Saturday, March 28, 2015

சூரியகாந்தி சாகுபடி (Suriya Kaanthi Saagubadi) - Sunflower Cultivation


  • சூரியகாந்தி பயிரின் வயது 80-85 நாட்களாகும்.
  • சாகுபடிக்கு ஏற்ற ரகங்கள் அட்வான்ஸ் கார்கில், கே.பி.எஸ்.எச்.1, மாடர்ன் மற்றும் கோ.3. ஒரு ஏக்கருக்கு 6 கிலோ விதை தேவைப்படும்.
  • நீண்ட கால விதை ரகங்களை 60க்கு 15செ.மீ. இடைவெளியிலும், குறுகிய கால விதை ரகங்களை 30க்கு 15 செ.மீ. இடைவெளியிலும் விதைக்க வேண்டும்.
  • விதை முளைப்பு சீராக இருப்பதற்கு தண்ணீரில் ஊறவைத்து பின் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.
  • நீண்டகால ரகமாக இருந்தால் சதுரமீட்டரில் 12 செடிகளும், குறுகிய கால ரகமாக இருந்தால் சதுர மீட்டரில் 24 செடிகளும் இருக்கும்படி கவனித்துக்கொள்ள வேண்டும்.
  • ஒரு கிலோ விதையுடன் 42 கிராம் திரம் என்னும் மருந்தைக் கலந்து விதைக்க வேண்டும்.
  • ஏக்கருக்கு 10 முதல் 20 வண்டிகள் நன்கு மக்கிய தொழு உரம் இட்டு நிலத்தைப் பண்பட உழ வேண்டும்.
  • தொழு உரத்தோடு உயிர் உரமாகிய அசோஸ்பைரில்லத்தையும் கலந்து இடவேண்டும்.
  • 10 கிலோ தொழு உரம், 10 கிலோ மண் இவற்றுடன் 4 பாக்கெட் அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தையும் கலந்து வயலில் சீராகத் தூவ வேண்டும்.
  • ஏக்கருக்கு அடி உரமாக தழைச்சத்து 8 கிலோ, மணிச்சத்து 8 கிலோ, சாம்பல்சத்து 8 கிலோ ஆகியவை கிடைப்பதற்கு ஏற்ற ரசாயன உரங்களை இடவேண்டும்.
  • கடைசியாக 5 கிலோ நுண்ணூட்டச் சத்துக்களை 15 கிலோ ஆற்று மணலுடன் கலந்து ஏக்கர் பரப்பில் சீராகத் தூவ வேண்டும்.
விதைத்தல்:
  • விதையுடன் அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தைக் கலந்து விதைக்கலாம்.
  • விதைக்கும் நிலத்தில் விதையை உளுந்து தெளிப்பது போல் தெளித்து விதையை மண்ணால் மூடி, பின் பாத்தி கட்டி பாசனம் செய்து சதுர மீட்டரில் ரகங்களுக்குத் தக்கவாறு 12 அல்லது 24 செடிகள் உள்ளபடி செய்து அதிகமாக இருக்கும் செடிகளைக் களைந்துவிடலாம்.
  • இல்லையேல் பாருக்கு பார் 60 அல்லது 30 செ.மீ. உள்ளபடி அமைத்துக் கொண்டு விதையை பாருக்கு பக்கவாட்டில் 15 செ.மீ. இடைவெளியில் ஊன்றலாம்.
  • 10வது நாளில் நன்கு வளர்ந்த ஒரு செடியை விட்டுவைத்து மற்ற செடிகளைக் களையெடுக்க வேண்டும்.
  • சூரியகாந்தி பயிருக்கு ஒரு முறை களையெடுத்து நிலத்தைக் கொத்திவிட்டு பின் மீதமுள்ள தழைச்சத்தாகிய 18 கிலோ அளவை மேலுரமாக இடவேண்டும். இதற்கு 18 கிலோ யூரியா இடவேண்டும்.
  • விதை விதைப்பதற்கு முன் விதைத்த நான்காம் நாள் உயிர்த்தண்ணீர், விதைத்த 20ம் நாள், 35ம் நாள், 40ம் நாள், 60ம் நாள், 20-25வது நாள் மொட்டுகள் உருவாகும் சமயம், 30-45வது நாள் பூக்கள் மலரும் போதும், 50-60வது நாள் விதை முற்றும் சமயம் மண்ணில் ஈரம் இருக்கும்படியாக நீர் பாய்ச்ச வேண்டும்.
  • நிலத்தில் நீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
  • அறுவடைக்கு ஒரு வாரம் முன் பாசனத்தை முற்றிலும் நிறுத்திவிட வேண்டும்.
  • விதைத்த 30வது நாள் ஏக்கருக்கு 111 மில்லி பிளானோபிக்ஸ் பயிர் ஊக்கியை 250 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். இது பூக்களில் அதிக விதை பிடிக்க உதவுகின்றது.
  • சூரியகாந்தியில் அயல் மகரந்த சேர்க்கையை ஏற்படுத்தி அதிக விதை உற்பத்தி செய்யலாம். இதற்கு பூ மலர்ந்த பிறகு காலை 9 மணியிலிருந்து 11 மணிக்குள் தொடர்ந்து 10 நாட்களுக்குள் மற்றொரு பூவுடன் உராயும்படி செய்ய வேண்டும்.
  • பூக்களில் விதைகள் முதிர்ச்சி அடையும்போது பச்சைக்கிளிகள் பூக்கொண்டைகளை அலகால் கொத்தி கடும் சேதத்தை உண்டாக்கும். டப்பாக்களைத் தட்டி சத்தம் எழுப்பி கிளிகளைத் துரத்தவேண்டும்.

அறுவடை

  • சூரியகாந்தி பூக்களின் அடி பாகம் மஞ்சள் நிறமாக மாறிய உடன் பூக்களை அறுவடை செய்து களத்துமேட்டில் காயப்போட வேண்டும்.
  • பூக்கள் சரியாக காயாமல் இருக்கும்போது கோணிச்சாக்கில் சேமித்தால் அவற்றில் பூசணம் வளர்ந்து நஷ்டம் ஏற்படும்.
  • களத்துமேட்டில் அடிக்கடி பூக்களை கிளறிவிட்டு நன்கு காயப்போட வேண்டும்.
  • நன்கு உலர்ந்த பூக்களை தடியால் அடித்து விதையைப் பிரித்து அவற்றை சுத்தம் செய்து விற்பனை செய்துவிடலாம். நல்ல முறையில் சாகுபடி நுட்பங்களை அனுசரித்தால் கணிசமான லாபத்தை அடையமுடியும்.

கொத்தமல்லி சாகுபடி (Kothamalli Saagubadi) - Coriander and Cilantro: Planting, Growing and Harvesting

குறுகிய காலத்தில் விவசாயிகள் அதிக வருமானம் பெற ஏற்ற பயிராக கொத்தமல்லி உள்ளது.
கொத்தமல்லி இலைகள் மற்றும் விதைகள், வாசனைப் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.  தமிழ்நாட்டில் கடலூர், தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் கொத்தமல்லி அதிகம் பயிரிடப்படுகிறது.

கொத்தமல்லி சாகுபடி மொத்தப் பரப்பில் 93 சதம் மானாவாரியாகப் பயிரிடப்படுகிறது. ஆண்டு முழுவதும் அனைத்து பருவ காலங்களிலும் கொத்தமல்லியை கீரைக்காகச் சாகுபடி செய்யலாம் என்றாலும், தமிழகத்தில் குளிர் காலம் மற்றும் கோடைக்காலம் என்ற இரு பருவங்களில் கொத்தமல்லி பெரும்பாலும் கீரைக்காகப் பயிரிடப்படுகிறது.
  • குளிர்கால சாகுபடி டிசம்பரில் தொடங்குகிறது.
  • மாசி, பங்குனியில் கோடை சாகுபடி செய்யப்படுகிறது.
  • கரிசல் மண் நிலங்களில் கொத்தமல்லி பாசனப் பயிராகச் சாகுபடி செய்யப்படுகிறது.
  •  விதைத்த 30 நாளில் அறுவடைக்கு வருவதால், குறுகிய காலப் பணப்பயிராக உள்ளது.
  • இதை ஏக்கர் கணக்கில் ஒரே முறையாகப் பயிரிடாமல், 20 சென்டுகளாகப் பிரித்து 15 நாட்களுக்கு ஒரு முறை விதைத்தால், வருடம் முழுவதும் அறுவடை செய்யலாம்.
  • 400 கிராம் எடை கொண்ட ஒரு கட்டு கொத்தமல்லி ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது.
  • கொத்தமல்லியை பயிரிட்டு குறுகிய காலத்தில் விவசாயிகள் லாபம் பெறலாம்.


சாகுபடி முறைகள்:
  • நிலத்தை கட்டிகள் இல்லாமல் நன்றாக உழுது சமன்படுத்திய பின்னர் பாத்திகள் அமைக்க வேண்டும்.
  • பாத்திகளின் பாரின் மீது வரிசையாக நேர் கோட்டில் விதைகளைப் போட்டு, மண் போட்டு மூடிவிட வேண்டும்.
  • பாரின் மேல் நீர் பாய்ச்சி வந்தால் விதைத்த 10-12 நாட்களில் முளைவிடும்.
  • நீர் பாய்ச்சிய 10-12 நாட்களில் களைக் கொல்லி (ஆக்சிகோல்ட்) அடிக்க வேண்டும்.
  • கோடை பட்ட சாகுபடியில் களைக் கொல்லிகள் தேவையில்லை.
  • முளைத்த 20-ம் நாள் 17:17:17 உரம் ஏக்கருக்கு 150 கிலோ இடவேண்டும்.
  • இலைவழி உரமாக 19:19:19-ஐ 30-வது நாளில் தெளிக்க வேண்டும்.
  • விதைத்த 8 நாட்களில் பழுது இல்லாமல் முளைத்து விட்டால், அறுவடையின் போது அனைத்து இலைகளும் ஒரே சீராகவும், அழகிய இலைகளாகவும் இருக்கும்.
  • பயிர் பாதுகாப்பிற்கு பூச்சிக் கொல்லி மருந்துகள் எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.
  • முறையாகப் பயிரிட்டால், ஒரு ஏக்கரில் மகசூல் 6 ஆயிரம் கிலோ கொத்தமல்லி தழை கிடைக்கும். ஒரு கிலோ விலை ரூ.10 வீதம் கணக்கிட்டால் மொத்த வருவாய் ரூ.60 ஆயிரம். சாகுபடிச் செலவு ரூ.11,600 போக லாபம் ரூ.48,400 ஆகும்.
  • ஆண்டு முழுவதும் பயிரிட்டால் வருடத்திற்கு ஹெக்டேருக்கு 5 முதல் 6 டன் வரை கொத்தமல்லி கீரை அறுவடை செய்யலாம். ஹெக்டேருக்கு ரூ. 2 லட்சம் வரை வருமானம் கிடைக்கும்.
  • கொத்தமல்லி கீரை 50 நாள்களில் அறுவடைக்கு வரும்.
  • நாட்கள் அதிகமானால் எடை அதிகரிக்கும். எடை அதிகரிக்கும்போது விலை குறைந்துவிடும்.
  • ஆனால் 50 முதல் 55 நாள்களில் அறுவடை செய்தால் இலை நன்றாக இருக்கும். நல்ல விலை கிடைக்கும். சில்லறையாக விற்பனை செய்தால் கூடுதல் விலை கிடைக்கும்.

பால் உற்பத்திக்கு பயன்படும் அயல்நாட்டின மாட்டினங்கள் (Paal Urpathiku Payanpadum Ayal Naatu Maatinangal) - Foreign Cow Breeds which is used for Milking

பால் உற்பத்திக்கு பயன்படும் அயல்நாட்டின மாட்டினங்கள
  1. ஜெர்சி
  • இங்கிலாந்தின் ஜெர்சி தீவில் உருவான சிறிய மாட்டினம்.
  • இந்தியாவின் தட்பவெப்பநிலைக்கு  இந்த இன மாடுகள் நன்கு ஏற்றவையாக உள்ளன. எனவே இவை இந்தியாவின் நாட்டு மாடுகளின் கலப்பினத்திற்கு பொதுவாக உபயோகிக்கப்படுகின்றன.
  • இம்மாடுகள் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்துடன் காணப்படும்.
  • இம்மாடுகள் தட்டையான முன்பகுதி தலையுடன், கச்சிதமான உடலமைப்புடனும் காணப்படும்.
  • இம்மாட்டினங்களின் பாலில் 5.3 % கொழுப்பு மற்றும் 15% இதர திட சத்துக்களும் இருக்கிறது.

  2. ஹோல்ஸ்டியன் –ஃபிரீசியன்
  • இம்மாட்டினம் நெதர்லாந்தின் வட பகுதிகளில் குறிப்பாக ஃபிரீஸ்லாந்து பகுதியில் உருவானது.
  • இவை நன்கு உருவான உடலமைப்புடன், பெரிய பால் மடிகளையும் கொண்டவை.
  • இவை அதிக பால் கொடுக்கும் பெரிய மாட்டினங்களாகும். நன்கு வளர்ந்த மாடுகள் 700 கிலோ உடல் எடை வரை இருக்கும்.
  • இவற்றின் உடல் கருப்பு மற்றும் வெள்ளை நிற திட்டுகளுடன் காணப்படுவதால் இவற்றை எளிதில் அடையாளம் காணமுடியும்.
  • ஒரு கறவை காலத்தில் இவற்றின் சராசரி பால் உற்பத்தி 6000-7000 கிலோவாக இருக்கும். ஆனால் இம்மாட்டினங்களின் பாலில் கொழுப்புச்சத்து குறைவாக இருக்கும் (3.45%).

  3. பிரவுன் ஸ்விஸ்
  • இம்மாட்டினங்கள் ஸ்விட்சர்லாந்தின் மலைப்பகுதிகளிலிருந்து தோன்றியவை.
  • ஸ்விட்சர்லாந்தில் இம்மாட்டினங்கள் பெயர்பெற்றவை. மேலும் இவற்றின் உடல் நன்கு பெரியதாகக் காணப்படுவதுடன், இவற்றின் பால் உற்பத்தியும் அதிகம்.
  • கரன் ஸ்விஸ் எனப்படும் மாட்டினம் இந்தியாவின் நாட்டு மாடுகளுடன் பிரவுன் ஸ்விஸ் மாட்டினங்களை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்ட ஒரு சிறந்த கலப்பின மாட்டினமாகும்.

  4. ரெட் டேன்
  • டேனிஸில் உருவான இம்மாட்டினங்களின் உடல் சிவப்பு நிறத்துடனோ அல்லது சிவப்பு கலந்த பழுப்பு நிறத்துடனோ அல்லது அடர்ந்த பழுப்பு நிறத்துடனோ காணப்படும்.
  • இவை நன்கு வளர்ந்த பெரிய மாட்டினங்களாகும். காளைகள் 950 கிலோ உடல் எடை வரை இருக்கும். பசு மாடுகள் 600 கிலோ வரை உடல் எடையுடன் இருக்கும்.
  • ரெட் டேன் மாடுகளின் பால் உற்பத்தி 3000-4000 கிலோ, 4 சதவிகிதம் அல்லது அதற்கு மேற்பட்ட கொழுப்புச்சத்துடன் இருக்கும்.

  5. ஆயிர்ஷையர்
  • இம்மாட்டினங்களின் தாயகம் ஸ்காட்லாந்திலுள்ள ஆயிர்ஷையர் ஆகும். இவை பால் உற்பத்தி செய்யும் அழகான மாட்டினங்களாகும். இவை மிகுந்த சுறுசுறுப்புடன் இருப்பதால் இவற்றை மேலாண்மை செய்வது கடினம்.
  • இவற்றின் பால் உற்பத்தி குறிப்பிடும் படியாக இல்லை, மேலும் பாலின் கொழுப்புச்சத்தும் மற்ற மாட்டினங்களை போலவே (4%) இருக்கும்.
  • இந்த மாட்டினம் டன்லப் மாடு அல்லது கன்னிங்ஹாம் மாடு என்றும் அழைக்கப்படுகிறது.

  6. கர்ன்சி
  • இம்மாட்டினங்கள் பிரான்சின் கர்ன்சி எனும் தீவிலிருந்து தோன்றியவை.
  • இவற்றின் பாலில் அதிக அளவு புற்றுநோயினைத் தடுக்கும் பீட்டா கரோட்டின் எனப்படும் சத்து இருப்பதால் பொன்னிறத்துடன் இருக்கும்.
  • இம்மாட்டினங்களின் பாலில் அதிக அளவு கொழுப்புச்சத்தும் (5%), அதிக அளவு புரதச்சத்தும் (3.7%) இருக்கிறது.
  • கர்ன்சி மாடுகள் ஒரு வருடத்தில் 6000 லிட்டர்கள் வரை பால் உற்பத்தி செய்யும்.
  • இம்மாட்டினங்கள் அதிக பால் உற்பத்தி செய்வதாலும், கன்று ஈனும் போது மிகக்குறைந்த சிரமங்களே இருப்பதாலும், நீண்ட நாள் வாழ்வதாலும் இவற்றை வளர்க்கும் பால் பண்ணையாளர்களுக்கு அதிக நன்மைகள் உண்டு.

 கலப்பு இனங்கள்

 கலப்பின ஜெர்சி
  • வகைப்படுத்தாத உள்நாட்டு மாட்டினங்களை ஜெர்சி இன விந்துக்களை கொண்டு
    கருவூட்டல் செய்யும் போது ஜெர்சி கலப்பின மாடுகள் உருவாக்கப்படுகின்றன.
  • ஜெர்சி கலப்பின மாடுகள் நமது நாட்டின் சமவெளிப்பகுதிகளுக்கு ஏற்ற மாட்டினங்கள்.
  • இவைகள் சுமாரான உடல் அமைப்பையும், அதிக வெப்பம் தாங்கும் திறனையும் பெற்றுள்ளன.
  • உள்நாட்டு இனங்களின் பால் உற்பத்தி திறனுக்கு ஏற்ப, ஜெர்சி கலப்பின மாடுகள் 2 முதல் 3 மடங்கு அதிக பால் உற்பத்தி திறனை கொண்டிருக்கும்.

கலப்பின ஹோல்சியன் ஃபிரீசியன்
  • கலப்பின ஹோல்சியன் பிரிசியன் மாடுகள் குறைந்த வெப்பம் தாங்கும் திறனை பெற்றிருப்பதால், இவைகள் நம் நாட்டின் குளிர் பிரதேசங்களுக்கும், மலைப்பகுதிகளுக்கும் மிகவும் ஏற்றவை.
  • இவைகள் ஜெர்சி கலப்பின மாடுகளைவிட குறைவான நோய் எதிர்ப்புத் திறனை பெற்றுள்ளன.
  • இவைகள் அதிக பால் உற்பத்திதிறனை பெற்றிருந்தாலும், ஜெர்சி கலப்பின மாடுகளை விட பாலில் குறைவான கொழுப்பு சத்து கொண்டவை.

பால் உற்பத்திக்கு பயன்படும் உள் நாட்டின் மாட்டினங்கள் (Paal Urpathiku Payanpadum Ul Naatin Maatinangal) - Indian Cow Breeds which is used for the Milking

பால் உற்பத்தி மற்றும் வேலைக்குப் பயன்படும் உள் நாட்டின் மாட்டினங்கள்

   1. தார்பார்க்கர்
  • தென்கிழக்கு பாகிஸ்தானிலுள்ள தார்பார்க்கர் மாவட்டத்தில் இம்மாட்டினங்கள் தோன்றியவை.
  • இவை வெள்ளை சிந்தி, சாம்பல் சிந்தி, தாரி என்றும் அறியப்படுகின்றன.
  • இம்மாட்டினங்களின் தோல் வெள்ளை மற்றும் வெளிறிய சாம்பல் நிறத்துடன் காணப்படும்.
  • இம்மாட்டினங்களின் காளைகள் வண்டி இழுப்பதற்கும்,  உழுவதற்கும் பயன்படுகின்றன. பசு மாட்டினங்கள் அதிக பால் உற்பத்திக்கு பெயர் பெற்றவை (1800-2600 கிலோ).
  • முதல் கன்று ஈனும் வயது 38-42 மாதங்களாகவும், கன்று ஈனும் இடைவெளி 430-460 நாட்களாக இருக்கும்.

  2. ஹரியானா 
  • ஹரியானா மாநிலத்தின் ரோடக், ஹிசார், ஜின்த் மற்றும் குவார்கன் மாவட்டங்களிலிருந்து இம்மாட்டினம் தோன்றியது.
  • இவற்றின் கொம்புகள் சிறியதாக இருக்கும்.
  • காளை மாடுகள் வேலை செய்யும் திறனுக்கு பெயர் பெற்றவை.
  • இவ்வினத்தினைச் சேர்ந்த பசு மாடுகளின் பால் கொடுக்கும் திறன் அதிகம். நாள் ஒன்றுக்கு ஒரு மாடு சராசரியாக  1.5 கிலோ பால் உற்பத்தி செய்யும். கறவை காலம் 300 நாட்கள்.
  • ஒரு கறவை காலத்தில் 600-800 கிலோ பால் உற்பத்தி செய்யக்கூடியவை. முதல் கன்று ஈனும் வயது சராசரியாக 40-60 மாதங்கள்.

   3. காங்ரெஜ்
  • இவ்வின மாடுகள் வாட்தாத் அல்லது வேஜ்ட் அல்லது வாட்தியார் என்ற பெயர்களாலும் அறியப்படுகின்றன.
  • குஜராத் மாநிலத்தின் வடகிழக்கு கட்ச் வளைகுடா பகுதியிலும் அதன் அருகிலுள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் மற்றும் ஜோட்பூர் மாவட்டங்களிலிருந்தும் இம்மாட்டினங்கள் தோன்றின.
  • இம்மாட்டினங்கள் வெள்ளை கலந்த சாம்பல் நிறம் அல்லது அடர்ந்த கருப்பு நிறத்துடன் காணப்படும்.
  • காங்ரெஜ் மாட்டினங்கள் வேகமான, அதிக திறனுடைய வேலைகளுக்கு பெயர் பெற்றவை. உழவிற்கும் வண்டி இழுப்பதற்கும் பயன்படுகின்றன.
  • இம்மாட்டினத்தினைச் சேர்ந்த பசுக்களின் பால் உற்பத்தி 1360 கிலோவாகும்.

  4. ஓங்கோல் 
  • இம்மாட்டினங்கள் நெல்லூர் என்றும் அறியப்படுகின்றன.
  • இவற்றின் தாயகம் ஆந்திரபிரதேசத்தின் ஓங்கோல் வட்டம் மற்றும் குண்டூர் மாவட்டமாகும்.
  • இவற்றின் சராசரி பால் உற்பத்தி 1000 கிலோ. முதல் கன்று ஈனும் வயது 38-45 மாதங்கள். கன்று ஈனும் இடைவெளி 470 நாட்களாகும்.

   5.கிருஷ்ணா பள்ளத்தாக்கு
  • கர்நாடக மாநிலத்தின் கிருஷ்ணா ஆற்றின் வடிகால் பகுதியிலுள்ள கரிசல் மண் பகுதிகளிலிருந்து இவ்வினம் தோன்றியது.
  • இம்மாடுகள் பெரிய உடலமைப்புடன், நன்கு அமைந்த தசைப்பிடிப்புகளுடன் இருக்கும்.
  • இவ்வினத்தினைச் சேர்ந்த மாடுகளின் வால் தரையினை தொடும் அளவு வளர்ந்திருக்கும்.
  • பொதுவாக இவ்வின மாடுகள் சாம்பல் நிறத்தில் காணப்படுவதோடு, இவற்றின் முன்னங்கால்கள் மற்றும் பின்னங்கால் பகுதிகளில் அடர்ந்த சாம்பல் நிறம் காணப்படும். வளர்ந்த பசு மாடுகள் வெள்ளை நிறத்துடன் காணப்படும்.
  • இம்மாட்டினங்களின் காளை மாடுகள் நல்ல வேலைத்திறன் மிக்கவையாதலால் உழவிற்கும், இதர விவசாய வேலைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
  • இவ்வினத்தினைச் சேர்ந்த பசுக்களின் பால் உற்பத்தி சுமாராக இருக்கும். இவற்றின் சராசரி பால் கொடுக்கும் அளவு 916 கிலோவாகும்.

  6.டியோனி 
  • இந்த மாட்டினங்கள் டோங்கார்பட்டி, டோங்காரி, வான்னெரா, வாக்ட், பலன்க்யா, சிவேரா என்ற பல பெயர்களால் அறியப்படுகின்றன.
  • இம்மாட்டினம் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மாரத்வாடா பகுதியிலிருந்தும், அருகிலுள்ள கர்நாடகா மற்றும் மேற்கு ஆந்திரப்பிரதேச மாநிலத்திலிருந்தும் தோன்றியது.
  • இவற்றின் தோல் புள்ளிகளுடன் கூடிய கருப்பு அல்லது வெள்ளை நிறத்துடன் காணப்படும்.
  • முதல் கன்று ஈனும் வயது 894-1540 நாட்களாகவும் சராசரியாக 940 நாட்களாக இருக்கும்.
  • இம்மாட்டினங்களின் பால் உற்பத்தி 636-1230 கிலோவாகவும், சராசரியாக 940 கிலோவாக இருக்கும்.
  • கன்று ஈனும் இடைவெளி 447 நாட்களாக இருக்கும்.

எருமை மாட்டினங்கள் (Erumai Maadu Enangal) - Buffalo breeds

உள்நாட்டு எருமை மாட்டினங்கள்

   1. முர்ரா
  • மிகவும் முக்கியம் வாய்ந்த இந்த இன எருமை மாட்டினம் ஹரியானா மாநிலத்தின் ரோட்டக், ஹிசார் மற்றும் ஜின்த் மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் நபா, பாட்டியாலா மாவட்டங்களிலிருந்தும், தில்லி மாநிலத்தின் தெற்கு பகுதியிலிருந்தும் தோன்றியவை.
  • இவை தில்லி, குந்தி, காலி என்றும் அறியப்படுகின்றன.
  • இவற்றின் உடல் அடர்ந்த கருப்பு நிறமாகக் காணப்படும். வாலிலும், முகத்திலும், சில சமயங்களில் கால்களிலும் வெள்ளை நிறம் காணப்படும்.
  • இவற்றின் கொம்புகள் நன்கு வளைந்திருப்பதே இந்த இன எருமைகளின் முக்கியமான பண்பாகும்.
  • இவ்வின எருமைகள் அதிக பால் உற்பத்திக்கும், பாலில் உள்ள அதிக கொழுப்புச்சத்திற்கும் இந்தியாவில் பெயர் பெற்றவை.
  • முர்ரா இன எருமைகளின் பாலில் 7 சதவிகித கொழுப்புச்சத்து இருக்கும். இவற்றின் சராசரி பால் உற்பத்தி அளவு 1500-2500 கிலோவாகும். மேலும்  இவற்றின் ஒரு நாள் சராசரி பால் உற்பத்தி 6.8 கிலோ.
  • குறைந்த உற்பத்தி கொண்ட நாட்டு எருமையினங்களை கலப்பினம் செய்வதற்கும் இவ்வின எருமைகள் பயன்படுகின்றன.

  2. சுர்தி 
  • இம்மாட்டினங்களின் தாயகம் குஜராத் மாநிலத்தின் கெய்ரா மற்றும் பரோடா மாவட்டங்களாகும்.
  • இவற்றின் தோலிலுள்ள முடி பழுப்பு நிறம் முதல் சாம்பல் நிறம் வரை வேறுபடும். தோல் கருப்பு அல்லது பழுப்பு நிறத்துடன் இருக்கும்.
  • இவற்றின் கொம்புகள் அரிவாள் போன்று வளைந்து, நீண்டு தட்டையாகக் காணப்படும்.
  • தாடையைச் சுற்றியும், இரண்டு கால்களுக்கும் இடையில் உள்ள நெஞ்சுப்பகுதியிலும் வெள்ளை நிறம் காணப்படுவது இவ்வின எருமைகளின் தனியான குணநலனாகும்.
  • இவற்றின் பால் உற்பத்தி 900-1300 கிலோவாகும்.
  • இவ்வின எருமைகளின் பால் அதிக கொழுப்புச் சத்துக்கு பெயர் பெற்றது (8-12%).

   3. ஜஃப்ராபாடி
  • இவ்வின எருமைகளின் தாயகம், குஜராத் மாநிலத்தின் கிர் காடுகள், கட்ச், ஜாம் நகர் மாவட்டங்களாகும்.
  • இவற்றின் கொம்புகள் திடமாக வளர்ந்து, கழுத்து வரை சாய்ந்து பின் நேராக வளைந்து கூர்மையாக இருக்கும்.
  • இவற்றின் பால் உற்பத்தி 100-200 கிலோக்களாகும்.
  • இவ்வின காளைகள் அதிக உடல் எடையுடன் இருப்பதால் உழவுக்கும், வண்டி இழுப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
  • இந்த எருமையினங்கள் பொதுவாக நாடோடி மக்களான மல்தாரிகள் என்பவர்களால் வளர்க்கப்படுகின்றன.

  4. பாதாவாரி 
  • இவ்வின எருமைகளின் தாயகம் உத்திரப்பிரதேசத்தின் ஆக்ரா மற்றும் எட்டாவா மாவட்டங்களும், மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டமுமாகும்.
  • இவற்றின் உடல் செம்பு நிறத்தில் காணப்படுவது இவற்றின் தனிச்சிறப்பாகும். இவற்றின் கண் இமைகள் பொதுவாக செம்பு நிறத்திலோ அல்லது வெளிறிய பழுப்பு நிறத்திலோ காணப்படும்.
  • இவற்றின் கழுத்தின் அடிப்பகுதியில் இரண்டு வெள்ளை நிறக்கோடுகள்  காணப்படும்.
  • இவற்றின் சராசரி பால் உற்பத்தி 800-1000 கிலோவாகும்.
  • இந்த எருமையினக் காளைகள் வேலைத்திறனுக்கும் அதிக வெப்பத்தினைத் தாங்குவதற்கும் பெயர் பெற்றவை.
  • இந்த எருமையினங்களின் பாலில் கொழுப்புச்சத்து 6-12.5சதவிகிதம் காணப்படும். இந்த எருமையினங்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த தீவனத்தை அதிக கொழுப்புச்சத்து மிகுந்த பாலாக மாற்றும் திறனுடையவை.

   5.நிலிராவி
  • இந்த எருமையினம் பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தின் சட்லெஜ் நதி கரையிலும், பாகிஸ்தானின் சாகிவால் மாவட்டத்திலும்(ராவி ஆற்றின் கரை) தோன்றியது.
  • இந்த எருமையினங்களின் தனிச்சிறப்பு இவற்றின் கண்களாகும்.
  • இவ்வின எருமைகளின் பால் உற்பத்தி ஒரு கறவை காலத்தில்  1500-1850 கிலோவாகும்.
  • கன்று ஈனும் இடைவெளி 500-550 நாட்களாகவும், முதல் கன்று ஈனும் வயது 50 மாதங்களாகவும் இருக்கும்.

  6. மேசானா 
  • மேசானா இன எருமைகள் பால் உற்பத்திக்காக குஜராத்தின் மேசானா நகரிலும், அருகிலுள்ள மகாராஷ்ட்டிரா மாநிலத்திலும் வளர்க்கப்படுகின்றன.
  • மேசானா இன எருமைகள் சுர்தி மற்றும் முர்ரா எருமைகளை கலப்பினம் செய்ததால் தோன்றிய எருமையினமாகும்.
  • இவற்றின் பால் உற்பத்தி 1200-1500 கிலோவாகும்.
  • கன்று ஈனும் இடைவெளி 450-550 நாட்களாகும்.

   7. நாக்பூரி
  • மகாராஷ்டிராவின் நாக்பூர், அகோலா மற்றும் அம்ராவாடி மாவட்டங்கள் இந்த எருமையினங்களின் பூர்வீகமாகும்.
  • இவை கருப்பு நிறத்துடன், கால்கள், முகம் மற்றும் வாலில் வெள்ளை நிறத்திட்டுகளுடன் காணப்படும்.
  • இந்த எருமையினங்கள் எலிட்ச்புரி அல்லது பார்பாரி என்றும் அறியப்படுகின்றன.
  • இந்த எருமையினங்களின் முதல் கன்று ஈனும் வயது 45-50 மாதங்களாகவும், கன்று ஈனும் இடைவெளி 450-550 நாட்களாகும்.

  8. தோடா 
  • தோடா இன எருமைகள் தென்னிந்தியாவின் நீலகிரி மலைப்பகுதியிலுள்ள தோடா என்ற பழங்குடிகள் பெயரைக் கொண்டவை.
  • இவை பெரும்பாலும் பழுப்பு நிறத்துடன் அல்லது சாம்பல் நிறத்துடன் காணப்படும்.
  • நீலகிரியிலிருந்து தோன்றியதால் இந்த எருமையினங்கள் மற்ற எருமையினங்களிலிருந்து வேறுபட்டவை.
  • இவற்றின் உடலில் அடர்த்தியாக ரோமங்கள் காணப்படும்.
  • இவை எப்பொழுதும் அலைந்து கொண்டே இருக்கும் தன்மையுடையவை.

Friday, March 27, 2015

தென்னந்தோப்புக்குள் ஊடுபயிராக ஏழு ரக வாழை சாகுபடி (Thennaiyil Uudu Payiraga Vaalai) - Coconut + Banana Intercropping


அசத்தும் ஜீரோ பட்ஜெட் விவசாயி!

ஊடுபயிர் என்றைக்குமே  விவசாயத்தை உயர்த்தும் பயிர் என்பதில் சந்தேகமே இல்லை என்று அடித்தச் சொல்கிறார். சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்துள்ள தார்க்காடு பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயி, தெய்வம் வரதராஜன். இவர், தனது தென்னந்தோப்புக்குள் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்து வருகிறார்.


பாதை காட்டிய பசுமை விகடன்!
எனக்குப் பூர்வீகமே கொளத்தூர்தானுங்க. இங்கிலீஷ் லிட்ரேச்சர் படித்து முடித்து கையோடு, விவசாயத்திற்கு வந்துவிட்டேன். இப்போது 30 வருடமாகிறது. தென்னைக்கு இடையில் 18 வருடமாக வாழையை ஊடுபயிராக சாகுபடி செய்துக் கொண்டிருக்கிறேன். கோடைக் காலங்களில் கிணற்றுப் பாசனம், மழைக் காலங்களில் ஏரிப்பாசனம். ஆரம்பத்தில் நானும் ரசாயன விவசாயம் தான். சம்பாதிப்பதில் முக்கால் வாசியை உரக் கடைக்குத்தான் கொடுக்க வேண்டியிருந்தது. அதில்லாமல் கட்டுபடியான விலையும் கிடைக்கவில்லை.

உற்பத்திச் செலவை எப்படிக் குறைப்பது என்பதை  யோசனை செய்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாற்று வழியைக் காட்டியது ‘பசுமை விகடன்’தான். அதில் வெளியான இயற்கை விவசாயம் சம்பந்தமான கட்டுரைகள் என்னை மிகவும் ஈர்த்தது. தொடர்ந்து, பசுமை விகடன் நடத்தின ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்புகள், ‘இனியெல்லாம் இயற்கையே’ களப்பயிற்சிகள் எல்லாவற்றிலும் கலந்து கொண்டு. இயற்கை வேளாண்மை பற்றிய விஷயங்களைத் தெளிவாக தெரிந்துகொண்டேன். அதன் பிறகு  முழு இயற்கை விவசாயியாக மாறினேன். இப்போது மூன்று வருடமாக ஜீரோ பட்ஜெட் முறையில்தான் விவசாயம் செய்கிறேன். 10 ஏக்கர் தென்னந்தோப்பில் 8 ஏக்கரில் மட்டும் ஏழு ரக வாழையை ஊடுபயிராக சாகுபடி செய்து கொண்டிருக்கிறேன். அதனால் உற்பத்திச் செலவு வெகுவாக குறைந்திருக்கிறது.

வெயில் கிடைக்கும் இடங்களில் மட்டும் ஊடுபயிர்!
தோப்பில் 27 அடி இடைவெளியில் மொத்தம் 700 நாட்டு தென்னை மரங்கள் இருக்கு. எல்லாமே, 30 வயது முதல் 40 வயது வரைக்கும் உள்ள மரங்கள், தோப்பிற்குள்ளே ஏகத்திற்கும் சூரிய வெளிச்சம் கிடைத்ததால் ஊடுபயிராக வாழை போட்டிருக்கிறேன். தனிப்பயிராக வாழையை நட்டால், ஏக்கருக்கு 1,000 மரங்கள் முதல் 1,200 மரம் வரைக்கும் பிடிக்கும். ஆனால், ஊடுபயிராக செய்யும்போது அதில் பாதிதான் நடமுடியும். வெயில் கிடைக்கும் இடங்களில் மட்டும்தான் நடவு செய்ய வேண்டும். இரண்டு தென்னைக்கு இடையில் ஒரு வாழை என்று நட்டிருக்கிறேன்.

பூவன், தேன்வாழை, செவ்வாழை, ரஸ்தாளி, மொந்தன், நேந்திரன், ஜி – 9 என்று ஏழு ரகங்களில் மொத்தம் 4 ஆயிரத்து 800 வாழைகள் இருக்கு (பூவன் -1,000 செவ்வாழை-500. தேன்வாழை-1,000, ரஸ்தாளி-500, நேந்திரன் – 500, ஜி -9 -800, மொந்தன்-500). மூன்று வருடமாக தோப்பில் உழவே செய்யவில்லை. தட்டைப்பயிரை ஏகத்திற்கும் விதைத்து விடுவதால் களைகள் கட்டுப்படுவதோடு, தழைச்சத்தும் கிடைக்கிறது. அங்கங்கே செண்டு மல்லிச் செடிகள் இருப்பதால் நூற்புழுத் தொந்தரவும் இல்லை. தொடர்ந்து பாசனத்தோடு ஜீவாமிர்தத்தைக் கொடுக்கிறேன். இயற்கை முறை என்பதால் நோய்களே வருவதில்லை.


வாழையில் இது மூன்றாவது தழைவு. தாய் வாழையைச் சுற்றி நிறைய பக்கக் கன்றுகள் வளரும். இரண்டு மாதம் வளர்ந்த பிறகு, அதில் ஒன்றை மட்டும் விட்டுட்டு, மற்றக் கன்றுகளை அப்புறப்படுத்திவிடவேண்டும். இந்த இரண்டு மாதத்திற்குள் பக்கக் கன்றுகள் கிடைக்கும் இலைகளை அறுத்து விற்கலாம். பக்கக் கன்று வளர வளர, அறுவடை செய்த தாய் வாழை வாடி, பழுத்து தானா கீழே சாய்ந்துவிடும். அப்போது அதை வெட்டி, தோட்டத்தில் பரப்பிட்டால் உரமாகிவிடும்.

ஒரு தார் குறைந்தபட்சமாக 100 ரூபாய்க்கு விற்கும். அந்தக் கணக்கில் 4 ஆயிரத்து 800 தார் மூலமாக வருடத்திற்கு 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இலை மூலமாக 48 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. இடுபொருள் தயாரிக்க, பயிருக்கு கொடுப்பதற்கு என்று ஆட்கள் தேவைப்படுகிறார்கள். அதற்கான கூலி, வருடத்திற்கு 75 ஆயிரம் ரூபாய். ஆரம்பத்தில் நடும்போது உழவு, குழி என்று ஒரு கன்னுக்கு 15 ரூபாய் செலவாகிறது. வியாபாரிகளே அறுவடை செய்து கொள்வதால் அறுவடைச் செலவு கிடையாது. எப்படியும் தென்னை வருமானம் இல்லாமல், ஊடுபயிர் மூலமாகவே எட்டு ஏக்கரிலிருந்து வருடத்திற்கு நான்கு லட்ச ரூபாய் லாபம் கிடைக்கிறது.

விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் தரும் எலுமிச்சை மற்றும் வாழை (Elumichaiyil Uudu Payiraga Vaalai) - Lemon + Banana Intercropping


ஏற்றம் தரும் எலுமிச்சை.. வாரிக் கொடுக்கும் வாழை!


சுவைமிகு கூட்டணி


வேலையாட்கள் பிரச்சனை, மின்சாரப் பிரச்சனை, தண்ணீர் தட்டுப்பாடு.. என அனைத்தையும் தாண்டி விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கொடுத்துக் கொண்டிருக்கும் பயிர்களில் முக்கிய இடத்தில் இருப்பவை, எலுமிச்சை மற்றும் வாழை ஆகியவை. இவை இரண்டையுமே ஒன்றாக இணைத்து சாகுபடி செய்து, கூடுதல் லாபம் ஈட்டி வருகிறார், வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே இருக்கும் பாப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன்.

குடை பிடித்துக் கொண்டிருந்த எலுமிச்சை மரங்கள், சாமரம் வீசி வரவேற்புக் கொடுத்துக் கொண்டிருந்த வாழை மரங்கள் என, விரிந்து கிடந்த தோட்டத்திலிருந்த சந்திரசேகரன் “பத்தாவது வரைக்கும்தான் படித்தேன். அதற்கு மேல் படிக்கப் பிடிக்காததால், தேங்காய் மண்டியில் வேலைக்குச் சேர்ந்தேன். அதுவும் எனக்கு சரிப்பட்டு வரவில்லை. அதனால், அப்பாகூட சேர்ந்து விவசாயம் பார்க்க ஆரம்பித்தேன். அப்போது, கரும்பு சாகுபடி செய்து கொண்டிருந்தோம். நாங்களே வெல்லமாக காய்ச்சி விற்றுவிடுவோம். ஆரம்பத்தில் நல்ல லாபம் கிடைத்தது. ஆனால், போகப்போக மகசூலும் குறைந்துவிட்டது. வெல்லத்தோட விலையும் குறைந்தது. வேறு சாகுபடிக்கு மாறலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தப் போதுதான், ஒரு நண்பர் எலுமிச்சை  போடுவதற்கு யோசனை சொன்னார். அவரும் எலுமிச்சை போட்டிருந்ததால் அவருடைய தோட்டத்திற்குப் போய் நேரடியாக பார்த்து விவரங்களைக் கேட்டுத் தெரிந்துக் கொண்டு.. இரண்டரை ஏக்கரில் எலுமிச்சை சாகுபடியை ஆரம்பித்தேன். இப்போது பன்னிரண்டு வருடமாகிறது. முதல் மகசூல் கிடைக்க ஆரம்பித்தப்போது, கொஞ்சம் விற்பனைக்குக் கஷ்டமாக இருந்தது. இப்போது எந்தப் பிரச்னையும் இல்லை. நல்ல வருமானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

இரண்டு ஏக்கர் வெகுமதி கொடுத்த எலுமிச்சை!
மூன்று வருடம் வரைக்கும் எலுமிச்சைக்கு இடையில் ஊடுயிராக வாழையையும் போட்டிருந்தேன். ஆரம்பத்தில் இது மூன்றிலும் கிடைத்த லாபத்தை வைத்து, ஒரு வீட்டு மனை, இரண்டு ஏக்கர் நிலம் என்று வாங்கிப்போட்டிருக்கிறேன். இப்போது மொத்தம் கையில் 13 ஏக்கர் நிலம் இருக்கு. இரண்டரை ஏக்கரில் தென்னை, 7 ஏக்கரில் மா, எலுமிச்சை, வாழை இருக்கு. ஒரு ஏக்கரை நெல் சாகுபடிக்காக தயார் செய்து வைத்திருக்கிறேன். மீதி இரண்டரை ஏக்கரில் 250 எலுமிச்சை மரங்களும் அதில் ஊடுபயிராக ஆயிரம் கற்பூரவல்லி வாழை மரங்களும் இருக்கிறது என்ற சந்திரசேகரன், எலுமிச்சை மற்றும் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்யும் விதத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

வடிகால் வசதி அவசியம்!
எலுமிச்சை சாகுபடி செய்ய, வடிகால் வசதியுள்ள அனைத்து மண்வகைகளும் ஏற்றவை. ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை உள்ள காலம், நடவுக்கேற்றப் பருவம். இந்தப் பருவத்தில் நடவு செய்யும் போது, நாற்றுகள் பழுதில்லாமல் நல்ல முறையில் வேர் பிடித்து வளரும். அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் எலுமிச்சை பதியன் செடிகளை வாங்கி நடவு செய்து கொள்ளலாம். 



20 அடி இடைவெளி!
20 அடிக்கு 20 அடி இடைவெளியில், 2 கன அடி அளவிற்க்குக் குழிகள் எடுத்து ஒரு வாரம் வரை ஆறப்போட வேண்டும். ஒவ்வொரு குழியிலும் ஒரு கூடை எரு மற்றும் மேல் மண் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து இட்டு நிரப்ப வேண்டும். பிறகு, 40 நாட்கள் வயதுள்ள பதியன் செடிகளை, குழியின் மையத்தில் ஒரு அடி ஆழத்தில் இருப்பது போல், நடவு செய்ய வேண்டும். செடிகள் சாய்ந்து விடாமல் இருக்க, ஒவ்வொரு செடிக்கு அருகிலும் ஒரு நீளமான குச்சியை ஊன்றி, அதனுடன் செடியை இணைத்துக் கட்ட வேண்டும்.

வாரம் ஒரு பாசனம்!
நடவு செய்து 15 நாட்கள் வரை, ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீதம் தண்ணீர் விட வேண்டும். அதற்குப் பிறகு, மண்ணின் ஈரத்தன்மையைப் பொருத்து 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை நேரடிப் பாசனம் செய்தால் போதுமானது. 3 ஆண்டுகள் வரையில்  எலுமிச்சைச் செடிகளுக்கு இடையில் கனகாம்பரம் போல் ஏதாவது ஒரு பயிரை ஊடு பயிராக சாகுபடி செய்யலாம். 4 –ம் ஆண்டில் எலுமிச்சைக்கு இடையில் வாழையை நடவு செய்யலாம். வாழைக்கு, ஆறரை அடி இடைவெளி விட வேண்டும். 7 அண்டுகளில் எலுமிச்சை மரங்கள் நன்கு வளர்ந்து பரவி விடும். அதனால், அதற்குப் பிறகு இடைவெளி உள்ள இடங்களில் மட்டும்தான் வாழை சாகுபடி செய்ய வேண்டும். ஊடுபயிர் சாகுபடிக்கு ஏலக்கி, பூவன், செவ்வாழை, கற்பூரவல்லி போன்ற ரகங்கள் ஏற்றவை. வாழையை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அழித்துவிட்டு, புதிய கிழங்குகளை நடவு செய்ய வேண்டும்.

நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பஞ்சகவ்யா!
எலுமிச்சை மரங்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மரத்தின் அடிப்பகுதியிலிருந்து, ஒரு அடி இடைவெளிவிட்டு அரையடி விட்டத்தில் வட்டப்பாத்தி எடுத்து உரம் வைக்க வேண்டும். இப்படி வட்டப்பாத்தியில் உரம் வைப்பதால், மரங்களுக்கு உடனே சத்துக்கள் சென்று சேரும். அதாவது, ஒவ்வொரு வட்டப்பாத்தியிலும் ஒரு  கூடை ஆட்டு எரு, அரை கிலோ மண்புழு உரம், கால் கிலோ வேப்பம் பிண்ணாக்கு, தலா 200 கிராம் வீதம்... யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி., ஜிப்சம் ஆகியவற்றையும் சேர்த்து கலந்து வைக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அடிப்பகுதியில் இருந்து இரண்டு அடி இடைவெளிவிட்டு இதேபோல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உரம் வைத்து வர வேண்டும்.

வாழை மரங்களுக்கு 3-ம் மாதத்தில்... ஒரு மரத்திற்கு ஒரு கூடை ஆட்டு எரு, அரை கிலோ மண்புழு உரம், கால் கிலோ வேப்பம்பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து மரத்தின் அடிப்பகுதியில் இருந்து, அரையடி இடைவெளியில் வைத்து மண் அணைக்க வேண்டும். 8-ம் மாதத்தில் ஒரு கூடை ஆட்டு எரு, அரை கிலோ மண்புழு உரம், கால்கிலோ வேப்பம் பிண்ணாக்கு, தலா 200 கிராம் வீதம் பொட்டாஷ், டி.ஏ.பி., யூரியா, ஜிப்சம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மரத்தில் இருந்து அரையடி இடைவெளியில் வைத்து மண் அணைக்க வேண்டும். நான்கு மாதங்களுக்கு ஒருமுறை 80 லிட்டர் தண்ணீருக்கு.. ஒரு லிட்டர் பஞ்சகவ்யா வீதம் கலந்து ‘ராக்கர்’ தெளிப்பான் மூலம் தேவையான அளவிற்க்கு தெளிக்க வேண்டும். கொசு மற்றும் வெள்ளை ஈ தாக்குதலை சமாளிக்கப் பரிந்துரைக்கப்படும் பூச்சிக் கொல்லியைத் தெளிக்க வேண்டும்.

எருமை மாட்டின் பால் உற்பத்தி (Erumai Maattin Paal Urpathi) - Livestock Buffalo Milking

பால் கறக்கும் காலமும் அளவும்
எருமையானது கன்ற ஈன்றவுடன் பால் கறக்க ஆரம்பிக்கிறது. முதல் ஓரிரு வாரங்களில் கறக்கும் பாலிலிருந்து அந்த எருமையின் பாலின் தன்மையை அறிந்து கொள்ளலாம்.  5-6 வாரங்களில் அதிக அளவு பால் தரும். இந்த அளவு சில வாரங்களில் வரை தொடர்ந்து பின் குறைய ஆரம்பிக்கும். பின்பு கறவையின் பால் வற்ற ஆரம்பித்துவிடும்.

எருமைகள் நான்காவது கன்று ஈனும் போது அதன் பால் உற்பத்தி அதிகமாக இருக்கும். பின்பு குறைந்து விடும். பால் கறக்கும் கால அளவு தீவனம், பராமரிப்பு, பால் கறக்கும் இடைவெளி, நோய்த்தாக்கம் போன்ற காரணிகளைப் பொறுத்தது. பல்வேறு இன எருமைகளின் பால் உற்பத்திக் காலம் அட்டவணை 10ல் கொடுக்கப்பட்டுள்ளது. முர்ரா இன எருமைகளில் பால் உற்பத்திக் காலம் 262-295 நாட்கள் வரை ஆகும்.


எருமையில் பால் கறத்தல்

பால் உற்பத்தியானது மரபியல் மற்றும் இதர பிற காரணிகளைச் சார்ந்துள்ளது. மரபியல் காரணிகளான இனங்கள், இனப்பொருக்கத் திறன், சினையாகும் திறன், அடுத்தடுத்த கன்று ஈனும் இடைவெளி போன்றவற்றைச் சாாந்து வேறுபடுகிறது. மேலும் இவை தவிர பராமரிப்பு, தீவனத்தின் தரம், அளவு, வளர்ப்பாளரின் சூட்டைக் கண்டு சினைப்படுத்தும் திறன் போன்றவற்றவைப் பொறுத்தும் பால் உற்பத்தி அளவும், காலமும் வேறுபடுகிறது.

தேவையான அளவு ஆற்றல், புரதம், தாதுக்கள், நீர் போன்ற எல்லா வகையான சத்துக்களும் உள்ள தீவனம் முறையாக அளிக்கப்படவேண்டும். அதே போல் எருமைகளில் எந்த அளவு கன்று ஈனும் இடைவெளி உள்ளதோ, அந்த அளவு பால் கறக்கும் காலமும், அளவும் அதிகமாக இருக்கும். எனினும் மொத்தம் ஈனும் கன்றுகளின் அளவு குறைவாக இருக்கும்.

பால் கறக்கும் இடைவெளி பால் அளவு மற்றும் தன்மையைப் பாதிக்கும். முர்ரா இன எருமைகளில் நாளொன்றுக்கு இரு முறை பால் கறப்பதை விட 3 முறை கறக்கும் போது பாலின் அளவு 31 சதவிகிதமும், பால் கொழுப்புச் சத்தின் அளவு 26 சதவிகிதமும் அதிகமாக கிடைக்கிறது.

பால் வற்றிய காலம்


எருமைகளில் 2-3 மாதங்கள் அடுத்த கன்று ஈனும் முன்பு பால் வற்றிவிடும். அந்த இடைவெளியில் மடிக்கு ஓய்வு கொடுத்து புண்பட்ட செல் மற்றும் திசுக்களை புதுப்பித்துக் கொள்ளும்.



அதிக பால் உற்பத்தி கொண்ட எருமை மந்தைகளில் (நாளொன்றுக்கு  10 கி.கி அதிகமாக) அடுத்த கன்று ஈனுவதற்கு 3 மாதங்கள் முன்பே பால் அளவு நாளொன்றுக்கு 2.5 கி.கி குறைந்து பின்பு வற்றிவிடும். இது போன்று வற்றும் கறவையில் புதிதாக பிறந்த சில கன்றுகளை ஊட்டச் செய்யலாம். ஒரு எருமையில் பிறந்து சில வாரங்களான 1 அல்லது 2 கன்றுகளை ஊட்டச்செய்யலாம்.


எருமைப்பாலில் உள்ள முக்கிய நுண்ணுட்டச் சத்துக்கள்
முக்கிய நுண்ணூட்டச் சத்துக்கள்


சோடியம்
750
317
பொட்டாசியம்
1390
908
கால்சியம்
2030
1880
மெக்னீசியம்
200
91.9
இரும்பு
-
0.325
பாஸ்பரஸ்
1290
-
ஜிங்க்
-
626
தாமிரம்
-
0.303

சீம்பாலின் சத்துக்கள்
கன்று ஈன்ற முதல் மூன்று நாட்களில் எருமையானது சீம்பாலைச் சுரக்கும். இதில் கன்றுக்கு அவசியமான இம்யூனோ குளோபுலின் நோய் எதிர்ப்பொருளும், சாதாரண பாலில் உள்ளதை விட தாமிரம், இரும்புச்சத்துக்கள் அதிக அளவிலும் உள்ளன.


அட்டவணை 2 சீம்பாலின் ஊட்டச்சத்துக்கள்
நீர் (சதவீதம்)
கொழுப்பு (சதவீதம்)
மொத்த புரதம் (சதவீதம்)
லேக்டோஸ்
(சதவீதம்)
விட்டமின் எ மைக்ரோ கிராம் / கி.கி
68
15
13.6
3.1
-
73
9.55
9.59
7.54
1.8

பாலின் தன்மை மாறுதல்
பாலின் தன்மை பால் பீய்ச்சும் முன்போ, அல்லது எருமையின் மடியிலேயே மாறலாம். பாலானது பீய்ச்சும் போதே தன்மை மாறி இருந்தால், அது ஏதேனும் நோய்த்தாக்கம் அல்லது நோயைக் குணப்படுத்த அளித்த மருந்தின் ஒவ்வாமையாக இருக்கலாம். சில சமயங்களில் சூழ்நிலை மாற்றம், தீவன மாற்றம் கூட பாலின் தன்மை மாறக் காரணமாக இருக்கலாம்.


தீவனத்தின் தன்மை
உலர்தீவனங்கள் பால் கொழுப்புச் சத்தை அதிகரிக்கும். அதே வேளையில் அடர் தீவனங்கள் அதிகமாகக் கொடுத்தால் புரப்பியோனிக் அமிலம் உண்டாகி பாலின் கொழுப்பு அளவைக் குறைக்கும். அதிக நார்ச்சத்துள்ள உலர் தீவனங்களில் அசிட்டிக் அமிலம் சுரப்பதால் தான் பாலின் கொழுப்புச் சத்து அதிகரிக்கிறது.

அதிக ஆற்றல் உள்ள தீவனங்கள் பாலின் உறையும் (கெட்டி) தன்மையை அதிகரிக்கிறது.


கடுகு எண்ணெய் மற்றும் அக்குடும்பத்தைச் சார்ந்த தாவரங்களை கால்நடைகளுக்கு அளிக்கும் போது அதில் உள்ள குளுக்கோஸினேட்ஸ் (Glucosinolates) கால்நடைகளின் வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகளால்

ஹைட்ரோலஸ் (Hydrolize) செய்யப்பட்டு தையோசையனேட், ஐசோ தையோசையனேட் போன்ற பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இப்பொருட்கள் வயிற்றில் அதிகமாகும் போது அதன் பாலை அருந்தும் மனிதர்களுக்கு தைராய்டு வீங்குதல் போன்ற விளைவுகள் ஏற்படுகிறது. எனவே கடுகுத் தாவரங்களையோ அல்லது புண்ணாக்கையோ அதிக அளவில் கால்நடைகளுக்குக் கொடுக்கக்கூடாது.

நோய்களும் மருந்துகளும்
கால்நடை நோய்கள் பால் அளவையும், தன்மையையும் பெரிதும் பாதிக்கின்றன. நோய் எதிர்ப்பொருள் இரசாயனங்கள் கிருமி நாசினிகள் பயன்படுத்தும் போது அவை பாலுடன் கலக்கின்றன. உதாரணமாக டையஸினான் என்ற மருந்தை வெளிப்புற ஒட்டுண்ணிகள் நீக்க பயன்படுத்திய பிறகு 48 மணி நேரம் கழித்து கறந்த பாலில்  அம்மருந்தின் இராசயனத் தன்மை கலந்திருந்தது.

பால் கறத்தல்



பல நூற்றாண்டுகளாக எருமைகள் பால் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எருமைகளைப் பராமரித்தல் எளிது. மேலும் இதன் பால், மாட்டுப் பாலை விட தரமானது. எருமை மடியின் இயக்கம் மற்றும் உள்ளமைப்பியல் மாடுகளிலிருந்து வேறுபட்டிருப்பதால் பால் கறத்தல் எளிதாகிறது.