குறுக்கு வழியில் எப்படி முன்னேறுவது என பலரும் சுயநலமாக
யோசிக்கும் மக்களில் மிகவும் வித்தியாசமானவர் அர்ஜுனன்...
மரம் வளர்க்க பல ஆண்டுகளாகும் நிலையில் 90 நாட்களில் மரம் வளர்க்கும் வித்தையை கண்டறிந்த பாராட்டுக்கும்,நன்றிக்கும் உரிய சமூக சேவகர்....
பொதுமக்களின் நலனுக்காக உழைக்கும் இவரைப்பற்றி பதிவதில் நேர்வழி வலைதளம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.
90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?
‘பனை வைத்தவன் பார்த்துச் சாவான்’ என்பது கிராமத்து சொலவடை. அதாவது ஒரு மரம் தரும் பலனை, வைத்தவன் அனுபவிக்க முடியாது. அவனின் அடுத்த தலைமுறைக்குத்தான் மொத்த பலனும் என்பது அர்த்தம். மரம் வளர்ந்து தளைக்க அத்தனை ஆண்டுகள் ஆகும். இனி இதுபோல ஆண்டுக்கணக்கில் காத்திருக்க அவசியம் இல்லை. நட்ட மூன்றே மாதங்களில் மரம் ரெடி என்று நிரூபித்திருக்கிறார், நெல்லை இராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த அர்ஜுனன். ‘செப்பறை வளபூமி பசுமை உலகம்’ அமைப்பின் தலைவர் இவர்.
என் சின்ன வயசில அப்பா, அம்மா இறந்திட்டாங்க. உடன் பிறந்தவர்கள் மொத்தம் 13 பேர். வறுமை வாட்டி எடுத்தது. ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டம். பத்தாம் வகுப்பு வரை படித்தேன். அதற்கே நான் படாதபாடு பட்டேன்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போதே அர்ஜுனன் கண்களில் சோகம் தெரிந்தது.
இது வெப்ப பூமி. வருஷம் முழுக்க உஷ்ணம்தான். அதிலேயும் கோடைக்காலத்தில் கேட்கவே வேண்டாம். பாலைவனம் மாதிரி தகிக்கிற வெயில்ல, வெளியில தலை காட்ட முடியாது. அப்படி வந்து வெளியில எட்டிப் பார்த்தீங்கன்னா, மருந்துக்குக்கூட மரத்தைப் பார்க்க முடியாது. பச்சையே எங்கேயும் இல்லாததால மழையும் இல்லை. நான் பாலாமடை அரசுப் பள்ளியிலதான் படிச்சேன். மரம் வளர்க்குறதுல ஆர்வம் வந்ததுக்குக் காரணம், என்னோட பள்ளித் தலைமையாசிரியர் முகம்மது கனி.
செடி நட்டு, அது மரமாக வளர ஆண்டுக் கணக்காகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நட்டு, மரங்களாக உருவாக்கும் முயற்சி செய்தேன். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து விட்டன. மரக்கிளைகளை வெட்டி நட்ட ஆயிரம் மரங்கள் இராஜவல்லிபுரத்தைச் சுற்றி உள்ளன. இதை என் சொந்தச் செலவிலேயே செய்தேன். மேலும் எங்கள் ஊர் குளத்துக்கரையைச் சுற்றிலும் பனங்கொட்டைகளை சும்மா விதைத்து வைத்தேன். தற்போது சுமார் 2,000 பனைகள் குருத்துவிட ஆரம்பித்துள்ளன.
கடந்த மூன்றாண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கோயில்கள், தனியார் நிறுவனங்களுக்கு 27 ஆயிரம் மரங்களை இலவசமாக வழங்கியுள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.
90நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்?
*பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.
*ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.
* கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.
* நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.
மரம் தேவைப்படும் கிராம பஞ்சாயத்துகள் விரும்பினால், ஒரு கிராமத்திற்கு 1,000 மரங்கள் வரை இலவசமாகக் கொடுக்கத் தயாராக உள்ளேன். தனிநபர்கள் என்றால், பயிற்சி தர தயாராக உள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.
தொடர்புக்கு : 97903 95796
பனை விதைத்தால் வினை ஓடும் ......
"திணைத்துணை நன்றி செயினும் பனைத் துணையாக்
கொள்வார் பயன்தெரி வார்" - திருக்குறள்
தற்போது பனை விதைகள் கிடைப்பதால் அவற்றை விதைக்கலாம் .10பெண் மரத்துக்கு 2 ஆண் மர விதைகள் விதைக்கலாம் .ஒரு பனையில் 3 விதை இருந்தால் பெண் விதை . 2 விதை இருந்தால் ஆண் விதை.
கற்பகத் தரு என அழைக்கப்படும் பனை (Palmyra Palm), புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். சுண்ணாம்பு சேர்த்து எடுக்கப்படும் பனஞ்சாறுக்கு பதர்நீர் என்று பெயர்.மேக நோய் இருப்பவர்கள் இதை 40 நாட்களிடைவிடா அது அருந்தி வர அந்த நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம். பதநீரில் இருந்து எடுக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு, ஆகியவற்றுக்கும் நோய் தீர்கும் குணங்கள் உண்டு.. இத்துடன் பால் உற்பத்தி தேசியமயமானபின் இந்தியாவில் பால் இனிப்பு வகைகள் பல்கி பெருகின. இன்று கரும்பின் வெள்ளை சர்க்கரையை உபயோகப்படுத்துவோர் 99 % ஆகும்.அதனால் தான் இன்றுஇந்தியாவே நீரிழிவு என்னும் சர்க்கரை வியாதியில்உலகில் முதலிடம் வகிக்கிறது.ஆறுகள்,ஏரிகளை உயிர் ஓட்டத்துடன் வைத்திருக்க பனை மரங்கள் பெரிதும் உதவும் .பனை வேர்கள் மண்ணின் ரத்த நாளங்கள் எனலாம்.
பனைத்தொழில் செய்பவர்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நொங்கு சாப்பிட செல்வதுண்டு.நான் சந்தித்தவர்களில் சுமார் 10 சதவிதம் பேரே அடுத்த தலைமுறைக்கு பனைவிதை நட்டு உள்ளனர்.
Phone no not in use pls provide right no pls
ReplyDeleteYes tell correct number
ReplyDelete