Showing posts with label நிலம். Show all posts
Showing posts with label நிலம். Show all posts

Saturday, March 28, 2015

மண் பரிசோதனை ஆய்வகங்கள் (Man Parisothanai Aaivagangal) - Soil Testing Laboratories



இடம் முகவரி



கடலூர்
முதுநிலை வேளாண் அலுவலர் 
மண் பரிசோதனை ஆய்வகம் 
கரும்பு அராய்ச்சி நிலைய வளாகம் 
சேமமண்டலம்,
கடலூர் – 607 001.

காஞ்சிபுரம்முதுநிலை வேளாண் அலுவலர் 
மண் பரிசோதனை ஆய்வகம் 
பஞ்சுபேட்டை 
காஞ்சிபுரம் -631 502.

வேலூர்முதுநிலை வேளாண் அலுவலர் 
மண் பரிசோதனை ஆய்வகம் 
குடியாத்தம் TK
மேலலத்து 638 806
வேலூர் மாவட்டம்.

தர்மபுரி
முதுநிலை வேளாண் அலுவலர் 
மண் பரிசோதனை ஆய்வகம் 
வட்டாச்சியர் அலுவலக வளாகம் 
தர்மபுரி – 638 702.

சேலம்
முதுநிலை வேளாண் அலுவலர் 
மண் பரிசோதனை ஆய்வகம் 
35/37, B 11 ராஜாராம் நகர் க்ராஸ் 
வனியகலா கல்யாண மண்டபம் அருகில் 
சேலம் – 636 007.

கோயமுத்தூர்
முதுநிலை வேளாண் அலுவலர் 
மண் பரிசோதனை ஆய்வகம் 
லாலி ரோடு,
அரசு தொழில்நுட்பக் கல்லூரி அஞ்சல் 
கோயமுத்தூர் – 642 013.

புதுக்கோட்டை
முதுநிலை வேளாண் அலுவலர் 
மண் பரிசோதனை ஆய்வகம் 
குடுமியான்மலை – 622104
புதுக்கோட்டை மாவட்டம்.

ஈரோடு
முதுநிலை வேளாண் அலுவலர் 
மண் பரிசோதனை ஆய்வகம் 
41/74 பூங்குன்றனார் வீதி 
கருங்கல்பாளையம் 
ஈரோடு – 638 003.

திருச்சி
முதுநிலை வேளாண் அலுவலர் 
மண் பரிசோதனை ஆய்வகம் 
காஜாமலை 
திருச்சி – 620 020.

மதுரை
முதுநிலை வேளாண் அலுவலர் 
மண் பரிசோதனை ஆய்வகம் 
52/வடக்கு சித்திரை வீதி 
மதுரை -625 001.

ஆடுதுறை
முதுநிலை வேளாண் அலுவலர் 
மண் பரிசோதனை ஆய்வகம் 
ஆடுதுறை – 612101
தஞ்சாவூர் மாவட்டம்.

தேனிமுதுநிலை வேளாண் அலுவலர் 
மண் பரிசோதனை ஆய்வகம் 
136/2, 2வது வீதி,
சடயல் நகர் 
பங்களா மேடு (தெற்கு)
தேனி – 625 531
தேனி மாவட்டம்.

திண்டுக்கல்
முதுநிலை வேளாண் அலுவலர் 
மண் பரிசோதனை ஆய்வகம் 
3, கூட்டுறவு காலனி 
திண்டுக்கல் – 624 001.

சிவகங்கை
முதுநிலை வேளாண் அலுவலர் 
மண் பரிசோதனை ஆய்வகம் 
வேளாண் துணை அலுவலர் அலுவலகம் 
(TNSTC கிளை – அருகில்)
தோடி ரோடு 
சிவகங்கை – 630 561.

பரமகுடி
முதுநிலை வேளாண் அலுவலர் 
மண் பரிசோதனை ஆய்வகம் 
பரமகுடி – 623 707
இராமநாதபுரம் மாவட்டம்.

திருநெல்வேலி
முதுநிலை வேளாண் அலுவலர் 
மண் பரிசோதனை ஆய்வகம் 
எண்.37, சங்கர் காலனி 
பாளையங்கோட்டை, 
திருநெல்வேலி -2.



Tuesday, January 13, 2015

நுண்ணுயிர் மேலாண்மை

நிலத்தில் நுண்ணுயிர் பெருக உழவு அற்ற உயிர் மூடக்கு முறை பயன்படும். நீளம் சிறிது நல்ல நிலயில் இருந்தால் கொம்போஸ்ட் மற்றும் இல்லை தழைகளை பயன்படுத்தவும். மண் இறுக்கம் இல்லாமல் பொல பொல என்று 12 இன்ச் வரை கூறிய குச்சி உள் நுழயும்.
நீளம் இருக்கமாக இருந்தால் உயர்ந்த படுகைகள் உண்டாக்கி இந்த நிலத்தை சரி செய்யலாம். இந்த நிலத்தில் தீவன பயிர்கள் விதைகளை விதைக்க வேண்டும். பயிர் நன்றாக வளர்ந்த பின்பு அதனை தறையோடு வெட்டி நிலத்தின் மேல் பரப்பி விடவேண்டும். செடிகளை சிறிய குழி தோண்டி பயிரிடலாம். அந்த செடிகளை சுற்றி புல்லை பரப்ப வேண்டும். இப்போது தொடர்ந்து உயிர் சூழலுக்கு உணவு கொடுக்கவேண்டும்.தொடர்ந்து கொம்போஸ்ட் இட்டால் நுண்ணுயிர்களுக்கு நல்ல உணவாக இருக்கும். இதன் மூலம் ரசாயன உறங்கள் பூச்சி கொள்ளிகளை தவிர்க்கலாம்.
மூடக்கு நிலத்தை முற்றிலும் மூடுவதோடு களைகள் வளறாமல், நிலம் இருக்கமா ஆகாமல் நுண்ணுயிர் பெருக மிகவும் அவசியம் ஆகிறது. மூடக்கு மழை நீர் நிலத்தில் நன்றாக உறிஞ்ச பட உதவுகிறது, மழை நீர் மண்ணை அரிக்காமல் காப்பாற்றுகிறது.

தரிசு களர் உவர் நிலங்களை மேம்படுத்தும் வழிமுறைகள்

களர் உவர் நிலங்களில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும், அவற்றின் செயல் திறனும் குறைந்து காணப்படும். நுண்ணுயிர்கள் போதிய எண்ணிக்கையில் இருந்தால்தான் இடப்படும் கம்போஸ்ட் மற்றும் தழை உரங்கள் சிதைக்கப்பட்டு வளரும் பயிர்களுக்கு கிடைக்கும்.
மேலும், இம் மண்ணில் இடப்படும் ரசாயன உரங்களும், பயிர்களுக்கு கிடைக்க வேண்டுமானால் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை பெருமளவில் இருத்தல் வேண்டும்.
களர் நிலங்களில் நெல் சாகுபடி செய்யும் போது நெல் நடவு செய்த 10 நாள்களில் நீலப்பச்சைப்பாசி என்னும் ஒரு வகைப் பாசியை இடுவதால் நெல் பயிர் நன்கு வளரும்.  இப் பாசி களர் உவர் தன்மையைத் தாங்கி வளரும் திறன் கொண்டது. மண்ணின் இயக்கம்  (டஏ) 7.5 முதல் 10 வரை உள்ள நிலங்களில் இது நன்கு வளரும்.  இந்தப் பாசியை மண்ணில் இடும்போது மண்ணிலுள்ள தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் ஈரப்பதம் ஆகியவை பாதுகாக்கப்படுகின்றன. இப் பாசி ஆக்சாலிக் அமிலம் எனப்படும் ஒரு வகை அமிலத்தை வெளியிடுகிறது.
இந்த அமிலம் மண்ணின் காரத்தன்மையைக் குறைக்க உதவுகிறது. ஒரு ஏக்கருக்கு 4 கிலோ நீல பச்சைப்பாசியை இடுவதால், அது 10 கிலோ தழைச்சத்தை மண்ணில் சேர்ப்பித்து, அதில் வளரும் நெல் பயிருக்கு கிடைக்கச் செய்கிறது. இதன் மூலம் விவசாயிகள் அதிக மகசூலைப் பெறலாம்.

கரும்பு சாகுபடி நிலம் தயார் செய்யும் முறைகள்

கரும்பு விளைவிக்கப்படும் நிலங்களில் தொடர்ந்து கரும்பு மட்டுமே சாகுபடி செய்யக் கூடாது என்று வேளாண்துறை தெரிவித்துள்ளது. ஒரு முறை கரும்பு சாகுபடி செய்தவுடன் அதை வெட்டி எடுத்த பிறகு ஒரு முறை கட்டை கரும்புக்குப் பின் அந்த நிலத்தில் மாற்றுப் பயிர் ஒன்றை சாகுபடி செய்ய வேண்டும். அதன் பின்னரே கரும்பை மீண்டும் பயிரிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல், வாழை, மஞ்சள், நிலக்கடலை, சணப்பை, தக்கைப்பூண்டு போன்றவற்றை கரும்பு சாகுபடி செய்யும் நிலங்களில் சுழற்சி முறையில் பயிர்களை சாகுபடி செய்யலாம் என்றும் வேளாண் துறை யோசனை தெரிவித் துள்ளது.

நிலம் தயாரித்தல்

ஓராண்டுப் பயிரான கரும்பின் வேர்கள் நன்றாக வளர்ந்து நீர் மற்றும் ஊட்டச் சத்துகளை மண்ணில் இருந்து பெற வேண்டுமானால் வயலில் குறைந்தது 30 செ.மீ. ஆழம் வரை மண் மிருதுவாக இருக்க வேண்டும்.
டிராக்டர் மூலம் உழவு செய்வதாக இருந்தால், முதல் உழவை சட்டிக் கலப்பை அல்லது இறக்கை கலப்பை மூலமும் 2-வது மற்றும் 3-வது உழவை கொத்துக் கலப்பை மூலம் செய்ய வேண்டும்.
மேடு, பள்ளங்கள் அதிகம் இல்லாத நிலமாக இருந்தால், 3-வது உழவுக்குப் பின் சமன் செய்யும் கருவி கொண்டு நிலத்தை சமன் செய்து பின்னர் பார் பிடிக்கும் கலப்பை கொண்டு பார்களைப் பிடிக்கலாம்.
எருதுகளைக் கொண்டு உழவு செய்வதாக இருந்தால் முதல் உழவை இறக்கைக் கலப்பை மூலம் செய்யலாம். 2-வது மற்றும் 3-வது உழவுக்கு நாட்டுக் கலப்பையை உபயோகிக்கலாம்.
மண் நன்றாக மிருதுவாகும் வரை நாட்டுக் கலப்பையை கொண்டு உழ வேண்டும். பின்னர் பார் பிடிக்கும் கலப்பை மூலம் பார் பிடிக்கலாம்.