோம். பச்சை வாதம்,வயிற்றுப் பொருமல் போன்ற நோய்களை இதற்கு உதாரணம் கூறலாம்.
கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் வருவதால் நிறைய மாடுகள் இறந்து விடுகின்றன.இதனால் கால்நடைகளை வளர்ப்போருக்கும், நாட்டிற்கும் நஷ்டம் ஏற்படுகிறது.அநேகமாக மாடுகளுக்கு வரும் எல்லாத் தொற்று நோய்களையும், அறவே வராமல் தடுக்க முடியும். நோய் வந்தபின் வைத்தியம் செய்வதைவிட வருமுன் காப்பதே நல்லது.
வெக்கை நோய்: வெக்கை நோய் ஒரு கொடிய தொற்று நோய். ஒரு மாட்டிற்கு வந்தால் மற்ற மாடுகளுக்கும் விரைவில் பரவி பெரும் சேதத்தை விளைவிக்க வல்லது. எருமை பசுக்களை இந்நோய் அதிகம் தாக்குகிறது. செம்மறியாடு, வெள்ளாடுகளையும் சில சமயம் தாக்கும்.
அறிகுறிகள்:
  • முதலில் கடும் காய்ச்சல்(1600 F)இருக்கும்.தீனி சாப்பிடாது. வயிறு ஆரம்பத்தில் பொருமியிருக்கும்.கண்கள்,வாய்நாசி, இவற்றிலிருந்து தொடர்ந்து நீர் வடிந்து கொண்டிருக்கும்.உதடுகளின் உட்புறம்,ஈறுகள்,நாக்கின் அடிப்புறம் ஆகிய பகுதிகளில் புண்கள் உண்டாகும்.
  • கெட்ட நாற்றத்துடன் கூடிய கழிச்சல் வெகு தூரம்வரை பீச்சியடிக்கும்.எருமைகளுக்கு மார்பு, குண்டிக்காய் ஆகிய பகுதிகளில் தோல் வெடிப்பும், இரத்தக்கசிவும் ஏற்படும்.சினை மாடுகளுக்கு கருச்சிதைவு ஏற்படலாம்.
  • 7 முதல் 10 நாட்களுக்குள் மாடுகள் இறந்துவிடும்.
தடுப்பு முறைகள்: எல்லா மாடுகளுக்கும் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். ஒருமுறை தடுப்பு ஊசி போட்டால் மூன்று வருடங்களுக்கு நோய் வராது. கன்று போட்ட 6 மாதத்தில் முதல் ஊசி போட வேண்டும். பின்னர் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை போட்டுக் கொள்ளலாம்.பொதுவான தடுப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

கால்நடை சார்ந்த கேள்வி பதில்

கேள்வி: மழைக்காலத்தில் ஆடுகளுக்கு நீலநாக்கு நோய் வருகிறது? எவ்வாறு தடுப்பது? (பரமசிவம், தூத்துக்குடி)
பதில்: ஆடுகளுக்கு வரும் நீலநாக்கு நோய்க்கு தடுப்பு ஊசி போட்டு தான் தடுக்க வேண்டும். இதற்கு மாற்று வழியே இல்லை.
கேள்வி: சில ஆட்டுக்கு மூக்கு, ஆசன வாயிலில் ரத்தம் வந்து துடிதுடித்து இறந்து விடுகின்றன. இதனை எவ்வாறு தடுக்கலாம்?
பதில் : இந்த நோய்க்கு அடைப்பான் நோய் என்று பெயர். இந்த நோய் கண்ட ஆட்டினை விற்கக்கூடாது குழித்தோண்டி புதைத்துவிட வேண்டும். இந்த நோய்க்கண்ட ஆட்டின் மாமிசத்தை உண்ணும் போது மனிதர்களும் பரவும் வாய்ப்பு இருக்கிறது. ஆகையால், இறந்த ஆட்டினை உடனே புதைத்து விட வேண்டும்.
கேள்வி: செம்மறிகள் ஆடு குட்டி போடும் போது கஷ்டப்படுகின்றன. சில சமயங்களில் தாய் ஆட்டின் உயிரை காப்பாற்றினால் போதும் என்றாகி விடுகிறது? எதனால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது?
பதில் : சில தாய் ஆடுகளில் இடுப்பு எலும்பு சரியான முறையில் இல்லை என்றால் இது போல் பிரச்சனை வரும். இன்னும் சில வேளைகளில் கிடா சரியானதாக இல்லாமல் இருந்தாலும் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
கேள்வி: நல்ல வெள்ளாடு இனத்தை வளர்க்கலாம் என்று இருக்கிறேன். ஒரிஜனல் வெள்ளாட்டு இனம் எங்கு கிடைக்கும்?
பதில்: சென்னைக்கு செல்லும் வழியில் செங்கல்பட்டுக்கு அடுத்து காட்டாங்குளத்துர் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள காட்டுப்பாக்கம் கால்நடை ஆராய்ச்சி நிலையம் மற்றும் கால்நடை பண்ணை இருக்கிறது. இங்கு வெள்ளாட்டு ஒரிஜனல் ரகமான சமுனாபாரி ஆட்டை வளர்க்கிறார்கள். இந்த ஆட்டின் குட்டியை நீங்கள் வாங்கி வளர்க்கலாம். இதற்கு, இங்கு உங்களுடைய பெயரை பதிவு செய்துக் கொள்ள வேண்டும். ஆடு குட்டி போட்டு, சில நாட்களில் தகவல் கொடுப்பார்கள். அப்போது நீங்கள் சென்று வாங்கி சிறப்பாக வளர்க்கலாம்.
கேள்வி: ஆடுகளுக்கு மார்கழி மாதங்களில் அதிகளவில் துள்ளு நோய் ஏற்படுகிறது. ஆடுகள் திடீரென்று துள்ளி விழுந்து இறந்துவிடுகின்றன. ஏற்கனவே இதனை தடுக்க தடுப்பூசி எல்லாம் போட்டு இருக்கிறோம். இருந்தாப்போதிலும் நோய் தாக்குகிறது. இதனை எப்படி தடுப்பது?
பதில் : ஆடுகளுக்கு முறையான குடல்புழு நீக்கமும் செய்திருக்கிறீர்கள். கூடுதலாக நோயைத் தடுப்பதற்கான தடுப்பூசிகளையும் போட்டிருக்கிறீர்கள். ஆனால் நோய் தாக்கம் இருக்கிறது என்று சொல்கிறீர்கள். போட்டிருந்தால் பரவாயில்லை. மூன்று மாதத்துக்கு ஒரு முறை குடல்புழுவுக்கு செய்திருக்கிறீர்கள். இருந்தாலும் வருகிறதா? கால்நடை மருத்துவரை அழைத்து ரத்தம் எடுத்து சோதனை சாலைக்கு அனுப்பி சோதனை செய்ய வேண்டும்.
கேள்வி: ஆடு குட்டி போட்ட பின்பு, வாலில் புண் வருகிறது. அந்த புண்ணில் இருந்து புழுக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. எப்படி தடுப்பது?
பதில் : புண் உள்ள இடத்தில் டர்பண்டைடு ஆயிலை ஊற்றவும். இரண்டு மூன்று நிமிடங்களில் புழுக்கள் எல்லாம் வெளியே வந்து விடும். அதுபின்பு வேப்பண் கொழுந்து, கல் உப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து வையுங்கள். ஒன்றிரண்டு நாட்களில் நன்றாகி விடும்.

ஆடுகளுக்கு நுண்ணுயிரிகளால்(பாக்டீரியா) ஏற்படும் நோய்கள்

அடைப்பான்
இந்நோய் கண்ட ஆடுகளில் எந்த விதநோய் அறிகுறிகளும் காணாமல் நோய் தாக்கிய ஒருமணி நேரத்திற்குள்ளாக இறந்துவிடும். சிலசமயம் அதிக காய்ச்சல் காணப்படும்.ஆடு இறந்தவுடன் ஆசனவாய்,மூக்கு,காது போன்ற இயற்கை துவாரங்களிலிருந்து உறையாத கருஞ்சிவப்பு இரத்தம் வெளியேறும்.இது முக்கியமான அறிகுறியாகும்.இந்நோயை ஆன்டிபயாடிக் மருந்துகொண்டு கட்டுப்படுத்தலாம். நோய்தாக்கும் முன்னர் தடுப்பூசி போடவேண்டும்.
தொண்டை அடைப்பான்
தொண்டை அடைப்பான் நோய் பெரும்பாலும் இளவயது ஆடுகளை மழைக் காலத்தில் அதிகமாக பாதிக்கும்.இந்நோய்க் கிருமிகள் தொண்டையில் எப்பொழுதும் இருக்கும். ஆடுகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்திகுறையும் போது இந்தக் கிருமிகள் பெருகி நோயை உண்டுபண்ணும். நோயுற்ற ஆட்டில் அதிககாய்ச்சல்,நுரையீரல் பாதிப்பால் மூச்சுத்திணறல், மார்பு மற்றும் கழுத்துப் பகுதியில் வீக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படும்.காதுகள் தொங்கிவிடும். மூக்கு,வாயிலிருந்து சளி ஒழுகும்.நோயுற்ற 5-7  நாட்களில் ஆடுகள் இறந்துவிடும். ஆரம்பகாலத்தில் இந்நோயைக் கண்டுபிடித்தால் ஆன்டிபயாடிக் மருந்துக் கொண்டு எளிதில் இந்நோயைக் கட்டுப்படுத்த முடியும். நோய் தாக்கும் முன்னர் தடுப்பூசி போட வேண்டும்.
துள்ளுமாரி நோய்
துள்ளுமாரி நோய் எல்லா வயது ஆடுகளையும் பாதிக்கும்.ஆனால் இளம் வயது ஆடுகளே இந்நோயினால் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன. மழைக் காலங்களில்புதிதாக முளைத்த பசுமையான புல்வெளியில் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகளுக்கு இந்நோய் ஏற்படும். நல்லதிடகாத்திரமான ஆடுகள் இந்நோயினால் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. மழைக்காலத்திற்கு முன் தடுப்பூசிபோட்டு இந்நோய் வராமல் தடுக்கலாம்.

ஆட்டிற்கு நாக்கில் கொப்பளம் போல் உள்ளது, காய்ச்சல் மற்றும் தீனி எடுக்கவில்லை?
ஆட்டின் உதட்டில் கொப்பளம் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். அது அம்மை நோயா என்று கால்நடை மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை பெற்று கொள்ளவும். மேலும் நாக்கில் கொப்பளம் இருப்பின் போரிக் ஆஸிட் பவுடர்யையும் தேங்காய் எண்ணெய்யும் தொடர்ந்து தடவவும்.

ஆட்டின் காலில் புண் உள்ளது? செருமல் இருக்கிறது தீர்வு என்ன?
புண் உள்ள காலில் மஞ்சள், வேப்பிலையை அரைத்து தடவவும். ஈக்கள் உட்காராதவாறு புண்ணை சுற்றி வேப்பண்ணெயை தடவவும். இருமல் இருப்பதற்கு குடற்புழு நீக்கம் செய்வது நல்லது. குடற்புழு நீக்கம் செய்ய அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை அணுகி மருத்துவரின் அறிவுரைபடி குடற்புழு நீக்கம் செய்யுங்கள்.

Saturday, October 4, 2014

செயற்கை கருத்தரிப்பு முறை மாடு, பசு

அறிமுகம்

செயற்கைக் கருத்தரிப்பு என்பது ஆண் இனப்பெருக்க உறுப்பிலிருந்து உயிருள்ள விந்தணுக்களை சேகரித்து சரியான நேரத்தில் சரியான முறையில் பெண் இனப்பெருக்க உறுப்புடன் சேர்ப்பதே ஆகும். இதன் மூலம் நாம் சாதாரண கன்றை  போலவே இளம் தலைமுறையைப் பெற முடியும். இதில் காளை மாட்டின் விந்தணுக்களைச் சோதித்து கருப்பையில் மேம்படுத்தப்பட்ட சூழ்நிலையில் சரியான தருணத்தில் செலுத்தி இளம் தலைமுறை பெறப்படுகிறது. முதன் முதலில் 1780ல் லாஸானோ ஸ்பால்பன்சானி என்ற இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் வளர்ப்புப் பிராணிகளில் நாயில் செயற்றைக் கருத்தரிப்புச் செய்தார். அவரது விளக்கப்படி கருத்தரித்தல் விந்தணுவில் தான் நடைபெறுகிறது. விந்தணுவின் நீர்ப்பகுதியில் அல்ல என்று கூறினார். அதன் பின்பு நடந்த பல ஆராய்ச்சிகள் மூலம் இக்கருத்தரிப்பு முறை பயன்பாட்டிற்கு வந்தது.
இச்செயற்கைக் கருத்தரிப்பு முறை கால்நடைகளில் நன்கு பயன்படுகிறது. கால்நடைகளில் தேவையான பண்புகளைப் பெற அயல்நாட்டுக் கால்நடைகளை நம் நாட்டு இனங்களுடன் செயற்கைக் கருத்தரிப்பு முறையில் பெறலாம். ஆனால் இம்முறையில் கருத்தரிப்பு செய்யும் போது சில மரபியல் குணங்கள்  இழக்கப்படுகின்றன.
சினையின் பருவ அறிகுறிகள்
    • மாடு அமைதியின்றிக் காணப்படும்.
    • அடிக்கடி அடிவயிற்றை எக்கிக் கத்திக்கொண்டே இருக்கும்.
    • அருகிலுள்ள மாடுகளின் மேல் அது தாவும். மேலும் மற்ற காளைகளோ / மாடுகளோ தன் மீது தாவ அனுமதிக்கும்.
    • மந்தையாக மாடுகளை மேய்க்கும் போது, கூட்டத்திலிருந்து தனியாக ஒதுங்கி நிற்கும்.
    • உடல்வெப்பநிலையின் அளவு சிறிது அதிகரித்துக் காணப்படும்.
    • சிறிது சிறிதாக சிறுநீர் கழிக்கும். எருமைகளில் அதிகம் காணப்படும்.
    • வாலை ஒதுக்கிக் கொண்டே இருக்கும்.
    • பசுக்களின் பிறப்பு உறுப்பின் வெளி உதடுகள் தடித்தும் வழவழப்பாகவும் சிவந்தும் காணப்படும். கண்ணாடிப் போன்ற திரவம் பசுவின் பிறப்பு உறுப்பிலிருந்து வழிந்து தொங்கிக்கொண்டிருக்கும்.
    • கண்களின் கருவிழிப்பார்வை விரிந்திருக்கும்.
    • கறவையில் உள்ள மாடாக இருந்தால் பாலின் அளவு 2-3 நாட்களுக்குக் குறையும்.
    செயற்கைக் கருத்தரித்தலின் நன்மைகள்
      • மந்தையில் கலப்பிற்கென காளை மாடுகள் வளர்க்கவேண்டும் என்ற அவசியம் இல்லை எனவே காளை மாடுகள் பராமரிப்புச் செலவு குறையும்.
      • இது காளையிலிருந்து நோய் பரவுவதைத்  தடுக்கும்.
      • முன்பே விந்துக்களைச் சேகரித்துத் தரம் பிரித்து வைப்பதால் குறைந்த தரம் கொண்ட விந்துக்களை அகற்றிவிடலாம்.
      • இளம் கன்றுகள் உருவாகுவது பற்றி முன்பே தெரிந்து கொள்ளலாம்.
      • விந்து சேகரித்த காளை மாடு அழிந்து / இறந்து விட்டாலும் தேவையான அளவு விந்தணுவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
      • விந்துவை கிராமம் / நகரம் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்வது எளிது.
      • இது கரு உருவாதலை உறுதி செய்கிறது. மேலும் எந்த ஒரு (பசு (அ) காளை) மாட்டிற்கும் கலப்பினால் ஏற்றுக் கொள்ளாவிடினும் மீண்டும் கலப்புச் செய்யலாம்.
      • இது சரியான சினைத் தருணத்தைக் கணக்கிட்டுக் கொள்ள உதவுகிறது.
      • கருவுருதலை அதிகப்படுத்துகிறது.
      • பதிவேடுகளைப் பராமரிப்பது எளிது.
      • பழைய, எடை அதிகமான, காயம் பட்ட காளைகளிலிருந்த கூட விந்தணுவை சேகரிக்கலாம்.
      தீமைகள்
        • நன்கு திறமையான தெரிவு முறைகளும் உபகரணங்களும் தேவை.
        • இது இயற்கை முறையைவிட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.
        • இனப்பெருக்கம் பற்றி முற்றிலும் தெரிந்த திறமை வாய்ந்த நபர்கள் தேவை.
        • சரியாக சுத்தம் செய்யப்படாத கருவிகளைப் பயன்படுத்தும் போது அதன் விந்துத் திறன் குறைய வாய்ப்புள்ளது.
        • காளையை சரியாக பரிசோதிக்காமல், சோதனைக்குட்படுத்தாமல் விந்து சேகரித்தால் பல மரபியல் நோய்கள் பசுவிற்குப் பரவக்கூடும்.
        • காளைகளில் நல்ல உற்பத்தித்திறன் மிக்க காளைகள் மட்டுமே தேவைப்படுகின்றன.
        விந்து சேகரித்தல் மற்றும் பகுத்தாய்தல்

        விந்துக்களை சேகரிக்க பல்வேறு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. காலத்திற்கேற்ப சேகரிப்பு முறைகளும் புதிய முறைகள் பின்பற்றப்படுகிறது. பொதுவாக விந்து சேகரிக்க 3 முறைகள் பயன்பாட்டில் உள்ளன. அவைகளாவன.
          • செயற்கை சினைப் பை மூலம் விந்து சேகரித்தல்
          • மின்னூட்ட முறை
          • மலப்புழை வழியே ஆண் இனப்பெருக்க உறுப்புப் பகுதியை பிசைதல் மூலம் சேகரிக்கலாம்.
          செயற்கை சினைப் பை மூலம்
          • செயற்கை பை ஆனது கீழ்வரும் பகுதிகளைக் கொண்டுள்ளது.
          • உறுதியான இரப்பரால் ஆன உருளை, இரண்டு பக்கத் துவாரங்களைக் கொண்டும், மேலும் அதன் மேல் பகுதி காற்று, நீர் சென்ற வர உள் மற்றும்  வெளிப்பகுதியைக் கொண்டும் காணப்படும்.
          • உள் இரப்பர்
          • விந்துக்களை சேகரிக்கும் குடுவை
          விந்துச் சேகரிப்பிற்கு செயற்கை சினைப் பையை பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றை தகுந்த முறையில் கழுவி முறைப்படி சுத்தம் செய்து வைக்கவேண்டும். சினைப்பையை அமைக்க முதலில் உள் இரப்பை இரப்பர்  உருளையில் இருக்கும்.
          ஒரு துவாரப் பகுதியின் வழியே கொண்டு சென்று மறு துவாரம் பகுதியின் வழியே வெளியே மடக்கவேண்டும். பிறகு இரப்பர் உருளையின் மேல்பகுதியில் உள்ள நீர்த் துவாரம் வழியே சூடேற்றப்பட்ட 45 டிகிரி செல்சியஸ் தண்ணீரை ஊற்றவேண்டும். பிறகு அளவுகள் குறிக்கப்பெற்ற விந்து சேகரிக்கும் குடுவையை செயற்கை சினைப்பையின் குறுகிய முனைப்பகுதியில் செருகவேண்டும். பின்னர் செயற்கை சினைப்பையின் உள்பகுதியில் ஜெல்லியை தடவவேண்டும். அதன் மூலம் நீர்ப்பகுதியில் அழுத்தத்தை உருவாக்கலாம்.  இவ்வாறு செய்வதன் மூலம் இயற்கையான சினைப்பை அமைப்பை செயற்கை முறையில் உருவாக்கலாம்.
          ஒவ்வொரு முறை விந்து சேகரிக்கும் போதும் செயற்கை சினைப் பையின் வெப்பநிலையைச் சரிபார்த்துக்கொள்ளவேண்டும். காளைகள் தாமதித்தாலோ, செயற்கை சினைப்பையில் வெப்பநிலை குறைந்தாலோ விந்து வெளிப்படும் தன்மை மாறுகின்றது. அவ்வாறு விந்து வெளிப்பட்டாலும் வெளிவரும் விந்து சிறுநீர் போன்றவற்றில் அசுத்தம் அடைந்து உபயோகம் இல்லாமல் போக வாய்ப்புகள் அதிகம்.

          நோய் மேலாண்மை

          பித்தப்பை நோய்

          இந்நோய் அனப்பிளாஸ் மார்ஜிநேல், அனாபிபிளாஸ்மா சென்டிரேல் என்ற ஓரணு உயிரியால் மாடு மற்றும் எருமைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது இரத்தம் உறிஞ்சும் உண்ணிகள், பேன்கள் மூலம் பரவுகிறது. மேலும் ஊசிகள், கொம்பு நீக்கும் கருவிகள், ஆண்மை நீக்கம் செய்யும் கருவிகள், அடையாளக் குறியிடும் கருவிகள் மூலமும் பரவுகிறது. இந்த நுண்ணுயிரியானது இரத்தச் செல்களை அழிப்பதால் இரத்தசோகை, எடை குறைவு, மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படும். அதோடு பாதிக்கப்பட்ட கால்நடையில் காய்ச்சல் அதிகமாகி பின்பு குறையும். பசியின்மை, மூக்கு காய்தல் மற்றும் மருத்துவம் செய்யாமல் அதிக நாட்களானால் மஞ்சள் காமாலை ஏற்படும். வயது முதிர்ந்த மாடுகளுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும்.

          பண்ணையில் ஏதேனும் மாடு இந்நோயினால் பாதிக்கப்பட்டால் உடனே தடுப்பு நடவடிக்கையாக உண்ணிகள், பேன்களைக் கட்டுப்படுத்த வேண்டும். முடிந்தவரை நோயின் ஆரம்பக் காலத்திலேயே சிகிச்சையளித்தல் சிறந்தது.

          தடுப்பு முறை

          சிடிசி எனப்படும் ‘குளோர்டெட்ராசைக்ளின்’ அனாப்பிளாஸ்மாசிஸைக் கட்டுப்படுத்துகிறது. இதை 0.5 மிகி / 16 உடல் எடைக்கு அளவு உட்கொள்ளச் செய்யலாம். கிருமி நாசினி மற்றும் பிற மருந்துகள் மூலம் உண்ணி,பேன் போன்றவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.

          பாக்டீரியா கிருமியால் வரும் நோய்கள்

          அடைப்பான் நோய்

          இந்நோய் பாக்டீரியா கிருமியால் ஏற்படும் நோயாகும். மாடுகளை மட்டுமல்லாமல், மனிதர்களையும் தாக்கும் தன்மையுடையது.  நம் நாட்டில் எல்லா இடங்களிலும் குறிப்பாக வெப்பம் மிகுந்த, ஈரக்கசிவுள்ள, காற்றோட்ட வசதியுள்ள இடங்களிலும் இந்நோய் அதிகம் காணப்படுகிறது.

          இந்நோய்க் கிருமிகள் உடலிலிருந்து வெளியேறியவுடன் காற்றுடன் சேர்ந்து விரைவில் அழிக்க முடியாத ஸ்போர்களாக மாறி விடுகின்றன. கிருமிகள் தன் வெளிப்புறமாகக் கெட்டியான கவசத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன. கிருமி நாசினிகள் எளிதில் இக்கவசத்தினுள் சென்று நுண்கிருமிகளை அழிக்க முடியாது. இத்தகைய ஸ்போர்கள் நிலத்தில் தங்கி அவ்வப்போது மாடுகளைத் தாக்கி, பெருத்த சேதத்தை ஏற்படுத்துகின்றன. இத்துடன் தண்ணீரில் கலந்து நீண்ட தூரம் எடுத்துச் செல்லப்பட்டு பிற மாடுகளுக்கு நோயையும் ஏற்படுத்துகின்றன.
          நோய் அறிகுறிகள்
          1. இந்நோயால் மாடுகளில், திடீரென்று வலிப்பு ஏற்பட்டு இறந்து விடும். இறந்தவுடன் மூக்கு, வாய், ஆசனம் போன்றவற்றிலிருந்து கருமை நிறமான இரத்தம் வெளியேறும்.
          2. காய்ச்சல் அதிக அளவு, 41 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
          3. ஓரிரு நாட்களில் நோயின் வேகம் தணியும் போது காய்ச்சல் இருக்கும். மாடுகளில் உணர்வு இழப்பு ஏற்பட்டு பிறகு இறந்து விடும்.
          தடுப்பும் பாதுகாப்பும்
            1. நோயுள்ள பகுதிகளில் நோய் ஏற்படும் காலத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக அடைப்பான் தடுப்பூசி போடவேண்டும். நோயில்லாப் பகுதிகளில் தடுப்பூசி தேவை இல்லை.
            2. இந்நோயால் இறக்கும் முன்பு, இரத்தப் பரிசோதனை செய்து நோய் இருப்பதை உறுதி செய்த பின்பு சுகாதார முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும். இதற்குப் பின்பு மாட்டின் தோலை உரிக்கவோ அல்லது இறப்பரிசோதனையோ செய்யவோ கூடாது. காரணம் இக்கிருமிகளை வெளியில் காற்றுடன் கட்டுப்படுத்துவதும் கடினம். எனவே மாட்டை ஆழமான குழியில் புதைத்தோ அல்லது எரித்தோ அப்புறப்படுத்தவேண்டும்.
            3. இரத்தக்கசிவுடன் உள்ள பொருட்கள் அனைத்தையும் எரித்துவிடவேண்டும். அந்த இடத்தை 3 சதம் பீனால் கரைசலைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
          தொண்டை அடைப்பான்

          இந்நோய் பெரும்பாலும் மழைக்காலத்தில் குறிப்பாக நீர்ப்பாசனம், வெள்ளப்பெருக்கு மிகுதியாக உள்ள பகுதிகளில் காணப்படுகிறது. கறவை மாடுகள் குறிப்பாக எருமை மாடுகள், இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. தூரப்பயணத்திற்குப் பின்பும் அதிக நேரம் குளிர் மற்றும் மழையின் பாதிப்பிற்கு பின்பும் இந்நோய் ஏற்படுகிறது. கலப்பினப் பசுக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

          நோய் அறிகுறிகள்
          1. கடுமையான காய்ச்சல் ஏற்படும்.
          2. கண்கள் சிவந்து வீங்கிக் காணப்படும்.
          3. தலை, கழுத்து, தொண்டை, மார்பு போன்ற பகுதிகளில் வீக்கம் ஏற்படும். வீக்கம் சூடாகவும், வலியோடு கூடியதாகவும் இருக்கும்.
          4. குடற்பகுதி பாதிக்கப்பட்டால் வயிற்றுப் போக்கு காணப்படும். சாணம் இளகி இரத்தம் கலந்திருக்கும்.
          5. நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்படும்.
          6. வாயிலிருந்து மிகுதியான உமிழ்நீரும் வழிந்து கொண்டிருக்கும். நாக்கு தடித்துக் கறுப்பாகி விடும்.
          7. மாடுகள் எதையும் விழுங்கவும், மூச்சு விடவும் முடியாமல் திணறும்.
          தடுப்பும் பாதுகாப்பும்
          1. எல்லா மாடுகளுக்கும் மழைக்காலத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே தடுப்பூசி போடவேண்டும்.
          2. நோயுற்ற மாடுகளை உடனடியாக மற்ற மாடுகளிடமிருந்து பிரித்து, தகுந்த மருத்துவம் செய்து பாதுகாக்கவேண்டும்.
          3. பொதுச் சுகாதாரம் நன்கு பராமரிக்கப்படவேண்டும். தொடக்க நிலையில் ஏற்ற மருத்துவம் செய்வதால், பாதிக்கப்பட்ட மாடுகளைக் காப்பாற்றி விடலாம்.