விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதால் எள் பயிரில் சராசரியாக 2 ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது’
எள் பயிரிடும் விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய சிறந்த தொழில்நுட்பங்கள்:
பருவம் மற்றும் ரகங்கள்:
- மானாவாரி வைகாசி மற்றும் ஆடிப் பட்டங்களில் டி.எம்.வி. 3, வி.ஆர்.ஐ. 1 மற்றும் கோ 1,
- கார்த்திகை பட்டங்களில் டி.எம்.வி. 3, வி.ஆர்.ஐ. 1, கோ 1 மற்றும் எஸ்.வி.பி.ஆர். 1,
- மேலும் இறவை தை-மாசி பட்டங்களில் டி.எம்.வி 3.6, கோ.1, வி.ஆர்.ஐ 1, பையூர் 1,
- பங்குனி சித்திரை பட்டங்களில் டி.எம்.வி. 3.4, கோ.1, வி.ஆர்.ஐ. 1, எஸ்.வி.பி.ஆர். 1.
நிலம் தயாரித்தல்:
- நிலத்தை டிராக்டரில் ஆவ உழும் கலப்பையால் 2 அல்லது 3 முறை புழுதிபட உழ வேண்டும்.
- ஏர் கலப்பையைக் கொண்டு நிலத்தை 5 அல்லது 6 முறை உழுது தயார் செய்ய வேண்டும்.
- நிலத்தின் மேல்மட்டத்தில் நீர் புகாத கடின மண்பகுதி ஏற்பட்டிருந்தால் 3 வருடங்களுக்கு ஒரு முறை உளி கலப்பையால் 2 அடி ஆழம் உழுது நிலம் தயார் செய்ய வேண்டும்.
- மண்வெட்டி கொண்டு மண்ணை கட்டிமுட்டி இல்லாமல் உடைத்து நிலத்தை தயார் செய்ய வேண்டும்.
- ஏக்கருக்கு கடைசி உழவில் 10 வண்டி(5டன்) தொழுஉரம் இட வேண்டும்.
- நிலத்தின் சரிவை பொருத்து 30 அடி முதல் 60 அடி நீளம் வரை அளவுகள் உள்ள சிறிய பாத்திகளை அமைத்து நிலம் தயார் செய்ய வேண்டும்.
- நிலத்தில் நீர் தேங்காவண்ணம் சமமாக தயார் செய்ய வேண்டும்.
விதையளவு:
- அனைத்து ரகங்களுக்கும் ஏக்கருக்கு 2 கிலோ விதை போதுமானதாகவும் விதையை மணலுடன் கலந்து சீறாக தூவ வேண்டும்.