Friday, June 5, 2015

தீவன மேலாண்மை (Theevana Mealanmai) - Feeding Management

கன்றுகளுக்கு சீம்பால் ஊட்டம்

ஊட்டப்பராமரிப்புகள் கன்றிலிருந்தே தொடங்க வேண்டும். கன்று ஈன்றவுடன் பசுவிலிருந்து சுரக்கும் முதல் பால் சீம்பால் எனப்படுகிறது. இளம்கன்றிற்கு இது மிகவும் அவசியம். நாளொன்றிற்கு 2-21/2 லிட்டர் வீதம் முதல் 3 நாட்கள் கண்டிப்பாக சீம்பால் அளிக்கப்பட வேண்டும். இது கன்றின் செரிக்கும் தன்மையையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்துகிறது. முடிந்தால் எஞ்சிய பாலை சேகரித்து சிறிது இடைவெளி விட்டு கன்றிற்கு ஊட்டச்செய்யலாம். 

பசுவின் சாதாரண பாலில் உள்ளதை விட சீம்பாலில் புரதச்சத்து மிகவும் அதிகம். இதன் புரதத்தில் உள்ள குளோபுலின் கால்நடைகளைத் தாக்கும் நோய் கிருமிகளை எதிர்த்துத் தாக்கும் சக்தி கொண்டது. இதில் காமா - குளோபுலின் அளவு 0.97 மி.கி. / மி.லி கன்று ஈன்ற உடனும் 16.55 மி.கி. / மி.லி அளவு கன்று ஈன்ற 2 மணி நேரத்திலும் இரண்டாவது நாளில் 28-18 மி.கி. / மி.லி அளவாகவும் உள்ளது.


சீம்பால் ஊட்டம்
  • சீம்பாலில் புரதம் 3 மடங்கும், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் ஆகியவையும் உள்ளன.
  • சாதாரண பசும்பாலை விட 5-15 மடங்கு அதிகவிடடமின் ‘ஏ’ சீம்பாலில் உள்ளது. இது பசுவுக்கு சினைத்தருணத்தில் அளித்த உணவைப் பொறுத்து அமையும்
  • இது தவிர ரிபோஃபிளோவின், குளோரின், தையமின் மற்றும் பேன்டோதொனிக் அமிலம் ஆகியவையும் அதிகம் உள்ளன.
  • இது செரித்தலை துரிதப்படுத்துகிறது.
பசும்பால் ஊட்டம்
  • முடிந்த அளவு தாய்ப்பசுவின் பாலை ஊட்டச்செய்யவும்.
  • பால் கறந்த உடனே கன்றை ஊட்டவிட வேண்டும்.
  • முதல் ஒரு வாரத்திற்கு நாளொன்றுக்கு 3-4 முறையும் அதன் பின்பு 2 முறையும் பாலூட்டுவதைப் பழக்கப்படுத்தலாம்.
கொழுப்புச்சத்து நீக்கிய பால்

பெரும்பாலான பண்ணைகளில் இப்போது கொழுப்பு நீக்கிய பாலையே கன்றுகளுக்குக் கொடுக்கின்றனர். சரியான அளவு கொழுப்பு நீக்கிய பாலையும் சீரான இடைவெளியில் அளிக்கலாம்.

மோர், தயிர்த் தெளிவு, கொழுப்பு, நீக்கி உலர்த்திய பால்: (Dried skim milk, whey/butter milk):


மேற்கண்ட அனைத்தையும் கலந்து 1கி-9கி அளவு நீருடன் கலந்து கொழுப்பு அற்ற பாலாக கன்றுகளுக்குக் கொடுக்கப்படுகிறது. இதில் செரித்தல் எளிதாகிறது.

அடர்தீவனம் (calf starter): 


இதில் கம்பு, சோளம், கேழ்வரகு, உடைத்த கோதுமை, அரிசி போன்ற தானயங்களை அரைத்து கலந்து பயன்படுத்தப்படுகிறது. சில (2) வாரங்களுக்குப் பிறகு தாய்ப்பால் ஊட்டத்தை நிறுத்திவிட வேண்டும். அடர்தீவனத்தை பால் ஊட்டியபின்பு கன்றின் வாயில் தேய்க்க வேண்டும். பின்பு கன்று அதை சாப்பிட்டு பழகிவிடும். கன்று வளர தானியங்களின் விகிதத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.


கொழுப்பு, நீக்கி உலர்த்திய பால் ஊட்டம்

கலப்புத்தீவனம்

தாய்ப்பாலை நிறுத்திவிட்டால் கன்றிற்கு சரியான தீவனம் அளித்தல் அவசியம். அடர்தீவனத்தில் கலந்துள்ள தானியங்களுடன் மேலும் பிண்ணாக்கு வகைகள், தவிடு வகைகள், பருப்பு நொய், வெல்லப்பாகு, உப்பு, தாது உப்புக்கலவை ஆகியவற்றைத் தேவையான விகிதத்தில் சரியாகக் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பாலூட்டத்தை நிறுத்தும் முன்பே இத்தீவனத்தை ஊட்டச் செய்ய வேண்டும். பாலூட்டம் இருக்கும்போது அதிக புரதம் உள்ள தானியங்களை எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏஎனனில் ஏற்கனவே பாலில் புரதம் அதிகம் உள்ளது. மேற்கூறிய தானியங்களில் ஓட்ஸ் - 35%, லின்ஸீடு புண்ணாக்கு - 5%, தவிடு - 30%, பார்லே - 10%, கடலைப்பிண்ணாக்கு - 20%, கலவை சிறந்தது. அல்லது அரைத்த சோளம் 2 பங்கு கோதுமைத்தவிடு 2 பற்கு என்ற அளவினும் கலந்து அளிக்கலாம்.

((ஆதாரம்: டாக்டர்.சி.பால் பிரின்ஸ்ஸி ராஜ்குமார், வேளாண் கல்லூரி, மதுரை)

6 மாதம் வரை கன்றுகளின் தீவன அட்டவனை
கன்றின் வயதுஉடல்எடைபாலின் அளவு (கி.கி)கன்று அடர் தீவன அளவு (கிராமில்)பசும்புல் (கி.கிமில்)
4 நாள்முதல் 4 வாரம் வரை252.5சிறிய அளவுசிறிய அளவு
4-6 வாரம்303.050-100சிறிய அளவு
6-8 வாரம்352.5100-250சிறிய அளவு
8-10 வாரம்402.0250-300சிறிய அளவு
10-12 வாரம்451.5350-5001-0
12-16 வாரம்55-500-7501-2
16-20 வாரம்65-750-10002-3
20-24 வாரம்75-1000-15003-5
தகவல்: கேரளா - வேளாண் பல்கலைக்கழகம்

கன்று நன்கு வளர்ச்சி அடையும் வரை அடர்தீவனம் அவசியம். மேலும் இக்கலப்பு தீவனத்தில் எல்லா சத்துக்களும் சரியான அளவில் கலந்திருக்க வேண்டும். முக்கியமாக நிறைய புரதச்சத்து இருக்க வேண்டும். மீன் கழிவு (fish meal) போன்றவற்றிலிருந்து எடுக்கப்பட்ட விலங்கும் புரதங்களும் சேர்த்தல் சிறந்தது. யூரியாசேர்த்தல் கூடாது.

அட்டவணை 2: 


6 மாதத்திலிருந்து தீவன அளவு
வயது (மாதங்களில்)சராசரி உடல் எடை (கி.கிராமில்)கலப்பு தீவனம் (கி.கி)புல் அளவு (கி.கிராமில்)
6-970-1001.5-1.755-10
9-10100-1501.75-2.2510-15
15-20150-2002.25-2.5015-20
20க்கு மேல்200-3002.50-2.7515-20
அட்டவணை 3: 

பரிந்துரைக்கப்பட்ட கலப்பு தீவன அளவு: (சராசரியாக 15% DCF, 70% TDN)       
வ.எண்
பொருட்கள்
அளவு (கி.கில்)
1.
கடலைப் புண்ணாக்கு
எள் புண்ணாக்கு
(அரிசித் தவிடு) நெல் தவிடு
உலர்ந்த மரவள்ளி செதில்கள்
தாதுக்கலவை
உப்பு
32
5
25
35
2
1
2.
கடலைப் புண்ணாக்கு
தேங்காய் / பருத்தி புண்ணாக்கு
நெல் தவிடு
மஞ்சள் சோளம்
தாதுக்கலவை
உப்பு
30
10
30
27
2
1
3.
கடலைப் புண்ணாக்கு
நெல் தவிடு
தோல் உரித்த புளிக்கொட்டை
உலர்ந்த மரவள்ளிக் கிழங்கு செதில்
தாதுக்கலவை
உப்பு
33
30
10
24
2
1
4.
எள் புண்ணாக்கு
தேங்காய் புண்ணாக்கு
மஞ்சள் சோளம்
கோதுமை தவிடு
தாதுக்கலவை
உப்பு
20
15
32
20
2
1
5.
சூரியகாந்தி புண்ணாக்கு
பருத்தி புண்ணாக்கு
கம்பு
கோதுமை தவிடு
தாதுக்கலவை
உப்பு
25
15
25
32
2
1
6.
கடலைப் புண்ணாக்கு
ரப்பர் விதை புண்ணாக்கு
மஞ்சள் சோளம்
கோதுமை தவிடு
மரவள்ளிக் கிழங்கு
தாதுக்கலவை
உப்பு
20
20
27
15
15
2
1
அட்டவணை 4:

கறவை மாடுகளுக்கான தீவன அட்டவணை


கலப்பினமாடுகள்
வ.எண்
கறவையின் பால் உற்பத்தித்திறன்
தீவன அளவு
பசுந்தீவனம்
உலர் தீவனம்
அடர்தீவனம்
1.6-7 லிட்டர் பால் நாளொன்றுக்குபால் தரும் நாட்களில்
20-25
5-6
3-3.5
இதர நாட்களில்
15-20
6-7
0.5-1.0
2.8-10 லிட்டர் பால் நாளொன்றுக்குபால் தரும் நாட்களில்
25-30
4-5
4-4.5
இதர நாட்களில்
20-25
6-7
0.5-1.0
(ஆதாரம்: தேசிய கால்நடை மேம்பாட்டுக் கழகம்.)

கறவை மாடுகளின் தீவனம்


பால் கறக்கும் மாடுகளுக்கு எந்த அளவு சரியான தீவனம் அளிக்கிறோமோ அந்த அளவே பால் கிடைக்கும். புண்ணாக்கு போன்ற புரதச்சத்துள்ளவைகளையும் தவிடுகள், தானியங்கள் போன்றவை கலந்த சரிவிகித உணவு மிக அவசியம்.


மாடுகளின் தீவனம்

அட்டவணை 5

முதிர்ந்த மாடுகளுக்கான தீவனங்கள்: (உடல் எடை 250 கி.கி. வரை)
பசுந்தீவனம் அதிகளவு இருந்தால்
வைக்கோல் அதிகம் இருந்தால்
பிரிவுஅடர்தீவனம்பசும்புல் கி.கில்அடர் தீவனம் (கி.கி)பசும்புல் (கி.கி)Paddy straw (கி.கி)
பால் வற்றிய மாடுகள்-25-301.255-05-6
பால் கறக்கும் மாடுகள்1 கி.கி ஒவ்வொரு 2.5-3 கி.கி பாலுக்கும்301.25 + 1கி.கி ஒவ்வொரு 1.5கி.கி பாலுக்கும்5-05-6
சினை மாடுகள்சாதாரண அளவு + 1-1.5 கி.கி 6வது மாதத்திலிருந்து25-30பராமரிப்பு + உற்பத்தி +1-1.5கி.கி 6வது மாதத்திலிருந்து5-05-6
கால்நடைகளுக்குத் தேவையான உலர்தீவன அளவு அதன் உடல் எடையில் 3% ஆகும். சில உற்பத்தித்திறன் அதிகம் கொண்ட மாடுகளுக்கு அதற்கு மேலும் தீவனங்கள் அளிக்கலாம். தட்ப வெப்பநிலை தீவனத்தயாரிப்பு முறை, மற்றும் செரிமானத்திறன் அடிப்படையில் உட்கொள்ளுவதை உணவின் அளவு வேறுபடும். ஒரு சாதாரண அளவுடையுள்ள பசுவுக்கு 6% பண்படா புரதம்தேவைப்படும். அதோடு நிறைய பயிறு வகைப் பசும்புல்லும் கொடுத்தால் 3-4 கி.கி பால் பெறமுடியும்.

காளைகளின் தீவனம்

இனவிருத்திக்கென வளர்க்கப்பட்டு வரும் காளைகளுக்கு பசுவை விட அதிக நுண்ணூட்டச் சத்துக்கள் மிகுந்த தீவனங்களை அளிக்க வேண்டும்.

அட்டவணை 6
உடல் எடை (கி.கில்)
அடர்தீவன அளவு (கி.கில்)
பசும்புல் (கி.கில்)
400-500
2.5-3
20-25
இனவிருத்திக் கலப்பில் ஈடுபடுத்தப்படும் மாடுகளுக்கு சரியான அளவு உலர் தீவனம் முறையாக அளிக்கப்படவேண்டும். அதிக அளவு தீவனம் காளைமாடுகளின் எடையை அதிகரித்து செயல்திறனைக் குறைத்து விடும்.

தகவல்: கேரளா வேளாண் பல்கலைக்கழகம்

கன்று ஈனும் தொழுவங்கள்


கன்று ஈனும் தொழுவமானது மாட்டுக் கொட்டகை அருகில் இருக்க வேண்டும். பெரிய பண்ணைகள் மொத்தம் பரப்பில் 5% அளவானது இருக்க வேண்டும். ஒவ்வொரு கன்று ஈனும் கொட்டகையிலும் 3 x 4 மீ அளவுடைய கொட்டில்களும் அருகே 4 x 5 மீ திறந்த வெளி அமைப்புகளும் அமைத்தல் வேண்டும். சிமென்ட்டாலான தளங்களோடு இருத்தல் நலம். மூடப்பட்ட தளமானது (covered area) 1.25 மீ கொண்ட சுவர்களும் 1.2 மீ கதவு ஒருபுறமும் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு கொட்டிலும் நீர், தீவனத் தொட்டி, மின்சார வசதிகள் சரிவர அமைத்திருத்தல் வேண்டும். இந்தக் கொட்டகையானது விவசாயி (அ) ஆட்களின் இருப்பிடத்திற்கு அருகில் இருக்கவேண்டும். 

(ஆதாரம்: பால் பிரின்ஸ்ஸி ராஜ்குமார், வே.க. மதுரை.)

நுண்ணூட்டச் சத்துக்களின் தேவை


கறவை மாடுகள் தீவனமுறை
  • கறவையின் உற்பத்தித் திநனுக்கேற்ற கலப்பு தீவனம் அவசியம்.
  • நல்ல தரமுள்ள உலர்தீவனம் கலப்புதீவன அளவைக் குறைக்கும். தோராயமாக 20 கி.கி புற்கள் (கினியா, நேப்பியர்) அல்லது 6-8கி.கி பயிறு வகை (லியூசர்ன்) அளிப்பதன் மூலம் 1 கி. அடர்தீவனத்தைக் குறைக்க முடியும்.
  • 1கி.கி வைக்கோல் 4-5 கிலோ புல் தேவையைக் குறைக்கும். இதன் மூலம் புரோட்டீன் பற்றாக்குறையைப் போக்கலாம்.
  • முறையான தீவனமளிப்பு முக்கியமாகும். காலை, மாலை இருவேலைகளும் அடர்தீவனத்தைப் பிரித்து பால்கறக்கும் முன்பு அளிக்கவேண்டும். அதேபோல் உலர்தீவனமும் காலையில் பால்கறந்த நீர் அளித்த பின்பும், மாலையில் பால்கறந்த பின்பும் அளிக்க வேண்டும். அதிக பால் தரும் மாடுகளுக்கு நாளொன்றுக்கு 3 வேளை உணவு அளிக்கலாம்.
  • சரியான அளவு இடைவெளி அதன் செரிக்கும் திறனையும் பாலின் கொழுப்புச் சத்து அளவையும் அதிகரிக்கும். அதிக உலர்தீவனம் அளித்தால் மாடுகளின் செரிக்கும் தன்மை குறையலாம்.
  • தானிய வகைகள் சரியான அளவு அரைத்துக் கொடுக்க வேண்டும்.
  • நேப்பியர் போன்ற கடின தண்டுகொண்ட தீவனங்களை சிறிது துண்டாக வெட்டி அளிக்கலாம்.
  • வைக்கோலுடன் பயிறு வகை மற்றும் சிறிய ஈரப்பதமுள்ள புற்களைக் கலந்து அளிக்கலாம்.
  • அடர் அல்லது கலப்பு தீவனம் நீருடன் கலந்து அளிக்கலாம்.
  • பதப்படுத்தப்பட்ட பசுந்தீவனங்களை பால் கறந்த பின்பு அளிக்கலாம்.
  • தீவன வேமிப்புக் கிடங்கு நல்ல காற்றோட்டத்துடன் உலர்ந்து சுத்தமாக இருக்க வேண்டும். பூஞ்சான் தாக்கிய கெட்டுப்போன தீவனங்களை கால்நடைகளுக்கு அளிக்கக் கூடாது.
  • நல்ல பால் உற்பத்தி கொண்ட மாடுகளுக்கு அடர் உலர் தீவன விகிதம் 60:40 அளவில் இருக்க வேண்டும்.
அட்டவணை 7

கால்நடைகளின் நுண்ணூட்ட அளவு. கால்நடை 1க்கு/நாளொன்றுக்கு (வளர்ச்சி விகிதம் 55கி/நாள்)
எடையளவு (கி.கி)
உலர்தீவனம் (கி.கி)
செரிக்கக்கூடிய (குரூடு) புரோட்டீன் பண்படாத (கி.கி)
செரிக்கக்கூடிய நுண்ணூட்டிகள் (கி.கி)
கால்சியம் (கி.கி)
பாஸ்பரஸ்(கி.கி)
250
4-5
140
2.2
25
17
300
5-6
168
2.65
25
17
350
6-7
195
3.10
25
17
400
7-8
223
3.55
25
20
450
8-9
250
4.00
31
23
500
9-10
278
4.45
31
23
550
10-11
310
4.90
31
23
600
11-12
336
5.35
31
23
பசும்புல் இல்லாத நிலையில் உலர் / அடர் தீவனம் கொடுக்கலாம். பால் கறவை வற்றிய பின்பும் அடர்தீவனம் தவிர மற்ற பசும்புல் உலர் தீவனங்கள் கொடுக்க வேண்டும்.

இளம் கலப்பு இன மாடுகளின் வளர்ச்சிக்கேற்ப நிறைய தீவனம் அளிக்க வேண்டும். அதன் வளர்ச்சியை அதிகப்படுத்த முதல் கறவையில் 1 கி.கிமும் 2ம் கறவையில் 0.5 கி.கிமும் அதிக அடர் தீவனம் அளிக்க வேண்டும். கறவை மாடுகள் எப்போதும் சுதந்திரமாக உலவவும் நீர் அருந்தவும் அனுமதிக்கப்பட வேண்டும்.

அட்டவணை 8


இந்தியத் தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின்படி கால்நடைகளுக்கான தாதுக்களின் தேவை:
வ.எண்
கலைவைப் பண்புகள்
வகை I (உப்புடன்)
வகை II (உப்பின்றி)
1.
ஈரப்பதம் - நிறை சதவீத அளவு (அதிகளவு)
5
5
2.
கால்சியம் நிறை சதவீதம் அளவு குறைந்தது
18
23
3.
பாஸ்பரஸ் நிறை சதவீதம் அளவு குறைந்தது
9
12
4.
மெக்னீசியம் நிறை சதவீதம் அளவு குறைந்தது
5
6.5
5.
உப்பு (குளோரை, சோடியம் குளோரைட் நி.ச.அ. குறைந்தது)
22
-
6.
இரும்பு நி.ச.அ. குறைந்தது
0.4
0.5
7.
அயோடின் (பொட்டாசியம் அயோடைடு) நி.ச.அ.
0.02
0.026
8.
காப்பர், நி.ச.அ. குறைந்தது
0.06
0.077
9.
மாங்கனீசு நி.ச.அ. குறைந்தது
0.10
0.12
10.
கோபால்ட் நி.ச.அ. குறைந்தது
0.009
0.012
11.
யூபுளோரின், நி.ச.அ. குறைந்தது
0.05
0.07
12.
ஜிங்க் நி.ச.அ. குறைந்தது
0.30
0.38
13.
சல்ஃபர் நி.ச.அ. அதிகளவு
0.40
0.50
14.
கரையாத சாம்பல் அமிலம், நி.ச.அ.
3.00
2.50
(ஆதாரம்: www.vuatkerela.org)

1 comment:

  1. பால் உற்பத்தி பெருக Snf மற்றும் Fat அதிகரிக்க அனுகவும்.9940072718

    ReplyDelete