Tuesday, November 11, 2014

மண்புழு உரப்பைக் கொண்டு மண்புழு உரம் தயாரித்தல்


மண்ணின் மைந்தன், உழவனின் நண்பன், நிலத்தின் வேர்கள் என்றெல்லாம் அழைக்கப்படுபவை மண்புழுக்கள்.


மண்புழு உரம் தயாரித்தல் என்பது தாவர மற்றும் விலங்கு கழிவுகளை மண்புழுக்களின் உதவியால் மட்க வைத்தலாகும். புழுக்கள் கழிவுகளை ஜீரணிக்க வேண்டுமானால் அக்கழிவுகளின் ஒரு பகுதியாவது மக்கியிருக்க வேண்டும்.

மண்புழு உரம் தயாரிக்கும் முறையை எளிதாக்கி அனைத்து விவசாயிகளும் தங்கள் விளைநிலங்களில் இருந்து கிடைக்கும் இயற்கை கழிவுகளையும் மக்கவைக்கும் மண்புழுக்களையும் கொண்டு தங்கள் இடத்திலேயே மண்புழு உரத்தை எளிதில் தயாரிக்க குறைந்த முதலீடு மண்புழு உரப்பை உதவுகிறது.




ரம் தயாரிக்க உகந்த மண்புழு

1. ஆப்ரிக்கன் மண்புழு
2. சிவப்பு மண்புழு
3. மக்கும் புழு

இவற்றுள் ஆப்ரிக்கன் மண்புழு குறைந்த கால இடைவெளியில் அதிக அளவு மண்புழு உரம் மற்றும் புழுக்களையும் உற்பத்தி செய்வதால் உரம் தயாரிக்க மிகவும் சிறந்தது

மண்புழுக்களுக்கு உகந்த கழிவுகள்

மட்கும் எந்த ஒரு அங்ககக் கழிவுகளையும் உரம் தயாரிக்க பயன்படுத்தலாம்
உதாரணம்:
பண்ணைக் கழிவுகள்
காய்கறிக் கழிவுகள்
இலைச் சருகுகள்
கால்நடை கழிவுகள்
ஆலைக் கழிவுகள்

உர உற்பத்திக்கான இடம்

சற்று மேடானமழைநீர் தேங்காதநாள் முழுவதும் நன்கு அடர்ந்த நிழல் இருக்கும் இடமாகவும் இருக்க வேண்டும்

உரப்பை அமைக்க தேவையான பொருட்கள்

மண்புழு உரப்பை 250 gsm அளவிலான கனத்தை கொண்டு இருக்க வேண்டும்.
இதன் நிகர எடை - 4 கிலொ
இதன் அளவு - 12 x 4 x 2 அடிகள்
இத்தொட்டியை அமைக்க 1" கனம் கொண்ட குழாய் / மூங்கில் / சவுக்கு குச்சிகள்
அவைகளில் 13 அடி நீள்ம் உள்ள 4 குச்சிகளும்
அடி நீள்ம் உள்ள 10 குச்சிகளும் தேவை
பைகளை குச்சிகளுடன் கட்ட சிறிய நைலான் சரடுகள்


தொட்டி அமைத்தல்

உரப்பைகளின் வெளிப்புற நீளவாக்கில் இருபுறமும் மேலும் கீழுமாக உள்ள உறையில் 13 அடி நீளமுள்ள குச்சிகளை சொருக வேண்டும்.

பின்னர் 5 அடி குச்சிகளை தொட்டியின் அமைப்புக்கு ஏற்றவாறு பைகளின் நீளவாக்கில் இருபுறமும்  சீராக 5 குச்சிகளை 2 அடி நீளத்தில் மண்ணில் ஊன்ற வேண்டும்.

அவ்வாறு ஊன்றிய பின்உரப்பை விறைப்பாக இருக்குமாறு குச்சிகளில் நைலான் சரடுகள் கொண்டு இறுக்கமாக கட்ட வேண்டும்.

தொட்டியில் எந்த இடத்திலும் தொய்வு இல்லாதவாறு கவனித்து கொள்ளவும்.

பையின் அடிப்பகுதியில் உள்ள வடிகாள் பகுதியின் வெளிப்புரத்தில் மண்ணில் 2 x  2  அடி அகலத்தில், 2 அடி ஆழத்தில் குழி அமைத்து அதில் மண்புழு செறிவூட்டநீர்க் கூட சேகரிக்கலாம்.


தொட்டியில் குப்பை இடுதல்

உரப்பை அமைக்கும்போதுவடிகால் குழி இருக்கும் இடத்தை நோக்கி சரிவு இருக்குமாறு அமைத்தல் சிறந்தது.

தொட்டியின் அடிப்பகுதியில் தேங்காய் நார் 1/2 அடி உயரதிற்கு இருக்குமாறு சீராக நிரப்ப வேண்டும்.

அதன்மேல் மக்கிய குப்பைகளையும்சாணத்தையும் 1/2 அடி உயரத்திற்கு மாறி மாறி இருக்குமாறு மண்புழு உரப்பையை நிரப்பவும்.

அவற்றை நிரப்பும்போது ஈரப்பதம் உள்ளவாறு நீரினைத் தெளிக்கவும்.

மக்கிய பாலிதீன் பைகள்சிறு கற்கள்குச்சிகள் மற்றும் மக்காத பொருட்கள் இருப்பின் அகற்றி விடவும்.

இப்பையை நிழல் வலை கொண்டு மேல் புற்த்தில் மூடிவிடவும்.

இதனால்பறவைகள் மற்றும் கோழிகளிடமிருந்து புழுக்களை பாதுகாக்க முடியும்.

டன் மக்கிய குப்பைக்கு, 10 கிலோ மண்புழு இட வேண்டும்

உரம் சேமிப்பு முறை

அறுவடை செய்த உரத்தை இருட்டான அறையில் 40% ஈரப்பதத்தில்சூரிய ஒளி படாதவாறு வைக்கவும்இதனால் ஈரப்பதம் வீணாகாது.

மக்கிய உரத்தை பாக்கெட் செய்வதைவிட திறந்த வெளியில் மக்கிய உரத்தை சேமிக்கும்பொழுது தண்ணீர் தெளித்து ஈரப்பதத்தை காக்க வேண்டும்இதனால் நுண்ணுயிர்கள் அழிவதை தடுக்கலாம்.

40% ஈரபதத்துடன் வைப்பதால் மண்புழு உரத்தின் தரம் குறையாமல் பாதுகாக்கலாம்.
விற்கும் சமயத்தில் மட்டுமே பாக்கெட் செய்யவும்.

வனத்தில் கொள்க:

1. ரியான இரக மண்புழுவை தேர்ந்து எடுக்கவும்.

2. எல்லா நிலைகளிலும்மண்புழு வளர்வதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கவும்.

3. அடிக்கடி கொஞ்சம் தண்ணீர் தெளித்து ஈரமாக வைத்திருக்கவும்அதிக தண்ணீர் கெடுதலை விளைவிக்கும்.

4. மண்புழுக்கள் தேவைக்கும் அதிகமாக வளர்ந்து விட்டால்தேவையான அளவு போக மீதத்தை அப்புறப்படுத்தவும்இல்லையெனில் இடவசதி இல்லாமல் புழுக்கள் இறந்துவிடும்.

ரத்தில் உள்ள பயிர்ச்சத்துகளின் அளவுகள்

கரிமச்சத்து             -    9.5 - 17.9 %
தழைச்சத்து             -    0.5 - 1.5 %
மணிச்சத்து             -    0.1 - 0.3 %
சாம்பல் சத்து           -    0.15 - 0.56 %
சோடியம்               -    0.06 - 0.30 %
கால்சியம் + மெக்னீசியம் -    22.67 - 47.60 mg/kg
தாமிரச்சத்து             -   2.0 - 9.5 mg/kg
இரும்புச்சத்து            -   2.0 - 9.3 mg/kg
துத்தநாகச்சத்து          -   5.7 - 11.5 mg/kg
கந்தகச்சத்து             -   128 - 548 mg/kg

மண்புழு உரம் பரிந்துறை செய்யப்படும் அளவு

தானியப் பயிர்கள் - 2 டன் / ஏக்கர்
பயறுவகைப் பயிர்கள் - 2 டன் / ஏக்கர்
ண்ணெய் வித்துப்பயிர்கள் - 3-5 டன் / ஏக்கர்
றுமணப்பயிர்கள் - 4 டன் / ஏக்கர் அல்லது 3-10 கிலோ / செடிக்கு
காய்கறிப்பயிர்கள் -  4-6 டன் / ஏக்கர்
பழமரங்கள் - 2-3 கிலோ / மரம் ( 2 முறை / வருடம் )
அலங்காரச் செடிகள் - 4 டன் / ஏக்கர்
மலர்பயிர்கள் - 5 டன் / ஏக்கர்
தென்னைவாழை - 5 கிலோ / மரம்

ண்புழு செறிவூட்ட நீர் ()

மண்புழு உரப்பை அருகில் 2 x 2 x 2 அடி குழி எடுக்கவும்.
தொட்டியில் ஊற்றப்படும் உபரி நீர் கீழே திரவ உரமாக () வெளிவரும் அத்திரவ உரத்தை காய்க்றிப்பயிர்கள்பழத்தோட்டங்கள்புல்வெளிகள் ஆகியவற்றில் பயன்ப்டுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

மண்புழு உரத்தின் விலை

கிலோ மண்புழு உரம் - குறைந்த பட்சம் 6 ரூபாய்க்கு விற்கபடுகிறது.
1000 புழுக்கள் - 500 ரூபாய்க்கு விற்கபடுகின்றன.

1 comment:

  1. சுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்துதரப்படும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்-9944209238

    ReplyDelete