Monday, November 28, 2011

செம்மறி ஆடு வளர்ப்பு

செம்மறி ஆட்டினங்கள்
ராமநாதபுரம் வெள்ளை, கீழக்கரிசல், நீலகிரி, திருச்சி கருங்குரும்பை, மேச்சேரி, மெரினோ.
உள்ளூர் இனங்கள் - இது வெவ்வேறு இடத்தைப் பொறுத்து மாறும்
· மெரினோ - கம்பளிக்கு உகந்தது
· ராம்பெளலட் - கம்பளி மற்றும் கறிக்கு ஏற்றது.
· சோவியோட் - கறிக்கு ஏற்றது
· செளத் டான் - கறிக்கு ஏற்றது
நல்ல தரமான இன வகைகள், ஆட்டுத் தொழுவம் அமைப்பது, வளமான செம்மறி ஆடுகள் உற்பத்தி போன்றவற்றைப் பற்றி ஏதேனும் விபரம் தேவைப்பட்டால் அருகில் உள்ள கால்நடை பராமரிப்பு மையத்தையோ அல்லது வேளாண் அலுவலகத்தையோ அணுகவும்.



நிலம் அதிகமாக இருக்குமெனில், செம்மறி ஆடுகளை மேயவிட்டும், வீட்டில் தொழுவத்தில் பராமரித்தும் வளர்க்கலாம். வறட்சியான மற்றும் மானாவாரி நிலம் சார்ந்த பண்ணையத்தில், செம்மறி ஆடு வளர்ப்பு ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. சிறு மற்றும் குறுநில விவசாயிகள், நிலமற்ற வேளாண் தொழிலாளிகள், குறைந்த முதலீடு செய்து நிறைய லாபம் பெறலாம்.
நன்மைகள்
· அனைத்து சூழலுக்கும் ஏற்றதாகும். அதிகப்படியான பராமரிப்பு அவசியம் இல்லை.
· கறியின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது
· உரோமம் கம்பளி தயாரிக்கவும் மற்றும் கறி இறைச்சிக்காகவும் பயன்படுகிறது.
· சராசரியாக ஒவ்வொரு முறையும் 1-2 குட்டிகள் ஈனுகிறது.
·ஒரு ஆட்டிலிருந்து சராசரியாக 22-30 கிலோ கறி கிடைக்கிறது.
· எருவை சேர்த்து நிலத்தை வளமாக்குகிறது.

வெள்ளாடு வளர்ப்பு

வெள்ளாடு “ஏழைகளின் பசு” என்று அழைக்கப்படுகிறது. இது மானாவாரி நிலம் சார்ந்த பண்ணையத் தொகுப்பின் முக்கிய அங்கம் ஆகும். மேட்டுப்பாங்கான, நிலங்களில் பசுக்களையும், எருமைகளையும் வளர்க்க இயலாது. எனவே இத்தகைய சூழலுக்கு ஆடுவளர்ப்பு உகந்தது. ஆடு வளர்ப்பில் குறைந்த முதலீட்டைக் கொண்டு நல்ல லாபம் பெறலாம்.

யார் தொடங்கலாம்?
  • நிலமற்ற மற்றும் குறுநில விவசாயிகள்.
  • மானாவரி மேய்ச்சல் நிலங்கள் உள்ள இடங்கள்
நன்மைகள்

  • ஆடு வளர்ப்பு அனைத்துச் சூழலுக்கும் ஏற்றதாகும். அதிகப் பராமரிப்பு தேவையில்லை. சிறிய இடம் மற்றும் எளிய கொட்டகை போதுமானது.
  • குறைந்த முதலீடு மற்றும் உடனடி வருவாய்
  • வெள்ளாட்டிலிருந்து பால் மற்றும் கறி ஆகிய இரண்டிலிருந்தும் வருமானம் கிடைக்கிறது.
  • ஒரு ஆட்டிலிருந்து சராசரியாக 22-30 கிலோ கறி கிடைக்கின்றது. அனைத்து விதமான மக்களும் உண்ணக் கூடிய இறைச்சி.
  • அதிகமான குட்டிகளை ஈனும் விகிதம். ஒவ்வொரு முறையும் சராசரியாக 2-3 குட்டிகளை ஈனுகிறது
  • நல்ல எரு கிடைக்கிறது.
  • வருடம்முழுவதும்வேலை

வெள்ளாட்டு இனங்கள்
சிறந்த இந்திய இனங்கள்
ஜம்நாபாரி - எட்டாவா மாநிலம், உ.பி
பீட்டல் - பஞ்சாப்
பார்பரி - உ.பி.யின் மதுரா மற்றும் ஆக்ரா பகுதிகள்
தெல்லிச்சேரி மற்றும் மலபாரி - வடகேரளா
சுர்தி - குஜராத்
காஷ்மீரி - ஜம்மு காஷ்மீர்
வங்காள ஆடு - மேற்கு வங்காளம்
இந்திய சூழலுக்கு ஏற்ற அயல்நாட்டு இனங்கள்
அங்கோரா, ஆல்பைன், சேனன், டோகன் பர்க், ஆங்ளோ நுபியன்

வெள்ளாடு இனங்களை தேர்வு செய்தல்
ஜமுனாபாரி.
  • நல்ல உயரமானவை
  • காதுகள் மிக நீளமனவை
  • ரொமானிய மூக்கமைப்பு கொண்டவை.
  • கிடா 65-85  கிலோ பெட்டை - 45-60 கிலோ.
  • பெரும்பாலான ஆடுகள் ஒரு குட்டியே மட்டும் ஈனும்
  • 6 மாத குட்டிகளின் எடை 15 கிலோ.
  • தினம் 2- 2.5 லிட்டர் பால் கொடுக்கும் திறன்
 

பணம் கொட்டும் "ஜமுனாபாரி' ஆடு வளர்ப்பு;ஆட்டின் விலை ரூ.50 ஆயிரம்




பாலமேடு: பணம் கொட்டும் "ஜமுனாபாரி' ஆடு வளர்ப்பில் மதுரை விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர். 80 கிலோ எடையுள்ள ஆட்டின் அதிகபட்ச விலை 50 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட ஜமுனாபாரி ஆட்டின் காதின் நீளம் ஒரு அடி; 10 இஞ்ச் அகலம். அழகான தோற்றம் கொண்டது. ஆண், ஆடுகள் ஐந்தடி உயரமும், பெண், ஆடுகள் நான்கடி உயரமும் சராசரியாக வளரக்கூடியது. வளர்ந்த ஆட்டின் எடை 80 கிலோ இருக்கும். ஆட்டின் கறி, மிருதுவாகவும், அதிக சுவையுடன் இருப்பதால் மாமிச பிரியர்களுக்கு ஜமுனாபாரி வரப்பிரசாதகமாக கருதப்படுகிறது. ஜமுனா பிரியாணி: முன்னணி அசைவ உணவகங்களில் வான்கோழி பிரியாணிக்கு தனி மவுசு உண்டு. இவ்வரிசையில் ஜமுனாபாரியும் இடம் பிடித்துள்ளது. முன்னணி அசைவ உணவகங்களில் ஜமுனாபாரி மாமிச வகைகளும் இடம் பெறுகிறது. ஒரு கிலோ தனிக்கறி 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கறியை விலைக்கு வாங்குவதை விட ஆட்டுக்குட்டிகளை விவசாயிகளிடம் கொடுத்து வளர்ப்போருக்கு அதிக லாபம் கிடைக்கிறது. மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு பகுதியில் ஜமுனாபாரி ஆடு வளர்ப்பில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.  ஏற்றுமதிக்கு உகந்தது:ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தைவான் மற்றும் அரேபிய நாடுகளுக்கு பதப்படுத்தப்பட்ட ஜமுனா ஆட்டுக்கறி ஏற்றுமதி செய்யப்படுகிறது. மதுரையில் வளர்க்கப்படும் ஆடுகள், சென்னை சைதாப்பேட்டைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு ஆட்டின் கறியை பதப்படுத்தி "டின்'களில் அடைத்து ஏற்றுமதி செய்கின்றனர். பண்டிகை காலங்களில் கறியும், பாலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பாலில் அதிக புரதச்சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு நன்கு காய்ச்சிய பாலை கொடுத்து வந்தால், குழந்தை ஆரோக்கியமாகவும், நோய் எதிர்ப்பு சக்தி மிக்கதாகவும் வளரும் என விவசாயிகள் கூறுகின்றனர். ஈத்துக்கு மூன்று குட்டி: பாலமேட்டை சேர்ந்த ஜமுனாபாரி பண்ணை மேலாளர் பட்டுராஜன், ஆடு வளர்க்கும் ராஜேந்திரன் (45) கூறும்போது, ""ஜமுனாபாரி ஆடுகள் ராஜஸ்தானில் அதிகளவு வளர்கிறது. அதிக உஷ்ணத்தை தாங்கும் திறன் கொண்டது. இதனால், இதில் நோய் எதிர்ப்பு அதிகம். கறியும், பாலும் வாரம் தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டை குறைத்து ஆரோக்கியத்தை வளர்க்கும். ஒரு ஈத்துக்கு மூன்று குட்டிகள் வரை ஈனும். 25 நாள் குட்டி ஒன்றின் விலை 6,000 ரூபாய். கருவுற்ற ஆட்டின் விலை 20 ஆயிரம் ரூபாய். பாசிப்பயறு, துவரை, உளுந்து தூசி மற்றும் கடலை புண்ணாக்கு உணவாக வைக்கப்படுகிறது. வியாபார நோக்கமின்றி சொந்த உபயோகத்துக்காக வளர்க்கிறோம்,'" என்றனர். விவரங்களுக்கு பட்டுராஜன்  மொபைலில் (97866 90370) தொடர்பு கொள்ளலாம்.

அறிவியல் ரீதியான ஆடு வளர்ப்பு







 

என் பெயர் ஐ.நாசர். நான் கோவை மாவட்டத்தில் கோட்டைப்பாளையம் கிராமத்தில் கரூர் வாலா ஆட்டுப்பண்ணை என்ற பெய ரில் கடந்த இரண்டு வருடங் களாக அறிவியல் ரீதியாக வெள் ளாடுகள் மற்றும் செம்மறியாடு களை வளர்த்து வருகின் றேன். முறையாக பயிற்சி பெற்று சிறந்த தொழில் நுட்பங்களைக் கடை பிடி த்து பண்ணையை தொடங்குவ தற்கு முன்பே பல வகை யான பசுந்தீவனங்களைப் பயிரிட்டு அறி வியல் ரீதியாக பராமரித்தால் “ஆடு வளர்ப்பு” ஒரு லாபக ரமான தொழில் என்பது நான் அனுபவ த்தில் உணர்ந்த உண்மை.

பசுந்தீவன உற்பத்தி: கோட்டைப்பாளையம் கிராமத்தில் மூன்று ஏக்கர் விவசாய பூமியை குத்தகைக்கு எடுத்து கோ 4 கம்பு நேப் பியர் ஒட்டுப்புல், கோ.எப்.எஸ்.29 தீவனச் சோளப்பயிர், வேலி மசால், குதிரைமசால் மற்றும் அகத்தி போன்ற பசுந் தீவனங்க ளைப் பயிரிட்டேன். ஆடுகளுக்கு தேவைப்படும் பசுந்தீவன அளவை கண க்குப் போட்டு, சிறிய சிறிய பாத்திகளை அமைத்து பசுந் தீவனங்களை முறையாகப் பயிரிட்டு வளர்ப்பதால் ஆண்டு முழுவதும் பசுந்தீ வனப் பற்றாக்குறை ஏற்படு வது இல்லை.
விற்பனை வழிமுறைகள்: நான் வியாபாரிகளுக்கு ஆடுகளை அறுப் பதற்கு விற்பனை செய்வதற்கு முன்பே எனது ஆடுகளை எடைபோட்டு, அதிலிருந்து வெட்டிய உடல் எடை எவ்வளவு கிடைக்கும் என்று கணக்குப்போட்டு என்னுடைய ஆட்டின் மதிப் பை தெரிந்து கொண்டு விலை நிர்ணயம் செய்துகொள்வேன். பிறகு வியாபாரியிடம் விற்பனை செய்யும் போது நான் நிர்ண யித்த விலைக்குக் குறைவாக ஆடுகளைக் கொடுக்க மாட்டேன். இவ்வாறு ஆடுகளை விற்பனை செய்வதால் அதிக 
லாபம் கிடைக் கிறது. மேலும் உயிருடன் ஆடுகளை விற்பதைவிட அவற்றை இறைச் சியாக மதிப்பூட்டி விற் பனை செய்யும்போது மேலும் அதிக லாபம் கிடை க்கும் என்பதை உணர்ந்து ஆடுகளை அறுக்க ஒரு இடத் தை ஏற்படுத்தி, போதிய வசதிகளைச் செய்து, தேவைப் படும்போது, ஆடுகளை அறுத்து இறைச்சி யாகவும் விற்பனை செய்கிறேன்.

ஆயிரங்களை அள்ளித்தரும் ஆடு வளர்ப்பு!



வான்கோழி, காடை, ஈமு என வகை வகையாக இறைச்சிகள் இருந்தாலும், நாட்டுக்கோழிக் கறிக்கும் வெள்ளாட்டுக் கறிக்கும் உள்ள மவுசு குறைவதேயில்லை. எப்போதுமே சந்தையில் அவற்றுக்கான கிராக்கி உச்சத்தில்தான். அவற்றின் விலையே இதற்கு சாட்சி. அதனால்தான் விவசாயத்தோடு சேர்த்து, ஆடு, கோழி என வளர்க்கும் பழக்கம் தொன்று தொட்டே தொடர்கிறது.

ஆரம்ப காலங்களில் நாட்டு ஆடுகள், நாட்டுக் கோழிகள் என்று இருந்ததெல்லாம் காலமாற்றத்திற்கு ஏற்ப கலப்பினங்களாக உருவெடுத்துவிட்டன. இத்தகைய கலப்பினங்கள் இருவகைகளில் உருவாக்கப்படுகின்றன.

ஆராய்ச்சிக் கூடங்களில் வெளிநாட்டு இனங்களோடு உள்நாட்டு இனங்களைக் கலப்பு செய்து வளர்ச்சி ஊக்கிகளை செலுத்தி அதிக இறைச்சி, கொழுப்புடன் கூடிய ஆடு, கோழி ரகங்களை உருவாக்குவது ஒரு விதம். இதற்கென சில கட்டுப்பாடுகள் உண்டு. பலவித சோதனைகளுக்குப் பிறகே இவை சந்தைப் பயன்பாட்டுக்கு வரும். இவற்றுக்குத் தனியாக பெயர்கூட வைப்பார்கள்.

அடுத்து… விவசாயிகளே நாட்டின் வேறு பகுதிகளை, மாநிலங்களைச் சேர்ந்த நாட்டு இனங்களை வாங்கி இயற்கையான முறையில் கலப்பு செய்து, புதிய ரகங்களை உருவாக்கிக் கொள்வது இன்னொரு விதம். இதற்குக் கட்டுப்பாடுகள் கிடையாது. மரபணு சோதனைகளோ, வேறு பிரச்சனைகளோ கிடையாது.

கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ள பலரும் பெருபாலும் இரண்டாவதான சிக்கலில்லாத இயற்கை முறையையே அதிகம் கடைப்பிடிக்கிறார்கள். குறிப்பாக தலைச்சேரி, ஜமுனாபாரி, சிரோஹி போன்ற வெளி மாநில ஆடுகளோடு நம் மாநில வெள்ளாடுகளைக் கலப்பு செய்து அதன் மூலம் நல்ல தரமான ஆடுகளை உற்பத்தி செய்து பலரும் லாபம் பார்க்கிறார்கள்.