Blogs that focus on Farming, marketing of agricultural produce, and environmental impact of climate change. This will mostly helpful for beginning farmers can help you start a new farm and build your agriculture business. ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பசுந்தீவனம், முயல் வளர்ப்பு, இயற்கை வழி வேளாண்மை, காடை வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, இறால் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, தண்ணீர் போன்ற அணைத்து விதமான விவசாயம் மற்றும் பண்ணை சம்மந்த பட்ட தகவல்கள் இந்த வலைபதுவில் கிடைக்கும்.
Friday, November 21, 2014
Thursday, November 20, 2014
Wednesday, November 19, 2014
Friday, November 14, 2014
நன்னீர் இறால் வளர்ப்பு
கடற்கரையோரங்கள், கடலும் ஆறும் சந்திக்கும் முகத்துவாரங்கள் ஆகிய பகுதிகளில் மட்டுமே இருந்த இறால் வளர்ப்பு, தற்போது உள்நாட்டுப் பகுதிகளிலும் பரவலாகி வருகிறது. வெளிநாட்டு விற்பனை வாய்ப்பும் அதிகம் என்பதால், நன்னீர் இறால் வளர்ப்பு மூலம் நல்ல லாபம் கிடைக்கவே... பலரும் இதில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில், கொஞ்சம் வித்தியாசமாக... குட்டையில் மீன்களோடு சேர்த்து இறாலை வளர்த்து, கூடுதல் லாபம் ஈட்டி வருகிறார், தஞ்சாவூரைச் சேர்ந்த சீனிவாசன்.
தாராளமாக குஞ்சுகள் கிடைக்கும்!
தஞ்சாவூர்-பூதலூர் சாலையில் பதினைந்தாவது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தில் அமைந்திருக்கும் சீனிவாசனின் இறால் பண்ணையை வலம் வந்தோம். ''எனக்கு சொந்த ஊர், நாகப்பட்டினம் மாவட்டம், கடம்பங்குடி. அங்க, 30 ஏக்கர்ல நெல், கரும்பு சாகுபடி செஞ்சுட்டு இருந்தோம். தொடர்ச்சியா நஷ்டம். அதனால, நிலத்தை குத்தகைக்கு விட்டுட்டு, குடும்பத்தோடு தஞ்சாவூருக்கு வந்து, இயற்கை விளைபொருள்களை வாங்கி விற்பனை செய்துட்டிருக்கேன்.
எங்க ஊர்ல, 2003-ம் வருசம் வரைக்கும் நன்னீர் இறால் வளர்த்தேன். அது நல்ல லாபமான தொழிலா இருந்தாலும்... அந்த சமயத்துல, இறால் குஞ்சுகளை உற்பத்தி செய்யுற நிறுவனங்கள் அதிகமா இல்ல. அதனால, குஞ்சுகளுக்குத் தட்டுப்பாடு வரவே... இறால் வளர்ப்பைக் கைவிட்டேன். இப்போ சென்னை, கிழக்குக் கடற்கரை சாலையில இறால் குஞ்சு பொரிக்கிற நிறுவனங்கள் நிறைய இருக்கு. அதனால, குஞ்சுகள் தாராளமா கிடைக்குது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதுமே... மீன் குட்டைகளை குத்தகைக்கு எடுத்து, கடந்த ஒரு வருஷமா இறால் வளர்த்துட்டுருக்கேன்.
இறால் விற்பனைக்காக பெருசா கவலைப்படத் தேவையில்ல. நாகப்பட்டினம், சென்னையில இருக்கற கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்துல சொல்லி வெச்சுட்டோம்னா... ஏற்றுமதி செய்றவங்க தேடி வந்து வாங்கிக்கிட்டுப் போயிடுறாங்க. உள்ளூர் மார்க்கெட்லயும் நல்ல விற்பனை இருக்கு'' என்று முன்னுரை கொடுத்த சீனிவாசன், தொடர்ந்தார்.
100 நாட்களில் வருமானம்!
''நெல், கரும்பு சாகுபடிக்குத் தேவையான தண்ணியைவிட, இறால் வளர்ப்புக்குக் குறைவான தண்ணிதான் தேவைப்படும். இதுல நூறு நாள்ல லாபம் பார்த்துடலாம். ஒரு ஏக்கருக்கு வருஷத்துக்கு 25 ஆயிரம் ரூபாய்னு குத்தகைக்கு எடுத்துருக்கேன். இந்தப் பண்ணை மொத்தம் 10 ஏக்கர். இதுல 7 ஏக்கர் நீர்ப் பரப்பு. அதுல, 13 குட்டைகள் இருக்கு. இங்க, நன்னீர், கடல்நீர் ரெண்டுலயும் வளரக்கூடிய 'லிட்டோபினஸ் வெனாமி’ங்கிற ரக இறாலைத்தான் வளர்க்கிறேன்'' என்ற சீனிவாசன், ஒரு ஏக்கர் நீர்ப் பரப்பில் நன்னீர் இறால் வளர்க்கும் முறை பற்றி சொன்னார். அதை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
ஜீரோ பட்ஜெட்டுக்கு ஜே... ! வெளிநாடுகளை வியக்கவைத்த ஜீவாமிர்த மகத்துவம்!
பாரத பூமியில் பரவலாக வேர்-விட்ட ஜீரோ பட்ஜெட் விவசாய முறை, இன்று கடல் கடந்து பல நாடுகளிலும் வலுவாக வேர்விடத் தொடங்கிவிட்டது.
மகாராஷ்டிராவில் கருவாகி உருவாகி, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா என்று தவழ ஆரம்பித்து... இன்றைக்கு இலங்கை, நேபாளம், இந்தோனேஷியா, கொரியா, தாய்லாந்து, தென் அமெரிக்கா... என்று உலக நாடுகள் பலவற்றிலும் தழைத்தோங்க ஆரம்பித்துவிட்டது.
ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பத்தில் வெற்றிக்கொடி பறக்க விட்டுக் கொண்-டிருக்கும் கர்நாடக மாநிலம் நோக்கி, மேற்-கண்ட நாடுகளில் இருந்தெல்லாம் நவம்பர் முதல் வாரத்தில் வந்து சேர்ந்த விவசாயிகளை, கைப் பிடித்து, பண்ணைகள் தோறும் அழைத்துச் செல்லும் பொறுப்பாளர்களில் நானும் ஒருவானாகிப் போனேன்.
ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பத்தை, கைப் பிடித்து தமிழகம், கேரளா... ஏன் கடல் கடந்து இலங்கையிலும் உலாவவிட்ட பெருமை பசுமை விகடன் இதழுக்கு உண்டு. மட்டகளப்பில் இருக்கும் கிழக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் விவசாயிகள் பலர் பசுமை விகடனின் வாசகர்கள். அவர்கள் மூலமாக ஜீரோ பட்ஜெட் பற்றி அறிந்த டாக்டர். லயோனல் வீரகோன், திருவண்ணாமலையில் நடந்த ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு அதன் அருமை பெருமைகளை நேரில் கண்டுகொண்டார். அதையடுத்து--தான், இலங்கையிலும் ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்தார்.
கடந்த ஆண்டு, இலங்கை தலைநகர் கொழும்புவில் சர்வதேச விவசாயிகள் அமைப்பு சார்பில், விவசாய உயிரியல் சூழல் பற்றிய கருத்தரங்கம் நடை-பெற்றது. அதில் பங்கேற்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர்கள், தங்கள் நாட்டின் உயிரியல் சூழல், இயற்கை விவசாயம் பற்றி விவாதித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சுபாஷ் பாலேக்கர், ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாய சித்தாந்தம் பற்றி அந்த ஐந்து நாள் கருத்தரங்கில் தினமும் இரண்டு மணி நேரம் விரிவாகவே எடுத்து வைத்தார்.
பயிற்சி எடுக்க வந்த பல நாட்டு விவசாயிகள்!
அந்தக் கருத்தரங்கில், பலமான விவாதங்களுக்குப் பிறகு, ஜீரோ பட்ஜெட் விவசாயத் தொழில்நுட்பங்களை ஏற்றுக்-கொண்டனர் உலகளாவிய விவசாயி--களும், விஞ்ஞானிகளும்! இதையடுத்து, ‘கடனே இல்லாத விவசாயமா..! கடன் தொல்லை இல்லாமல் சுதந்திரமாக... விவசாயி--களால் சுவாசிக்க முடியுமா!’ என்றெல்-லாம் பரவிய ஆச்சர்ய அலை... ஆசியா, ஐரோப்பா, தென்அமெரிக்கா என்று உலகின் பலபாகங்களிலும் விவசாயத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தி-யுள்ளது.
இந்நிலையில்தான், ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயப் பண்ணைகளை நேரில் பார்வையிட, பல நாடுகளைச் சேர்ந்த 40 விவ-சாயிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தது சர்வதேச விவசாயிகள் அமைப்பு. நவம்பர் 2&ம் தேதியன்று பெங்களூரு வந்தவர்களை தென்னிந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் வரவேற்று, ஜீரோ பட்ஜெட் பண்ணைகளைச் சுற்றிக் காட்டினர்.
தமிழகத்தில் ஜீரோ பட்ஜெட் விவசாயம் செய்யும் விவசாயிகள்
தமிழகத்தில் ஜீரோ பட்ஜெட் விவசாயம் செய்யும் விவசாயிகளின் பெயர்களும் தொலை பேசி எண்களும்.:-
1) சசி குமார் (நெல், தோட்டக்கலை, வனவியல்) தொலைபேசி -04422349769, 9381051483, 34/66, சரக்கு நிழல் சாலை (கூட்ஸ் ஷட் ரோடு), ஆதம்பாக்கம் , சென்னை -88
2) ஆர் கிருஷ்ணன் (Ratoon கரும்பு, நெல்) தொலைபேசி: 04179293679 ,09345770937, கொத்தூர் போஸ்ட், Tq-திருப்பத்தூர், Dt-வேலூர்
3) கே கே சோமசுந்தரம் (வாழை) பண்ணாடி தோட்டம், எம்.ஜி. புதூர் (வடக்கு), ஈரோடு-638502 Mb-09442931794
4) வி ஆனந்த் கிருஷ்ணன் (மா, சப்போட்டா, நெல்லி, மொசும்பி) 29, 3 வது கிராஸ், குறிஞ்சி நகர், புதுச்சேரி -605008 Mb-09842335700
5) கனகராஜன் கௌடர் (மல்பெரி) Mb-09994918190 கணியமூர் post, Tq-கள்ளகுறிச்சி -606207, Dt-விழுப்புரம்
6) கிரிஷ் எம் (நெல்-20 ஏக்கருக்கு பைகள், வாழை + வெங்காயம் + மிளகாய் + முருங்கை + மேரிகோல்டு + பூசணிக்காய்) தொலைபேசி: 04347231149 குண்டு கோட்டை, Tq-தேங்க நஞ்சகோட்ட , Dt-கிருஷ்ணகிரி-635107
7) NH நரசிம்ம ராவ் (மிளகாய், மஞ்சள் ,பட்டாணி, வாழை, மா, நெல்லி , நாவல்) தொலைபேசி: 04347291133, 09443365243, 09361520844 C / o சி நாகேஷ் N / ஆர் Checkpost, தபால்-தேன்கனி கோட்டா, Dt-கிருஷ்ணகிரி
எம் லோகேஷ், தொலைபேசி: 04344200734, 09443983855 No -4 / 765, பெட்டபெடகனஹல்லி , Tq-ஒசூர், Dt-கிருஷ்ணகிரி
9) எஸ் நவீன் குமார், S / o எம் செல்வராஜா (நெல், கரும்பு) At-சி என் பூண்டி, Tq-ஹோப்லி , Dt-ஷோளிகர் தொலைபேசி: 04172216240, 09341821034
10) நாகேஷ் பி (பாக்கு, தேங்காய்) தொலைபேசி: 04994232058, 09895914298 விஜய நிவாஸ், மோக்ரல் புத்தூர் போஸ்ட், Tq Dt-கசர்கோத் – 671128 (கேரளா)
11) என் செந்தில் குமார் (வாழை, மல்பெரி, நெல்லி , சப்போட்டா, மா, பப்பாளி, நெல்) At-அதுமரதுபள்ளி , தபால்-முல்லிபாடி , Dt-திண்டுக்கல்-624005 Mb-09865376317
12) கே விஜயகுமார் (வாழை) 140, அன்னூர் ரோடு, மேட்டுபாளையம் , Dt-கோயம்பதோர் Mb-09842524282
Wednesday, November 12, 2014
இயற்கை அங்காடி - Organic Stores
Green Organics
No: 30, MCK Nagar, Adayalampattu,
Nolambur West,
Near 200 feet
Chennai By Pass Service Road,
Chennai – 600037 Tamilnadu – India
Phone : +91- 32925454 Mobile: +91-9444014096, 9994287060 email : organicfoodexports@gmail.com
சோழர் இயற்கை உணவு பொருள் அங்காடி
M.Chelliah,
No.27,Infant jesus church complex,
Thanjavur (Tanjore),
India 613 005
096 29 688492
Online Organic Shop
12, SV Colony, Extension 3rd Street,
PN Road,
Tirupur - 641602
http://tirupurshop.com
விதை இயற்கை அங்காடி (Vidhai Organic Store)
இடம்: # 1, ஸ்ருதி அபார்ட்மென்ட்ஸ்,
காந்தி நகர்,
முதல் குறுக்கு தெரு,
அடையார், (அடையார் சிக்னல் அருகில்),
(அண்ணா பல்கலைக் கழகத்திலிருந்து வரும்போது அடையார் மேம்பாலம் (மேலே ஏறக்கூடாது), அருகில் உள்ள சிக்னலில் இருந்து இடது புறம் திரும்ப வேண்டும். அங்கிருந்து 10 மீட்டர் தூரத்தில் விதை கடையின் பெயர்பலகை தெரியும்).
மகா இயற்கை அங்காடி,
8, போஜகாரத் தெரு (ரிஜிஸ்டர் ஆபீஸ் அருகில்),
வாலாஜாபாத்-631605.
Pasumai Organic & Naturals
26/10, Dhandeshwaram main road,
Velacheri, Chennai - 42.
Phone: 9840 902 284,
admin@pasumaiorganic.com
http://pasumaiorganic.com
Tuesday, November 11, 2014
மண்புழு உரப்பைக் கொண்டு மண்புழு உரம் தயாரித்தல்
மண்ணின் மைந்தன், உழவனின் நண்பன், நிலத்தின் வேர்கள் என்றெல்லாம் அழைக்கப்படுபவை மண்புழுக்கள்.
மண்புழு உரம் தயாரித்தல் என்பது தாவர மற்றும் விலங்கு கழிவுகளை மண்புழுக்களின் உதவியால் மட்க வைத்தலாகும். புழுக்கள் கழிவுகளை ஜீரணிக்க வேண்டுமானால் அக்கழிவுகளின் ஒரு பகுதியாவது மக்கியிருக்க வேண்டும்.
மண்புழு உரம் தயாரிக்கும் முறையை எளிதாக்கி அனைத்து விவசாயிகளும் தங்கள் விளைநிலங்களில் இருந்து கிடைக்கும் இயற்கை கழிவுகளையும் மக்கவைக்கும் மண்புழுக்களையும் கொண்டு தங்கள் இடத்திலேயே மண்புழு உரத்தை எளிதில் தயாரிக்க குறைந்த முதலீடு மண்புழு உரப்பை உதவுகிறது.
உரம் தயாரிக்க உகந்த மண்புழு
1. ஆப்ரிக்கன் மண்புழு
2. சிவப்பு மண்புழு
3. மக்கும் புழு
இவற்றுள் ஆப்ரிக்கன் மண்புழு குறைந்த கால இடைவெளியில் அதிக அளவு மண்புழு உரம் மற்றும் புழுக்களையும் உற்பத்தி செய்வதால் உரம் தயாரிக்க மிகவும் சிறந்தது
மண்புழுக்களுக்கு உகந்த கழிவுகள்
மட்கும் எந்த ஒரு அங்ககக் கழிவுகளையும் உரம் தயாரிக்க பயன்படுத்தலாம்
உதாரணம்:
பண்ணைக் கழிவுகள்
காய்கறிக் கழிவுகள்
இலைச் சருகுகள்
கால்நடை கழிவுகள்
ஆலைக் கழிவுகள்
உர உற்பத்திக்கான இடம்
சற்று மேடான, மழைநீர் தேங்காத, நாள் முழுவதும் நன்கு அடர்ந்த நிழல் இருக்கும் இடமாகவும் இருக்க வேண்டும்
உரப்பை அமைக்க தேவையான பொருட்கள்
மண்புழு உரப்பை 250 gsm அளவிலான கனத்தை கொண்டு இருக்க வேண்டும்.
இதன் நிகர எடை - 4 கிலொ
இதன் அளவு - 12 x 4 x 2 அடிகள்
இத்தொட்டியை அமைக்க 1" கனம் கொண்ட குழாய் / மூங்கில் / சவுக்கு குச்சிகள்
அவைகளில் 13 அடி நீள்ம் உள்ள 4 குச்சிகளும்
5 அடி நீள்ம் உள்ள 10 குச்சிகளும் தேவை
பைகளை குச்சிகளுடன் கட்ட சிறிய நைலான் சரடுகள்
மானாவாரி நிலக்கடலை சாகுபடி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சராசரியாக ஆண்டுதோறும் 13,300 ஹெக்டேர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு, சுமார் 23,275 டன் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதில், வைகாசிப் பட்டத்திலும் மற்றும் இறவைப் பயிராகக் கார்த்திகைப் பட்டத்திலும் பயிரிடப்படுகிறது.
நிலக்கடலை சாகுபடியில் மேற்கொள்ளப்பட வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து கிருஷ்ணகிரி டாக்டர் பெருமாள் வேளாண் அறிவியில் ஆராய்ச்சி மைய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் டி.சுந்தர் ராஜ் கூறியது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலக்கடலை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திண்டிவனம் ஆராய்ச்சி மையத்திலிருந்து வெளியிடப்பட்ட டிஎம்வி 7, விருத்தாசலம் ஆராய்ச்சி மையத்திலிருந்து வெளியிடப்பட்ட விஆர்ஐ 2 மற்றும் விஆர்ஐ 5, கோவையிலிருந்து வெளியிடப்பட்ட கோ 4 ஆகிய 100 முதல் 110 நாள்கள் வரை வயதுடைய கொத்து ரகங்களையும், கோ.6, விஆர்ஐ 7 ஆகிய 125 முதல் 130 நாள்கள் வரை வயதுடைய கோ.டி கொத்து ரகங்களையும் மானாவாரியில் சாகுபடி செய்யலாம். இந்த ரகங்கள் வறட்சியைத் தாங்கி வளர்வதோடு மட்டுமன்றி, நோய் எதிர்ப்புத் திறனையும் கொண்டுள்ளன.
விதை விதைப்பு: விதைப்பதற்கு சான்று பெற்ற சுமார் 90 சதம் முளைப்புத் திறன் உள்ள விதைகளையே பயன்படுத்த வேண்டும். ஏக்கருக்கு 50 கிலோ விதைப் பொருள்கள் தேவைப்படும். விதைகளை சுமார் 5 செ.மீ ஆழத்திலும், வரிசைக்கு வரிசை 30 செ.மீ, செடிக்கு செடி 10 செ.மீ இடைவெளியிலும் விதைக்கலாம்.
இயற்கை முறை விதை நேர்த்தி: மண் வழியாகப் பரவும் நோய்களான வேரழுகல், தண்டழுகல் நோய்களால் இளஞ்செடிகள் பாதிக்கப்பட்டு, பயிர் எண்ணிக்கை குறைந்து விளைச்சல் பாதிக்கப்படுகிறது. உயிர் நோய்க் கொல்லிகளான டிரைக்கோடெர்மா விரிடி ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் விதை நேர்த்தி செய்வதன் மூலம் மண் வழியாகப் பரவும் நோய்களைத் தடுக்கலாம்.
நவீன நீர் பாசனம்
நவீன நீர்பாசன அமைப்பில் தற்போது இரண்டு முக்கிய முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன/
அவை: 1) சொட்டு நீர், 2) தெளிப்பு நீர்.
இந்திய விவசாயத்தில் தற்போதைய மிக முக்கிய தேவை மிகச் சிறந்த நீர்ப்பாசனம் எந்த முறையில் நீர்ப்பாசனம் செய்கிறோமோ அதைப் பொருத்தே பயிரின் மொத்த நீர் செலவு. ஆட் செலவு. நீர்பாசன நேரம். மின்சார செலவு. மகசூல் முதலியவை தீர்மானிக்கப்படுகிறது. உதாரணமாக வாய்க்கால் பாத்தி முறை பாசனத்தைவிட மூன்று மடங்கு குறைவான நீரே தெளிப்பு நீர் பாசனத்திற்கு போதுமானது. மகசூலும் மிக அதிகம்.
மரவகை பயிர்களுக்கு சொட்டு நீர் மிகவும் பொருத்தமாக இருந்தாலும் இதிலுள்ள சில குறைபாடுகள் நெருக்கமாக நடப்படும் பயிர்களில் சிரமத்தை கொடுத்துவிடுகிறது. நீரிலுள்ள உப்பு கட்டிக்கொள்வது. எலி கடிப்பதும் உழவு செய்ய சிரமம் மற்றும் குறைந்த கால உழைப்பு முதலிய பிரச்சனைகள் சொட்டு நீரில் இருப்பதால் இவை இல்லாத நவீன தெளிப்பு நீர் அமைப்பை நாடிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் தற்போதைய விவசாயிகள் உள்ளனர்
நிலக்கடலை
பருவத்தே விதைத்திடல் பலனைக் கூட்டும். நிலக்கடலை விதைப்புக்குச் சிறந்த பருவம் ஜ¤ன் - ஜ¤லை மற்றும் டிசம்பர் - ஜனவரி மாதங்களே ஆகும்.
உயர் விளைச்சல் இரகங்கள்
உயர்விளைச்சல் இரகங்களைத் தேர்வு செய்து அவற்றில் விதை உற்பத்தி செய்வது நல்லது. ஏனெனில் அவைகள் அதிக உரமிடலைத் தாங்கும், குறைந்த வயதுடையவை. பூச்சி நோய் எதிர்ப்புத் திறன் உடையவை. அவற்றை பயிர் செய்து அதிக மகசூல் பெற்று அதிக லாபம் பெற முடியும்.
விளை நிலம் தேர்வு
• நல்ல வளமான செம்மண்பாங்கான காற்றோட்டமும் நல்ல வடிகால் வசதி உடைய நிலமாக இருக்க வேண்டும்.
• போரான் மற்றும் கால்சியம் (சுண்ணாம்புச்) சத்துக்கள் குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் தரமான நல்ல விதைகளைப் பெறமுடியும்.
விதைத் தேர்வு:- 18/64” அளவுள்ள (7.2 மி.மீ. வட்டமுள்ள) வட்டக்கண் சல்லடை கொண்டு சலித்து நல்ல பருமனுள்ள, நோய் தாக்காத பொருக்கு விதைகளையே விதைப்புக்காக பயன்படுத்த வேண்டும். உடைந்து போன, சுருங்கிய மற்றும் மிகவும் வற்றிப்போன நோய் தாக்கிய விதைகளை நீக்கிவிட வேண்டும்.
விதை அளவு (ஒரு ஏக்கருக்கு)
சிறிய பருப்பு விதைகள்
(டிஎம்வி2, 7 போன்ற இரகங்கள்) = 50-55 கிலோ
பெரிய பருப்பு விதைகள்
(ஜேஎல்24, விஆர்ஐ2) = 55-60 கிலோ
பயிர் விலகு தூரம்:- நிலக்கடலை முற்றிலும் தன் மகரந்தச் சேர்க்கை கொண்ட பயிராகும். விதைக்கப் பயிரிடப்படும் இரகத்தை மற்ற இரகங்கள் பயிரிடப்படும் நிலத்திலிருந்து 3 மீட்டருக்கு அப்பாலுள்ள நிலத்தில்தான் பயிரிடவேண்டும். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் முந்திய இரண்டு பருவங்களில் மற்ற இரக நிலக்கடலை பயிரிட்டிருக்கக் கூடாது.
விதை நேர்த்தி :-பயிர் நன்கு வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் நல்ல வகையில் அமையும் வண்ணம் விதைக்கும் செய்யப்படும் சில வழிமுறைகளே விதை நேர்த்தி ஆகும்.
நிலக்கடலையில் விதைமூலமும் மண்மூலமும் பரவும் வேர் அழுகல் தண்டு அழுகல் மற்றும் இலைப்புள்ளி நோய்களைக் கட்டுப்படுத்தவும் பயிர் எண்ணிக்கையைச் சீராகப் பராமரிக்கவும் இராசயன பூசணக் கொல்லி அல்லது உயிரியல் பூஞ்சாணக் கொல்லி அல்லது உயிரியல் பூஞ்சாண மருந்தான டிரைக்கோடெர்மா விரிடியைக் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். காற்றில் கரைந்துள்ள நைட்ரஜன் சத்தை பயிருக்கு அளிக்க டிஎன்ஏயூ14 ரைசோபியம் என்ற நுண்ணுயிரைக் கொண்டும் விதைக்கு விதை நேர்த்தி செய்து பின்னர் விதைக்க வேண்டும்.
ஏக்கருக்கு ரூ.1 கோடி செழிப்பான வருமானம் தரும் செஞ்சந்தனம்
இறவை, மானாவாரி இரண்டுக்கும் ஏற்றது.
ஏக்கருக்கு 400 மரங்கள்.
20 ஆண்டுகளில் மகசூல்.
சுனாமி போன்ற கடல்சீற்றங்களைத் தடுக்கும் அலையாத்தி மரங்களைப் போல, அணுக்கதிர் வீச்சைத் தடுக்கும் தன்மை கொண்ட மரம் செஞ்சந்தன மரம். இந்த அணுயுகத்துக்கு ஏற்ற மரம் என்றுகூட செஞ்சந்தன மரத்தைச் சொல்லலாம்.
பல அணு உலைக்கூடங்களில் அணுக்கதிர்களைத் தடுக்கும் அரணாக இதைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
ஜப்பான் நாட்டில் எக்ஸ்ரே, லேசர்... போன்ற வீரிய கதிர்வீச்சு சிகிச்சைகளைச் செய்யும் மருத்துவர்கள், சிகிச்சையின்போது கதிர்வீச்சைத் தடுப்பதற்காக, சிறிதாக வெட்டப்பட்ட செஞ்சந்தன மரத்துண்டை தங்கள் சட்டைப் பையில் வைத்துக் கொள்கிறார்களாம். ஒலி அலைகளைத் தடுக்கும் திறன் கொண்ட இம்மரங்கள், வெப்பத்தையும் அதிக அளவில் கடத்தாது. இவ்வளவு சிறப்புகள் இம்மரங்களுக்கு இருப்பதால், இவற்றின் சந்தை வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்த மரத்தை வணிகரீதியாக வளர்ப்பதைப் பற்றி பார்ப்போமா...
சரளை மற்றும் செம்மண் கலந்த மண் வகைகளில் இம்மரம் சிறப்பாக வளரும். படுகை நிலத்தில்கூட நன்றாக வளரும். ஆனால், நல்ல வடிகால் வசதி இருக்க வேண்டியது அவசியம். ஆழமான மண்கண்டம் உள்ள மானாவாரி செம்மண் நிலங்களிலும் வளர்க்கலாம். விதைகளை விதைப்பது; நாற்று தயாரித்து நடவு செய்வது; போத்து நடவு என மூன்று வழிகளில் இம்மரத்தை நடவு செய்யலாம் என்றாலும், கடைசி இரண்டு முறைகள்தான் சிறந்தது.
கட்டாயம் செய்யணும் கவாத்து!
10 அடி இடைவெளியில் குழி எடுத்து, வழக்கமாக மரக்கன்றுகளை நடவு செய்வதுப் போல இயற்கை உயிர் உரங்களைப் போட்டு நடவு செய்ய வேண்டும். மெதுவாகத்தான் இந்த செடிகள் வளரும். நன்கு வளர்ந்து வராத செடிகளை சில நாட்களிலேயே கண்டறிந்து அகற்றிவிட வேண்டும். மானாவாரி, இறவை என இரண்டு முறைகளிலும் இதைப் பயிரிடலாம். இறவையில் தண்ணீர் இருப்பதைப் பொறுத்து பாசனம் செய்து கொள்ளலாம்.
அவ்வப்போது செடிகளுக்கு சூரியஒளி நன்கு கிடைக்குமாறு கவாத்து செய்து வர வேண்டும். மழைக்காலத்துக்கு முன்பாக செடிகளைச் சுற்றிலும் மண்ணைக் கொத்திவிட வேண்டும். இம்மரங்களை பழத்தோட்டங்களில் காற்றுத் தடுப்புக்காகவும் நடவு செய்யலாம். பல இடங்களில் எலுமிச்சைத் தோட்டங்களில் செஞ்சந்தன மரங்களை காற்றுத் தடுப்பு அரணாகப் பயன்படுத்துகிறார்கள்
Monday, November 10, 2014
தோட்டங்களில் தேனீ வளர்ப்பு
கன்னியாகுமரி மாவட்டம் என்றாலே... தென்னை, வாழை மற்றும் ரப்பர் ஆகியவைதான் கண்முன்னே வந்து நிற்கும். சாதகமான காலநிலை இங்கே நிலவுவதுதான் இதற்குக் காரணம்.
முக்கியப் பயிர்கள் பசுமைக் கட்டி கைகொடுப்பது ஒரு பக்கம் இருக்க... ஏதாவது ஒரு ஊடுபயிர் சாகுபடி செய்வதையும் வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள். அதிலும்... மார்த்தாண்டம் பகுதியைச் சுற்றியுள்ளவர்களின் முக்கியத் தொழில் விவசாயத்தோடு இணைந்த 'தேனீ வளர்ப்பு'. வீட்டுப் புழக்கடை, தோட்டம் என்று கிடைக்கும் இடத்தில் எல்லாம் தேனீக்களை வளர்த்து வருமானம் பார்க்கிறார்கள்.
சற்றேறக்குறைய 25 ஆயிரம் குடும்பங்கள், இப்பகுதியில் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ளன. குலசேகரத்தைச் சேர்ந்த அன்புச்செழியனும் அவர்களில் ஒருவர். தேனீ பராமரிப்பில் ஈடுபட்டிருந்தவரை காலைவேளையில் சந்தித்தோம். உற்சாகமாக ஆரம்பித்தவர், ''எங்க அப்பா, 40 வருஷமா குடிசைத் தொழிலா தேனீ வளர்ப்பைப் பண்ணிட்டுருக்காரு. தேனீ வளர்ப்பு பயிற்றுநராவும் இருக்காரு. நானும் பயிற்சி எடுத்துக்கிட்டுதான் இதுல இறங்கியிருக்கேன்.
தென்னை, வாழை, காய்கறி, பூந்தோட்டங்கள்னு வெள்ளாமைக்கு இடையில, தேனீ வளர்த்தா... அதிக அளவுல தேன் கிடைக்கிறதோட, அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டு பயிர்கள்லயும் மகசூலும் கூடும். ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிச்ச மாதிரி வருமானம் பார்க்கலாம்.
அரை ஏக்கர்ல வாழை, தென்னை, கமுகு (பாக்கு) மரங்கள் நிக்குது. அதுல ஊடுபயிரா அன்னாசியும் போட்டிருக்கேன். தோட்டத்துல, வீட்டுப் புழக்கடைனு கிடைக்குற இடத்துல எல்லாம் தேனீப் பெட்டிகளையும் வெச்சுருக்கேன். மொத்தம் 70 பெட்டிகள்ல தேன் உற்பத்தி பண்றேன். இதுல கிடைக்கற தேனை நேரடியாவே விற்பனை செய்துகிட்டிருக்கோம்'' என்றவர், தேனீ வளர்ப்பு தொடர்பாக நம்மிடம் அடுக்கிய தகவல்களைப் பாடமாகத் தொகுத்துள்ளோம்.
கவனம் தேவை... பெட்டித் தயாரிப்பில்!
முதலில் தேனீக்களுக்கானப் பெட்டியைத் தயாரிக்க வேண்டும். பல இடங்களில் பெட்டிகளைத் தயாரித்து விற்கிறார்கள். தேக்கு, வேப்பமரம், புன்னைமரம் என்று நல்ல மணம் வீசுகிற மரங்களில்தான் பெட்டியைச் செய்ய வேண்டும். வெளியில் வாங்கும்போது இதையெல்லாம் உறுதிப்படுத்திக் கொள்ள முடியாது என்பதால், நாமே பெட்டிகளைத் தயார் செய்வதுதான் நல்லது. இப்படிச் செய்வதால் செலவும் குறையும்.
நாட்டுக் கோழி வளர்ப்பு
''நாட்டுக்கோழியை, மேயவிட்டுத்தான் வளக்கணும். பிராய்லர் கோழி மாதிரி கொட்டகைக்குள்ள அடைச்சு வெச்சு கம்பெனி தீவனத்தைக் கொடுத்தா... அதை நாட்டுக்கோழினு சொல்ல முடியாது. 'நாட்டு பிராய்லர் கோழி'னு வேணும்னா சொல்லிக்கலாம். அதேசமயம்... மேய்ச்சல் முறையில அதிகளவு கோழிகளைப் பராமரிக்க முடியாதுங்கறதும் உண்மை. அதனால... அடைப்புடன் கூடிய நடமாடும் முறையில (கொட்டில் மற்றும் மேய்ச்சல் முறை) வளர்க்கும்போது, நாட்டுக்கோழிகளைத் தரம் குறையாமலும் ஆரோக்கியமாவும் வளர்க்க முடியுது'' என்று உற்சாகமாக தன் அனுபவத்தைச் சொல்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், திருமங்கலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த துரைசாமி.
கோழிகளுக்குத் தீவனம் போட்டபடியே நம்மிடம் பேச்சைத் தொடர்ந்த துரைசாமி... ''நான் 5 ஏக்கர்ல நெல் விவசாயம் செஞ்சுக்கிட்டு இருக்கேன். அதோட கொட்டில் மற்றும் மேய்ச்சல் முறையில ஆடுகளை வளர்க்கலாம்னு வலை வேலியோட கொட்டகை அமைச்சேன். ஆனா, ஆடு வளர்ப்பு எனக்கு சரிப்பட்டு வரல. அதனால, அதை விட்டுட்டேன். சும்மா கிடக்குற கொட்டகையில உருப்படியா ஏதாவது செய்யலாமேனு யோசிப்ப கிடைச்சதுதான்... கோழி வளர்ப்பு!ஆட்டுக்கொட்டகையில் தோன்றிய யோசனை !
நாமக்கல்ல இருக்கற நாட்டுக்கோழிப் பண்ணையில, ஒரு குஞ்சு 35 ரூபாய்னு ஒரு நாள் வயசுள்ள 200 கோழிக்குஞ்சுகள வாங்கிக்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சேன். என்கிட்ட இருந்த கொட்டகையில 100 கோழிகளத்தான் வளர்க்க முடியும். அதனால மூணு மாசத்துல குஞ்சுகள் கொஞ்சம் பெருசானதும் 90 பெட்டை, 10 சேவல்களை மட்டும் வெச்சுக்கிட்டு மிச்சத்தை வித்துட்டேன். குஞ்சுகளை வாங்கிட்டுப் போனவங்க அடிக்கடி வந்து, 'கோழிக்குஞ்சு வேணும்’னு கேட்டாங்க. அப்போதான் குஞ்சுகளுக்கு நிறைய தேவை இருக்குதுனு புரிஞ்சுச்சு. அதுக்கப்பறம் கோழிக்குஞ்சு உற்பத்தியில தீவிரமா இறங்கிட்டேன்.
வாரத்துக்கு 75 குஞ்சுகள் !
பொதுவா, அஞ்சாறு மாச வயசுக்கு மேல ஒண்ணொண்ணா முட்டை போட ஆரம்பிச்சு... 9-ம் மாசத்துல இருந்து முட்டைகள் அதிகளவுல கிடைக்க ஆரம்பிச்சுது. முட்டைகளை இன்குபேட்டர் மூலமா பொரிச்சு விற்பனை பண்றேன். முட்டைகளைத் தனியா விக்கறதில்லை. வாரத்துக்கு அம்பதுல இருந்து 100 குஞ்சுகள் வரைக்கும் உற்பத்தியாகும். ஏதாவது காரணத்தால இறந்தது போக, சராசரியா வாரத்துக்கு 75 குஞ்சுகள வித்துக்கிட்டிருக்கேன்.
மண் புழு உரம் தயாரிப்பு
இன்றைய தேதியில் நாம் மிக அதிக பணத்தைச் செலவு செய்வது நம் உடல் ஆரோக்கியத்திற்குதான். இதுவரை இல்லாத பல நோய்கள் நம்மை தாக்கக் காரணம், செயற்கையான ரசாயன உரங்களைக் கொண்டு விளைவிக்கப்படும் விவசாயப் பொருட்களை நாம் பெருமளவில் உட்கொள்ள ஆரம்பித்ததுதான். செயற்கை உரங்களைக் கொண்டு விளைவிக்கப்படும் காய்கறிகளை ஒதுக்கிவிட்டு, இயற்கையான உரங்கள் மூலம் விளைவிக்கப்படும் காய்கறிகளுக்கு இப்போது மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இயற்கை உரங்களில் பல வகை உண்டு. அதில் ஒன்றுதான் மண் புழு உரம்.
ஒவ்வொருவர் வீட்டிலும் காய்கறிகள், பழங்கள், உணவு போன்ற மக்கும் கழிவுகள் நிறையவே கிடைக்கின்றன. தேவை இல்லாததால் தூக்கி எறியப்படும் இந்த கழிவுகளைக் கொண்டு மண் புழு உரம் தயாரிக்க பயன்படுத்தினால், நல்ல லாபம் பார்க்க முடியும். 'வெர்மி கம்போஸ்ட்’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த மண் புழு உரம், நிலத்திற்கு மாசு ஏற்படாமல் தடுப்பதோடு, நம் உடலுக்கும் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாத காய்கறிகளை அதிக அளவில் விளைவிக்கவும் உதவுகிறது. மண் புழு உரம் தயாரிக்கும் தொழிலில் அனைவரும் இறங்கி ஜெயிக்க முடியும். ஆனால், அதற்கென இருக்கும் தயாரிப்பு முறையை மட்டும் கவனமாகப் பின்பற்ற வேண்டும்.
சந்தை வாய்ப்பு!
விவசாயத்திற்கும், தரிசுநில மேம்பாட்டிற்கும் மிகவும் பயன்படக்கூடியது இந்த மண் புழு உரம். வீடுகளில் செடி வளர்ப்பவர்களுக்கும், தோட்டம் அமைத்திருப்பவர் களுக்கும் இந்த மண் புழு உரம் அதிக நன்மை தருபவை. நஞ்சை நிலங்களில் பல விவசாயிகள் மண்புழு உரம் உபயோகிப்பதன் மூலம் தங்களது விளைச்சலை அபரிமிதமாகப் பெருக்கிக் காட்டியுள்ளனர். கோழி வளர்ப்பவர்கள் அதற்குத் தீனியாக மண் புழுக்களைப் போடுகிறார்கள். விலை உயர்ந்த மீன்குஞ்சுகளை வாங்கி வளர்த்தாலும் அதற்கு இரையாக மண் புழுக்களை உணவாகப் போடுகின்றனர். மஹாராஷ்டிரா மாநிலத்தில் மேற்கொண்ட ஓர் ஆய்வில், மண் புழு உரம் போட்டு பயிரிடப்பட்ட திராட்சைகள் நல்ல தரத்துடனும், அதிகளவில் விளைச்சலும் கொடுத்தது என தெரிய வந்துள்ளது. எனவே, இதுபோன்ற இயற்கை உரத்திற்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)