Friday, October 31, 2014

எந்ததெந்த மண் வகைகளில் எந்தெந்த பயிர்கள் விளையும்?

கந்தக பூமி:

இந்த மண் சந்தன நிறத்தில் இருக்கும். இதில்
சோளம், 
கேழ்வரகு, 
பருத்தி, 
தினை, 
கம்பு, 
ஆமணக்கு, 
அவரை, 
பழமரம், 
கிராம்பு, 
மிளகு, 
ஏலம் மாதிரியான பயிர்கள் விளையும்.

கருமணல் பூமி:

கருமணல் கலந்த பூமியில் கரும்பு, 
சாமை, 
தட்டைபயிறு, 
முருங்கை போன்ற சில பயிர்கள்தான் நன்றாக வளரும்.

சாம்பல் நிற பூமி:

சாம்பல் நிற மண்ணில் வெங்காயம்,
 புகையிலை, 
வாழை, 
பருத்தி, 
நிலக்கடலை நன்றாக வளரும்.

செம்மண் பூமி:

செம்மண்ணில் பருத்தி, 
சோளம், கம்பு,
அவரை, 
துவரை மாதிரியான பயிர்களும், 
பல வகையான பழமரங்களும் நன்றாக வளரும்.

வண்டல் பூமி:

வண்டல் மண்ணில் பருத்தி, 
சோளம், 
கரும்பு, 
கம்பு, 
நெல், 
மிளகாய், 
கோதுமை, 
ராகி, 
வாழை, 
மஞ்சள், 
பழமரம் போன்ற அனைத்தும் வளரும்.

மக்கு எரு தொழில்நுட்பம்

மட்குக் உரம் தயாரித்தல்

1.மட்கு உரம் ஒரு மேலோட்டம்
2.பயிர் குப்பையை மட்கு உரமாக்குதல்
3.கரும்பு சருகை மட்கு உரமாக்குதல்
4. கோழிப் பண்ணைக் கழிவுகளை மட்கு உர தொழில்நுட்பம் மூலம் மதிப்புக் கூட்டுதல்

1.மட்கு உரமாக்குதல் - ஒரு மேலோட்டம்

இயற்கை முறையில் அங்ககப்பொருள்களை நுண்ணுயிரிகளால் கட்டுப்படுத்தப்பட்ட நிலைகளில் மட்கச் செய்தல் அல்லது அழுகச் செய்தே மட்கு உரமாகும். அங்ககப் பொருட்களான பயிர்க்குப்பைகள், விலங்குகளின் கழிவுகள், தொழிற்சாலைக்கழிவுகள், ஆகியன மட்கச் செய்தபின் மண்ணில் உரமிடுவதற்கு ஏற்ற தகுதியைப் பெறுகிறது. மட்கு உரம் என்பது அங்ககப் பொருளின் வளமான ஆதாரமாகும். மண் அங்ககப் பொருள் மண் வளத்தை நிலை நிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, ஆகவே நிலைக்கும் வேளாண் உற்பத்திக்கு உதவுகிறது. தாவர ஊட்டச்சத்துக்கு ஆதாரமாக இருப்பது மட்டுமல்லாமல், மண்ணில் இயல், வேதி உயிர்ப் பண்புகளை மேம்படுகிறது. இந்த மேம்பாடுகளின் விளைவாக, மண்
 1. வறட்சி, நோய், நச்சுத்தன்மைக்கு அதிக எதிர்ப்பாக மாறுகிறது
 2. ஊட்டச்சத்துக்களை பயிர்கள் எடுத்துக் கொள்வதற்கு உதவுகிறது
 3. அதிக நுண்ணுயிர் செயல்களால் நுண்ணூட்ட சூழற்சியை கொண்டிருக்கிறது.
இந்த நன்மைகளால், பயிர்டுவதில் உள்ள சிரமங்கள் குறைகின்றன. அதிக மகசூல், செயற்கை உரங்களை விவசாயிகள் பயன்படுத்துவது குறைகிறது.

ஒரு நாளைக்கு விலங்குகளால் வரக்கூடிய சாணம் மற்றும் சிறுநீர்
விலங்கு
சிறுநீர் (மி.லி. /கிலோ)சாணத்தின் அளவு (கிலோ) ஒரு நாளைக்கு
குதிரை3-189-18
கால்நடை17-4518-30
எருமைகள்20-4525-40
ஆடு, வெள்ளாடுகள்10-401-2.5
பன்றிகள்5-303-5
கோழிகள்-2.5-3.5
விலங்குகளின் திட மற்றும் திரவ கழிவுகளின்  ஊட்டச்சத்து மதிப்பு
விலங்குசாணம் /மி.கி./கிராம்சிறுநீர்(%)
தழைமணிசாம்பல்தழைமணிசாம்பல்
கால்நடை20-454-107-251.210.011.35
ஆடு, வெள்ளாடுகள்20-454-1120-291.470.051.96
பன்றிகள்20-456-1215-480.380.10.99
கோழிகள்28-629-268-29---
மட்கிய உரம்ஏன் தேவையானது

பொருள்களான லிக்னின். செல்லுலோஸ், லொமி செல்லுலோஸ், பாலிசாக்கரைடுகள், புரோட்டீன்கள், லிப்பிடுகள் மற்றும் பல, தேவையில்லாத உயிர்ப்பொருள்களில் உள்ளன. இந்தப்பொருட்களை அப்படியே மூலப்பொருள்களாகிய பயன்படுத்த முடியாது. இந்த கலவைப் பொருட்கள் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்தாக மாற்றப்படுகின்றன. மண்ணில் இந்த பொருட்களை இடும் போது எந்தவிதமான மாற்றம் செய்யாமல் அப்படியே இடுகிறோம். பின் மண்ணில் மாற்றங்கள் நடந்து, பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது.
ஆகவே, மாற்றம் நடக்கக்கூடிய காலம் தவிர்க்க முடியாது.

மட்கு உரத்தின் நன்மைகள்
 • குப்பையின் அளவைக் குறைக்கிறது
 • மட்கு உரத்தின் எடை கடைசியில் குறைவாக இருக்கும்
 • மட்கு உரமாக்குதலின் வெப்பநிலை நோய் பரப்பும் கிருமிகள், களை விதைகள் அழிக்கின்றன
 • மட்கு உரம் மண்ணுடன் சமநிலையை ஏற்படுத்துகிறது
 • மட்கு உரம் தயாரித்தலின் போது, பல ஆதாரங்களிலிருந்து எண்ணற்ற கழிவுகள் ஒன்றாகக் கலக்கப் படுகின்றன
 • மண்ணை பக்குவப்படுத்துகிறது
 • விற்பனை செய்யக்கூடிய  பொருள்
 • உரம் கையாளுவதை மேம்படுத்துகிறது
 • மாசுபடுதலைக் குறைக்கிறது
 • நோய் பரப்பும் கிருமியைக் குறைக்கிறது
 • கூடுதல் வருமானம்
 • பயிர் நோய்கள் மற்றும் பூச்சிகளை அழிக்கின்றன
 • இரசாயன உரத்தின் தேவையைக் குறைக்கிறது
 • வேளாண் பயிர்களில் விளைச்சலை அதிகப்படுத்துகிறது
 • காடுகள் மறுஅமைப்பு, நிலங்களை நீருடன் வைத்திருத்தல், சூழ்நிலை மறுவாழ்வு
 • கேடு விளைவிக்கும் குப்பைகளால் ஏற்படும் மாசுபடுதலை குறைக்கிறது
 • பாய்ச்சும்போது திடப்பொருட்கள், எண்ணெய், ஆகியவற்றை நீக்குகின்றன
 • மாசுபட்ட காற்றில் உள்ள தொழிற்சாலை அங்ககப் பொருட்களை 99.6% பிடித்து, அழிக்கின்றன
 • மண், நீர், காற்று மாசுபடுதல் தீர்க்கும் தொழில்நுட்பங்களால்  50% செலவை குறைக்கிறது
மட்கு உரமாக்குதலின் குறைபாடுகள்
 • பல காரணங்களால் மட்கு உரத்தின் வேளாண் பயன்பாடு குறைவாக உள்ளது
 • அதிக எடையுடன் இருப்பதால் போக்குவரத்து செய்வதற்கு செலவு அதிகமாகிறது
 • மட்கு உரத்தின்  ஊட்டச்சத்து மதிப்பு இரசாயன உரங்களை விட குறைவாகவும் உள்ளது. ஊட்டச்சத்துக்களை வெளியிடும் அளவு குறைகிறது. ஆகவே, இது பயிர்களுக்கு  ஊட்டசத்து குறுகிய காலத்தில் அளிக்க முடியாததால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது
 • மட்கு உரத்தின் ஊட்டச்சத்துக்களின் அளவு இரசாயன உரங்களுடன் ஒப்பிடும் போது மாறுபடுகிறது
 • கடின உலோகங்கள் மற்றும் மட்கு உரங்களில் உள்ள மாசுகளின் அளவு முக்கியமாக நகராட்சி திட கழிவுகளில் அதிகமாக உள்ளது. இந்த மாசுபட்ட மட்கு உரத்தை பயிர்களுக்கு பயன்படுத்துவது முக்கியமாக பிரச்சினையாக உள்ளது.
 • நீண்டகாலம் அதிக அளிப்பு மட்கு உரத்தால் ஏற்படும் உப்பு, ஊட்டச்சத்து அல்லது கடின உலோக படிவு பயிர் வளர்ச்சி, மண் உயிரிகள், நீர் தரம், விலங்கு மற்றும் மனித இனத்தைப் பாதிக்கிறது.

இயற்கை முறை பால் பண்ணை


தற்காலத்தில் சுத்தமான பசும்பால் வேண்டும் என்றால் நிச்சயம் நகரங்களில் கிடைக்காது. கிராமங்களில் இன்றும் நம் கண்முன்னே பசு மாட்டில் பால் கறந்து வாங்கலாம். அந்தப் பாலைத் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டாலே, உடம்பில் தெம்பும், பலமும் தெரியவரும். பால் வளத்தில் இந்தியா உலக அளவில் ஏழாவது இடத்திலிருந்து முதலாவது இடத்திற்கு முன்னேறிவிட்டது. ஆனாலும் நல்ல சுத்தமான, கலப்படமில்லாத பால் கிடைப்பது என்பது அரிதாகிவிட்டது.

 தஞ்சாவூர் பகுதிகளில் பனங்கற்கண்டு பால் மிகவும் பிரபலம். மும்பை உள்ளிட்ட வடமாநிலப் பகுதிகளில் தூத்வாலா என பாலுக்கு என தனியே கடை உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை தனியே பாலுக்கு என கடைகள் இல்லை. இந்த நிலையில், கிராமங்களில் கிடைக்கும் சுத்தமான பசும்பால் போலவே, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஜி.மா. பால்பண்ணையில் சுத்தமான, பசும்பால் கிடைக்கிறது. சிவகாசி அருகே பள்ளபட்டி கிராமத்தில் சுமார் 2.25 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த பால் பண்ணையில் சுமார் 60 பசுமாடுகள் உள்ளன. இந்தப் பண்ணையை அமைத்துள்ளவர் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜி.மதுரா தாஸ்சர்மா என்பவர்.. இவரது பால்பண்ணை குறித்து அவரிடம் கேட்டபோது:

 உங்களது பால் பண்ணையின் சிறப்பு என்ன?

 நாங்கள் மாடுகளுக்கு சோள மாவு 60 சதம், மீதமுள்ள 40 சதம் மினரல், கால்சியம், உப்பு உள்ளிட்ட சத்துகள் அடங்கிய இயற்கை சத்து மாவை, மாடுகளுக்கு உணவு தயாரிக்கும் நிறுவனங்களில் இருந்து வாங்குகிறோம். சமையல் கழிவுநீர் உள்ளிட்டவற்றை மாடுகளுக்குக் கொடுப்பதில்லை. சுத்தமான கிணற்று நீரை மட்டுமே கொடுக்கிறோம். மாடுகளுக்கு கொடுக்கும் தீவனத்தைப் பொருத்துத்தான் பாலின் தரமும் இருக்கும்.
 
 எனவே எங்கள் பண்ணைப் பாலை 24 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்காவிட்டாலும், கெட்டுப் போகாது. இதுவே எங்கள் பண்ணைப் பாலின் சிறப்பாகும். 

 இந்தப் பண்ணை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?

 வீட்டில் பால் வழங்கும் நபரிடம் நல்ல பாலாகக் கொடுங்கள் என பலமுறை கூறினேன். அதற்கு அவர், ""நாங்கள் நல்ல பாலாகத்தான் தருகிறோம். நீங்களும் மாடு வாங்கி வளர்த்து பால் கறந்தால்தான் அதில் உள்ள சிரமங்கள் புரியும்'' என்றார். அந்த வார்த்தை என்னை உசுப்பிவிட்டது. பால் பண்ணை அமைத்தே தீருவது என ஆர்வத்துடன், முதலில் ஒரு ஜெர்ஸி இன மாடும், 3 ஹெச்.எப். இன மாடும் என நான்கு மாடுகள் ரூ. 1.60 லட்சம் செலவில் வாங்கினேன். தற்போது இப் பண்ணையில் சுமார் 60 மாடுகள் உள்ளன. இதில் 45 மாடுகள் பால் கொடுக்கின்றன. 

 மாடுகளை எப்படி பராமரிக்கிறீர்கள்?

 தினசரி அதிகாலை சுமார் ஒரு மணிக்கு பால் கறக்கத் தொடங்குவோம். முடிந்ததும், உடனே மாட்டைக் குளிப்பாட்டி, காய்ந்த நாற்று உள்ளிட்டவற்றை உணவாகக் கொடுத்து, தண்ணீர் வைப்போம். பிற்பகலில் சுமார் ஒரு மணிக்கு பால் கறக்கத் தொடங்குவோம். இதையடுத்தும் மாடுகளுக்கு உணவு கொடுபோம். நோய் பாதுகாப்பு முக்கியமாகும். ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை கால் காணை, வாய் காணை நோய் வரக்கூடும். எனவே, முன்னதாக தடுப்பூசி போட்டு விடுவோம். மாட்டுச் சாணம் மற்றும் நீரில் வித்தியாசம் தெரிந்தால், உடனே மாட்டு மருத்துவரை அழைத்துக் காண்பிப்போம். மஞ்சள் காமாலை, காய்ச்சல் ஏற்பட்டால் மாடுகள் உணவு எடுத்துக் கொள்ளாது. இதற்கும் மருத்துவரை அணுகி, அவரது அறிவுரைப்படி நடப்போம்.

பால் பண்ணை

பால் பண்ணை என்பது சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலாளர்களுக்கு வருமானம் ஈட்டக்கூடிய ஒரு முக்கிய உப தொழிலாகும். கால்நடைகளினால் கிடைக்கும் எரு உரம் மூலம் இயற்கை உரம் தயாரிக்கவும், மண்ணை வளப்படுத்தவும், பயிர்கள் நன்கு வளரவும் உதவுகிறது. கால்நடைகளின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் சாண எரிவாயு வீட்டு உபயோகத்திற்கு எரிபொருளாக மட்டுமின்றி கிணற்றிலிருந்து நீர் இறைக்க தேவைப்படும் இன்ஜீன்களுக்கும் எரிபொருளாக பயன்படுகிறது. வேளாண்மையின் உபரி பொருள்களான உப பொருள்களே கால்நடைகளுக்கான இலாபகரமான தீவனமாக அமைகிறது. பெரும்பாலும் பண்ணை செயல்பாடுகளுக்கும், போக்குவரத்துக்கும், அதிக அளவில் எருதுகள் பயன்படுகின்றன. ஆரம்பத்திலிருந்தே வேளாண்மை சார் தொழில்களில் , பெரும்பாலான வேலைவாய்ப்பும், இலாபம் ஈட்டக்கூடிய தொழிலாக பால் பண்ணை அமைகிறது. பால் பண்ணை வருடம் முழுவதும் வேலைவாய்ப்பை வழங்குகிறது. பால் பண்ணை மூலம் முக்கியமாக சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், நிலமற்ற தொழிலாளர்களும் பயனடைகின்றனர்.  இரண்டு கறவை மாடுகளினால் ஒரு விவசாயிக்கு  ஒரு வருடத்திற்கு  கிடைக்கும் மொத்த உபரி தொகை 12,000 ரூபாய்.  இரண்டு கறவை மாடுகளை வாங்குவதற்கு தேவைப்படும் முதலீடு தொகை ரூ.18,223/- அதன் பிறகு வருடத்திற்கு திருப்பி செலுத்த வேண்டிய வட்டியுடன் கூடிய கடன் தொகை ரூ.4,294/- ஆனால் விவசாயிக்கு கிடைக்கும் நிகர லாபம் தோராயமாக ரூ.6000 – 9000. (இதற்கு தேவையான மாதிரி திட்டம் இணைக்கப்பட்டுள்ளது). கால்நடைகளின் தரம், பராமரிக்கப்படும் முறை, விற்பனை திறன் இவற்றைப் பொருத்தே கிடைக்கக்கூடிய வருமானம் அதிகரிக்கும்.
உலக வங்கி கணக்கின்படி இந்தியாவில் 75% 940 மில்லியன் மக்களில் 5.87 மில்லியன் கிராமம், 145 மில்லியன் ஹெக்டேரில் விவசாய நிலம். சராசரியாக பண்ணை அளவு 1.66 ஹெக்டேர். அதில் 70 மில்லியன் கிராம வீடு, 42%  2 ஹெக்டேர் வரையிலும் மற்றும் 37% நிலமற்ற வீட்டார். இந்த நிலமற்ற சிறு விவசாயி தங்களுடைய உடைமையில் 53% கால்நடை வளர்ப்பு மற்றும் 51% அதனுடைய பால் உற்பத்தியாகும். பால் உற்பத்தியில் இந்த சிறு / நடுத்தர விவசாயி மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பால் தேவை அதிகமாக உள்ள நகர பகுதிகளிலும் பால் பண்ணை ஒரு முக்கிய லாபகரமான தொழிலாக மேற்கொள்ளப்படுகிறது.
2001-02.ம்  வருடத்தின் மொத்த பால் உற்பத்தி 84.6 மில்லியன் மெட்ரிக் டன்ஸ். ஒரு நாளைக்கு 226 கிராம்  இந்த உற்பத்தி, ஒரு நாளைக்கு ஒரு நபருக்கான பால் தேவையின் அளவு 226 கிராம், ஆனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பால் பரிந்துரைக்கப்படும்அளவு ஒரு நாளைக்கு ஒரு நபருக்கான அளவு 250 கிராம். பேராற்றல் வாய்ந்த நோக்கம்/செயலாற்றலின் மூலம் பால் உற்பத்தயை அதிகரிக்க வேண்டும். 3 வருட காலத்தில் கறவை மாடுகள் மற்றும் எருதுகளின் எண்ணிக்கை முறையே 62.6 மில்லியன் மற்றும் 42.4 மில்லியன் (1992 census) .
மத்திய மற்றும் மாநில அரசு பால் உற்பத்தியை பெருக்குவதற்கு நிதி உதவிகளை செய்து வருகிறது. 9வது ஐந்தாண்டு திட்டத்தில் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி துறைக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.2345 கோடி.
பால் உற்பத்திக்கான பொதுவாக வழங்கப்படும் பயிற்சி:
விவசாயிகள்:
பால் பண்ணையின் அதிகப்படியான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நாகரிக மற்றும் சிறந்த அறிவியல் கொள்கைகள் மற்றும் பயிற்சிகளை பயன்படுத்த வேண்டும். பெரும்பாரும் பயன்படுத்தப்படும் வேறு சில பயிற்சிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வீட்டமைப்பு :
 1. கால்நடை வளர்ப்பிற்கான கூடாரம் ஈரப்பதம் இன்றி வறட்சியாக அமைக்க வேண்டும்.
 2. அடைமழை போன்ற பெரு மழையின் போது நீர் தேங்கி நிற்கும் பகுதிகளை கூடாரம் அமைக்க தவிர்க்க வேண்டும்.
 3. இதனுடைய சுவர்கள் 1.5 வழ 2 மீ உயரம் இருக்க வேண்டும்.
 4. இந்த கூடாரத்தின் சுவர்கள் ஈரம் கசியாத வண்ணம் பூசியிருக்க வேண்டும்.
 5. இதன் கூரை 3-4 மீட்டர் உயரம் இருக்க வேண்டும்.
 6. இந்த மாட்டு தொழுவம் சிறந்த காற்றோட்ட வசதியுடன் இருக்க வேண்டும்.
 7. இந்த தரை சரியான /கடினமான, வழுக்காத, சிறந்த முறையாக (3 செ.மீ) நீர் வடிய கூடிய முறையில் எளிதில் உலரும் படியாகவும் சரிவாக அமைக்க வேண்டும்.
 8. வளர்க்கப்படும் கால்நடைகள் நிற்கும் இடமானது 0.25மீ அளவில் சரியான அகன்ற வடிகால் வசதியுடன் இருக்க வேண்டும்.
 9. ஒவ்வொரு கால்நடைக்கும்மான இடைவெளி 2x1.05 மீ ஆகும்.
 10. கால்நடைகளுக்கான தீனி தொட்டி 1.05 மீட்டர் இடத்திலும் அதன் முன் உயரம் 0.5 மீ மற்றும் அதன் ஆழம் 0.25 மீட்டர் அளவிலும் இருக்க வேண்டும்.
 11. தீவனத் தொட்டி , தண்ணீர் தொட்டி, வடிகால் வசதி மற்றும் சுவர்கள் இவைகள் யாவும் எளிதில் தூய்மை படுத்தும் வண்ணம் அமைக்க வேண்டும்.
 12. ஒவ்வொரு கால்நடைக்கும்மான இடைவெளி 5- 10 ச.மீட்டர் அளவில் ஒதுக்கீட செய்ய வேண்டும்.
 13. வெயில் காலங்களில் முறையான நிழல் மற்றும் குளிர்ந்த நீரை கால்நடைகளுக்கு அளிக்க வேண்டும்.
 14. குளிர்காலத்தில் இரவு நேரத்திலும், மழையிலும் கால்நடைகளை வீட்டிற்குள் பராமரிக்க வேண்டும்.
 15. நாள்தோறும் கால்நடைகளுக்கு தனித்தனி  கிடைப்படி ஓதுக்க வேண்டும்.
 16. கூடாரம் சுகாதார முறையில் பராமரிக்க வேண்டும்.
 17. வெளிப்புற ஒட்டுண்ணிகளான (பேன், ஈக்கள் ) இவற்றிலிருந்து காக்க சுவர்களுக்கு மாலத்தியான அல்லது காப்பர் சல்பேட் தெளிக்க வேண்டும்.
 18. கால்நடைகளின் சிறுநீர் சிறு குழிகளில் சேகரிக்கப்பட்டு பின் அதை பாசனக் கால்வாயில் சேர்க்க வேண்டும்.
 19. கால்நடைகளின் சாணம் மற்றும் சிறுநீரை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். சாண எரிவாயு கலனை சிறந்த முறையில் அமைக்க வேண்டும். சாண எரிவாயு கலன் என்பது சாணத்துடன் பண்ணை கழிவுகள் கால்நடை கழிவுகளை சேர்த்து தயாரிப்பதாகும்.
 20. கால்நடைகளுக்குத் தேவையான இடைவெளி ஒதுக்க வேண்டும்.
II. கால்நடைகளை தேர்ந்தெடுக்கும் முறை
 1. வங்கி கடன் கிடைத்தவுடன் தகுந்த கால்நடை வளர்ப்பவரிடமிருந்தோ அல்லது அருகிலுள்ள கால்நடை சந்தையிலோ கால்நடைகளை கொள்முதல் செய்ய வேண்டும்.
 2. வங்கியின் தொழில்நுட்ப அலுவலரின் உதவியால் ஆரோக்யமான மற்றும்  அதிகபடியான பால் தரும் கால்நடைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். கால்நடை மருத்துவர்/ கால்நடை வளர்ப்பு பராமரிப்பவர் மாநில அரசு/வட்டார.
 3. புதிதாக இரண்டாவது/மூன்றாவது கன்றுகுட்டி ஈன்ற பசுவை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.
 4. வாங்குவதற்கு முன் கறவை மாட்டின் பால் வளம் மற்றும்  மூன்று முறை பால் கறக்கும் திறன் உடையதா என நன்கு ஆராய்ந்தறிந்து வாங்க வேண்டும்.
 5. புதிதாக  வாங்கிய கறவை மாட்டை அடையாளம் காண்பதற்கு தகுந்த அடையாளக் குறியிட வேண்டம். (காது குத்தல் (அ) பச்சை குத்துதல்)
 6. புதிதாக வாங்கப்பட்ட கறவை மாட்டுக்கு நோய் தடுப்பு மருந்து வழங்க வேண்டும்.
 7. புதிதாக வாங்கப்பட்ட கறவை மாட்டை முதல் இரண்டு வாரத்திற்கு தனி கவனம் செலுத்தி பார்க்க வேண்டும். பிறகு அதை மற்ற மாடுகளுடன் ஒன்றாக சேர்க்கலாம்.
 8. குறைந்த பட்ச பொருளாதால வளத்திலேயே இரண்டு பால் தரும் கறவை மாடுகளை வாங்க வேண்டும்.
 9. வாங்கக்கூடிய இரண்டாவது கறவை மாடு/ கறவை மாடு தொகுப்பு முதலில் வாங்கிய கால்நடைகளுக்கு 5-6 மாதம் கழித்து வாங்க வேண்டும்.
 10. பருவகாலத்திற்கேற்ப வளாப்பவரிடமிருந்து எருமை மாடுகளை ஜீலை-பிப்ரவரி மாதங்களில் வாங்க வேண்டும்
 11. இரண்டாவதாக வாங்கப்படும் கால்நடையானது ஏற்கனவே உள்ள கால்நடையின் பால் வளம் வற்றும் போது அல்லது குறையும் போது வாங்கினால் தொடர்ந்து பாலின் உற்பத்தி சீராக இருக்கும். மேலும் இது தொடர் வருமானத்திற்கும், பால் வற்றிய மாட்டினை பராமரிப்பதற்கும் உதவியாக இருக்கும்.
 12. பால் வளம் குன்றிய கால்நடையை ஆராய்ந்து அதற்கு பதிலான கால்நடையை வாங்க வேண்டும்.
 13. தரம் குறைந்த மாட்டை அது 6-7 முறை கன்று ஈன்ற பிறகு நீக்கி விட வேண்டும்.

Friday, October 10, 2014

இணையற்ற லாபம் தரும் இயற்கை மீன் வளர்ப்பு!

செழிப்பான நீர்வளம் உள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கான சிறந்த உபதொழிலாக இருப்பது மீன் வளர்ப்பு. வழக்கமாக பெரும்பாலான விவசாயிகள் ரசாயன உரங்களையும், அதிகளவிலான அடர்தீவனங்களையும் பயன்படுத்திதான் மீன்களை வளர்க்கிறார்கள். அவர்களுக்கிடையில் கொஞ்சம் வித்தியாசமாக அடர்தீவனத்தைக் குறைத்து, அதிகளவில் பசுந்தீவனங்களை மட்டுமே கொடுத்து சிறப்பான முறையில் மகசூல் எடுத்து வருகிறார், மயிலாடுதறை அருகே இருக்கும் ஆனந்தக்குடியைச் சேர்ந்த பிச்சை பிள்ளை.‘விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு, சொந்தமாக மூணு ஏக்கர் நெல் வயல் இருக்கு. படிப்பு முடிந்ததும் பாஸ்போர்ட் ஆபிஸீல வேலை கிடைத்தது. அங்கே வேலை பார்த்து்கிட்டே இடையில் கொஞ்சம் விவசாயத்தையும் பாத்துக்கிட்டு இருந்தேன். பயி ஓய்வுக்கப்பறம் முழுநேர விவசாயியா மாறிவிட்டேன். மூணு ஏக்கர்ல், 100 குழி (33 சென்ட்) நிலத்தை மட்டும் ஓதுக்கி, அரசாங்க உதவியோட பண்ணைக்குட்டை வெட்டி மீன் வளர்க்க ஆரம்பித்தேன். மீதி இடத்துல் வழக்கம்போல நெல்சாகுபடி நடக்கிறது.

நானும் ரசாயன விவசாயந்தான செய்துக்கிட்டிருந்தேன். ரசாயன உரத்தால வர்ற தீமைகளை அடிக்கடி கெள்விப்படுறப்போ எனக்குள்ள ஒரு உறுத்தல் வந்தது. அதனால, இயற்கைக்கு மாறனும்னு பயிற்சிகளில் கலந்துக்கிட்டேன். விவசாயம் சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். அதுல பசுமை விகடனும் அறிமுகமாகவே, முழுசா இயற்கை வழி விவசாயத்துக்கு மாறிட்டேன். மீன் வளர்ப்புத் துறையில இருக்கற பெரும்பாலான விஞ்ஞானிகள், உரம் போட்டுத்தான் மீன் வளர்க்கச் சொல்றாங்க, விவசாயத்துலயே ரசாயனப் பயன்பாட்டைக் குறைக்கணும்னு பேசிக்கிட்டிருக்கறப்போ, ‘மீன் வளர்க்கறதுக்குப் போய் ரசாயனத்தைப் பயன்படுத்தணுமா?னு ஒரு கேள்வி எனக்குள்ள உருவாகியது. குளத்துக்கு அடியில் இருக்குற மீனுக்கானத் தீவனத் தாவரங்கள் வேகமா வளர்றதுக்குத்தான் ரசாயன உரம் பயன்படுத்தறாங்க. ஆனா, அதோட தாக்கம் தண்ணீர் மூலமாக கட்டாயம் கொஞ்ச அளவுக்காவது மீன் உடம்புக்குள்ளேயும் இருக்கத்தான் செய்யும். அதனால உற்பத்திச் செலவு அதிகரிக்கிறதோட மீனோட சுவையும் குறைந்துவிடும். எனக்கு இதில் ஒப்புதல் இல்லாததால  இலை, தழைகளைக் கொடுத்தே மீன் வளர்க்கலாம்னு முடிவு பண்ணினேன். இயற்கையாவே ஆறு, குளத்துலயெல்லாம் வளர்ற மீன்களுக்கு யாரும் உரம் போடுறதில்லையே.

வீட்டு ஓரங்கள்ல தோட்டக்கால் வேலிகளில் முருங்கை, அகத்தி, சூபாபுல், சிறியாநங்கை, துளசி மாதிரியான தாவரங்கள வளர்த்து, அதையே வளர்ப்பு மீன்களுக்கு உணவா கொடுக்கலாமேனு யோசித்து அதையே நடைமுறைப் படுத்திக்கிட்டிருக்கேன். குளத்துக்குள்ள நுண்ணுயிர்கள், பாசி வளர்றதுக்கு சாணம் மாதிரியான இயற்கைக் கழிவுகளையும் கொடுக்குறேன். இப்படி வளர்த்தாலே ஆறே மாதத்தில் மீன் ஒவ்வொண்ணும் ஒரு கிலோ எடைக்கு வந்துவிடுகிறது. சுவையாவும் இருக்கு. அப்பறம் எதுக்குத் தேவையில்லாம ரசாயனத்தைப் பயன்படுத்தணும்? என்று கேள்வி எழுப்பியவர், 33 சென்ட் பண்ணைக் குட்டையில் மீன் வளர்ப்பதற்கானத் தொழில்நுட்பத் தகவல்களை, அழகாக விளக்குகிறார்.

35 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம், ஒன்றரை மீட்டர் ஆழம் இருக்குமாறு குளம் வெட்டிக் கொள்ள வேண்டும் (விவசாயத் தேவைக்கான நீராதாரத்தைப் பெருக்குவதற்காக, அரசு செலவில் பண்ணைக் குட்டை அமைத்துத் தரும் திட்டத்தை வேளாண்துறை நடை முறைப்படுத்தி வருகிறது. அதைப் பயன்படுத்திக் கொண்டு, மீன் வளர்ப்பையும் மேற் கொள்ளலாம்). அதில் தண்ணீரை நிரப்பி, குறிப்பிட்ட அளவுக்கான நீர், தொடர்ந்து தேங்கி நிற்கிறதா என்பதை உறுதி செய்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு வேளை அதிகமாக தண்ணீர் உறிஞ்சக்கூடிய பகுதியாக இருந்தால், குளத்தின்  அடியில் கரம்பை மண்ணைப் பரப்பி, தண்ணீரைத் தேக்கலாம். ஆறு, குளம் போன்ற நீர் நிலைகள் அருகில் இருக்கும் பகுதியாக இருந்தால், கவலையேபடத் தேவையில்லை. தண்ணீர் உறிஞ்சப்படாமல் தேங்கி நிற்கும்.

பண்ணைக் குட்டையில் மூன்றடி உயரத்துக்கு மட்டும் தண்ணீர் நிரப்பி, இரண்டு மாட்டு வண்டி அளவுக்கு கட்டி இல்லாத ஈர சாணத்தை தண்ணீரில் கரைத்துவிட வேண்டும். ஒரு வாரத்திலேயே சாணத்தில் இருந்து நுண்ணுயிர்கள் பெருகி விடும்.பிறகு அருகில் உள்ள மீன் விதைப் பண்ணைகளில் இருந்து, இரண்டு மாத வயதுடைய மீன்குஞ்சுகளை வாங்கி வந்து குளத்தில் விடவேண்டும். மீன்கள், அவை வளர்க்கப்படும் பகுதியைப் பொறுத்து மூன்று வகைகளாக அழைக்கப்படுகின்றன. அடி மீன் (சி.சி. காமன் கார்ப், மிர்கால்), நடுத்தட்டு மீன் (ரோகு, கெண்டை), மேல் மீன் (கட்லா, சில்வர்) எனப்படும் இந்த மூன்று வகைகளையும் கலந்து வளர்க்கும் போது குளத்துக்குள் இட நெருக்கடி இல்லாமல் மீன்கள் வளரும். பொதுவாக அனைத்து வகை மீன் குஞ்சுகளும் ஒரே விலையில் தான் விற்கப்படுகின்றன. வளர்ந்த மீன்களை மொத்தமாக விற்கும் போதும் சராசரியாக விலை நிர்ணயித்துதான் வியாபாரிகள் வாங்கவார்கள். அதனால் பல ரகங்களைக் கலந்து வளர்க்கும் போது விற்பனையில் பிரச்சனை இருக்காது. ஒரு வேளை நேரடி விற்பனை செய்வதாக இருந்தால், நமது பகுதி சந்தை நிலவரத்துக்கேற்ற அளவுக்கு ஒவ்வொரு ரக மீன் குஞ்சுகளின் எண்ணிக்கையைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். ஆனால், 33 சென்ட் அளவு குளத்துக்கு 1,200 குஞ்சுகளுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குஞ்சுகளை விட்ட பிறகு நீர்மட்டத்தை நான்கடிக்கு உயர்த்தி, எப்போதும் அதே தண்ணீர் மட்டம் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.

விறு விறு லாபம் தரும் விரால் மீன்

ஏக்கர் கணக்ககில் குளமும் செழிப்பான தண்ணீ்ா வசதியும் இருந்தால், மட்டுமே மீன் வளர்ப்பில் ஈடுபட முடியும்  என்பது பெரும்பாலானோரின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் கருத்து.  இதை அடியோடு தகர்க்கும் விதத்தில், “ஒரு சென்ட் அளவுக்கு குளமும் அதில் நிரப்பும் அளவுக்கு நீரும் இருந்தாலே போதும். விரால் மீன் வளர்த்து அதிக லாபம் ஈட்ட முடியும்” என்கிறார் திருநெல்வேலியில் சேவியர் கல்லூரியில் இயங்கி வரும் நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் இயக்குநர்  ஹனீபா. சொல்வதோடு மட்டுமல்லாமல் அதற்கான பயிற்சியையும் இலவசமாக வழங்கி வருகிறது. இந்த மையம். விரால் மீன் வளர்ப்பை ஊக்குவிப்பதுதான் இந்த மையத்தின் முக்கிய நோக்கம். அந்த வகையில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் நிதி உதவியோடு ‘விரால் மீன்களைப் பாதுகாத்தல், அவற்றை இனபெருக்கம் செய்தல், விவசாயிகளுக்கு விரால் வளர்ப்புத் தொழில்நுட்பங்களை விளக்குதல் போன்றவைகளைச்  செயல்படுத்தி வருகிறது இம்மையம். 

மையத்தின் இயக்குநர் ஹனீபா நம்மிடம் “பொதுவா மீன் வளர்க்கறாங்க.  விரால் மீன் பக்கம் திரும்பறதேயில்ல. ஆனா, சாப்பாட்டு மீன்களில் விரால், அவுரி, குறவை விரால் மீன் நல்லா சதையாவும் சுவையோடவும் இருக்கும். முள்ளும் கம்மியா இருக்கறதால நிறையபேர் விரும்பி சாப்பிடுவாங்க. இதுல சில மருத்துவக் குணங்களும் இருக்கு. கர்ப்பிணிப் பெண்களுக்கும், இளம் தாய்மார்களுக்கும் இது நல்ல உணவு. ஆனா, தேவைக்குத் தகுந்த அளவுக்கு இங்க உற்பத்தி கிடையாது. பார்க்கறதுக்கு பாம்பு மாதிரி இருக்கறதால, இதை பாம்புத் தலை மீன்’னும் சொல்வாங்க. விரால் மீன்ல ஏறத்தாழ 30 ரகங்கள் இருக்கு. இந்தியாவுல பெருவாரியா இருக்குற  பத்து ரகங்களுக்கும் நல்ல  விற்பனை வாய்ப்பு இருக்கு. ஆனா, சரியான வழிகாட்டுதல் இல்லாததால தமிழ்நாட்டுல பெரியளவுல விரால் மீன் வளர்ப்புல யாரும் ஈடுபடுறதில்ல. மீன் பண்ணைகளில் விரால் மீன் குஞ்சுகளும். அதுக்கான உணவுகளும் பரவலா கிடைக்காததும் இன்னொரு காரணம். இப்போ எங்க மையத்தோட தொடர் பிரசாரத்தால திருநெல்வேலி சுற்றுப்புறத்துல நிறைய பேருக்கு விரால் மீன் பத்தின விழிப்பு உணர்வு வந்து, அதை வளர்க்க ஆரம்பிச்சுருக்காங்க” என்றவர், விரால் மீன் வளர்ப்புப் பற்றி விரிவானத் தகவல்களைத் தந்தார்.

“ஒரு விரால் மீனுக்கு எட்டுல இருந்து பத்து சதுர அடி வரைக்கும் இடம் தேவை. ஒரு ஏக்கர் அளவுக்கு குளம் எடுத்தா அதுல 5,000 மீன்கள் வரை வளர்க்கலாம். ஒரு முறைக்கு 7,000 குஞ்சு களை விட்டா அதுல தப்பிப் பிழைச்சு 5,000 மீன்கள் வரை வளந்துடும். அதேமாதிரி உணவுகள சரியான விகிதத்துல கொடுத்துப் பராமரிச்சா ஒவ்வொரு மீனும் பத்தே மாசத்துல முக்கால் கிலோ எடை வந்துடும். அந்த எடைதான் விக்கிறதுக்கு ஒவ்வொரு சரியான அளவு. ஒரு கிலோ விரால் மீன் குறைந்தபட்சம் 250 ரூபாய்க்கு விற்பனையாகும். சீசன் சமயங்கள்ல அதிகபட்சமா 350 ரூபாய் வரைக்கும் கூட விற்கும். இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்னான்னா இது இறந்துடுச்சுனா கொஞ்சநேரத்துலேயே சதை நைஞ்சு போயிடும். அதனால, உயிரோடதான் விற்பனைக்குக் கொண்டு போகணும். அப்பதான் வாங்குவாங்க. இந்த மாதிரி சின்னச்சின்ன விஷயங்கள்ல மட்டும் கவனமா இருந்தா விறுவிறுனு லாபத்தைப் பார்க்க முடியும்.

விரால் மீனை ஏக்கர் கணக்கில் குளம் வெட்டி தான் வளர்க்கணும்னு இல்லை. தோட்டத்துல சின்ன இடம் இருந்தாலேகூட போதும். வீட்டுக்குப் பின்னாடி ஒரு சென்ட் அளவுக்கு நிலம் இருந்தாகூட அதுல 50 மீன் வரை வளர்த்துடலாம். விருப்பப்படறவங்களுக்கு இலவசமா பயிற்சி கொடுக்கறதோட, மீன் குஞ்சுகளையும் உற்பத்தி பண்ணிக் கொடுக்கறதுக்கும் தயாரா இருக்கோம். அதோட விரால் மீன்களுக்கான உணவை விவசாயிகளே தயாரிச்சுக்குறதுக்கான பயிற்சியையும் கொடுக்குறோம். மீன்கள மதிப்புக் கூட்டுறதுக்கான ஆலோசனைகளையும் கொடுக்குறோம்” என்று சொன்னார். நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டு, மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் ஆலங்குளத்தைச் சேர்ந்த இப்ராஹிம் தனது அனுபவங்களை கூறுகிறார்.
“எங்களுக்கு பேக்கரிதான் குடும்பத்தொழில். அதோட தனியா ஏதாவது தொழில் ஆர்பிக்கலாம்னு யோசித்து கொண்டு இருந்தபொழுது தான் இந்த மையம் பத்திக் கேள்விப்பட்டேன். உடனே பயிற்சி எடுத்தேன். நாங்க வாங்கிப் போட்டிருந்த காலி வீட்டு மனையில, மீன் வளர்ப்பை ஆரம்பித்தேன். ஆறு சென்ட் அளவில் ஒரு குளம்னு எடுத்து வளர்த்துக்கிட்டிருக்கேன் நல்ல லாபமானத் தொழிலாத்தான் இருக்கிற என்றவர், தன் அனுபவத்திலிருந்து வளர்ப்பு முறைகளைச் சொன்னார். அதை பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.

நம்மிடம் இருக்கும் நிலத்தின் அளவுக்கும் நீரின் அளவுக்கும் ஏற்ப குளத்தின் அளவை கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். விரால் மீன்கள் ஒன்றை ஒன்று சாப்பிடும் பழக்கமுள்ளவை. அதனால் ஒரே வயதுடைய மீன்களை மட்டும் ஒரு குளத்தில் வளர்க்க முடியும். வயது வித்தியாசமிருந்தால் சிறிய மீன்களை, பெரிய மீன்கள் சாப்பிட்டு விடும். அதனால் ஒரே குளமாக எடுக்காமல் நிலத்தின் அளவைப் பொறுத்து அதிக எண்ணிக்கையில் குளங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குளத்திலும் இரண்டு மாதங்கள் இடைவெளியில் தனித்தனியாக குஞ்சுகளை விடும்போது இழப்பையு்ம குறைக்க முடியும். வருடம் முழுவதும் தொடர் வருமானத்தையும் பார்க்க முடியும். மூன்றரை அடி ஆழத்துக்குக் குளம் வெட்டி, தோண்டிய மண்ணை கரையைச் சுற்றிக் கொட்டி கரையைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். குளத்தின் அடியில் அரை அடி உயரத்துக்குக் களிமண்ணை (வண்டல் மண்) பரப்ப வேண்டும். பின் ஆறு சென்டுக்கு 20 கிலோ என்ற கணக்கில் தொழுவுரத்தைப் பரப்பி, நீரை நிரப்ப வேண்டும். மூன்று அடி மட்டத்துக்கு எப்போதும் குளத்தில் நீர் இருப்பது போல பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

லாபம் தரும் தலைச்சேரி மற்றும் போயர் கலப்பின ஆட்டு பண்ணை
மிழகத்தில் மாறி வரும் உணவுப்பழக்கத்தால் ஆண்டுக்கு ஆண்டு இறைச்சிக்கான  தேவை அதிகரித்து வருகிறது. இதனால் ஆடு வளர்ப்பு தொழிலும் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்நாட்டில் கன்னி, கொடி என்ற இரண்டு வகையான ஆட்டு இனங்கள் தான் பெருமளவில் காணப்படுகின்றன. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தலைச்சேரி என்ற ஆட்டு இனம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வகை ஆடுகள் கொட்டில் முறை வளர்ப்புக்கு ஏற்ற ரகமாக கருதப்பட்டது. தலைச்சேரி இன ஆடுகளின் இறைச்சி சுவையாகவும், அதன் பால் சுரக்கும் திறன் அதிகமாகவும் இருக்கிறது. குறிப்பாக விவசாயம் பொய்க்கும் காலங்களில் ஆடுகள் விவசாயிகளுக்கான பொருளாதார தேவையை ஈடுகட்டும் செல்வங்களாகவே உள்ளன. இதனால் தலைச்சேரி உள்பட ஆடு வளர்ப்பு தொழில் மதிப்பு மிகுந்ததாக மாறி வருகிறது. சமீபகாலமாக தலைச்சேரி இனம் மற்றும் வெளிநாட்டு இனமான போயர் இன ஆடுகளை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்ட ஆடுகளுக்கு நல்ல வரவேற்பிருக்கிறது. இங்கு அது பற்றி பார்க்கலாம்.
மலபாரி என்னும் தலைச்சேரி
தலைச்சேரி ஆடு என்று பரவலாக அழைக்கப்படும் இந்த ஆட்டு இனத்திற்கு மலபாரி என்றும் பெயர் உண்டு. தூய வெள்ளை நிறம் முதல் முழுக்கருப்பு நிறம் வரையில் பல நிறங்களில் இந்த ஆடுகள் காணப்படுகின்றன. இந்த ஆடுகளில் ரோமங்கள் மற்ற இன ஆடுகளை விட அதிகம் காணப்படுகின்றன. குறிப்பாக உடலின் 30 சதவீத ரோமம் இந்த ஆட்டின் தொடைப்பகுதியில் மட்டும் காணப்படும். இந்த இன கிடாக்களுக்கு தாடி உண்டு. இவை இரண்டரை அடி முதல் 3 அடி உயரம் வரை வளரும். மூக்கு சிவந்து காணப்படும். இதன் இறைச்சி மாற்றும் திறன் 48 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது. இனக்கலப்பில் உருவாகும் புது இனம்
இந்த வகை இயல்புகள் கொண்ட தலைச்சேரி இனத்துடன் அயலின கலப்பு என்ற அடிப்படையில் புதிய இயல்புகள் கொண்ட குட்டிகளை உருவாக்கி வருகிறார்கள். குறிப்பாக போயர் என்ற வெளிநாட்டின ஆட்டு இனத்துடன் தலைச்சேரி ஆடுகளை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்ட குட்டிகள் 6 மாதத்தில் 20 கிலோ எடை கொண்டதாக வளருகிறது. அதாவது, இப்படி உருவாக்கப்படும் புதிய இன ஆடுகள் துரித வளர்ச்சி கொண்டதாகவும், இறைச்சியில் கூடுதல் சுவை கொண்டதாகவும் இருக்கின்றன. 

பண்ணை அமைத்து பயன் பெறலாம்: லாபம் தரும் ஆடு வளர்ப்பு

கிராமப்புற பொருளாதார மேம்பாட்டிற்கு பெரிதும் பயன்படும் ஆடு, மாடு, கோழி வளர்ப்பு பெரிய அளவில் இல்லாமல் சிறிய அளவில் இருப்பதால் தான் இவைகளின் மூலமாக பெறப்படும் பொருளாதாரமும் சொற்ப அளவிலேயே முடங்கி விடுகின்றன.

பெரிய பண்ணையாக அமைத்து அவற்றின் மூலம் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க வழி வகை செய்கிறது. இது குறித்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே ஓடத்துரை கிராமத்தில் உள்ள நவலடி ஆட்டுப் பண்ணையின் நிர்வாகியான செல்வராஜ் (சிவில் என்ஜினீயர்) கூறியதாவது:–

ஆழ்கூள முறை ஆடு வளர்ப்பு, கொட்டில் முறை ஆடு வளர்ப்பு போன்ற நுட்பங்கள் கடந்த சில ஆண்டுகளாக மக்களிடம் பரவி அந்த தொழில் நுட்பங்கள் கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

வெள்ளாடு வளர்க்க குறைந்த அளவில் முதலீடு போதுமானது. கொட்டகை வசதி மற்றும் பராமரிப்பு செலவு குறைவு. அதாவது சிறிய அளவில் 25 ஆடுகள் கொண்ட ஆட்டுப்பண்ணை அமைக்க குறைந்த பட்சம் ரூ. 1 லட்சம் போதுமானது. 25 தலைச்சேரி ஆடுகளுக்கு ஒரு போயர் கிடாய் போதுமானது. தலைச்சேரி ஆடுகளை கேரளாவில் மலபாரில் இருந்தும் போயர் (தென்னாப்பிரிக்கா இனம்) கிடா புனேயில் இருந்தும் வழங்கப்படுகிறது.

25 ஆண்டுகளுக்கு தீவனம் வளர்க்க ஒரு ஏக்கர் நிலம் தேவை. 25 ஆடுகளை பராமரிக்க ஒரு ஆள் போதும். பண்ணையில் வளர்ப்பதற்கு தலைச்சேரி ஆடுகளும், போயர் கிடாய்களும் மிகச் சிறந்தது ஆகும். தலைச்சேரி இனத்துடன் போயர் கிடாயை இனக்கலப்பு செய்து பெறப்படும் இனம் மிக தரமானதாக இருக்கும்.

25 தலைச்சேரி ஆட்டிற்கு ஒரு போயர் கிடாய் போதும். 25 ஆட்டிற்கு ரூ.1.50 லட்சமும், சாதாரண கொட்டகை அமைக்க ரூ.25 ஆயிரம் தேவைப்படும். 25 ஆடுகள் வளர்க்க தேவையான தீவனம் பயிரிட ஒரு ஏக்கர் தேவை. தீவனத்தை தென்னந்தோப்பில் ஊடுபயிராக இடலாம்.

கொட்டிக்கொடுக்கும் கொட்டில்

ராஜ் டேனியல் (அலைபேசி 0451 2421057) பயிற்றுனர் ஆடு வளர்ப்பு பற்றி கூறுகையில் கால்நடை வளர்ப்பு என்பது இந்தக் காலத்தில் மிகவும் கடினமாகிக் கொண்டே வருகிறது. வெள்ளாடு உள்ளிட்டவைகளை கொட்டில் முறை ஆடு வளர்ப்பு மூலம் வளர்ப்பது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. ஆடுகளை வெளி இடங்களில் வளர்க்காமல், ஒரே இடத்திலேயே வைத்து வளர்ப்பது தான் கொட்டில் முறை.

கொட்டில் முறையில் வளர்க்கும் போது அலைச்சல் இல்லாததால் சீக்கிரம் உடல் பெருக்கும். தீவனத் தேவை குறையும்.

கொட்டில் முறையில் ஆடுகளை வளர்க்க விரும்புறவங்க, முதல்ல ரெண்டு ஏக்கர் அளவுக்காவது தண்ணீர் வசதியுள்ள தோட்டத்தைத் தயார்படுத்திக்கணும். அகத்தி, சூபாபுல், வேலி மசால் இதையெல்லாம் வேலியா நடலாம். கம்பி வேலி அமைச்சாலும் ரொம்ப நல்லது. ஒரு ஏக்கர் அளவுல பசுந்தீவனங்களை கட்டாயம் பயிர் பண்ணனும். மீதி இடங்களை ஆடு வளர்ப்புக்குத் தயார் பண்ணிக்கலாம். பசுந்தீவனம் வளர்க்கற இடம், ஆடுகள் இருக்கற இடம் ரெண்டுக்கும் நடுவுலயும் வேலி அமைக்கணும்.

20 பெட்டை, ஒரு கிடா கொண்ட கூட்டத்தை ஒரு யூனிட்டுன்னு சொல்வோம். வளர்ந்த ஒரு பெட்டை ஆட்டுக்கு, பதினைந்து சதுர அடி இடம் தேவை. கிடா, சினை ஆடு, குட்டிப் போட்ட ஆடுகளுக்கு இருபது சதுர அடி தேவைப்படும். ஆக, ஒரு யூனிட்டுக்கு 20 வளர்ந்த பெட்டைகள், 1 கிடா, பத்து பதினைந்து குட்டிகள்ன்னு கணக்குப் போட்டா.. சுமாரா 650 சதுர அடியில செவ்வக வடிவமான கொட்டில் தேவைப்படும். வளர்ற குட்டிகளை வைக்கறதுக்கு 200 சதுர அடியில தனியா ரெண்டு கொட்டில், நோய் தாக்கின ஆடுகளுக்குன்னு 200 சதுர அடியில இரண்டு கொட்டில்களும் கட்டாயம் தேவைப்படும். மொத்தமா 1,450 சதுர அடி (3.32 சென்ட்) வேணும்.

தரையிலிருந்து உயரமாக பெரிய கொட்டில் மட்டும் தரையிலிருந்து 5 அடி உயரத்தில் இருக்குற மாதிரி பாத்துக்கணும். ஆடுங்க ஏறும் போது சறுக்காம இருக்குறதுக்கு மரத்துலயே படிகள் வைக்கலாம். கொட்டிலை உயரமா அமைக்கறதுக்கு கான்கிரீட் தூண், இல்லைன்னா பனை மரத்தைப் பயன்படுத்தலாம். உயரம் கம்மியா இருந்தா, ஆடுகளோட கழிவுல இருந்து வெளிய வர்ற வாயுக்களால ஆடுகளுக்கு மூச்சுத்திணறல் வரும். சுத்தம் செய்யுறதுக்கும் கஷ்டமாப் போயிடும்.  சின்னச்சின்ன கொட்டில்களை தரையிலயே வெச்சுக்கலாம். எத்தனை யூனிட் அமைச்சாலும் நாலு பக்கமும் முப்பதடி இடைவெளி விட்டு, கட்டாயம் வேலி இருக்கணும். இந்த இடைவெளியில் தினமும் காலை நேரத்துல வெயில் படுற மாதிரி, ஆடுகளை மேய விடலாம். நோய், நொடிகள் வரும் போது அவற்றைக் கவனித்து உரிய மருந்துகளைக் கொடுக்கவேண்டும்.

கொட்டிலுக்குக் கூரையா தென்னை, பனை ஓலைகளை வெச்சா, குளிர்ச்சியா இருக்கும். ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்டா, வெப்பம் அதிகமா இருக்கும். எல்லாக் கொட்டில்களுக்குமே பக்கவாட்டு அடைப்புக்கு மூங்கில் தப்பைகளையே பயன்படுத்தலாம். அடிப்பாகத்துக்கு, சாதாரண மரப்பலகையே போதுமானது. வரிசையா மரப்பலகைகளை சீரான இடைவெளி விட்டு இணைச்சு ஆணி அடிக்கணும். பலகைகளோட இருந்தாத்தான் வளையாம இருக்கும் பலகைகளை சேக்குறதுக்கு முன்னாடி குரூட் ஆயில்ல ஊறவெச்சுட்டா.. சிறுநீர், கழிவுகளால பலகைக்கு பாதிப்பு வராது. ஊறவும் செய்யாது. இடைவெளி வழியாக் கழிவுகள் கீழே விழுந்திடும். அதனால கழிவுகளை சேகரிக்கிறதுக்கு சுலபமாயிடும்.

செம்மறியாடு வளர்ப்பு :: பண்ணை சார் தொழில்

செம்மறியாடு வளர்ப்பு:
செம்மறியாடு பல வித உபயோகமுள்ள நூல், இறைச்சி, பால், தோல் மற்றும் உரம் ஆகிய  பயன்களை தரக்கூடியது. இது வறண்ட மற்றும் பகுதி வறண்ட மற்றும் மலைப் பகுதிகளில் ஊரக பொருளாதாரத்தை உயர்த்தும் முக்கியமான பகுதியாக உள்ளது. ஆட்டிலிருந்து கிடைக்கும் உல்லன் நூல் மற்றும் ஆடுகளை விற்பதால் வருமானத்திற்கு ஒரு ஆதாரமாக வெள்ளாடு வளர்ப்பு விளங்குகிறது. இதனுடைய பயன்கள் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

 1. செம்மறியாடுகளுக்கு என்று தனிப்பட்ட முறையில் பெரிய அளவில் கூடாரம் அமைக்க வேண்டியதில்லை. குறைந்த அளவு ஆட்களே பராமரிக்க போதுமானது.
 2. அடிப்படை பண்ணை அமைப்பது மிகவும் செலவு குறைந்தது. அதிலிருந்து வெள்ளாடு கூட்டத்தை விரைவில் அதிகப்படுத்தலாம்.
 3. செம்மறியாடு புல்லைத் தின்று நமக்கு இறைச்சியையும், உல்லன் நூலையும் தருகிறது.
 4. இலை பல வகையான செடிகளை உண்டு வளருகின்றன இவை களைகளை பெருமளவில் அழிக்கின்றன.
 5. வெள்ளாடுகள் போல் அல்லாமல், செம்மறியாடுகள் மரத்தை அதிகளவில் சேதப்படுத்தும்.
 6. ஆடு வளர்ப்பவர்களுக்கு, உல்லன் நூல், இறைச்சி மற்றும் உரம் ஆகிய மூன்று வகைகளில் வருமானத்தைத் தருகிறது.
 7. இதனுடைய உதட்டு அமைப்பின் உதவியினால் அறுவடை நேரத்தில் தானியங்களை சுத்தம் செய்ய முடியும். வீணாகப்போகும் தானியத்தை நல்ல பயனுள்ள பொருட்களாக மாற்ற முடியும்.
 8. மட்டன் என்பது ஒரு வகை இறைச்சியாக இந்தியாவில் இருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்த அதிகளவில் மட்டன் உற்பத்தி செய்யும் இனங்களை பெருக்க வேண்டும்.
1997 ஆம் ஆண்டு கால்நடை கணக்கெடுப்பின் படி, நம் நாட்டில் 56.8 மில்லியன் செம்மறியாடுகள் உள்ளன, மற்றும்உலகளவில் 6 வது  இடத்தைப் பெற்றுள்ளது. 2001 -02 ஆம் ஆண்டிலிருந்து உல்லன் நூல் உற்பத்தி 50.709 மில்லியன் அளவும், தோலுடன் கூடிய உல்லன் நூல் 524 மில்லியன் டன்னும், செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளின் இறைச்சி 700500 மி. டன்னும். புத்தம்புது செம்மறியாடுகள் 52800 மி. டன்னும் இருந்தது. 1994-95 ம் ஆண்டிலிருந்து உல்லன் நூலின் ஏற்றுமதியினால் கிடைக்கும் வருமானம் 25773 மில்லியன் ரூபாயக இருக்கிறது. செம்மறியாட்டிலிருந்து இறைச்சி உற்பத்தி 14 சதவீதம் உள்ளது. செம்மறியாட்டிலிருந்து இறைச்சி ஏற்றுமதி 8 சதவீதமாக வேளாண் பொருட்களின் மொத்த ஏற்றுமதியில் இருக்கிறது. உயிருடன் உள்ள செம்மறியாடும் இறைச்சி பயன்பாட்டிற்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது. செம்மறியாட்டின் தோலானது தோல் மற்றும் தோல் பொருட்களாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சமூகத்தின் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மக்களுக்கு செம்மறியாடு வளர்ப்பு நல்ல வருமானத்தை தருகிறது. செம்மறியாடு வளர்ப்பை மேம்படுத்தும் திட்டங்களாவன: வறட்சி மேம்பாட்டு திட்டம், குறு விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள் மற்றும் சிறு விவசாயிகள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள். தீவிர செம்மறியாடு மேம்பாட்டுத் திட்டம் செம்மறியாடு வளர்க்கும் மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உல்லன் நூல் உற்பத்தி செய்யும் மாவட்டங்களில் உல்லன் நூல் வாரியம் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர், மற்றும் கர்நாடகா மாவட்டங்களில் இந்த வாரியம் முன்பே அமைக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் உல்லன் நூல் மேம்பாட்டு நிறுவனங்கள் /கூட்டமைப்புகள் உள்ளன.
இந்தியாவில் மாநிலங்கள் வாரியாக உள்ள செம்மறியாடுகளின் எண்ணிக்கை – 1997

வ.எண்
மாநிலம் / யூனியன் பிரதேசம்
மொத்தம்
1.
ஆந்திரப் பிரதேசம்
9743
2.
அருணாச்சலப் பிரதேசம்
27
3.
அஸ்ஸாம்
84
4.
பீகார்
1956
5.
சட்டீஸ்கர்
196
6.
கோவா
0
7.
குஜராத்
2158
8.
ஹரியானா
1275
9.
ஹிமாச்சலப் பிரதேசம்
1080
10.
ஜம்ம & காஷ்மீர்
3170
11.
கர்நாடகா
8003
12.
கேரளா
3
13.
மத்திய பிரதேசம்
657
14.
மகாராஷ்டிரா
3368
15.
மணிப்பூர்
8
16.
மேகாலயா
17
17.
மிசோரம்
1
18.
நாகலாந்து
2
19.
ஒரிசா
1765
20.
பஞ்சாப்
436
21.
ராஜஸ்தான்
14585
22.
சிக்கிம்
5
23.
தமிழ்நாடு
5259
24.
திரிபுரா
6
25.
உத்திரப் பிரதேசம்
1905
26.
உத்தராஞ்சல்
311
27.
மேற்கு வங்காளம் யூனியன் பிரதேசங்கள்
1462
28.
அந்தமான் & நிக்கோபர் தீவுகள்
0
29.
சண்டிகர்
0
30.
தாத்ரா & ஹவேலி
0
31.
டெல்லி
11
32.
லட்சத்தீவு
0
33.
பாண்டிச்சேரி
2
இந்தியா முழுவதும்
57494
வ.எண்
மாநில செம்மறியாடு மற்றும்உல்லன் நூல் வாரியங்கள் /கூட்டமைப்புகள் /நிறுவனங்கள்
1.
அப்கோ உல்லன் நூல், 3-5-770. நெசவாளர்கள் இல்லம், நாரயன் குடா, ஹைதராபாத் – 500 029 (ஆந்திரபிரதேசம்)
2.
குஜராத் செம்மறியாடு மற்றும் உல்லன் நூல் மேம்பாட்டு நிறுவனம்  (லிமிடெட்)
“஼குஞ்ச்” நாரயணகுப்தா தொலைபேசி எக்ஸ்சேஞ்ச் எதிரில், எல்லிஸ் பிரிட்ஜ்,
அகமதாபாத் – 380 006  (குஜ்ராத்)
3.
ஹிமாச்சல் பிரதேச மாநில கூட்டுறவு உல்லன் நூல் கொள்முதல் மற்றும் விற்பனை  கூட்டமைப்பு லிமிடெட்
பசுதான் இல்லன், பொய்லாயூகாஞ்ச, சிம்லா – 171 005 ( ஹிமாச்சல பிரதேசம்)
4.
ஜம்மு & காஷ்மீர் மநரில செம்மறியாடு மற்றும் செம்மறியாட்டு பொருட்கள் மேம்பாட்டு வாரியம், கர்த்தோலி, பிராமணா, ஜம்மு – 181 133 ( ஜம்மு & காஷ்மீர்)
5.
கர்நாடகா செம்மறியாடு மற்றும் செம்மறியாட்டு பொருட்கள் மேம்பாட்டு வாரியம், எண் – 58, 2வது மெயின் ரோடு, வயலிக்காவல், பெங்களூர் – 560 003 ( கர்நாடகா)
6.
மகாராஷ்டிரா மெந்தி வா கொல்லி விகாஸ் மகாமந்தல் லிமிடெட் மெந்தி பண்ணை. கோகலே நகர், புனே – 411 016 (மகாராஷ்டிரா)
7.
ராஜஸ்தான் மாநில கூட்டுறவு செம்மறியாடு & உல்லன் நூல் விற்பனை கூட்டமைப்பு லிமிடெட், காந்தி நகர், டோங்க் சாலை, ஜெய்பூர் – இராஜஸ்தான்
8.
உத்திரப்பிரதேச கோழிப்பண்ணை & கால்நடை சிறப்பு நிறுவனம் கால்நடை வளர்ப்பு இயக்ககம், பாதுஷா பாஸ், கோராஸ் நாத் சாலை, லக்னோ - உத்திரபிரதேசம்

ஒருங்கிணைந்த பண்ணையத்தில் உற்பத்தி மற்றும் செலவுகள்

வேளாண் காலநிலைக்கேற்ப ஒருங்கிணைந்த பண்ணையமானது நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதாவது மழை, மண் வகைகள் மற்றும் விற்பனைத் தேவை போன்ற இயற்கை ஆதாரங்களின் மூலம்  நடைமுறைப்படுத்தப்படுகிறது. வேளாண் சூழலியல் மற்றும் பயிர்முறை போன்றவற்றின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள வேளாண் காலநிலை மண்டலத்திற்கு பண்ணையம் மாறுகிறது.
1.  மேற்கு மண்டலம்
 • நன்செய்
பயிர் + மீன் பண்ணை + கோழிப்பண்ணை + காளாண் வளர்ப்பு
 • இறவைப்பகுதி
உயிரி வாயு உற்பத்தி + காளாண் + பால் கறக்கும் கால்நடை
 • மானாவாரிப் பகுதி
பயிர் உற்பத்தி + தீவனப்பயிர் + மரங்கள்
2.  வட மேற்கு மண்டலம்
சாகுபடிபயிர் + பால் கறக்கும் பசுக்கள் + கோழிப்பண்ணை 
(6 அடுக்குகள்)

3.  மலைப்பிரதேசம்
சாகுபடிபயிர் + பால் கறக்கும் பசுக்கள் + கோழிப்பண்ணை 
(6 அடுக்குகள்) + இறைச்சிக் கோழிகள்

4.  காவேரி டெல்டா மண்டலம்
 • நெற் பயிர் + பால் கறக்கும் பசுக்கள்
 • நெற் பயிர் + வாத்து வளர்ப்பு + மீன் வளர்ப்பு
 • நெற் பயிர் + ஆடு வளர்ப்பு
5. தெற்கு மண்டலம்
நெல் சார்ந்த பயிர் + மீன் வளர்ப்பு + கோழிப்பண்ணை 
ஒருங்கிணைந்த பண்ணையம் உற்பத்தி மற்றும் செலவுகள்

ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் புறா வளர்ப்பு

புறாக்களின் எண்ணிக்கை   
:40 ஜோடிகள்
40 ஜோடிகளில் உருவாக்கப்படும் புறாக்குஞ்சுகளின்  எண்ணிக்கை  :46 /  மாதம்
ஒரு மாத புறாக்குஞ்சுகளின் எடை  :350 கிராம்
புறா இறைச்சியின் விலை     :ரூ. 80 / கிலோ
வருவாய் /  மாதம் :ரூ. 1,288
வருவாய் /  வருடம் :ரூ. 15,456

இனிக்கும் இளநீர்.. கொழிக்கும் மகசூல்..!

தென்னை செழித்தால்.. பண்ணை செழிக்கும் என்று கிராமத்தில் சொல்வார்கள். அதை உண்மையாக்கி, தனது வாழ்க்கையையும் செழிப்பாக்கி இருக்கிறார், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி தென்னை விவசாயி ராஜேந்திரன். பொள்ளாச்சி பகுதியே செழிப்பான பூமி. அதிலும் ஆழியார் அணையை ஒட்டிய பகுதி என்றால், கேட்கவா வேண்டும், இங்கே இருக்கும் புளியங்கண்டி பகுதியில்தான் பசுமை கட்டி நிற்கிறது, ராஜேந்திரனின் தென்னந்தோப்பு. 

இங்கு மட்டுமல்ல பகுதி முழுக்கவே தென்னந்தோப்புகள் செழிப்பாகத்தான் நிற்கின்றன. ஆனால், தென்னையில் பெரிதாக லாபம் இல்லை என்பதுதான் பெரும்பாலான விவசாயிகளின் குரலாக இருக்கிறது. அது நூற்றுக்கு நூறு உண்மை என்பது போலத்தான் தேங்காயின் விலை நிரந்தரமாக 2 ரூபாய் 3 ரூபாய் என்றே நீடித்துக் கொண்டிருக்கிறது! ஏதோ வரவுக்கும் செலவுக்கும் சரி என்கிற வகையில்தான் பலரும் தென்னை விவசாயத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய நிலையில், ராஜேந்திரன் மட்டும் எப்படி தென்னை விவசாயத்தில் லாபத்தை சாத்தியமாக்கிக் கொண்டிருக்கிறார்? மஞ்சளும், பச்சையுமான இளநீர் குலைகளை ஆட்கள் லாரியில் ஏற்றிக்கொண்டிருக்க அதைக் கணக்கெடுத்துக் கொண்டிருந்த ராஜேந்திரன், லாரிகளை அனுப்பிவிட்டு வந்து, நம்மிடம் அமர்ந்தார்.

பொள்ளாச்சி காய்க்கு நல்ல கிராக்கி!
எனக்கு பூர்வீகமே இந்த ஊர்தான். எங்க பகுதியில் விளையும் தேங்காய்க்கும், இளநீருக்கும் தமிழ்நாடு முழுக்க நல்ல வரவேற்பு இருக்கு. பொள்ளாச்சி மண்ணிற்கும், இங்கே கிடைக்கும் தண்ணீருக்கும், சீதோஷ்ணத்திற்கும் தென்னை நன்றாக வளர்கிறது. அதிலும் இளநீர் சக்கைப் போடு போடுதுங்க என்றார். ஊரைச்சுற்றி எனக்கு நிறைய தென்னந்தோப்பு இருக்கிறது. ஒரு இடத்தில் இருக்கும் ஆறு ஏக்கர் தோப்பில் 30 வயதில் நாட்டுத் தென்னை மரங்கள் இருக்கு. அதில் கிடைக்கும் காயை கொப்பரைக்கு பயன்படுத்துகிறோம்.

உரக்குழி அமைப்பது எப்படி?


மரங்களுக்கு தேவையான உரத்தை மரங்களே பெற்றுக் கொள்ளுமாறு செய்துகொள்ளலாம்.

உதாரணமாக இரண்டு தென்னை / பழ மரங்களுக்கு நடுவே 4 அடி நீளம், 2 அடி அகலம், 2 அடி ஆழம் கொண்டதாக குழி எடுக்கவேண்டும் இரு மரங்களுக்கு நடுவே இருக்கும் இடைவெளியைப் பொறுத்து குழியின் நீளத்தைக் கூட்டிக்கொள்ளலாம்.
குழிகளில் தேவையற்ற வாழை(இலை,தண்டு) மரங்களைத் துண்டு துண்டாக வெட்டிப் போட வேண்டும். அதன் மீது எதன் இலை, தழை கிடைத்தாலும் போடலாம். வேப்ப இலையைச் சேர்த்துப் போட்டால் பூச்சித் தாக்குதல் இருக்காது.
இப்படி இலை, சருகுகள், காய்கறி,பழ கழிவுகள், கால்நடைக் கழிவுகள், மழைநீர் என அடுத்தடுத்து சேர்ந்து குழி முழுமையாக நிரம்பியதும், தென்னை மட்டைகளை படுக்கை வரிசையில் அடுக்கவேண்டும். உரக்குழியில் உள்ள சத்து நீர் ஆவியாகாமல் இருக்கத்தான் இந்த ஏற்பாடு. குழியில் உள்ள இயற்கைப் பொருட்கள், மண்ணோடு மண்ணாக அமுங்க ஆரம்பித்ததும், மட்டை அடுக்கின் மீது மண் போட்டு, அதையும் அமுக்கவேண்டும்.
மரங்கள், செடி, கொடிகள் தங்களுக்குத் தேவையான சத்துக்களை இந்த உரக்குழிகளில் இருந்தே எடுத்துக் கொள்ளும் மூன்றாண்டுகளுக்குத் தேவையான இயற்கை உரம் இதிலிருந்து கிடைத்து விடும். சில மாதங்கள் கழித்து கிளறிப் பார்த்தால் மண்புழுக்கள் நிறைந்திருக்கும்.
தொட்டி செடிகளுக்கு தேவையான உரத்தையும் இங்கிருந்தே எடுத்துக்கொள்ளலாம்.

பஞ்சகவ்யம்


பஞ்சகவ்யம் என்பது பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களால் உருவாக்கப்படும் ஒரு உயிரி நீர்மக்கலவை. இது இயற்கை வேளாண்மையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிலஊட்டப் பொருள்(உரம்) ஆகும். பஞ்சகவ்யம் – பஞ்ச என்றால் ஐந்து மற்றும் கவ்யம் என்றால்

பசுவிடமிருந்து என பொருள்படும். பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்கள் – 1)சாணம் 2) கோமியம் 3) பால் 4) நெய் 5) தயிர்

இவை ஐந்தையும் சரியான விதத்தில் கலந்து தயாரிக்கப்படுவதே பஞ்சகவ்யம். இது இந்து சமய இறை வழிபாட்டின்போது முக்கிய பூசை பொருளாகவும், ஆயுர் வேத வைத்தியம், வேளாண்மை பயிர் பாதுகாப்பிலும் பயன்படுகிறது. பயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறையைப் பயிற்றுவிப்பதும், விற்பனை செய்வதும் மெல்ல மெல்ல புகழடைந்து வருகிறது.

தயாரிப்பு முறை
தேவையான பொருட்கள்
1. பசுஞ்சாணம்-5 கிலோ,
2. பசுவின் கோமியம்-3 லிட்டர்,
3. பசும்பால்-2 லிட்டர்,
4. பசு தயிர்-2 லிட்டர்,
5. பசு நெய்-1 லிட்டர்,
6. கரும்புச்சாறு-1 லிட்டர்,
7. தென்னை இளநீர்-1 லிட்டர்,
8. வாழைப்பழம்-1 கிலோ.

பசுஞ்சாணம் 5 கிலோவுடன் பசுமாட்டு நெய் 1லிட்டர் கலந்து பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் 3 நாட்கள் வைத்து தினமும் ஒரு முறை பிசைந்துவிட வேண்டும்.

• 4வது நாள் மற்ற பொருட்களுடன் இவைகளை ஒரு வாயகன்ற மண்பானை அல்லது சிமென்ட் தொட்டி அல்லது பிளாஸ்டிக் தொட்டியில் இட்டு கையால் நன்கு கரைத்து கம்பிவலையால் மூடி நிழலில் வைக்க வேண்டும்.

ஊருக்கே வழி சொல்லும் ஒருங்கிணைந்த பண்ணையம்!

கம்மஞ் சோறு, கருவாட்டுக் குழம்பு, பம்புசெட் குளியல், ஆத்தோர ஆலமரம், மாட்டுக் கழுத்து மணிச் சத்தம், தெருவையே திடலாக்கி விளையாடும் சிறுசுகள், மார்கழி மாசத்து கோலம், பூசணிப் பூ…

- கிராமத்துப் பாரம்பரிய விஷயங்களை இப்படிப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
இவற்றையெல்லாம் நேரில் பார்க்கலாமே என்று நீங்கள் இப்போது கிராமங்களுக்குப் பயணப்பட்டால்… ஏமாந்துதான் போவீர்கள். திரைப்படங்களில் மட்டுமே இதையெல்லாம் பார்க்க முடியும் என்கிற நிலையை கிட்டத்தட்ட உருவாக்கி வைத்திருக்கிறது நவீன நுகர்வு கலாச்சாரம். கிராமங்களும் கூட பாரம்பரியத்தைப் பறக்கவிட்டு, நகரத்தை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இத்தகையதொரு காலகட்டத்தில், “கிராமம்தான் எந்நாளும் எல்லோரையும் வாழவைக்கும்” என்றபடி பட்டணத்திலிருந்து பட்டிக்காட்டுக்குத் திரும்பியதோடு, ‘இயற்கை விவசாயம்… ஒருங்கிணைந்த பண்ணையம்…’ என்று அசத்தலாக புது வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறது நவநாகரிக காதல் தம்பதி ஒன்று.

தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள ஆச்சான்பட்டியைச் சேர்ந்தவர் செந்தமிழன் (அலைபேசி: 97917-54596). பத்திரிகையாளர், சினிமா கதாசிரியர், குறும்பட இயக்குனர் என பல பரிமாணங்களைக் கொண்டவர். பத்திரிகையாளர், கல்லூரி விரிவுரையாளர் என்று தானும் சளைக்காமல் பன்முகம் கொண்டவர்தான் இவரின் மனைவி காந்திமதி. சென்னைப் பட்டணத்தின் காபி ஷாப், ஷாப்பிங் மால், பீச், சத்யம் சினிமா காம்ப்ளக்ஸ் என்று சொகுசு வாழ்க்கையை விட்டொழித்துவிட்டு, இப்போது ஆச்சான்பட்டியின் நிரந்தரவாசிகளாக பிறப்பெடுத்திருக்கின்றனர் இருவரும்.
நிலம் தரும் நம்பிக்கையை வேற எதுவும் தராது!

“பத்திரிகை, சினிமானு பரபரப்பான வாழ்க்கை ஒரு கட்டத்துல சலிப்பையும், சித்ரவதையையும் கொடுக்கத் தொடங்கிச்சி. நான் விவசாயக் குடும்பத்துல இருந்து வந்தவன்ங்கிறதும் அதுக்கு ஒரு காரணம். அதுமட்டுமில்ல… ஜப்பானிய இயற்கை வேளாண் விஞ்ஞானி மசானபு ஃபுகாகோ எழுதின ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ புத்தகத்தைப் படிச்சது, எனக்குள்ள ரொம்ப மாற்றத்தைக் கொண்டு வந்துச்சி. தமிழர் மரபு, பண்டைய விவசாயம் பத்தின புத்தகங்கள், செம்மறி ஆடு மேய்க்கறவங்களோட வாழ்க்கை முறையை மையமா வெச்சி, நான் இயக்கின ‘ஆடோடிகள்’ குறும்படம் எல்லாமும் சேர்ந்துதான் என்னை கிராமத்துக்கு திரும்ப வெச்சிடுச்சி.