புதிதாக வாங்கி வரப்படும் குஞ்சுகள் அனைத்தும் ஒரே மூலையில் ஒடுங்கினார் போல காணப்படுகிறதே அதை தவிர்க்க என்ன செய்யலாம்?
குஞ்சுகள் ஒன்றோடு ஓன்று ஒட்டினாற்போல் ஒன்றின் மீது ஓன்று எரிகொள்ளும் அதனால் அடியில் சிக்கிகொள்ளும் குஞ்சுகள் உயிர் இலக்க நேரிடும் அதை தவிர்க்க இதோ சில அனுபவமிக்க வழிமுறைகள்
1. எல்லா குஞ்சுகளையும் ஒரே இடத்தில் முத்தமாக விடக்கூடாது, 500 குஞ்சுகள் வாங்கினால் 500 குஞ்சுகளையும் ஒன்றாக விடக்கூடாது.
2. அவற்றை 50 குஞ்சுகள் வீதம் 10 பகுதியாக பிரிக்க வேண்டும்.
3. சுமார் 5 மீட்டர் நீளமுள்ள இரும்பு தகரத்தை( 5 மீட்டர் கு மேலும் இருக்கலாம், உயரம் 2 அடி ) வட்டமாக செய்து அந்த வட்டத்திற்குள் 50 குஞ்சுகளாக விடவும் அதன் குறுக்கு வாக்கில் 2 அல்லது 3 100 வாட்ஸ் pulb எரிய விடவும், தீவனத்தை ஒரே இடத்தில் போடாமல் அடியில் பிளாஸ்டிக் பை விரித்து அதன்மேல் காகித பேப்பர் விரித்து அதன்மேல் தீனவனத்தை பரவலாக இடவேண்டும், ஒரே இடத்தில் தீவனமிட்டால் குஞ்சுகளால் ஒன்றன்மேல் ஓன்று ஏறத்தான் செயும் அதனால் அடியில் சிக்கும் குஞ்சுகள் இறக்க வாய்ப்பு உள்ளது.
4. இவ்வாறாக 500 குஞ்சு வாங்கினால் குறிப்பு எண் 3 இல் சொன்னது போல் 50 குஞ்சுகள் வீதன் 10 பகுதியாக பிரித்து 3 இல் சொன்னது போல் நடைமுறை படுத்துங்கள்.
5. தரையில் பிளாஸ்டிக் பை விரித்து அதன்மேல் காகித பேப்பர் விரித்து அதன்மேல் தீனவனத்தை பரவலாக இடவேண்டும், குஞ்சுகள் எச்சமிடுவத்தால் காலை, மாலை இரண்டு நேரமும் காகித பேப்பரை மாற்ற வேண்டும்.
6. வெட்பம் குறைவான நேரங்களில் , மாலை , இரவு, பனி நேரங்களில் பண்ணையை மூடி வைப்பது சிறந்தது.
7. மின்சாரம் வசதி இல்லாதவர்கள் ஒரு பானை இல் தீ மூட்டி(மர கரி கட்டடைகளை நெருப்பாக்கி) அடியில் செங்கல் வைத்து அதன் மேல் பானையை குஞ்சுகளுக்கு நடுவில் வைத்து வெட்ப அளவுகோல் கொண்டும் தட்ப வெட்ப நிலையை சரிசெய்யலாம்.
8. முதல் இரண்டு வாரத்திற்கு நீரை சுடவைத்து அதை முழுவதும் ஆற வைத்து கொடுக்கவும்.
9. முதல் ஒரு வாரத்திற்கு குஞ்சுகளை அவ்வப்போது ஓட்டி விட வேண்டும் அப்போதுதான் அது ஓட பழகி அதனால் தீவனமும் அதிகம் சாப்பிடும்.
10 முதல் இரண்டு வாரதிக்கு கொடுக்கப்படும் தீவனம் தவடுபோல் சிறுசிறு தூளாக இருக்க வேண்டும், பெரும் துகளாக இருந்தால் அவை குஞ்சீன் தொண்டையில் மாட்டி கொள்ள வைப்பு உள்ளது.
11. குஞ்சுகள் ஓன்று இரண்டு இறந்து விட்டால் அவற்றை உடனே அப்புறபடுத்தி ஈ மற்றும் எறும்பு புகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
12. பண்ணையின் தரையில் தேங்காய் துப்பி நார் ( தேங்காய் மஞ்சு) நன்றாக உலர வைத்து அதனை தரையில் பரப்பி அதமேல் குஞ்சுகளை விட வேண்டும் அதை ஒருநாள் விட்டு ஒருநாள் கிளைத்து விட்டால் எச்சங்கள் நாற்றம் அடிக்காது, குஞ்சுகளும் ஆரோக்கியமாக இருக்கும்.
சுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் இவைகளுக்கு வங்கி கடன் பெற்று பயனடைய விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் -9944209238
ReplyDeleteசுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் இவைகளுக்கு வங்கி கடன் பெற்று பயனடைய விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் -9944209238
ReplyDelete