புளி இரகங்கள் :
- பிகேஎம். 1, உரிகம், தும்கூர் மற்றும் ஹாசனூர்.
மண் மற்றும் தட்பவெப்பநிலை :
- மணல் கலந்த மண் இதன் வளர்ச்சிக்கு மிகவம் உகந்தது. வெப்பம் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரும்.
- சராசரி மழை அளவு வருடத்திற்கு 500 முதல் 1500 செ.மீ வரை போதுமானது, மானாவாரியாகப் பயிர் செய்ய ஏற்ற பயிர் ஆகும்.
பருவம் : ஜுன் – டிசம்பர்
விதையும் விதைப்பும்
இனப்பெருக்கம் : விதை, ஒட்டுக்கட்டிய செடிகள் மற்றும் மொட்டுக்கட்டுதல்.
இடைவெளி : 8-10 x 8-10 செ.மீ
நடவு :
- 1 மீட்டர் நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகள் எடுக்கவேண்டும்.
- குழிகளில் மேல் மண்ணோடு தொழு உரத்தைக் கலந்து குழிகளின் மத்தியில் செடிகளை நடவேண்டும்.
- ஒவ்வொரு குழிக்கும் 1.3 சதவீதம் லிண்டேன் மருந்து 50 கிராம் தூவவேண்டும்.
- செடிகளை நட்டவுடன் கன்றுகளைக் காற்றிலிருந்து பாதுகாக்க குச்சிகளை ஊன்றிக் கட்டிவிடவேண்டும்.
நீர் நிர்வாகம்
- கன்றுகள் நன்கு துளிர்த்து வளரும் வரை நீர்ப்பாய்ச்சவேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
- மானாவாரிப் பயிராக பயிரிடப்படுவதால் வழக்கமாக உரமிடுவது இல்லை. இருந்தாலும் அங்கக உரங்களை இட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி
- செடிகளின் ஒட்டுக்கு அடிப்பாகத்தில் தோன்றும் வேர்க்குச்சியின் துளிர்களை அவ்வப்போது அகற்றிவிடவேண்டும்.
- மற்றும் காய்ந்த நோய் தாக்கிய குச்சிகளையும் அகற்றவேண்டும்.
ஊடுபயிர் :
- கன்றுகள் வளர்ந்து விளைச்சலுக்கு வரும் வரை முதல் 4 ஆண்டுகளில் ஊடுபயிர்களைப் பயிர் செய்யலாம்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
- இலைத்தின்னும் புழு :எண்டோசல்பான் அல்லது மோனோகுரோட்டோபாஸ் 2 மில்லி 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
- சாம்பல் நோய் : இந்நோயைக் கட்டுப்படுத்த டைனோகாப் 1 கிராம் மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
அறுவடை
- நான்காவது வருடத்திலிருந்து காய்க்க ஆரம்பித்தாலும் ஒன்பதாவது வருடத்தில் தான் நல்ல மகசூல் கிடைக்கும்.
- பழங்களை ஒவ்வொரு வருடத்திலும் ஏப்ரல் – மே மாதங்களில் அறுவடை செய்யலாம்.
- மகசூல் : ஒரு வருடத்திற்கு ஒரு மரத்திலிருந்து 150-200 கிலோ.